Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை அணி ரசிகர்களுக்கு சங்கா விடுக்கும் அவசர வேண்டுகோள் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் தம்புள்ளையில் ரசிகர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததையடுத்து மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இலங்கை அணி ரசிகர்களுக்கு காணொளி மூலமான அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தற்போது மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஜமெய்க்கா தளவஹாஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில், தாய்நாடு தொடர்ச்சியான பல தோல்விகளை ச…

  2. அடுத்தாண்டு ஒலிம்பிக்கிலும் ரஷ்யா இல்லை தென்கொரியாவின் பியொங்சங்கில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்குபற்றுவதற்கு, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், தாம் குற்றமில்லாதவர்கள் என நிரூபிக்கும் ரஷ்ய தடகள வீரர்கள் சுயாதீனக் கொடியொன்றின் கீழ் பியொங்சங்கில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்ற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது குறித்த தடகள வீரர்கள் ரஷ்யாவிலிருந்தான ஒலிம்பிக் தடகள வீரர்கள் என்றவாறு பங்குபற்றமுடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவால் 2014ஆம் ஆண்டு சோச்சியில் நடத்தப்பட்ட குளிர்கால ஒலிம்பின்போது அரச ஆதர…

  3. பிரிவு இரண்டின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி பிரிவு இரண்டின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 13 வயதிற்கு உட்பட்ட பிரிவு இரண்டு (டிவிஷன்-2) அணிகளுக்கு இடையிலான 2017/18 பருவகாலப் போட்டித்தொடரின் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு, மஹாநாம கல்லூரி (B) அணியினை, அன்ரன் அபிஷேக்கின் சகலதுறை ஆட்டத்தின் துணையுடன் வெற்றி கொண்ட யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஒரு நாளில் 4 இன்னிங்ஸ்களைக் கொண்டமைந்த இந்தப் போட்டியானது அநுராதபுரம் மாவட்ட கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியி…

  4. 600-வது கோல் அடித்தார், மெஸ்சி லா லிகா கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மெஸ்சி ஒரு கோல் அடித்ததன் மூலம் 600 கோல்களை எட்டியுள்ளார். பார்சிலோனா: லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 26-வது நிமிடத்தில் ‘பிரீ கிக்’ வாய்ப்பில் லயோனல் மெஸ்சி அடித்தார். தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 30 வயதான மெஸ்சி அடித்த 600-வது கோல் இதுவாகும். …

  5. காமன்வெல்த்: காணாமல் போன விளையாட்டு வீரர்கள், இந்தியாவுக்கு தங்கம் வென்ற பத்திரிகையாளர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகாணாமல் போனவர்களில் பளு தூக்கும் வீராங்கனை ஆர்க்கெஞ்சலின் ஃபுடோஜி சொங்போவும் ஒருவர். கேமரூன் நாட்டைச் சேர்ந்த எட்டு விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் கோல்டு கோஸ்டிலிருந்து காணாமல் …

  6. திராவிட் என்னுடைய உண்மையான குரு: கெவின் பீட்டர்சன் தன்னுடைய பேட்டிங் உத்தியில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தியவர் திராவிட், அவர் மூலம் உண்மையான குருவைக் கண்டடையும் தனது தேடலும் முடிந்தது என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன். KP என்ற அவரது சுயசரிதை நூலில் ஸ்பின்னர்களை விளையாடும் உத்திகள் பற்றி திராவிட் தனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் பற்றி பீட்டர்சன் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். அதாவது திராவிட் கற்றுக் கொடுத்த அந்த உத்திகள் தனது பேட்டிங்கில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்று அவர் அதில் கூறியுள்ளார். “அவரது பேட்டிங் காலத்தில் ராகுல் திராவிட் இந்தியாவின் நாயக பேட்ஸ்மென், சுழற்பந்து வீச்சைக் கையாள்வதில் அவர் ஒரு மேதை. எங்கள் இருவருக்கும் இடையே ந…

  7. பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (10) உறுதி செய்தது. இதன் காரணமாக அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அவரிடம் விளக்கம் கோரி குற்றப்பத்திரிகை சமர்பிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 26 வயதுடைய அனுபவமிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் கிண…

  8. தொடரிலிருந்து வெளியேறுகிறார் டூப்பிளஸ்ஸி தென்னாபிரிக்க அணித் தலைவர் டூப்பிளஸ்ஸியின் வலது தோள் பட்டையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான இறுதி இரு ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மெஹமட் முசாஜி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது தென்னாபிரிக்க அணி வீசிய 10 ஓவரில் பிடியெடுப்பு ஒன்றுக்கான முயற்சியொன்றை மேற்கொண்டபோது அவர் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் வலது தோல்பட்டை பாதிப்புக்குள்ளானதில். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைக்களுக்குப் பின்னர் மரு…

  9. 2015: எந்த அளவுக்கு இந்தியா தயாராக உள்ளது? உலகக் கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ளுமா என்னும் கேள்வியும் ஏக்கமும் இந்திய ரசிகர்கள் மனங்களில் உள்ளன. இந்தியாவின் அதி தீவிர ஆதர வாளர்கூட இந்தியா வெல்லும் என்று சொல்லும் நிலையில் இன்றைய இந்திய அணி இல்லை என்பதே கசப்பான யதார்த்தம். இந்திய அணியைப் பீடித்தி ருக்கும் பிரச்சினைகளில் முதன்மை யானது உடல் தகுதி. ரோஹித் சர்மா, ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் காய மடையலாம் என்ற நிலையே உள்ளது. இரண்டாவதாக, இந்திய பவுலிங். உயர் தரத்திலான போட்டி களுக்கு ஏற்ற பந்து வீச்சு இந்தியா விடத்தில் இல்லை என்பதே நிதர்சனம். அதுவும் வேகப்பந்துக்கு உகந்த ஆஸ்திரேலிய நியூஸிலாந்து …

  10. 20 ஓவர் போட்டி அணியில் டோனி இடம்பெறாதது ஏன்? - கேப்டன் கோலி பதில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாதது ஏன்? என்பதற்கு பதில் அளித்த கேப்டன் கோலி, ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு அளிக்கவே அவர் ஒதுங்கினார் என்று கூறியுள்ளார். #ViratKohli #T20Cricket #Dhoni திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டி வருமாறு:- இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் முதலில் பேட் செய்வதாக அறிவித்தபோது, ஆச்சரியம் அடைந…

    • 0 replies
    • 300 views
  11. கனேடிய குரோன் ப்றீயிலும் லூயிஸ் ஹமில்டன் வெற்றி 19 கட்­டங்­களைக் கொண்ட ஃபோர்­மியூலா 1 குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தின் ஏழா­வது கட்­ட­மான கனே­டிய குரோன் ப்றீ போட்­டியில் லூயிஸ் ஹமில்டன் வெற்­றி­பெற்று, ஒட்­டு­மொத்த சம்­பியன் பட்­டத்­திற்­கான தனது வாய்ப்பை அதி­க­ரித்த வண்ணம் உள்ளார். மேர்­சிடெஸ் அணி சார்­பாக போட்­டி­யிடும் லூயிஸ் ஹமில்டன் தனது சக அணி வீரர் நிக்கோ ரொஸ்­பேர்­கிடம் எதிர்­கொண்ட சவாலை முறி­ய­டித்து வெற்­றி­யீட்­டினார். 305.775 கிலோ மீற்றர் மொத்த தூரம் கொண்ட விலேநோவ் ஓடு­பா­தையில் நடை­பெற்ற 7ஆவது கட்ட க்ரோன் ப்றீ போட்டி 70 சுற்­று­களைக் கொண்டதாகும். இந்தப் போட்டித் தூரத்தை ஒரு மணித்­தி­யாலம் 31நா­டி­களில் நிறைவு செய்த லூயிஸ் ஹமில்டன் முதலாம் இ…

  12. பதிவு செய்யப்பட்ட.இளைஞர்கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட ஆண்கள் பெண்களுக்கான எல்லே இறுதிப்போட்டியில் அளவெட்டி கலைவாணி இளைஞர் கழக பெண்கள் அணி சம்பியனாகியது. மல்லாகம்.ஆர்.டி.எஸ்.மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் அளவெட்டி கலைவாணி இளைஞர் கழக பெண்கள் அணியும், சென்சேவையர் இளைஞர் கழக பெண்கள் அணியும் மோதிக் கொண்டன. https://newuthayan.com/story/16/எல்லேயில்-கலைவாணி-அணிக்க.html

  13. சுவிஸ் நாட்டின் ஜூறா மாநிலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் குறித்த மாநில தேசிய ஐஸ் ஹொக்கி கழகத்தில் U 14 பிரிவில் காப்பாளராக விளையாடி வருகின்றார். இவர் தற்போது சுவிஸ் நாட்டில் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களில் ஒன்றான EHC-Bienne (LNA) Minitop பிரிவில் பந்து காப்பாளராக ஒப்பந்தமாகி விளையாடி வருகின்றார்.சுவிஸ் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் 2015- 2016 போட்டிகளில் அஷ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஷ்வின் கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச U 14 ஐஸ் ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டிகளில் சுவிஸ் அணிக்காக விளையாடி சிறந்த பந்து காப்பாளர் பட்டத்தையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். - See more at: h…

  14. தென்னாபிரிக்காவுக்குச் சிறப்பான வெற்றி தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில், தென்னாபிரிக்க அணி சிறப்பான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளது. செஞ்சூரியனில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 125 (113), அலெக்ஸ் ஹேல்ஸ் 65 (73), பென் ஸ்டோக்ஸ் 53 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கைல் அபொட், கஜிஸ்கோ றபடா இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். …

  15. தேசிய மட்டத்தில் சம்பியனானது சென்.பற்றிக்ஸ் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டக் கால்பந்தாட்டப்போட்டியில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனானது. இந்த பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை இளவாலை சென் .ஹென்றிஸ் கல்லூரியும், வெண்கலப்பதக்கத்தை மன்னார் சென் . லூசியஸ் கல்லூரியும் தாமதாக்கிக்கொண்டன. அநுராதபுரத்தில் இடம்பெற்றுவரும் இத் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது. இந்நிலையில், கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி ஆட்டம். இரண்டாம் பாதியின் 33 ஆவது நிமிடத்தில் சென். பற்றிக்ஸின் முதல் கோலைப் பதிவு செய்தார் …

  16. ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டனில் விளையாடத் தடை (என்.வீ.ஏ.) ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீர, வீராங்கனைகளுக்கு விம்பிள்டனில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் மீதான படையெடுப்புக்கு ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் அந்த இரண்டு நாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது. ஆண்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள ரஷ்ய வீரர் டெனில் மெட்வடேவ், பெண்களுக்கான தரவரிசையில் நான்காம் இடத்திலுள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபாலென்கா ஆகியோர் பாதிக்கப்படும் உயரிய நிலை வீர, வீராங்கனையாவர். ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் சகலவிதமான புல்தரை டென்னிஸ் போட்டிகளிலும் அந்த நாடுகளின் வீர, வீர…

  17. வரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை ஆவடி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கும் விளையாட்டு வீரர் நந்தினி (22) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். முதல்முறையாக தேசிய அளவிலான கோப்பையை வென்ற தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைவர்தான் நந்தினி. Image captionநந்தினி எளிமையான குடும்ப பின்னணி, அரசுப்பள்ளியில் படித்து, வ…

  18. சிங்கர் கிண்ண தொடரிலிருந்து காலிறுதியுடன் வெளியேறும் யாழ். மத்திய கல்லூரி 19 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட “சிங்கர் கிண்ண” கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டியொன்று இன்று (18) இப்பாகமுவவில் முடிவடைந்தது. இந்த காலிறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 148 ஓட்டங்களால் அதிரடியாக வீழ்த்தியிருப்பதுடன், இவ் வெற்றியோடு லைசியம் பாடசாலை சிங்கர் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினையும் பெற்றிருக்கின்றது. அணிக்கு 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டி…

  19. ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் அக்டோபர் 12, 2014. துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், ஆஸ்திரேலிய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் தலா 113 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டன. தசம புள்ளிகள் வித்தியாசத்தில் மூன்று அணிகளுக்கும் ‘ரேங்க்’ வழங்கப்பட்டது. இதன்படி, பாகிஸ்தானுக்கு எதிரான முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு ‘நம்பர்–1’ இடம் வழங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்ட…

  20. பார்சிலோனா அணி வெற்றி அக்டோபர் 22, 2014. பார்சிலோனா: அஜாக்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மெஸ்சி, நெய்மர் தலா ஒரு கோல் அடிக்க பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த இதன் லீக் போட்டியில் அஜாக்ஸ், பார்சிலோனா அணிகள் மோதின. போட்டியின் 7வது நிமிடத்தில் பார்சிலோனா இளம் வீரர் நெய்மர் ஒரு கோல் அடித்தார். நட்சத்திர வீரர் மெஸ்சி 24வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதியில் 2–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் (88வது நிமிடம்) அஜாக்ஸ் அணி சார்பில் எல் காஜி ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா அணியின் சாண்ட்ரோ (90+4) ‘ஸ்டாப்பேஜ் நேரத்தில்’ கோல் அடித்து பதிலடி தந்தார். முடி…

  21. அழகிய ஆலப்புழையில் கிரிக்கெட் மைதானம்... கேரளாவும் தமிழகத்தை முந்தியது....! தென் மாநிலங்களில் தெலுங்கானா பிரிவதற்கு முன்னரே ஆந்திராவில் ஹைதரபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது உண்டு. கர்நாடகாவில் பெங்களூருவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது மங்களூவில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கேரளாவை பொறுத்தவரை கொச்சியில் மட்டும்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. தற்போது அங்கேயும் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கீழை நாடுகளின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஆழப்புலை நகரில்தண்ணீரால் சூழ்ந்த இடத்தில் அழகிய கிரிக்கெட் மைதானம் உருவ…

  22. கோல் கீப்பரையே தூக்கி சென்ற பவர்ஃபுல் கிக் : பிரேசில் வீரர் ஹல்க் மிரட்டல் (வீடியோ) பிரேசிலை சேர்ந்த இளம் வீரரான ஹல்க், கடந்த உலகக் கோப்பை போட்டியில் அணியில் இடம் பெற்றிருந்தார். கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், அவர் பிரேசில் அணியில் இடம் பெறவில்லை. தற்போது அவர், ரஷ்யாவை சேர்ந்த செனித் செயின்ட பீட்டர்ஸ்பர்க் அணிக்காக விளையாடி வருகிறார். அடுத்த சீசன் தொடங்கவுள்ளதையடுத்து ஹல்க், அந்த அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். http://youtu.be/66z1p5jLKYw நேற்று பயிற்சியில் ஈடுபட்டபோது ஹல்க் அடித்த பவர்ஃபுல் கிக், கோல்கீப்பரை பந்துடன் சேர்ந்து தூக்கி சென்று விட்டது. இந்த வீடியோ காட்சியை செனித் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அணியே வெளியிட்டுள்ளது. http://www.v…

  23. யாழ்ப்பாணம்தென்மராட்சி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் கைதடி நாவற்குழி அ.த.க. பாடசாலை பெண்கள் அணி வெற்றிபெற்றது. சாவகச்சேரி மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் நடப்பாண்டு சம்பியனான கைதடி முத்துக்குமாரசுவாமி பாடசாலை அணியை எதிர்த்து கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை அணி மோதியது. 15 :11 என்ற செற் கணக்கில் கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை சம்பியன் கிண்ணத்தை தமதாக்கி கொண் டது. https://newuthayan.com/story/17/நாவற்குழி-அ-த-க-மகளிர்-அணி.html

  24. வரி ஏய்ப்பு விவகாரம் : லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை? வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் பார்சிலோனா அணியின் நம்பிக்கை வீரருமான லயனல் மெஸ்சி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில்தான் வசித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டு ஸ்பெயின் குடியுரிமையும் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது. லயனல் மெஸ்சியின் புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ள உருகுவே, சுவிட்சர்லாந்து நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த வகையில், கிடைத்த வருவாய்க்கு மெஸ்சி முறையாக வரி செலுத்தவில்லை என்று ஸ்பெயின் நிதித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.