விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 188 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்போது, இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். அதன்படி, திமுத் கருணாரத்ன 106 ஓட்டங்களுடன் லஹிரு திரிமான்ன 80 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர். 12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! (adaderana.lk)
-
- 0 replies
- 809 views
-
-
துபாயில் சர்வதேச மாரத்தான் போட்டி: எத்தியோப்பிய வீரர் முதலிடம் துபாயில் ஸ்டாண்டர் சார்ட்ர்ட் வங்கியின் ஆதரவில் 21ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் எத்தியோப்பிய வீர்ர் ஹெய்லி ஜெப்ர்செலஸ்ஸி மூன்றாவது வருடமாக தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார். முப்பத்து ஆறு வயதான இவர் 42.2. கிலோ மீட்டர் தூரத்தை (26 மைல்) இரண்டு மணி, ஆறு நிமிடம், ஒன்பது விநாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார். எத்தியோப்பியாவின் சாலா டிசாஸே இரண்டாவது இடத்தைப் பெற்றார்.உலகெங்கிலும் பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக பல்வேறு சவால்கள் காத்திருப்பினும், துபாய் மாரத்தானில் அதன் தாக்கம் எதிரொலிக்காது பரிசுத் தொகையானது அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண…
-
- 0 replies
- 474 views
-
-
40 சிக்ஸர்கள், 307 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: உள்ளூர் போட்டியில் சாதனை ஜோஷ் டன்ஸ்டன் | படம்: ட்விட்டர் பகிர்விலிருந்து ஆஸ்திரேலியாவில் அகஸ்டா துறைமுக கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் போட்டி ஒன்றில் ஜோஷ் டன்ஸ்டன் என்ற கிரிக்கெட் வீரர் 307 ரன்களைக் அதிரடியாக குவித்துள்ளார். இதில் அவர் மட்டுமே 40 சிக்ஸர்கள் விளாசியதுதான் ஆட்டத்தின் முக்கிய அம்சம். வெஸ்ட் அகஸ்டா அணிக்கும், செண்ட்ரல் ஸ்டெர்லிங் அணிக்கும் இடையே சனிக்கிழமை அன்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. அணிக்கு 35 ஓவர்கள் வீதம் நடந்த இந்தப் போட்டியில் வெஸ்ட் அகஸ்டா அணி முதலில் ஆடியது. அணியின் முதல் விக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், ட்ரோய் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ட்ரோய் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, அஞ்சல் டி மரியா, கிறிஸ்டோபர் எனக்குங்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இப்போட்டியில் காயம் காரணமாக நேமர், கிலியான் மப்பே ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை. இதேவேளை, நேமருக்கு வெற்றிகரமாக நேற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நேமர் குணமடைய இரண்டரை தொடக்கம் மூன்று மாதங்கள் வரையில் செல்லும் என பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியின் வைத்தியர் றொட்றிகோ லஸ்மர் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 317 views
-
-
மலிங்கவிற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் எச்சரிக்கை இலங்கை அணியில் மீண்டும் விளையாட விரும்பினால் உடனடியாக உள்ளுர் போட்டிகளிற்கு திரும்புங்கள் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வேகப்பந்து வீச்சாளர் லசித்மலிங்கவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. லசித் மலிங்க உள்ளுர் போட்டிகளில் விளையாடாவிட்டால் தெரிவுக்குழுவினர் அவர் குறித்து தெளிவான முடிவையெடுக்கவேண்டும் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். மலிங்கவை உள்ளுர் போட்டிகக்கா தெரிவு செய்துள்ளோம் என்பதை அவரிற்கு அறிவித்துள்ளோம் அவர் உள்ளுர் போட்டிகளில் விளையாடாவிட்டால் தெரிவுக்குழுவினர் தெளிவான முடிவை எடுக்கவேண்டியிர…
-
- 0 replies
- 506 views
-
-
நடத்தையில் உதாரணமாகத் திகழ்பவர் தோனி: ஆகாஷ் சோப்ரா புகழாரம் இன்றைய கிரிக்கெட் களத்தில் வீரர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் ஒழுக்கம் மற்றும் நடத்தையில் உதாரணமாகத் திகழ்பவர் தோனி என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார். நியூஸ்24 கிரிக்கெட் சந்திப்பில் சோப்ரா இவ்வாறு கூறியுள்ளார். “களத்தில் தோனி அமைதியாக இருக்கிறார். ஆட்டம் மட்டுமே பேச வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். கிரிக்கெட் ஆடுகளத்தில் அவரது நடத்தை பெரிய பாராட்டுக்குரியது. இன்றைய கிரிக்கெட் ஆடுகளம் வீரர்களிடையே வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் நிரம்பியுள்ளது. இதில் ஒரு வார்த்தையைக் கூட பிரயோகிக்காது களத்தில் செயல்படுகிறார் தோனி. ஒழுக்கமான கிரிக்கெட் வீரர் எ…
-
- 0 replies
- 664 views
-
-
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று October 17, 2018 1 Min Read இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி கண்டி பல்லேகலயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்டதோடு, இரண்டாவது போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றியீட்டிருந்தது. இந்தநிலையில் தொடரைக் கைப்பற்ற வேண்டுமாயின் இன்றைய போட்டி உட்பட மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/99583/
-
- 0 replies
- 397 views
-
-
பதிலடி கொடுத்து தொடரை சம நிலையில் முடித்த இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. சிட்டினியில் ஆரம்பான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. 165 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. இந்திய அணி சார்பாக அணித் தலைவர் விராட் கோலி 41 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 2 ஆறு ஒட்டம் அடங்களா…
-
- 0 replies
- 586 views
-
-
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் நடைபெற்றது. போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் 76 வயதுடைய மூதாட்டி ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான நிகழ்வு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/295984
-
- 0 replies
- 467 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த் 10 மே 2024, 07:38 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் மேலதிக வீரர்களில் (மாற்று வீரர்கள் பட்டியல்) ஒருவராக தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக நேற்றைய தினம் முதல் தடவையாக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியை இதற்கு முன்னர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் பிறந்து…
-
- 0 replies
- 493 views
- 1 follower
-
-
இந்தியா, தென் ஆபிரிக்க தொடர் முன்னோட்டம் இந்தியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பலமான இரண்டு அணிகள் மோதும் தொடர் என்பதினால் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. 3 டுவென்டி டுவென்டி போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ளது. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு நல்ல பலப் பரீட்சைக்கான தொடராக இது அமையவுள்ளது. இந்தியா அணி நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது சொந்த நாட்டில் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர் சொந்த நாட்டில் இந்த தொடர் ஆரம்பிக்கவுள்ளது. சொந்த நாட்டில் புலிகளாகவும், வெளிநாடுகளில் எலிகலாகவும் திகழும் இந்திய அணிக்கு க…
-
- 0 replies
- 421 views
-
-
2016 ஐரோப்பிய கிண்ண தகுதிகாண் சுற்று நிறைவு 100 வீத வெற்றியுடன் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து 2015-10-15 10:54:18 பிரான்ஸில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு இப்போதைக்கு 19 நாடுகள் தகுதிபெற்றுள்ளன. போட்டிகளை நடத்தும் வரவேற்பு நாடென்ற வகையில் பிரான்ஸ் நேரடித் தகுதியைக் கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்ற தகுதிகாண் போட்டிகளின் அடிப்படையில் குழு ஏயிலிருந்து ஐஸ்லாந்து, செக் குடியரசு, துருக்கி, குழு பியிலிருந்து பெல்ஜியம், வேல்ஸ், குழு சியிலிருந்து ஸ்பெய்ன், ஸ்லோவாக்கியா, குழு டியிலிருந்து ஜேர்மனி, போலந்து, குழு ஈ யிலிருந்து இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து, குழு எவ்விலிருந்து வட அயர்லாந்து, ருமேனியா, …
-
- 0 replies
- 242 views
-
-
மலிங்கவை முந்த ஆசை: பிரசாத் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மாறியிருக்கும் தம்மிக்க பிரசாத், டெஸ்ட் போட்டிகளில் இலங்கை சார்பாக இரண்டாவது அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக மாறுவதற்கு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் சமிந்த வாஸ், 355 விக்கெட்டுகளுடன் முதலாவது இடத்தையும் லசித் மலிங்க 101, டில்ஹார பெர்ணான்டோ 100, பிரமோதய விக்கிரமசிங்க 85, றுமேஷ் ரத்நாயக்க 73 விக்கெட்டுகளுடன் ஏனையோர் அடுத்த இடங்களிலும் காணப்படுகின்றனர். ஆறாவது இடத்தில், 70 விக்கெட்டுகளுடன் தம்மிக்க பிரசாத் காணப்படுகின்றார். தம்மிக்க பிரசாத்தின் ஒட்டுமொத்த சராசரி 37.51ஆகக் காணப்படுகின்ற போதிலும், கட…
-
- 0 replies
- 326 views
-
-
அவுஸ்திரேலிய ஆடுகளங்களை விமர்சிக்கிறார் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்துத் தன்னுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவின் இப்பருவகாலத்தில், டெஸ்ட் போட்டிகளும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும், தட்டையான ஆடுகளங்களைக் கொண்டனவாக அமைந்திருந்தன. குறிப்பாக, அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான தொடரின் 5 போட்டிகளில், மொத்தமாக 3,159 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. 5 போட்டிகளில் 3,000க்கும் மேற்பட்ட குவிக்கப்பட்டமையை 'மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று" எனக் குறிப்பிட்ட அவர், 'என்னைப் பொறுத்தவரை, எங்களது ஆடுகளங்களின் பண்பே, ஏமாற்றம் தருவதாக அமைந்தது. பிறிஸ்பேண், பேர்த் ஆடுளங…
-
- 0 replies
- 353 views
-
-
பாகிஸ்தானின் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள்,இலங்கை அல்லது ஐ.அ.இராச்சியத்தில் நடைபெறும் வாய்ப்பு? தமது அணி பங்குபற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ சி. சி.) உலக இருபது கிரிக்கெட் போட்டிகளை நடுநிலையான மைதானங்களில் நடத்துவதற்கான பிரேரணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஹாரியார் கான் முன்வைத்துள்ளார். தமது அணி இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு பாகிஸ் தான் அரசாங்கம் அனுமதிக்காத பட்சத்தில் தமது நாட்டு அணி சம்பந்தப்பட்ட போட்டிகளை நடுநிலையான மைதானங்களில் நடத்துவதற்கான பிரேரணை ஒன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளதாக ஷஹாரியார் கூறினார். ‘‘இந்தி…
-
- 0 replies
- 323 views
-
-
23 APR, 2025 | 09:08 PM 'உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்பது கவர்ந்திழுக்கக்கூடிய விரும்பத்தகாத போலித்தனத்தை மூடி மறைக்கும் ஒன்று' என கிரிக்கெட்டின் விவிலியம் என வருணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை ஆசிரியர் லோரன்ஸ் பூத் விமர்சித்துள்ளார். அதற்கான முறைமை மாற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் வெளியிடப்படும் விஸ்டன் சஞ்சிகை நூலின் 162ஆவது பதிப்பில், தனது பார்வையை சர்வதேச கிரிக்கெட் பேரவை மீது பூத் திருப்பியுளளார். ஐசிசி சம்பயின்ஷிப் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஐசிசியினால் அனுமதிக்கப்பட் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்தது. அந்த சந்தர்ப்பத்தில…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
ஊக்கமருந்து விவகாரம்: போல்ட்டின் ஒலிம்பிக் பதக்கம் பறிபோகிறது? சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது, உலகின் வேகமான மனிதரான உசைன் போல்ட் வென்றெடுத்த மூன்று தங்கங்களில், ஒன்று பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 4*100மீற்றர் அஞ்சலோட்டத்தில், போல்டின் சக அணி வீரர்களில் ஒருவரான நெஸ்டா காட்டரின் ஏ மாதிரியில், தடை செய்யப்பட்ட மெதயில்ஹெக்ஸானமியன் பயன்படுத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியமையையடுத்தே பதக்கம் பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்கின் போது பெறப்பட்ட 454 மாதிரிகள் மீளச்சோதனை செய்யப்பட்டதன் பின்பே மேற்படித் தகவல் வெளியாகியுள்ளது. …
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கை வருகிறார் அதிரடி மன்னன் கிளென் மக்ஸ்வெல் . T20 யிலாவது மீண்டெழுமா ஆஸ்திரேலியா? இலங்கை வருகிறார் அதிரடி மன்னன் கிளென் மக்ஸ்வெல் . T20 யிலாவது மீண்டெழுமா ஆஸ்திரேலியா? இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான தொடரின் T20 போட்டிகளுக்கான குழாமில் ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் என புகழப்படும் மக்ஸ்வெல் இணைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இலங்கைக்கான சுற்றுலாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அணியிலிருந்து மக்ஸ்வெல் நீக்கப்பட்டிருந்தார். அவர் பங்கெடுத்த இறுதி 10 ஒருநாள் போட்டிகளில் போதிய திறமை வெளிப்பாடுகளை காட்டவில்லை எனும் அடிப்படையில், அவர் நீக்கப்பட்டு அணிக்கு ட்ரெவ்ஸ் ஹெட் சேர்க்கப்பட்டார். சூழல் பந…
-
- 0 replies
- 445 views
-
-
ஒரு பந்திற்கு 7 ஓட்டங்கள். no six, no no ball. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.9k views
-
-
ஆஸியுடன் மோதும் இலங்கை ; முதலாவது ஒருநாள் போட்டி நாளை இலங்கை மகளிர் மற்றும் ஆஸி மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை (18) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஆஸி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 4 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் ஆகியன இடம்பெறவுள்ளன. இதில் முதல் இரண்டு போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி மைதானத்திலும், இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இடம்பெறவுள்ளதோடு டி20 போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் இடம்பெறவுள்ளன. இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சாமரி அதபத்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்நி…
-
- 0 replies
- 416 views
-
-
வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயம் கிண்ணத்தை சுவீகரித்தது ஐயனார் விளையாட்டுக்கழகம்.! வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயத்துக்கான மாபெரும் கடினப்பந்து போட்டி இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஐயனார் விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்ததுக் கொண்டது. வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயம் கிண்ணத்திற்கான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது, ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கும் ஜங்ஸ்ரார் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நான்காவது வருடமான இடம்பெற்று வருகின்றது. ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ஐயனார் விளையாட்டுக்கழக அணியின் தலைவர் அனுசன் களத்தடுப்பை தெரிவு செய…
-
- 0 replies
- 774 views
-
-
ஜிடானை வசை பாடிய ரொனால்டோ! தனக்குப் பதிலாக சப்ஸ்டிட்யூட் பிளேயரை களமிறக்கியதால், ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடானை, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையே லா லிகா கால்பந்து தொடர் நடந்து வருகிறது. சனிக்கிழமை நடந்த போட்டியில் உலகின் செல்வாக்கு மிக்க அணியான ரியல் மாட்ரிட், லாஸ் பல்மாஸ் அணியை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் 2-1 என முன்னிலையில் இருந்தபோது, 72வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதிலாக, மாற்று வீரரை களமிறக்கினார் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடான். இதனால் ரொனால்டோ கடும் அதிருப்தி அடைந்தார். களத்தில் இருந்து சிடுசிடு முகத்துடன் …
-
- 0 replies
- 352 views
-
-
எங்கே செல்கிறது கிரிக்கெட் சபை? -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அண்மைய சில நாட்களாக, இலங்கை கிரிக்கெட் சபை பற்றி வெளியாகிவரும் செய்திகள், பெருமளவில் நன்மைதரக் கூடியனவாக இருக்கவில்லை. கடந்த 7 நாட்களுக்குள் மாத்திரம், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள், மஹேல ஜெயவர்தனவின் அறக்கட்டளைக்கான நடைபயணத்துக்கு ஆதரவளிக்க மறுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு, சர்ச்சைக்குரிய விதத்தில், வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்மிரரின் சகோதரப் பத்திரிகையான டெய்லிமிரர் பத்திரிகையால் வெளியிடப்பட்ட பிரத்தியேகமான செய்தியின்படி, இலங்கை கிரிக்கெட் சபையில் பணிபுரிந்த பெண் ஊழியரொ…
-
- 0 replies
- 341 views
-
-
முதல் ஒருநாள் கிரிக்கெட்: வெ.இண்டீசை 45 ரன் வித்தியாசத்தில் வீழத்தியது இங்கிலாந்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோர்கனின் சதத்தால் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டி கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ராய், பில்லிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோ…
-
- 0 replies
- 317 views
-
-
பிரிமியர் லீக் கால்பந்து - இந்த வார அப்டேட் இங்கிலாந்தில் உள்ள சிறந்த 20 கால்பந்து கிளப்கள் மோதும், பிரிமியர் லீக் தொடர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 38 வாரங்கள் நடக்கும் இந்த தொடர் தற்போது 29-வது வாரத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் ஆட்டங்கள் உண்மையிலேயே சூடு பிடிக்க தொடங்கி உள்ளன. இந்த வாரம் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெற்றதால் இங்கு பிரிமியர் லீக்கில் குறைவான ஆட்டங்களே அட்டவணையில் உள்ளன. இந்த வார ஆட்டங்களை பார்ப்பதற்கு முன், புள்ளிகள் பட்டியலில் அணிகளின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். செல்சி கிளப் 66 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள டோதன்ஹாம் அணியை…
-
- 0 replies
- 297 views
-