விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஜனவரி 27, 28-ல் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் - பி.சி.சி.ஐ அறிவிப்பு 2018 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது. மும்பை: உலகம் முழுக்க பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முன்னனி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது. 2018-ம் ஆண்டுக்கான 11-வது…
-
- 0 replies
- 322 views
-
-
ராகுல் திராவிட் ஆலோசனை மறக்க முடியாதது: முரளி விஜய் சிறப்புப் பேட்டி இங்கிலாந்தின் பிட்ச் மற்றும் தட்பவெப்ப நிலைகளில் தொடக்க வீரர் என்ற கடினமான பணியைத் திருப்தியளிக்கும் விதமாகச் செய்த முரளி விஜய் ஆஸ்திரேலியா தொடரில் இந்த இளம் இந்திய அணி எழுச்சிபெறும் என்று நம்பிக்கை கூறியுள்ளார். இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 402 ரன்களை 40.20 என்ற சராசரியில் எடுத்த முரளி விஜய் 'தி இந்து' (ஆங்கிலம்) இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் தமிழ் வடிவம் வருமாறு: டெஸ்ட் தொடரை சிறப்பாகத் தொடங்கி விட்டு பிறகு சவால் அளிக்காமல் தோல்வியடைந்தது உங்களை எப்படி ஏமாற்றமடையச் செய்தது? குறிப்பாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் 4 மணி நேர ஆட்டத்திலேயே இந்திய அணியின் கையை விட்டுச் சென்றதே? இ…
-
- 0 replies
- 693 views
-
-
தெரு கிரிக்கெட் போட்டிக்கு மூன்றாவது நடுவராக மாறிய ஐசிசி - வைரலாகும் வீடியோ பாகிஸ்தானில் உள்ள கிராமத்தில் தெரு கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வுக்கான வாலிபர் ஒருவர் ஐசிசியின் உதவியை நாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #ICC #pakistanfanvideo கிரிக்கெட் என்பது நகரங்களில் மட்டும் அல்ல கிராமங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விளையாட்டு. எங்கு சென்றாலும் தெருக்களில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவர். பெரிய பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் கிரிக்கெட் கனவு தெரு …
-
- 0 replies
- 545 views
-
-
டோனி நேரம் முடிந்தது-இயான் சாப்பல் சிட்னி: ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று, தோற்றது. இருப்பினும், தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற விராத் ஹோக்லி, இரண்டு இன்னிங்ஸ்லும் சதம் அடித்து, அசத்தினார். இந்நிலையி்ல், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் ஒரு பேட்டியில் கூறுகையில், '.டெஸ்ட் போட்டிகளுக்கு டோனி தலைமையேற்கும் நேரம் முடிவுக்கு வந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு விராத் ஹோக்லி தலைமையேற்று நடத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்,' என்று கூறி ள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1137886
-
- 0 replies
- 477 views
-
-
உலகக் கிண்ணமும் பந்துவீச்சுத் தடையும் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஒரு வருடத்துக்குள் 8 சுழற்பந்து வீச்சாளர்கள் முறையற்ற விதத்தில் பந்துவீசுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகினர். 2013ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் வீரர் சாமுவேல்ஸில் ஆரம்பித்து ஷேன் ஸிலிங்போர்ட் (மேற்கிற்திய தீவுகள்), சசித்ர சேனநாயக்க (இலங்கை), கேன் வில்லியம்ஸன் (நியூசிலாந்து), சயீட் அஜ்மல் (பாகிஸ்தான்), சொஹைக் ஹாசி (பங்களாதேஸ்), மல்கொல்ம் வோலர் (சிம்பாவே), பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் வரை தொடர்கிறது. இவர்களில் தற்போது சேனநாயக்க மற்றும் வில்லியம்ஸன் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவது புதிதில்லை என்றாலும், உலகக் …
-
- 0 replies
- 341 views
-
-
தடைகளை தகர்த்தெறிந்த கே.சி.சி.சியின் வெற்றிப்பாதை யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்ட கழகங்களின் தரப்படுத்தலில் ஆதிக்கம் செலுத்தி வரும் கே.சி.சி.சி என்று அழைக்கப்படும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டு கழகம், பலரின் அர்ப்பணிப்புக்கு மத்தியில் தன்னை தானே வளர்த்து கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்கின்றது. கே.சி.சி.சி கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை வீரர்களுக்காகவோ அல்லது பயிற்சியாளருக்காகவோ வெளிக் கழகங்களை நாடிச்சென்றதில்லை. கொக்குவில் இந்து கல்லூரியிலிருந்து வெளியேறிய, பாடசாலை அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களை தன்னகத்தில் வைத்து, தனது பயணத்துக்கான பாதையை அமைத்துக்கொண்டது. இந்நிலை தற்போதும் தொடர்கின்றது. 1981ஆம் ஆண்டு கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் ஆரம்…
-
- 0 replies
- 407 views
-
-
இந்தியாவில் திறமையான பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம்: டிராவிட் வருத்தம் இந்திய அணிக்குத் தேவைப்படும் அளவுக்கு, திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை. உள்ளூர் போட்டி களிலும் எதிர்பார்த்த அளவுக்கு திறமையுள்ள பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: விராட் கோலியைப் பற்றி இப்போதே கணிக்கக் கூடாது. ஆனால், தன்னால் தலைமை யேற்க முடியும் என நிரூபித்திருக் கிறார். ஆஸ்திரேலிய தொடரில் அவரின் தனிப்பட்ட செயல்பாடு களை அவருடைய பலமாகக் கருதுகிறேன். இந்திய கிரிக்கெட் அணிக்கு நீண்ட கேப்டனாகச் செயல்பட அவரை அணி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் வரிசை நன்றாகவ…
-
- 0 replies
- 317 views
-
-
ரிஷப் பந்த்-ன் திறமையில் ஒரு பகுதியைத்தான் நாம் பார்த்துள்ளோம்: ஆஸி.க்கு மேக்ஸ்வெல் எச்சரிக்கை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்பட்டு வருகிறார். 20 வயதே ஆகும் ரிஷப் பந்த் இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வருகிறார். பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகிறார். 7-வது நபராக களம் இறங்கும் ரிஷப் பந்த், கடைநிலை வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவில் அவுட்டாகும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் ரி…
-
- 0 replies
- 421 views
-
-
ஐ.சி.சி.யின் முக்கிய விருதுகள் மூன்றை கைப்பற்றினார் விராட் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் மிக முக்கிய மூன்று விருதுகளை பெற்று இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டு, சேபர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டு ஒரேயாண்டில் மூன்று விருதுகளை கைப்பற்றிய முதல் வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 30 வயதாகும் விராட் கோலி கடந்த 2018 ஆம் ஆண்டு 14 சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸுக்களில் களமிறங்கி 1202 ஓட்டங்களை …
-
- 0 replies
- 758 views
-
-
யாழ்ப்பாணம் வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட உதை பந்தாட்டப் போட்டியில் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. https://newuthayan.com/story/09/எழாலை-ஸ்ரீ-முருகன்-வித்த.html
-
- 0 replies
- 640 views
-
-
இந்திய அணிக்கு பாண்டிங் பாராட்டு . Monday, 28 January, 2008 02:33 PM . அடிலெய்டு, ஜன. 28: இந்திய கிரிக்கெட் அணி உலகின் இரண்டாவது சிறந்த அணியாக விளங்குகிறது என ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். . அடிலெய்டு டெஸ்ட் டிராவில் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிக்கி பாண்டிங் கூறியதாவது: இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் கடுமையான மோதலாக அமைந்தது. இந்த தொடரை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். இந்திய அணி மிகவும் சிறந்த முறையில் விளையாடி உலகின் இரண்டாவது சிறந்த அணி என்னும் அந்தஸ்தை நிரூபித்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல ஆஸ்திரேலிய துணை கேப்டன் கில்கிறிஸ்ட் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இ…
-
- 0 replies
- 919 views
-
-
அப்ரிடியின் அதிக சிக்சர் சாதனைக்கு தடை போடுகிறாரா கப்டன் மாலிக் [02 - February - 2008] [Font Size - A - A - A] சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரரென்ற சாதனையைப் படைக்கவிருந்த பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடிக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துள்ள சிம்பாப்வே அணி 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. பைசலாபாத்தில் நடந்த நான்காவது போட்டியில் வென்று பாகிஸ்தான் தொடரில் 4-0 என்ற முன்னிலையில் இருக்கிறது. தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடி 245 சிக்சர்களுடன் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ப…
-
- 0 replies
- 925 views
-
-
அமெரிக்காவின் அடிமை வாணிகத்தை தடை செய்த மாபெரும் தலைவர் யார்? என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் ஆசிரியர். சார், அடிமை வாணிகம்னா என்ன சார்? என்று கேட்டான். உட்காரு, அதாவது மனிதர்களைக் கூட்டம் கூட்டமாக சந்தையில் நிறுத்தி அவர்களை காய்கறிகளைப் போல ஆடுமாடுகளைப் போல விலைக்கு விற்பார்கள். காசு வைத்திருப்போர் ஏலத்தில் இவர்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இப்படி வாங்கிய மனிதர்கள் எஜமானர்கள் என்றும், வாங்கப்பட்ட மனிதர்கள் அடிமைகள் என்றும் அழைக்கப்பட்டனர். இப்படி விற்கப்படும் மனிதர்களில் நல்ல திடகாத்திரமும் நன்கு உழைக்கும் திறனும் பெற்ற அடிமைகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இப்படி வளர்க்கப்பட்ட அடிமைகள் தங்கள் ஆயுள் முடியும் வரைக்கும் எஜமானனுக்கு உழைக்க வேண்டும். அடி…
-
- 0 replies
- 1.2k views
-
-
மக்கள் எண்ணுவதும், எனது வாழ்க்கையும் வித்தியாசமானது – தனுஷ்க குணத்திலக்க By Mohamed Azarudeen - 12/11/2019 இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான தனுஷ்க குணத்திலக்க தன்னைப் பற்றி பொது மக்கள் எண்ணுவது பற்றி நேர்காணல் ஒன்றை பிரபல கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு வழங்கியிருக்கின்றார். இந்த நேர்காணலில் நீண்ட நேரத்திற்கு தனது சொந்த வாழ்க்கை குறித்து பேசியிருந்த தனுஷ்க குணத்திலக்க தன்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகள் எதுவும் உண்மையில்லை என மறுத்திருக்கின்றார். ”சிலருக்கு பொறாமை அதிகமாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் எனது வாழ்க்கை முற…
-
- 0 replies
- 574 views
-
-
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் காப்பாளர் இடைநீக்கம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பொறுப்பாளர் ஜயந்த வர்ணவீரவை சர்வதேச கிரிக்கெட் பேரவை மூன்று வருடங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடித் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை ஒன்றுக்கு ஒத்துழைப்பு வழங்காததன் காரணத்தினாலேயே அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேர்முக விசாரணையில் கலந்துக்கொள்ளும்படி வர்ணவீரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு சந்தரப்பங்களில் அவர் விசாரணைக்கு வரவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 413 views
-
-
நெய்மருக்கு ரூ.76 லட்சம் அபராதம் January 31, 2016 வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரேசில் கால்பந்து அணியின் தலைவர் நெய்மருக்கு ரூ.76 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் தேசிய கால்பந்து அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான நெய்மர் 2007 மற்றும் 2008ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்து வந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ரூ.76 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. http://www.onlineuthayan.com/sports/?p=8627&cat=11
-
- 0 replies
- 673 views
-
-
நடுவர் அலிம்தாரின் மகன்மார் வேறு பெயர்களுடன் விளையாடியதால் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் கழகம் தரமிறக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் மத்தியஸ்தர் அலிம் தாரின் மகன்மார் இருவர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக ஸ்கொட்லாந்து பிரஜைகள் எனப் பொய் கூறியுள்ளதை தான் அறிந்திருக்கவில்லை என அலிம் தார் தெரிவித்துள்ளார். அலிம் தாரின் மகன்மாரான 18 வயதுடைய அலி என்பவரும் 16 வயதுடைய ஹசன் என்பவரும் தாங்கள் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்தவர்கள் என பொய் கூறி கில்மானொக் கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடியமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முதலாம் பிரிவிலிருந்து அக் கழகத்தை மேற்கு மாவட்ட கிரிக்…
-
- 0 replies
- 246 views
-
-
தவணுக்கு பதில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு தரவேண்டியது ஏன்?- ஒரு பார்வை இலங்கைக்கு எதிராக தனது 2-வது டெஸ்ட் சதத்தை லோகேஷ் ராகுல் எடுத்த போது மட்டையை உயர்த்தும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. இந்திய அணியில் ஒரு சில வீரர்களுக்கு கூடுதலாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஷிகர் தவணும் ஒருவர். ஆனால் தற்போது குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் இவருக்குப் பதிலாக கவுதம் கம்பீரை கொண்டு வர வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன. கவுதம் கம்பீர் மன உறுதி படைத்த வீரர், அனுபவமிக்கவர், ஆக்ரோஷமானவர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால் ஷிகர் தவணுக்குப் பதிலாக 3 வடிவங்களிலும் கே.எல்.ராகுல் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதில் கூடுதல் நன்மைகள் ஏற்…
-
- 0 replies
- 432 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ரஷிய வீராங்கனைக்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் எந்த ஒரு நாட்டையும் சாராத நடுநிலையாளராக கலந்து கொள்ள ரஷிய வீராங்கனை யூலியா ஸ்டெப்பநோவாவிற்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஊக்க மருந்து சர்ச்சையை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், யூலியா ஸ்டெப்பநோவா ரியோ போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் ரஷியர் ஆவார். அதீத திறமை காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான யூலியா ஸ்டெப்பநோவாவின் விண்ணப்பதைஏற்று கொண்டதாக உலக தடகள ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. 2013ல் ஊக்க மருந்து மோசடியில் சிக்கும் வரை, 100 மீட்டர் …
-
- 0 replies
- 296 views
-
-
எலைன் தாம்சன் தடகள விளையாட்டு போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்காவின் விரைவோட்ட வீராங்கனை எலைன் தாம்சன் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஷெல்லி-அன் கிராசர்-பியேசி மூன்றாவது தங்கப்பதக்கத்தை வெல்லும் நோக்கில் ஓடிய சக நாட்டு வீராங்கனை ஷெல்லி-அன் கிராசர்-பியேசி இப்போட்டியில் வெண்கலப் பதக்கமே பெற முடிந்தது. மோ ஃபாக் கீழே விழுந்தாலும் மீண்டு ஓடிய பிரிட்டன் ஓட்டப்பந்தைய வீரர் மோ ஃபாக், 10 ஆயிரம் மீட்டர் ஆடவர் ஓட்டப்போட்டியில் இந்த முறையும் முதலிடத்தை தங்க வைத்துள்ளார். மிதிவண்டி மற்றும் படகு சவாரி போன்ற போட்டிகளிலும் பிரிட்டனுக்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. மோனிகா புயுக் மோனிகா புயுக் என…
-
- 0 replies
- 741 views
-
-
இந்தியாவின் 600-வது டெஸ்டுக்கு கேப்டன் யார்? 600 டெஸ்ட் போட்டிகளை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அடுத்த நூறு போட்டிகளில் இந்தியாவுக்கு தேவை என்ன? அதை தெரிந்து கொள்வதற்கு முன் இந்த 500 போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 500-வது போட்டியில் பெற்ற வெற்றி, இந்தியாவுக்கு 130வது டெஸ்ட் வெற்றி. தொடர்ந்து மூன்று மைல்கல் சதங்களையும் வெற்றியுடன் கடந்திருக்கிறது இந்திய அணி. முதல் போட்டி தொடங்கி சதம் கண்ட போட்டிகள் பற்றிய தகவலை கீழே காணலாம். 1980 களில் இருந்து சராசரியாக 10 ஆண்டுகளில் நூறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 9 போட்டிகள். அதில் கடந்து 20…
-
- 0 replies
- 512 views
-
-
மைதானத்திலிருந்து அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் முஷ்பிகுர் ரஹீம் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ரிம் சௌத்தி வீசிய பந்தொன்று பங்களாதேஷ் அணி வீரர் முஷ்பிகுர் ரஹீமின் தலையை பதம் பார்த்ததில் மைதானத்திலிருந்து அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப் போட்டியின் 2 ஆவது இன்னிங்ஷில் துடுப்பெடுத்தாடிய முஷ்பிகுர் ரஹீம் சௌத்தி வீசிய எகிறும் முறையான பந்தை எதிர்கொள்ள முயன்றபோதே பந்து அவரது தலையை பதம் பார்த்துள்ளது. குறித்த பந்து ம…
-
- 0 replies
- 459 views
-
-
அறிமுகப்போட்டியில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தானின் இளம் சுழல்பந்து வீச்சாளர் சாதனை By RAJEEBAN 09 DEC, 2022 | 04:39 PM பாக்கிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமட் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி கிரிக்கெட் உலகின் கவனத்தை தனது பக்கம் ஈர்த்துள்ளார். முல்தானில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அப்ரார் அஹமட் 114 ஓட்டங்களை கொடுத்து ஏழு விக்கெட்களை வீழ்த்தினார். நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 281 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தனது முதலாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் தனது முதல…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
டாஸ் போடும் முறையை ஒழித்துக் கட்ட ஐசிசி முடிவு? தீவிர பரிசீலனை 1974 இந்தியா-மே.இ.தீவுகள் தொடர். - படம். | தி இந்து ஆர்கைவ்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போட்டு யார் முதலில் பேட் செய்வது என்பதை டாஸில் வென்றவர்களின் முடிவுக்கு விடப்படும் ஆண்டாண்டு கால மரபான முறையை முடித்து வைக்க ஐசிசி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அந்தந்த நாட்டில் நடக்கும் போது அவை பிட்ச் உள்ளிட்ட சாதக சூழ்நிலைகளை தங்கள்பக்கம் அமைத்துக் கொள்வதால் எதிரணியின் கைகள் கட்டப்படுகின்றன, இதனால் ஒருதலைபட்சமான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று…
-
- 0 replies
- 347 views
-
-
மஞ்சு வன்னியாராச்சியின் தங்கப் பதக்கம் பறிபோயிற்று தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பாவனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையால் இலங்கையின் குத்துச் சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சி பெற்ற தங்கப் பதக்கம் பறிக்கப்படுவதாக கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று தீர்பளித்துள்ளது. அவருடைய சிறுசீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டுள்ளமை உறுதிபடுத்தப்படடுள்ளதையடுத்தே அவரது பதக்கம் பறிக்கப்படடுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற பொதுநலவாயப் போட்டியின் போது மஞ்சு வன்னியாராச்சி வேல்ஸ் நாட்டின் வீரரை வீழ்த்தி சுமார் 72 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை வென்றுக் கொடுத்தார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31461
-
- 0 replies
- 936 views
-