விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஒரு தொடரை இழந்தால் தோனிக்குள்ள மரியாதை போய் விடுமா? - சுரேஷ் ரெய்னா கேள்வி! ஒரு தொடரை இழந்தவுடன் தோனிக்குள்ள மரியாதை போய் விடுமா? என்று இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என்று இழந்தாலும், கடைசி போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதால், வொயிட் வாஷில் இருந்து தப்பியது. கடைசி ஒருநாள் போட்டியில் 21 பந்துகளில் 38 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனிக்கு களத்திலும் வெளியேயும் எப்போதும் பக்கபலமாக இருப்பவர். வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததும் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், ''தோனி எப்போதும் பாசிட்டிவான போக…
-
- 0 replies
- 298 views
-
-
ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இரு அணிகளினதும் தலைவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் வழிநடத்தலால் விறுவிறுப்புடன் நிறைவுக்கு வந்தது. இதில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டாலும், அண்மைக்கால ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தால் இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ஓட்டக்குவிப்பில் அசத்தி வருகின்ற சந்திமால், ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்காக…
-
- 0 replies
- 274 views
-
-
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் புதிய சாதனை படைத்துள்ள மிதாலி ராஜ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES மகளிருக்கான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவரான மிதாலி ராஜ் பெற்றுள்ளார். கடந்த புதனன்று பிரிஸ்டல் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி ஒன்றில், 69 ஓட்டங்கள் குவித்த நிலையில் மிதாலி ராஜ் இந்த சாதனையை அடைந்தார். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சார்லெட் எட்வர்ட்ஸ், 5,992 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்தோர் பட்டியலில் இதுவரை முதலிடம் வகித்து வந்தார். தற்போது 6,028 ரன்கள் குவித்ததன் மூல…
-
- 0 replies
- 418 views
-
-
-
- 11 replies
- 1k views
-
-
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: சச்சினுக்கு அடுத்த இடத்தில் சங்கக்காரா உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நியூசிலாந்துக்கு எதிராக 39 ரன்கள் எடுத்த சங்கக்காரா ஒருநாள் கிரிக்கெட்டில் 13,732 ரன்கள் எடுத்து சச்சினுக்கு அடுத்த இடத்திற்கு வந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடம் வகிக்க அதற்கு அடுத்த இடத்தில் முன்னதாக ரிக்கி பாண்டிங் 13,704 ரன்களுடன் இருந்தார். தற்போது 13,732 ரன்களுடன் சங்கக்காரா 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெடில் சங்கக்காரா 1030 ரன்களை எடுத்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கும் மேல் எடுக்கும் 3-வது இலங்கை வீரர் ஆனார் சங்கக்காரா, மொத்தத்தில் 14-வது வீரர். சச்சின் டெண்டுல்கர் உலகக்கோப்ப…
-
- 1 reply
- 578 views
-
-
ஒ.நா.ச போட்டிகளில் இவ்வருடத்தில் 101 சதங்கள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 101 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இரண்டு சதங்கள் குவிக்கப்பட்ட நிலையிலேயே, 101 சதங்கள் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது. பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் முஷ்பிக்கூர் ரஹீம் பெற்ற சதமே 100ஆவது சதமாகவும், இலங்கைக்கெதிராக மார்லன் சாமுவேல்ஸ் பெற்ற சதம், 101ஆவது சதமாகவும் அமைந்திருந்தது. வருடமொன்றில் 100 சதங்கள் எட்டப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதோடு, இரண்டாமிடத்தில் காணப்படும் 2014ஆம் ஆண்டை விட, 22 சதங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதில், 2014ஆம் ஆண்டில் 121 ஒருநாள் சர்வதேசப் போட்டிக…
-
- 0 replies
- 211 views
-
-
06 NOV, 2023 | 08:18 PM சி.சி.என் 2023 உலகக்கிண்ணத் தொடர் பல சுவாரஸ்யங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழந்த முறை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆடுகளத்தில் நுழைந்த அவர் தனது தலைக்கவசம் பிரச்சினை கொடுத்ததால் சுமார் மூன்று நிமிடங்கள் வரை துடுப்பெடுத்தாட தயாராகவில்லை. இதையடுத்து பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் நடுவரிடம் ஆட்டமிழப்பை கோர ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் படி TIME OUT முறையில் மெத்யூஸ் ஆட்டமிழந்தவராக கருதப்பட அவர் ஆட்டமிழப்பு தீர்ப்பை வழங்கினார். ஒரு நாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளைப்பொறுத்தவரை இ…
-
- 1 reply
- 367 views
- 1 follower
-
-
ஒரு நாள் தரவரிசையில் எட்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கை தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐ.சி.சி இன் ஒரு நாள் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு எட்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக, 88 புள்ளிகளுடன் தரவரிசையில் எட்டாம் இடத்தினைப் பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றிகள் மூலம் 5 மேலதிக புள்ளிகளைப் பெற்றது. இதன் காரணமாக, தற்போது இலங்கை அணி பெற்றுள்ள 93 புள்ளிகளுடன் பாகிஸ்தான் சமநிலையில் இருக்கின்றது. எனின…
-
- 0 replies
- 355 views
-
-
ஒரு நாள் தரவரிசையில் திராவிட் 5 வது இடம் புதன், 29 ஆகஸ்ட் 2007( 20:50 ஈஸ்T ) ஒரு நாள் சர்வதேச ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் ராகுல் திராவிட் 8 இடங்கள் முன்னேறி 5ம் இடத்திற்கு வந்துள்ளார். அணியின் துணைத் தலைவராகவும், இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணித் தலைவராகவும் உயர்ந்த மகேந்திர சிங் தோனி 5வது இடத்திலிருந்து 15வது இடத்திற்கு சரிந்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் ஒரு நாள் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் முறையே திராவிட் 46, 92 (நாட் அவுட்) மற்றும் 56 என்று சீரான முறையில் ரன்கள் எடுத்து வருவதால் 8 இடங்கள் முன்னேறி 5ம் இடத்திற்கு உயர்ந்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக நடப்பு ஒரு நாள் தொடரில் அபாரமா…
-
- 0 replies
- 959 views
-
-
இங்கிலாந்து கப்டன் வோகன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு உடனடியாக முழுக்குப் போட வேண்டும் என்று முன்னாள் வீரர் தோர்ப் வலியுறுத்தியிருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கப்டன் மைக்கேல் வோகன் டெஸ்ட் போட்டியில் ஓரளவு ஜொலித்தாலும், ஒரு நாள் போட்டியில் சோபிப்பதில்லை. தவிர அடிக்கடி காயமும் அடைகிறார். இதுவரை 86 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் ஒரு சதம் கூட அடித்தது கிடையாது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவரது ஆட்டம் மோசமாக இருந்தது. 9 போட்டியில் 209 ரன்கள் ( சராசரி 20. 90 ) மட்டுமே எடுத்திருந்தார். இதனால் வோகன் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஓய்வு பெறவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் இருந்து வோகன் ஓய்வு …
-
- 0 replies
- 853 views
-
-
ஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி துபாய்: இந்த ஆண்டுக்கான, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஐசிசியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு ஆண்டுதோறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம். ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளுக்கான அணி கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது ஐசிசி. ஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி ஒருநாள் அணியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முமகது ஷமி, விராட் கோஹ்லி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோருக்கும் இடம் கி…
-
- 0 replies
- 536 views
-
-
ஒரு நாள் போட்டிகளுக்கு இன்றோடு விடைகொடுக்கும் டில்ஷான் ; 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான் இன்றுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார். தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று 2.30 க்கு இடம் பெறவுள்ள 3 வது ஒருநாள் போட்டியே டில்ஷானின் இறுதி ஒருநாள் ஆட்டமாக அமையவுள்ளது. 1999 ஆம் ஆண்டு சிம்பாவே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கிய டில்ஷான், இதுவரை இலங்கை அணிக்காக 329 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 47 அரைச்சதம் அடங்கலாக 10,248 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதேவேளை பந்துவீச்சில் 329 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுக…
-
- 0 replies
- 373 views
-
-
ஒரு நாள் போட்டியில் புதிய விதிகள் [01 - October - 2007] [Font Size - A - A - A] ஒரு நாள் போட்டிக்கு ஐ.சி.சி. அறிவித்த புதிய விதிகள் நேற்று முன்தினம் இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமானது. * `கிரீசை'த் தாண்டி நோ போல் வீசினால் அடுத்த பந்து எதிரணிக்கு பிரி- ஹிட்டாக வழங்கப்படும். இதில் ரன்- அவுட் மூலம் மட்டுமே ஆட்டமிழக்கச் செய்ய முடியும். * முதல் `பவர் பிளே தவிர அடுத்த இரண்டு பவர்- பிளே' ஓவர்களில் 90 அடி சுற்றளவுக்கு வெளியே மூன்று களத்தடுப்பாளர்கள் நிற்கலாம். இதற்கு முன் மூன்று `பவர் பிளே' ஓவர்களிலும் 2 களத்தடுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. * ஒவ்வொரு அணி பந்து வீசும் போதும் 35 ஓவர்களுக்கு…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஒரு நிமிடத்தில் 20 இரும்புக் கம்பிகள் வளைந்தன; புதிய உலக சாதனை இலங்கையில் (வீடியோ) ஒரு நிமிடத்தில் 20 இரும்புக் கம்பிகளை வாயினால் வளைத்து, கொழும்புத் துறைமுகக் கொள்கலன் தளத்தின் தொழில் புரியும் ஜனக காஞ்சன எனும் 24 வயதுடைய இளைஞன், இன்று வியாழக்கிழமை (06) உலக சாதனை படைத்துள்ளார். விளையாட்டுத்துறை வைத்தியர்கள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் முன்னிலையில் மோதரை - முகத்துவாரத் துறைமுகப் பயிற்சி நிலையத்தில் வைத்து இவர் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரஷ்யா நாட்டு விளையாட்டு வீரர் ஒருவர், ஒரு நிமிடத்தில் 12 இரும்புக் கம்பிகளை வாயினால் உடைத்திருந்தமையே இதற்கு முன்னர் உலக சாதனையாக இருந்ததை கு…
-
- 0 replies
- 387 views
-
-
ஒரு பந்திற்கு 7 ஓட்டங்கள். no six, no no ball. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்திய வீரர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் ஒரே ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுண் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. அந்தப் போட்டியில் தான் இந்த உலக சாதனை அரங்கேறியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிவீரர் கிரேக் பிராத்வெய்ட் தனக்கு வந்த பந்தை வேகமாக அடித்து விரட்டி உடனடியாக ஓட்டங்கள் எடுக்க ஓடினார். அப்படி ஓடியே அவர் 3 ஓட்டங்களை எடுத்து விட்டார். அந்த சமயம் பந்தை வசப்படுத்திய தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் ஏப் டிவில்லியர்ஸ், அதை ஸ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு பால்.. ஒரு ரன் - சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த நேபாளம் நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. #NEDvNEP #NepalCricket கடந்த மார்ச் மாதம் நேபாளம் அணி சர்வதேச அணிக்கான அந்தஸ்தை பெற்றது. இதன் பின்னர் முதன் முறையாக அந்த அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நடந்தது. …
-
- 0 replies
- 360 views
-
-
ஒரு பிளேயரை வாங்குறதுக்குள்ள...! ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 1 #IPLAuction 2018 ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் முடிந்துவிட்டது. 8 அணிகளில் விளையாட 187 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 628.70 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. சில அணிகள் முழு பலத்துடன் கம்பீரமாக களமிறங்கவுள்ளன. சில அணிகளுக்கு ஏதோ ஒரு டிபார்ட்மென்ட் பலவீனமாக இருக்கிறது. ஏலத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு எண்ணிலடங்கா கேள்விகள். ``ஏன் அந்த பிளேயருக்கு இத்தனை கோடி", ``அவரை ஏன் யாரும் வாங்கலை", ``காச செலவு பண்ணாத்தான் என்ன, அத வச்சு என்ன பண்ணப் போறாங்க", "அவனை ஏன் வாங்குனாங்க" என சோஷியல் மீடியாவில் புலம்பித் தள்ளினார்கள் கிரிக்கெட் வெறியர்கள். …
-
- 4 replies
- 1k views
-
-
ஒரு போட்டிக்கு ரூ.2.42 கோடி.. இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரானது பேடிஎம்! மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு, அடுத்த நான்கு ஆண்டுகள் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (One97 Communications) நிறுவனமே ஸ்பான்சராக செயல்பட உள்ளது. இது, இணையதள பேமென்ட் போர்ட்டலான 'பேடிஎம்' நிறுவனத்தினுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணிக்கு 2014-15ம் ஆண்டுக்கான ஸ்பான்சராக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒரு போட்டிக்கு ரூ.40 லட்சத்தை கட்டணமாக பிசிசிஐக்கு, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செலுத்தி வந்தது. இதனிடையே அடுத்த 4 ஆண்டுகளுக்கான ஸ்பான்சரை தேர்ந்தெடுக்க இன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் மற்றும், மைக்ரோமேக்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள்தான் பங்கேற்றன. 5 மணி…
-
- 0 replies
- 287 views
-
-
ஒரு போதும் எல்லை மீறமாட்டோம் தென்ஆபிரிக்காவின் பவுச்சர் கூறுகிறார் [26 - March - 2008] வார்த்தைப் போருக்கும் ஆக்ரோஷமாக விளையாடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிவோம். ஒரு போதும் எல்லை மீறமாட்டோம் என தென் ஆபிரிக்க விக்கெட் காப்பாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள தென் ஆபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று சென்னையில் தொடங்குகிறது. முன்னதாக நடந்த அவுஸ்திரேலிய தொடரில் வீரர்களிடையே நடந்த வார்த்தை போர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது போன்ற வார்த்தைப் போர் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கப்டனின் பொறுப்பென அனைத்து கிரிக்கெட் சபைகளுக்கும் சமீபத்தில் ஐ.சி.சி. கடிதம் அனுப்பியது. இதனால் தென்ஆபிரிக்க…
-
- 0 replies
- 833 views
-
-
ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் இலங்கை! By A.Pradhap - கராச்சியில் ஆரம்பமாகியுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டதுடன், போட்டி சமனிலையில் முடிவடைந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் ஆரம்பமாகவும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது. இன்றைய போட்டிக்கான அணியின் மாற்றங்களை பொருத்தவரை, இலங்கை அணியானது ஒரு மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. கசுன் ராஜிதவு…
-
- 0 replies
- 690 views
-
-
ஒரு மில்லியன் டொலரை நஷ்ட ஈடாக கேட்க உள்ளோம் : கிரிக்கெட் சபை இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு ஐ.சி.சி.யால் தடை விதிக்கப்பட்டிருந்தமையால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஒரு மில்லியன் டொலரை நஷ்டஈடாக கேட்க உள்ளோம் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குசேல் ஜனித் பெரேரா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பாவித்ததாக கூறி ஐ.சி.சி.யால் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஆய்வில் அது பொய்யானது. எனவே நஷ்டஈடு கேட்கும் உரிமை எமக்குள்ளது. இதற்கு முன்னதாக குசல் ஜனித் பெரேராவை இலங்கை அணியில் இணைத்து நாட்டுக்காக விளையாட வாய்ப்பளிப்பதே முக்கிய நோக்கமாகும். http://www.virakesari.lk/article/6340
-
- 2 replies
- 886 views
-
-
ஒரு ரன் த்ரில் வெற்றியுடன் இறுதிப்போட்டியில் நுழைந்த கிளாடியேட்டர்ஸ் அணி! பாகிஸ்தானில் நடந்துவரும் பிஎஸ்எல் டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டிக்கான முதல் குவாலிபையர் போட்டியில், டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஜால்மி அணியும், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. அப்ரிடி, சாமுவேல்ஸ், கம்ரான் அக்மல், வஹாப் ரியாஸ், முகமது ஹபீஸ், கிறிஸ் ஜோர்டான் என நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கியது பெஷாவர் அணி. முதலில் பேட்டிங் செய்த கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கெவின் பீட்டர்சன், அதிகபட்சமாக 22 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 40 ரன்கள் எடு…
-
- 4 replies
- 549 views
-
-
திரும்பி வருகிறார் ஹர்ஷா போக்லே! ஒரு வருட காலம் கிரிக்கெட் வர்ணனை செய்வதில் இருந்து நீக்கப்பட்ட ஹர்ஷா போக்லே மீண்டும் வருகிறார். நாக்பூரில் இந்தியா-நியூஸிலாந்து, டி-20 போட்டியின்போது விதர்பா கிரிக்கெட் சங்கத்தினருக்கும், ஹர்ஷா போக்லேவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அமிதாப் பச்சன் தன் ட்விட்டர் பக்கத்தில் 'இந்திய வர்ணனையாளர் வேறு விஷயங்களைப் பேசுவதை தவிர்த்து தங்கள் வீரர்களைப் பற்றி பேசினால் நல்லது' என்று பதிவிட்டார். அப்போதைய கேப்டன் தோனி அமிதாப்பின் பதிவை பகிர்ந்தார். இதையடுத்து ஹர்ஷா போக்லேவை வர்ணனையாளர்கள் பிரிவிலிருந்து, பி.சி.சி.ஐ நீக்கியது. கிரிக்கெட் ரசிகர்களிடம் நற்பெயரை கொண்ட ஹர்ஷா போக்லே நீக்கப்பட்ட விவக…
-
- 0 replies
- 433 views
-
-
ஒரு வெற்றிக்காக போராடும் இலங்கை ; இறுதி ஒருநாள் போட்டி இன்று இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 4-0 என கைப்பற்றியுள்ள நிலையில், வைட் வொஷ் ஆவதை தடுப்பதற்கு இந்த போட்டியில் இலங்கை அணி கட்டாய வெற்றியை பெற வேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய போட்டியை பொறுத்தவரையில், இலங்கை அணி சார்பில், தனஞ்சய டி சில்வா விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்கு பதிலாக சந்திமல் அணியில் இணைத்துக்கொள்ளப்படும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பில் சம்ஷிக்கு பதில…
-
- 0 replies
- 359 views
-