விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
தேசிய கால்பந்தாட்டம் – வல்வையைச் சேர்ந்த இரண்டு வீரர்களுக்கு இடம் இலங்கை சிறப்புத் தேவையுடையோர் கால்பந்தாட்ட அணிக்கு வல்வையைச் சேர்ந்த இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர்களான கர்ணன் மற்றும் மயூரன் ஆகியோரே அவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் மற்றும் அண்மையில் இடம்பெற்ற ஆட்டங்களில் சிறப்பாக செயற்பட்ட இவர்கள் இலங்கை தேசிய அணிக்கான தெரிவு குழுவின் கவனத்தை ஈர்த்திருந்தனர். http://…
-
- 0 replies
- 524 views
-
-
இறுதி வரை பரபரப்பு: இந்தியா – மேற்கிந்தியதீவு போட்டி சமநிலையில் நிறைவு! இறுதி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 321 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்கத்து 157 ஓட்டங்களை, அம்பத்தி ராயுடு 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி ஓபேட் மெக்காய், …
-
- 0 replies
- 278 views
-
-
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டியில் 10 பதங்கங்களை ஊர்காவற்றுறை யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சுவீகரித்தள்ளது. வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டி கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது. இதில் 3 முதலிடங்களையும், 4 இரண்டாமிடங்களையும், 3 மூன்றாமிடங்களையும், 5 நான்காமிடங்களையும் குறித்த பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற 10 மாணவர்கள் தேசிய மட்ட நீச்சல் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். https://thinakkural.lk/article/271004
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
உலக கோப்பை கிரிக்கெட் 'நாயகன்' 6 வருடத்துக்கு பிறகு சிறையில் இருந்து ரிலீஸ்! லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலக கோப்பை நாயகன் கிறிஸ் லீவிஸ், 6 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு இன்று விடுதலையடைந்தார். 1992ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த உலக கோப்பையின் அரையிறுதியில், தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதின. 13 பந்துகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை பெய்தது. எனவே டக்வொர்த் லீவிஸ் விதிமுறை அமலுக்கு வந்து ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்று விதிமுறை மாற்றப்பட்டது. பெரும் சர்ச்சைக்குறிய இந்த விதிமுறையால், தென் ஆப்பிரிக்கா தோற்றது. ஆனால், இங்கிலாந்துக்கோ அது கொண்டாட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணக் கல்லூரியை சென். பற்றிக்ஸ் 187 ஓட்டங்களால் வென்றது April 12, 2019 யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண்ணத்துக்கான ஆட்டத்தில் 187 ஓட்டங்களால் வென்றது சென். பற்றிக்ஸ். யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டிலக்சன் 96 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் டிகாஸ் 4 இலக்குகளையும், சிந்துயன் 3 இலக்குகளையும், கேசவன் 2 இலக்குகளையு…
-
- 0 replies
- 838 views
-
-
மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் செய்யும் சேட்டையை பாருங்கள்! (வீடியோ) பர்மிங்காம்: விளையாட்டு மைதானத்திலேயே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் பேண்டை, சக வீரர் ஜோ ரோட்ஸ் கழற்றி விட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இரண்டு தொடர்களில், இரண்டு அணிகளும் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், 3வது தொடர் பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதன்முதல் நாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 136 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது…
-
- 0 replies
- 664 views
-
-
41 ஓட்டத்தால் வீழ்ந்தது பாகிஸ்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணியளவில் டவுன்டானில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை குவித்தது. 307 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இரண்டு ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.…
-
- 0 replies
- 507 views
-
-
கடந்த 24 வருடங்களில் முதன்முறையாக ஆர்ஜென்ரீனா ஒலிம்பிக் ஹொக்கிப் போட்டிக்கான தகுதியை இழந்தது [13 - February - 2008] [Font Size - A - A - A] ஆக்லாந்தில் 6 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் தகுதி ஹொக்கி போட்டியில் ஆர்ஜென்ரீனாவைத் தோற்கடித்து ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது நியூஸிலாந்து. ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் `கோல்டன் கோல்' அடித்து வாய்ப்பைப் பெற்றுள்ளது நியூஸிலாந்து. நியூஸிலாந்தை விட உலக தரவரிசையிலும் 3 இடங்கள் முன்னிலை பெற்றுள்ள ஆர்ஜென்ரீனா கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறமுடியாமல் போயுள்ளது. மு…
-
- 0 replies
- 859 views
-
-
ஓய்வு குறித்து ஆலோசித்தது உண்மை தான்: மனம் திறந்தார் டி வில்லியர்ஸ் டி வில்லியர்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக தொடருவேன். அதேவேளையில் நான் ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்தது உண்மை தான் என்று தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டி முடிவடைந்ததும் கேப்டன் ஆம்லா தனது பதவியை ராஜினா செய்தார். இதற்கிடையே வேலைப்பளு காரணமாக டி வில்லியர்ஸ் ஓய…
-
- 0 replies
- 393 views
-
-
ஆஸ்திரேலிய அணியின் கோப்பை ஆசை கைகூடுமா? சிக்ஸர் ஃபீவர் - மினி தொடர் 7 ஐந்து ஒருதின உலகக்கோப்பையை வென்றுவிட்ட ஆஸ்திரேலிய அணியால், இன்னும் ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. கிரிக்கெட்டில் பெரும்பாலான சாதனைகளுக்கு சொந்தமான ஆஸ்திரேலிய அணியின் நிறைவேறாத ஆசை டி உலகக் கோப்பையை வெல்வதுதான். இருபது ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் சூத்திரத்தை இன்னமும் ஆஸ்திரேலிய அணியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐ.பி.எல்லாக இருந்தாலும் சரி, பிக்பாஷ் போட்டிகளாக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலிய வீரர்களின் ஆதிக்கம் எங்குமே நிறைந்திருக்கும். ஷேன் வாரன், ஸ்மித், வார்னர், வாட்சன், பெய்லி என பலர் ஐ.பி.எல்லில் அணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றனர். …
-
- 0 replies
- 678 views
-
-
பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தயக்கம் 2016-04-21 11:16:56 அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் அடிலெய்ட் விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடுவதற்கு போதிய அனுபவமில்லை என தென் ஆபிரிக்க வீரர்கள் தெரிவிப்பதுடன், அவ்வாறு விளையாடினால் அது தங்களது அணிக்கு பாதிப்பாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர். எனினும், அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்காவை விளையாட வைப்பதில் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா …
-
- 0 replies
- 526 views
-
-
அபாரமாக வென்றது பார்சிலோனா அணி லா லிகா கால்பந்து போட்டிகள் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் கிஜோன் அணியை வீழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த லீக் போட்டியில் பார்சிலோனா - ஸ்போர்டிங் கிஜோன் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி 12வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்ட முடிவில் பார்சிலோனா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் பார்சிலோனா அணியின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. அந்த அணியின் லூயிஸ் சுவாரஸ் (63, 74, 77, 88வது நிமிடம்) 4 கோல் அடித்து அசத்தினார். நெய்மர் தன் பங்கிற்கு (85வது நிமிடம்) ஒரு கோல் அட…
-
- 0 replies
- 421 views
-
-
பார்முலா 1 கார் பந்தயம் ராஸ்பெர்க் சாம்பியன் சோச்சி: ரஷ்யன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். சோச்சி நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஸ்பெர்க் 1 மணி, 32 நிமிடம், 41.997 விநாடிகளில் முதலாவதாக வந்து கோப்பையை கைப்பற்றினார். 10வது இடத்தில் இருந்து தொடங்கினாலும் அபாரமாக செயல்பட்ட சக மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் (+25.022 விநாடி) 2வது இடம் பிடித்தார். செபாஸ்டியன் வெட்டல் (பெராரி) ஓட்டிய கார் மீது டானில் க்வியாட் ஓட்டிய கார் பின்புறம் இருந்து இடித்ததால், வெட்டல் பந்தயத்தில் இருந்து துரதிர்ஷ்டவசமாக விலக நேரிட்டது. போர்ஸ் இந்தியா வீரர் நிகோ ஹல்கன்பெர்க், வில்லியம்ஸ் வீரர் வா…
-
- 0 replies
- 285 views
-
-
28 வயதான பிரிட்டன் குத்துச் சண்டடை வீரர் அன்டனி யார்ட், தனது தந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார். குறித்த தகவலை அன்டனி யார்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார். அத்துடன் அந்த பதிவில் உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/78903
-
- 0 replies
- 564 views
-
-
தோனி என் மீது வைத்த நம்பிக்கையை டெல்லி அணி வைக்கவில்லை: பவன் நேகி ஆதங்கம் பவன் நேகி வலைப்பயிற்சியில். பின்புறம் நிற்பவர் அமித் மிஸ்ரா. | படம்: ஷிவ்குமார் புஷ்பகர். 2016 ஐபிஎல் தொடரில் ரூ.8.5 கோடி தொகைக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்ட இடது கை சுழற்பந்து வீச்சாளர்/ஆல்ரவுண்டர் பவன் நேகி தனது திறமைகள் மீது தோனி வைத்த நம்பிக்கையை டெல்லி அணி வைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், கேப்டன் ஜாகீர் கான் என்பது குறிப்பிடத்தக்கது. 14 போட்டிகளில் 8 ஆட்டங்களில் மட்டுமே பவன் நேகி ஆடியுள்ளார். அதில் 9 ஓவர்களை மட்டுமே அவர் வீசியுள்ளார். இதனால் தன்னை சரியாகப் பயன்படுத்தவில்லை என்…
-
- 0 replies
- 461 views
-
-
ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரரின் கால் முறிவு: அதிர்ச்சி வீடியோ. ரியோ: ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொண்ட பிரான்ஸ் வீரரின் கால் முறிந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்ட பிரான்ஸ் வீரர் ஒருவரின் கால் முறிந்து பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. - தற்ஸ் தமிழ் -
-
- 0 replies
- 278 views
-
-
பார்சிலோனா குழந்தைகள் பயிற்சி அகாடமியில் மெஸ்ஸியின் மகன் தியாகோ படம்: ஏ.எஃப்.பி. ஃபுட்பால் கிளப் பார்சிலோனாவின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு தொடர்பான பயிற்சி ஆரம்பப்பள்ளியில் அர்ஜெண்டின நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி தனது மகன் தியாகோவை சேர்க்க முடிவெடுத்துள்ளார். எஃப்சிபிஇஸ்கோலா என்ற 6 வயது முதல் 18 வயது வரையிலான ஆடவருக்கும் பெண்களுக்கும் ஏற்கெனவே ஒட்டுமொத்த பயிற்சி அளித்து வருகிறது. இதன் பைலட் திட்டம்தான் தற்போது குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி. பார்சிலோனா முதல் அணியின் வீரர்களின் குழந்தைகளுக்கென்றே இந்தப் பயிற்சிப் பள்ளி பிரதானமாக திறக்கப்படுகிறது, இதில் முதல் பெயராக லயோனல் மெஸ்ஸி மகன் பெயர் தியாக…
-
- 0 replies
- 432 views
-
-
பிபா தரவரிசை: முதல் இடத்துடன் 2016-ஐ நிறைவு செய்தது அர்ஜென்டினா பிபா கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா 2016-ம் ஆண்டை முதல் இடத்துடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரேசில் 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலியிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்த அர்ஜென்டினா, இந்த வருடம் முடிவில் முதல் இடத்தோடு நிறைவு செய்துள்ளது. அர்ஜென்டினா இந்த ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடி 10-ல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டியில் தோல்வியும், இரண்டு போட்டிகளை டிராவும் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியத்திடம் இருந்து முதல் இடத்தை பற…
-
- 0 replies
- 333 views
-
-
அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம் - ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஷரபோவா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். வாஷிங்டன்: ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லிய…
-
- 0 replies
- 303 views
-
-
இரானுக்கு எதிராக 2-வது கோலை சிரியா அடித்த போது உணர்ச்சிவசப்பட்டு அழுத சிரியா வர்ணனையாளர் சிரியா நாட்டு கால்பந்து ரசிகர்கள். - படம். | ஏ.எஃப்.பி. உலகக்கோப்பை 2018-க்கான தகுதிச்சுற்றுக் கால்பந்து போட்டியில் 93-வது நிமிடத்தில் ஈரானுக்கு எதிராக அந்த 2-வது கோலை சிரியா அடித்து சமன் செய்த தருணத்தில் சிரியா நாட்டைச் சேர்ந்த வர்ணனையாளர் உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சி வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சுமார் 10 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது இவரது உணரர்ச்சிகரம். சிரியா வீரர் அல் சோமா 93-வது நிமிடத்தில் அடித்த கோலால் இரானுக்கு எதிராக 2-2 என்று டிரா சாத்தியமானதோடு, ஆசிய பிளே ஆஃப் சுற்றுக்கும்…
-
- 0 replies
- 327 views
-
-
விராட் கோலி அதிகம் உணர்ச்சிவயப்படுகிறார்: ஷாகித் அப்ரீடி இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராட் கோலி அதிகம் உணர்ச்சிவசப்படுவராகத் திகழ்கிறார். கேப்டன் பொறுப்பை கையாள அவருக்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார். தோனி விட்டுச் சென்ற வெற்றிடத்தை கோலி நிரப்ப இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும் என்று தொலைக்காட்சி சானல் ஒன்றில் அப்ரீடி தெரிவித்துள்ளார். “தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்ததை கேள்விப்பட்டு கடும் ஏமாற்றமடைந்தேன், ஏனெனில் அவர் ஒரு போராடும் குணம் படைத்தவர், இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய தலைவராக அவர் திகழ்ந்துள்ளார். அந்த அணியை பலமுறை முன்னே நின்று வழிநடத்திச் சென்றுள்ளார்…
-
- 0 replies
- 733 views
-
-
இலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி October 18, 2018 1 Min Read பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. மழை காரணமாக போட்டி 21 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயசெய்யப்பட்ட 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து, 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்று வெற்ற…
-
- 0 replies
- 257 views
-
-
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பழுதூக்கும் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் இந்தப் பழுதூக்கும் போட்டி இடம்பெற்றது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் டரில் ஸ்டீபன் 18 வயதுக்குட்பட்ட 74 கிலோ எடைப்பிரிவில் 155 கிலோவைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றதோடு, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் செல்வராஜா அக்ஸயன் 20 வயதுக்குட்பட்ட 59 எடைப் பிரிவில், 110 கிலோ எடையினை தூக்கி தங்க பதக்கத்தை வென்றுள்ளார். https://thinakkural.lk/article/271007
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
மாகாண மட்ட துடுப்பாட்டப் போட்டி வடக்கு கிழக்கு மாகாண அணிக்கு யாழ்.மாவட்ட வீரர் ஐவர் தெரிவு மாகாண மட்டத்தில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை யின் அனுசரணையுடன் நடத்தப் படவுள்ள துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்துகொள் வதற்கு வடக்கு கிழக்கு மாகாண அணியில் யாழ். மாவட்ட வீரர்கள் ஐவர் தெரிவாகியுள்ளனர். ஆர்.ஏபிரகாம் பிரசாத் (யாழ். மத்திய கல்லூரி), ப.நேசவர்மன் (பரி யோவான் கல்லூரி), வோ. இ.ஜக்ஸன்(சென் பற்றிக்ஸ் கல்லூரி), எஸ். வினோத்(மானிப்பாய் இந்துக் கல்லூரி), எம்.அமரதீசன் (யாழ்ப் பாணக் கல்லூரி) ஆகி யோரே இந்த அணிக்குத் தெரிவாகியுள்ளனர். இவர்கள் போட்டி களில் பங்குபற்றுவதற்கு கடந்த 23ஆம் திகதி கண் டிக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்குப் பொறுப்பாக ரி.ஜெக நாதன் கடமையாற்றுகின்றார். 20 வயதி…
-
- 0 replies
- 857 views
-
-
தென்னாப்ப்ரிக்காவின் குவிண்டன் டி காக் உலகின் தலைசிறந்த ஒருநாள், டி-20 மட்டையாளர்களில் ஒருவர். இந்த 2023 உலகக்கோப்பையில் அவர் தொடர்ச்சியாக மூன்று சதங்களை அளித்திருக்கிறார். மிகச்சிறந்த ஆட்டநிலையில் உள்ள அவர் இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டின் நெருக்கடி, குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமையை காரணங்களாக அவர் குறிப்பிட்டாலும் உலக அளவில் நடக்கும் டி-20 தனியார் ஆட்டத்தொடர்களில் ஆடும் விருப்பமும், அதனால் கிடைக்கும் பெருஞ்செல்வமும் ஏற்படும் நேரமின்மையுமே இந்த துரித ஓய்வுக்கு நிஜக்காரணம் என்பது வெளிப்படையானது. ஏற்கனவே இந்த டி-20 கூட்டநெரிசலில் மே.இ அணியின் கணிசமான நட்சத்திர வீரர்கள் தம் நாட்டுக்காக ஆடுவதில்ல என முடிவெடுத்ததில் அந…
-
- 0 replies
- 432 views
- 1 follower
-