விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன் இவங்க என்ன செஞ்சிக்கிட்டு இருந்தாங்க? சாதாரண குடும்பத்தில் பிறந்து உலகையே வென்ற கிரிக்கெட் வீரர்களாக பலர் உருவெடுத்துள்ளனர். சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பார்ப்போம்... இந்திய அணியின் கேப்டன் தோனி, ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். மேற்கு வங்கத்தில் கராக்பூர் ரயில் நிலையத்தில்தான் தோனிக்கு பணி. கடந்த 2001 முதல் 2003 ஆம் ஆண்டு வரை அங்கேயே பணியாற்றிய தோனி, அதற்கு பின் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் கால் வைக்காத விளையாட்டே கிடையாது. கால்பந்து, பேட்மிண்டன், டென்னிஸ், ரக்பி என அனைத்து விளையாட்டுகளையும் ஒரு கை பார்த்து விட்டு கடைசியில் கிரிக்கெட்டில…
-
- 0 replies
- 304 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் 8 சாம்பியன்கள்! நேர்த்தியான கிரிக்கெட்டை ரசிப்பவர்களில் பெரும்பாலானோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பெரிதும் விரும்புவர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்தான் கிரிக்கெட் போட்டியின் தாய் வடிவம். அதில் இருந்துதான் ஒருதின போட்டிகளும், டி-20 போட்டிகளும் புதிதாய் உருவாயின. தற்போது அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம், இந்த அவசரத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க பலருக்கும் நேரமில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்கள் வருவது பெருமளவு குறைந்துவிட்டது. அதிலும் இந்தியாவில் நிலைமை மோசம். கவாஸ்கரும், டிராவிட்டும், சச்சினும் விளையாடிய காலத்தில் ஸ்டேடியத்துக்கு வரும் கூட்டத்தில் கால் பங்கு கூட …
-
- 0 replies
- 902 views
-
-
தோனியின் விடாமுயற்சி இன்னிங்ஸ் வீண்: டெல்லியிடம் வீழ்ந்தது ஜார்கண்ட் 2 கேட்ச்கள் ஒரு ஸ்டம்பிங், 70 நாட் அவுட்: தோனி. | படம்: முரளி குமார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி 2-வது காலிறுதிப் போட்டியில் தனிமனிதனாக போராடிய தோனியின் ஆட்டம் வீணானது, ஜார்கண்ட் அணியை டெல்லி அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் வருண் ஆரோன் ஜார்கண்ட் அணிக்காக டாஸ் வென்று டெல்லி அணியை பேட் செய்ய அழைத்தாலும் தோனியே அணியை வழிநடத்தினார். பந்துகள் எழும்புவதும், தரையோடு தரையாக எழும்பாமலும் செல்லும் பேட்ஸ்மென்கள் திணறும் வகையிலான பிட்சில் டெல்லி அணி கடைசியில் பவன் நெகியின் அதிரடி 16 பந்து 38 ரன்களினால் 50 ஓவர்களில் 225 ரன்களை எட்டியத…
-
- 0 replies
- 464 views
-
-
விளையாட்டு செய்தித்துளிகள் $ விஜய் ஹஸாரே கோப்பைக்கான இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் 50 ஓவரில் 273 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பார்த்தீவ் படேல் 105, ருஜூல் பாத் 60 ரன் எடுத்தனர். 274 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி பேட் செய்தது. $ ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதல் போட்டியில் பங்கேற்க ஆசிய அளவிலான தகுதி சுற்றுப்போட்டி ஜனவரி 25ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பாக். வீரர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. $ பிரிமியர் பாட்மிண்டன் லீக் தொடர் ஜனவரி 2ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதன் தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நடனமும், சலீம்-சுலைமான் ஆகியோர் இசை நிகழ்ச்ச…
-
- 0 replies
- 461 views
-
-
Breaking Now தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆம்லா திடீர் விலகல் டிவில்லியர்ஸ் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் தென் ஆப்பிரிக்க இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது Read more at: http://tamil.oneindia.com/
-
- 1 reply
- 541 views
-
-
எம்.சி.சி உரையாற்றுகிறார் மக்கலம் இவ்வாண்டுக்கான மெரிலிபோன் கிரிக்கெட் கழக(எம்.சி.சி) கிரிக்கெட்டின் உணர்வுக்கான விரிவுரையை, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் ஆற்றவுள்ளார். எம்.சி.சி-இன் தலைமையகமான லோர்ட்ஸ் மைதானத்தில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இந்த உரை இடம்பெறவுள்ளது. 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த எம்.சி.சி உரை, றிச்சி பனர், தெஸ்மொன்ட் துட்டு, இம்ரான் கான், குமார் சங்கக்கார, மார்ட்டின் குரோ, இயன் பொத்தம் ஆகியோரால், இதற்கு முன்னர் ஆற்றப்பட்டிருந்தது. விரைவில் ஓய்வுபெறவுள்ள பிரென்டன் மக்கலம், நியூசிலாந்து அணியைச் சிறப்பாக வழிநடத்தி, அவ்வணியைப் பலமான அணிகளுள் ஒன்றாக மாற்றினார் எனப் புகழப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http:…
-
- 0 replies
- 430 views
-
-
டில்ஸ்கூப் அடித்து அசத்திய சங்கக்காரா February 22, 2016 மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் வித்தியாசமான ஷாட் ரசிகர்களை வியக்க வைத்தது. சமீபத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடைபெற்றது. இதில் ஜெமினி அரபியன்ஸ் அணிக்காக விளையாடிய சங்கக்காரா ஒரு போட்டியில் “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் சிக்சர் விளாசி ரசிர்களை உற்சாகப்படுத்தினார். இந்த ஷாட்டுக்கு பெயர் போனவர் சக இலங்கை வீரரான டில்ஷான் தான், தவிர, தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், நியூசிலாந்தின் மெக்கல்லம் ஆகியோரும் அதிகம் இது போன்ற ஷாட்டுகளை அதிகம் ஆடுவர். இந்த தொடரில் ஷேவாக் தலைமையிலான ஜெம…
-
- 0 replies
- 564 views
-
-
பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான பிரெஞ்சுக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, பரிஸ் ஸா ஜெர்மைன், லயோன் ஆகியவை தகுதிபெற்றுள்ளன. டியோனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றிருந்தது. இப்போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே கிடைக்கப் பெற்ற ஓவ்ண் கோல் மூலமாக பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த 12ஆவது நிமிடத்தில் டியோனின் முன்களவீரர் மெளனிர் செளயர் பெற்ற கோலின் கோலெண்ணிக்கையை டியோன் சமப்படுத்தியது. இந்நிலையில், முதற்பாதி முடிவடையும் தருணத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் கிலியான் மப்பே பெற்ற கோல் காரணமாக பரிஸ் ஸா ஜெர்மைன் …
-
- 0 replies
- 624 views
-
-
யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சிறுவர் மற்றும் பயிற்றுநர்களுக்கான பட்மிண்டன் விசேட பயிற்சி முகாமொன்று நடத்தப்பட்டது. இதற்காக 23 வருடங்களின் பின்னர் இலங்கை பட்மிண்டன் சம்மேளன உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். சர்வதேச பட்மிண்டன் சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கை பட்மிண்டன் சம்மேளனம், யாழ். மாவட்ட பட்மிண்டன் சங்கத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்தது. சென். ஜோன்ஸ் கல்லூரியின் உள்ளக அரங்கில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி முகாமில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 108 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சட்டல் டைம் திட்டத்தின் பிரகாரம் பட்மிண்டன் விளையாட்டின் அடிப்படை நுணுக்கங்கள் கற்றுக்கொ…
-
- 0 replies
- 457 views
-
-
"நம்ம தல தோனி" இந்த கிரிக்கெட்ல பேட்ஸ்மேன அவுட் ஆக்க மட்டுமே பந்து வீசுவாங்க... ஆனா அதை தடுத்து, ரன் எடுக்கிறதுலதான் பேட்ஸ்மேனோட வெற்றி அடங்கி இருக்கு. அந்த கிரிக்கெட்ல கிறுக்குத்தனமான ஒரு வெறியும், ஒரு புத்திசாலித்தனமான திறமையும் இருந்தால், ஒரு நாள் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கிற இண்டர்நேஷனல் மேட்ச்சையும் ஆட முடியும். இதற்கு எடுத்துக்காட்டு நம்ம 'தல' தோனி. தொடரும்....
-
- 33 replies
- 2k views
-
-
இந்திய அணியில் இருந்து ஷேவாக் நீக்கம் இந்திய அணியிலிருந்து ஷேவாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய அணிக்கான பெயர் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் தொடர்ந்தும் இவர் ஏமாற்றி வருவ டன் அரைச்சதம் கூட அடிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்னபடி அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின் நான்கு இன்னிங்சில் மொத்தம் 27 ஓட்டங்கள் தான் எடுத்திருந்தார். இருப்பினும், இந்திய அணி வெற்றி பெற்றதால் மீதமுள்ள போட்டிகளிலும் ஷேவாக் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்…
-
- 0 replies
- 394 views
-
-
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தக் கல்லூரிக்குமிடையிலான சிவகுருநாதர் வெற்றிக்கிண்ணத்திற்கான 2வது கிறிக்கட் போட்டி நேற்று 26.04.2013 யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. சிவஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளை தொடர்ந்து விருந்தினர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆரம்ப நிகழ்வில் ஆனந்தா கல்லூரி அதிபர் தமிழிலும் யாழ்ப்பாணம் இந்த்துக்கல்லூரி அதிபர் சிங்களத்திலும் உரையாற்றியமை சிறப்பம்சமாகும்.வீரர்கள் அறிமுகத்தை தொடர்ந்து நாணய சுழற்சி இடம் பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் அணித்தலைவர் முதலில் களத்தடுப்பட்டத்தை தெரிவு செய்தார். இதன் அடிப்படையில் களமிறங்கிய ஆனந்தாக் கல்லூரி 50.2 பந்து பரிமாற்றங்களில் சகல …
-
- 3 replies
- 686 views
-
-
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2019; மே.இ. தீவுகளின் வாய்ப்பு ஊசலாடுகிறது இங்கிலாந்தில் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் முன்னாள் உலக சம்பியனும் முன்னாள் ஜாம்பவான்களுமான மேற்கிந்தியத் தீவுகள் பங்குபற்றுமா என்பது தொடர்ந்தும் சந்தேகமாகவே இருந்துவருகின்றது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த தரவரிசைப்படுத்தல் இந்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் நாடுகளுக்கான தரிவரிசையில் செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முதல் எட்டு இடங்களில் உள்ள நாடுகளே 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெறும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஒரு…
-
- 0 replies
- 404 views
-
-
எத்தனை காயம், எத்தனை தோல்வி... ஆனாலும், இவன் ஓய்வதில்லை... நடால் எனும் கம்பேக் நாயகன்! #FedalSlam #Nadal ரஃபேல் நடால் - டென்னிஸ் உலகம் போற்றும் ஒரு மாபெரும் வீரன். 16-வது கிராண்ட் ஸ்லாம் பதக்கத்தை வென்று, சரித்திரம் படைக்க முன்னேறிக்கொண்டிருக்கிறான் அந்தப் போராளி. சீனியர் டென்னிஸ் போட்டிகளில் கால் பதித்து 16 ஆண்டுகளில் 16 பட்டங்கள். போதாக்குறைக்கு 2 ஒலிம்பிக் தங்கங்கள் வேறு! மொத்த உலகமும் இன்று அவரின் வெற்றியை உச்சிமுகர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் வெறும் வெற்றிப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தால் அந்த நாயகனின் வலியும் போராட்டமும் கண்காணாமல் போய்விடும். காரணம் நடாலின் வாழ்க்கை டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல, காயமும் தோல்வியும் ஆட்கொண்ட ஒவ்வொர…
-
- 0 replies
- 1k views
-
-
கோலியுடன் என்னை ஒப்பிடவேண்டாம்: பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் வலியுறுத்தல் பாபர் ஆஸம் - Getty Images ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடம், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் முதலிடத்தில் உள்ள விராட் கோலியை தன்னுடன் ஒப்பிட வேண்டாம் என்று பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த திறனை வெளிப்படுத்தி வருவதால் உலக கிரிக்கெட் அரங்கில் அவர், உயர்மட்ட அளவிலான இடத்தை பிடித்துள்ளார். சமீபகாலமாக அவரது திறனுடன் மற்ற முன்னணி வீரர்களின் திறன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்…
-
- 0 replies
- 670 views
-
-
கொமன்வெல்த் போட்டிகளில் அவுஸ்திரேலியாவில் பிறந்த செல்லத்துரை பிரசாந்த் கலந்து கொண்ட போட்டியில்(Gymnastics Artistic Men's Pommel horse), இவரது குழு 2 வது(SILVER) இடத்தினைத்தட்டிக்கொண்டது. இவரது பெற்றோர்கள் ஈழத்தில் பிறந்த தமிழர்கள். மேலதிக தகவல்களினை கீழ் உள்ள இணைப்பில் பார்க்கவும். http://www.melbourne2006.com.au/Participan...pants?ID=110224 http://www.melbourne2006.com.au/Schedule%2...uleItemID=29625 இவர் கலந்துகொண்ட(Pommel Horse) போட்டியில் இவர்தான் அதிக புள்ளிகளினைப்(15.350) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
-
- 22 replies
- 5.2k views
-
-
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரரான கிரிஸ் கேல் 333 ரன்களை அடித்து சாதனைப் பட்டியலில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். இலங்கைக்கு எதிராக காலியில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் என்ற வலுவான நிலையில் ஆரம்பித்தது. முதல் நாள் ஆட்டத்தில் 219 ரன்களை அடித்திருந்த கிரிஸ் கேல் தொடர்ந்து ஆடி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 300 ஓட்டங்களைத் தாண்டினார். இதன் மூலம் வெளிநாடு ஒன்றில் நடந்த போட்டியில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் மேற்கிந்திய அணி வீரர் என்ற சாதனையை கிரிஸ் கேல் புரிந்துள்ளார். காலி கிரிக்கெட் மைதானத்தில்…
-
- 1 reply
- 761 views
-
-
மேற்கிந்தியத் தீவுகளை வென்றது ஆப்கானிஸ்தான் சிம்பாப்வேயின் ஹராரேயில் நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் பயிற்சிப் போட்டியொன்றில், 29 ஓட்டங்களால் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி மேற்கிந்தியத் தீவுகளை ஆப்கானிஸ்தான் வென்றது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 35 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், குல்படின் நைப் 48 (38), சமியுல்லா ஷென்வாரி ஆட்டமிழக்காமல் 42 (55) ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு, 140 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 26.4 ஓவ…
-
- 0 replies
- 225 views
-
-
உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை: மிஸ்பா-உல்-ஹக் அறிவிப்பு உலகக் கோப்பை போட்டிக்கு பாகிஸ்தான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்று பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது அணியில் இருந்து மிஸ்பா விலகினார். அப்ரிடி கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். உலகக் கோப்பை போட்டி வரை பாகிஸ்தான் கேப்டனாக மிஸ்பா-உல்-ஹக் இருப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தோல்விக்குப் பிறகு மிஸ்பா இது தொடர்பாக கூறியது: சமீபகாலமாக என்னால் அதிக ரன் எடுக்க முடியவில்லை. சிறப்பான ஆட்டத்தை …
-
- 0 replies
- 304 views
-
-
தென்னாபிரிக்காவுடனான T-20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு தற்பொழுது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியுடனான ஒரு போட்டியைக் கொண்ட T-20 தொடருக்கான இலங்கை குழாம் இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளது அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான இந்த குழாமில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலும் உள்வாங்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் உள்வாங்கப்படாத நிலையிலேயே சந்திமால் T-20 குழாமில் பெயரிடப்பட்டுள்ளார். இறுதியாக, கடந்த வருடம் இந்தியாவுடனான T-20 போட்டியில் விளையாடிய அஞ்செலோ மெதிவ்ஸ், உபாதை காரணமாக தொடர்ந்து இடம்பெற்ற பங்களாதேஷ் அணியுடனான T-20 தொடர் மற்றும் சுதந்திரக் கிண்ணத் தொடர் என்பவற்றில்…
-
- 0 replies
- 544 views
-
-
இரட்டை சதம் எதிரொலி: நியூஸி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் கப்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணியில் மார்ட்டின் கப்டில் இடம்பிடித் துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் உள்பட 547 ரன்கள் குவித்ததன் மூலம் மார்ட்டின் கப்டில் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய கப்டில், இப்போது அதே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். மார்ட்டின் கப்டில் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடை…
-
- 0 replies
- 361 views
-
-
மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நாளை ஆரம்பம் நடப்பு சம்பியன் ஜப்பான், தலா இரண்டு தடவைகள் சம்பியன்களான ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஜேர்மனி, ஒரு தடவை சம்பியனான நோர்வே உட்பட 24 நாடுகள் பங்குபற்றும் ஏழாவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் கனடாவில் நாளை ஆரம்பமாகவுள்ளன. வென்கூவர், எட்மொன்டன், வின்னிபெக், ஒட்டாவா, மொன்ட்றியல், மொன்க்டொன் ஆகிய நகரங்களில் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆசியாவிலிருந்து நடப்பு உலக சம்பியன் ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா, தென் கொரியா, தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றுகின்றமை விசேட அம்சமாகும். தாய்லாந்து தீர்மானமிக்க போட்டியில் வியட்நாமை வெற்றி கொண்டே இறுதிச் சுற்றில் விளை…
-
- 26 replies
- 1.5k views
-
-
கடற்கரையில் படுத்துக் கிடக்கிறேன்: கெவின் பீட்டர்சன் கடும் சோகம் கெவின் பீட்டர்சன். | கோப்புப் படம்: ஏ.பி. இங்கிலாந்தினால் புறக்கணிக்கப்பட்ட கெவின் பீட்டர்சன், மியாமி கடற்கரையிலிருந்து சோகத்துடன் ட்வீட் செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணி தத்தளிக்கும் போதும் தன்னை புறக்கணிப்பது குறித்து கோபாவேசத்துடனும், சோகத்துடனும், ட்வீட்களைச் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எப்போதையும் விட சிறப்பாக பேட் செய்து வருகிறேன். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பெரும் சிக்கலில் இருக்கிறது. என்ன ஒரு விரயம்?! கடற்கரையில் படுத்துக் கிடக்கிறேன். நான் இங்கிலாந்து அணிக்கு உதவ முடியும், உதவ விரும்புகிறேன் என்று ஒரு ட்வீட் பதிவும், இப்போது ஆழ்சிந்தனையில் இருக்கிறேன்..…
-
- 0 replies
- 331 views
-
-
சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற இரத்தினபுரி இளைஞர்! இரத்தினபுரி, கஹாவத்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் எனும் 27 வயதுடைய இளைஞர், மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை மலேசியாவில், சர்வதேச சிலம்பம் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், கட்டார், மலேசியா, டுபாய், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 600 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். இப் போட்டியில், இலங்கை சார்பாக கலந்து கொண்டிருந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெறுமை சேர்த்துள்ளார். இ…
-
- 0 replies
- 356 views
-
-
கால்பந்து சண்டைகள் : லிவர்பூல் - எவர்ட்டன் மோதல் (வீடியோ) இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் இன்று ஆக்ரோஷமன மோதல்கள் நடைபெறுகின்றன. மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் 'மெர்சி சைட் டெர்பி' என்று அழைக்கப்படும் லிவர்பூல்- எவர்ட்டன் அணிகள் களம் காண்கின்றன. இரவு 8.30 மணிக்கு இதே லீக்கில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி ஆர்சனல் அணியை எதிர்கொள்கிறது. ஜெர்மன் பந்தஸ்லீகாவில் பலம் வாய்ந்த பேயர்ன்மியூனிச் அணியுடன் போர்சியா டோர்ட்மண்ட் அணி மோதுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பானீஷ் லீக்கின் வலிமை வாய்ந்த ரியல்மாட்ரிட் - அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. இத்தாலி சீரி 'ஏ' தொடரில் 12.15 மணிக்கு ஏ.சி.மிலனுடன் நேபோலி அணி…
-
- 0 replies
- 617 views
-