விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
உலக கிரிக்கெட் வரலாற்றில் கறுப்பு நாள் இன்று உலக கிரிக்கெட் வரலாற்றில் கறுப்பு நாள் என்று அழைக்கப்படும் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் கடந்துள்ளன. இலங்கை கிரிக்கெட்டு அணி மீது கடந்த 2009-03-3 ஆம் திகதியன்று பாகிஸ்தானில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதியன்று பாக்கிஸ்தான் லாகூர் நகரில் கடாபி விளையாட்டரங்கில் இரண்டாவது டெஸ்ட் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாள் விளையாட்டில் கலந்துகொள்வதற்காக மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை அணியின் பஸ் வண்டியின் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை…
-
- 0 replies
- 540 views
-
-
குப்திலை முந்திய டில்ஷான் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் 2ஆவது இடத்துக்கு (1676 ஓட்டங்கள்) முன்னேறியுள்ளார். நியூஸிலாந்து வீரர்கள் பிரெண்டன் மெக்கல்லம் (2140 ஓட்டங்கள்) முதலிடத்திலும், மார்டின் குப்தில் (1666 ஓட்டங்கள்) 3ஆவது இடத்திலும் உள்ளனர். மேலும், இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ள மெக்கலத்தை (199 பவுண்டரிகள்) டில்ஷான் சமன் செய் துள்ளார். இந்த ஆண்டில் விளையாடியுள்ள 7 இருபதுக்கு 20 இன்னிங்ஸ்களில் டில்ஷானின் சராசரி ஓட்டக் குவிப்பு 12.28 ம…
-
- 0 replies
- 613 views
-
-
நியூசிலாந்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ் மரணம் நியூசிலாந்து: நியூசிலாந்து அணியின் முன்னார் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 53. 1980 முதல் 1996 வரை நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார் மார்ட்டின் குரோவ். ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பிராட்மேன் என்றால், நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ்தான். 77 டெஸ்ட், 143 ஒருநாள் போட்டிகளில் குரோவ் ஆடியுள்ளார். அவருக்கு மனைவியும், 2 வளர்ப்பு பிள்ளைகளும் உள்ளனர். Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/former-new-zealand-captain-martin-crowe-dies-aged-53-248151.html
-
- 6 replies
- 1.1k views
-
-
மைக்கல் பிளாட்டினி மீண்டும் மேன்முறையீடு March 02, 2016 சர்வதேச கால்பந்து சபையில் இடம்பெற்ற ஊழல் விவகாரத்தில் ஆறு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவர் மைக்கல் பிளாட்டினி விளையாட்டுக்களுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்துள்ளார். இந்த தகவலை சுவிஸை சார்ந்த விளையாட்டு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. இது குறித்து விளையாட்டுக்களுக்கான நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கால்பந்து தொடர்பான நடவடிக்கைகளில் பங்கு பெறுதலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்வதற்கு பிளாட்டினி முற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கால்பந்து சபைத் தலைவர் மைக்…
-
- 1 reply
- 383 views
-
-
சிரேஷ்ட வீரர்கள் பிரகாசிக்கவில்லை ஆசியக் கிண்ணப் போட்டிகளில், இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாகப் பிரகாசிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள இலங்கை இருபதுக்கு-20 அணியின் தற்காலிகத் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாகப் பிரகாசிக்கவில்லையெனில், இலங்கை அணி தடுமாறுமெனத் தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கும் இந்திய அணிக்குமிடையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் தோல்வியடைந்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இப்போட்டியில், ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய இலங்கை, இறுதி நேரத்தில் பின்வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. இந…
-
- 1 reply
- 430 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு திரட்ட நாடு முழுவதும் வீதிவலம் வரவுள்ள சியெட் ´ஜய வே ஸ்ரீலங்கா´ எனும் தொனிப்பொருளில் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் தமது வாழ்த்தினை தெரிவிக்கும் வகையில் பிரசாரம் இலங்கையை உள்ளடக்கிய இந்திய உபகண்டத்தில் கிரிக்கெட் மோகம் அதிகரித்து வருகின்ற நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியை மேலும் உற்சாகப்படுத்தும் பணியை சியெட் தொடங்கியுள்ளது. முன்னணி டயர் வர்த்தக முத்திரையான சியெட் நாட்டின் கிரிக்கெட் அணிக்குப் பின்னால் ரசிகர்களை ஒன்று திரட்டும் ஒரு உன்னதமான பணியைத் தொடங்கியுள்ளது. சர்வதேச 20க்கு 20 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இந்த பிரசாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் எட்டாம் திகதி இந்தப…
-
- 4 replies
- 457 views
-
-
IPL ஒளிபரப்பும் உரிமத்தை பெற்றது ரூபவாஹிணி March 01, 2016 ஆறாவது உலகக்கிண்ண ‘டுவெண்டி-20′ போட்டி முதல் எதிர்வரும் நான்கு வருடங்களுக்கான சர்வதேச கிரிக்கட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹிணி பெற்றுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் 3 ஆம் திகதிவரை இந்தியாவில் நடைபெறவுள்ள ஆறாவது உலகக்கிண்ண ‘டுவெண்டி-20′ தொடர், ஐ.சி.சி. சம்பியன் கிண்ண போட்டிகள், மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி, 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகளையும் ஒளிபரப்பும் உரிமத்தை ரூபவாஹிணி பெற்றுக் கொண்டுள்ளது. இந்த போட்டிகள் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நேரடியா…
-
- 1 reply
- 384 views
-
-
டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்பு: சேவாக் கருத்து சேவாக். | படம்: பிடிஐ. உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் சேர்க்கையாக இந்திய அணி இருப்பதால் வரவிருக்கும் உலகக் கோப்பை டி20 போட்டியில் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே சாதக சூழ்நிலைகள் உள்ளன என்று அதிரடி வீரர் சேவாக் கூறியுள்ளார். 92.7 பிக் கிரிக்கெட் ஹெட்குவாட்டர் அறிமுக விழாவின் போது சேவாக் இதனைத் தெரிவித்தார். உலகக்கோப்பை டி20 போட்டிகளின் போது இவர் நேயர்களின் கிரிக்கெட் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார். “நான் ஒரு கிரிக்கெட் நிபுணர் இப்போது. மைதானத்தில் நடப்பதை நேயர்களுக்கு விளக்கப்போகிறேன். வீரர்களின் காலைவாருவதும் நடக்கும்” என்று அவர் சற்றே நகைச்சுவை ததும்ப தெரிவித்தார்…
-
- 0 replies
- 324 views
-
-
சர்ச்சைக்குரிய கோலின் உதவியுடன் செல்சி வெற்றி இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளில், செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் செல்சி, எவேர்ட்டன், ஏ.எப்.சி போர்ன்மெத் அணிகள் வெற்றிபெற்றன. செல்சி அணிக்கும் நோர்விச் சிற்றி அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில், முதலாவது நிமிடத்திலேயே செல்சியின் கெனெடி பெற்றுக் கொடுத்த கோலின் உதவியுடன், செல்சி அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்தும் அவ்வணி சிறப்பாக விளையாடிய போதிலும், முதலாவது பாதியின் இறுதியில் சர்ச்சைக்குரிய விதத்திலேயே கோலொன்றைப் பெற்றது. செல்சியின் டியகோ கொஸ்டா, ஓப்-சைட் பகுதியிலிருந்து வந்து, கோலொன்றைப் பெற்றார். அந்தக் கோலை, ஓப்-சைட் கோல் என போ…
-
- 0 replies
- 453 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி சந்தேகத்தில் உலக இருபதுக்கு-20 தொடரில், இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையில், தர்மசாலாவில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள போட்டி, அங்கு இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்துக்கு, ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் எழுதியுள்ளதாகக் கூறப்படும் கடிதத்தாலேயே இச்சந்தேகம் எழுந்துள்ளது. பதன்கொட் விமானத் தரிப்புப் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படும் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து, தர்மசாலாவில் அப்போட்டி இடம்பெறக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். பதன்கொட் தாக்குதல் போல பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந…
-
- 0 replies
- 374 views
-
-
இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்குக் கிடுக்குப்பிடி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடுமையான அழுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் சபையில், 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாகவே இவ்வழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலிய ஆகியன இணைந்து, சர்வதேச கிரிக்கெட் சபையில் அதிக அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில், அதில், அப்போதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைத் தலைவர் கைல்ஸ் கிளார்க்கின் பங்கு தொடர்பாகவே ஆராயப்படுகிறது. இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு, இவ்வாண்டு இறுதியில் நாடாளுமன்றத்துக்கு கிளார்க் அழைக்கப்பட்டுள்ள நிலையில்,…
-
- 0 replies
- 305 views
-
-
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் மலேசியாவில் இடம் பெற உள்ள மலேசிய அணியுடனான (Minor team- Sri Lanka tour of Malasia) போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சகலதுறை ஆட்டக்காரர் ஆன இவர் பல தடவை தனது திறமையை வெளிப்படுத்தி 2012ம் ஆண்டு சிங்கப்பூர் அணியுடனான ஒருமைப்பாடு போட்டியிலும் மற்றும் இலங்கை A அணி, இலங்கை பிரிமியர் லீக் போட்டியில் கந்துறட்ட மரூண்ஸ் அணிக்காகவும் சம்பியன்ஸ் லீக் போடியில் அதே அணியிலும் 2013 ம் ஆண்டு இடம் பெற்றிருந்தார். http://ww…
-
- 1 reply
- 482 views
-
-
செய்தித்துளிகள்.. மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் பாதிக்கு மேலானோர் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் டி 20 லீக் போட்டியில் விளையாடி உள்ளனர். இவர்கள் ஒரே அணியாக இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் டி 20 உலகக்கோப்பையை வெல்வோம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சு ஆலோசகர் அம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார். -------------------------------------- கோலாலம்பூரில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 0-3 என்ற கணக்கில் நைஜிரியாவிடம் தோல்வியடைந்தது. அதேவேளையில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்திய 4வது சுற்றுக்கு முன்னேறியது. --…
-
- 0 replies
- 353 views
-
-
பைத்தியத்தை கேப்டனாக வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியாது: அப்ரிடியை விமர்சித்த நடிகை! கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடியை பைத்தியம் என அந்நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச் கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷில் நடந்து வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் லீக் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இந்த போட்டியை டிவியில் பார்த்து, ஆத்திரமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் டிவியை அடித்து உடைத்தனர். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும், கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதோடு, பல்வேறு இடங்களில் கொடும்பாவிகளையும் எரித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் அப…
-
- 0 replies
- 549 views
-
-
பந்தை மைதானத்துக்கு வெளியே அடிக்க 2 மில்லியன் டாலர்கள் என்றால்... : ஸ்டெய்ன் கவலை டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.பி. கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு அழியும் போக்கில் சென்று கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ள டேல் ஸ்டெய்ன் ஐபிஎல் ரக கிரிக்கெட்டில் பேட்டிங் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வளர்க்கப்படுவது பற்றி அச்சம் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் மன்த்லி பத்திரிகைக்கு அவர் அளித்து நாளை முழுதாக வெளியாகும் பேட்டியில் அவர் இது பற்றி கூறியதாவது: “160கிமீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர்கள் தேவை. 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் பிட்சில் 150கிமீ வேகம் வீசி விக்கெட்டுகளைக் கைப்பற…
-
- 0 replies
- 379 views
-
-
ஐபிஎல்: டெல்லி டேர் டெவில்ஸ் அறிவுரையாளராக திராவிட் நியமனம் ராகுல் திராவிட். | வி.ஸ்ரீநிவாச மூர்த்தி. இந்திய அண்டர் 19 அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற ராகுல் திராவிட், டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் சிறப்பு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவருடன் ராகுல் திராவிட் தற்போது இணைந்து பணியாற்றவிருக்கிறார். முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பிரவீண் ஆம்ரே (பேட்டிங் பயிற்சியாளர்கள்), முன்னாள் தமிழக வீரரும் டெல்லி அணியின் பவுலிங் ஆலோசகருமான டி.ஏ.சேகர் ஆகியோருடன் திராவிட் இணைந்து பணியாற்றவிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அண…
-
- 0 replies
- 304 views
-
-
இலங்கை – ஜேர்மனி நட்புறவு கால்பந்தாட்டம் 2016-03-01 10:21:01 (நெவில் அன்தனி) இலங்கைக்கு வருகைதந்த ஜேர்மனியின் ப்ரோமெட்லின்க் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரிகளும் இணைந்து இலங்கையின் முன்னாள் வீரர்களைக் கொண்ட அணியினருடன் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடினர். தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார். இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப் போட்டியில் ஜேர்மன் தூதரகத்தின் பிரதி தூதுவர் மைக்கல் டோர்மனும் பங்குபற்றி சிறப்பித்தார்.…
-
- 0 replies
- 419 views
-
-
இலங்கையின் தோல்வி: சங்கா, மஹேல ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணிக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருப்போம். இதுபோன்று இலங்கை ரசிகர்கள் தமது ஆதரவினை இந்நேரத்தில் இலங்கை அணிக்கு தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆசிய கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற 5ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் 23 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்து. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கு…
-
- 0 replies
- 498 views
-
-
உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் தடவையாக பெண் மத்தியஸ்தர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு பெண் மத்தியஸ்தர்களும் கடமையாற்றவுள்ளனர். இப் போட்டிகளை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள 31 மத்தியஸ்தர்களில் இருவர் பெண்கள் ஆவர். இதன் மூலம் உலக இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக பெண்கள் மத்தியஸ்தம் வகிக்கவுள்ளனர். நியூஸிலாந்தின் கெத்தி குரொஸ் அவர்களில் ஒருவராவார். இவர் 2000, 2009, 2013 ஆகிய வருடங்களில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் மத்தியஸ்தராக பணிய…
-
- 0 replies
- 315 views
-
-
லிவர்பூலை வீழ்த்தி கப்பிரல் கோப்பையை வென்றது மான்செஸ்டர் சிட்டி! கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி டைபிரேக்கரில் லிவர்பூல் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் ஆனது. பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் ஆர்சனல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடந்த கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை மான்செஸ்டர் சிட்டி சந்தித்தது. பிற்பாதியில் 49வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஃபெர்னான்டின்ஹோ முதல் கோல் அடிக்க, அதற்கு 83வது நிமிடத்தில் லிவர்பூலின் ஹட்டின்ஹோ பதிலடி கொடுத்தார். 90 நிமிட ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோ…
-
- 0 replies
- 521 views
-
-
பாகிஸ்தான் ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, பாகிஸ்தானை சேர்ந்த தன்னுடைய தீவிர ரசிகரான பசீருக்கு போட்டிக்கான டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 62 வயதான முகமது பசீர் தீவிர கிரிக்கெட் ரசிகர். பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது ஆதரவை தோனிக்கும் இந்திய அணிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியை பார்க்க பசீருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனையறிந்த தோனி அவருக்கு உதவியுள்ளார். இந்தநிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காகவும், தோனிக்காகவும் ஆதரவு அளித்து வந்தார். அவர…
-
- 0 replies
- 389 views
-
-
நியூஸிலாந்து ரசிகர்கள் எல்லை மீறுகின்றனர்: டேவிட் வார்னர் பாய்ச்சல் ஸ்மித், வார்னர். | படம்: ஏ.எஃப்.பி. நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை கடுமையாக வசைமழை பொழிந்ததாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கொதித்தெழுந்துள்ளார். எல்லைக்கோட்டருகே பீல்ட் செய்த ஜோஷ் ஹேசில்வுட் உட்பட மற்றொரு பவுலர் ஆகியோரை கிறைஸ்ட்சர்ச் டெஸ்டின் போது ரசிகர்கள் ஆபாசமான வசைமொழியினால் திட்டினார்கள் என்று டேவிட் வார்னர் ஆவேசமடைந்துள்ளார். இது குறித்து ஏபிசி-க்கு டேவிட் வார்னர் கூறியதாவது: உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ, வீரர்களுக்கு சில வசைகள் வந்து விழும் என்பது தெரிந்ததே. ஆனால் நாள் முழுதும், …
-
- 0 replies
- 355 views
-
-
தோனியை கரூரிலும் கோலியை தஞ்சாவூரிலும் ஏன் தேடுகிறார்கள்? - இது என்னடா புது டிஸைன்! சர்வதேச அளவில் ட்ரெண்டாகும் விஷயங்களை கணிப்பது கடினம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு அந்த பிரச்னை இல்லை. அது ஆல்டைம் ட்ரெண்டில் இடம் பெறும் விஷயம்தான். ஆனால் நேற்று முதல் இந்தப் போட்டி பற்றிய செய்திகள் காட்டுத்தீ போல பரவிவருகிறது. இதுவரை ஐசிசி ஆட்டங்களில் பாகிஸ்தான், இந்தியாவை வென்றதில்லை என்ற புள்ளிவிவரம் துவங்கி, தோனிக்கு அடிபட்டுள்ளது வரை டாப் ட்ரெண்டில் உள்ளது இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆசியக் கோப்பை ஆட்டம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கூகுள் ட்ரெண்டில் உள்ள இந்திய வீரர்களில் தோனிக்குதான் முதலிடம், அடுத்து கோலி, யுவராஜ், ரோஹித், அஸ்வின் உள்ளனர்.…
-
- 0 replies
- 463 views
-
-
'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை வாங்கிய சன்னி லியோன் ஐ.பி.எல், சி.சி.எல். போன்று சின்னத்திரை நடிகர்கள் விளையாடும் பி.சி.எல். எனப்படும் பாக்ஸ் கிரிக்கெட் 'லீக்' போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கும் 'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வாங்கியுள்ளார். சன்னி லியோன் ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திப் படங்களில் நடித்துள்ளார். 'வடகறி' என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தோனியை போல இவரும் 'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு விளம்பரங்களிலும் தோன்ற இருக்கிறார். http://www.vikatan.com/news/sports/59713-sun…
-
- 0 replies
- 385 views
-
-
'போர்ப்ஸ்' மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலில் விராட் கோலி, சானியா மிர்ஷா! ஆசியாவின் மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பெற்றுள்ளார். சானியா மிர்ஷா, சாய்னா நேவால் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர். வணிக பத்திரிக்கையான 'போர்ப்ஸ்' ஆசிய கண்டத்தில் 30 வயதுக்குட்பட்ட மதிப்புமிக்க இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர், ஹாங்காங் ஆய்வு நடத்தி நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என 300 பேர் பட்டியலை தயாரித்தது. இந்த பட்டியலில் 56 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர்கள் பிரிவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்…
-
- 0 replies
- 375 views
-