விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
கிரிக்கெட் உலகில் பந்து பறித்த முதல் இந்திய உயிர்: ராமன் லம்பா பற்றிய சில தகவல்கள்! இந்திய கிரிக்கெட் உலகை அதிர வைத்த இந்த துர் சம்பவம் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நிகழ்ந்தது. மிகச்சிறந்த பீல்டரான ராமன் லம்பாவிடம் ஒரு கெட்ட பழக்கமும் இருந்தது. அதாவது பேட்ஸ்மேனுக்கு வெகு அருகில், ஹெல்மெட் போடாமல் பீல்டிங் செய்யும் அந்த பழக்கம்தான் அவரது உயிரையும் பறித்தது. டாக்காவில், அபாகானி கிரிரா சக்ரா அணிக்காக ராமன் லம்பா விளையாடி வந்தார். வங்க தேச பிரீமியர் டிவிஷன் இறுதி ஆட்டத்தில், முகமதன் ஸ்போர்ட்டிங் அணியுடன் ராமன் லம்பாவின் அணி மோதியது. முகமதன் ஸ்போர்ட்டிங் பேட்ஸ்மேன், மெக்ராப் ஹொசைன் அடித்த பந்து, ஃபார்வட் லெக் திசையில் நின்றிருந்த ராமன் …
-
- 0 replies
- 607 views
-
-
வார்னர், மிட்செல் மார்ஷ் அபாரம்: நியூஸிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா 2016 Getty Images நியூஸிலாந்தை 2-வது போட்டியில் வீழ்த்திய பிறகு மார்ஷ்-ஹேஸ்டிங்ஸ். | கெட்டி இமேஜஸ். வெலிங்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதல் ஒருநாள் போட்டியின் படுதோல்விக்கு பழி தீர்த்து தொடரில் 1-1 என்று சமனிலை எய்தியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா வார்னர் (98), கவாஜா (50), மிட்செல் மார்ஷ் (69) ஆகியோர் அதிரடியில் 46.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பிரெண்டன் மெக்கல்லம் முத…
-
- 0 replies
- 409 views
-
-
லிவர்பூலை வீழ்த்தி கப்பிரல் கோப்பையை வென்றது மான்செஸ்டர் சிட்டி! கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி டைபிரேக்கரில் லிவர்பூல் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் ஆனது. பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் ஆர்சனல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடந்த கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை மான்செஸ்டர் சிட்டி சந்தித்தது. பிற்பாதியில் 49வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஃபெர்னான்டின்ஹோ முதல் கோல் அடிக்க, அதற்கு 83வது நிமிடத்தில் லிவர்பூலின் ஹட்டின்ஹோ பதிலடி கொடுத்தார். 90 நிமிட ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோ…
-
- 0 replies
- 525 views
-
-
IND vs NZ: முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்தது இந்தியா .det_ban_img img{width:100%;height:auto!important; max-height:400px;} நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இந்தப் பயணத்தின் முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த சுற்றுப் பயணத்தின்போது ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இரு அணிகளும் மோதுகின்றன. இவை மட்டுமல்லாது ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் இரு அணிகளும் மோதுகின்றன. …
-
- 0 replies
- 833 views
-
-
இலங்கை கிரிக்கட் அணியில் மற்றொரு புதுவரவு புதிய இளம் வீரர்களை அணிக்குள் உள்வாங்கும் பணியை, இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வுக் குழுவினர் தொடர்கிறார்கள். 19 வயதான வேகப் பந்து வீச்சாளர் லகிறு குமார என்ற இளம் கிரிக்கட் வீரரை 3ஆவது ஒருநாள் போட்டிக்கென தெரிவாகிய 16 பேரில் ஒருவராகத் தெரிந்தெடுத்துள்ளார்கள். கண்டி, ரினிற்றி கல்லூரி மாணவரான இவர் அண்மையில் இங்கிலாந்திற்கு விஜயம் செய்த 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய ஒரு வீரராவார். தேசிய தெரிவுக்குழுவில் இரண்டாவது பதின்ம வயதினர் குமார என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 19வயதுக்கு உட்பட்ட அணியில் இங்கிலாந்திற்கு எதிராக விளையாடி அடுத்தடுத்து செஞ்சரிகள் அ…
-
- 0 replies
- 522 views
-
-
'அவரைப்போல ஃபினிஷிங்... சான்ஸே இல்ல..!’ அவரைத்தான் சொல்கிறார் லான்ஸ் குளூஸ்னர் தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த லான்ஸ குளூஸ்னரை அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து விட முடியாது. உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் 'தி பெஸ்ட் திரில்லர்' என ரசிகர்கள் வர்ணிக்கும் 1999 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடியவர். இந்தியாவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்க வில்லை ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் டெண்டுல்கர், டிராவிட் தவிர மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டையும் வீழ்த்தினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் எட்டு விக…
-
- 0 replies
- 633 views
-
-
எவரெஸ்ற் கிண்ணத்தைக் கைப்பற்றியது குருநகர் பாடுமீன் எவரெஸ்ற் இன், பொன்விழா கிண்ணத்தைக் கைப்பற்றியது குருநகர் பாடுமீன். ஆவரங்கால் கிழக்கு லிங்கம் மத்திய சன சமூக நிலையம் மற்றும் எவரெஸ்ற் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வடமாகாணரீதியில் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடாத்தி இருந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு எவரெஸ்ற் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதிப் போட்டியினை அன்றையதினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆரம்பித்து வைத்தார். இரவு 9 மணியளவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுடன் மின்னொளியில் இவ் இறுதிப் போ…
-
- 0 replies
- 343 views
-
-
இரண்டு ஆண்டுகள் சதமடிக்காதவரை எப்படி சேர்க்க முடியும்?- மேக்ஸ்வெலுக்கு லீ மேன் பதில் டேரன் லீ மேன். | படம்: ஏஎப்பி. உள்நாட்டு கிரிக்கெட்டில் மேத்யூ வேடிற்குப் பின் களமிறங்குவதால் தனது டெஸ்ட் வாய்ப்பு பறிபோவதாக கிளென் மேக்ஸ்வெல் கூறிய குற்றச்சாட்டுக்கு பயிற்சியாளர் டேரன் லீ மேன் பதில் அளித்துள்ளார். சிட்னியில் இது குறித்து டேரன் லீ மேன் கூறும்போது, “அடிலெய்ட் டெஸ்ட் திட்டத்திலேயே மேக்ஸ்வெல் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக மேக்ஸ்வெல் சதம் அடிக்கவில்லை. சதமடித்தால்தான் தேர்வுக்கு பரிசீலிக்க முடியும். 2 ஆண்டுகளாக சதம் அடிக்காத வீரரை தேர்வு செய்ய முடியுமா என்ன? மேத்யூ வேடிற்கு பின்னால் களமிறங்குவது போன்ற விவகாரங்களை…
-
- 0 replies
- 313 views
-
-
பார்ஸிலோனாவுக்காக 500-வது கோலை அடித்தார் மெஸ்ஸி! ரியல் மாட்ரிடுக்கு எதிரான லா-லிகா போட்டியில், இரண்டாவது கோலை அடித்தபோது, பார்ஸிலோனோ அணிக்காக 500-வது கோலை அடித்து சாதனை படைத்தார், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. இரண்டாவது கோலை மெஸ்ஸி எக்ஸ்ட்ரா டைமில் அடித்துள்ளார். இதனால் பார்ஸிலோனா, மாட்ரிட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், மெஸ்ஸி ஆக்ரோஷமாக விளையாடியபோது, சக வீரர் ஒருவரால் தற்செயலாகத் தாக்கப்பட்டார். இதனால், அவரது வாயில் ரத்தம் வடிந்தது. இருப்பினும், காயத்தைப் பொருட்படுத்தாமல் மெஸ்ஸி தொடர்ச்சியாக விளையாடி, கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். மெஸ்ஸி, பார்சிலோனாவுக்காக 500-வது கோல் அ…
-
- 0 replies
- 164 views
-
-
டெரிக் ரெட்மண்ட்: பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய தருணம் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விளையாட்டு வீரர்களின் கனவுகளை ஒன்றன் மீது ஒன்றாக பட்டியலிட்டால் உச்சியில் ஒரு கனவு நிச்சயம் உண்டு. அக்கனவின் பெயர் ஐவண்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக்ஸ். அக்கனவுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை 'தவம்' என குறிப்பிட்டால் அது மிகையல்ல. ஆண்டுக் கணக்கில் மேற்கொள்ளப்படும் தவங்களுக்கு, பல நேரம் பதக்கங்கள் என்கிற வரம் கிடைப்பதில்லை. அப்படி பதக்கங்களை வெல்லாமல், இதயங்களை வென்ற டெர…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
ஆப்கான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் தகுதி: ஐசிசி அறிவிப்பு நீண்ட கால கடின உழைப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்கள் தகுதியை இருநாடுகளும் பெறுகின்றன. இதன் மூலம் டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை 10லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வியாழனன்று ஐசிசி வாரியம் அதன் இன்றைய கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் கையெழுத்தை இட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் அசோசியேட் அணிகள் என்ற தகுதியை உயர்த்த வேண்டும் என்று ஐசிசியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்தக் கோரிக்கை வியாழனன்று வாக்களிப்புக்கு விடப்பட்டது, அனைவரும் டெஸ்ட்…
-
- 0 replies
- 234 views
-
-
ரஷ்யாவிடம் தோல்வி எதிரொலி: ஓய்வு பெற்றார் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா இனியஸ்டா - AFP உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரஷ்ய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. பெனால்டி ஷூட்டில் ஸ்பெயின் அணி வீரர்களான ஜார்ஜ் கோகே, இயாகோ அஸ்பஸ் ஆகியோர் கோட்டை விட்டனர். இதன் மூலம்…
-
- 0 replies
- 318 views
-
-
விளையாட்டாக அரங்கேறும் விபரீதங்கள் ஆசை இருக்கு தாசில் பண்ண என்பார்கள். எங்கள் வீட்டு ஒரியா சமையல்கார வாலிபர் கமலிலிருந்து தெரு ஓர சாயாக்கடை பீமப்பா, இஸ்திரி போடும் ராமு, எங்கள் கட்டிடத்தில் உள்ள செக்யூரிட்டி என எல்லோரும் ஆசைப்பட்டார்கள். கனவு கண்டார்கள். அதை உறுதியுடன் நம்பினார்கள். நான் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆடும்போது கமலிடம் சொன்னேன் - இந்தியா ஜெயிக்காது என்று. அவனுடைய முகம் தொங்கிப்போயிற்று. ‘பார்ப்போம்’ என்று கிளம்பிப் போனான். இந்தியா - ஆஸ்திரேலியா அரை இறுதி ஆட்டத்தை வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் காண பெங்களூரில் அநேக அலுவலங்கள் விடுமுறை விட்டன. பல முக்கியமான போர்டு மீட்டிங்குகள் மாலை ஐந்து மணிக்கு மேல் என்று தள்ளிவைக்கப்பட்டன. இந்தியா ஜெயிக்…
-
- 0 replies
- 328 views
-
-
கோலி பிரி ஹிட்டை அடிக்காதது ஏன்?...தோனி மீது வெளியில உருக்கம் உள்ளுக்குள் 'கா'! தோனி டிரெஸ்சிங் அறையில் இல்லாதது என்னை என்னவோ செய்தது என்றெல்லாம் துணை கேப்டன் விராட் கோலி உருகி வந்தாலும் அது சும்மா பேருக்குதானாம். உள்ளுக்குள் விராட் கோலி தோனியை சிக்க வைப்பதில்தான் குறியாக இருக்கிறாம். வங்கதேச தொடருக்கு முன்னமே இந்திய அணி இரண்டாக உடைந்து கிடக்கிறதாம். தோனிக்கு ஆதரவாக சென்னை அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, அஸ்வின், மோகித் மோகித் சர்மா மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் உள்ளனராம். கோலிக்கு ஷிகர் தவான், முரளி விஜய் . ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஆதரவாக இருக்கின்றனராம். அணி இரண்டாக உடைந்து கிடப்பதால்தான் வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெறவில்லை என்றும…
-
- 0 replies
- 329 views
-
-
போதும்... போறேன்...! மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயிலுக்கு தற்போது 35 வயதாகிறது. உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் சென்று டி20 போட்டிகளில் பங்கேற்பதுதான் கெயிலின் தற்போதைய முக்கிய வேலை. தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வரும் அவருக்கு முதுகு வலி இருந்து வந்தது. அண்மை காலங்களில் வலி அதிகரித்ததை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய கிறிஸ் கெயில் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட்டுக்கு தற்காலிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறுகையில், ''ஆகஸ்ட் 2ஆம் தேதி சாரிட்டி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறேன். அதற்கு பின், அறுவை சிகிச்சைக்காக என்னை தயார் செய்ய வேண்டியது உள்ளது. அனேகமாக டிசம்பர்…
-
- 0 replies
- 463 views
-
-
பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் கோலாலம்பூர்: வரும் 2022ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை சீனாவின் பீஜிங் நகரம் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. கடந்த 2014ல் ரஷ்யாவின் சோச்சியில் நடந்தது. அடுத்த (2018) போட்டி தென் கொரியாவின் பியான்சாங்கில் நடக்கவுள்ளது. வரும் 2022ல் நடக்கும் போட்டிக்கான நகரத்தை தேர்வு செய்ய கோலாலம்பூரில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.,) கூட்டம் நடந்தது. இதற்கான போட்டியில் பீஜிங் (சீனா), அல்மாட்டி (கஜகஸ்தான்), ஆஸ்லோ (நார்வே), ஸ்டாக்ஹோம் (சுவீடன்), கிராகோ (போலந்து), லிவிவ் (உக்ரைன்) என 6 நகரங்கள் துவக்கத்தில் இருந்தன. பீஜிங் வெற்றி: ஆனால் பீஜிங், அல்மாட்டியை தவிர மற்ற நகரங்கள் நிதி மற்றும்…
-
- 0 replies
- 329 views
-
-
வடமாகாண சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சால் வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையே இடம்பெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ். மாவட்ட அணியும் முல்லைத்தீவு மாவட்ட அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளும் ஆரம்பத்தில் சற்று பலமான நிலையில் விளையாடிய போதிலும், தொடர்ந்து யாழ். மாவட்ட அணி முன்னணியில் திகழ்ந்தது. இறுதியில் யாழ்.மாவட்ட அணி 72: 57 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனானது. http://onlineuthayan.com/news/393
-
- 0 replies
- 277 views
-
-
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் அணித் தலைவரின் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் கைகொடுக்க, இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், காலியில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டெய்லர் 86 ஓட்டங்களையும் நிக்…
-
- 0 replies
- 475 views
-
-
சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக விளையாடும் புதிய அணிகள்: செவ்வாய்க்கிழமை தெரியும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட இரண்டாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு பதிலாக இரு புதிய அணிகளை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை எடுப்பதற்காக கடும்போட்டி நிலவியது. இந்நிலையில், டெண்டர் படிவங்களை பெறும் கடைசி திகதி கடந்த 30-ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த இரு புதிய அணிகளுக்கு யார் உரிமையாளர்களாக போகின்றார்கள்? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் இரசிகர்களிடையே மேலோங்கி வருகின்றது. அதிகமான விலைப்புள்ளி கோரி, இந்த டெண்டரை பெறும் அணிகள் அதன்பின்னர் ஏலம் முறையில் தத்தமது அணிக…
-
- 0 replies
- 551 views
-
-
ஐசிசி தரவரிசை: ஸ்மித் முதலிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசைப் பட்டியலில், இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை முந்தி, தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஸ்மித் முதலிடம் பெற்றுள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, 792 புள்ளிகளைப் பெற்று ஸ்மித் முதல் இடத்திற்கு முன்னேறினார். இதுவரை அந்த இடத்தில் இருந்து வந்த 'மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் 777 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (770) 3வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் தோனி (728) 10வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் வெட்டோரி 790 புள…
-
- 0 replies
- 1k views
-
-
கால்பந்துப் போட்டிகளில் வீடியோ காட்சிகள் மூலம் முடிவுகள் மறுபரிசீலனை கால்பந்து போட்டிகளில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உதவும் வகையில், வீடியோவை ஒப்பிட்டு மறுபரிசீலனை செய்வதற்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது. `இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்' இரண்டு ஆண்டுகளுக்கு சில போட்டிகளில் மாத்திரமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். கோல் போடப்பட்டுள்ளதா, தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமா, விளையாட்டு வீரர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமா போன்றவற்றை நடுவர் தீர்மானிப்பதற்கு, இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 372 views
-
-
மூவகை தொடர்களுக்கு பொது புள்ளி முறைமை; சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆராயவுள்ளது சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் மூவகை கிரிக்கெட் தொடர்களுக்கு போதுமான புள்ளி முறைமையை அறிமுகப்படுத்துவது குறித்து துபாயில் கூடும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆராயவுள்ளது. இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் 2013இல் நடைபெற்ற ஆஷஸ் தொடரின்போது வழங்கப்பட்ட புள்ளி முறைமையைப் பின்பற்றியே ஆடவருக்கான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் புள்ளிகள் வழங்குவது குறித்து ஆராயப்படவுள்ளது. இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் இடம்பெறும் சகல வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் புள்ளிகளை வழங்கி ஒட்…
-
- 0 replies
- 342 views
-
-
சொந்த நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தென் ஆபிரிக்காவுக்கு அந்நாட்டு அரசு தடை! 2016-04-27 10:55:28 இன ஒடுக்கல் காரணமாக பல்லாண்டுகளுக்கு முன்னர் 21 வருடத் தடைக்கு உட்பட்டிருந்த தென் ஆபிரிக்காவுக்கு இப்போது மீண்டும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. கிரிக்கெட் நிருவாகத்தில் பின்பற்றவேண்டிய வழிமுறைகளுக்கு அமைய மாற்றங்களை செய்யத் தவறியதால் கிரிக்கெட் தென் ஆபிரிக்காவுக்கு (தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம்) சொந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு அந் நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உயர்மட்டக் குழுவினரால் அமைச்சர் மட்ட சுயாதீனக் …
-
- 0 replies
- 440 views
-
-
டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வஹாப் ரியாஸ் ஆட்ட நாயகன் விருது பெறுகிறார். | படம்: கெட்டி இமேஜஸ். ஓல்ட் டிராபர்டில் நேற்று நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டிகளில் ஏற்பட்ட படுதோல்விகளை அடுத்து டி20 கிரிக்கெட் பாகிஸ்தான் அணிக்கு சர்பராஸ் அகமதுவை கேப்டனாக்கியது பாகிஸ்தான் அணி நிர்வாகம். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களையே எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஷர்ஜீல் கா…
-
- 0 replies
- 349 views
-
-
இது இந்தியாவின் 900-வது ஒருநாள் போட்டி! #Throwback ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்றதில் தபால், இரயிலுக்கு பிறகு இன்றளவும் நாம் போற்றிப் பாதுகாக்கும் விஷயம்னா அது இந்த கிரிக்கெட்தான். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே தர்மசாலாவில் நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. சர்வதேச அளவில் இந்திய அணி விளையாடும் 900-வது ஒருநாள் போட்டி இது. இந்த சாதனையைச் செய்யும் முதல் அணி நாம் தான். இதற்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவும் (889 போட்டிகள்) பாகிஸ்தானும் உள்ளன (866 போட்டிகள்). இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டி: கிரிக்கெட் வரலாற்றில் 1971 ல் முதன்முறையாக 60 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை ஜ…
-
- 0 replies
- 340 views
-