விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய செரீனா 2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சிமோன ஹாலெப்பை வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வரும் இப் போட்டியில், பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 16 ஆம் நிலை வீராங்கனையான செரீனா உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார். இப்போட்டியில் செரீனா முதல் செட்டை 1-6 என்ற இழந்தாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6-4 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். http://www.virakesari.lk/article/48454
-
- 0 replies
- 365 views
-
-
பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் அடுத்த களபலி: கேள்விக்குறியான வஹாப் ரியாஸின் எதிர்காலம் வஹாப் ரியாஸ். - படம். | ராய்ட்டர்ஸ். முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை மைக்கேல் கிளார்க் தலைமையில் ‘அதி திறன் அணி’யாக மாற்றியே தீருவேன் என்று அவதாரபுருஷர் போல் சூளுரைத்து சர்ச்சையில் சிக்கி அங்கிருந்து வெளியேறிய பிறகு பாகிஸ்தான் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று ஒவ்வொருவரையாக அனுப்புவது என்ற ‘திருப்பணி’யை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மேற்கொண்டு வருகிறார். கம்ரன் அக்மல், உமர் அக்மல், மொகமது ஆமிர்... என்று இவரது களபலிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஹபீஸ் குறித்தும் ஆர்தர் கைவிரல்களை மூடி தாளம் போட்டுக் க…
-
- 0 replies
- 365 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 8 ஆகஸ்ட் 2024, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் நேற்று காலை எடையை அளவிடும் போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்தியக் குழு கூடுதல் …
-
- 1 reply
- 365 views
- 1 follower
-
-
80 வருடங்களின் பின் பொதுநலவாய போட்டி வரலாற்றில் சிறப்பித்த இலங்கை 80 வருடங்களின் பின் பொதுநலவாய போட்டி வரலாற்றில் சிறப்பித்த இலங்கை இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் முதன்முறையாக பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் 6 பதக்கங்களை வென்று இந்த வருடம் சாதனை படைத்தது. அவுஸ்திரேலிய குயிண்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் கடந்த(15) ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வந்தது. இதன்படி, பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆதிக்கம் செலுத்தி…
-
- 0 replies
- 365 views
-
-
Published By: VISHNU 18 JUN, 2024 | 02:02 PM (நெவில் அன்தனி) ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த சி குழுவுக்கான கடைசிக்கு முந்தைய ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பப்புவா நியூ கினியை 7 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றி கொண்டது. ஏற்கனவே சுப்பர் 8 சுற்று தகுதியை இழந்திருந்த நியூஸிலாந்துக்கு இந்த வெற்றியில் கிடைத்த ஆறுதலுடன் நாடு திரும்பவுள்ளது. நியூஸிலாந்தின் இந்த வெற்றியில் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்காற்றி இருந்தனர். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் லொக்கி பேர்குசன் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டமும் கொடுக்காம…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
செய்தித்துளிகள்: கேப்டன் பதவியில் அசார் அலி நீடிப்பு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் அசார் அலிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு டி 20 அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பொறுப்பு வகிக்கக்கூடும் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அசார் அலியை மீண்டும் கேப்டனாக நியமித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் அணி 25 ஆட்டத்தில் 15 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும் ஒருநாள் போட்டி தரவரிசையில் 9-வது இடத…
-
- 0 replies
- 365 views
-
-
குரோசியாவின் மரியோ மாண்ட்சுகிச் ஓய்வு குரோசியா கால்பந்து அணியின் முன்கள வீரரான மரியோ மாண்ட்சுகிச் ( Mario Mandzukic ) சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஸ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரோசியா 2-4 எனத் தோல்வியடைந்து கிண்ணத்தினைக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்திருந்தது. இந்தநிலையில். 11 வருடமாக குரோசியா அணிக்காக விளையாடி வரும் மாண்ட்சுகிச் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள யுவான்டஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், குரோசியா அணிக்காக 89 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் போட்டுள்ளதுடன் இரண்டு உலகக்கோப்பை மற்றும் மூன்று ஐரோப்பிய சம்பிய…
-
- 0 replies
- 365 views
-
-
ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம் ஒலிம்பிக் (2016) போட்டிக்கான பல்வேறு மைதானங்கள் இன்னும் தயாராகாமல் உள்ளன. உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றது. கடைசியாக 2012இல் இங்கிலாந்தில் இப்போட்டி நடந்தது. அடுத்து 2016இல் 31ஆவது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ளது. இதற்காக மொத்தம் 14 புதிய மைதானங்களை கட்டுவது, புதுப்பிப்பது என, ரூ.120 ஆயிரத்து 518 கோடி வரை பிரேசில் அரசு செலவிடுகிறது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 13 மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் பெரும்பாலான பணிகள் முடியாமல் உள்ளன. இங்குள்ள ஒலிம்பிக் பார்க் மைதானம் 44 ஏக்கரில் தயாராகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, ச…
-
- 0 replies
- 365 views
-
-
2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன்: டோனி நம்பிக்கை 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று இந்திய வீரர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுடெல்லி: 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று இந்திய வீரர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜனவரி மாதம் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதையடுத்து மூன்று வடிவிலான கிரிக…
-
- 0 replies
- 364 views
-
-
வடக்கிற்கு பயணித்துள்ள ரக்பி விளையாட்டு ‘ரக்பியில் இணைவோம்’ (Get into Rugby) திட்டத்தின் ஐந்தாவது நிகழ்ச்சி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானங்களில் பெப்ரவரி 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்றன. இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் ரக்பி விளையாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி பாடசாலை மாணவர்களுக்கு அப்பால் பெரியவர்கள் பலரையும் கவர்ந்தது. கடந்த வாரத்தின் ‘ரக்பியில் இணைவோம்’ நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வாக (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் இளையவர்கள், பெரியவர்கள் உட்பட 300க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.…
-
- 0 replies
- 364 views
-
-
உலக தடகளப் போட்டியில் சம்பியனான கோல்மன்! உலக தடகளப் போட்டியில் அமெரிக்க வீரர் கோல்மன் தங்கப் பதக்கம் வென்று சம்பியனானதுடன், உலகின் அதிவேக மனிதர் என்ற பட்டத்தையும் பெற்றார். 17 ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலகின் அதிவேக மனிதர் யார்? என்பதை நிர்ணயிக்கும் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. 8 வீரர்கள் கலந்துகொண்டிருந்த இறுதிச் சுற்றில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மன், 9.76 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அத்துடன் இந்த வெற்றிமூலம் 23 வயதான கிறிஸ்டியன் கோல்மன் உலகின் அதிவேக மனிதர் என்ற பட்டத்தையும் பெற்ற…
-
- 0 replies
- 364 views
-
-
டோக்யோ ஒலிம்பிக் 2020: இரண்டே வீரர்களை அனுப்பி தங்கப் பதக்கத்தை வென்ற குட்டி நாடு 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ளோரா டஃப்பி வெறும் 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அந்த நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். 33 வயதான அவருக்கு இது நான்காவது ஒலிம்பிக் போட்டி. இதற்கு முன்னதாக 2008-ஆண்டு பெய்ஜிங், 2012-ஆம் ஆண்டு லண்டன், 2016-ஆம் ஆண்டு ரியோ என மூன…
-
- 1 reply
- 364 views
- 1 follower
-
-
வேகப்பந்து வீச்சு பயிற்றுநராக நுவான் சொய்ஸா இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில் காணப்பட்ட சமிந்த வாஸ், சில மாதங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே, தற்போது நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள அவரது ஒப்பந்தம், ஒரு வருடத்துக் செல்லுபடியாகும் என, இலங்கை கிரிக்கெட் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சார்பாக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நுவான் சொய்ஸா, 64 விக்கெட்டுகளையும், 95 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 108 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 364 views
-
-
ஆடவந்த அணி ஆட்டங்கண்டதேனோ? உற்சாகமாகத்தான் இங்கிலாந்து அணி இந்திய அணியை அதன் மண்ணில் எதிர்கொண்டது. புது உத்வேகத்துடன் ஆடிய இங்கிலாந்து அணிக்கு தம்மால் இந்திய அணியை மண்கவ்வ வைக்க முடியும் என்ற நம்பிக்கை முழுக்க முழுக்க இருந்தது. ஐந்து டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் தொடங்கியபோது, இங்கிலாந்து அணி தன் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 3 சதங்களுடன் இங்கிலாந்து அணி 500 ஓட்டங்களைத் தாண்டியபோது, இந்தியாவின் சுழல் பந்து வீச்சுக்கு என்ன ஆயிற்று?அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று சதங்கள் தம் மண்ணில் அடித்து நொருக்கும் அளவுக்கு இந்தியாவின் அசத்தும் பந்து வீச்சுக்கு கண்திருஷ்டி விழுந்து விட்டதா என்ற கேள்வியையே பலரும் தமக்குள் கேட்டுக் கொண்டார்கள். இங்கிலாந்…
-
- 0 replies
- 364 views
-
-
இலங்கை வீரர்களுக்கான வரவேற்புபசாரம்; டிக்கட்கள் யாவும் விற்பனையாகிவிட்டன 2017-02-08 11:18:08 ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் அவுஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காரண்யப் பணிக்கான நிதி திரட்டும் இராப்போசனத்திற்கான டிக்கட்கள் யாவும் விற்பனை செய்ப்பட்டுவிட்டதாக ஏற்பாட்டாளர்கள் மூலம் தெரியவருகின்றது. இதில் பெறப்படும் வசூல் கிரிக்கெட் எய்ட் எனும் கிரிக்கெட் உதவித் திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளது. கிரிக்கெட் உதவித் திட்டமானது ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் திட்டமாகும். இந்த இராப்போசன விருந்தானது இலங்கை கிரிக்கெட் வீரர்களை வ…
-
- 0 replies
- 364 views
-
-
ரியல் மெட்ரிட் அடுத்தடுத்து தோல்வி: சிட்டியை வீழ்த்தியது யுனைடட் Mohamed Shibly இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, ரியல் மெட்ரிட் எதிர் ரியல் பெடிஸ்டா ரியல் பெடிஸ்டா அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த ரியல் மெட்ரிட் அணி லா லிகா தொடரில் பார்சிலோனாவிடம் முதலிடத்தை இழந்தது. முன்னாள் பார்சிலோனா முன்கள வீரரான கிறிஸ்டியன் டெல்லோ கடைசி நேரத்…
-
- 0 replies
- 364 views
-
-
நிறவெறி இழிவுபடுத்தல்தான் ஆஸ்திரேலிய அணிகளை நான் ஆதரிக்காததற்குக் காரணம்: மனம் திறக்கும் உஸ்மான் கவாஜா உஸ்மான் கவாஜா. - படம்.| ஏ.பி. சிட்னியில் தான் வளரும் காலங்களில் அனுபவித்த நிறவெறி ரீதியான இழிவுபடுத்தல்களே விளையாட்டில் எந்த ஒரு ஆஸ்திரேலிய அணியையும் ஆதரிக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்று பாகிஸ்தானில் பிறந்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மனம் திறந்துள்ளார். ‘பிளேயர்ஸ்வாய்ஸ்.காம்.ஏயு’ என்ற இணையதளத்தில் கட்டுரை எழுதியுள்ள, 30 வயது வீரர் உஸ்மான் கவாஜா, ‘எங்கள் சிறுபிராயத்தில், வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் இருந்து வந்த நிறவெறித்தனமான இழிவுபடுத்தல்கள் ஆஸ்திரேலிய அணிகள் மீது கோப…
-
- 0 replies
- 364 views
-
-
திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் – மீண்டும் அறிவித்தது ஜப்பான்! by : Benitlas திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் மீண்டும் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் ஜப்பான் இது தொடர்பான அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளது. ஜப்பான் அமைச்சரவை செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச ஒலிம்பிக் குழு, டோக்கியோ நகர அரசாங்கம் மற்றும் அமைப்புக்களின் குழுக்களுடன் இது தொடர்பாக ஓன்றிணைந்து செயல்ப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 364 views
-
-
உலக கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கான இலங்கைக் குழாம்: முதலாம் கட்டத் தெரிவில் வட மாகாணத்திலிருந்து 12 வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பங்கு பற்றுவதற்கு இலங்கையும் தகுதிபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை வலைப்பந்தாட்ட உத்தேச குழாமுக்கு வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் முதலாம் கட்டத் தேர்வுகள் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்றபோது அப்பிரதேசத்திலிருந்து 12 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். இத் தேர்வுகள் யாழ். மாவட்டத்தில் நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும். யாழ். வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி மைதானத்தில் கட…
-
- 0 replies
- 364 views
-
-
பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் போட்டியில் இனிங்ஸால் பங்களாதேஷ் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: சிம்பாப்வே சிம்பாப்வே: 265/10 (துடுப்பாட்டம்: கிரேய்க் எர்வின் 107, பிறின்ஸ் மஸ்வெளரே 64, றெஜிஸ் சகபவா 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: நயீம் ஹஸன் 4/70, அபு ஜயெட் 4/71, தஜியுல் இஸ்லாம் 2/90) பங்களாதேஷ்: 560/6 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 203, மொமினுல் ஹக் 132, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 71, லிட்டன் தாஸ் 53, தமிம் இக்பால் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஐன்ஸ்லி என்டொல்வு 2/170, சார்ள்டன் ஷுமா 1/85, விக்டர் நயுச்சி 1/87, டொனால்ட் ட்ரிபானோ 1/96, சிகண்டர் ராசா 1/111) சிம்பா…
-
- 0 replies
- 364 views
-
-
முன்னாள் வீரர்களை பயன்படுத்தி தங்களுடைய சேறுகளை மறைக்க முயற்சிக்கிறார்கள் : சொல்கிறார் அர்ஜன ரணதுங்க தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென முன்னாள் இலங்கைக் கிரிக்கெட் அணித் தலைவரும், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமையாளர் அசங்க குருசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு முதன் முறையாக பதிலளிக்கையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். உடுகம்பலவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவா…
-
- 0 replies
- 364 views
-
-
டுபாயில் பெண்ணுடன் முறையற்ற வகையில் உரையாடியாடியது யார் ? இலங்கை கிரிக்கெட் விளக்கம் இலங்கை கிரிக்கெட்டைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவருடன் முறையற்ற வகையில் உரையாடியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிராகித்துள்ளது. டுபாயைச் சேர்ந்த முனாஷா ஜிலானி என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி இல்லையெனவும் அவர் தனியார் ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 364 views
-
-
2017-ன் சிறந்த ஒருநாள் அணியில் தோனி இடத்தைப் பறித்தது யார்? #Rewind2017 Chennai: 2017-ன் டெஸ்ட் லெவனில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பட்டையைக் கிளப்பினர். ஒருநாள் போட்டிகளிலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தத் தவறவில்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் மட்டும் ஏமாற்றம் கண்டது. பாகிஸ்தானின் அந்த ஆச்சர்ய வெற்றி மட்டுமல்ல... ஆப்கானிஸ்தான், பாப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து போன்ற அணிகள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றது என ஒருநாள் கிரிக்கெட் பல நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்றுள்ள 129 போட்டிகளில் (டிசம்பர் 26 வரை) பல வீரர்கள், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்…
-
- 0 replies
- 364 views
-
-
அனித்தா போன்று சாதனை படைக்கும் ஆசையில் அவரது தங்கை ஹெரினா நடைபெற்று முடிந்த அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 18 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் மற்றும் உயரம் பாய்தல் போட்டிகளில் தங்கம் வென்ற யாழ் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மங்கை சந்திரகுமாரர் ஹெரினா http://www.thepapare.com
-
- 1 reply
- 364 views
-
-
இளைய சகோதரருக்காக வெற்றி வாய்ப்பை தியாகம் செய்த ஒலிம்பிக் ட்ரைஅத்லன் சம்பியன் அலிஸ்டெயார் பிறவுண்லீ 2016-09-30 15:12:21 'ட்ரைஅத்லன்” (மூவம்ச ) போட்டியில் ஒலிம்பிக் சம்பியனான பிரித்தானிய வீரர் அலிஸ்டெயார் பிறவுண்லீ, மெக்ஸிகோவில் அண்மையில் நடைபெற்ற உலக மூவம்ச விளையாட்டுப் போட்டியில் (வேர்ல்ட் ட்ரைஅத்லன்) தனது இளைய சகோதரர் ஜோனி படும் அவஸ்தையைக் கண்டு தனது வெற்றி வாய்ப்பை அலிஸ்டெயார் பிறவுண்லீ தியாகம் செய்த மனிதாபிமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. நீச்சல், சைக்கிளோட்டம், ஓட்டம் ஆகிய மூன்று நிகழ்ச்சிகளைக் கொண்டதே மூவம்ச விளையாட்டுப் போட்டி (ட்ரைஅத்லன்) ஆகும். மெக்ஸிகோவில் நடைபெற்ற …
-
- 0 replies
- 364 views
-