விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும் இறுதிக்கட்ட பலப்பரீட்சை ஆரம்பம் ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் விளையாடும் 32 அணிகளையும் தீர்மானிக்கும் இறுதிக் கட்ட தகுதிகாண் போட்டிகள் இன்று (9) ஆரம்பமாகவுள்ளன. பிரேசில், ஆர்ஜன்டீனா, ஜெர்மனி என பல பலம்மிக்க அணிகளும் ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுள்ள நிலையில் உலகெங்கும் மேலும் சில அணிகள் தமது உலகக் கிண்ண வாய்ப்புக்காக இறுதி முயற்சியில் ஈடுபடவுள்ளன. ஆபிரிக்க மண்டலத்தில் இரண்டாவது சுற்றின் கடைசிக் கட்ட குழுநிலைப் போட்டிகள் நாளை (10) தொடக்கம் நவம்பர் 14ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. ஆபிரிக்காவில் இருந்து நைஜீரியா, எகிப்து அணிகள் ஏற்கனவே …
-
- 0 replies
- 228 views
-
-
கிரிஸ்மான் சிறப்பான ஆட்டத்தால் ஐரோப்பா லீக் கோப்பையை வென்றது அட்லெடிகோ மாட்ரிட் மார்சைல் அணிக்கெதிரான ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. #AtleticoMadrid ஐரோப்பா லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்யூ டி மார்சைல் - அட்லெடிகோ டி மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அட்லெடிகோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிரிஸ்மான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் கிரிஸ்மான் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அட்லெடிகோ மா…
-
- 0 replies
- 363 views
-
-
தோனியின் துருப்புச் சீட்டு ஷமி புதுடில்லி: இங்கிலாந்து தொடரில் ஏமாற்றிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மீண்டும் கேப்டன் தோனியின் துருப்புச் சீட்டாக உருவாகியுள்ளார். இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 24. இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் 66 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 டெஸ்டில் 5 விக்., மற்றுள் 4 ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் மட்டும் சாய்த்தார். இதையடுத்து, கடினமான பயிற்சியில் ஈடுபட்ட ஷமி, பந்தை ‘லேட் சுவிங்’ செய்வதில் மீண்டும் அசத்த துவங்கியுள்ளார். இதற்கான பலனை, தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறுவடை செய்யத் துவங்கியுள்ளார். முதல் இரு போட்டியில் தலா 4 என, மொத்தம் 8 விக்கெ…
-
- 0 replies
- 514 views
-
-
ரிஷப் பண்ட் டக் அவுட்டில் என்னோடு இருக்க வேண்டும்… ரிக்கி பாண்டிங் ஆசை! ரிஷப் பண்ட் சமீபத்தில் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இம்மாத தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறத…
-
- 0 replies
- 598 views
-
-
Published By: SETHU 04 MAY, 2023 | 10:47 AM 2027 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் உரிமையை கத்தார் பெற்றுள்ளது. 2026 ஆம் ஆண்டின் பெண்களுக்கான உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகளை ஜேர்மனி நடத்தும் எனவும் சர்வதேச கூடைப்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் முதல் தடவையாக உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்திய கத்தார். 2027 முதல் முதல் தடவையாக கூடைப்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவுள்ளது. தலைநகர் தோஹாவில் தற்போதுள்ள அரங்குகளில் இப்போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகள் எ…
-
- 0 replies
- 543 views
- 1 follower
-
-
நொந்து போன ‘கீப்பர்’ நுாயர் ஜனவரி 14, 2015. ஜூரிச்:‘‘உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது, எங்களைப் போன்ற கோல் கீப்பர்களுக்கு கிடைப்பது சிரமம்,’’ என, மானுவல் நுாயர் தெரிவித்தார். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது இறுதி பட்டியலில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணி கோல்கீப்பர் மானுவல் நுாயர் என, 3 பேர் இடம் பெற்றனர். இதில் ரொனால்டோ முதலிடம் (37.66 சதவீதம்) பெற்று விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி (15.76), நுாயர் (15.72) அடுத்த இரு இடங்கள் பெற்றனர். இதுகுறித்து நுாயர் வேதனையுடன் கூ…
-
- 0 replies
- 412 views
-
-
பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடரில் ரஷ்ய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஷரபோவா, கஸ்னெட்சோபா, சபினா என ரஷ்ய வீராங்கனைகள் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பிரான்ஸின் அமெலி மவுரி ஸ்மோ அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில் `நம்பர் -2' வீராங்கனை ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சகநாட்டு வீராங்கனை அலா குட்ரியாவ்சேவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-1 என எளிதாக தன்வசப்படுத்திய ஷரபோவா இரண்டாவது செட்டிலும் அசத்தினார். இதை 6-4 என கைப்பற்றினார். இறுதியில் 6-1, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்…
-
- 0 replies
- 862 views
-
-
13 MAY, 2024 | 05:22 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுநரான பிரண்டன் மெக்கல்லம் ஜேம்ஸ் அண்டர்சனுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருந்ததாக இங்கிலாந்தின் 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு புதிய வேகப்பந்துவீச்சாளர்களை கண்டறியும் பணியில் இங்கிலாந்து அணி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜேம்ஸ் அண்டர்சனிடம் தனிப்பட்ட …
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
கத்தாரில் இந்தியர்களை நம்பி களமிறங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! பாகிஸ்தானின் சூப்பர் லீக் போட்டியின் முதல் சீசன், கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குட்டி நாட்டில் லட்சக்கணக்கான இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் வசிப்பதால், இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. இந்தியாவின் ஐ.பி.எல். போட்டியை போல, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சி எடுத்து வருகிறது. அடுத்த ஆண்டு, இந்த தொடரின் முதல் சீசனை நடத்தி விட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த தொடரை பாகிஸ்தானில் நடத்தாமல் வளைகுடா நாடுகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் இ…
-
- 0 replies
- 311 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் மைதானங்களில் பிளாஸ்டிக் போத்தல்கள் டோக்கியோவில் நடைபெறவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகளின்போது, மைதானங்களுக்கு பிளாஸ்டிக் போத்தல்கள் கொண்டு செல்வதை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. சமீபத்திய போட்டிகளின்போது, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மைதானங்களுக்கு பிளாஸ்டிக் போத்தல்களில் எந்த திரவப்பொருளும் எடுத்துச் செல்லக்கூடாது என பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜப்பானில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். மைதானங்களுக்கு பார்வையாளர்கள் பி…
-
- 0 replies
- 345 views
-
-
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி வீராங்கனை வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 36 கிலோ மீற்றர் தூர சைக்களிள் ஓட்டப்போட்டியில் நிர்மலேஸ்வரன் விதுசனா கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141633&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 229 views
-
-
2016 உலக இருபது 20 போட்டிக்கு பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்பவேண்டாம் என்கிறார் மியண்டாட் 2016 உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை முன்னாள் வீரர் ஜாவேட் மியண்டாட் கோரியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறாவிட்டால் அடுத்த வருட உலக இருபது 20 போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணியை அனுப்பக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கூறுகின்றது. அத…
-
- 0 replies
- 270 views
-
-
பலோன் டீ ஓர் விருதை ஆறாவது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி By Mohamed Arshad - கால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்-டீ-ஓர் (Ballon d’or) விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (02) பிரான்சில் கோலாகலமாக நடந்தேறியது. 2019இன் மிகச்சிறந்த வீரருக்கு பரிந்துரைக்கப்பட்ட 30 வீரர்களின் அர்ஜென்டீனா மற்றும் பார்சிலோனா அணிகளின் அணித்தலைவரும் இம்முறை அதிக கோல் அடித்தவருக்கான தங்கப்பாதணியை வென்ற லியோனல் மெஸ்ஸி குறித்த விருதை வென்றார். கடந்த பருவகாலத்தில் ரியல் மட்ரிட்டில் இருந்து பிரிந்து இத்தாலியின் ஜுவன்டஸ் அணிக்காக ஆடி Serie A கிண்ணத்தை வென்று கொடுத்தவரும் போர்த்துக்கல்லின் அணித் தலைவருமாகிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, இம்…
-
- 0 replies
- 439 views
-
-
திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் – மீண்டும் அறிவித்தது ஜப்பான்! by : Benitlas திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் மீண்டும் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் ஜப்பான் இது தொடர்பான அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளது. ஜப்பான் அமைச்சரவை செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச ஒலிம்பிக் குழு, டோக்கியோ நகர அரசாங்கம் மற்றும் அமைப்புக்களின் குழுக்களுடன் இது தொடர்பாக ஓன்றிணைந்து செயல்ப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 364 views
-
-
இலங்கை அணிக்கு எந்த விதமான போட்டியாக இருந்தாலும் ஒரு தலைவர்தான் இனிவரும் அனைத்து விதமான போட்டிகளுக்கும் இலங்கை அணிக்கு ஒரு தலைவர் முறைமை கடைப்பிடிக்கப்படவுள்ளது. அதேநேரம் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸும் உப தலைவராக தினேஷ் சந்திமாலும் நீடிப்பர் என இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 என 3 வகையான போட்டிகளிலும் இனி ஒரே தலைவர் தான் செயற்படு வார். இதுதான் எமக்கு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். இலங்கை அணியின் தலைவர் மற்றும் உப தலைவர்களை எடுத்து பார்த்தால் அவர்களிடம் சிறந்த…
-
- 0 replies
- 439 views
-
-
லண்டன்: ஜூன் 29ம் தேதி லண்டனில் துவங்கவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பிரிட்டனில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 1990களுக்குப் பிறகு உலகப் புகழ் பெற்றது. கடைசியாக் இரண்டாம் உலகப் போரின்போது விம்பிள்டன் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தற்போதுதான் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஜெர்மன் டென்னிஸ் பெடரேஷன் துணை பிரஸிடண்ட் டிர்க் ஹார்டோர்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜூன் 29 1945ம் தேதி நடக்க இருந்த கிராண்ட் ஸ்லாம் போட்டி இரண்டாம் உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டபோது டென்னிஸ் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இதழுக்கு பேட்டி அளித்த விம்பிள்டன் நிர்வாகிகள், அடு…
-
- 0 replies
- 655 views
-
-
தேசிய மட்ட கராட்டி போட்டிகளில் தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் -வி.சுகிர்தகுமார் தேசிய மட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளுக்காக அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவில் ஒருவரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் இருந்து மூவரும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர். திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரியில் கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணமட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளில் கலந்து கொண்ட இவ்வீரர்களே தேசியமட்ட போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசாந்தன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 239 views
-
-
ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நிறைவுக்கு வந்துள்ள 31 வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தான் பெற்றுக் கொண்ட பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடத் துணிந்திருக்கிறார் போலந்து நாட்டை சேர்ந்த தட்டு எறிதல்(Discus Through ) வீரர் பியோட்டர் மலசோவ்ஸ்கி. 33 வயதான இந்த வீரர், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார். இதனிடையே அந்த நாட்டை சேர்ந்த ஓலெக் என்ற 3 வயது சிறுவன் கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு உதவி புரிவதில் ஆர்வம் காட்டுகிறா…
-
- 0 replies
- 477 views
-
-
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம். பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர, பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் பெற்றுள்ளார். அடுத்து வரவுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கெதிரான தொடருக்காகவே 39 வயதான திலான் சமரவீரவின் இந்த நியமனம் அமைந்துள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நசிமுல் ஹாசனின் பணிப்புரையின் பேரில்,தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க தனக்கு உதவியாக துறைசார்ந்த பயிற்சியாளர்களை பரிந்துரைத்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் அண்மையில் மேற்கிந்திய தீவ…
-
- 0 replies
- 349 views
-
-
உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 48 நாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 48 நாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் தலைவர் Gianni Infantino இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது அளித்த வாக்குறுதிகளை விடவும் அதிகளவு எண்ணிக்கையிலான அணிகள் சேர்க்கப்பட வேண்டுமென அவர் தற்போது கோரியுள்ளார். 16 அணிகள் முதல் நொக்அவுட் சுற்றில் மோதிக் கொள்ள வேண்டுமெனவும் அதன் பின்னர் தற்போது காணப்படுவது போன்று 32 அணிகளைக் கொண்ட சாதாரண சுற்றுக்களை நடத்த முடியும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார். …
-
- 0 replies
- 286 views
-
-
அதிக தடவை எல்.பி.டபிள்யூ.வில் வீழ்ந்த சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில், எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்த 10000-ஆவது வீரர் என்கிற பதிவு தென்னாபிரிக்க வீரர் அம்லாவுக்குக் கிடைத்துள்ளது. இவர் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நுவன் பிரதீப்பிடம் 48 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்து கவனம் பெற்றுள்ளார். இதையடுத்து எல்.பி.டபிள்யூ. தொடர்புடைய ஏராளமான புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இதில் இரண்டு முக்கிய புள்ளிவிவரங்களில் இரு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தடவை எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டை இழந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் 200 டெஸ்ட் போட்டிகளில் 296 தடவை ஆ…
-
- 0 replies
- 353 views
-
-
சாம்பியனாகியும் நம்பர் ஒன்னை மிஸ் செய்த சானியா பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ், இறுதிப் போட்டியில் சானியாமிர்சா-பெதனி மட்டேக் இணை, ரஷ்யாவின் மகரோவா, வெஸ்னியா இணை மோதினர். இதில் 6-2, 6-3 என்ற செட் கணக்குகளில் சானியா இணை வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆனாலும், சர்வதேச அரங்கில், இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை சானியா இழந்துள்ளார். சானியா மிர்சா கடந்த 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் 13-ஆம் தேதி முதல், பெண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77223-sania-loses-no-1-spot-in-tennis.art
-
- 0 replies
- 357 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா..! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியிலிருந்து இடைநடுவில் விலகியிருந்தார். கொரோனாவிற்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். மேலும், அஸ்வின் குடும்பத்தில், குழந்தைகள் உட்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் …
-
- 0 replies
- 812 views
-
-
மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும்: என்.சீனிவாசன் நம்பிக்கை கோப்புப் படம்.| ஆர்.ரகு. சென்னை விளம்பர கிளப் நடத்திய விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிசிசிஐ தலைவர், என்.சீனிவாசன், மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2013 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்த கடும் ஊழல் புகார்கள் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிகப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய என்.சீனிவாசன் கூறியதாவது: அப்போது ஐபிஎல் சேர்மனாக இருந்த லலித் மோடி இந்திய சிமெண்ட்ஸ் அணியை வாங்கி ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க அழைப்ப…
-
- 0 replies
- 264 views
-
-
தொடரும் தென் ஆப்பிரிக்க அணியின் துயரம்: டி20-யில் இங்கிலாந்திடம் படுதோல்வி இங்கிலாந்து ஆட்ட நாயகன் பேர்ஸ்டோவுக்கு கைகொடுக்கிறார் டிவில்லியர்ஸ். | படம்.| கெட்டி இமேஜஸ். ஏஜியஸ் பவுலில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற கேப்டன் டிவில்லியர்ஸ் முதலில் பேட் செய்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களையே எடுக்க முடிந்தது. தொடர்ந்து ஆடிய மோர்கன் தலைமை இங்கிலாந்து அணி ராய் (28), ஹேல்ஸ் (47), பேர்ஸ்டோ (60) ஆகியோரது தாறுமாறு அத…
-
- 0 replies
- 369 views
-