விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: வழக்கம்போல் அசைக்க முடியாத இடத்தில் கோலி, பும்ரா Published : 17 Mar 2019 17:51 IST Updated : 17 Mar 2019 17:51 IST பி.டி.ஐ துபாய் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்திலும், பந்துவீச்சில் பும்ரா தொடர்ந்து முதலிடத்திலும் இருந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் 310 ரன்கள் குவித்தார் கோலி இதனால், தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த தொடரில் 202 ரன்கள் சேர்த்ததால், தரவரிசையில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடி…
-
- 0 replies
- 898 views
- 1 follower
-
-
சென்னை, ராஜஸ்தான் வீரர்கள் புதிய அணியில்? சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் வருங்காலம் பற்றி முடிவெடுப்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் சில நாட்களுக்கு முன் பி.சி.சி.ஐ.-யின் புதிய தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்றது. சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள இரண்டு அணியையும் வெட்டிவிட பி.சி.சி.ஐ. விரும்பவில்லை. அந்த இரண்டு அணிகளும் அடுத்த இரண்டு சீசனில் இடம்பெறாது. அதற்குப் பதில் இரண்டு புதிய இரண்டு அணிகள் 2016, 2017-ல் கலந்து கொள்ளும் என்றும், 2018-ல் 8 அணியில் இருந்து 10 அணிகளாக எண்ணிக்கை உயர்த்தப்படும். அதில் இரண்டு அணிகளும் இடம்பெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் நிலை என்ன என்ற கேள…
-
- 0 replies
- 298 views
-
-
ஃபோர்மியூலா –1 உலக சம்பியன் பட்டத்தை மூன்றாவது தடவையாக ஹமில்டன் வென்றார் ஐக்கிய அமெரிக்க குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தில் வெற்றியீட்டிய மேர்சிடெஸ் அணி சாரதியான லூயிஸ் ஹமில்டன், மூன்றாவது தடவையாக ஃபோர்மியூலா வன் உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். டெக்சாஸ், ஒஸ்டின் ஓடுபாதையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இவ்வருடத்திற்கான 16ஆம் கட்ட குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தில் முதலாம் இடத்தைப் பெற்றதன் மூலம் ஃபோர்மியூலா –1 உலக சம்பியன் பட்டத்தை ஹமில்டன் உறுதி செய்துகொண்டார். சேர் ஜெக்கி ஸ்டுவர்ட்டுக்குப் பின்னர் ஃபோர்மியூலா –1 உலக சம்பியன் பட்டத்தை மூன்று தடவைகள் வென்றெடுத்த இரண்டாவது பிரித்தானியர் என்ற பெருமையை ஹமில்டன் ப…
-
- 0 replies
- 282 views
-
-
பார்ட்டி மேன் வாயை திறந்தால் 'டர்ட்டி மேன்'! 'சிக்சர் மன்னன்' கெயில் இன்று கிரிக்கெட் உலகின் சர்ச்சை நாயகன். பெண் செய்தியாளரிடம் வழிந்து இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். களத்தில் கூலாக இருக்கும் கெயிலுக்கு வெளியில் வேறு விதமான முகம் உண்டு. ஆனால் இதுவரை பார்ட்டி மேனாக மட்டுமே இருந்து வந்த அவர், ஓவர் வழிசலால் டர்ட்டி மேனாக மாறிவிட்டார். "தண்ணி அடிக்கலாமா பேபி" ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பேஷ் லீக்கில் மெல்பர்ன்ரெனகேட்ஸ் அணிக்காக ஆடி வரும் கெயிலை 'நெட்வொர்க் டென்' பத்திரிக்கையைச் சேர்ந்த மெக்லாலின் என்ற பெண் செய்தியாளர் பேட்டியெடுத்தார். அப்போது கெயிலோ , "நானே உங்களைப் பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். போட்டி முடிந்ததும் தண…
-
- 0 replies
- 618 views
-
-
இலங்கை வருகிறது அவுஸ்திரேலியா இவ்வாண்டு ஜூலை மாதத்தில், முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வரவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடருக்காகவே, அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வரவுள்ளது. இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பித்து, செப்டெம்பர் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அவுஸ்திரேலிய அணி இறுதியாக, 2011ஆம் ஆண்டே, டெஸ்ட் தொடரொன்றுக்காக இலங்கைக்கு வந்திருந்த நிலையில், 5 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வரவுள்ளது. அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திவரும் அவுஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்தில் காணப்படுவதோடு, இலங்கை அணி தடு…
-
- 0 replies
- 392 views
-
-
இதுதான் ஐ.பி.எல் லின் சிறந்த டீம்... எப்படி? முன்னெல்லாம் இந்திய அணியின் பயிற்சியாளர் தவிர்த்து, வேறு அணிகளின் பயிற்சியாளர்கள் யாரென நமக்குத் தெரியாது. காரணம், அதிகம் அறியப்படாத வீரர்களே பெரும்பாலும் பயிற்சியாளர்களாக உருவெடுத்தனர். உதாரணமாக டன்கன் பிளட்சர் போன்றோரைச் சொல்லலாம். ஆனால் இப்போதெல்லாம் முன்னணி வீரர்கள் அனைவருமே கோச்சிங் செய்யத் தொடங்கிவிட்டனர். ஆண்டி பிளவர், கிறிஸ்டன் எனத் தொடங்கி ஜெயவர்தனே வரை அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. சர்வதேச அரங்கே இப்படியென்றால் ஐ.பி.எல் நிலைமையை சொல்லவே தேவையில்லை. முன்னாள் வீரர்கள், உச்ச நட்சத்திரங்கள் எல்லாம் பயிற்சியாளர் பொறுப்பில் அமர்ந்திருக்கின்றனர். சச்சின், டிராவிட், பிளமிங் என பயிற்சி…
-
- 0 replies
- 841 views
-
-
கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் – குமார் சங்கக்கார 2016-04-25 08:30:33 இலங்கை கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த விடயங்களில் எழும் பல கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பதில் அளித்தாக வேண்டும் என இலங்கை கிரிக் கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் முதல்தர பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் சரே அணிக்காக விளையாடிவரும் குமார் சங்கக்கார, பி.பி.சி உலக சேவையின் “ஸ்டம்ப்ட்” சேவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். …
-
- 0 replies
- 266 views
-
-
5 நிமிடங்கள் மணியடித்தார் சங்கா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட்போட்டி இன்று இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது. இந்நிலையில் லோட்ஸ் மைதானத்தின் பாராம்பரிய முறைப்படி அங்கு இடம்பெறும் போட்டியை முக்கியஸ்தர் ஒருவர் 5 நிமிடம் அங்குள்ள மணியை அடித்து போட்டியை ஆரம்பித்து வைப்பார். அந்தவகையில் இன்றைய போட்டியை இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் ஜாம்பவானுமாகிய குமார் சங்க குறித்த மணியை ஒலிக்கவிட்டு…
-
- 0 replies
- 386 views
-
-
19இன் கீழ் கொத்மலை கிண்ண பாடசாலைகள் கால்பந்தாட்டம்; இறுதிச் சுற்றில் யாழ். புனித பத்திரிசியார், யாழ்.புனித ஹென்றியரசர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கு பற்றும் யாழ். மாவட்டப் பாடசலைகள் இரண்டும் கால் இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டுள்ளன. புனித பத்திரிசியார், புனித ஹென்றியரசர் ஆகிய அணிகளே கால் இறுதிக்கு முன்னேறியுள்ளன. குழு டி யில் பங்குபற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி தனது ஆறு போட்டிகளிலும் வெற்றியீட்டி 18 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்று கால் இறுதியில் விள…
-
- 0 replies
- 2.3k views
-
-
110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் முறையாக ஜமைக்காவுக்கு தங்கம் ஒலிம்பிக்கில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் ஒமர் மெசிலாட் தங்கப் பதக்கம் வென்றார். 22 வயதான ஒமர் மெசிலாட் பந்தய தூரத்தை 13.05 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. ஸ்பெயின் வீரர் ஓர்டேகா 13.17 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கமும், பிரான்சை சேர்ந்த டிமிட்ரி பாஸ்கோவ் 13.24 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்கா பதக்க மேடையை தவறவிடுவது இதுவே முதன்முறையாகும். அந்த நாட்டின் தேவோன் ஆலன் 5-வது இ…
-
- 0 replies
- 310 views
-
-
கரிபியின் பிரிமியர் லீக் : 1.9 கோடிக்கு விலைபோன சங்கா மற்றும் மலிங்க 2017 ஆம் ஆண்டுக்கான கரிபியின் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்கள் தெரிவு இன்று இடம்பெற்றது. இந்த வீரர்கள் தெரிவில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு முன்னணி வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் லசித் மலிங்க ஆகியோரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். குமார் சங்கக்கார ஜமைக்கா டளவாஸ் அணிக்கு விளையாடவுள்ளதுடன், லசித் மலிங்க சென் லூசியுர் ஸடார்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். குறித்த அணிகள் சங்கக்கார மற்றும் மலிங்கவை தலா ஒரு இலட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை பணத்தில் சுமார் 1.9 கோடி) வாங்…
-
- 0 replies
- 281 views
-
-
பரி. யோவான் பொழுதுகள்: 2022 Big Match பரி. யோவானில் படித்துக் கலக்கினவங்களை விட, Big Match இல் வெளுத்து கலக்கினவங்களை தான் Johnians சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடும். அந்தளவிற்கு இந்த “Big Match is a Big deal at St. John’s” என்று இங்கிலீஷில் சொன்னால் தான் Big Match இன் சிறப்பை, பெருமையை உங்களுக்கு விளங்க வைக்கலாம். 2020 மார்ச் மாதத்தில் யாருமே எதிர்பாராத வகையில், பொடிப் பயலுகளான, Baby Brigade என்று வர்ணிக்கப்பட்ட, பரி யோவானின் அணி, பலம் வாய்ந்த பிஸ்தாக்களான யாழ் மத்திய கல்லூரி அணியை Big Match இல் வென்ற கையோடு, கொரனா பெருந்தொற்று முழு உலகையே பூட்டிப் போட்டது. 2020 Big Match உண்மையிலேயே கோலியாத்தை வென்ற தாவீது கதையின் மீளுருவாக்கம் தான். 2021 Big Match ஐயு…
-
- 0 replies
- 460 views
-
-
கோலியை தேடிச்சென்று ஒரு ஷாம்பைன் பாட்டிலை இருவரும் பகிர்ந்து குடிப்போம்; சச்சின் நெகிழ்ச்சி: எதற்குத் தெரியுமா? சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி : கோப்புப்படம் - படம்: ஏஎப்ஃபி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நேரில் தேடிச் சென்று ஒரு ஷாம்பைன் பாட்டில் மதுவை இருவரும் பகிர்ந்து குடிப்போம் என்று சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஏன், எதற்காக விராட் கோலியை தேடிச்செல்வேன் என்பதை மும்பையில் சமீபத்தில் நடந்த போரியா மஜும்தாரின் ‘லெவன் காட்ஸ் அன்ட் ல பில்லியன் இந்தியன்ஸ்’ புத்தக வெளியீட்டு விழாவில் சச்சினும், விராட் கோலியும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டனர். …
-
- 0 replies
- 479 views
-
-
பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், இலங்கை அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தினால் இந்த தொடரை வெற்றி கொள்ள முடியம் என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியினர், நேற்று (25) இரவு கரீபியன் தீவுகள் நோக்கி பயணமாகினர். அத்துடன், தனது தந்தையின் திடீர் மரணத்தையடுத்து மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து த…
-
- 0 replies
- 399 views
-
-
கபில் தேவின் 175 ரன் இன்னிங்ஸைக் கண்டு மிரண்டு போனேன்: கிரேம் ஹிக் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியில் கேப்டன் கபில் தேவ் 175 ரன்கள் எடுத்ததை நேரில் பார்த்து மிரண்டு போனேன் என்று ஜிம்பாப்வே நாட்டுக்காரரான முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மென் கிரேம் ஹிக் கூறியுள்ளார். கிரேம் ஹிக் வயது அப்போது 17. ஜிம்பாப்வேயிற்கு டெஸ்ட் தகுதி கிடைக்கவில்லை. கபில் 175 ரன்கள் அடித்த போட்டியின் போது கடைசி 10 ஓவர்கள் ஜிம்பாப்வே அணிக்கு பதிலி வீரராக பீல்டிங் செய்துள்ளார் கிரேம் ஹிக். இந்த அனுபவம் பற்றி கிரேம் ஹிக் பகிர்ந்து கொண்ட போது, “அவர் ஆட்டததைப் பார்த்து மிரண்டு போனேன், கபிலின் பேட்டிங் என்னை வியப்பில் ஆழ்த்தியது. கடைசி 10 ஓவர்கள் நான் பத…
-
- 0 replies
- 357 views
-
-
3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வென்ற தென்னாபிரிக்கா தொடரில் 2-1 என முன்னிலை January 26, 2019 பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 13 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்த இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்றையதினம் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நிர்ணயிக்…
-
- 0 replies
- 303 views
-
-
ரூ.60 லட்சத்துக்கு விலை போன பிராட்மேன் சட்டை! சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் விளையாட்டின்போது அணிந்த சட்டை ரூ.60 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த பிராட்மேன் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் அந்நாட்டு அரசு அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாத்து வருகிறது. இதில் உள்ள பிசேர் எனப்படும் பச்சை கலர் மேல் சட்டை 60 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. 1936–37ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரில் பிராட்மேன் பயன்படுத்தி இருந்த மேல் சட்டைதான் அது. தற்போது அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது. http://www.vikatan.com/news/article.php?aid=52117
-
- 0 replies
- 461 views
-
-
படத்தின் காப்புரிமைSANKAR VARATHAPPAN/ FACEBOOK கிரிக்கெட் விளையாட்டின் மீதான தீராத காதலும், கடின உழைப்பும் ஒரு தமிழக இளைஞரை குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற செய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பாச்சல் கிராமத்து இளைஞர்களுக்கான விளையாட்டு கிளப்பான பாச்சல் கிரிக்கெட் கிளப்பிலிருந்து தொடங்கியதுதான் கிரிக்கெட் வீரர் சங்கர் வரத்தப்பனின் சாதனைப் பயணம். 2019ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கான டி20 தகுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியில் குவைத் நாட்டின் தேசிய அணியில் ஓபனிங் பேட்ஸ்மானாக விளையாடவுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சங்கர். கைத்தறி நெசவாளர்கள் அதிகமுள்ள பாச்சல் கிராமத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைவிட விசைத்தறி ஆலைகளுக்கு …
-
- 0 replies
- 1.2k views
-
-
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. 13 ஆவது ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐ.சி.சி. தகவல் வெளியிட்டுள்ளது. இத் தொடரானது 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டியில் மும்பையில் இடம்பெறும். இந்தியா 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஆசிய அண்டை நாடுகளுடன் இணைந்து சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை நடத்தியிருந்தது. எனினும் இம்முறை ஏனைய நாடுகளுடன் கைகோர்க்காது தனியாக இத் தொடரை நடத்துவது இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60491
-
- 0 replies
- 368 views
-
-
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது July 22, 2019 உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி ஐந்தாவது முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி கடந்த 12 ஆம் திகதி இங்கிலாந்தினல் லிவர்பூல் எரினா உள்ளக அரங்கில் ஆரம்பமாகியிருந்தது. இந் நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் போட்டியிட்ட நிலையில் 52-51 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது இதேவேளை பிளேஓப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இங்கிலாந்து 58-42 என்ற…
-
- 0 replies
- 492 views
-
-
மைக்கல் ஷூமாக்கர் குணமடைவதற்கான நம்பிக்கை உள்ளது - நெருங்கிய நண்பரான ரொஸ் பிரவுண் கூறுகிறார் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது படுகாயமடைந்த போர்மியூலா வன் முன்னாள் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் குணமடைவதற்கான நம்பிக்கை இன்னும் உள்ளது என அவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரொஸ் பிரவுண் தெரிவித்துள்ளார். 2013 டிசெம்பர் மாதம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தபோது, மைக்கல் ஷூமாக்கர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். அதையடுத்து, பிரான்ஸிலுள்ள வைத்தியசாலையில் 159 நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர், தற்போது சுவிட்ஸர்லாந்திலுள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். …
-
- 0 replies
- 216 views
-
-
உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்துக்காக ராங்கின் எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் மீண்டும் அயர்லாந்து அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் பொயிட் ராங்கின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக, 2012ஆம் ஆண்டு உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்து அணிக்காக பங்கேற்ற ராங்கின், அதன் பின்னர், 2013ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட பகுதியில் இங்கிலாந்து அணிக்காக 11 போட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதன் பின்னர், இங்கிலாந்து அணியில் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையிலேயே, தற்போது அவர் அயர்லாந்துக்கு மீளத் திரும்புகிறார். இதன்படி, இறுதியாக கடந்த வருடம் ஜனவர் மாதம் 17ஆம் திகதி இங்கிலாந்து அணிக்காக பங்கேற் ராங்கின், சர…
-
- 0 replies
- 329 views
-
-
2015 ல் அதிக சதம் அடித்து சங்கா சாதனை December 31, 2015 2015 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் குவித்த வீரர்கள் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்ககார முதலிடத்திலுள்ளார். இந்த வருடத்தில் 14 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள சங்ககார 5 சதங்களை அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவருடன் இணந்து வில்லியர்ஸூம் 5 சதங்களை அடித்து முதலிடத்திலுள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக அம்லா, டில்சான், டெய்லர், குப்தில், ஆகியோர் நான்கு சதங்களை அடித்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். குமார் சங்ககாரவில் 5 சதங்களுள் 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் அவர் பெற்ற 4 சதங்களும் உள்ளடக்கம். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்களை பெற்ற சாதன…
-
- 0 replies
- 487 views
-
-
சங்கக்கார தலைமையில் பாகிஸ்தான் செல்லும் எம்.சி.சி. Published by J Anojan on 2019-12-18 16:35:53 மெர்லிபோன் கிரிக்கெட் கிளப் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. குமார் சங்கக்கார தலைமையில் எம்.சி.சி. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது விசேட அம்சமாகும். எம்.சி.சி. தலைமையில் ஓர் அணி பாகிஸ்தானுக்கு இதன்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்கு லாகூரில் இடம்பெறும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானின் கிரிக்கெடானது பெருமளவு வீழ்ச்சியடைந்திரு…
-
- 0 replies
- 522 views
-
-
கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போது இலங்கைஅணி வீரர்களுடன் கைகுலுக்கப்போவதில்லை என இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இரண்டு டெஸ்ட் தொடரிற்காக இங்கிலாந்து அணி இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னதாக ஜோ ரூட்டிடம் கொரோனா வைரஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அணி வீரர்களுடன் இங்கிலாந்து வீரர்கள் கைகுலுக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது எங்கள் வீரர்கள் பலர் உடல்நலப்பாதிப்பிற்குள்ளானதை கருத்தில்கொள்ளும்போது உடல்ரீதீயான தொடுகையை குறைந்தளவிற்கே வைத்துக்கொள்வதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 323 views
-