Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அவுஸ்திரேலிய கப்டன் கூறுகிறார் நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதலாவது ஒரு நாள் போட்டியில் நேற்று மோதியது. சப்பல் - ஹாட்லி தொடருக்காக அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி விளையாடுகிறது. உலக கிண்ணத்தை கருத்தில் கொண்டு அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கிபொண்டிங், துணை கப்டன் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயத்தால் சைமண்ட்ஸும் அணியில் இடம்பெறவில்லை. இதையடுத்து இந்தத் தொடருக்கான கப்டனாக மைக்கேல் ஹஸி நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை வெலிங்டனில் நடந்தது. சமீபத…

  2. அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை நாட்டியதமிழக சிறுமி… தமிழகத்தின் சென்னையை சேர்ந்த மூன்று வயதான சிறுமி சஞ்சனா மூன்றரை மணித்தியாலத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி உலக சாதனைக்கு முயன்று மூலம் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி சஞ்சனா தனது 3 வயதிலேயே கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பவரின் மகளான சஞ்சனா பிரபல கராத்தே வீரரும், வில் வித்தை பயிற்சி அளித்து வருபவருமான ஷிஹான் ஹுசேனியிடம் பயிற்சி பெற்று வருகின்றார். இச் சிறுமி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளார். சமீபத்தில் செ…

  3. நியூசி.யில் 'டார்லிங்'?.... ஹோட்டல் ரூமில் பேயைப் 'பார்த்து’ காய்ச்சலில் விழுந்த கிரிக்கெட் வீரர்! கிரைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில், தனது படுக்கை அறையில் பேயைக் கண்டதாகக் கூறி, காய்ச்சலில் படுத்துக் கிடக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹாரிஸ் சொகைல். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதற்காக கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ரிட்ஜஸ் லாட்டிமர் என்ற ஹோட்டல் ஒன்றில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த வீரர் ஹாரிஸ் சொகைல், நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்துள்ளார். அப்போது தனது படுக்கை அறையில் ஏதோ உருவம் ஒன்றைப் பார்த்துள்ளார். பின்னர…

  4. உலகக் கோப்பையை வென்றால் 1 மில்லியன் டாலர்கள் போனஸ்; இலங்கை அரசு அறிவிப்பு உலகக் கோப்பையை வென்றால் இலங்கை அணி வீரர்களுக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக அளிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அரசுச் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்ன கூறும்போது, “உலகக் கோப்பையை மீண்டும் வெற்றி பெற்று நாட்டுக்குக் கொண்டு வந்து பெருமை சேர்த்தால் இலங்கை அணிக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக வழங்கப்படும்.” என்றார். 1996-ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் வென்றது. அதன் பிறகு 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிக்கு தகுதி பெற்றது. 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை வென்றபோது, அந்த அணி வீரர்களுக்கு கார்கள், வீடுகள் மற்றும் நிலம் வழங…

  5. இலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு! இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் 02 டெஸ்ட் மற்றும் 05 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் மோதவுள்ளன. இந்தநிலையில் குறித்த தொடருக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு என்.சி.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான இலங்கை குழாமில் யாழ் மத்தியக்கல்லூரியின் விஜயகாந்த் வியாஷ்காந் பெயரிடப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இந்திய இளையோர் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடி தமது திறமையை நிரூபித்திருந்தார். இதனிடையே கொழும்பு சாஹிரா கல்லூரியின் துடுப்பாட…

  6. இந்தியா vs பாகிஸ்தான்: சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் பட மூலாதாரம்,HOCKEY INDIA கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 30 ஜூலை 2023 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன. சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்திய அணியும்…

  7. காலிறுதி வாய்ப்பை இழந்தார் மரியா ஷரபோவா அவுஸ்ரேலிய ஓபனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மரியா ஷரபோவா காலிறுதி வாய்ப்பை இழந்துள்ளார். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லெய்க் பேர்ட்டி-யை எதிர்கொண்டார். முதல் செட்டை மரியா ஷரபோவா 6-4 எனக் கைப்பற்றினார். எனினும், 2-வது செட்டை 1-6 எனவும், 3-வது செட்டை 4-6 எனவும் எளிதாக இழந்தார். இதனால் காலிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறினார். சொந்த மண்ணில் ஷரபோவை வீழ்த்திய ஆஷ்லெய்க் பேர்ட்டி, காலிறுதியில் 8-ம் நிலை வீராங்கனையான கிவிட்டோவை எதிர்கொள்கிறார். …

  8. ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் அடில் ரஷித், ஸ்டீவன் பின் வாய்ப்பு பெற்றனர். இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, வரலாற்று சிறப்புமிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜூலை 8ல் கார்டிப் நகரில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அறிமுக சுழற்பந்துவீச்சாளராக அடில் ரஷித், 27, சேர்க்கப்பட்டார். இவர், இதுவரை 11 ஒருநாள், 6 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடி உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின், வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பின், 26, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். …

  9. ஐசிசி ஒருநாள் தரவரிசை: வழக்கம்போல் அசைக்க முடியாத இடத்தில் கோலி, பும்ரா Published : 17 Mar 2019 17:51 IST Updated : 17 Mar 2019 17:51 IST பி.டி.ஐ துபாய் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்திலும், பந்துவீச்சில் பும்ரா தொடர்ந்து முதலிடத்திலும் இருந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் 310 ரன்கள் குவித்தார் கோலி இதனால், தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த தொடரில் 202 ரன்கள் சேர்த்ததால், தரவரிசையில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடி…

  10. சென்னை, ராஜஸ்தான் வீரர்கள் புதிய அணியில்? சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் வருங்காலம் பற்றி முடிவெடுப்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் சில நாட்களுக்கு முன் பி.சி.சி.ஐ.-யின் புதிய தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்றது. சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள இரண்டு அணியையும் வெட்டிவிட பி.சி.சி.ஐ. விரும்பவில்லை. அந்த இரண்டு அணிகளும் அடுத்த இரண்டு சீசனில் இடம்பெறாது. அதற்குப் பதில் இரண்டு புதிய இரண்டு அணிகள் 2016, 2017-ல் கலந்து கொள்ளும் என்றும், 2018-ல் 8 அணியில் இருந்து 10 அணிகளாக எண்ணிக்கை உயர்த்தப்படும். அதில் இரண்டு அணிகளும் இடம்பெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் நிலை என்ன என்ற கேள…

  11. ஃபோர்மியூலா –1 உலக சம்பியன் பட்டத்தை மூன்றாவது தடவையாக ஹமில்டன் வென்றார் ஐக்­கிய அமெ­ரிக்க குரோன் ப்றீ காரோட்டப் பந்­த­யத்தில் வெற்­றி­யீட்­டிய மேர்­சிடெஸ் அணி சார­தி­யான லூயிஸ் ஹமில்டன், மூன்­றா­வது தட­வை­யாக ஃபோர்­மி­யூலா வன் உலக சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்தார். டெக்சாஸ், ஒஸ்டின் ஓடு­பா­தையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற இவ்வரு­டத்­திற்­கான 16ஆம் கட்ட குரோன் ப்றீ காரோட்டப் பந்­த­யத்தில் முதலாம் இடத்தைப் பெற்­றதன் மூலம் ஃபோர்­மி­யூலா –1 உலக சம்­பியன் பட்­டத்தை ஹமில்டன் உறுதி செய்­து­கொண்டார். சேர் ஜெக்கி ஸ்டுவர்ட்­டுக்குப் பின்னர் ஃபோர்­மி­யூலா –1 உலக சம்­பியன் பட்­டத்தை மூன்று தட­வைகள் வென்­றெ­டுத்த இரண்­டா­வது பிரித்­தா­னியர் என்ற பெரு­மையை ஹமில்டன் ப…

  12. பார்ட்டி மேன் வாயை திறந்தால் 'டர்ட்டி மேன்'! 'சிக்சர் மன்னன்' கெயில் இன்று கிரிக்கெட் உலகின் சர்ச்சை நாயகன். பெண் செய்தியாளரிடம் வழிந்து இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். களத்தில் கூலாக இருக்கும் கெயிலுக்கு வெளியில் வேறு விதமான முகம் உண்டு. ஆனால் இதுவரை பார்ட்டி மேனாக மட்டுமே இருந்து வந்த அவர், ஓவர் வழிசலால் டர்ட்டி மேனாக மாறிவிட்டார். "தண்ணி அடிக்கலாமா பேபி" ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பேஷ் லீக்கில் மெல்பர்ன்ரெனகேட்ஸ் அணிக்காக ஆடி வரும் கெயிலை 'நெட்வொர்க் டென்' பத்திரிக்கையைச் சேர்ந்த மெக்லாலின் என்ற பெண் செய்தியாளர் பேட்டியெடுத்தார். அப்போது கெயிலோ , "நானே உங்களைப் பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். போட்டி முடிந்ததும் தண…

  13. இலங்கை வருகிறது அவுஸ்திரேலியா இவ்வாண்டு ஜூலை மாதத்தில், முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வரவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடருக்காகவே, அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வரவுள்ளது. இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பித்து, செப்டெம்பர் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அவுஸ்திரேலிய அணி இறுதியாக, 2011ஆம் ஆண்டே, டெஸ்ட் தொடரொன்றுக்காக இலங்கைக்கு வந்திருந்த நிலையில், 5 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வரவுள்ளது. அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திவரும் அவுஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்தில் காணப்படுவதோடு, இலங்கை அணி தடு…

  14. இதுதான் ஐ.பி.எல் லின் சிறந்த டீம்... எப்படி? முன்னெல்லாம் இந்திய அணியின் பயிற்சியாளர் தவிர்த்து, வேறு அணிகளின் பயிற்சியாளர்கள் யாரென நமக்குத் தெரியாது. காரணம், அதிகம் அறியப்படாத வீரர்களே பெரும்பாலும் பயிற்சியாளர்களாக உருவெடுத்தனர். உதாரணமாக டன்கன் பிளட்சர் போன்றோரைச் சொல்லலாம். ஆனால் இப்போதெல்லாம் முன்னணி வீரர்கள் அனைவருமே கோச்சிங் செய்யத் தொடங்கிவிட்டனர். ஆண்டி பிளவர், கிறிஸ்டன் எனத் தொடங்கி ஜெயவர்தனே வரை அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. சர்வதேச அரங்கே இப்படியென்றால் ஐ.பி.எல் நிலைமையை சொல்லவே தேவையில்லை. முன்னாள் வீரர்கள், உச்ச நட்சத்திரங்கள் எல்லாம் பயிற்சியாளர் பொறுப்பில் அமர்ந்திருக்கின்றனர். சச்சின், டிராவிட், பிளமிங் என பயிற்சி…

  15. கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் – குமார் சங்கக்கார 2016-04-25 08:30:33 இலங்கை கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த விட­யங்­களில் எழும் பல கேள்­வி­க­ளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் பதில் அளித்­தாக வேண்டும் என இலங்கை கிரிக் கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­கக்­கார தெரிவித்­துள்ளார். இங்­கி­லாந்தில் முதல்­தர பிராந்­திய கிரிக்கெட் போட்­டி­களில் சரே அணிக்­காக விளை­யா­டி­வரும் குமார் சங்­கக்­கார, பி.பி.சி உலக சேவையின் “ஸ்டம்ப்ட்” சேவையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். …

  16. 5 நிமிடங்கள் மணியடித்தார் சங்கா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட்போட்டி இன்று இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது. இந்நிலையில் லோட்ஸ் மைதானத்தின் பாராம்பரிய முறைப்படி அங்கு இடம்பெறும் போட்டியை முக்கியஸ்தர் ஒருவர் 5 நிமிடம் அங்குள்ள மணியை அடித்து போட்டியை ஆரம்பித்து வைப்பார். அந்தவகையில் இன்றைய போட்டியை இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் ஜாம்பவானுமாகிய குமார் சங்க குறித்த மணியை ஒலிக்கவிட்டு…

  17. யாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012 22:02 1 COMMENTS (கு.சுரேன்) அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர் அல்பேர்ட் பார்க்கில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரன் இரத்தினசிங்கம் செந்தூரன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இந்த போட்டி, அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து, செந்தூரன் இரண்டாமிடத்தை பெற்றார். இவர் தேசிய கனிஸ்ட பிரிவு உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விகேடாரியா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்…

  18. 19இன் கீழ் கொத்மலை கிண்ண பாடசாலைகள் கால்பந்தாட்டம்; இறுதிச் சுற்றில் யாழ். புனித பத்திரிசியார், யாழ்.புனித ஹென்றியரசர் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நடத்தும் 19 வய­துக்­குட்­பட்ட பாட­சாலை அணி­க­ளுக்கு இடை­யி­லான கொத்­மலை கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு ­பற்றும் யாழ். மாவட்டப் பாட­ச­லைகள் இரண்டும் கால் இறு­தி­களில் விளை­யாட தகு­தி­பெற்­றுக்­கொண்­டுள்­ளன. புனித பத்­தி­ரி­சியார், புனித ஹென்­றி­ய­ரசர் ஆகிய அணி­களே கால் இறு­திக்கு முன்­னே­றி­யுள்­ளன. குழு டி யில் பங்­கு­பற்றும் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி தனது ஆறு போட்­டி­க­ளிலும் வெற்­றி­யீட்டி 18 புள்­ளி­க­ளுடன் முதலாம் இடத்தைப் பெற்று கால் இறு­தியில் விள…

  19. 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் முறையாக ஜமைக்காவுக்கு தங்கம் ஒலிம்பிக்கில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் ஒமர் மெசிலாட் தங்கப் பதக்கம் வென்றார். 22 வயதான ஒமர் மெசிலாட் பந்தய தூரத்தை 13.05 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. ஸ்பெயின் வீரர் ஓர்டேகா 13.17 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கமும், பிரான்சை சேர்ந்த டிமிட்ரி பாஸ்கோவ் 13.24 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்கா பதக்க மேடையை தவறவிடுவது இதுவே முதன்முறையாகும். அந்த நாட்டின் தேவோன் ஆலன் 5-வது இ…

  20. பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள். பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள். அடுத்த மாதம் இங்கிலாந்து அணி, மூன்று ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுக்க பங்களாதேஷ்க்கு செல்ல உள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான அணி விபரங்களே அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்காக 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர்களான அன்சாரி, பென் டக்கட், ஹசீப் ஹமீத் போன்ற இளம் வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 2…

  21. உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைப்போம்: வங்காள தேச கேப்டன் சொல்கிறார் இந்தியாவில் நாங்கள் விளையாடும் திறமையை பார்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் மீண்டும் எங்களை அழைக்க வேண்டும் என வங்காள தேச கேப்டன் தெரிவித்துள்ளார். வங்காள தேச கிரிக்கெட் அணி கடந்த 2000-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. இந்தியா அதே ஆண்டு நவம்பர் 10-ந்தேதி அங்கு சென்று முதன் முறையாக வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடியது. சுமார் 16 வருடங்களாக வங்காள தேச அணி இந்தியா வந்து விளையாடியது கிடையாது. தற்போது முதன்முற…

  22. தமிழீழ உதைபந்தாட்ட கழகத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் http://tamileelamfa.org/ முகநூல் பக்கம்: https://www.facebook.com/TamileelamFA (முகநூல்)

  23. கரிபியின் பிரிமியர் லீக் : 1.9 கோடிக்கு விலைபோன சங்கா மற்றும் மலிங்க 2017 ஆம் ஆண்டுக்கான கரிபியின் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்கள் தெரிவு இன்று இடம்பெற்றது. இந்த வீரர்கள் தெரிவில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு முன்னணி வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் லசித் மலிங்க ஆகியோரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். குமார் சங்கக்கார ஜமைக்கா டளவாஸ் அணிக்கு விளையாடவுள்ளதுடன், லசித் மலிங்க சென் லூசியுர் ஸடார்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். குறித்த அணிகள் சங்கக்கார மற்றும் மலிங்கவை தலா ஒரு இலட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை பணத்தில் சுமார் 1.9 கோடி) வாங்…

  24. ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை செவிலா அணிக்கெதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டா ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்தள்ளார். போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, 2009-ம் ஆண்டு 94 மில்லியன் யூரோவிற்கு டிரான்ஸ்ஃபர் ஆனார். ரியல் மாட்ரிட் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கராக விளங்கி வருகிறார். லா லிகாவில் நேற்று ரியல் மாட்ரிட் அணி செவிலாவை எதி…

    • 1 reply
    • 433 views
  25. பரி. யோவான் பொழுதுகள்: 2022 Big Match பரி. யோவானில் படித்துக் கலக்கினவங்களை விட, Big Match இல் வெளுத்து கலக்கினவங்களை தான் Johnians சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடும். அந்தளவிற்கு இந்த “Big Match is a Big deal at St. John’s” என்று இங்கிலீஷில் சொன்னால் தான் Big Match இன் சிறப்பை, பெருமையை உங்களுக்கு விளங்க வைக்கலாம். 2020 மார்ச் மாதத்தில் யாருமே எதிர்பாராத வகையில், பொடிப் பயலுகளான, Baby Brigade என்று வர்ணிக்கப்பட்ட, பரி யோவானின் அணி, பலம் வாய்ந்த பிஸ்தாக்களான யாழ் மத்திய கல்லூரி அணியை Big Match இல் வென்ற கையோடு, கொரனா பெருந்தொற்று முழு உலகையே பூட்டிப் போட்டது. 2020 Big Match உண்மையிலேயே கோலியாத்தை வென்ற தாவீது கதையின் மீளுருவாக்கம் தான். 2021 Big Match ஐயு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.