விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்: ஆன்டி ராபர்ட்ஸ் பாராட்டு இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து விச்சாளர் உமேஷ் யாதவ்தான் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் அச்சுறுத்தல் வேகப்பந்து விச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். டிசம்பர் 1975-76-ல் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகளுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆன்டி ராபர்ட்ஸ். | கோப்புப் படம். பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராபர்ட்ஸ் கூறும்போது, "உமேஷ் யாதவ் என்னை மிகவும் கவர்கிறார். இந்தியாவின் முதல் உண்மையான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்தான். இவருக்கு முன்பாக இந்தியாவில் உண்மையான வேகம் வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததாக நான் கருதவில்லை. மொகமது ஷமியும் நன்றாக வீ…
-
- 0 replies
- 432 views
-
-
151 கால கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் 501 ரன்கள் குவித்து புதிய சாதனை! கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ஒரு ஜோடி 501 ரன்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில், லாங்ஷயர் கிரிக்கெட் அணியும் கிளமார்கன் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய லாங்ஷயர் அணி 698 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தென்ஆப்ரிக்க வீரர்கள் பீட்டர்சன் 286 ரன்களையும் ஆஷ்வெல் பிரின்ஸ் 261 ரன்களையும் எடுத்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 501 ரன்கள் சேர்த்தது. இது கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜோடி அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். 151 கால வரலாற்றில் ஒரு ஜோடி 500 ரன்களை கடப்பதும் இதுவே முதல் …
-
- 0 replies
- 911 views
-
-
மஹானாமவின் பதவி ரிச்சி ரிச்சார்ட்சன் வசம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரோஷான் மஹானாம ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். அவரது பதவிக்காலம் இந்த வருடத்தின் இறுதியில் முடிவடைகிறது. இதனால், அவருக்குப் பதிலான ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் ரிச்சி ரிச்சார்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தற்போது ரிச்சார்ட்சன் மேற்கிந்திய தீவுகள் அணியின் மானேஜர் பதவியில் இருக்கிறார். இந்த பதவி அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெறும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் முடிவடைகிறது. அதன்பின் ஐ.சி.சி.யின் நடுவர் பதவியை ஏற்றுக்கொள்வார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 314 views
-
-
ஆங்கிலேய கிரிக்கெட் லீக் அனுபவத்திற்கு நன்றி கூறுகின்றார் குசல் மெண்டிஸ் "டெஸ்ட் கிரிக்கெட்டில் போதிய அனுபவமோ, ஏ அணியுடனான வெளிநாட்டு விஜயமோ, உள்ளூர் கழகத் தலைமைத்துவமோ குசல் மெண்டிஸுக்கு இதற்கு முன்னர் கிடைத்ததில்லை. ஆனாலும் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் பற்றிப் பிடித்துக்கொள்ளத் தவறியதில்லை. அதுதான் அவரது திறமை வெளிப்படுவதற்கு காரணமாகும். இங்கிலாந்தில் தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய குசல் மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸில் குவித்த அரைச்சதம் டெஸ்ட் அரங்கில் அவ ரது கன்னி அரைச் சதமாகப் பதிவானது. …
-
- 0 replies
- 406 views
-
-
முதல் இடத்தை பிடிக்க இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையே கடும் போட்டி! ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா 118 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 108 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. தற்போது இந்த நான்கு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தபின் டெஸ்ட் தர வரிசை வெளியிடப்படும். இதில் முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா அவ்விடத்தை தக்கவைக்க தீவிர முயற்சி மேற்கொள்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான், இலங்கிலாந்து, இந்தியா அந்த பதவியை பறிக்க முயற்சி செய்கிறது. எது நடக்கிறது என்று டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர்…
-
- 0 replies
- 292 views
-
-
அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை குழாம் தென்னாபிரிக்கா நோக்கிப் பயணம் நான்கு வருடங்களுக்கு பின்னர் கிரிக்கெட் தொடரொன்றுக்காக அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று தென்னாபிரிக்கா நோக்கிப் பயணமானது. தென்னாபிரிக்காவில் 03 டெஸ்ட் 05 ஒரு நாள் மற்றும் 03 இருபதுக்கு இருபது போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணியை வழியனுப்பும் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த 12 பேர் கொண்ட இலங்கை குழாமில் பி.ஆர்.சீ விளையாட்டுக்கழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய பண்டாரவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்களான ரங்கன ஹேரத், உபுல் தரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளதோட…
-
- 0 replies
- 222 views
-
-
ஸ்மித், கோஹ்லியின் செயற்பாடுகளுக்கு ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்காதது ஏன்? : குற்றம் சுமத்துகிறார் டுபிளசிஸ்! சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தென்னாபிரிக்க அணி வீரர் டுபிளசிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெற்றுவருகின்றது. இதன்போது இந்திய அணித் தலைவரும் அவுஸ்திரேலிய அணித் தலைவரும் நடந்துக்கொண்ட விதம் தொடர்பில் ஊடகங்கள் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வந்தன. எனினும் இது தொடர்பில் ஆராய்ந்த ஐ.சி.சி. எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதேவேளை அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது டுபிளசிஸ் பந்தை சேதப்பட…
-
- 0 replies
- 250 views
-
-
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்ற முடியாது : தற்போதைய நிலைமைக்கு நான் என்ன செய்ய முடியும்? : தயாசிறி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்றுவது என்பது அடிப்படையற்றது. கடந்த எட்டு வருடங்களாக இலங்கையில் இடைக்கால நிர்வாக சபையே காணப்பட்டது. நான்வந்த பின்னர் தான் தேர்தல் நடத்தி ஒருவரை தெரிவு செய்தேன். அந்த தேர்தலில் அர்ஜுன ரணதுங்க போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியடைந்துவிட்டார். இனி மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக்கு எம்மால் செல்ல முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் நிர்வாக மற்றும் தொழிற்பாட்டு பதவிகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட தரப்…
-
- 0 replies
- 248 views
-
-
ஹெராத் 400 விக்கெட் சாதனையும், சங்கக்காராவினால் மீண்ட கதையும்! ஹெராத், சங்கக்காரா. - கோப்புப் படம். | ஏ.எஃப்.பி. அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை குறைந்த வெற்றி இலக்கையும் எடுக்க விடாமல் நசுக்கிய இலங்கை இடது கை வீச்சாளர் ரங்கனா ஹெராத், உலகிலேயே முதன் முதலாக 400 விக்கெட் மைல்கல்லை எட்டிய இடது கை சுழற்பந்து வீச்சாளரானார். மேலும் அபுதாபியில் பாகிஸ்தானை வீழ்த்திய முதல் அணி இலங்கை என்ற பெருமையையும் சேர்த்தார் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த ரங்கனா ஹெராத். இலங்கை அணி முரளிதரன் ஓய்வுக்குப் பிறகே பெற்ற வெற்றிகளில் ஹெராத் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளார்,…
-
- 0 replies
- 431 views
-
-
ஜிம்பாப்வேயை வென்றது தென் ஆப்பிரிக்கா ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 92.4 ஓவர்களில் 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 158.3 ஓவர்களில் 397 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் டூபிளெஸ்ஸிஸ் 98, டி காக் 81 ரன்கள் எடுத்தனர். பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்…
-
- 0 replies
- 347 views
-
-
இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரராக டோனி சாதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின் போது 34 பந்தில் டோனி 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இந்த போட்டியில் ஓட்டங்கைளக் குவித்ததன் மூலம் டோனி இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். http://globaltamilnews.net/2018/76583/
-
- 0 replies
- 623 views
-
-
கீழே விழுந்து பந்தை பிடிக்க இந்திய அணி வீரர்கள் யோசிக்கிறார்கள்: ஜான்டி ரோட்ஸ் கருத்து தென்னாப்பிரிக்க அணி வீரர்களுடன் ஒப்பிடுகையில் கிரிக்கெட் ஆட்டத்தின் போது இந்திய அணி வீரர்கள் கீழே விழுந்து பந்தை தடுக்க யோசிக்கிறார்கள் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிறந்த ஃபீல்டருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார். கோவை ஜி.ஆர்.டி. அறிவியல் கல்லூரியில் ஜான்டி ரோட்ஸுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்டி ரோட்ஸிடம் மாணவர்கள் கேள்வி கேட்டனர். அவர்களுக்கு பதில் அளித்து ஜான்டி ரோட்ஸ் பேசியதாவது: இந்திய அணியில் தற்போது சிறந்த ஃபீல்டர் என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்? தற்போதைய இந்திய அணியில் நான் பார்த்த வகையில்…
-
- 0 replies
- 410 views
-
-
ஒரே போட்டியில் 5 ‘சேம் சைடு’ கோல் நவம்பர் 03, 2014. உள்ளூர் கால்பந்து போட்டியில் ஐந்து ‘சேம் சைடு’ கோல்கள் அடித்தது வியப்பாக உள்ளது. பொதுவாக கால்பந்து போட்டிகளில் ‘சேம் சைடு’ கோல் அடிப்பவர்களை, சொந்த ரசிகர்கள் கொடூரமான எதிரியாக பார்ப்பர். 1994 உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக இப்படிச் செய்த, கொலம்பிய வீரர் எஸ்கோபர், ரசிகர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சூழலில் இந்தோனேசியாவில் நடந்த பிரிமியர் டிவிசன் கால்பந்து லீக் போட்டியில் அதிகமாக ‘சேம் சைடு’ கோல்கள் அடிக்கப்பட்டன. செமராங், சிலிமேன் அணிகள் மோதிய இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதியில் போர்னியோ அணியை சந்திக்க வேண்டும். இந்த அணிக்கு ‘தாதாக்கள்’ ஆதரவு இருப்பத…
-
- 0 replies
- 502 views
-
-
40 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய துரதிர்ஷ்டசாலி யார் தெரியுமா....? பெங்களூரு: 40 ஆண்டு கால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய துரதிரஷ்டசாலி என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரஹாம் கூச்சைக் கூறலாம். காரணம், அவரது வரலாறு அப்படி. உலக கிரிக்கெட் அணிகளிலேயே இங்கிலாந்து அணியைப் போல சோக வரலாறு கொண்டது எதுவும் இருக்க முடியாது. கிரிக்கெட்டின் தாயகமாக கூறப்படுவது இங்கிலாந்து. ஆனால் இந்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. மேலும் உலககக் கோப்பை வரலாற்றில் 3 முறை இறுதிப் போட்டியில் தோல்வி கண்ட ஒரே அணி இங்கிலாந்துதான். அந்த மூன்று இறுதிப் போட்டியிலும் கிரஹாம் கூச்சும் ஆடியுள்ளார். இதுதான் மிகப் பெரிய சோகம். 1979 இறுதிப் போட்ட…
-
- 0 replies
- 482 views
-
-
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட: இலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கு! இலங்கை மற்றும் நியூசிலாந்;து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, 660 என்ற வெற்றி இலக்கை நோக்கி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இலங்கை அணி, ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில் குசல் மெண்டிஸ் 6 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 14 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். கிறிஸ்ட்சேர்ச்சில் நேற்று முன் தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இலங்கை வேகப்பந்து வீச்ச…
-
- 0 replies
- 494 views
-
-
சர்வதேச ஒலிம்பிக் குழுவிலிருந்து விலகுகிறார் பிளட்டர் 2015-08-05 10:48:54 சர்வதேச ஒலிம்பிக் குழுவில் 16 வருடங்களாக உறுப்பினராக இருந்து வந்த செப் பிளட்டர் அப்பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளார். சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத் தலைவர் பதவியிலிருந்தும் விலகவுள்ள செப் பிளட்டரின் விளையாட்டுத்துறை சார் நிர்வாகப் பணி விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. எவ்வாறாயினும் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம் மேளனத்தில் நிலவும் சர்ச்சை களுக்கும் பிளட்டரின் தீர்மானத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஒலிம்பிக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் 80 வ…
-
- 0 replies
- 337 views
-
-
கேரளாவில் சச்சின் பெயரில் கிரிக்கெட் ஸ்டேடியம்! கேரளாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு சச்சின் தெண்டுல்கர் பெயர் சூட்டப்படவுள்ளது. இது குறித்து கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர் மேத்யூ கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில், வீரர்கள் பெவிலியனுக்கு ஏற்கனவே சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது வயநாட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த மைதானத்திற்கோ அல்லது கேரள கிரிக்கெட் சங்கத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள புதிய ஸ்டேடியத்துக்கோ சச்சின் பெயர் சூட்டப்படும் . இது தொடர்பாக சச்சினிடமும் பேசி முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார். வயநாட்டில் இயற்கை எழில் …
-
- 0 replies
- 354 views
-
-
எந்த அணியையும் எங்கு வேண்டுமானாலும் எதிர்கொள்ள இந்திய டி20 அணி தயார்: தோனி தோனி. | பிடிஐ. கடந்த 10 டி20 போட்டிகளில் இலங்கையுடன் ஏற்பட்ட புனே தோல்வி நீங்கலாக மீதி போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி எந்த நாட்டில் எந்த அணியை வேண்டுமானாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக கேப்டன் தோனி பெருமிதமாக தெரிவித்தார். நேற்று ஆசியக் கோப்பையில் யு.ஏ.இ. அணியை வீழ்த்திய பிறகு தோனி கூறும்போது, “எந்த அணியையும் எங்கு வேண்டுமானாலும் சந்திக்கத் தயார்” என்றார். “இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்த இந்திய அணி எந்த ஒரு சூழ்நிலைகளிலும் விளையாட தயாரான அணியாகவே உள்ளது. நாம் 50 ஓவர் கிரிக்கெட் பற்றி இப்போது பேச வேண்டாம். இந்த டி20 அணியைக் கொண்டு உலகில் எங்க…
-
- 0 replies
- 310 views
-
-
விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்! (கடைசி நிமிட வீடியோ) மாற்று போட்டியாளராக களமிறங்கும் பேட்ரிக் கேமரூன் நாட்டை சேர்ந்த கால்பந்து நடுகள வீரர் பேட்ரிக் எகெங், தனது அணிக்காக விளையாடிய போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து, பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டினாமோ புக்காரெஸ்ட் அணியை சேர்ந்த கால்பந்து வீரர் பேட்ரிக் எகெங் (26). இவர், வீடொரல் கான்ஸ்டன்டா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், தனது அணி சார்பில் 62வது நிமிடத்தில் மாற்று போட்டியாளராக களமிறங்கினார். மைதானத்திலேயே சுருண்டு விழுந்த பேட்ரிக் ஆனால் …
-
- 0 replies
- 657 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஜப்பானின் டோக்கியோவில் இந்த வருடம் ஜூலை 24-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகக்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால் அடுத்த வருடம் ஜூலை 23-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடம் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் வகையில் அதற்கான தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வந்தன. தற்போது அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கு …
-
- 0 replies
- 673 views
-
-
தன் பந்துவீச்சில் கடுமையாகக் காயப்படுத்த விரும்பிய வீரர் யார்? ஷோயப் அக்தர் ருசிகரம் அக்தர். - கோப்புப் படம். | வி.வி.கிருஷ்ணன். ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தன் உச்ச பந்து வீச்சுக் காலக்கட்டத்தில் பலவீரர்களை தன் அதிவேக பந்துகளில் காயப்படுத்தியுள்ளார். ஜஸ்டின் லாங்கர், மைக்கேல் ஸ்லேட்டர், பாண்டிங், டேமியன் மார்டின், கங்குலி, கயீஃப், லஷ்மண் உட்பட பல வீரர்களை தன் பந்து வீச்சில் காயமடையச் செய்துள்ளார் ஷோயப் அக்தர். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இது பற்றிக் கூறும்போது, சுமார் 19 பேட்ஸ்மென்களை காயப்படு…
-
- 0 replies
- 273 views
-
-
முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வத்லுவிஸ் முறைப்படி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிது ஹசரங்க 3 விக்கெட்களையும் சாமிக, பினுர மற்றும் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்க…
-
- 0 replies
- 292 views
-
-
காலிறுதிக்குள் நுழைந்தது யாழ் மத்திய கல்லூரி அணி சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் பிரிவு 3 (டிவிஷன் – III) பாடசாலைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிக்கான அணிகளைத் தெரிவு செய்யும் ஆட்டமொன்றில் (Pre-Quarter Finals) ஜா-எல கிறிஸ்துவரசர் கல்லூரியினை யாழ். மத்திய கல்லூரி 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, காலிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றது. தீர்மானமிக்க 50 ஓவர்களினைக் கொண்ட இந்தப் போட்டியானது இன்று (21) யாழ். மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கிறிஸ்துவரசர் கல்லூரியின் தலைவர் தனன்ஞய பெர்னாந்து முதலில் …
-
- 0 replies
- 318 views
-
-
104 நாடுகளுக்கு இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க முடிவு இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆண்கள் அணிகளுக்கு, இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. கொல்கத்தாவில் நடந்து வருகின்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயற்குழுக் கூட்டத்தில், கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 12 முழுநேர உறுப்பு நாடுகளைத் தவிர, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து, ஹொங்கொங், ஐக்கிய அரபு ராச்சியம் , ஓமான், நேபாளம் என, 18 நாடுகளுக்கு இருபதுக்கு…
-
- 0 replies
- 612 views
-
-
கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தப்போகின்றேன்- ஹேரத் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்சில் ஆறு விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்த பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அணியை வெல்வதும் அந்த அணியுடனான தொடரை வெல்வதும் சிறப்பான விடயம் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசினார்கள் என தெரிவித்துள்ள ஹே…
-
- 0 replies
- 240 views
-