விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஜப்பானிய ஃபார்முலா ஒன்று கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் வெற்றி மெர்சிடிஸ் வாகன நிறுவனத்தின் பந்தய ஓட்டுநர் நிகோ ரோஸ்பெர்க் ஜப்பானிய ஃபார்முலா ஒன்று கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் வெற்றியடைந்து, அவருடைய அணிக்கு தொடர்ந்து மூன்றாவது சாம்பியன் கோப்பையை பெற்று தந்துள்ளார். 2014-2015 போட்டியின் பருவ காலத்தில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார் நிகோ ரோஸ்பெர்க் இந்த பருவத்தின் நான்கு போட்டிகள் இன்னும் எஞ்சியிருக்கும் நிலையில் ,மெர்சிடிஸ் அதனுடைய மிகவும் நெருங்கிய போட்டியாளர் ரெட் புல்லை விட முன்னிலை பெற்று இந்த கோப்பையை வென்றிருக்கிறது. நிகோ ரோஸ்பெர்க்கிற்கு 23-வது தொழில்முறை வெற்றி இத…
-
- 0 replies
- 340 views
-
-
சாதனை பட்டியலில் இணைந்தார் ஹேரத் சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணித் தலைவர் ஹேரத் சாதனையா ளராகி உள்ளார். டெஸ்ட் போட்டிகளை விளையாடும் அனைத்து 9 நாடுகளுக்கும் எதிராக விளையாடும்போது 5 விக்க ட்டுகளை வீழ்த்தியவர் என்ற பட்டியலில் பந்து வீச்சாளர் ஹேரத்தும் இணைந்துள்ளார்.நேற்றைய ஆட்ட த்தில் ஹேரத் ஐந்து சிம்பாப்வே துடுப்பாட்டக்காரர்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். இவரை விட இலங்கைப் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனும், தென் ஆபிரிக்க பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயினும் மாத்திரமே 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடும் சகல நாடுகளுக்கும் எதிராக இதுவரை யில் ஐந்து விக்கட்டுகளைக் கைப்பற்றியவர்…
-
- 0 replies
- 323 views
-
-
செல்சி, மன்செஸ்டர் சிற்றிக்கு தண்டம் இம்மாத ஆரம்பத்தில், மன்செஸ்டர் சிற்றி அணியின் மைதானமான எதிகாட் அரங்கில் இடம்பெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டியொன்றில், மன்செஸ்டர் சிற்றியின் வீரர்களும் செல்சியின் வீரர்களும் மோதிக் கொண்டனர். இந்நிலையிலேயே, செல்சி அணிக்கு 100,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களும், மன்செஸ்டர் சிற்றிக்கு 35,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செல்சியின் டேவிட் லூயிஸை வீழ்த்தியமைக்காக மன்செஸ்டர் சிற்றியின் சேர்ஜியோ அகுவேரோ வெளியேற்றப்பட்டத்தைத் தொடர்ந்தே, குறித்த போட்டியின் முடிவில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இரண்டு அணிகளும் மோதிக் கொண்டதில், செல்சியின் சீஸ்க் பப்ரிகாஸைப் பிடித்தத்துக்காக மன…
-
- 0 replies
- 265 views
-
-
2011 உலகக் கிண்ணச் சர்ச்சை – வாய் திறந்தார் முரளிதரன்!! 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமை ஆட்ட நிர்ணயத்தால் அல்ல என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய அணியுடனான அந்த ஆட்டத்தில் தோல்வியடையக் காரணம் இலங்கை அணியால் எடுக்கப்பட்ட தவறான கணக்கீடுகளே என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணி இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடியிருந்தால் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாணயச் சுழற்சியின் …
-
- 0 replies
- 442 views
-
-
எம். எஸ். தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக தோனி முடிவு செய்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம். எஸ். தோனி கேப்டன் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும…
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
குத்துச்சண்டையில் வடமாகாணத்துக்கு ஏழு பதக்கங்கள் 1 தேசிய மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் வடமாகாணத்துக்கு ஒரு வெள்ளி பதக்கம், 6 வெண் கலப் பதக்கங்கள் என மொத்தமாக 7 பதக்கங்கள் கிடைத்தன. 43ஆவது தேசியமட்ட இரு பாலாருக்குமான குத்துச்சண்டைப் போட்டி மாத்தறை அக்குரல்ல குருப்பிட்டிய உள்ளக விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. வெள்ளிப் பதக்கத்தை 69 கிலோ எடைப் பிரிவில் வி.நிகாலஸ், வெண் கலப் பதக்கத்தை 56 கிலோ எடைப் பிரிவில் செந்தூரன், 75 கிலோ எடைப் பிரிவில் ரமேஷ், 81 கிலோ எடைப் பிரிவில் கேசவன், 91 கிலோ எடைப…
-
- 0 replies
- 366 views
-
-
இந்த நூற்றாண்டின் சிறப்பான பந்து வீச்சு இதுதான்! கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்த ஸ்டார்க் ஒரே பந்து வீச்சு மூலம் கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்த ஸ்டார்க்- வீடியோ பெர்த்: இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு என கிரிக்கெட் உலகமே வர்ணிக்கிறது ஆஷஷ் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீசிய அந்த ஒரு பந்தை. ஆஷஷ் தொடரின் 3வது டெஸ்ட், வேகபந்து வீச்சுக்கு பிரபலமான பெர்த்-டபிள்யூஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதன் நான்காவது நாளில்தான் வியப்பூட்டும் அந்த ஒரு பந்து வீச்சு அதிசயம் நிகழ்ந்தது. இங்கிலாந்து அணியின், வலது கை பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் அவுட்டாக்கப்பட்ட விதம்தான், அந்த பந்தை, இந்த நூற்றாண்டின் ச…
-
- 0 replies
- 691 views
-
-
விளையாட்டு வினையாக முடிய ஜிம்பாவே கிரிக்கெட் வீரர் பன்யாங்கரா நீக்கம் ஜிம்பாவே அணியின் வீரர் பன்யாங்கரா விளையாட்டுத் தனமாக மிட்செல் ஜான்சன் தொடர்பான ஒரு வீடியோவை தன் அணி சகாக்களிடம் பகிர்ந்து கொள்ள அவர் அணியிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் முதல் போட்டியில் ஜிம்பாவேயைச் சந்திக்கும் முன்னர் இதனை பன்யாங்கரா செய்தது பெரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு இட்டுச் சென்றது. இதனால் ஒரு போட்டித் தொகையையும் இழந்த அவர், முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவர் என்ன வீடியோவைப் பகிர்ந்து கொண்டார் என்பதுதான் வேடிக்கை. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் யூ டியூப் சானலிலிருந்து ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சன் இங்கிலாந்து வீ…
-
- 0 replies
- 526 views
-
-
சானியா மிர்ஸாவின் 20 வருட விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது! கட்டுரை தகவல் எழுதியவர்,சாரதா உக்ரா பதவி,மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தமது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி போட்டியின் முதல் சுற்றில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. துபாய் ட்யூடி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்- சானியா இணை, குதர்மெடோவா, சாம்சோனோவா ஜோடியிடம் 4-6, 0-6 என்ற செட்களில் தோல்வியடைந்தது. இந்த தோ…
-
- 0 replies
- 663 views
- 1 follower
-
-
தோனி, டிராவிட், கோலி போன்ற நல்ல குணமுள்ளவர்கள்ள் கிரிக்கெட்டுக்குத் தேவை: ஐசிசி புகழாரம் ஐசிசி நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்ஸன் : கோப்புப்படம் வாழ்க்கையில் நல்ல குணமும், நல்ல ஒழுக்கமான நடவடிக்கையும் கொண்ட வீரர்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் அவசியம். அதிலும் தோனி, டிராவிட், கோலி போன்ற வீரர்கள் கிரிக்கெட்டுக்கு அவசியம் என்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் புகழாரம் சூட்டியுள்ளார் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் பங்கேற்றார். அவர் பேசியதாவது: இன்றைய…
-
- 0 replies
- 443 views
-
-
சதுரங்கத்தில் மட்டுமன்றி கராத்தேயிலும் சளைக்காத ஹரிகிஷன் இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகள் பலவற்றிலும் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய, சாம்பியன் பட்டங்களையும் பதக்கங்கiயும் சான்றிதழ்களையும் தம்வசப்படுத்திய கண்டி, புனித திருத்துவ கல்ல}ரியில் 6ஆம் தரத்தில் பயிலும் மாணவனான கிருபாகர் ஹரிகிஷன், கராத்தேயிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை சோடோகன் கராத்தே கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 8ஆவது தேசிய கராத்தே சம்பியன் கிண்ண போட்டி, கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது. இரண்டரை வயது முதல் சதுரங்கத்தில் தன்னுடைய திறமையை காண்பித்துவரும் இவர், போலந்து, இந்தியா, ரஷ்யா மற்ற…
-
- 0 replies
- 405 views
-
-
சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: பங்களாதேஷ் அணி வெற்றி சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.. இதன் முதலாவது டெஸ்ட் போட்டியில், சிம்பாப்வே அணி 151 ஓட்டங்களால் …
-
- 0 replies
- 685 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக ஜொன்டி ரோட்ஸை நியமிப்பதற்கான பேச்சுக்களில் இலங்கை கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான ஜொன்டி ரோட்ஸ் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுநராக பணியாற்றுகிறார். இலங்கை அணியின் பயிற்றுநர்கள் விலகிய நிலையில் வரும் ஜுன் 8 ஆம் திகதி 3 டெஸ்ட், 5 ஒருநாள், 2 ருவென்ரி-20 போடடிகளில் விளையாட பாகிஸ்தான் அணி இலங்கை வருகிறது. இந்நிலையிலேயே இலங்கை அணியினருக்குப் பயிற்சிகளை வழங்க ஜொன்டி ரோட்ஸை ஒப்பந்தம் செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் சபை கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. http://www.malarum.com/article/tam/2015/05/12/10033/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஆன்டி முர்ரேவுடன் இணைகிறார் பயஸ் : 42 வயதில் 101 பார்ட்னர்கள்! இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயசுக்கு தற்போது 42 வயதாகிறது. இன்னும் ஒரு வருட காலம் டென்னிஸ் விளையாட அவர் திட்டமிட்டுருக்கிறார். அண்மையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் லியாண்டர் பயஸ் டேனியல் நெஸ்டருடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். இந்த டேனியல் நெஸ்டர், லியாண்டரின் 100வது பார்ட்னர் ஆவார். இந்த இருவரும் 8 தொடர்களில் ஆடினர். ஆனால் ஒரு தொடரில் கூட இறுதி ஆட்டத்துக்கு முன்னேறவில்லை. இதையடுத்து டேனியல் நெஸ்டரை விட்டு பிரிந்து ஆன்டி முர்ரேவுடன் இணைந்து விளையாட லியாண்டர் பயஸ் முடிவு செய்துள்ளார். மான்ட்ரியல…
-
- 0 replies
- 321 views
-
-
டெஸ்ட் அரங்கில் ஆயிரம் சிக்சர் அடித்து இந்தியா சாதனை! இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 393 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியாவின் நம்பிக்கை வீரர் ரோஹித் சர்மா 5 பவுண்டரி 3 சிக்சருடன் 79 ஓட்டங்கள் எடுத்தார்.இதில் ஹெராத் வீசிய 52வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விளாசினார். இந்த சிக்சர் டெஸ்ட் போட்டியில் இந்தியா அடித்த ஆயிரமாவது சிக்சர் ஆகும். தொடர்ந்து இந்த போட்டியில் ரோகித் சர்மா மேலும் 2 கிச்சர்களை அடித்தார். இதனால் தற்போது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடித்துள்ள சிக்சர்களின் எண்ணிக்கை 1002 ஆக உள்ளது. கடந்த 1932ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்தி…
-
- 0 replies
- 793 views
-
-
டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் சங்ககார முதலிடத்தில் [02 - January - 2008] [Font Size - A - A - A] டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை வீரர் குமார் சங்ககார மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்ட தரவரிசையில் அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் முதலிடத்திலிருந்து வந்தார். தென்னாபிரிக்க வீரர் கலிஸ் 2 ஆவது இடத்திலும், குமார் சங்ககாரா 3 ஆவது இடத்திலுமிருந்தனர். நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஐ.சி.சி.தரவரிசைப் பட்டியலில் மீண்டும் குமார் சங்ககார (933 புள்ளிகள்) முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முடிவில் முதலிடம் பிடித்த சங்ககார பின்னர் அதனை இழந்தார். இந்தியாவுக்கு எதிரான முத…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஹெராத் ஓய்வு எப்போது கொழும்பு: ‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு தற்போது இல்லை. உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன்,’’ என, இலங்கை அணியின் ஹெராத் தெரிவித்தார். இலங்கை அணியின் ‘சுழல்’ வீரர் ஹெராத், 37. இதுவரை 63 டெஸ்ட் (278 விக்.,), 71 ஒரு நாள் (74), 9 ‘டுவென்டி–20’ (12) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இவர் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு என்னிடம் தற்போது இல்லை. காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவதால், உடற்தகுதியை சிறப்பாக பராமரிக்க முடியவில்லை. பவுலிங் பற்றி எவ்வித உத்தரவாதமும் என்னால் தர முடியாது. இன்னும் எவ்வளவு காலம் அணியில் நீடிப…
-
- 0 replies
- 372 views
-
-
அதிசிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸி ஆறாவது தடவையாக கைப்பற்றியுள்ளார் September 24, 2019 சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதை ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாக கைப்பற்றியுள்ளார். சர்வதேச மற்றும் கழகமட்ட போட்டிகளில் சிறந்து விளையாடிய கால்பந்தாட்ட வீரர்களை கௌரவிப்பதற்கான வருடாந்த விருது வழங்கும் விழா இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றது. இதன்போது ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதுக்காக போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரெஞ்ச் அணியின் கைலியன் இம்பாப்பே ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் சர்வதேச மற்றும் கழகமட்ட போட்டிகள…
-
- 0 replies
- 552 views
-
-
[size=4]ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) போட்டிகளில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மீண்டும் நிராகரித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இப்போட்டிகளை நடத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் திட்டமிட்டுள்ளது. எஸ்.எல்.பி.எல். போட்டிகளில் விளையாட தனது வீரர்களை அனுமதித்தால், ஏனைய நாடுகளால் ஏற்பாடு செய்யப்படும் இருபது20 போட்டிகளிலும் விளையாட அவர்களை அனுமதிக்க வேண்டியிருக்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கருதுகிறது. அத்துடன், இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் மாதங்களில் இறுக்கமான சுற்றுலா அட்டவணையை கொண்டுள்ளது. இலங்கையில் ஒருநாள் மற்றும் இருபது20 சுற்றுப்போட்டிகளில் இந்திய…
-
- 0 replies
- 666 views
-
-
கெளதம் கம்பீர் கதை முடிந்ததா? #EndOfGambhir? தோல்வியை நினைத்து வெற்றியாளர்கள் பயப்பட மாட்டார்கள். தோல்வி என்பது வெற்றிக்கான முயற்சிகளின் ஒரு அங்கேம. தோல்வியைத் தவிர்க்க நினைப்பவர்கள் வெற்றியையும் தவிர்க்கிறார்கள். - ஒரு வாரத்துக்கு முன்பு, ட்விட்டரில் இதை ரீவிட் செய்திருந்தார் கவுதம் கம்பீர். நேத்து என்னடான்னா... அவரை இந்திய அணியில் இருந்தே நீக்கி விட்டது தேர்வுக்குழு. இது கங்குலிக்கு முன்பே புரிந்திருக்கிறது. அதனால்தான் விசாகப்பட்டினம் டெஸ்டில் கம்பீரை உட்கார வைத்து விட்டு, ராகுலை தேர்வு செய்தபோது கங்குலி இப்படிச் சொன்னார்... ''கெளதம் கம்பீர் விஷயத்தில் இந்திய அணி முடிவெடுத்தாக வேண்டும். உண்மையிலேயே அவர் விளையாட வேண்டும் என நினை…
-
- 0 replies
- 542 views
-
-
நான் எதிர்கொண்டதிலேயே மிகச்சிறந்த பவுலர் கிளென் மெக்ரா: மனம் திறக்கும் ராகுல் திராவிட் இந்த ஜனவரி 9, 2005-ம் ஆண்டு புகைப்படத்தில் சுனாமி நிதிதிரட்டல் ஆட்டத்திற்காக புகைப்படத்திற்கு நிற்கும் திராவிட், கிளென் மெக்ரா. | கெட்டி இமேஜஸ். இந்தியாவின் ‘சுவராக’ திகழ்ந்த ராகுல் திராவிட் தான் எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களில் மிகச்சிறந்தவர் கிளென் மெக்ராதான் என்று மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார். மும்பையில் ‘லிங்க் சொற்பொழிவு வரிசை’யில் நேற்று உரையாற்றிய ராகுல் திராவிட் கூறியதாவது: என் தலைமுறையில் ஆஸ்திரேலியா மிகச்சிறந்த அணி. இவர்கள் அனைவரிலும் நான் எதிர்கொண்ட மகா பவுலர், கிரேட் ஆஸ்திரேலிய பவுலர் மட்டுமல்லாத…
-
- 0 replies
- 350 views
-
-
ஆடப்போறான் தமிழன்? - ஜூட் பிரகாஷ் எழுபதுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில், எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வரும் தமிழன் ஒருவன் ஆடப் போகிறான் என்ற ஆதங்கம், இன்றும் தீராமல் நம்மவர் மத்தியில் இருந்து கொண்டேயிருக்கிறது. சில வாரங்களிற்கு முன்னரும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை சேர்த்த மதுஷனும் வியாஸ் காந்தனும், இலங்கை U19 கிரிக்கெட் அணியில் இடம்பெறப் போகிறார்கள் என்ற செய்தி, மீண்டுமொருமுறை எதிர்பார்ப்பை நம்மவர்கள் மத்தியில் விதைத்திருக்கிறது. நம்பி நம்பி ஏமாந்து போன எங்கட சனத்தின் அரசியல் பயணம் போல், இந்த கிரிக்கெட் பயணமும் நம்பி நம்பி ஏமாந்தும் தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது. பிரித்தானியாவின் ஆதிக்கத…
-
- 0 replies
- 915 views
-
-
Nike Vaporfly ஷூவில் என்ன பிரச்னை? விளையாட்டில் உலக சாதனைகளை உடைக்க இந்த ஷூ பயன்படுத்தப்பட்டதா? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NIKE.COM நைக் நிறுவனத்தின் வேபர்ஃப்லை (Nike Vaporfly) ஷூவைக் குறித்து பார்ப்பதற்கு முன், சில அடிப்படை விஷயங்களை அலசிவிடுவோம். 1896ஆம் ஆண்டில் நடந்த முதல் நவீன ஒலிம்பிக்கில், 42.2 கிலோமீட்டர் மாரத்தன் பந்தயத்தை 2 மணி 58 நிமிடம் 50 நொடிகளில் ஓடி முடித்தது மனித இனம். அப்போது அதுவே மிக பிரும்மாண்டமான சாதனையாக கருதப்பட்டது. சுமார் 125 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அதிக நாகரீகமடைந்த, தொழில்நுட்பங்களால் ச…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
ஒருநாள் தொடரில் இந்தியாவை வைட் வோஷ் செய்தது தென்னாபிரிக்கா! இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 3-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி தொடரை வென்று இந்தியா அணியை, வைட் வோஷ் செய்துள்ளது. கேப் டவுனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அத…
-
- 0 replies
- 225 views
-
-
அனைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் : சயீத் அஜ்மல் 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அஜ்மல் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாகவும் அஜ்மல் த்ரோ செய்வதாக புகார் எழ இவரது பந்து வீச்சு முறை மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட பிறகு இவரால் முன்பு போல் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை, இன்னும் சொல்லப்போனால் விக்கெட்டுகளையே வீழ்த்த முடியாமலே போனது. “நடப்பு தேசிய டி20 தொடருக்குப் பிறகு அனைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன், என்னை பொறுத்தவரை நான் என்ன சாதிக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சாதித்ததாகவே கருதுகிறேன…
-
- 0 replies
- 290 views
-