விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்ட்டிங் பெயர் : ரிக்கி பாண்ட்டிங் பிறந்த தேதி : 19 - 12 - 1974 பிறந்த இடம் : தாஸ்மனியா டெஸ்ட் போட்டி போட்டிகள் - 110 சதம் - 33 ரன்கள் - 9,368 விக்கெட் - 05 ஒரு நாள் போட்டி போட்டிகள் - 280 சதம் - 23 ரன்கள் - 10,395 விக்கெட் - 03
-
- 0 replies
- 1.1k views
-
-
புதிய கேப்டன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு நாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், 23. இதுவரை 8 டெஸ்ட் (380 ரன், 16 விக்.,), 33 ஒரு நாள் (317, 46), 3 ‘டுவென்டி–20’ (5 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ், இலங்கை செல்கிறது. முதல் போட்டி வரும் அக்டோபர் 14ம் தேதி துவங்குகிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ராம்தினுக்குப்பதில் ‘ஆல்–ரவுண்டரான’ ஹோல்டர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றம்: இது குறித்து தேர்வுக்குழு தலைவர் கிளைவ் லிலாய்டு கூறுகையில்,‘‘ மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தோம். இதனால் ஹோல்டர் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான இவர் அறிவுக்கூர்மையானவர். சக வீரர்களிடம் எப்…
-
- 0 replies
- 315 views
-
-
உலக குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் சூப்பர் வெல்டர்வெயிட் போட்டியில் கியூபாவின் எரிஸ்லேன்டி லாரா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். முன்னாள் உலக சாம்பியன் லாராவுக்கும், ராமோன் அல்வரேஸுக்கும் இடையே மின்னியாபொலிஸ் நகரில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லாரா, 2 ஆவது சுற்றில் விட்ட சரமாரி குத்துகளால் நிலைகுலைந்த அல்வரேஸ் கீழே விழுந்தார். கடந்த 2018 இல் இழந்த உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெற்றார் லாரா. https://www.virakesari.lk/article/63873
-
- 0 replies
- 467 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டும் சென்னை மைதானமும் [27 - March - 2008] டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சென்னைக்கு தனி இடமுண்டு. இந்திய அணி டெஸ்டில் அறிமுகமாகி முதல் வெற்றிக்காக 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் வெற்றி 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் தான் கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு இந்திய முன்னாள் கப்டன் கவாஸ்கர் தனது 30 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்து உலக சாதனை படைத்தது இங்கு தான். 1986 ஆம் ஆண்டு இந்திய அவுஸ்திரேலிய அணிகளிடையே நடந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்தது. 348 ஓட்டங்கள் இலக்குடன் ஆடிய இந்தியா 347 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. ஆட்டம் யாருக்கும் வெற்றி, தோல்வியின்றி `ரை' ஆனது. டெஸ்ட…
-
- 0 replies
- 921 views
-
-
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் கோலி விராட் கோலி. | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக திகழும் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஆவார். இதனை ஐபிஎல் லீக் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ரூ.12.5 கோடிக்குத்தான் விராட் கோலியின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் ராயல் சாலஞ்சர்ஸ் அணி உரிமைதாரர் கோலிக்கு கொடுக்கும் தொகையோ ரூ.15 கோடி. அதே போல் கிறிஸ் கெய்லுக்காக செலவிடப்பட்ட ரூ.7 கோடியே 50 லட்சத்தைக் காட்டிலும் கூடுதலான தொகையாக அவருக்கு ரூ.8 கோடியே 40 லட்சம் கொடுக்கிறது. தோனிதான் ஐபிஎல் கிரிக்கெட்டில் செலவு மிக்க வீரர் என்று ந…
-
- 0 replies
- 520 views
-
-
அப்போதும் நேசித்தோம் இப்போதும் நேசிக்கிறோம்... கண்ணீர் விடும் மான்செஸ்டர் யுனைடெட்! கடந்த 1958-ம் ஆண்டு இதே தினம். பெல்கிரேடில் நடந்த ஐரோப்பிய கோப்பை (தற்போது சாம்பியன்ஸ் லீக்) தொடரில் பங்கேற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி, மீண்டும் தாயகம் புறப்பட்டது. பெல்கிரேடில் இருந்து மான்செஸ்டருக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஐரோப்பியன் விமானத்தில், மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் , பத்திரிகையாளர்கள் உள்பட 44 பேர் இருந்தனர். மான்செஸ்டருக்கு புறப்பட்ட அந்த விமானம், அப்போது மேற்கு ஜெர்மனியில் இருந்த மியூனிச்சில் இறங்கி பெட்ரோல் நிரப்பிக் கொண்டு மாலை 3 மணியளவில், மீண்டும் புறப்படத் தொடங்கியது. ரன்வேயில் பனி அதிகமாக இருந்தது. இரு முறை விமானம் மேலெழும்ப முயற்சித்து…
-
- 0 replies
- 633 views
-
-
ஓய்வை அறிவித்தார் ஷேன் வொற்சன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷோன் வொற்சன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது இடம்பெறும் உலக இருபதுக்கு-20 தொடரின் முடிவிலேயே ஓய்வுபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். கடந்தாண்டு இடம்பெற்ற ஆஷஸ் தொடரின் முடிவில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஷேன் வொற்சன், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர், அவர் பங்குபற்றியிருக்கவில்லை. இந்நிலையிலேயே, உலக இருபதுக்கு-20 …
-
- 0 replies
- 401 views
-
-
மைக்கேல் பெல்ப்ஸ்... ஒவ்வொருத் தழும்பும் ஒரு தங்கம்! ரியோ ஒலிம்பிக்கில் ஒரு விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏராளமான ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் உடலில் சிவப்பு நிறத்தில் பெரிய பெரிய தழும்புகளைக் காண முடிகிறது. அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் உடலிலும், இந்த வட்டத் தழும்புகள் உள்ளன. இந்தத் தழும்புகள் டாட்டூவாலோ அல்லது காயம் காரணமாகவோ ஏற்பட்டதில்லை. அதிகளவில் உடற் பயிற்சியில் ஈடுபடுவதால், அதனால் ஏற்படும் உடல் வலியை குறைப்பததற்காக அளிக்கப்படும் "கப்பிங்" (cupping) எனும் பழங்கால சிகிச்சை முறையால்தான், பெல்ப்ஸ போன்ற வீரர்களின் உடலில் இது போன்ற வட்ட வட்டத் தழும்புகள் இருக்கின்றன என்கிறார்கள் உடற்பயிற்ச…
-
- 0 replies
- 593 views
-
-
உலக சாம்பியன்களுக்கு எதிராக T20 தொடரை இலகுவாய் வெற்றிகொண்டது பாகிஸ்தான். உலக சாம்பியன்களுக்கு எதிராக T20 தொடரை இலகுவாய் வெற்றிகொண்டது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2வது போட்டி டுபாய் சர்வதேச மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்தப் போட்டியில் 16 ஓட்ட்ங்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்ட பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட T20தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என்று தொடரை வென்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட பாகிஸ்தான் அணியைப் பணித்தது.அதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி,நிர்…
-
- 0 replies
- 299 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்னவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி பெப்ரவரி மாதம் இலங்கை அணியின் மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியின் முகாமையாளராக ஜெயரத்ன இருப்பார். தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளுடன் அசந்த டி மெல், அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜெரோம் ஜெயரத்ன குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு மேலதிகமாக ஜெர்மி ஜெயரத்ன இலங்கை கிரிக்கெட்டின் தலைமை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றுவார். தொழில்முறை பயிற்சியாளரான ஜெயரத்ன முன்னதாக இலங்கை கிரிக்கெட்…
-
- 0 replies
- 671 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் ; 50% பார்வையாளர்களை அனுமதிக்க பரிசீலனை கொவிட்-19 பரவல் அச்சம் காரணமாக பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிளுக்கு 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க ஜப்பான் பரிசீலித்து வருவதாக சங்கீ செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பெரிய அரங்குகளில் பார்வையாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை 20 ஆயிரமாக நிர்ணயிக்கப்படலாம். எனினும் தொற்று நிலைமை கட்டுப்பாடு மேலும் முன்னேற்றம் அளித்தால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் சாங்கீ தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான முடிவினை ஜப்பானின் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அடுத்த மாதம் அறிவிக்கும். புதிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்த கவலைக…
-
- 0 replies
- 665 views
-
-
ஆறாவது தடவையாக ஹமில்டன் வென்றார் கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக ஆதிக்கம் செலுத்திய, மெர்டிசிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், தனது ஆறாவது வெற்றியைப் பெற்றுக் கொண்டார். தனது ஆதர்ச நாயகனான அயூட்டன் செனாவின், 65 பந்தயங்களை முதலிடத்தில் ஆரம்பித்ததை, கடந்த சனிக்கிழமை (03) சமப்படுத்தியிருந்த ஹமில்டனுக்கு, இது 10ஆவது பந்தயம் என்ற நிலையிலேயே, அவற்றில் ஆறில் வெற்றிபெற்றுள்ளார். பந்தயத்தை ஐந்தாவதாக ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன், அபாரமாக காரைச் செலுத்தி, பந்தயத்தை இரண்டாவதாக ஆரம்பித்…
-
- 0 replies
- 700 views
-
-
தோனி பங்களிப்பு செய்யாமல் இருந்தால்தான் மாற்று வீரர்களை பரிசீலிக்க முடியும்: எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தோனி. - படம். | ஏ.எப்.பி. இலங்கை அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ‘தோனி, ஆட்டோமேட்டிக் தேர்வா’ என்று கேள்வி எழுப்பப்பட அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் ‘அப்படியல்ல’ என்று பதிலளித்தார். அதாவது அணித்தேர்வு செய்யும் போது கோலி, தோனி... சரி.. அடுத்தது என்ற ரீதியில் தேர்வு நடைமுறை செல்கிறதா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பிரசாத் பதில் அளிக்கும் போது, “நான் இப்போதுதான் ஆந்த்ரே அகாஸியின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிர…
-
- 0 replies
- 243 views
-
-
மெஸ்ஸிக்கு இது முதல் கோல்... நம்பமுடிகிறதா? சாம்பியன்ஸ் லீக் அப்டேட்! பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, உலகின் டாப் மோஸ்ட் கால்பந்து க்ளப்புகள் கலந்துகொள்ளும் 2017-18 சீஸனுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் சுற்று நேற்று தொடங்கியது. ஸ்பெயினின் பார்சிலோனா, ஃபிரான்சின் பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி), ஜெர்மனியின் பேயர்ன் முனிச், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சீ அணிகள் தொடக்க ஆட்டத்திலேயே பட்டையைக் கிளப்பின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்தாலியின் யுவெண்டஸ் அணி, பார்சிலோனாவிடம் மண்ணைக் கவ்வியது.ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோமா அணிகளுக்கிடையான ஆட்டம் டிராவில் முடிந்தது. பார்சிலோனா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி, தன் கரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் குக்: மீண்டும் ஷேன் வார்ன் கடும் விமர்சனம் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் மீது ஷேன் வார்ன் கடும் விமர்சனம் வைத்தார். இம்முறை அலிஸ்டர் குக் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகியிருப்பது நல்லது என்று கூறியுள்ளார். டெலிகிராப் பத்திரிகையில் பத்தி எழுதி வரும் ஷேன் வார்ன் தொடர்ந்து இங்கிலாந்து கேப்டனை கடுமையாக விமர்சனம் செய்து வருவது சர்ச்சைக்குரியதாகி விட்டது. குக், சமீபத்தில் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று கூறியதோடு தனது கேப்டன்சி வெற்றி சுயபுராணத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் இலங்கை முதன் முதலாக டெஸ்ட் தொடரில் வீழ்த்தியிருப்பதையடுத்து மேலும் கடுமையான விமர்சனங்களை தனது பத்தியில் எழுப்பியுள்ளார் ஷேன் வார்ன்…
-
- 0 replies
- 452 views
-
-
உங்கள் ஆறுதல்களும் ஆதரவுகளும் என்னை மிகவும் எளியவனாக்கி விட்டது: ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சி ஸ்டீவ் ஸ்மித். - கோப்புப் படம். | ஏ.பி. பந்தைச் சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கி 12 மாதங்கள் தடைபெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய நிலையில் இன்ஸ்டாகிராமில் உற்சாக ட்வீட் செய்துள்ளார். தற்போது தான் செய்த தவறுகள், ஆஸ்திரேலிய மக்கள் தன் மீது அடைந்துள்ள கோபம், ஆதரவு என்று அனைத்துக்கும் பதில் அளித்து பதிவிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். “எனக்கு வந்த இ-மெயில்கள், கடிதங்கள், ஆதரவுக்குரல்கள் நம்ப முடியவில்லை. இந்த ஆதரவுக்குரல்கள், ஆறுதல்கள் என்னை எளிய மனிதனாக்கி …
-
- 0 replies
- 497 views
-
-
டெஸ்ட் போட்டிகளைப் போல மாறுமா ஒருநாள் ஆட்டம்? சுவாரஸ்யம் கூட்ட சச்சின் புதுமையான யோசனை பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2023 மாற்றம் ஒன்று மட்டுமே எப்போதும் மாறாதது என்ற வார்த்தைகள் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். ஒருநாள் போட்டிகளின் வருகைக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகள் நெருக்கடியைச் சந்தித்தன. தற்போது டி20 அறிமுகத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகள் சுவாரசியம் அற்றவையாக மாறியுள்ளன. ஒரு நாள் போட்டிகள் இனியும் பிழைத்திருக்குமா? கிரிக்கெட்டின் 3 வடிவங்களையும் தொடர்ந்து தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஜாம்பவான் சச்சின் என்ன சொல்கிறார்? கிரிக்கெட்டின் நூறாண்டுகளுக்கும் மேல…
-
- 0 replies
- 766 views
- 1 follower
-
-
ஐசிசியின் துடுப்பாட்ட தரவரிசையில் வாழ்நாள் சிறந்த நிலையில் திமுத் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்ற, இலங்கை அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன, சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நிறைவில் வெளியிட்டிருந்த டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்ன 720 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்திருந்தார். இந்தநிலையில், தென்னாபிரிக்க அணிக்கு எ…
-
- 0 replies
- 288 views
-
-
திங்கட்கிழமை, 9, மே 2011 (17:39 IST) ஜூலையில் இலங்கையில் எல்.பி.எல்! ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை போல 20 ஓவர் போட்டி நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு இலங்கை பிரிமீயர் லீக் என பெயரிடப்பட்டுள்ளது. ஜுலை மாதம் இறுதியில் தொடங்கும் போட்டி 18 நாட்கள் நடைபெறுகிறது. முதல் கட்ட போட்டியில் 7 அணிகள் இடம்பெற உள்ளன. லெவன் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 7 உள்ளூர் வீரர்கள் இடம் பெறுவார்கள். ஒரு அணி மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். இதில் தகுதி பெறும் 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். போட்டி கொழும்பு பிரமதேசா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் லீக் 20 ஓவர் போட்டிக்கு தகுதி பெறும். இலங்கை பி…
-
- 0 replies
- 1.1k views
-
-
16 FEB, 2024 | 03:22 PM (நெவில் அன்தனி) ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. நியூஸிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் முதலாவது டெஸ்ட் போட்டி 1932இல் நடைபெற்று 92 வருடங்கள் கடந்த நிலையில் தென் ஆபிரிக்காவை டெஸ்ட் தொடர் ஒன்றில் நியூஸிலாந்து வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் 1932இலிருந்து இதுவரை 17 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளதுடன் அவற்றில் 14 தொடர்களில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது. 4 தொடர்…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறியமையால் அடுத்த தோல்வி இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லசித் மலிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணாயனது தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 03 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் நடத்த முதலாவது ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்க, இரண்டாவது ஒருநள் போட்டி இன்று இலங்கை நேரப்படி மாலை 4:30 க்கு செஞ்சூரியனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மலிங்க களத்தடுப்பை தெரிவு …
-
- 0 replies
- 338 views
-
-
மீண்டும் எட்டி பார்க்கிறது டெக்கான் சார்ஜர்ஸ்? ஐ.பி.எல்.தொடரில் விளையாடி வந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி மீண்டும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் 5 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கடந்த 2009 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் வென்றது. டெக்கான் கிரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி. வெங்கட்ராம ரெட்டி, அவரது மகள் காயத்ரி ரெட்டி ஆகியோர்தான் இந்த அணியை நிர்வகித்து வந்தனர். கடந்த 2012ஆம் ஆண்டுவாக்கில் பல்வேறு நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனம், வங்கி கியாரண்டித் தொகையை செலுத்த தவறியது. இதை காரணமாக காட்டி டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் அங்கீகாரத்தை பி.சி.சி.ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தை மையமாக கொண்டு ச…
-
- 0 replies
- 388 views
-
-
ரகானேவின் விருப்பம் என்ன மும்பை: ‘‘இந்திய விமானப்படையில் பணியாற்ற விருப்பம் இருந்தது,’’ என, இந்திய வீரர் ரகானே கூறினார். இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரகானே, 27. இதுவரை இவர், 18 டெஸ்ட் (1353 ரன்கள்), 58 ஒருநாள் (1705), 13 சர்வதேச ‘டுவென்டி–20’ (273) போட்டிகளில் விளையாடியுள்ளார். இளமை பருவத்தில் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து ரகானே கூறுகையில், ‘‘ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது, எதிரணி வீரர் வீசிய ‘பவுன்சர்’ பந்து எனது தலையில் தாக்கியது. அதன்பின் தொடர்ச்சியாக 5 பவுண்டரி விளாசினேன். இளமை பருவத்தில் இந்திய விமானப்படையில் அதிகாரியாக வேலை பார்க்க விரும்பினேன். ஒருவேளை நான் கிரிக்கெட் போட்டியை தேர்வு செய்யாமல் இருந்திருந்தால்…
-
- 0 replies
- 304 views
-
-
ஆசிய கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்த டோனி December 24, 2015 விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று பெங்களூரில் விஜய் ஹசாரே டிராபியின் 2வது காலிறுதிப் போட்டியில் டெல்லி- ஜார்க்கண்ட் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் டோனி 70 ஓட்டங்கள் எடுத்தும் ஜார்க்கண்ட் அணி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இந்தப் போட்டியில் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெல்லி அணியின் ஷிகர் தவானை விக்கெட் கீப்பரான டோனி 27 ஓட்டங்களில் ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார். இதன்…
-
- 0 replies
- 585 views
-
-
'சூதுகவ்வும்' : 0 ரன் டிக்ளேரும் ஜென்டில்மேன் கிரிக்கெட்டர் வீழ்ந்த கதையும்! ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7-ம் தேதி முடிந்தது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட, இருநாள் போட்டிகள் அரையும் குறையுமாக நடந்தன. கூவி கூவி அழைத்தும் ரசிகர்கள் ஓட்டம் முதலில் பேட்டிங்கை மேற்கிந்திய தீவுகள் அணி பேட் செய்தது. இரண்டாம் நாள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் 248/7ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு களத்தில் விளையாடியது மழை. ஒரு ஓவர் கூட வீசப்படாமல் இரு நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. எஞ்சியிருப்பது ஒரே ஒருநாள் மட்டும்தான். எப்படியும் ஆட்டம் சமன்தான் என்பது தெரியும். இதன…
-
- 0 replies
- 351 views
-