விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஆட்டத்தின் ஒவ்வொரு துறையிலும் தோற்கடிக்கப்பட்டோம்: ஸ்மித் கடும் ஏமாற்றம் லங்கைக்கு எதிராக முதன் முதலாக ஒயிட்வாஷ் வாங்கிய கேப்டன் என்ற எதிர்மறைச் சாதனைக்குரியவரான ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், தோல்வி குறித்து கடுமையாக ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். “எப்படி இவ்வாறு நிகழ்ந்தது என்பதை புரிந்து கொள்ள உண்மையில் கடினமாக உள்ளது. மீண்டும் ஒரு கடினமான தொடரை எதிர்கொண்டோம், துணைக்கண்டத்தில் தொடர்ச்சியான 3 ஒயிட்வாஷ் தோல்விகள்! நாங்கள் தொட்டது எதுவும் துலங்கவில்லை. பேட்ஸ்மென் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவில்லை. ஸ்பின் பவுலர்களின் நிலையும் அதுதான். வேகப்பந்து வீச்சாளர்களை நான் குறை கூற மாட்டேன். குறிப்பாக ஸ்டார்க் உண்மையில் தன்னை அர்ப்பணித்து வீசினார். பேட்டிங்கு, ஸ்பின் …
-
- 0 replies
- 248 views
-
-
‘டொட்டமுண்டில் ஜடோன் சஞ்சோ தொடரவுள்ளார்’ அடுத்த பருவகாலத்திலும் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பொரூசியா டொட்டமுண்டிலேயே அக்கழகத்தின் முன்களவீரரான ஜடோன் சஞ்சோ தொடரவுள்ளார் என அக்கழகத்தின் விளையாட்டுப் பணிப்பாளர் மைக்கல் ஸொர்க் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள இவ்வார பயிற்சி முகாமுக்கான பொரூசியா டொட்டமுண்ட் குழாமில் 20 வயதான ஜடோன் சஞ…
-
- 0 replies
- 754 views
-
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் பிரிவில் ஜெர்மனியின் கெர்பர் 'சாம்பியன்'! அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 'சாம்பியன்' பட்டம் வென்றார். ஞாயிறு காலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகிய இருவரும் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கெர்பர் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கரோலினாவைத் தோற்கடித்து 'சாம்பியன்' பட்டம் வென்றார். 28 வயதான கெர்பர் வெல்லும் இரண்டாவது க்ராண்ட் ஸ்லாம் பட்டமாகும் இது. முன்னதாக இந்த ஆண்டு …
-
- 0 replies
- 465 views
-
-
கடினமான முடிவுகளை தைரியமாக எடுப்பது பற்றி தோனியிடம் கற்றேன்: விராட் கோலி தோனி, கோலி. | கோப்புப் படம். கடினமான முடிவுகளை தைரியமாக எடுத்து அதன் விளைவுகளைப் பற்றி கலக்கமடையாமல் இருப்பதுதான் கேப்டன்சியின் சாராம்சம் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கோலியின் கேப்டன்சியில் 16 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 9-ல் வென்றுள்ளது. 2-ல் தோற்று, 5 போட்டிகளில் டிரா செய்துள்ளது. பிசிசிஐ.டிவி-க்கு கேப்டன் அளித்த பேட்டியிலிருந்து.. “முடிவுகளை எடுப்பது சில வேளைகளில் கடினமானது. அத்தகைய முடிவுகளை எடுக்க நிறைய தைரியம் வேண்டும். நான் தோனியிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அதாவது தைரியமான முடிவுகளை எடுப்பது மற்றும் அதில் உறுதி…
-
- 0 replies
- 386 views
-
-
ரஹீமோடு முரண்படுகிறார் தமிம் பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், ஓரளவு போட்டித்தன்மையை வெளிப்படுத்திய போதிலும், பங்களாதேஷ் அணி, அப்போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அப்போட்டியிலிருந்து பெறப்படக்கூடிய முடிவு என்னவென்பது குறித்து, அவ்வணியின் தலைவர் முஷ்பிக்கூர் ரஹீமோடு, அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால், முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். 22 ஓட்டங்களால் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்த ரஹீம், அப்போட்டியில் பங்களாதேஷ் அணி போட்டித்தன்மையுடன் விளையாடியதை முன்னிறுத்தியதோடு, தங்களால் முடிந்ததை, தாங்கள் செய்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்தோடு, அப்போட்டியில் வெ…
-
- 0 replies
- 351 views
-
-
2016-ல் அதிக விக்கெட்டுகள்: ஹெராத்தைக் கடந்து அஸ்வின் சாதனை அஸ்வின். | படம்: ராய்ட்டர்ஸ். விசாகப்பட்டண டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து தோல்வியை முடுக்கி விட்ட அஸ்வின் 2016-ம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை அவர் இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 22.23. மேலும் 6 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹெராத் 8 டெஸ்ட் போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 13 டெஸ்ட்களில் 46 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 10 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளையும் இந்த ஆண்டில் கைப்பற்றியுள்ளனர். …
-
- 0 replies
- 347 views
-
-
பந்து வீச்சில் சகாப்தம்: பிராட்மேனுடன் ஒப்பிடுவது மிகப்பெரிய கவுரவம் - அஸ்வின் பந்து வீச்சின் பிராட்மேன் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் தன்னை ஒப்பிட்டது மிகப்பெரிய கவுரவம் என்று அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை: இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவர் 250 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் அதிவேகப் பந்தில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்தார். அஸ்வினின் பந்து வீச்சை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் வெகுவாக பாராட்டி இரு…
-
- 0 replies
- 291 views
-
-
ஹொங்கொங்கில் கலக்கும் சங்கா ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டியில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார விளையாடும் போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த போட்டியில் சங்கக்கார கெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்த போட்யில் 178 என்ற வெற்றியிலக்கை நோக்கி கெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. http://www.virakesari.lk/article/17595
-
- 0 replies
- 463 views
-
-
மைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி! சம்பியன்ஸ் கிண்ணத்தை மைதானத்தில் பார்வையிட வரும் ஒவ்வொரு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுவீர்கள் என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் இடம்பெற் தீவிரவாத தாக்குதல் காரணமாக சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாதுகாப்பில் உறுதியற்ற தன்மை காணப்பட்டது. எனினும் தற்போது பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரோனி பிளானகன், “ சம்பியன் கிண்ண தொடரை முழு பாதுகாப்புடன் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். போட்டிகளை பார்வையிட வரு…
-
- 0 replies
- 226 views
-
-
அனில் கும்ப்ளே - விராட் கோலி முட்டல்.. மோதல்..! நடந்தது என்ன? கடந்தாண்டு இதே மாதம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான், அனில் கும்ப்ளேவுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக முதல் தொடர்! ஆனால் இம்முறை அதே வெஸ்ட் இண்டீஸ்... அதே இந்தியா... ஆனால் பயிற்சியாளர் இல்லை என்பது நெருடலாக இருக்கிறது. அனில் கும்ப்ளேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சாம்பியன்ஸ் டிராபி பைனலில், இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததைவிட, தலைப்புச் செய்திகளில் விராட் கோலியே அதிக முக்கியத்துவம் பெற்றார். தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பாங்கர்தான், இப்போதைக்கு …
-
- 0 replies
- 486 views
-
-
அதிவேக 300 ரன்கள்: தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ மரைஸ் உலக சாதனை மார்கோ மரைஸ். - படம். | ட்விட்டர். முதல் தர கிரிக்கெட் போட்டியில் அதிவேகமான 300 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ மரைஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 24 வயதான மார்கோ மரைஸ் 191 பந்துகளில் 300 ரன்கள் விளாசி இந்தச் சாதனையைச் செய்துள்ளார், முன்னதாக சார்லி மெக்கார்ட்னி என்ற ஆஸ்திரேலிய வீரர் 221 பந்துகளில் அடித்த முச்சதமே சாதனையாக இருந்தது. இவர் நாட்டிங்கம் அணிக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தினார். 96 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனையை முறியடித்தார் காட்டடி மார்கோ மரைஸ். ஈஸ்ட் லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் பார்டர்…
-
- 0 replies
- 455 views
-
-
குளோப் கால்பந்து விருது: சிறந்த வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு கால்பந்து ஏஜென்டுகளுக்கான ஐரோப்பிய அசோசியேசன் சார்பில் வழங்கப்படும் 2017-ம் ஆண்டுக்கான ‘குளோப் கால்பந்து விருது’ ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. #CristianoRonaldo கால்பந்து ஏஜென்டுகளுக்கான ஐரோப்பிய அசோசியேசன் மற்றும் ஐரோப்பிய கிளப்புகள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ‘குளோப் கால்பந்து விருது’கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை பெற்றுள்ளார். ரியல் மாட்ரிட் சிறந்த அணிக்கான விருதையும், ஷிடேன் ச…
-
- 0 replies
- 812 views
-
-
FIFA உலக கோப்பை 2022: கத்தாரில் நடைபெறும் போட்டி - முழு விவரம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEFODI IMAGES 2022 FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெறுவது இதுவே முதல் முறை. நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டி 28 நாட்கள் நடைபெறவுள்ளது. மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும். அதன் இறுதிப்பந்தயம் டிசம்பர் 18 அன்று நடைபெறும். இந்த உலகக் கோப்பை தொடர்பான முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம்: 2022 FIFA உலகக் கோப்பையில் எத்தனை நாடுகள் பங்கேற்கும்? இந்த 22-ஆவது ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்க கடந…
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
முக்கிய போட்டிகளில் இந்தியாவிற்கு தலைவலியை ஏற்படுத்திய நோபால் ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வீசிய நோ-பால் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. #SAvIND இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்யும்போது மழை குறுக்கீட்டதால், அந்த அணியின் வெற்றிக்கு 28 ஓவரில் 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் டி வில்லியர்ஸை இழந்த நிலையில், 18-வது ஓவரின் கடைசி பந்தில் மில்லர…
-
- 0 replies
- 417 views
-
-
ஏ.சி மிலனிடம் தோற்றது பார்சிலோனா சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், இன்று காலை இடம்பெற்ற போட்டியில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா தோற்றது. இப்போட்டியில், ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே சில்வா பெற்றிருந்தார். இதேவேளை, குறித்த தொடரின் மற்றொரு போட்டியில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவன்டஸை 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றிருந்தது. றியல் மட்ரிட் சார்பாக, மார்கோ அஸென்ஸியோ இரண்டு கோல்களையும் கரித் பேல் ஒரு கோலையும் பெற்றனர். ஜுவன்டஸின் கோல் ஓவ்ண் கோல் மூலமாகவே கிடைக்கப் பெற்றிருந்தது. …
-
- 0 replies
- 285 views
-
-
உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் 21 போட்டிகளில் இந்தியா - அவுஸ்திரேலியா மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகும் இந்தியா தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதில் அவுஸ்திரேலியாவுடன் மட்டும் 4 டெஸ்ட் போட்டிகள் உட்பட 21 போட்டிகளில் மோதவுள்ளது. இரு அணிக்குமிடையே முதல் ஒருநாள் போட்டி ஜூன் மாதம் நடக்கிறது. இந்தப் போட்டி அயர்லாந்தில் நடைபெறும். அங்கு இரு அணிக்குமிடையே 3 போட்டிகள் நடைபெறும். அதன் பின் அவுஸ்திரேலிய அணி அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. அப்போது இரு அணிக்குமிடையே 7 ஒருநாள் போட்டிகள் நடைபெறும். இதை தொடர்ந்து இந்திய அணி அவுஸ்திரேலியா செல்கிறது. அங்கு இரு அணிகளுக்குமிடையே 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். அடுத…
-
- 0 replies
- 862 views
-
-
அலுப்பை ஏற்படுத்திய லீக் ஆட்டங்கள்: போட்டி நடத்தும் முறையில் மாற்றம் வருமா? உலகக்கோப்பைப் போட்டி தற்போது பர பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கிரிக் கெட் ஆட்டத்தை மேம்போக்காக அறிந்தவர் களைக்கூட, போட்டி தொடங்குவதற்கு முன் பாகக் கேட்டிருந்தால், காலிறுதிக்குத் தகுதி பெறப்போகும் அணிகள் எவை என்பதை 95 சதவீதம் சரியாகச் சொல்லியிருப்பார்கள். எதிர்பார்த்தபடியே டெஸ்ட் அந்தஸ்து பெறாத 5 அணிகள் வெளியேறிவிட்டன. தகுதிச் சுற்றில் எதிர்பாராத ஒரு திருப்பம் என்னவெனில் இங்கிலாந்து வெளியேறியதுதான். இந்த ஒரு மாற்றத்தைத் தவிர்த்துப் பார்த்தால், காலிறுதிக்குத் தகுதி பெற்ற மற்ற அணிகளின் பட்டியல் கணிக்கப்பட்டதுதான். இதனால், உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்கியவுடன் காட்டிய ஆர்வத்தை, லீக் சுற்றி…
-
- 0 replies
- 710 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
சாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் ! தேசிய போட்டி விளையாட்டு நிகழ்வுகளில் பங்குகொண்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். தேசிய ரீதியான மல்யுத்த போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் தொடர்ச்சியான சாதனைகளை பதிவுசெய்துவருகின்றனர். இதன்கீழ் கடந்த 17,18ஆம் திகதிகளில் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற பாடசாலை மட்ட மற்றும் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் கிழக்கு மாகாண ரீதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு வீரர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் மாணவன் சிவநாதன் அனோஜன் 20வயது 74 கிலோவுக்கான பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துள்ளார். அதேபோன்…
-
- 0 replies
- 481 views
-
-
டி 20 உலக கோப்பை போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுமா?- பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் விளக்கம் அனுராக் தாக்குர் டி 20 உலககோப்பை போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுமா என்பதற்கு பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் விளக்கம் அளித்தார். சென்னையை நாங்கள் நிராகரிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார். 6 வது டி 20 உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டிகள் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, மொகாலி, நாக்பூர் ஆகிய 8 இடங்களில் நடத்தப்படும் என பிசிசிஐ கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. ஆனால் போட்டி நடைபெறும் இடங்களை 5 ஆக குறைக்குமாறு ஐசிசி வலியுறு…
-
- 0 replies
- 269 views
-
-
”நியூசிலாந்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கவில்லை” மகல January 23, 2016 இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் பற்றி முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து தொடரையும் மோசமாக இழந்தது. இதனால் இலங்கை அணியில் சில மாற்றங்களை செய்யவும், மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் ஒருவரை தலைவராக நியமிக்கவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. இது பற்றி இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கூறுகையில், ”நியூசிலாந்து அணி வலிமையான அணி. அந்த அணியில் துடுப்பாட்ட வரிசையும், தாக்குதல் பந்துவீச்சும் சிறப்பாக உள்ள…
-
- 0 replies
- 332 views
-
-
இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை தவறவிட்டார் ரோரி பேர்ன்ஸ் Published by J Anojan on 2020-01-07 15:50:35 இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோரி பேர்ன்ஸ் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என ஐ.சி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, பயிற்சியில் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார் ரோரி பேர்ன்ஸ். இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை லண்டனில் ரோரி பேர்ன்ஸின் கணுக்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், அவரை நான்கு மாதங்கள் வரை ஓய்வில் இருக்குமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் எதிர்வரும் மார்ச…
-
- 0 replies
- 410 views
-
-
ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் உசேன் போல்ட் ஓய்வு 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற உசேன் போல்ட். படம்:ஏஎப்பி ரியோ ஒலிம்பிக் போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற பின்னர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். 6 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உசேன்போல்ட் முன்னதாக 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவேன் எனக் கூறியிருந்தார். அவரது பயிற்சியாளர் கிளென் மில்ஸின் அ…
-
- 0 replies
- 462 views
-
-
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது, ரசிகர்கள் மீது பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிகளுக்காக நுழைவு சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பெருந்திரளான ரசிகர்கள் ஒன்று திரண்டிருந்த நிலையில், நுழைவு சீட்டுக்களை வழங்குவதற்கான அதிகாரிகள் குறைவாகவே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுழைவு சீட்டுக்களை விரைவில் விநியோகிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், உரிய முறையில் நுழைவு…
-
- 0 replies
- 474 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் சர்லோட் எட்வேர்ட்ஸ் இங்கிலாந்து பெண்கள் அணியின் தலைவியான சர்லோட் எட்வேர்ட்ஸ், தனது இருபதாண்டு விளையாடும் காலத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதில், பத்தாண்டுகள் அணியின் தலைவியாக இருந்துள்ளார். வீரர்களிலோ அல்லது வீராங்கனைகளிலோ இங்கிலாந்து அணியை 200க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்கிய முதலாமவராக கடந்த வருடம் மாறியிருந்தார். பெண்களின் விளையாட்டு நடைபெறுகின்றது என்றும் வீராங்கனையாகவும் அணித்தலைவியாகவும் தனது பங்களிப்பு தொடர்பில் மிகுந்த பெருமையுடன் தான் விடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். 23 டெஸ்ட் போட…
-
- 0 replies
- 232 views
-