விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
நைரோபி மாரத்தான் ஓட்டத்தில் கடைசி நேரத்தில் நுழைந்து ஏமாற்றிய வீரர் கைது கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நைரோபி மாராத்தான் ஓட்டம். | படம்: ராய்ட்டர்ஸ். கென்யாவில் நடைபெற்ற நைரோபி சர்வதேச மாரத்தான் ஓட்டத்தில் திடீரென இடையே நுழைந்து 2-வதாக வந்த மோசடி வீரர் கைது செய்யப்பட்டார். இவர் மீது மோசடி மற்றும் ஏமாற்று வேலை தொடர்பான வழக்குகள் தொடரப்படலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிறன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 28-வயது ஜூலியஸ் நஜோகு என்ற வீரர் 42 கிமீ தூரம் ஓடாமல், கடைசி நேரத்தில் ஓட்டத்தின் இடையே புகுந்து 2-வதாக வந்தார். இந்த இடத்துக்கான பரிசுத் தொகை 7,000 டாலர்கள் ஆகும். ஆனால் அவர் செய்த மோசடி அம்பலமாக, கைது செய்யப்பட்டார். 42 கிமீ ஓடியதற்கான…
-
- 0 replies
- 173 views
-
-
இந்திய அணி தோனி தலைமையில் 2015ல் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை தோனி தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் ஒருநாள் போட்டி தொடர்களில் ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இந்திய கிரிக்கெட் அணியை பல்வேறு உச்சங்களுக்கு கொண்டு சென்ற தோனிக்கு இந்த ஆண்டு கடும் சோதனையாகவே அமைந்துள்ளது. 2007ல் டி20 உலககோப்பை, 2011ல் 50 ஓவர் உலககோப்பை ஆகியவற்றை தோனி தலைமையில் இந்திய அணி வென்றது. அதன் பின்னர் இந்திய அணிக்கு பல்வேறு ஏற்றங்கள் காணப்பட்டது. வெளிநாட்டு தொடர் களிலும் தோனி தலைமையில் இந் திய அணி பிரகாசிக்கத் தொடங் கியது. தோனி களத்தில் வகுக்கும் வியூகங்களுக்கு கைமேல் பலனும் கிடைத்து வந்தது. தோனியை அனைவரும் தலை யில் தூக்கி வைத்து கொண்டாடி னர். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எல்லாம் தலைகீழா…
-
- 1 reply
- 223 views
-
-
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் வேண்டும்; சச்சின்&வோர்ண் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இருபது-20 கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரும் ஷேன் வோர்ணும் கோரிக்கை விடுத்துள்ளனர். 1900ஆம் ஆண்டு தொடக்கம் கிரிக்கெட்டானது ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இடம்பெற்றிருக்காத போதும் அடுத்த மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையும் சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவும் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து சந்தித்து கலந்துரையாடவுள்ளன. கிரிக்கெட்டை ஒலிம்பிக் விளையாட்டாக பார்க்க விரும்புவதாகவும், யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் கிரிக்கெட், ஒலிம்பிக் விளையாட்டாக வரலாம் என ஷேன் வோர்ண் தெரிவித்துள்ளார். கிரிக்கெட், ஒலிம்பிக் விளையாட்டாவது சிறந்த யோச…
-
- 0 replies
- 394 views
-
-
பீபா ஊழல்: 2006 உலகக் கிண்ண ஏலத்தில் தவறு ஏற்பு 2006ஆம் ஆண்டு ஜேர்மனியில் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் ஏலத்தில் தவறுகள் காணப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, அந்த உலகக் கிண்ணத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் ஜேர்மனிக்காக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவருமான பிரான்ஸ் பெக்கென்பவர் தெரிவித்துள்ளார். எனினும், வாக்குகளை விலைகொடுத்து வாங்கியமை குறித்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். சஞ்சிகையொன்று வெளிப்படுத்திய குற்றச்சாட்டின்படி, 6.7 மில்லியன் யூரோக்களைச் செலுத்தி, ஜேர்மனுக்கான வாக்குகள் விலைகொடுத்து வாங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பிரான்ஸின் கருத்தின்படி, நிதியியல் மானியமொன்றுக்காக, பீபாவுக்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்…
-
- 2 replies
- 254 views
-
-
இரத்ததானம்... இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் 38ஆவது பிறந்த தினம், நேற்று செவ்வாய்க்கிழமை (27) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற இரத்ததான முகாமை படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/157676/இரத-தத-னம-#sthash.X2eb1v1O.dpuf
-
- 1 reply
- 282 views
-
-
சிறிவர்தன சிறந்ததொரு தெரிவு : மெத்தியூஸ் இலங்கை அணியின் வீரர் மிலிந்த சிறிவர்தன சிறந்ததொரு தெரிவென்று பாராட்டியுள்ளார் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ். மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்றுமுடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி இழந்திருந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருப்பது விசேட அம்சமாகும். இந்தத் தொடரின் இரண்டாவதும் கடைசியுமான போட்டி கொழும்பு பி.சரா கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப்போ…
-
- 1 reply
- 369 views
-
-
சோபர்ஸ் இல்லையென்றால் ..... : மனம் திறந்த அர்ஜுன ரணதுங்க சேர் கார்பீல்ட் சோபர்ஸ் மட்டும் இல்லையென்றால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது என்று, இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத்தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரராக கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கை வந்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளராகப் பங்குபற்றிய சேர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு, துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சில், அமைச்சர் அர்ஜுன ரண…
-
- 0 replies
- 290 views
-
-
இந்தியன் பிரீமியர் லீக்கின் புதிய இலட்சினை வெளியீடு October 28, 2015 புதிய டைட்டில் அனுசரணையாளர் விவோவுடனான ஐ.பி.எல் புதிய இலட்சினை நேற்று முன்தினம் திங்கட் கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி ஒன்பதாவது ஐ.பி.எல் போட்டிகள் விவோ ஐ.பி.எல் என அழைக்கப்படவுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகளின் டைட்டில் அனுசரணையாளராக இருந்த பெப்சி நிறுவனம் அண்மையில் வெளியேறியது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சூதாட்டத்தினால் கிரிக்கட் மதிப்பிழந்துள்ளதாகத் தெரிவித்து தனது அனுசரணையிலிருந்து விலகியது. இதனையடுத்து சீனாவின் ஸ்மார்ட் போன் நிறுவனமான விவோ எதிர்வரும் இரு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வங்கி உத்தரவாதம் கடந்தவாரம் வழங்கப்பட்டது. இந்நிலையி…
-
- 0 replies
- 400 views
-
-
200 மில்லியன் யூரோ செலவில் லோட்ஸ் மைதானம் அபிவிருத்தி October 28, 2015 இங்கிலாந்து லோட்ஸ் கிரிக்கட் மைதானம் 200 மில்லியன் யூரோ செலவில் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு புதிய பரிமாணம் பெறவுள்ளது. உலகின் மிகப்பிரபலமான கிரிக்கட் மைதானமான இந்த லோட்ஸ் மைதானம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆஸ் தொடரின் போது புதிய தோற்றத் துடன் தயாராக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த புதுப்பிக்கும் திட்டத்தில் 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அலன் அரங்கு, 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டேவன் அரங்கு இரண்டும் இடிக்கப்படவுள்ளது. மேலும் புதிய திட்டத்தில் இரு உணவகங்கள் மற்றும் பார்வையாளர்கள் இருக்கைகள் ஆகியன அதிகரிக்கப்படவுள்ளன. சுமார் 30 ஆயிரத்து 530 பார்வையாளர்கள் உள்ளடக்கக் கூடியதாக இது அமையவு…
-
- 0 replies
- 278 views
-
-
அகதிகளாக இருக்கும் தடகள வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட அனுமதி AFP அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளில் அகதிநிலையில் உள்ள தடகள வீரர்களும் ஒலிம்பிக் கொடியின் கீழ் கலந்து கொள்ளலாம் அகதி நிலையில் இருக்கும் பிரபல தடகள விளையாட்டு வீரர்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. அகதி நிலையில் இருக்கும் பிரபல தடகள விளையாட்டு வீரர்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இவர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிடுவார்கள். இது வரை இது போல அகதி நிலையில் இருக்…
-
- 0 replies
- 243 views
-
-
மைக்கல் ஷூமாக்கர் குணமடைவதற்கான நம்பிக்கை உள்ளது - நெருங்கிய நண்பரான ரொஸ் பிரவுண் கூறுகிறார் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது படுகாயமடைந்த போர்மியூலா வன் முன்னாள் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் குணமடைவதற்கான நம்பிக்கை இன்னும் உள்ளது என அவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரொஸ் பிரவுண் தெரிவித்துள்ளார். 2013 டிசெம்பர் மாதம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தபோது, மைக்கல் ஷூமாக்கர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். அதையடுத்து, பிரான்ஸிலுள்ள வைத்தியசாலையில் 159 நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர், தற்போது சுவிட்ஸர்லாந்திலுள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். …
-
- 0 replies
- 216 views
-
-
ஃபோர்மியூலா –1 உலக சம்பியன் பட்டத்தை மூன்றாவது தடவையாக ஹமில்டன் வென்றார் ஐக்கிய அமெரிக்க குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தில் வெற்றியீட்டிய மேர்சிடெஸ் அணி சாரதியான லூயிஸ் ஹமில்டன், மூன்றாவது தடவையாக ஃபோர்மியூலா வன் உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். டெக்சாஸ், ஒஸ்டின் ஓடுபாதையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இவ்வருடத்திற்கான 16ஆம் கட்ட குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தில் முதலாம் இடத்தைப் பெற்றதன் மூலம் ஃபோர்மியூலா –1 உலக சம்பியன் பட்டத்தை ஹமில்டன் உறுதி செய்துகொண்டார். சேர் ஜெக்கி ஸ்டுவர்ட்டுக்குப் பின்னர் ஃபோர்மியூலா –1 உலக சம்பியன் பட்டத்தை மூன்று தடவைகள் வென்றெடுத்த இரண்டாவது பிரித்தானியர் என்ற பெருமையை ஹமில்டன் ப…
-
- 0 replies
- 282 views
-
-
பெண் அளித்த புகாரில் கைதான அமித் மிஸ்ரா ஜாமீனில் விடுவிப்பு இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா | கோப்புப் படம் தன்னைத் தாக்கியதாக பெண் ஒருவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அசோக் நகர் காவல் நிலையத்தில் அமித் மிஸ்ராவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பெங்களூரு மாநகர (மத்திய) துணை காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பங்கேற்றார். அப்போது பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியி…
-
- 0 replies
- 199 views
-
-
இந்தியா படுதோல்வி: மும்பை பிட்ச் பராமரிப்பாளரை திட்டி தீர்த்த ரவிசாஸ்திரி! மும்பை: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் விரக்தியடைந்த ரவிசாஸ்திரி, மும்பை பிட்ச் பராமரிப்பாளரை கடுமையாக திட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5வது நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 438 ரன்களை குவித்தது. அந்த அணியில் 3 பேர் சதம் விளாசினர். இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் 10 ஓவர்கள் வீசி, 106 ரன்களை வாரி இறைத்தார்.…
-
- 1 reply
- 248 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி எங்களுடன் விளையாடாவிட்டால் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய கிரிக்கெட் அணி (டிசம்பர்–ஜனவரியில்) விளையாட மறுத்தால் உலகக் கிண்ணத்தை புறக்கணித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷகாரியார் கான் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடர்வதற்கான அனைத்துவித வாய்ப்புகளையும் இந்தியா தவிர்த்தால், அதன் பின்னர், பாகிஸ்தான் அரசின் அறிவுரையை கேட்டு அடுத்தகட்ட முடிவெடுப்போம். அப்படி…
-
- 0 replies
- 165 views
-
-
ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தல் வலுத்து வருகிறது Getty ஜியானி இண்ஃபாண்டினோ மற்றும் மிஷேல் பிளாட்டினி PA பதவி விலகும் பிளாட்டரும், அப்பதவிக்கு போட்டியிடும் ஜோர்டான் இளவரசர் அல் ஹிசைனும் Getty தலைவர் பதவிக்கான போட்டியிலுள்ள டோக்யோ செக்ஸ்வாலே சர்வதேசக் கால்பந்து சம்மேளமான ஃபிஃபா தலைவர் பதவிக்கான போட்டி வலுத்து வருகிறது. ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலரும் போட்டியிடுகிறார் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஜியானி இன்ஃபாண்டினோ அறிவித்துள்ளார். செப் பிளாட்டர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, ஃபிஃபாவின் அடுத்த தலைவருக்கான போட்டி சூடுபிடித…
-
- 0 replies
- 278 views
-
-
-
- 1 reply
- 418 views
-
-
அறிவிக்கப்பட்டது இலங்கை அணி October 24, 2015 மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் மூன்று அறிமுக வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர் செகான் ஜெயசூரிய, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வண் டர்சே மற்றும் சகலதுறை வீரர் தனுக குணதிலக ஆகியோரே அறிமுக வீரர்களாக களமிறங்க உள்ளனர். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகிறது. மூன்று அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளமை மாத்திரம் இன்றி மலிங்க. டில்சான் ஆகிய அனுபவ வீரர்களும் அணிக்கு திரும்புகின்றனர். டெஸ்ட் தொடரில் தடுமா…
-
- 40 replies
- 2.6k views
-
-
கொல்கத்தாவின் பயிற்சியாளரானார் October 24, 2015 அடுத்த ஆண்டுக்கான ஐ.பி .எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாபிரிக்க முன்னாள் வீரர் கலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தாவின் பயிற்சியாளராக இருந்த பெலிஸ், ஜூன் மாதம் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக சென்று விட் டார். இதையடுத்து கலிஸ் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தமாகியுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2481&cat=2
-
- 0 replies
- 340 views
-
-
அடிக்க பாய்ந்தார் காம்பிர்: அபராதத்துடன் தப்பினார் புதுடில்லி: கிரிக்கெட் ஒரு ‘ஜென்டில்மேன்’ ஆட்டம் என்பர். இதற்கு, காம்பிரின் நடவடிக்கை கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் உள்ளது. களத்தில் இவரது அடாவடி தொடர்கிறது. ரஞ்சிக் கோப்பை போட்டியில் பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரியை தாக்க முயன்றார். இதை தடுக்க வந்த அம்பயரையும் இடித்து தள்ளினார். ரஞ்சிக் கோப்பை தொடரின் நான்காவது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதுகின்றன. இதன் 3வது நாளான நேற்று பெங்கால் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. சாட்டர்ஜி அவுட்டானதும், பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரி தொப்பியுடன் களமிறங்கினார். அப்போது வேகப்பந்துவ…
-
- 1 reply
- 571 views
-
-
ஐ.பி.எல். தொடரில் சென்னை இருக்காது தோனி இருப்பார்! சென்னை அணியின் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், சென்னை அணிக்கும் 2 ஆண்டுகள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. வரும் 2016, 17ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி இடம் பெறாது. அதே போல் ராஜஸ்தான் அணிக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால், அந்த அணியில் இரு ஆண்டுகள் ஐ.பி.எல். தொடரில் தலை காட்ட முடியாது. இந்த இரு அணிகளுக்கும் பதிலாக மாற்று இரு அணிகளை உருவாக்க ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் , சென்னை அணியின் கேப்டன் தோனி நேற்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் சென்னை அணியின் முன்னாள் நிர்வாகியும…
-
- 1 reply
- 391 views
-
-
சிம்பாப்வேயை பழிதீர்த்தது ஆப்கானிஸ்தான் October 23, 2015 சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்களைக் கொண்ட தொடரின் நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் 3 இலக்குகளால் ஆப்கானிஸ் தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் தொடர் 2:2 என்று சமநிலையாகியுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிம்பாப்வேயின் முன்னணி வீரர்கள் எவருமே பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. சிப்கபா மட்டும் சிறிது நிதானித்து 26 ஓட்டங்களைப் பெற்றார். ஒரு கட்டத்தில் சிம்பாப்வே 82-6 என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அணியை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டார் ரசா. பின்வரிசை வீரர்களின் ஆட்டம் எடுபடாமல் போக 50 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் சிம்பாப்வே 1…
-
- 4 replies
- 742 views
-
-
ஸ்ரீனிவாசனுடன் தோனி, சு.சுவாமி அடுத்தடுத்து சந்திப்பு: காரணம் என்ன? சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உச்ச நீதிமன்றம் 2 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசனை, இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெற்ற சூதாட்ட புகாரை தொடர்ந்து பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீனிவாசன் விலகினார். இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை…
-
- 1 reply
- 562 views
-
-
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது: மேற்கிந்திய தீவுகள் அணி குறித்து கேரி சோபர்ஸ் கண்ணீர்! மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் விளையாட்டு அழிந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேரி சோபர்ஸ் கண்ணீர் விட்டு அழுதார். கடந்த 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டில், மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத அணியாக வலம் வந்தது. இரு முறை உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. தொடர்ந்து 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறி இந்தியாவிடம் தோல்வி கண்டது. இத்தகைய கிரிக்கெட் பாரம்பரியம் கொண்ட, மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 1995ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் கடும் சரிவை கண்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ,டெஸ்ட் மற…
-
- 2 replies
- 285 views
-
-
டெஸ்ட்டில் தோனியின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல: விருத்திமான் சஹா தோனி, விருத்திமான் சஹா. | கோப்புப் படங்கள். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று கூறியுள்ளார் விருத்திமான் சஹா. டெல்லி-வங்காள ரஞ்சி போட்டியை அடுத்து பிடிஐ-யிடம் சஹா தெரிவிக்கும் போது, “தோனியின் சாதனைகளை பரிசீலிக்கும் போது, தோனியின் நிழல்கள் சுமத்தும் சுமையிலிருந்து வெளிவருவது கடினம். நான் அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை, இன்னும் நிறைய ஆடினால்தான் எனக்கான ஒரு இடத்தை நான் தருவித்துக் கொள்ள முடியும். என்னைக் கேட்டால் தோனி 9/10 என்றால் நான் 2.5/10 என்றே கூறுவேன். ஏன் இந்த வரையறை என்றால் தோனியின் சாதனைகள் அப்படிப்பட்டவை. …
-
- 0 replies
- 186 views
-