Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 9 இலங்கை வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 9 இலங்கை வீரர்கள் ஐந்தாவது தடவையாக நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில், இலங்கையிலிருந்து 9 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா, தசுன் சானக்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர். பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் நடத்தப்படுகின்ற பங்…

  2. பயிற்சியாளர் பதவியிலிருந்து மாரடோனா அதிரடி நீக்கம் புதன்கிழமை, ஜூலை 28, 2010, 14:07[iST] பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டியகோ மாரடோனா திடீரென நீக்கப்பட்டுள்ளார். பிரேசிலில் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கால்பந்துப் போட்டி வரை மாரடோனாவே பயிற்சியாளராக நீடிப்பார் என செய்தி வெளியான சில நாட்களுக்குள் அவரை தடாலடியாக தூக்கியுள்ளது அர்ஜென்டினா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வீரராக அர்ஜென்டினா அணிக்கு பெரும் பலமாக இருந்தவர் மாரடோனா. அந்த அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்தவர் அவர். ஆனால் பயிற்சியாளராக அவர் சோடை போகவில்லை. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்…

  3. கோலியின் பிரச்சனை என்ன? விராத் கோலி பற்றிய கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்தது அஷ்வினுடையதே. அவர் கோலி கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாகவே நன்றாக மட்டையாடி வருவதாகக் கூறி இருக்கிறார். இது சரி தான். ஒரு மட்டையாளர் தன ஆட்டநிலையை இழக்கும் போது மூன்று விசயங்கள் நடக்கும்: 1) தொழில்நுட்ப பிரச்சனை ஒன்று அம்பலமாகி அதில் இருந்து வெளிவரத் தெரியாமல் தவிப்பார்கள். (காம்ப்ளி, லஷ்மண், திராவிட், ஸ்டீவ் வாஹில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் வரை ) 2) உடற்தகுதியின்மை ஏற்படும். (கங்குலி, சச்சின்) 3) பந்து விழும் நீளத்தை கணிக்க முடியாமல் போகும் - சிலருக்கு பார்வைக் குறைபாட்டினாலும் வேறு சிலருக்கு தசைகளுக்கும் நர…

  4. ``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ) ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியின்போது நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை ஒற்றைக் கையில் பிடித்த பல்கலைக்கழக மாணவருக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 நாடுகள் டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் முக்கியமான லீக் சுற்றுப் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி மார்டின் கப்திலின் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்…

  5. ரொனால்டோவின் கோலின்றி ரியல் மெட்ரிட் முதல்கட்ட அரையிறுதியில் வெற்றி Image courtesy - Getty Image பயென் முனிச் அணியுடனான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் முதல்கட்ட அரையிறுதியில் நடப்புச் சம்பியன் ரியெல் மெட்ரிட் பெரும் போராட்டத்துடன் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதில் இந்த ஐரோப்பிய பருவத்தில் போர்த்துக்கல் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறை ஒரு கோல் கூட போட தவறியுள்ளார். ஜெர்மனி கழகமான பயென் முனிச்சின் சொந்த மைதானமான அல்லியன்ஸ் அரேனாவில் இலங்கை நேரப்படி இன்று (26) அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் அந்த அணியினால் ஆதிக்கம் செலுத்த முடிந்தபோத…

  6. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்கள் பெற்றுள்ளது December 15, 2018 1 Min Read பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்களைப் பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் முதலாவது போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆரம்பமான 2-வது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 90 ஓவரில்…

  7. நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய செரீனா 2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சிமோன ஹாலெப்பை வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வரும் இப் போட்டியில், பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 16 ஆம் நிலை வீராங்கனையான செரீனா உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார். இப்போட்டியில் செரீனா முதல் செட்டை 1-6 என்ற இழந்தாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6-4 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். http://www.virakesari.lk/article/48454

  8. மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இங்கிலாந்து Editorial / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, மு.ப. 08:12 Comments - 0 மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பார்படோஸில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் மேற்கிந்தியத் தீவுகள்: 360/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கெய்ல் 135 (129), ஷே ஹோப் 64 (65), டரன் பிராவோ 40 (30), ஜோன் கம்பெல் 30 (28), அஷ்லி நேர்ஸ் ஆ.இ 25 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 3/37 [8], அடில் ரஷீட் 3/74 [9], கிறிஸ் வோக்ஸ் 2/59 [10]) இங்கிலாந்து: 364/4 (48.4 ஓவ. ) (துடுப்…

  9. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசையில் ஏ.பி.டி முதலிடம்! டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசையில் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஐ.சி.சி. வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டியில் 908 புள்ளிகளையும் ஒருநாள் போட்டி தரவரிசையில் 902 புள்ளிகளையும் பெற்று ஒரே சமயத்தில் டி வில்லியர்ஸ் இந்த சாதனையை புரிந்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 755 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளனர். இதிலும் விராட் கோலி 802 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளார். ஷிகர் தவான் 777 புள்ளிகளுடன் 7வது இடத்தையும் இந்திய அணியின் கேப்டன் த…

  10. கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறைக்கைதி! இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கும், அவரது தந்தைக்கும் சிறைக்கைதி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மீரட்டில் இவரது குடும்பம் வசிக்கிறது. இவரது தந்தை கிரண்பால் சிங், நிலம் வாங்க 80 லட்ச ரூபாயை ரன்வீர் சிங் என்பவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்துள்ளார். பணம் இன்டர்நெட் வழியாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணத்தை வாங்கிய ரன்வீர் சிங், நிலத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். பணத்தையும் திருப்பித் தரவில்லை.இது தொடர்பாக கிரண்பால் சிங்குக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.…

  11. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர். இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு கடந்த வருடம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதி அறிக்கையே இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உப குழுவில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மின்சக்தி, வலுசக்தி அமை…

  12. 10 நாடுகள் களத்தில் ; இன்று ஆரம்பமாகிறது உலகக் கிண்ண சமர்! உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ள 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது நாளைய தினம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து, மற்றும் வேல்ஸில் நாளை 30 ஆம் திகதி ஆரம்பமாகும் இத் தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் நடப்புச் சம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா, ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா, விராட் கோலி தலைமையிலான இந்தியா, சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான், ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான…

  13. '' இந்திய அணிக்கு தோனி பாரமாக இருக்கிறார் ! ''அஜித் அகர்கர் 'தைரிய 'கருத்து இந்திய அணிக்கு தோனி பாரமாக இருப்பதாகவும் அவரது இடத்திற்கு வேறு ஒருவரை பரீசிலிக்க வேண்டுமென்றும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கருத்து கூறியுள்ளார். தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து இரு டி20 போட்டிகளில் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் மழையால் கை விடப்பட்டது.இந்த தோல்வியால் தோனி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தைரியமாக கருத்து கூறியுள்ளார். '' தோனி இந்திய அணியின் மிகப்பெரிய வீரர் என்பதை மறுக்க முடியாது. கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக தற்போதைய த…

  14. பங்களாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டி 16 ஒப்பந்த வீரர்களுக்கு அனுமதி இல்லை? பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு மத்­திய ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்ள 16 இலங்கை வீரர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. மாறாக இங்கு நடை­பெ­ற­வுள்ள ப்றீமியர் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­களில் விளை­யா­டு­மாறு குறிப்­பிட்ட வீரர்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்­கப்­படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்­பாட்டு அதி­காரி கார்ல்டன் பேர்­னாடஸ் குறிப்­பிட்­டுள்ளார். பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மாகும் அதே …

  15. படுமோசமான பேட்டிங்: ஷான் மார்ஷை கிளென் மெக்ராவுடன் ஒப்பிட்ட இயன் சாப்பல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் ஷான் மார்ஷ். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பி வருவதையடுத்து அவரது பேட்டிங்கை கிளென் மெக்ராவுடனும், டேனி மாரிசனுடனும் ஒப்பிட்டார் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல். நடந்து முடிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஷான் மார்ஷ் ரன் அவுட் ஆனார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் கடுமையாகப் போராடி முக்கியப் பங்களிப்பாக 49 ரன்களைச் சேர்த்தார் ஷான் மார்ஷ். ஆனால், இதுவும் கூட இயன் சாப்பலை வசீகரிக்கவில்லை. அவர் அணியில் நீடிப்பது பற…

  16. திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்! கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஆயிரம் ரன்களை அடித்து மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர் பிரணவ் தாணவாடே சாதனை புரிந்துள்ளார். கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் முதல் சாதாரண கிரிக்கெட் ரசிகர் வரை இன்று பிரணவ் பற்றிதான் பேச்சு. பிரணவ் படைத்த இந்த சாதனை பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே... கிரிக்கெட் உலகில் ஒரே இன்னிங்சில் 4 இலக்க ரன்களை எட்டிய முதல் வீரர் பிரணவ். ஆயிரம் ரன்களை அடித்த தகவல் மும்பையில் பரவியதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டி நடந்த மைதானத்திற்கு சென்றுள்ளனர். பல அரசியல்வாதிகள் கையில் பூங்கொத்துடன் மைதானத்தில் திரண்டனர். பொதுமக்களும் பரிசுளை வழங்க…

  17. ஒரே கேள்வி என் பதிலை மாற்றாது: ஓய்வு குறித்த கேள்வியால் தோனி எரிச்சல் கொல்கத்தாவில் வங்கதேசம் புறப்படும் முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி. | படம்: பிடிஐ. தோனி செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்தாலே அவரிடம் உடனே ஓய்வு பற்றி கேட்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இந்த முறை கேட்டதற்கு தோனி, ஒரே கேள்வி எனது பதிலை மாற்றாது என்று பதிலடி கொடுத்தார். ஆசியக் கோப்பைத் தொடருக்காக வங்கதேசத்துக்கு அணி புறப்படும் முன்னர் நிருபர்கள் சந்திப்பில் தோனி கூறியதாவது: “நான் ஒரு மாதம் அல்லது 15 நாட்களுக்கு முன்பு ஏதாவது கூறியிருந்தேன் என்றால் எனது பதில் ஒரு போதும் மாறாது. கேள்வி கேட்பவர் எந்த இடத்திலிருந்து இக்கேள்வியைக் கேட்டாலும் என் பதிலில் மாற்றமிரு…

  18. 'தெறிமாஸ்' காட்டுமா வெஸ்ட் இண்டீஸ் - சிக்ஸர் பீவர் (மினி தொடர் -5) உலகில் நடக்கும் ஐ.பி.எல் முதலான அத்தனை டி20 லீக்களிலும் 'தெறிமாஸ்' காட்டும் சிறுத்தைகள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தான் இருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு உலககோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது. கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத டானாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அதன் பின்னர் இறங்குமுகத்தையே சந்தித்தது. லாரா, கூப்பர், கெய்ல் என பல்வேறு சிறந்த வீரர்கள் அணிக்கு வந்தாலும் உலககோப்பையில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறமுடியாமல் பரிதாபமாக வெளியேறிக்கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2012 உலககோப்பையில் திடீரென விஸ்வரூபம் எடுத்தது வெஸ்ட் இண்டீ…

  19. வர்­ண­னை­யா­ள­ராகிறார் மஹேல இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரான மஹேல ஜய­வர்­தன, வர்­ண­னை­யா­ள­ராக செயற்­ப­ட­வுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம் இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­ட­வுள்­ளது. இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வர்­ண­னை­யா­ள­ராக மஹேல ஜய­வர்­தன செயற்­ப­ட­வுள்ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே வர்­ண­னை­யா­ளர்கள் குழுவில் பணி­யாற்றும் இங்­கி­லாந்து அணியின் முன்னாள் தலை­வர்கள் மற்றும் புகழ்­பெற்ற கிரிக்கெட் வர்­ண­னை­யா­ளர்­க­ளோடு மஹே­லவும் இணை­ய­வுள்ளார். தற்­போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்­ண­னை­யா­ளர்கள் குழுவில் முன்னாள் இங்­கி­லாந்து அணித் தலை­வர்­க­ளான இயன் பொத்தம், டே…

  20. ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார். நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். இலக்கினை 52.70 விநாடிகளில் கடந்த பிறகு தங்கத்தை வென்ற பின் சக நாட்டு வீராங்கனையை கட்டிப்பிடித்து சிமியோன் அழுத புகைப்படம், உலகையே உருக வைத்துள்ளது. சிமியோனின் அழுகைக்கு பின்னால் அத்தனை சோகம் அடங்கியிருக்கிறது. இந்த போட்டியில் கனடா நாட்டை சேர்ந்த வீராங்கனை இவருடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். கடந்த 1960ம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொது நீச்சல் குளங்களில் குளிக்கக் கூடாது. ப…

  21. பாகிஸ்தான் சூப்பர் லீக் கராச்சி கிங்ஸ் அணியில் குமார் சங்கக்கார. பாகிஸ்தான் சூப்பர் லீக் கராச்சி கிங்ஸ் அணியில் குமார் சங்கக்கார. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார இம்முறையும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடவுள்ளார். கராச்சி கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரராகவும், அணியின் ஆலோசகராகவும். சங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சங்ககாரவுடன் கிரிஸ் கெயிலும் இந்த அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://vilaiyattu.com/19120-2/

  22. இலங்கை அணிக்கு தொடரும் ஏமாற்றம் : இருபதுக்கு-20 தொடரில் முக்கிய இரு வீரர்கள் இல்லை! இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரிலும் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. நிரோஷன் டிக்வெல்ல கையில், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக இவர் பங்களாதேஷ் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் விளையாடமாட்டார் எனவும், இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18543

  23. லா லிகா: முதல் இடத்திற்கு ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி- வெல்வது யார்? லா லிகா தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம்பிடித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் தொடர் லா லிகா. இதில் கலந்து கொள்ளும் அணி மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம்பிடிக்கும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும். தற்போது ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையே புள்ளிகள் பட்ட…

  24. எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு: 360 டிகிரி சொல்கிறார் கிரிக்கெட்டில் தன்னுடைய எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு செய்வேன் என்று தென்ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் திகழ்ந்து வருபவர் ஏபி டி வில்லியர்ஸ். மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை பறக்கவிடும் திறமை படைத்தவராக திகழ்வதால், இவரை 360 டிகிரி என்று அழைக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த டி வில்லியர்ஸ…

  25. சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை: ரியல் மாட்ரிட் அணியை 4-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பைக்கான கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியை 4-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி. கால்பந்து அணிகளுக்கு இடையிலான முன்னணி லீக் தொடர்கள் இன்னும் ஆரம்பமாகவில்லை. இந்த தொடர்கள் நடைபெறுவதற்கு முன்பாக தற்போது அணிகளுக்கு இடையிலான சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நட்பு ரீதியான இந்த தொடரில் இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் அண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.