விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
Published By: VISHNU 17 NOV, 2023 | 11:05 AM (எம். எம். சில்வெஸ்டர் ) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 34 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 20 வயதுக்கு மேற்பட்ட குண்டெறிதல் போட்டியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்த எஸ். மிதுன் ராஜ் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 34ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்றைய தினம் சாம்பிரதாய பூர்வமாக நேற்றைய தினம் ஆரம்பமானது. எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிறு வரை நடைபெறவுள்ள இப்போட்டி விழாவில் நாடு முழுவதிலிருந்தும் 15 வயது முதல் 29 வயது வரையான 3000 க்கும் அதிகமான வீ…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் செல்வது ஆபத்து சிம்பாப்வேயை எச்சரிக்கிறது சர்வதேச கிரிக்கெட் சங்கம் பாகிஸ்தானுக்கு செல்வது ஆபத்தானது என்றும் அங்கு போதியளவு பாதுகாப்பு இல்லை என்றும் சிம்பாப்வே அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் சென்று விளையாட சிம்பாப்வே அணி அண்மையில் ஒப்புதல் கொடுத்தது. ஆனால், இந்த ஒப்புதலை மீள் பரிசீலனை செய்யுங்கள் என்று சிம்பாப்வேக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் லாகூரில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்துக்குப் பிறகு அனைத்து நாட்டு கிரிக்கெட் அணிகளும் பாகிஸ்தான் சென்று விளையாட தயக்கம்…
-
- 0 replies
- 279 views
-
-
டெஸ்ட் தரவரிசை பேட்டிங், பந்துவீச்சு :முதல் பத்தில் ஒரு இந்தியர் கூட இல்லை...! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ஒரு ரன்னில் இரட்டை சதத்தை கோட்டை விட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ஐ.சி.சி. லேட்டஸ்ட் டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், 913 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். கடந்த 2012ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு பிறகு இப்போதுதான் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அடுத்த இடத்தில் இலங்கை வீரர் சங்கக்காரா 909 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். தென்ஆப்ரிக்க அணியின் கேப…
-
- 0 replies
- 368 views
-
-
3000 மீற்றரில் முல்லைத்தீவு விதுஷன், 5000 மீற்றரில் மாத்தளை துதிதர்ஷிதன் தங்கம் வென்று அசத்தல்! : இன்று பகல் வரை 5 புதிய சாதனைகள் Published By: DIGITAL DESK 7 14 JUL, 2024 | 01:27 PM (நெவில் அன்தனி) தியகம, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் ஆரம்ப நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் முல்லைத்தீவு மாணவன் ஜெயகாந்தன் விதுஷன், மாத்தளை மாணவன் எஸ். துதிதர்ஷிதன் ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்து வரலாறு படைத்தனர். அத்துடன் முதலாம் நாளன்று 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் ஒரு புதிய சாதனை நிலைநாட்டப்பட்டதுடன் இரண்டு முந்தைய சாதனைகள் சமப்படு…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
செல்சியில் நகைச்சுவை, கேலிக்குத் தடை இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களாக செல்சி அணி, இப்பருவகாலத்தில் மோசமான தொடக்கமொன்றைப் பெற்றுள்ள நிலையில், அவ்வணியின் பயிற்சிகளின் போது நகைச்சுவையான கேலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. கடந்த 29 வருடங்களில், செல்சி அணி சந்தித்த மிக மோசமான பருவகால ஆரம்பத்தையடுத்தே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதல் 5 போட்டிகளில், வெறுமனே 4 புள்ளிகளை மாத்திரமே செல்சி அணி பெற்றுள்ள போதிலும், நெருக்கடி நிலைக் கூட்டங்களுக்கான தேவை இன்னமும் ஏற்படவில்லை எனவும் அக்கழக வட்டாரங்கள் அறிவிக்கின்றன. செல்சியின் முகாமையாளராக மொரின்கோ பதவியேற்றுக் கொண்ட பின்னர், பயிற்சிகளின் போது …
-
- 0 replies
- 367 views
-
-
விராட் கோலி : "ரோஹித் ஷர்மாவுக்கும் எனக்கும் பிரச்சனை ஏதுமில்லை" 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR தனக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு இடையில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும…
-
- 0 replies
- 721 views
- 1 follower
-
-
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு இடமளிக்கப்படுமா? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சாட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவரை சந்தித்து பேசினார். அப்போது ஒலிம்பிக் போட்டியில் 20 பேர் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார். இதுபற்றி ‘‘ரிச்சாட்சன் கூறும்போது, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஐ.ஓ.சி. தலைவரிடம் கேட்டுக் கொண்டேன். 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். கிரிக்கெட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிது அல்ல’’ என்றார். …
-
- 0 replies
- 439 views
-
-
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை வென்றது பிரிட்டன் உலகளவில் நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டிக்கு அளிக்கப்படும் டேவிஸ் கோப்பையை பிரிட்டன் அணி வென்றுள்ளது. வெற்றிக் களிப்பில் பிரிட்டிஷ் அணியினர் இறுதிப் போட்டியில் பிரிட்டன் அணி பெல்ஜியத்தை வென்றது. மிகவும் பெருமை வாய்ந்த இந்தக் கோப்பையை பிரிட்டன் அணி 1936ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வென்றுள்ளது. தனி நபர்களுக்கு இடையேயான கடைசிப் போட்டியில் ஆண்டி மர்ரி பெல்ஜியத்தின் டேவி கோஃபினை வென்றதன் மூலம் கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டி நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கடுமையாக இருந்தது என, போட்டிக்கு பிறகு அவை இடம்பெற்ற ஹெண்ட் நகரில் பேசு…
-
- 0 replies
- 997 views
-
-
கெயிலுக்கு பொண்டிங் கண்டனம் January 13, 2016 கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் நிரூபருடன் தகார வார்த்தையில் ஈடுபட்ட கெயில் தற்பொழுது மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு ஓட்டத்தை பெறுவதுக்கு ஓடமறுத்து நின்றமையே அந்தச் சர்ச்சை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் மெல்பேர்ன் ரெனேகட்ஸ் அணி சிட்னி தண்டரை எதிர்த்து நேற்றுமுன்தினம் விளையாடியது. இதில் மெல்பேர்ன் ரெனேகட்ஸ் அணியின் சார்பாக கெயில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவருடன் ரொம் கூப்பரும் தொடக்க வீரராக களம் இறங்கினார். அப்போது கெயில் ஒரு ஓட்டத்தைப் பெற (சிங்கிள்) விருப்பம் இல்லாமல் இருந்தார். 8 முதல் 10 வரையான வாய்ப்புக்களை கெயில் வீணடித்தார். பொதுவா…
-
- 0 replies
- 476 views
-
-
பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்கு எதிரான சிங்கர் U19 பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட போட்டியில் அபார பந்துவீச்சின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அண்டன் அபிஷேக் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல். http://www.thepapare.com/video-jaffna-st-johns-college-fast-bowler-anton-abishek-interview-tamil/
-
- 0 replies
- 578 views
-
-
2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து இரசிகர்கள் சமூக ஊடகங்களில் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர் சன்ரைசர்ஸ்; அணியின் தலைமை பொறுப்பிலிருந்து நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டு டேவிட் வோர்னர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஹைதராபாத் அணியின் தலைவராக வில்லியம்சனே நீடித்திருக்கவேண்டும் என பல ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கேன் வில்லியம்சன் என்ன தவறு செய்தார் என யாராவது தெரிவிக்க முடியுமா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது கேலிக்குரிய விடயம் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார். தலைமைப்பதவிக்கு கேனே வோர்னரை விட பொருத்தமான…
-
- 0 replies
- 475 views
-
-
மே. தீவுகளை வெல்லுமா இலங்கை? இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது பல்லேகலவில் இன்றிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை இலங்கை வெள்ளையடித்ததுடன், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 10ஆம் இடத்திலேயே மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்றபோதும், அவ்வணியின் தலைவர் கெரான் பொலார்ட்டுடன், டுவைன் …
-
- 0 replies
- 634 views
-
-
'2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நடந்தது என்ன?' சுயசரிதையில் டி வில்லியர்ஸின் ஃப்ரீ ஹிட் ஒருமுறை இயக்குநர் சிகரம் பாலசந்தர், ரஜினியிடம் சுயசரிதை எழுதும் எண்ணம் உண்டா என கேட்டார். அதற்கு ரஜினி ‘நான் மகாத்மா காந்தி சுயசரிதை படிச்சிருக்கேன். சுயசரிதைன்னா உண்மை இருக்கனும். உண்மையை எழுதுனா பல பேரோட பகையை சம்பாதிக்க வேண்டி இருக்கும். ஸோ.. இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை’ என பதிலளித்திருப்பார். ரஜினி சொல்வது போல, சுயசரிதை என்பது சுயதம்பட்டமாக இல்லாமல், உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கும்படி இருக்க வேண்டும். இல்லையேல் பெரிதாகப் பேசப்படாது. எம்ஜிஆரின் ‘நான் ஏன் பிறந்தேன்’, கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’, கண்ணதாசனின் ‘வனவாசம்’ இந்த மூன்று சுயசரிதையில் எது பெஸ்ட…
-
- 0 replies
- 479 views
-
-
ரியோ 2016 பராலிம்பிக் விளையாட்டு விழா இன்று ஆரம்பம்; மீட்பர் கிறிஸ்து அடிவாரத்தில் பிரமாண்டமான சமாதானக் கொடி 2016-09-07 09:50:25 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 31ஆவது அத்தியாயத்தை கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவேற்றிய பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ, மாற்றுத் திறனாளிகளுக்கான 15 ஆவது பராலிம்பிக் விளையாட்டு விழாவை இன்று நடைபெறவுள்ள தொடக்கவிழாவுடன் ஆரம்பிக்கின்றது. பிரேஸில் தேசத்தின் பண்பாடுகள் உலகம் முழுவதும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய வகையில் கொண்டாட்டங்களுடன் மிகச் சிறப்பான பராலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவதற்கு ரியோ 2016 ஏற்பாட்டுக் குழுவினர் உறுதிபூண்டுள்ளனர். …
-
- 0 replies
- 335 views
-
-
டெஸ்ட்டில் வெஸ்ட்இண்டீஸ் சாதிப்பது கடினம்: கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்பு போல் டெஸ்ட் போட்டியில் சாதிப்பது கடினம் என்று முன்னணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல். அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட ஊதிய பிரச்சினை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக அவரை அணிக்கு தேர்வு செய்யாமல் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் கிறிஸ் கெய்ல் அளித்த ஒரு பேட்டியில், வெஸ்ட்இண்டீஸ் அணி முன்பு டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது போல் இப்போது சாதிப்பது கடினம். தற்போது இளம் வீரர்கள் 20 ஓ…
-
- 0 replies
- 429 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 6-வது சீசன் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 1 1/2 மாதங்களாக கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தடவை எந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர் பார்ப்புகளுடன் இருந்த நிலையில், ஐ.பி.எல். ஆட்டங்களில் சூதாட்டம் நடக்கும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இன்று மும்பையில் 2 தரகர்கள் பிடிபட்டனர். இதுவரை மொத்தம் 22 பே…
-
- 0 replies
- 380 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுப்போருக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கொவிட்-19 நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்க கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான “playbooks” என அழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, வருகை தரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஜப்பானில் முதல் மூன்று நாட்களுக்கு தினமும் சோதிக்கப்படுவார்கள். டோக்கியோவை அடைந்த பின்னர் முதல் இரண்டு வாரங்களுக்கு மற்ற விளையாட்டு அதிகாரிகளுடன் சாப்பிட அவர்களுக்கு அனுமதி இல்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்ட…
-
- 0 replies
- 490 views
-
-
2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி 2021 விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆஷ்லீ பார்டி, கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர். ஒரு மணி நேரம், 56 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்டி 6-3 6-7 (4-7) 6-3 என்ற செட்கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார…
-
- 0 replies
- 521 views
-
-
சொந்த மண்ணில் உசைன் போல்ட்டுக்கு உணர்ச்சிகரமான பிரியாவிடை படத்தின் காப்புரிமைGETTY IMAGES தன்னுடைய சொந்த மண்ணான ஜமைக்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த 100 மீட்டர் இறுதிப்போட்டில் வென்ற உசைன் போல்ட், விளையாட்டு அரங்கம் நிறைந்திருந்த மைதானத்தில் இருந்து உணர்ச்சிகரமான பிரியாவிடை பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு தன்னுடைய ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கும் 30 வயதான உசைன் போல்ட், கிங்ஸ்டனில் 30 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னால் பிரியாவிடை பெற்றுள்ளார். எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட் 2017-ஆம் ஆண்டு தன்னுடைய முதலாவது 100 மீட்டர் ஓ…
-
- 0 replies
- 330 views
-
-
மெத்தியூஸை துரத்தும் உபாதை பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளமாட்டரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24694
-
- 0 replies
- 296 views
-
-
டி20 கிரிக்கெட் தொடரில் 19 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் டிவில்லியர்ஸ் 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் டைட்டன்ஸ் - லயன்ஸ் அணிகள் மோதின. லயன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருக்கும் மழைக்குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. பின்னர் 15 ஓவரில் 135 ரன்க…
-
- 0 replies
- 480 views
-
-
விராட் கோலி கொஞ்சம் ஓவர்தான்... தோனி கிரேட் லீடர், வின்னர்: ஸ்டீவ் வாஹ் கருத்து கோலி, தோனி. - கோப்புப் படம். | விவேக் பெந்த்ரே. நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷ நடத்தை கொஞ்சம் ஓவர்தான், ஆனால் அப்படித்தான் வளர முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார். தான் கேப்டனாக இருந்த காலத்தில் பொய் கூறியாவது டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டும் என்ற ஸ்டீவ் வாஹின் கொள்கைகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் விதந்தோதி மகிழ்ந்தன. பிரையன் லாராவுக்கு தரையில் பட்டுக் கேட்ச் எடுத்து உண்மையான கேட்ச்தான் என்று சாதித்தார் ஸ்டீவ் வ…
-
- 0 replies
- 322 views
-
-
ஒன்பது வயதில் உலக சாதனைகள் படைத்த கனேடிய சிறுமி Share கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். மமாதி வினோத் என்ற ஒன்பது வயது சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சாகச வளைய நடனத்தில் இந்தச் சிறுமி மூன்று பிரிவுகளில் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவில் வைத்து இந்த சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார். வெவ்வேறு நிலைகளில் சாகச வளையத்தில் சுழற்றுவதன் மூலம் இந்த சாதனையை குறித்த சிறுமி படைத்துள…
-
- 0 replies
- 438 views
-
-
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விடவும் பெரியதாக இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது. இந்திய ரூபாவில் சுமார் 700 கோடி செலவில் கட்டப்படும் இம் மைதானம் குறித்து கூறியுள்ள குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் பரிமள் நாத்வானி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டம். இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டி கண்டுகளிக்க வசதி இருக்கும். என்று தெரிவித்துள்ளார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரிய இந்த மைதானத்தி…
-
- 0 replies
- 676 views
-
-
பார்சிலோனா அணி சாம்பியன்: ‘லா லிகா’ கால்பந்தில் அசத்தல் மாட்ரிட்: ‘லா லிகா’ கால்பந்து தொடரில் மெஸ்சி, நெய்மர் உள்ளிட்டோர் அடங்கிய பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி லீக் போட்டியில் பார்சிலோனா அணி 1–0 என அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற ‘லா லிகா’ கால்பந்து தொடர் நடந்தது. மாட்ரிட் நகரில் நடந்த கடைசி லீக் போட்டியில் பார்சிலோனா, அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பார்சிலோனா அணிக்கு 65வது நிமிடத்தில் லியோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய அத்லெடிகோ மாட்ரிட் அணியினரால் ஒரு கோல் க…
-
- 0 replies
- 476 views
-