விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
ரியோ ஒலிம்பிக் ; பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நமீபியா வீரர் கைது பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோனஸ் ஜுனிஸ் (22) ஒலிம்பிக் கிராமத்தில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பிரேசில் பொலிஸாரால் கைதுசெய்துய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதுடன், அதற்காக பணம் செலுத்துவதற்கும் ஜோனஸ் முற்பட்டுள்ளார் என முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கான குத்துச்சண்டை போட்டி நாளைமறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர…
-
- 0 replies
- 264 views
-
-
தமிழக பிரீமியர் லீக்கை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழகம் வந்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் மதுரையை சுற்றிப் பார்த்தார். மூன்றரை கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தின் 8 நகரங்களை அடிப்படையாகக் கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டன. இந்த கிரிக்கெட் தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தமிழகம் வந்துள்ளார். மதுரை சென்ற அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் மதுரை மீனாட்சி அம்…
-
- 0 replies
- 543 views
-
-
இலங்கை மகளிர் அணியின் சிறிபாலி வீரகொடி விளம்ரத் தூதுவரானார் விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் ஸ்பார்டன் சர்வதேச நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சிறிபாலி வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், கிறிஸ் கெய்ல், இயன் மோர்கன், மிச்சல் ஜோன்சன், மைக்கல் கிளார்க், அன்று ரசல், மகேந்திரசிங் டோனி மற்றும் நில் வோக்னர் ஆகியோர் வரிசையில் ஸ்பார்டன் சர்வதேச நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சிறிபாலி வீரக்கொடி இணைந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த சிறிப…
-
- 0 replies
- 331 views
-
-
முரளிக்கு திடீர் அழைப்பு - இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு இலங்கை அணியின் சுழற்பந்து ஜபாம்பவான் முத்தையா முரளிதரனை இலங்கை கிரிக்கெட் சபை அழைத்துள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமாதிபால தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விடயம் தொடர்பில், செயலாளர் மொஹான் டி சில்வாவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர் மூலம் முரளிக்கு அழைப்பிதல் கடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவிக்கையில், முரளிக்கான அழைப்பிதல் கடிதம் நேற்று (08) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தோடு,…
-
- 0 replies
- 341 views
-
-
மேற்கிந்திய தீவுகள் T20 அணிக்கு கார்லோஸ் பிரத்வைட் தலைவராக நியமனம். மேற்கிந்திய தீவுகள் T20 அணிக்கு கார்லோஸ் பிரத்வைட் தலைவராக நியமனம். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் T20 தலமைப் பொறுப்பில் இருந்து 32 வயதான டேரன் சமி நீக்கப்பட்டுள்ள நிலையில் அதிரடி வீரர் கார்லோஸ் பிரத்வைட் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தாண்டு T20 உலக கிண்ணத்தை வெற்றிகொள்ள பிரதான காரணமாக திகழ்ந்தவர் இந்த கார்லோஸ் பிரத்வைட் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமி தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி, கடந்த 2012 மற்றும் 2016-ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை வென்றது. தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து சமி கருத்து வெளியிட்டுள்ளார்.ஆறு ஆண…
-
- 0 replies
- 409 views
-
-
ஆஸி அணியில் அதிரடி மாற்றம் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்காக அவுஸ்திரேலியாவின் டிரேவிஸ் ஹெட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் இன்று அணியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 22 வயதான டிரேவிஸ் ஹெட் வலது கை சுழல் பந்துவீச்சாளர் என்பதோடு, துடுப்பாட்ட வீரராகவும் தனது சகலதுறை திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வீரராவார். இவர் 45 முதற்தர போட்டிகளில் விளையாடி 2663 ஒட்டங்களை பெற்றுள்ளதுடன், பந்துவீச்சில் 14 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டியை 2-0 என்ற நிலையில் இழந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுவதற்காக அணியில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இதேவேளை இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய…
-
- 0 replies
- 355 views
-
-
உலக சாதனை: பால் போக்பாவை ரூ.740 கோடிக்கு மான்செஸ்டர் வாங்கியது! யுவான்டஸ் அணியின் மிட்பீல்டர் பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ரூ.740 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜோஸ் மோரின்ஹோ பொறுப்பேற்ற பின், ஸ்வீடன் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்லாட்டன் இப்ராஹிம்விச்சை ஒப்பந்தம் செய்தார். தொடர்ந்து இத்தாலியின் யுவான்டஸ் அணி வீரர் பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வந்தது. தற்போது யுவான்டஸ் அணியுடன் பேரம் படிந்துள்ளது. அதன்படி, 89 மில்லியன் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ.740 கோடி) பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், உலகிலேயே…
-
- 0 replies
- 351 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் இந்தியாவின் எழுச்சியும்! டெஸ்ட் போட்டி என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? கவாஸ்கர், டிராவிட், சச்சின், லாரா, பிராட்மேன், காலிஸ், வார்னே, அம்புரோஸ், இங்கிலாந்தின் ஸ்விங் பிட்ச்கள், ஆளுயர பவுன்சர் ஆகும் பெர்த் பிட்சுக்கள், சூழலில் கலங்கடிக்கும் நாக்பூர் வகையறா பிட்ச்கள் இதெல்லாம்தானே..! இதையும் தாண்டி பலருக்கும் டெஸ்ட் போட்டி என்றால் சட்டென தோன்றுவது 'டிரா' என்பதுதான். 'டெஸ்ட் போட்டிகள் என்றால், வீரர்கள் எல்லாரும் டொக்கு வைத்துக்கொண்டே இருப்பார்கள், ரிசல்ட் கிடைக்காது' என ஒரு சில கிரிக்கெட் ரசிகர்கள் அலுத்துக்கொள்வாரக்ள். ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து வெவ்வேறான பார்வை இருக்கும…
-
- 0 replies
- 400 views
-
-
தென் ஆஃப்ரிக்கா: கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து 4 வீரர்களுக்கு தடை தென் ஆஃப்ரிக்கா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை அதிகாரி ஹரூன் லோர்கட் தென் ஆஃப்ரிக்காவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நான்கு வீரர்களுக்கு கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களில் முன்னாள் சர்வதேச விக்கெட் கீப்பரான தாமி சோலெகிலேயும் அடங்குவார். அவர் ஏற்கனவே தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட முயன்றதற்காகவும், சாட்சியங்களை கலைத்ததற்காகவும் 12 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தார். மற்ற வீரர்கள் 7 மற்றும் 10 ஆண்டுகள் …
-
- 0 replies
- 335 views
-
-
ஒலிம்பிக் பதக்கம் என்பது அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு ஜஸ்ட் லைக் தட் விஷயம்.எத்தனையோ நாடுகள் பல ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற போதிலும், பதக்கப்பட்டியலில் இடம் பெற முடியாமலேயே போய் விடுகின்றன.இந்தியா கூடவும் அப்படித்தானே. ஆனால் கொசோவோ என்ற குட்டிநாடு, பங்கேற்ற முதல் ஒலிம்பிக்கில் அதுவும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதித்துள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் இரு நாடுகள் புதுமுகங்களாக களம் கண்டன. ஒன்று, ஐரோப்பிய நாடானா கொசோவா; மற்றொன்று தெற்கு சூடான். செர்பியாவின் பிடியில் இருந்த கொசோவா, கடந்த 2008 ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. கடந்த இரு வருடங்களுக்கு முன்புதான் கொசோவாவை தனிநாடாக ஏற்று, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகரித்தது. இதையடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் க…
-
- 1 reply
- 646 views
-
-
நான் இனியும் அணித்தலைவராக இல்லை: சமி இரண்டு தடவைகள், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு உலக இருபதுக்கு-20 பட்டங்களை பெற்றுக் கொடுத்த டரன் சமி, தனது பேஸ்புக் கணக்கில் பிரசுரித்த காணொளியொன்றில், தான் இனியும் மேற்கிந்தியத் தீவுகளின் இருபதுக்கு-20 அணித்தலைவராக இல்லை எனத் தெரிவித்துள்ளார். இருபதுக்கு-20 அணியின் தலைமைத்துவத்தை மீளாய்வு செய்வதாவும் மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் சமிக்கு இடமில்லை எனவும் அலைபேசி அழைப்பொன்றின் மூலம் தேர்வாளர்கள் குழுத் தலைவர் தனக்கு அறிவித்ததாக நேற்று வெள்ளிக்கிழமை (05) பதிவிடப்பட்ட காணொளியொன்றில் சமி தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு முதல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு, 47, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் தலைமை தா…
-
- 1 reply
- 367 views
-
-
கோலியின் கேப்டன்சி தவறுகளை சுட்டிக்காட்டிய சவுரவ் கங்குலி கங்குலி. | கோப்புப் படம்: அசோக் சக்ரவர்த்தி. ராஸ்டன் சேஸின் அபாரமான சதம், பிளாக்வுட்டின் அதிரடி ஆட்டம், டவ்ரிச், ஹோல்டரின் இரும்பு போன்ற உறுதியினால் 2-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அபார எழுச்சி பெற்று டிரா செய்தது. ஆனால் கோலியின் கேப்டன்சியில் சில தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார் சவுரவ் கங்குலி. இது குறித்து தனியார் சேனல் ஒன்றில் கங்குலி கூறியிருப்பதாவது: அமித் மிஸ்ராவுக்கு முன்பாகவே அஸ்வினை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். அதே போல் உமேஷ் யாதவ்வை கோலி இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்தலாம். அவருக்கு அளித்த ஓவர்கள் எண்ணிக்கையை விட அவரது பந்து வீச்சு திறமை சிறப்பானது…
-
- 0 replies
- 276 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலிய தொடரின் போது மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை திறக்க ஏற்பாடு கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை அவுஸ்திரேலிய - இலங்கை தொடரின் போது திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த உள்ளக கிரிக்கெட் மையத்தின் கட்டுமான வேலைகளை, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஐ.சி.சி.யின் பிரதம நிறைவேற்றதிகாரி டேவிட் ரிச்சட்சன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் விஜயம் செய்து பார்வையிட்டனர். குறித்த உள்ளக கிரிக்கெட் மையம் இலங்கை கிரிக்கெட் ச…
-
- 0 replies
- 325 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக விளையாடும் இலங்கை அணி, தனது 250 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 1981/82 பருவகாலங்களில் இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடத் தொடங்கிய இலங்கை அணி, அண்ணளவாக 35 வருடங்களாக தனது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய வீரர்கள், மற்றும் இலங்கை அணி செய்த சாதனைகளை இந்த கட்டுரை இயம்பவுள்ளது. இதுவரை இலங்கை அணி விளையாடிய போட்டிகளில் 76 வெற்றிகளையும், 81 சமநிலைகளையும், 92 தோல்விகளையும் கடந்துள்ளது. இந்திய அணிக்கெதிராக பிரேமதாச மைதானத்தில் 97/98 பருவகாலத்தில், இனிங…
-
- 0 replies
- 354 views
-
-
மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக கிரிக்கெட் விளையாடிய அவுஸ்ரேலிய பிறிஸ்பன் A.A.Potoroos அணி மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக அவுஸ்ரேலியா பிறிஸ்பன் A.A.Potoroos கிரிக்கெட் அணி மற்றும் மட்டக்களப்பு மைக்கல்மென் இணைந்து 30 ஓவர் கொண்ட நட்புறவு கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று இன்று நடைபெற்றது. மைக்கல்மென் அணி மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையில் ஆரம்பமான கிரிக்கெட் போட்டி உத்தியோகபூர்வமாக கிழக்கு பல்கலைகழகத்தின் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தீர்மானித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கல்மென் அணி முப்பது ஓவர் முடிவில் நான்கு பேர் ஆட்டமிழப்பு…
-
- 0 replies
- 610 views
-
-
10 ஆண்டுகளில் கனவும் நிஜமும்: கோலி நெகிழ்ச்சி பகிர்வுக்கு திராவிட் மகிழ்ச்சி பதில் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த படம். கிரிக்கெட்டில் தலைமுறைகள் மாறலாம்; ஆனால் ஊக்கமளித்தவர்களை மறக்காத இளம் தலைமுறை ஆரோக்கியமானதாகும். அவ்வகையில் விராட் கோலி ராகுல் திராவிடுடன் இருந்த இரண்டு புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ஒன்று 10 ஆண்டுகளுக்கு முன்பாக திராவிடின் பார்வைக்கு ஏங்கிய ஆச்சரியமான கண்களுடன் இளம் விராட் கோலி, இன்னொன்று அதே திராவிட், டெஸ்ட் கேப்டன் விராட் கோலியை பேட்டி எடுத்தது. முதல் படத்தில் சிறுவனாக தோற்றமளிக்கும் விராட் கோலி, தனது லட்சிய ஆளுமையான திராவிட்டையே உற்று நோக்க, மற்ற வீரர்…
-
- 0 replies
- 368 views
-
-
அமெரிக்காவில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் T20 போட்டி. அமெரிக்காவில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் T20 போட்டி. T20 உலக கிண்ண சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் , மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 T20 போட்டிகள் கொண்ட தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெறவுள்ளன. இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான குறித்த T20 தொடரை அமெரிக்காவில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணங்கியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின், பூளோரிடாவில் உள்ள சென்ட்ரல் புரோவார்ட் பூங்கா மைதானத்தில் இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் இடையிலான T20 தொடர் நடைபெறவுள்ளது. தற்போது இதே மைதானத்தில்தா…
-
- 0 replies
- 391 views
-
-
ரங்கன ஹேரத்தின் புதிய பாதை இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் சமுக வலைத்தளமான உத்யோகப்பூர்வ டிவிட்டர் தளத்தில் நேற்று (02) இணைந்தக்கொண்டுள்ளார். இவரின் முதலாவது டுவிட்டாக மெத்தியுஸ், சந்திமல் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவுசெய்து பகிர்ந்துள்ளார். http://www.virakesari.lk/article/9729
-
- 0 replies
- 461 views
-
-
முத்தரப்புத் தொடராகின்றன டெஸ்ட் போட்டிகள்? சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன கொண்ட தொடரில் டெஸ்ட் போட்டிகள், முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடராக மாறுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொடர், ஒக்டோபரிலும் நவம்பரிலும் இடம்பெறவிருந்த நிலையிலேயே, இலங்கையும் சிம்பாப்வேயும் மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடும் முத்தரப்புத் தொடராக மாற்றப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் மூலமாகக் கிடைக்கும் வருமானம், போதுமானளவில் இருக்காது என்பதால், டெஸ்ட் தொடரை விளையாடும் எண்ணத்தை, சிம்பாப்…
-
- 0 replies
- 319 views
-
-
ஹிட்லர் அணிந்த ஒலிம்பிக் முகமூடி! ஒலிம்பிக் டைரி குறிப்புகள் 1. ஹிட்லரின் ஒலிம்பிக்ஸ்! முதல் உலகப் போர் நடக்கக் காரணம் யார்?... அதனால் உலகமே சீரழிந்து கிடக்கிறதே, அனைத்துக்கும் காரணம் யார்? அந்தக் கொடூரக் குற்றவாளி யார்?... முதல் உலகப் போருக்கு ‘நன்றி’ கார்டு போட்ட சமயத்தில், இந்தக் கேள்விகள் எழுந்தபோது இதற்கான ஒற்றை பதிலாக சகல திசைகளிலிருந்தும் ஆள்காட்டி விரல்கள் ‘ஜெர்மனி’யை நோக்கித்தான் நீண்டன. ஜெர்மனி, முதல் உலகப்போரில் சந்தித்த இழப்புகளைவிட, அடுத்த 10 ஆண்டுகளில் போர்க் குற்றவாளியாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு சந்தித்த பேரிழப்புகளே மிக அதிகம். 'ப்ச்... என்னதான் இருந்தாலும் ஜெர்மனி பாவம். பொருளாதார ரீதியாக சோம்பிப் போய்க் கிடக்கிறது…
-
- 20 replies
- 4.6k views
-
-
லீமனின் ஒப்பந்தம் நீடிப்பு அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுநர் டெரன் லீமனின் பயிற்றுநர் பதவிக்கான ஒப்பந்தம், 2019ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளது. அவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம், ஆஷஸ் தொடர் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே, இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட டெரன் லீமன், 2019ஆம் ஆண்டுடன் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருக்குச் சில நாட்கள் முன்பாக, அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக அறிவிக்கப்பட்ட டெரன் லீமன், அடுத்ததாக இடம்பெற்ற ஆஷஸ் தொடரை வென்றதோடு, தென்னாபிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிர…
-
- 0 replies
- 355 views
-
-
சொந்த மண்ணில் இராமகிருஸ்ணா முதலிடம் -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் சொந்தமண்ணிலே முதலிடத்தினை பெற்றுக்கொண்டது. மேற்படி கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 26கழகங்கள் பங்கேற்று, இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகமும் கல்லடி யூத் கழகமும் தெரிவாகியிருந்தன. போட்டியின் வழமையான நேரத்தில் இரு அணிகளும் எவ்விதமான கோல்களையும் இடாத சந்தர்ப்பத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக பெனால்டி மத்தியஸ்தரினால் வழங்கப்பட்டது. பெனால்டியில், இராமகிருஸ்ணா வெற்றி பெற்று …
-
- 0 replies
- 291 views
-
-
தேசிய மட்ட கராட்டி போட்டிகளில் தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் -வி.சுகிர்தகுமார் தேசிய மட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளுக்காக அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவில் ஒருவரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் இருந்து மூவரும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர். திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரியில் கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணமட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளில் கலந்து கொண்ட இவ்வீரர்களே தேசியமட்ட போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசாந்தன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 235 views
-
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை.... இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகலையில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹேரத்தும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர், 2-வது இன்னிங்சில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். 9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியதால் ஹேரத் ஐ.சி.சி.யின் தரவரிசையி்ல 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது அவர் 749 புள்ளிகளுடன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 876 புள்ளிகளுடன் முதல் இடத்திலும…
-
- 1 reply
- 509 views
-
-
இங்கிலாந்துச் சம்பியன்களை வீழ்த்திய பிரெஞ்சுச் சம்பியன்கள் இங்கிலாந்தின் கால்பந்தாட்டச் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி அணியை எதிர்கொண்ட பிரான்ஸின் சம்பியன்களான பரிஸ் செய்ன்ட் ஜேர்மைன் அணி, மிக இலகுவான வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டது. லொஸ் ஏஞ்சலஸில் இடம்பெற்ற கண்காட்சிப் போட்டியொன்றில், 25,667 இரசிகர்கள் மைதானம் முழுவதும் காணப்பட, இரு நாட்டுச் சம்பியன்களும் மோதினர். ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமாக விளையாடிய பரிஸ் செய்ன்ட் ஜேர்மைன் அணி, 26ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியூடாக, கோல் எண்ணிக்கை ஆரம்பித்தது. எடின்சன் கவானியினால் அந்தக் கோல் பெறப்பட்டது. பின்னர், முதற்பாதி முடியும் நே…
-
- 0 replies
- 281 views
-