விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சிறையில் முதல் நாள் இரவே தூக்கில் தொங்க எண்ணினேன்: முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிறிஸ் லூயிஸ் உருக்கம் முன்னாள் இங்கிலாந்து வீரர் கிறிஸ் லூயிஸ் - கோப்புப் படம். போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கி 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் லூயிஸ் சிறையில் தான் முதல்நாள் இரவிலேயே படுக்கை விரிப்பு மூலம் தூக்கில் தொங்க எண்ணியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். டிசம்பர் 2008-ல் கிறிஸ் லூயிஸ் செயிண்ட் லூசியாவிலிருந்து விமானத்தில் திரும்பி வந்த போது காத்விக் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது இவர் கொண்டு வந்த…
-
- 0 replies
- 364 views
-
-
வசதிகளற்ற நிலையிலும் கடற்கரைக் கரப்பந்தில் அசத்திய வடக்கு பாடசாலைகள் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரைக் கரப்பந்தாட்டப் போட்டிகளில் வட மாகாண அணிகள் தமது அபார ஆட்டங்களை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுள்ளன. நீர்கொழும்பு உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற இந்த போட்டிகளில், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வட மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று அணிகளான புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தாக் கல்லூரி, தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் ஆகியன, ஒரேயொரு மேல் மாகாண அணியான நீர்கொழும்பு சீதுவ தவிசமீர மகா வித்தியாலய அணியுடன் அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்தன. …
-
- 0 replies
- 270 views
-
-
செய்தித்துளிகள்: லண்டனுக்கு சென்ற உலகக் கோப்பை டிராபி! சென்னையில் நடைபெற்று வரும் மெக்பெரன் கோப்பைக்கான தேசிய கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை எப்சி பி - பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ஜெரின் 2 கோல்களும், தவா ஒரு கோலும் அடித்தனர். இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஜகார்த்தா நகரில் இன்று தொடங்குகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் ஹன்னா ரமாதினியுடன் மோதுகிறார். ஆடவர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் ஜூல்பட்லி ஜூல்க…
-
- 0 replies
- 609 views
-
-
பத்தாவது விம்பிள்டன், களிமண் தரையில் முத்திரை, செரினாவை விஞ்சுவது... இதெல்லாம் நடக்குமா ஃபெடரர்?! “வயசானாலும்... உன் திறமையும் ஸ்டைலும் குறையவே இல்ல” என்று நீலாம்பரியைப் போல நம்மால் ஃபெடரரைப் பார்த்துக் கூற முடியும். 36 வயதிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வது என்பது இயல்பான செயலல்ல. ரோட்டர்டாம் ஓபனில் ராபின் ஹாசை வீழ்த்தியதன் மூலமாக, 33 வயதில் ஆண்ட்ரே அகாசி செய்திருந்த சாதனையை முறியடித்திருக்கிறார் ஃபெடரர். இன்னும் கொஞ்சம் தீராத வேட்கையோடு போராடினால் ஃபெடரர் மேலும் பல சாதனைகள் செய்யலாம். அவை என்னென்ன? “இப்பொழுதும் எப்பொழுதும் எனக்கு மிகவும் விருப்பமான போட்டி விம்பிள்டன். இங்கு விளையாடுவது எனக்குப் பெருங்கனவு. இது என்னுடைய கடைசி…
-
- 0 replies
- 194 views
-
-
25 வருடகால தமிழ் - சிங்கள பகையை தீர்ப்பது மிகக் கடினம்" *மனம் திறந்து பேசுகிறார் சாதனை நாயகன் முரளி தமிழ்க் குழந்தைகளுக்கு கணினி மற்றும் ஆங்கில பாடங்களை கற்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள உலக சாதனையாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரன், இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலுள்ளது 25 வருடகால நீண்ட பகையெனவும் இந்த இடைவெளியை குறைப்பது மிகக் கடினமெனவும் தெரிவித்துள்ளார். `இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸின் தலைமை ஆசிரியர் சேகர் குப்தா என்.டீ.ரீ.வியின் `வோக் த ரோக்' நிகழ்ச்சிக்காக முரளிதரனை நேர்கண்டிருந்தார். அந்த நேர்காணலில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்தும் அதனால் தனது பெற்றோர் எதிர்நோக்…
-
- 0 replies
- 1k views
-
-
உலகக் கிண்ணத்தின் அனுபவ வீரர்களாக மஹேல, அப்ரிடி – ஐ.சி.சி. தெரிவிப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கிண்ண தொடரில் விளையாடும் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் மஹேல ஜயவர்தன மற்றும் பாகிஸ்தானின் சஹீட் அப்ரிடி ஆகிய இருவரும் 5ஆவது முறையாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான ஜயவர்தனவும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரான அப்ரிடியும் இந்த உலகக் கிண்ணத்…
-
- 0 replies
- 500 views
-
-
போர்முலா-1 கார் பந்தயத்தின் மொனாக்கோ போட்டியில் ஸ்பெயின் வீரர் அலோன்சா வெற்றி பெற்றார். இந்த ஆண்டுக்கான போர்முலா -1 கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் இதுவரை 4 போட்டிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் 5 ஆவது பந்தயமாக மொனாக்கோ கிராண்ட்பிரீக்ஸ் மாண்டி கார்லோவில் நேற்று முன்தினம் நடந்தது. 78 சுற்றுகள் கொண்ட இதன் பந்தய தூரம் 260.520 கிலோமீற்றர் ஆகும். இதில் மெக்லரன் அணி வீரர்கள் தற்போதைய சாம்பியன் ஸ்பெயினின் அலோன்சா, இங்கிலாந்தின் ஹமில்டன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவியது. இரண்டு பேரும் முதலிடத்தை பிடிக்க தங்கள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தினார்கள். முடிவில் அலோன்சா வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 40 நிமிடம் 20.329 விநாடிகளில் கடந்…
-
- 0 replies
- 679 views
-
-
01 DEC, 2023 | 04:52 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் கொழும்பு -13, கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் சாருஜன் சண்முகநாதன் இடம்பிடித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரிலும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணிக்காக சாருஜன் சண்முகநாதன் விளையாடியிருந்தார். விக்கெட்காப்பாளரான இவர் , இடதுகை துடுப்பாட்ட வீரரரும் ஆவார். ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை …
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
இலங்கையை பந்தாடிய தென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி! இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்எலிசபத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக இசுறு உதான 78 ஓட்டங்களையும், அவிஷ்க 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அன்ரிச் நொர்டே 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் பின்னர் 190 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிர…
-
- 0 replies
- 912 views
-
-
கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு மூத்த மகன் பிறந்த தினம் இன்று! கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் மூத்த மகன்... இவருக்குதான் ஒருநாள், டி20 என இரு சகோதரர்கள். கடந்த 1884ஆம் ஆண்டு இதே நாளில்தான் முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையே நடந்த போட்டியில், இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த1983ஆம் ஆண்டு இந்திய அணி, இந்த மைதானத்தில்தான் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது. அதற்கு பின் லார்ட்ஸ் என்ற வார்த்தை இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப் போன, பழகிப் போன வார்த்தையாகி விட்டது. வாழ்நாளில் ஒரு முறையாவது லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிவிட வேண்டுமென்பதுத…
-
- 0 replies
- 361 views
-
-
கங்குலியின் அழைப்பின் பேரில் சாதனை மன்னன் ரூனி இந்தியா வருகிறார்! இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் வேயர்ன் ரூனி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் அழைப்பின் பேரில் இந்தியா வரவுள்ளார். நடப்பு சீசனுக்கான ஐ.எஸ்.எல். தொடர் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் மாதத்தில் டெல்லி வரும் கால்பந்து ஜாம்பவான் பீலே, கொல்கத்தா சென்று. அத்லெடிகோ டி கொல்கத்தா அணி விளையாடும் கால்பந்து போட்டியை காணவுள்ளார். கொல்கத்தாவில் நேற்று அத்லெடிகோ டி கொல்கத்தா அணியின் உரிமையாளரான சவுரவ் கங்குலி செய்தியாளர்களிடம் கூறுகையில்'' இங்கிலாந்து அணியின் வேயர்ன் ரூனி நவம்பர் மாதத்தில் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கொல்கத்தா வருகிறார். மான்செஸ்டர் யுனைடெட…
-
- 0 replies
- 297 views
-
-
இன்றைய மோதல்கள் 2015.10.17 October 17, 2015 பாடசாலைகளுக்கு இடையிலான ரி-20 தொடர் யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ரி-20 துடுப்பாட்டத் தொடரின் அரையிறுதியாட்டங்கள் இன்று சனிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெறவுள்ளன. காலை 8.30மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதியாட்டத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ். மத்திய கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2மணிக்கு இடம்பெறும் இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் யாழ். இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி மோதவுள்ளது. வவுனியா உதைபந்தாட்டத் தொடர் வவுனியா உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்துள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் முன்னெடுக்…
-
- 0 replies
- 384 views
-
-
தொடர்ச்சியாக ஆசியக்கிண்ணம் பங்களாதேஷில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக பங்களாதேஷில் ஆசியக் கிண்ணத்தை நடாத்துவது என சிங்கப்பூரில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாடுகளைக் கொண்ட இந்தப் பிராந்திய கிரிக்கெட் தொடரில் போட்டியை நடாத்தும் நாடான பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஒரு துணைக் கண்ட நாடு பங்கேற்கவுள்ளது. இம்முறை தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப்போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இத்தொடர் முடிந்து ஐந்து நாட்களில் உலக இருபது-20 தொடர் ஆரம்பிக்கவுள்ளமையால், எதிர்வரும் ஆசியக் கிண்ணத்தில் முதற்தடவையாக இருபது-20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. அடுத்த வருடம்,…
-
- 0 replies
- 236 views
-
-
ஓய்வுபெறுவது குறித்துச் சிந்திக்கிறேன்: ஜோன்சன் கிரிக்கெட் வாழ்வில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஜோன்சன், ஒவ்வொரு போட்டியுமே தனது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையுமென்ற எண்ணம் காணப்படுவதாக ஒத்துக் கொண்டுள்ளார். 34 வயதான மிற்சல் ஜோன்சன், இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருடன் ஓய்வுபெறுவது பற்றிச் சிந்தித்திருந்ததை ஏற்றுக் கொண்டிருந்தார். குறிப்பாக, மைக்கல் கிளார்க், பிரட் ஹடின், ஷேன் வொற்சன், றயன் ஹரிஸ், கிறிஸ் றொஜர்ஸ் ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், அந்த எண்ணம் அதிகரித்ததாகத் தெரிவித்திருந்தார். எனினும், தொடர்ந்தும் விளையாடிவரும் ஜோன்சன், நியூசிலாந்துக்கெதிராக பிறிஸ்பேணில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி…
-
- 0 replies
- 213 views
-
-
7 டெஸ்ட் கிரிக்கெட் நாடுகளுக்கு தலா 10 மில்லியன் டொலர்கள் பூரண அங்கத்துவ அந்தஸ்துடைய ஏழு கிரிக்கெட் சபைகளுக்கு அடுத்த எட்டு வருடங்களுக்கு மொத்தமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) வழங்கவுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை, கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம் ஆகிய 'முப்பெரும் சக்தி' கிரிக்கெட் ஆளுமை சபையை கடந்த வருடம் பொறுப்பேற்றபோது இது குறித்த அறிவிப்பை விடுத்திருந்தது. இந்த 'முப்பெரும் சக்திகளை விட பூரண அங்கத்துவம் பெற்ற மற்றைய ஏழு நாடுகளுக்கு அடுத்த வருடம் முதல்…
-
- 0 replies
- 696 views
-
-
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை எனது ஆட்டம் தொடரும் - மெத்தியூஸ் Published by J Anojan on 2019-11-22 15:01:25 எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாளக் உலகக் கிண்ணத் தொடர்வரை விளையாடுவதே எனது குறிக்கோள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளதுடன், அதுவரை சிறப்பாக விளையாடுவதற்கு நான் எனது உடற் தகுதியை பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய இலங்கை டெஸ்ட் அணியில் மிக வயதான (32) வீரர் அஞ்சலோ மெத்தியூஸ், கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமான அவர், அன்றிலிருந்து இலங்கை அணியின் அதிக வெற்றிகளுக்கு பங்களிப்பு செய்தவர். துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் இரண்…
-
- 0 replies
- 462 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 01:01 PM வட கொரியாவில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பியோங்யாங் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த மரத்தன் ஓட்டப்போட்டியில் சுமார் 200 வெளிநாட்டு வீரர்களை வட கொரியாவின் தலைநகர் வரவேற்றுள்ளது. 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மரத்தன் ஓட்டப் போட்டி வட கொரியாவின் முதல் ஜனாதிபதி கிம் இல் சுங்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படுகிறது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. அதில் 950 வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். கொவிட்-19 தொற்று பரவியமையை அடுத்து வட கொரியா மரத்தன் ஓட்டப் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், வடகொர…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
கொழும்பு இந்துவுக்கு சாமர சில்வா, பிரசன்ன பயிற்சி இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட் வீரர்களுக்கு, இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களான சாமர சில்வா, பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் பயிற்சியளிக்கவுள்ளனர். இந்துக் கல்லூரி, கொழும்பு 04க்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிக்குமிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டே, இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (17) இடம்பெறவுள்ள இந்தப் பயிற்சிகள், அரை நாள் இடம்பெறத்தக்கதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசிய அணியில் விளையாடிய அனுபவமுள்ளவர்களான இவ்விருவரும், தங்களது அனுபவங்களையும் கிரிக்கெட் நுணுக்கங்களையும் இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட…
-
- 0 replies
- 510 views
-
-
ஹொங்கொங் செல்லும் இலங்கை அணியில் இடம்பிடித்த தர்ஜினி By Mohammed Rishad - ஹொங்கொங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நான்கு நாடுகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்னையான தர்ஜினி சிவலிங்கம் இடம்பிடித்துள்ளார். உலக தரநிலைப்படுத்தும் வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் மற்றும் தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேர்வுப் போட்டிகள் நேற்று (22) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ந…
-
- 0 replies
- 417 views
-
-
” இலங்கை எதிர் அவுஸ்திரேலியா ” டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் – அணிகள் மீதான பார்வை ” இலங்கை எதிர் அவுஸ்திரேலியா ” டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் – அணிகள் மீதான பார்வை இலங்கை வந்துள்ள கங்காருப்படையணி மூன்று டெஸ்ட் ஆட்டங்கள், ஐந்து ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரு T20 ஆட்டங்களில் பங்கெடுக்கிறது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது கண்டி பல்லேகேல மைதானத்தில் நாளை (26ம் திகதி)ஆரம்பமாகிறது. 2ம் 3ம் டெஸ்ட் போட்டிகள் முறையே காலி மற்றும் கொழும்பில் ஆகஸ்ட் மாதம் 4ம், 13ம் திகதிகளிலும் ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இரு அணிகளின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணிகள் (விளையாடும் பதினொருவர்) மீதான பார்வை. இலங்கை அணி சொந்…
-
- 0 replies
- 417 views
-
-
தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் குக்? இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான அலஸ்டெயர் குக், இந்திய அணிக்கெதிராக இன்று ஆரம்பிக்கவுள்ள தொடருக்குப் பின்னர், அணித்தலைவர் பதவியிலிருந்து விலகலாம் என்ற சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 31 வயதான குக், இதுவரை 135 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 54 போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டுள்ளார். இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அலஸ்டெயர் குக், "ஆழ் மனதில், எவ்வளவு காலம் நான் நீடிப்பேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அது, இரண்டு மாதங்களாக இருக்கலாம், ஓராண்டாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டார். தனியே ஒரு துடுப்பாட்ட வீரராகப் போட்டிகளில் பங்குபற்றும் நாளை எதிர்பார்த்திருப்பத…
-
- 0 replies
- 307 views
-
-
ஆஸி.யை சின்னாபின்னமாக்கிய இரண்டு அணிகள் அடுத்த மாதம் மோதுகின்றன சிம்பாப்வேயில் விளையாடிவரும் இலங்கை அணியும் அவுஸ்திரேலியாவில் விளையாடிவரும் தென்னாபிரிக்க அணியும் அடுத்த மாதம் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதேபோல் இந்த இரண்டு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக்கம் செலுத்தி வந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர்களையும் வென்ற அணிகள் என்பதும் விசேட அம்சம். அதனால் டெஸ்ட்போட்டிகளில் இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருக்கும் நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் தென்னாபிரிக்கா…
-
- 0 replies
- 287 views
-
-
121 மீட்டர் மெகா சிக்ஸர் அடித்த கிறிஸ் லின்! (வீடியோ) ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் கிறிஸ் லின் அடித்த சிக்ஸர் தற்போது வைரலாகி வருகிறது. ஹோபார்ட் ஹரிக்கேன் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் நேற்று பிரிஸ்பேன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணியின் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து ஹோபர்ட் ஹரிக்கேன் அணி பேட்டிங் பிடித்தது. ஹரிக்கேன் அணியில் ஜோனாதன் வெல்ஸ், குமார் சங்கக்காரா, ஜார்ஜ் பெய்லி, டேனியல் கிறிஸ்டியன், ஸ்டூவர்ட் பிராட், ஷான் டெயிட் என நட்சத்திர வீரர்கள் இருந்தனர். பிரிஸ்பேன் அணியில் பவுலிங்கில் சாமு…
-
- 0 replies
- 485 views
-
-
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மாரியப்பன் தங்கவேல் | கோப்புப் படம். பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியில், சேலம் மாவட்டம், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி என்ற கு…
-
- 0 replies
- 307 views
-
-
அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு ஓராண்டு தடை பிரேஸிலின் றியோடி ஜெனீரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற, 25 வயதான அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம், லண்டனில் நடக்கவிருக்கும் உலக தடகள போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் போட்டி இல்லாத காலங்களிலும் எங்கு இருக்கிறோம் என்பதை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு முறைப்படி தெரியப்படுத்தி சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும். ஆனால் பிரியன்னா ரோலின்ஸ், கடந்த ஆண்டில் மூன்று முறை இந்த தகவலை…
-
- 0 replies
- 153 views
-