விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஒழுங்கீனமாக நடந்துகொண்ட உமர் அக்மலுக்கு போட்டித் தடை ஏற்பட வாய்ப்பு By Mohammed Rishad PCB உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்த விரக்தியில் என் உடலில் எங்கு கொழுப்பு இருக்கிறது என்று கூறுங்கள் என்று ஜெர்ஸியைக் களைந்து நின்ற உமர் அக்மலுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான உமர் அக்மல் ஒழுங்கீனம் மற்றும் உடற்தகுதி போன்ற பிரச்சினைகளால் தேசிய அணியில் விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார். இந்த நிலையில், தற்போது அந்நாட்…
-
- 0 replies
- 701 views
-
-
கெய்லை சமாளிக்க தயாராகும் ஜெயவர்த்தனே March 31, 2016 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே இங்கிலாந்தின் கிளப் அணியான சோமர்செட்டில் விளையாட முடிவு செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜெயவர்த்தனே பிற நாடுகளில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல், பிக் பாஷ், நாட்வெஸ்ட் தொடரில் விளையாடிய ஜெயவர்த்தனே தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த அணியில் வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் ரோஜர்ஸ் (அவுஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார் ஜெயவர்த்…
-
- 0 replies
- 554 views
-
-
பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிக்க மறுத்ததை வசிம் அக்ரம் விமர்சிக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவிக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விண்ணப்பிக்க மறுத்ததையிட்டு வசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் இதற்கான வாயில் திறக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் அது குறித்து கரிசணை காட்டாதது கவலை தருகின்றது என்றார் அக்ரம். தலைமைப் பயிற்றுநர் தேர்வுக்கான குறும்பட்டியலைத் தயார் செய்தவர்கள் குழாமில் வசிம் அக்ரமும் ஒருவராக இடம்பெற்றிருந்தார். உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் பிரகாசிக்காததை அடுத்…
-
- 0 replies
- 193 views
-
-
பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் ஹனிஃப் முகமது மரணம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நீண்ட இன்னிங்ஸை விளையாடிய வீரரும், பாகிஸ்தானின் முன்னாள் பேட்ஸ்மேனுமான ஹனிஃப் முகமது கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார். அவருக்கு வயது 81. 1958 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ் டவுனில் நடந்த போட்டியில், ஹனிஃப் முகமது 16 மணி நேரங்கள் விளையாடி 337 ரன்களை குவித்தார். ஆசிய பேட்ஸ்மேன் ஒருவர் துணை கண்டத்திற்கு வெளியே பெற்ற அதிகபட்ச ரன்னாக இன்றுவரை இருக்கிறது. இந்தியாவில் பிறந்த ஹனிஃப் முகமது, குழந்தை பருவத்தின் போதே கராச்சிக்கு சென்றுவிட்டார். 1952 இல், தன்னுடைய 17 வயதில், தான் பிறந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதன் முதல…
-
- 0 replies
- 330 views
-
-
அனல் பறக்கும் இந்தியா-ஆஸி., தொடர் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடரில் அனல் பறப்பது நிச்சயம்,'' என, முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்தார். அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப்., 22 முதல் மார்ச் 24 வரை) பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னையில் பிப்., 22 முதல் 26 வரை நடக்கிறது. சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை முழுமையாக (4-0) வென்றால் 121 புள்ளிகள் கிடைக்கும். அதேநேரம், இப்போது முதலிடத்திலுள்ள தென் ஆப்ரிக்க அணி (124), பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தால், தரவரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பின், "நம்பர்-1' இடத்தை ஆஸ்திரேலியா பிடிக்கலாம்.…
-
- 0 replies
- 350 views
-
-
ஒரு நிமிடத்தில் 20 இரும்புக் கம்பிகள் வளைந்தன; புதிய உலக சாதனை இலங்கையில் (வீடியோ) ஒரு நிமிடத்தில் 20 இரும்புக் கம்பிகளை வாயினால் வளைத்து, கொழும்புத் துறைமுகக் கொள்கலன் தளத்தின் தொழில் புரியும் ஜனக காஞ்சன எனும் 24 வயதுடைய இளைஞன், இன்று வியாழக்கிழமை (06) உலக சாதனை படைத்துள்ளார். விளையாட்டுத்துறை வைத்தியர்கள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் முன்னிலையில் மோதரை - முகத்துவாரத் துறைமுகப் பயிற்சி நிலையத்தில் வைத்து இவர் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரஷ்யா நாட்டு விளையாட்டு வீரர் ஒருவர், ஒரு நிமிடத்தில் 12 இரும்புக் கம்பிகளை வாயினால் உடைத்திருந்தமையே இதற்கு முன்னர் உலக சாதனையாக இருந்ததை கு…
-
- 0 replies
- 380 views
-
-
ஊடகவியலாளரின் வாயை மூடச் செய்த கோலியின் பதில்! (காணொளி இணைப்பு) இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இ-20 போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நிருபர் ஒருவரது கேள்விக்கு அதிரடி பதிலளித்து அவரது வாயை மூடச் செய்தார் கோலி! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் இ-20 ஆகிய மூன்று தொடர்களிலும் இந்தியா வெற்றி வாகை சூடியது. மூன்று போட்டித் தொடர்களுக்கும் விராட் கோலியே தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான இ-20 போட்டியில் இந்தியா 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஒரு நிருபர், ‘ஆரம்பத்…
-
- 0 replies
- 300 views
-
-
ஹேஹேய்... டோனி இன்னும் ‘தல’தான்! - தோனி அணியில் நீடிக்க வேண்டுமா..!? சர்வே முடிவு Chennai: சீரியஸான போட்டிகளில், திக் திக் நிமிடங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ எனக் கடந்த ‘கூல் கேப்டன்’ தோனிமீது இப்போது ஏகப்பட்ட விமர்சனங்கள். ‘தோனி டி-20-யிலிருந்து ஓய்வுபெற வேண்டும்’ என அகார்கரில் இருந்து வி.வி.எஸ்.லட்சுமண் வரை பலரும் கருத்துச்சொல்ல, ‘மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என ஒதுங்கிக்கொண்டார் தோனி. விமர்சகர்கள் சொல்வதுபோல, நிஜமாகவே தோனியின் ஆட்டம் ஆட்டம் கண்டுவிட்டதா? தோனியின் ஓய்வு குறித்து வாசகர்களிடம் சர்வே நடத்தினோம். ரசிகர்களின் கருத்து என்ன? தோனி இல்லனா டீமே இல்ல... தோனி ஓய்வு பெற வேண்டுமா என்ற க…
-
- 0 replies
- 513 views
-
-
2015 உ.கோப்பை இறுதியில் 150/3-லிருந்து சரிந்தோம், பால் டேம்பரிங்?: நியூஸி.வீரர் கிராண்ட் எலியட் ஐயம் 2015 உ.கோப்பை அரையிறுதியில் சிக்ஸ் அடித்து வென்ற கிராண்ட் எலியட். - படம். | ராய்ட்டர்ஸ். 2015 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா பால் டேம்பரிங் செய்துதான் வெற்றி பெற்றதோ என்று நியூஸிலாந்து அதிரடி வீரர் கிராண்ட் எலியட் சந்தேகம் எழுப்பியுள்ளார். மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா நியூஸிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது, அந்த இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 150/3 என்ற நிலையிலிருந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 39/3 என்ற நிலையிலிருந்து கிராண்ட் எலியட் , ராஸ் டெ…
-
- 0 replies
- 237 views
-
-
இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது - பயிற்றுநர் சில்வர்வூட் 07 NOV, 2022 | 10:01 PM (நெவில் அன்தனி) ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னரே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் இதனைத் தெரிவித்தார். இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணிகளை…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
முரளிக்காக உலக கிண்ணம்! ஆனால் முரளி அணியில் இல்லை! ஜனாதிபதி இந்தியா செல்கிறார் ஜ வியாழக்கிழமைஇ 31 மார்ச் 2011இ 11:51.14 யுஆ புஆவு ஸ இலங்கை கிரிக்கட் அணி கிரிக்கட் உலக கிண்ணத்தை வெற்றி கொள்வதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இந்த போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள முத்தையா முரளிதரனுக்கு வழங்கும் கௌரவமாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவில் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முத்தையா முரளிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரியவருகிறது. முத்தையா முரளிதரனும் அஞ்சலோ மெத்தியூஸம் காயம் அடைந்துள்ளமையால் அவர்களுக்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை அணிக்கு உதவ ஜெரெமி ஸ்னேப் நியமிப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக ளில் விளையாடவுள்ள இலங்கை அணியினரை ஊக்குவிக்கும் பொருட்டு உளவியல் ஆலோசகராக ஜெரெமி ஸ்னேப் நியமிக்கப் பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவ னம் அறிவித்துள்ளது. இப்பதவியில் அவர் நியமிக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது தடவையாகும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போதும் இலங்கையின் உளவியல் ஆலோசகராக ஜெரெமி செயற்பட்டிருந்ததுடன் அந்தத் தொடரை இலங்கை கைப்பற்றியிருந்தது. ஜெரெமி ஸ்னேப் இம் மாதம் 24ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு இலங்கை அணியினருடன் இணைந்து செயற்படவுள்ளார். உலகக் கிண்ணத்தை மனத்தில் நிறுத்தி இலங்கை வீர…
-
- 0 replies
- 325 views
-
-
சென்றலைட்ஸ் அணிக்குக் கிண்ணம்!! யாழ்ப்பாணம் கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகம் நடாத்திய விக்ரம், ராஜன், கங்கு ஞாபகர்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரில் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக கிண்ணம் வென்றது. கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் இன்று இடம் பெற்ற இறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கே.ஸி.ஸி. ஸி விளையாட்டுக் கழக அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கே.ஸி.ஸி. விளையாட்டுக்கழக அணியினர் 40பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 200 ஓட்…
-
- 0 replies
- 576 views
-
-
குட்டி சனத் ஜயசூரியவின் துடுப்பாட்டம்! (Video) இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவின் துட்ப்பாட்ட திறமையை இந்த உலகமே அறிந்தது. இவரது துடுப்பாட்டத்தை “மாஸ்டர் பிளாஸ்டர்” என அழைப்பர். அந்த வகையில் தற்போது அவரது குட்டி மகன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சனத் ஜயசூரிய போன்று இவரும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து தனது திறமையை வெளிக்காட்டுவாரா ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…. http://tamil.adaderana.lk/kisukisu/?p=4405&utm_source=rss&utm_medium=rss
-
- 0 replies
- 248 views
-
-
பங்களாதேஷிடமும் ஏமாந்த ஆப்கான்! பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. 263 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்…
-
- 0 replies
- 407 views
-
-
ரஷ்ய தடகள சம்மேளனம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்பாட்டை ரஷ்யா தடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. லண்டனிலிருந்து தொலைக்காட்சி வழியாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற்க முடியாது. மேலும் எவ்விதமான சர்வதேச தடகளப் போட்டிகளையும் ரஷ்யா நடத்த முடியாது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற இயலாது ஊக்க ம…
-
- 0 replies
- 183 views
-
-
நான் நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளியுங்கள்: டானிஷ் கனேரியா வேண்டுகோள்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்குப் பிறகு இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற பெருமை பெற்றவர் டானிஷ் கனேரியா. கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில், ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கிய இவருக்கு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு வாழ்நாள் தடை விதித்தது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முழுமையாக ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் கனேரியா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந்த விவகாரத்தில் தனக்கு உதவி செய்யும்படி டானிஷ், பி.சி.சி.ஐ.யிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில…
-
- 0 replies
- 395 views
-
-
நீச்சல் வீராங்கனைக்கு புற்றுநோய் நெதர்லாந்தை சேர்ந்த பிரபல நீச்சல் வீராங்கனை இக்னே டெக்கர். 30 வயதான இக்னே டெக்கர் ஒலிம்பிக்கில் 4 x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சலில் தங்கம் உள்பட மூன்று பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலில் ஆகஸ்டு மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வந்த நிலையில், திடீரென கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது ‘இந்த தகவலை அறிந்ததும் அதிர்ந்து போனேன். கடந்த 3 ஆண்டுகளாக பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதில் மட்டுமே எனது சிந்தனை இருந்தது. ஒலிம்பிக்கில் இருந்து விலகுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று டெக்கர் கூறியுள்ளார். http://tamil.adaderana.l…
-
- 0 replies
- 361 views
-
-
U19 ப்ளேட் சம்பியனாக முடிசூடிய இங்கிலாந்து! By A.Pradhap - ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ப்ளேட் சுற்றுக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்த இலங்கை இளையோர் அணி ப்ளேட் சம்பியனாகும் வாய்ப்பை தவறவிட்டது. தென்னாபிரிக்கா – பெனோனியில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்பை இங்கிலாந்து இளையோர் அணிக்கு வழங்கியது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட இங்கிலாந்து இளையோர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை …
-
- 0 replies
- 571 views
-
-
சந்தியா ரங்கநாதன்: தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை 44 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் வளர்ந்துவரும் கால்பந்தாட்ட வீராங்கனையான சந்தியா ரங்கநாதன், நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். விளையாட்டு என்பது தம்மை மேம்படுத்திக்கொள்ளும் விஷயம் மட்டுமின்றி, ஒருவரின் வாழ்நாள் தேர்வாகவும் இருக்கலாம். தன்னை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அது இருக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா ரங்கநாதன், சாதாரண குழந்தைப்பருவத்தை கொண்டவர். அரசால் நடத்தப்படும் விடுதியில் படித்து முன்னேறிய அவர், மிகவும் இளம் வயதில், கால்பந்தாட்டத்தில் சேர்ந்ததோடு, நாட்டிற்காக பல பதக்கங்களையும் வென்றுள்ளார். ஆரம்பம் என்ன? …
-
- 0 replies
- 550 views
- 1 follower
-
-
சிறுவன் பிராட்லி லோவரி மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்த கால்பந்து உலகம்! #BradleyLoweryRIP கால்பந்து உலகம் கண்ணீர்க் கடலில் மூழ்கியிருக்கிறது. ட்விட்டர் இரங்கல் செய்திகளால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு கால்பந்துப் போட்டிக்கு முன்பும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இவையெல்லாம் முன்னாள், இந்நாள் கால்பந்து வீரர் ஒருவரின் மரணத்திற்காக அல்ல. ஒரு ரசிகனின் மரணத்தினால். ஆம் ஒரு ரசிகனின் மரணம் கால்பந்து உலகை ஸ்தம்பிக்கவைத்துள்ளது. ஒரு ரசிகனின் மரணம் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? ஏற்படுத்தும். அவன் வெறும் 6 வயதுடையவனாக இருந்தால்….நான்கரை ஆண்டுகள் கேன்சரோடு போராடியவனாக இருந்தால்….கேன்சரை மறந்து கால்பந்து அரங்கில் தவழ்ந்தவனாய் இருந்தால்…மொத்தக் கால்பந்து உலகமும் கண…
-
- 0 replies
- 403 views
-
-
Congress President Sonia Gandhi had recommended Sachin Tendulkar's name for nomination to Rajya Sabha, according to BCCI Vice-President Rajeev Shukla, who also hinted that the government may consider conferring the prestigious 'Bharat Ratna' on the iconic cricketer after his retirement. http://www.mid-day.com/sports/2013/nov/131113-sachin-tendulkar-in-parliament-because-of-sonia-gandhi-rajeev-shukla.htm
-
- 0 replies
- 453 views
-
-
துபாய்: 2020ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு தங்கம் வெல்லும் நோக்கத்துடன் துபாயில் படிக்கும் தமிழக மாணவி பயிற்சி பெற்று வருகிறார். துபாய் மில்லியனியம் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் தமிழக மாணவி ஆர்யா (11). சென்னையை சேர்ந்த இவர் 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே 12 வயதுக்குட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் கடந்த ஒன்பது வருட சாதனையை முறியடித்துள்ளார். ஹரியனாவில் நடைபெற்ற போட்டியில் 10 டிகிரி செல்சியஸ் நீரில் நீந்தி சாதனை படைத்துள்ளா…
-
- 0 replies
- 398 views
-
-
இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிப்போருக்கு எதிராக கூச்சலிடுங்கள் : அர்ஜுன இந்திய ரசிகர்கள் போல் வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்டு வசைபாடுவதை இலங்கை அணி ரசிகர்கள் நிறுத்தி விட்டு இலங்கை கிரிக்கெட்டை நிர்வகித்துவரும் அதிகாரிகளுக்கு எதிராக கூச்சலடித்து அடித்து வசைபாடுமாறு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள பெற்றறோலியக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அணிக்கு எதிராக…
-
- 0 replies
- 238 views
-
-
மலிங்கா வீட்டில் வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்கள் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து மலிங்கா அளித்த விருந்தில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தது. சொந்த மண்ணில் இலங்கையை புரட்டியெடுத்து வரும் இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் முறையே 9 விக்கெட், 3 விக்கெட், 6 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. …
-
- 0 replies
- 492 views
-