Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டெஸ்ட் அணியில் எனது இடம் சற்றே சிக்கலில்தான் உள்ளது: ரோஹித் சர்மா ரோஹித் சர்மா. | படம்: ஏ.எஃப்.பி. மே.இ.தீவுகளுக்கு எதிரான தனது அறிமுக தொடரில் 2 சதங்களை அடித்த ரோஹித் சர்மா அதன் பிறகு 17 டெஸ்ட் இன்னின்ங்ஸ்களில் இரண்டு முறை மட்டுமே அரைசதம் கடந்துள்ளார். 2012-ம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அணி சென்ற போது ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஸ்கோர் 5,0,0,4,4 ஆகும். மேலும் இந்திய அணி 5 பவுலர்களைக் கொண்டு ஆட முடிவெடுத்தால் ரோஹித் சர்மாவின் இடம் கேள்விக்குறியாகிவிடுகிறது. ஆனாலும் விராட் கோலி கேப்டனான பிறகு 3 டெஸ்ட் போட்டிகளில் புஜாராவுக்குப் பதிலாக 3-ம் நிலையில் ரோஹித்தை களமிறக்கி அழகு பார்த்தார் விராட் கோலி. இதில் ரோஹித்தின் ஸ்கோர் 53, 39, மற்றும் 6. இந்நிலையில் டெஸ்ட் இட…

  2. வட மாகாணத்தில் புதிய சாதனையை நிலை நாட்டிய வவுனியா நேர்மதி வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வி நேர்மதி கிட்ணசாமி 2015 ம் ஆண்டு வடமாகாண மட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு போட்டியில் புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார். 19வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டம், 1500 மீற்றர் ஓட்டம், 5000 மீற்றர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் முதலாம் இடங்களை பெற்றுத் தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 800 மீற்றர் தூரத்தினை 2.36.3 நேரத்திலும் 1500மீற்றர் ஓட்டத்தினை 5.25.0 என்ற நேரத்திலும் ஓடிமுடித்து வடமாகாணத்தில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். http://www.newjaffna.com/moreartical.php?newsid=39609&cat=sports&sel=current&subcat=…

  3. கரீபியன் பிரீமியர் லீக்கிலும் சாம்பியன் ஆனது நடிகர் ஷாருக்கானின் அணி! பிராவோவின் அசத்தல் ஆட்டம் காரணமாக, கரீபியன் பிரீமியர் லீக்கில் நடிகர் ஷாருக்கானின் ரெட் ஸ்டீல் அணி கோப்பையை வென்றது. போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பர்படாஸ் டிரினிடான்ட் அணியுடன் ரெட் ஸ்டீல் அணி மோதியது. முதலில் விளையாடிய ரெட்ஸ்டீல் அணி, 50 ஓவர்களில் 178 ரன்களை எடுத்தது. டெல்ஸ்போட் 50 ரன்களும், கம்ரான் அக்மல் 60 ரன்களும் அடித்தனர். பிராவோ 15 பந்துகளில் 29 ரன்களை விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய பர்படாஸ் டிரினிடாட் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களேயே எடுக்க முடிந்தது. இதனால் ரெட் ஸ்டீல் அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோப்பையை …

  4. தென்ஆப்ரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயண விபரம் : அக். 22ஆம் தேதி சென்னையில் மோதல் தென்ஆப்ரிக்க அணி செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 70 நாட்கள் முதல் டிசம்பர் வரை 70 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கு 3 டி20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுடன் தென்ஆப்ரிக்க அணி விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியா வரும் தென்ஆப்ரிக்க அணி டிசம்பர் 7ஆம் தேதிக்கு பின்னரே இந்தியாவில் இருந்து கிளம்புகிறது. முதலில் நடைபெறும் டி20 போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்ரிக்க அணி விளையாடுகிறது. சென்னையில் அக்டோபர் 22- ஆம் தேதி ஒருநாள் போட்டியில் இந்தியா தென்ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. …

  5. 41 வயது மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற இந்தியாதான் வழி காட்டனும்...! தற்போது 41 வயதாகியும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஒரு வழியா ஓய்வு முடிவுக்கு வந்துட்டாரு. ஆனா இந்தியாவுக்கு எதிரா டெஸ்ட் போட்டி நடந்தா அதுல விளையாடிட்டுதுதான் ஓய்வு பெறுவாராம். பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் மிஸ்பா உல்-ஹக், ஏற்கனவே சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.இந்நிலையில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். '' நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக சில டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆசைப்படுகிறேன்.இன்னும…

  6. நாட்வெஸ்ட் தொடருக்கு வரவேற்பு இல்லை... ஐ.பி.எல். பாணியில் இங்கிலாந்தில் டி20 தொடர் ! ஐ.பி.எல். போல இங்கிலாந்தில் 8 நகரங்களை மையமாக வைத்து புதிய டி 20 கிரிக்கெட் தொடரை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் போல வேறு எந்த டி20 தொடரும் உலகம் முழுவதும் பிரபலமாகவில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் தொடர், தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் நாட்வெஸ்ட் டி20 தொடரையெல்லாம் விட, ஐ.பி.எல். தொடருக்குதான் வரவேற்பு அதிகம். எனவே ஐ.பி.எல். தொடரை போல நகரங்களை மையமாக கொண்டு ஒரு டி20 தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. லார்ட்ஸ், ஓவல், பிரிம்மிங்ஹாம், லீட்ஸ், நாட்டிங்ஹாம…

  7. சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பு பறிபோகும் அச்சம்: ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது பாகிஸ்தான் பாகிஸ்தான் அணி வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடவிருந்தது. இந்நிலையில், அந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு வெளிப்படையான காரணம் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 2017-ம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால்தான் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெற்ற இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில், இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இரு வாரியங்களுமே, வேறு…

  8. புத்துயிர் பெறும் வங்கதேச அணி: கேப்டன் முஸ்பிகுர் ரஹிம் பெருமிதம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் வீரர்கள் சில குறிப்பிட்ட அணிகளே கோலோச்சிக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில், தனது காலை வலுவாக ஊன்றத் தொடங்கியிருக்கிறது வங்கதேசம். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாக இருந்தாலும் சில பெரிய அணிகளுக்கு அது கத்துக்குட்டிதான். அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்போது மட்டுமே வங்கதேசம் பற்றி கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பேசுவார்கள். ஆனால், அதுகூட தோற்றுவிட்ட பெரிய அணியின் மீதான விமர்சனமாக இருக்குமே தவிர, வங்கதசேத்தின் வெற்றி குறித்ததாக இருக்காது. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. தன் இருப்பை கொஞ்சம் உரத்தே வெளிப்படுத்தத் த…

  9. உலக கோப்பை: ஒரே பிரிவில் பிரான்ஸ், நெதர்லாந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து (2018) தொடருக்கான தகுதிச் சுற்றில் பிரான்ஸ், நெதர்லாந்து, சுவீடன் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன. வரும் 2018ல் ரஷ்யாவில் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன. இதில் ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றில் மோதும் அணிகளின் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 52 அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் உலக கோப்பை பிரதான சுற்றில் விளையாட தகுதி பெறும். ஒவ்வொரு பிரிவிலும் 2வது இடம் பிடிக்கும் அணிகளில் இருந்து சிறந்த 8 அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றில்…

  10. மிக விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீரர் திலகரத்னே தில்ஷன்! ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை அடித்து இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை எட்டிய 11வது வீரர் இவர் ஆவார். ஹம்பான்தொட்டாவில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் 55 ரன்கள் எட்டிய போது ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இலங்கை வீரர்களில் ஜெயசூர்யா, மகிலா ஜெயவர்த்தனே, சஙகக்காரா ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய வீரர் இவர். தற்போது 39 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தில்ஷன் 318 சர்வதேச போட்டிகளில் விளையாடி 293வது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை அடித்துள்ளார். அந்த வகையி…

  11. போதும்... போறேன்...! மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயிலுக்கு தற்போது 35 வயதாகிறது. உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் சென்று டி20 போட்டிகளில் பங்கேற்பதுதான் கெயிலின் தற்போதைய முக்கிய வேலை. தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வரும் அவருக்கு முதுகு வலி இருந்து வந்தது. அண்மை காலங்களில் வலி அதிகரித்ததை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய கிறிஸ் கெயில் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட்டுக்கு தற்காலிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறுகையில், ''ஆகஸ்ட் 2ஆம் தேதி சாரிட்டி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறேன். அதற்கு பின், அறுவை சிகிச்சைக்காக என்னை தயார் செய்ய வேண்டியது உள்ளது. அனேகமாக டிசம்பர்…

  12. மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழகம் தனது பொன்விழாவையொட்டி பெருமெடுப்பில் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுத் தொடரை நாவாந்துறை மற்றும் குருநகர்வாசிகள் குழப்பி, மட்டுவில் வாசிகளின் முகத்தில் கரியை பூசியுள்ளனர். அண்மைக்காலமாக உதைபந்தாட்டத்தை விட, மல்யுத்தத்திலேயே அதிக அக்கறை காட்டும் நாவாந்துறை சென்.மேரில் மற்றும் குருநகர் பாடுமீன் ரசிகர்கள் மைதானத்திற்குள் கொலைவெறியுடன் மோதிக் கொண்டதால், பெரும் அல்லோலகல்லோலமே நிகழ்ந்தது. மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம் தனது பொன்விழாவை முன்னிட்டு அணிக்கு 7 பேரை கொண்ட உதைபந்தாட்ட தொடரை நடத்தியது. இதை முன்னிட்டு பெருமெடுப்பில் மைதானம் அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக தொடர் நடத்தப்பட்டது. இதற்காக மட்டுவிலை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களும் ஊரு…

    • 0 replies
    • 350 views
  13. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலை! புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா உள்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 6வது ஐபிஎல் போட்டியில், லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வழங்க சம்மதம் தெரிவித்த குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோர் கடந்த மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், 11 சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோருக்கு …

  14. உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 9வது இடம் உலகிலேயே அதிக மதிப்புள்ள விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின்னரே கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்கள் ரொனால்டோ, லயனல் மெஸ்சி இந்த பட்டியலில் வருகின்றனர். லண்டன் ஸ்கூல் ஆப் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரை விட இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு சந்தையில் அதிக மதிப்பு இருக்கிறது. தோனியின் ஆண்டு வருமானம் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் விளம்பரங்கள் மூலம் கிடை…

  15. அறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒரே வீரர்! அறிமுகமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையை வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் பெற்றுள்ளார். வங்கதேசத்தின் 20 வயது இளம் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதன் முறையாக சர்வதேச போட்டியில் களமிறங்கினார். முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தாபிசுர் ரஹ்மான், ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்தியாவை அடுத்து வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் சென்ற தென்ஆப்ரிக்க அணியும், வங்தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்று இழந்தது. இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21ஆம் தேதி சிட்டகாங்கில் தொடங்க…

  16. காயத்திற்கு பிறகு களமிறங்கும் போல்ட் உலகின் அதி­வேக வீரர் உசேன் போல்ட். ஜமைக்­காவை சேர்ந்த இவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்­டத்தில் உலக சாத­னை­யாளர் ஆவார். 100 மீட்­டரில் 9.58 வினா­டியில் கடந்தும், 200 மீட்­டரில் 19.19 வினா­டியில் கடந்தும் சாதனை படைத்தார். காயத்தால் அவ­திப்­பட்ட அவர் அதற்­காக சிகிச்சை பெற்றார். அதன்பின் தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டார். தற்­போது காயத்தில் இருந்து மீண்­டுள்ள அவர் நீண்ட காலத்­துக்கு பிறகு களம் இறங்­கு­கிறார். லண்­டனில் ஒலிம்பிக் மைதா­னத்தில் தட­கள போட்டி தொடங்­கு­கி­றது. இதில் உசேன் போல்ட் களம் இறங்­கு­கிறார். அதி­வேக 100 மீட்டர் ஓட்ட பந்­த­யத்தில் தகுதி சுற்று மற்றும் இறு­திப்­போட்டி நடக்­கி­றது. காயம் குணம் அடைந்து மீண்டும் பிர­வே…

  17. டி20 உலகக் கோப்பை: ஓமன், ஆப்கானிஸ்தான் தகுதி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சியில் ஓமன் அணியினர். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஓமன், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அயர்லாந்தின் துல்பின் அருகேயுள்ள மலாஹைடில் நடைபெற்ற டி20 தகுதிச்சுற்றில் நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை வாய்ப்பை பெற்றுள்ளது ஓமன். உலகக் கோப்பை போன்ற பெரிய சர்வதேச போட்டிகளில் விளையாட ஓமன் தகுதி பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கனடா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை ஓமன் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. கனடா உள்ளிட்ட 3 அணிகளும் நிறைய போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்றவையாகும…

  18. பாரதரத்னா மறுக்கப்பட்ட ஹாக்கி ஜாம்பவானுக்கு பிரிட்டன் பார்லியில் விருது! ஹிட்லர் அழைத்தும் ஜெர்மனி அணியில் இணைய மறுத்த, இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்துக்கு 'பாரத் கவுரவ் 'வாழ்நாள் சாதனையாளர் விருது பிரிட்டன் பார்லிமென்டில் இன்று வழங்கப்படுகிறது. அயல்நாடு வாழ் இந்தியர்கள் அமைப்பான 'சன்ஸ்கிரிட் யுவா சங்கம்' என்ற அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது. பிரிட்டன் பார்லிமென்டில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிற இந்த விருதை மேஜர் தயான்சந்த் சார்பில் அவரது மகன் அசோக் பெற்றுக் கொள்கிறார். மேஜர் தயான்சந்த் இந்திய ஹாக்கி உலகின் பிதாமகன். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் 400 கோல்களுக்கும் மேல் அடித்துள்ளார். 1928,1932, 1936ஆம் ஆண்டு இந்…

  19. வங்க தேச சிறுவர்களுக்கு இன்பஅதிர்ச்சியளித்த டேல் ஸ்டெயின் ! தென்ஆப்ரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. சிட்டாகாங் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் தென்ஆப்ரிக்க அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்று விடுவார். அதற்கேற்றார் போல் முதல் இன்னிங்சில் ஸ்டெயின் 3 வங்கதேச வீரர்களை அவுட் செய்து, 399 விக்கெட்டுகளை ஸ்டெயின் எட்டிவிட்டார். ஆனால் நேற்று 4வது நாள் ஆட்டம் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்டதால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை எட்டி விடும் ஸ்டெயினின் ஆர்வத்துக…

  20. சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்க பேட்டிங்கே என்னை நல்ல பவுலராக்கியது: டேமியன் பிளெமிங் ஷார்ஜா போட்டியில் பின்னால் சென்று வெளுக்கும் சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம். ஆஸி. வேகப்பந்து வீச்சாளரை சிக்சருக்கு அடித்த சச்சின். | கோப்புப் படம். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளெமிங், நேர்காணல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசுவது என்றால் என்ன என்பதன் அனுபவத்தை விளக்கிப் பேசியுள்ளார். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நீண்ட பேட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவது பற்றி கூறும்போது, “நான் ஒரு ஸ்விங் பவுலராகவே 1996-ம் ஆண்டு போராடினேன். 1998-ம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டோம், அப்போது எங்களிடையே சச்சின்டெண்டுல்கர் …

  21. கறுப்பினத்தவரை அவமதித்தனர் : 'இனவெறி' கால்பந்து ரசிகர்களுக்கு 5 ஆண்டுகள் தடை ! கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணியுடன் லண்டனை சேர்ந்த செல்சி அணி மோதியது. முதல் லெக் ஆட்டம் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான செல்சி அணியின் ரசிகர்கள் பாரிசுக்கு படையெடுத்தனர். போட்டியை காண பாரிஸ் நகர மெட்ரோ ரயிலில் ஆரவாரத்துடன் சென்ற செல்சி ரசிகர்கள், சூலைமான் சில்லா என்ற கறுப்பினத்தவரை ரயிலில் ஏற விடாமல் தடுத்து அவமதித்தனர். ரயிலில் ஏற முயற்சித்த அவரை, கீழே தள்ளி விட்டு அவமானப்படுத்தினர். ஏராளமான ரயில் பயணிகள் முன் இந்த சம்பவம் நடந்தது. மேலும் அந்த ரசிகர்கள், "நாங்…

  22. ஐந்து மாதங்களில் ஐந்து கிரிக்கெட்' டாடி'கள்! கடந்த 5 மாதங்களில் இந்திய அணியின் கேப்டன் தோனி உள்பட 5 கிரிக்கெட் பிரபலங்கள் தந்தையாகியுள்ளனர். உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன், இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு குழந்தை பிறந்தது. சாக் ஷி கையில் குழந்தை தவழ்ந்த சமயத்தில்,தோனி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்தார். தோனியின் குழந்தையின் பெயர் ஷீவா. ஐ.பி.எல். போட்டியின் போது மைதானங்களில் தோனி, ஷீவாவை கையில் வைத்துக் கொண்டு அலைவதே தனி அழகு. கடந்த மே மாதம் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு பெயர் மெடில்டா விக்டோரியா வாட்சன் என்று பெயரிடப்பட்டது. ஷேன் வாட்சன், அவரது மனைவி, மூத்த மகன் ஆகிய…

  23. ஈடன் கார்டன் என்னும் கிரிக்கெட்டின் சொர்க்கபுரியில் நடந்த 10 சுவாரஸ்ய நிகழ்வுகள்! கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வான்கடே மைதானத்தில் வென்றது. அதற்கடுத்து 2016ம் ஆண்டில் இந்தியாவில் உலகக்கோப்பை டி20 போட்டி நடைபெறவுள்ளது. அதன் இறுதி போட்டிக்கான மைதனாத்தையும் மற்ற மைதானங்களையும் ஐசிசி அறிவித்தது. இறுதி போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆட்டம் நடைபெறும் மைதானங்கள் எப்போதுமே கிரிக்கெட் ரசிகர்களோடு ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தி இருக்கும். அப்படிபட்ட மைதானங்களில் ஒன்றுதான் ஈடன் கார்டன் மைதானம். இந்தியாவின் மிகச்சிறந்த ஆடுகளங்களில் இதுவும் ஒன்று. 1864 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மைதானம், இன்று 150 ஆண்டுகள…

  24. அக்சர் படேல் டெஸ்ட் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் அல்ல: சுனில் கவாஸ்கர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல். | கோப்புப் படம். சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் பந்துவீச்சு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். என்.டி.டிவி-யில் சுனில் கவாஸ்கர் பேட்டியளித்த போது, “இந்திய அணி எதிர்பார்க்கும் அடுத்த பெரிய ஸ்பின்னர் என்று அக்சர் படேலைக் கூற முடியாது. அவர் பந்தை சும்மா உருட்டுகிறார், அவரிடம் பிளைட் இல்லை, அவரது பந்துகள் எளிதில் கணித்துவிடக் கூடியதாகவே உள்ளது. பிட்ச் உதவி செய்தாலே தவிர அவரால் பந்துகளை திருப்பவே முடியவில்லை. ஒரு மிதவேகப்பந்து வீச்சாளரை விட மெதுவாக வீசுகிறார் அவ்வளவே. ஆம்! அஸ்வின், ஹர்பஜன் சிங், அமித…

  25. சென்னையை கைகழுவுகிறார் தோனி : ராஞ்சியை மையமாக வைத்து புதிய ஐ.பி.எல். அணி? ராஞ்சியை மையமாக கொண்டு புதிய ஐ.பி.எல். அணி உருவாகவுள்ளதாகவும் அந்த அணியை தோனி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் இரு சீசன்களில் பங்கேற்க சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேறு இரு நகரங்களை மையமாக கொண்டு ஐ.பி.எல். அணிகள் உருவாகவுள்ளன. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிதான் கேப்டன் தோனியின் சொந்த ஊர் ஆகும். எனவே ராஞ்சியை மையமாக கொண்டு புதிய ஐ.பி.எல். அணியை உருவாக்கி அதனை வாங்க தோனி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியன் சூப்பர் லீக்கில் விளையாடி வரும் சென்னையின் எப்.சி., ஹாக்கி இந்தியா லீக்கில் விளையாடும் ராஞ்சி அணி, மகி ரேஸிங் டீம் போன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.