விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
1996 வில்ஸ் உலகக்கிண்ணம் – ஒரு சுகானுபவம் 1996 வில்ஸ் உலகக்கிண்ணம் – ஒரு சுகானுபவம். ***** இப்பொழுது போலல்ல அப்பொழுதெல்லாம் கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பதில் கிரிக்கெட் பிரியர்களுக்கு வெறித்தனம் இருக்கும். சீவிய தென்னம்மட்டை அல்லது சிறிய அளவிலான மரத்தாலான பற் சகிதம் வெள்ளை , மஞ்சள் பந்துகளில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த காலத்தில்தான் 1996 உலகக்கிண்ணபோட்டிகள் ஆரம்பமாயிற்று. சங்கக்கடையில எப்பிடியாவது கஷ்டப்பட்டு 2 போத்தில் மண்ணெண்ணெய் உசார் செய்து கிடைக்காத பட்சத்தில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில் டைனமோ சுத்தி கரண்டெடுத்து அன்ரனாக்கு இரண்டு எக்ஸ்ட்ரா பைப் போட்டு உயர்த்தி அப்பிடி சுத்தி இப்பிடி சுத்தி ஒருவாறாக ரூபவாஹினியை பிடி…
-
- 0 replies
- 400 views
-
-
பாக். மண்ணில் கிரிக்கெட்: பாதுகாப்பு அனுமதி, வீரர்கள் ஒப்பந்தம் குறித்து யோசிக்கும் வெ.இண்டீஸ் பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு பாதுகாப்பு அனுமதி மற்றும் வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பிற்கு எந்தவொரு கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இதனால் எப்படியாவது முன்னணி அணிக்கெதிரான தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடத்தியே தீர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர் முயற்சியில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 306 views
-
-
கனரக மட்டையுடன் இந்திய ‘சுழற்பந்து வீச்சை’ ஆதிக்கம் செலுத்த வார்னர் கடும் பயிற்சி யாசிர் ஷாவை சிட்னி டெஸ்ட் போட்டியில் எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் சிக்ஸ் அடிக்கும் வார்னர். | படம்.| ராய்ட்டர்ஸ். துணைக்கண்டத்தின் ‘குறைந்த பவுன்ஸ்’, ‘சுழற்பந்து வீச்சு’ ஆகியவற்றை ஆதிக்கம் செலுத்த கனரக மட்டையைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, டேவிட் வார்னர் வழக்கமாக 1.23 கிலோ எடைகொண்ட மட்டையைத்தான் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இம்முறை இந்தியாவுக்கு எதிராக 1.28 கி…
-
- 0 replies
- 413 views
-
-
டோனி 2019 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும்: பிளமிங் விரும்புகிறார் இந்திய அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த டோனி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்று ஸ்டீபன் பிளமிங் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்று பெயரெடுத்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போது கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் பணியை மட்டுமே செய்து வருகிறார். டோனியின் பேட்டிங் திறமை குறைந்து வருகிறது. அவரது இடத்திற்கு வருவதற்காக ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் போன்…
-
- 0 replies
- 257 views
-
-
மகாபலிபுரத்தில் மோதும் ரஷ்யா - யுக்ரேன் - ஆனால், இது வேற மாதிரி சூசன் நைனன் விளையாட்டுத்துறை எழுத்தாளர் 25 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்நாட்டின் ஒரு சிறிய பகுதியான மாமல்லபுரம் (மகாபலிபுரம்), ஒரு வேறுபட்ட ரஷ்யா-யுக்ரேன் இடையிலான போட்டியைப் பார்க்கப் போகிறது. இந்தியா நடத்தவிருக்கும் செஸ் ஒலிம்பியாடின் பின்னணியில், சதுரங்க விளையாட்டின் உச்ச அமைப்பான சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) தலைவரை தேர்வு செய்ய 180க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர். போட்டியில் முன்னணியில் இருப்பவர் ரஷ்யாவின் முன்னாள் …
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
கிரிக்கெட் நடுவரான அசாத் ரவூப் மாரடைப்பால் மரணம் By VISHNU 15 SEP, 2022 | 11:47 AM (எம்.எம். எஸ்.) பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. எலைட் பேனல் நடுவரான அசாத் ரவூப், இன்று (15) லாஹூரில் மாரடைப்பால் மரணமடைந்தார். 66 வயதான அசாத் ரவூப், 64 டெஸ்ட் போட்டிகளில் (49 கள நடுவராகவும் 15 டிவி நடுவராகவும்), 139 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியிருந்தார். 2000 களின் நடுப்பகுதியில் பாகிஸ்தானின் மிக முக்கியமான நடுவர்களில் ஒருவராக இருந்த அசாத் ரவூப், 2006 இல் ஐ.சி.சி.யின் எலைட் பேனலுக்கு தரமுயர்த்தப்பட்டார். எனினும், 2013…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
மெஸ்சியின் கடைசி நிமிட கோலால் சாதனையை தக்க வைத்தது பார்சிலோனா லா லிகா கால்பந்து லீக் செவியாவிற்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சியின் கடைசி நிமிட கோலால் பார்சிலோனா சாதனையை தக்கவைத்தது. #LaLiga #Messi ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து லீக்கில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் செவியா - பார்சிலோனா அணிகள் மோதின. சொந்த மைதானத்தில் செவியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் பிரான்கோ வாஸ்குயிஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் செவியா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் 50-வது நிமிடத்தில் லூயிஸ…
-
- 0 replies
- 272 views
-
-
ஆஸ்திரிய உடற்கட்டழகர் போட்டியில் லூசியன் புஷ்பராஜுக்கு வெள்ளிப் பதக்கம் Photo Courtesy - Lucion Pushparaj Facebook page தெற்காசியாவின் கறுப்பு சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற தேசிய உடற்கட்டழகர் சம்பியனான லூசியன் புஷ்பராஜ், ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒன்பதாவது ஆஸ்திரிய சர்வதேச உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் அதிகமான வீரர்கள் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தனர். இதில் 100 கிலோ கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் பங்குபற்றிய லூசியன் புஷ்பராஜ், உலகின் நட்சத்திர உடற்கட்டழகரையெல்ல…
-
- 0 replies
- 699 views
-
-
80 முறை 300 ரன்களைக் கடந்த இந்திய அணி: சுவையான தகவல்கள் தரம்சலாவில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 330 ரன்களை எடுத்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 80வது முறையாக 300 ரன்களைக் கடந்தது. 80 முறை 300 ரன்களைக் கடந்த அணி என்ற வகையில் அதிகம் 300 ரன்களுக்கும் மேல் அடித்த ஒரே அணி இந்திய அணியே. ஆனாலும் 300 ரன்களுக்கு மேல் அடித்த போட்டிகளில் வெற்றி விகிதம் பார்த்தால் குறைவாகவே உள்ளது. அதாவது 10 அணிகளில் இந்தியா அல்லாத டாப் 6 அணிகள் 300க்கும் மேல் ரன்கள் எடுத்த போது அதிக வெற்றிகளை சாதித்துள்ளன. இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் 300 ரன்களுக்கும் மேல் எடுத்தும் வெற்றி விகிதத்தில் குறைவாக உள்ள அணிகளாகும். 20வது ஒருநாள் ச…
-
- 0 replies
- 415 views
-
-
மிட்செல் ஜான்சன் ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல: வக்கார் யூனிஸ் வேகப்பந்து வீச்சில் கலக்கி வரும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் பற்றி வக்கார் யூனிஸ் கூறுகையில், ‘அவர் ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல’ என்று கூறியுள்ளார். "நான் வாசிம் அகரமுடன் ஒருவரையும் ஒப்பிட மாட்டேன், இதில் உறுதியாக இருக்கிறேன், அவர் ஒரு பெரிய பவுலர், பாகிஸ்தானுக்காக பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார். எனவே மிட்செல் ஜான்சனை வாசிம் அகரமுடன் ஒப்பிட வேண்டுமென்றால் ஜான்சன் இன்னும் நீண்ட தூரம் வந்தாக வேண்டும். ஆனால் ஜான்சன் ஒரு அச்சுறுத்தல்தான், சிறந்த பவுலர்தான். கடந்த சில போட்டிகளில் அவரது பந்து வீச்சில் மாற்றம் தெரிகிறது, அவர் தாக்குதல் முறையில் வீசுகிறார். இதனால் வெற்றி அடைந்துள்ளார். ஜான்சனை சிறு சிற…
-
- 0 replies
- 387 views
-
-
சர்வதேசத் தடகள சம்மேளனத்தின் அடுத்த தலைவர் யார்? 2 பிப்ரவரி 2015 சர்வதேசத் தடகள சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான மோதல் வலுத்து வருவது போலத் தெரிகிறது. தலைவர் பதவிக்கு போட்டியிடும் செபாஸ்டின் கோ(இடது) மற்றும் செர்கெய் புப்காஉலகளவில் விளையட்டுத்துறையில் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்ட இந்த அமைப்பின் தலைவராக தற்போது செனிகல் நாட்டைச் சேர்ந்த லெமீன் டியாக் இருக்கிறார். அவரது பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஒலிம்பிக் பிரபலங்களான பிரிட்டனின் சபாஸ்டின் கோவும், உக்ரைனின் செர்ஜேய் புப்காவும் சர்வதேசத் தடகள சம்மேளனத் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இருவரும் அந்த சம்மேளனத்தின் துணைத் தலைவர்களாக இருக்கின்றனர். செபாஸ்டின் கோ …
-
- 0 replies
- 298 views
-
-
136ஆவது ரோயல் - தோமியன் 'பிக் மெட்ச்' போட்டி ஆரம்பம் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கி ஸ்சை புனித தோமையார் கல்லூரிக்கும் இடையிலான நீலங்களின் சமர் என அழைக்கப்படும் 136 ஆவது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. நீண்டகால வரலாற்றைக் கொண்ட 'ரோயல் – தோமியன்' கிரிக்கெட் போட்டி 1879ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் உலக கிரிக் கெட் வரலாற்றில் நீண்டகாலமாக இடை விடாது நடத்தப்பட்டுவரும் பாரம்பரியமிக்க கிரிக்கெட் போட்டியாகும். இவ்விரு கல்லூரிகளினதும் உத்தியோகபூர்வ வர்ணம் நீல நிறமாகக் காணப்படுவ தால் நீலங்களுக்கிடையிலான சமர் என அழைக்கப்படுகின்ற…
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி! இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் மார்டின் கப்டில் 138 ஓட்டங்களையும், கேன் வில்லியன்சன் 76 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 54 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நீஸம் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லசித் மாலிங்க, நுவான் பிரதீப், திசர பெரேரா ஆகியோர் தலா…
-
- 0 replies
- 451 views
-
-
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிக்கான இலங்கை வலைப்பந்தாட்ட குழாம் வீராங்கனைகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வலைப்பந்தாட்டத் தெரிவுக் குழுவினரினால் சமர்ப்பிக்கப்பட்ட 12 வீராங்கனைகள் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். நான்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் மாத்திரமே இந்தக் குழாமில் இடம் பெறுகின்றனர். ஏனைய அனைவரும் அதிக அனுபவமற்றவர்களாவர். தெரிவாளர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கனைகளைக் கொண்டு உலகக் கிண்ண வலைப…
-
- 0 replies
- 394 views
-
-
உலக கிண்ணத்தில் 12 அணிகள் இடம்பெற வேண்டும்; ரி 20 கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இணைக்கப்படவேண்டும் - எம்.சி.சி.கோரிக்கை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை பத்தாக குறைக்கப்பட்டுள்ளமை ஒரு பின்னோக்கிய நகர்வு எனவும் ரி 20 கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் அரங்கேற்றப்படவேண்டும் எனவும் எம். சி. சி. உலகக் கிரிக்கெட் குழு கோரிக்கை விடுத்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 14 இலிருந்து 10 ஆகக் குறைப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்த தீர்மானத்தை மீளாய்வு செய்யவேண்டும் எனவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. அணிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மா…
-
- 0 replies
- 203 views
-
-
இளம் வீரர்களை எதிர்கொள்ள ரோஜர் பெடரரின் புது ஆயுதம் ( வீடியோ) அமெரிக்க ஓபனில் ஓர் புது புயல் மையம் கொண்டுள்ளது. அதற்கு SABR (Sneak Attack By Roger). என பெயர் சூட்டப்பட்டுள்ளது. டென்னிஸ் உலகின் ஜாம்பவன் ரோஜர் பெடரரின் டென்னிஸ் மட்டையில் இருந்துதான் அந்த புயல் உருவாகிறது.பெடரர்க்கு அறிமுகம் தேவையில்லை.கிரிக்கெட்டுக்கு ஓர் சச்சின்,கூடைபந்துக்கு ஓர் மைக்கேல் ஜோர்டான் போல டென்னிஸ்க்கு பெடரர். கடந்த 2003ஆம் ஆண்டு விம்பிள்டனில் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பெடரர் அன்று முதல் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் ஆக வலம் வருகிறார்.டென்னிஸ் உலகில் 17 கிராண்ட் ஸ்லாம்களை வென்றுள்ள பெடரர்க்கு நடால்,முரே,ஜோகோவிச் முதலிய இளம் வீரர்களின் வருகையால் கிராண்ட் ஸ்லாம் பட்டங்…
-
- 0 replies
- 219 views
-
-
பட மூலாதாரம்,RAMESH BABU படக்குறிப்பு, பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை …
-
- 0 replies
- 523 views
- 1 follower
-
-
புத்தாண்டிலும் பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரிக்க பார்சிலோனா தாகத்துடன் உள்ளது – மெஸி பிறந்துள்ள புத்தாண்டிலும் பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பார்சிலோனா கழகம் இருப்பதாக அக் கழகத்தின் முன்கள வீரரும் நான்கு தடவைகள் உலகின் அதிசிறந்த வீரருமாகத் தெரிவான லயனல் மெஸி தெரிவித்துள்ளார். 2015இல் போன்றே புதிய ஆண்டிலும் ஐந்து வெற்றிக் கிண்ணங்களை வென்றெடுக்க பார்சிலோனா கழகம் உறுதிபூண்டுள்ளதை எதிரணிகளுக்கு கூற விரும்புவதாக லயனல் மெஸி குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரியல் பேட்டிஸ் அணிக்கு எதிரான போட்டி மூலம் தனது 500ஆவது கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடிய …
-
- 0 replies
- 495 views
-
-
முதலிடத்தில் இந்தியா: ஐந்தாமிடத்தில் இலங்கை இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தரவரிசையின் முதலிடத்தையும், அவ்வணி உறுதிசெய்தது. இத்தொடரின் முதலாவது போட்டியை வென்று, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இலங்கை அணி, அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஐந்தாமிடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. 2ஆம் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள், அடுத்த இடங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து எனக் காணப்படும் இவ்வரிசையில், 6ஆவது இடத்திலிருந்து தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, …
-
- 0 replies
- 475 views
-
-
ஆர்சனல், யுனைடட் அணிகளுக்கு வெற்றி: வெளியேற்றப்பட்டார் நெய்மார் By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, மன்செஸ்டர் யுனைடட் எதிர் வட்போர்ட் ப்ரூனோ பெர்னாண்டோ தனது புதிய கழகத்திற்காக முதல் கோலை பெற்ற நிலையில் வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் மன்செஸ்டர் யுனைடட் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது. இதன்மூலம் முதல் நான்கு இடங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் மன்செஸ்டர் …
-
- 0 replies
- 354 views
-
-
கிரிக்கெட்டுக்கு ஏன் இன்னும் இவ்வளவு ரசிகர்கள்? ஆதாரத்தை காட்டும் வோர்னர், இம்ரான் தாஹிர் ; இரசிக்க வைக்கும் காணொளி தென்னாபிரிக்கா மற்றும் ஆஸி அணிகளுக்கான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வோர்னர் மற்றும் தாஹீர் ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதமானது போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து கொண்டே இருந்தது. இவர்களின் தொடர் வாக்குவாதத்தினை நடுவர்கள் இணைந்து சமாதானப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் வோர்னர் 173 ஓட்டங்களை விளாசிய நிலையில், தாஹீர் ரன் அவுட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். இந்நிலையில் போட்டியின் போது பல வாக்குவாதங்க…
-
- 0 replies
- 171 views
-
-
முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி! இலங்கை மற்றும் சுற்றலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சிற்காக 135 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில 359 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 421 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் வெற்றிப் இலக்காக இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்திருந்தது. இதற்கமைய தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது டெஸ…
-
- 0 replies
- 468 views
-
-
ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன்: தோனி பயிற்சியில் தோனி. | படம்.| ஏ.எஃப்.பி. மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா ஏ அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன் என்று கூறியுள்ளார். மும்பை பிரபர்ன் மைதானத்தில் நீலச் சீருடையில் தோனி தனது கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார். இன்று டாஸ் சென்ற போது எல்.சிவராமகிருஷ்ணனிடம் தோனி கூறும்போது, “இது எனக்கு சிறப்பு வாய்ந்த போட்டி, கேப்டனாக (இந்தியா) எனது கடைசி போட்டி, ஆனால் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன், ஜார்கண்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பு வகிக்க வாய்ப்புள்ளது”…
-
- 0 replies
- 374 views
-
-
சச்சின் சாதனையை குக் முறியடிப்பார்: சொல்கிறார் பீட்டர்சன் லண்டன்: இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் முறியடிப்பார் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின், இதுவரை 198 டெஸ்டில் விளையாடி 51 சதம் உள்பட 15,837 ரன்கள் குவித்திருக்கிறார். 28 வயது நிரம்பிய இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் 92 டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 7,524 ரன்கள் எடுத்துள்ளார். அதாவது டெஸ்டில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்க, குக் 31வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் சச்சினின் டெஸ்ட் சாதனையை அலஸ்டயர் குக்கால் முறியடிக்…
-
- 0 replies
- 450 views
-
-
என்னை ஏன் இப்படி இம்சை பண்ணுறீங்க...வீட்டுக்கு போய் தூங்குங்க: கதறிய டோனி டோனியை விடாமல் பத்திரிக்கையாளர்கள் விரட்டியதால், வீட்டுக்கு போய் தூங்குங்க என்று டோனி பத்திரிக்கையாளர்களிடம் கோபமாக கூறியுள்ளார். இந்திய அணியின் மூன்று வித போட்டிகளிலும் தலைவராக இருந்த டோனி, சில வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல்லின் புனே அணிக்கான தலைவர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவர் உள்ளூரில் நடக்கும் விஜய் ஹசாரே தொடருக்காக ஜார்கண்ட் அணிக்கு தலைவராக பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இவர் தலைமையிலான ஜார்கண்ட் அணி நேற்று அபார வெற்றி பெற்றது. இந…
-
- 0 replies
- 1.2k views
-