விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
பிரிஸ்பேன் சரித்திரம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்று விட்டால் கூட இந்தியா அந்தளவுக்கு கொண்டாட வேண்டிய அவசியம் கிடையாது. சாம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தால் அது வெற்றி மட்டும் தான் ஆனால் இந்த பிரிஸ்பேன் சம்பவம் ஒரு மாபெரும் கிரிக்கெட் சரித்திரம் மட்டும் கிடையாது இந்திய அணியைப் பார்த்து ஏளனமாகப் பேசித்திரிந்த அத்தனை வாய்களையும் அடக்கி விட்ட வரலாறு. 32 வருடமாக பிரிஸ்பேனில் அவுஸ்ரேலியா தோற்றதே கிடையாது. இருந்திட்டு போகட்டும், ஆனால் இனிமேல் இந்தியா பிரிஸ்பேன் வந்தால் அவுஸ்ரேலியன் கண்ணில் மரண பயம் தெரிய வேண்டும். நாம திருப்பி அடிக்கலனா அவனுக நம்மல துரத்தி அடிச்சிட்டே இருப்பானுகள், அடிக்கிறவனுக்கு திரும்ப அடிக்கனும், மொத்தமா அடங்கிற மாதிரி அடிக்கனும் என்று…
-
- 0 replies
- 571 views
-
-
யாழ்ப்பாணம் இந்து. வென்றது கிண்ணம் யாழ்ப்பாணம் மாவட்ட பளுதூக்கல் சங்கம் தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்திய பளுதூக்கல் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி சம்பியனானது. யாழ்ப்பாணம் துரையப்பா உள்ள விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 39 புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், யாழ்ப்பாணம் பளுதூக்கும் கழகம் 9 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும், மலாயன் சாண்டோ அணி 2 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்தையும் பெற்றன. http://ut…
-
- 0 replies
- 484 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கின் அதிவேக வீரரானார் இத்தாலியின் ஜேக்கப்ஸ் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் 32ஆவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அதிகேவ வீரர் யார் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் இத்தாலியின் ஜேக்கப்ஸ் லாமண்ட் மார்செல் முதலிடம் பெற்று சாதனைப் படைத்தார். இதில் மற்றொரு முக்கியமான விடயம் என்னவெனில் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் கோளோச்சிய தற்போதும் அதிவேக வீரராக உள்ள ஜமைக்காவின் உசைன் போல்ட் இல்லாத 100 மீற்றர் ஓட்டமாக இது அமைந்ததோடு ஜமைக்கா நாட்டின் எந்தவொரு வீரரும் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற வில்லை என்பதும் அந்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமன்றி தடகள ரசிகர்கள் அனைவக்கும் க…
-
- 0 replies
- 287 views
-
-
சேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் 2ஆவது நாளில் சாதனை மழை இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான இன்றைய தினம் 9 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்ட அதேநேரம், 4 போட்டி சாதனைகள் சமப்படுத்தப்பட்டதுடன், 7 போட்டி சாதனைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. இதில் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் 7 சாதனைகளும், மைதான நிகழ்ச்சிகளில் 2 சாதனைகளும், நிகழ்த்தப்பட்டதுடன், யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன் ராஜ், 15 வயதுக்கு உட்ப…
-
- 0 replies
- 594 views
-
-
மாலிங்க ஓய்வு பற்றி சூசகம் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து நட்சத்திரம் லசித் மாலிங்கவின் ஐ.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தான் மனநிறைவு பெற்றிருப்பதாக தனது ஓய்வு பற்றி மாலிங்க சூசகமாக குறிப்பிட்டுள்ளார். மாலிங்க கடந்த ஒரு தசாப்தமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 157 போட்டிகளில் 110இல் மாலிங்க ஆடி அந்த அணிக்கு கௌரவத்தை சேர்த்துள்ளார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக மாலிங்க வியாழக்கிழமை (08) நியமிக்கப்பட்டார். “கிரிக்கெட் ஆடியது போதும் என்ற மனநிலை…
-
- 0 replies
- 358 views
-
-
இளம் தலைமுறையினர் கிராண்ட்ஸ்லாம் பல வெல்வது கடினம் இன்றைய இளம் தலைமுறையினர் தன்னைப் போலவும், நடால் மற்றும் ஜோகோவிச்சைப் போலவும் பல்வேறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வது கடினம் என்று ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரர் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனாக்கோவில் 18-ஆவது லெளரியஸ் உலக விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் '2017-ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்', 'சிறந்த மீண்டு வந்த வீரர்' ஆகிய இரு விருதுகளை ஃபெடரர் வென்றார். முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இன்றைய இளம் தலைமுறையினர் என்னைப் போலவும், சக வீரர்களான நடால், ஜோகோவிச் போலவும் பல கிராண்ட்…
-
- 0 replies
- 321 views
-
-
2018 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில்? இந்த ஆண்டு செம்டம்பர் மாதம் இந்தியாவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி விளையாடுவதில் சிக்கல்கள் உள்ள காரணத்தினால், குறித்த தொடரினை இலங்கையில் நடாத்த ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத் தொடரின் போது, 2018ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்தும் நாடாக இந்தியா பெயரிடப்பட்டிருந்தது. எனினும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அயல் நாடுகளிடையே அரசியல் ரீதியாக குளறுபடிகள் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில் பிரச்சினைகள் இருக்க…
-
- 0 replies
- 354 views
-
-
இனி எளிதாகத் தப்பிக்க முடியாது: பந்தைச் சேதப்படுத்தினால் கடும் தண்டனை: ஐசிசி புதிய விதிமுறைகள் கோப்புப்படம் பந்தைச் சேதப்படுத்தும் வீரர்கள் ஒரு போட்டியுடன் தடை போன்ற எளிமையான தண்டனையில் இருந்து இனி தப்பிவிட முடியாது. கடுமையான தண்டனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுண்சில்(ஐசிசி) வகுத்துள்ளது. பந்தைச் சேதப்படுத்துதல், எதிரணி வீரர்களைத் திட்டுதல், நடுவர்கள் முடிவுக்குக் கட்டுப்பட மறுத்தல் உள்ளிட்டவை 3-வது வகையான கடும் குற்றமாகக் கருதப்படும். இதையடுத்து, இனி பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 317 views
-
-
"விராட் கோலிதான் உலகின் மிகச்சிறந்த வீரர்" - முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இங்கிலாந்து இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியதை தொடர்ந்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலிதான் என பாராட்டியிருக்கிறார். படத்தின் காப்புரிமைPHILIP BROWN…
-
- 0 replies
- 487 views
-
-
டெஸ்ட் இன்னின்சில் 2 தொடக்க வீரர்களும் டக் அவுட்: சுவையான புள்ளி விவரங்கள் நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் மற்றும் லாதம் ஆகியோர் ரன் எடுக்காமல் முறையே ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரிடம் ஆட்டமிழந்தனர். இந்தியாவின் சிறந்த டெஸ்ட் தொடக்க வீரர்களான சுனில் கவாஸ்கர், சேத்தன் சவுகான். | கோப்புப் படம். நியூஸிலாந்து அணியில் 6 முறை இரண்டு தொடக்க வீரர்களும் ரன் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளனர். அது பற்றிய சுவையான புள்ளி விவரம் வருமாறு: லார்ட்ஸில் இவ்வாறு 3 முறை நடந்துள்ளது. இதில் நியூஸிலாந்து அணி 2 முறை இத்தகைய துரதிர்ஷ்ட…
-
- 0 replies
- 511 views
-
-
கடல் அலை சறுக்கில் அசத்தும் இலங்கை பெண்கள் 6 மார்ச் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடலலைகளில் சறுக்கி சாகசம் புரிந்த அந்தப் பெண்ணின் பெயர் - ரவீந்திர ராஜா பேபி ராணி. 'அறுகம்பே விமன் சர்ஃப் கிளப்' உறுப்பினர் என்று, தன்னை அவர் அறிமுகம் செய்து கொண்டார். கடலில் அலை சறுக்கில் ஈடுபடும் பெண்களுக்கென இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள …
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
மசூதி துப்பாக்கி சூடு – பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் ரத்து March 15, 2019 நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதைத் தொடர்ந்து அந்த அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நாளை ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில், இன்று தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தின் அருகே உள்ள மசூதிக்கு சென்றிருந்தபோது மசூதிக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர…
-
- 0 replies
- 629 views
-
-
கடினமான தருணங்களில் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்த்த இந்தியாவும் பாகிஸ்தானும் - உத்வேகமளிக்கும் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் “சுதந்திரமாக விளையாடுகிறோம். நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. மிகப்பெரிய கிரிக்கெட் வரலாறு எங்கள் தேசத்துக்கும் இல்லை. அதனால் ஒவ்வொரு தவறிலிருந்தும் நாங்கள் கற்று வருகிறோம். 2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசத்திடம் தோற்றோம். 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தோம். 4 ஆண்டுகளில் எங்களின் பலவீனத்தை அடையாளம் கண்டு அதை வலிமையாக மாற்றியுள்ளோம்” இது ஆப்கானிஸ…
-
- 0 replies
- 731 views
- 1 follower
-
-
உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் : இடுப்பு வலி சிறுத்தையின் வேகத்தை குறைக்கவில்லை ! சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார். சீனாவின் பெய்ஜிங் நகரில் 15வது உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினுக்கிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் பந்தய தலைவை 9.79 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் ஆனார். கடந்த சில மாதங்களாக உசேன் போல்ட் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் 100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிகளுக்குள் அவர் கடந்து விடுவாரா? என்ற கேள்வி அவரது ரசிகர்களுக்…
-
- 0 replies
- 335 views
-
-
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஆஷஸ் தொடரின் 2 ஆவது போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன. இந்நிலையில, 8 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்தது. 4 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்களை எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 16 ஓட்டங்களுடனும் ஜோஸ் பட்லர் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் ஆரம்பமாகியது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.…
-
- 0 replies
- 503 views
-
-
பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி உண்பதற்கு அணியின் பயிற்றுவிப்பாளரும் தெரிவுக்குழுவின் தலைவருமான மிஸ்பா உல் ஹக் தடை விதித்துள்ளார். புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மிஸ்பாஉல் ஹக் வீரர்களிற்கான உணவு திட்டமொன்றை வெளியிட்டுள்ளதுடன் அதனை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பாக்கிஸ்தான் அணி வீரர்களின் உடற்தகுதி வீழ்ச்சியடைவதை கருத்திலெடுத்துள்ள மிஸ்பா உல் ஹக் பாக்கிஸ்தான் அணி வீரர்கள் மேலும் உற்சாகத்துடன் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு வழிவகுக்ககூடிய உணவுநடைமுறையை அறிவித்துள்ளார். இதனடிப்படையில் மிஸ்பா உல் ஹக் இனிப்பு மற்றும் எண்ணெய் உணவுகளிற்கு தடை விதித்துள்ளார். பாக்கிஸ்தான் அணியின் தேசிய பயிற்சி முகாமில் இணைக்கப்பட…
-
- 0 replies
- 646 views
-
-
2034 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்! 2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என ஃபிஃபா நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. தொடரின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030ஆம் ஆண்டு 3 போட்டிகள் ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. நேற்று இடம்பெற்ற ஃபிஃபா காங்கிரஸின் வாக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஃபிஃபாவில் அங்கம் வகிக்கும் 211 நாடுகளின் பிரதிநிதிகள் தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 529 views
-
-
19வயதின் கீழ் மும்முனை ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்தை 52 ஓட்டங்களால் வென்றது இலங்கை இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகள் பங்குபற்றும் மும்முனை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது முதலாவது வெற்றியை நேற்றுமுன்தினம் பதிவு செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக கெத்தாரம, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் சிறந்த பந்துவீச்சின் உதவியுடன் 52 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இப் போட்டியில் 19 வயதின் கீழ் இங்கிலாந்து அணித் தலைவர் ப்றட் டெய்லர் 4 விக்கெட்களைக் கைப்பற்றியபோதிலும் அவ்வணியின் துடுப்பாட்ட…
-
- 0 replies
- 504 views
-
-
’’முரளிதரன் போல் ஹேரத் ஊக்குவிக்கப்படவில்லை’’ சங்கா February 17, 2016 சுழற்பந்து வீச்சாளராக முரளிதரனுக்கு கிடைத்த அங்கீகாரம் ரங்கன ஹேரத்துக்கு கிடைக்கவில்லை என்று சங்கக்காரா வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் எதிரணியை தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் திணறடித்தவர். இதே போன்ற திறமையை தற்போது அணியில் இருக்கும் ரங்கன ஹேரத் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் ஹேரத்துக்கு கிடைக்கவில்லையே என்று சங்கக்காரா கூறியுள்ளார். அவர் கூறுகையில், “எனக்கு 15 வயது இருக்கும் போதில் இருந்தே ஹேரத்தை தெரியும். ஆனால் திறமை இருந்தும் அவரது கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே இருந்தது. 2009ம் ஆண்டு கா…
-
- 0 replies
- 442 views
-
-
பாகிஸ்தான் அணி இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு செல்லக்கூடாது என பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவருமான இஷான் மணி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்தமை தவறு எனத் தான் கருதுவதாகத் தெரிவித்த இஷான் மணி, இது ஓர் அரசியல் முடிவு என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அரசியல்வாதிகளுடன் கலந்து பேசி இந்திய அணி பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய இந்திய அணியால் முடியாதுவிடின் நடுநிலையான இடமொன்றிலாவது கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற இந்திய அணியைச்…
-
- 0 replies
- 434 views
-
-
ஒலிம்பிக்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி! ரியோ ஒலிம்பிக் போட்டியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி கண்டுள்ளார். 3-வது சுற்றில், உக்ரைனின் எலினா, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் செரீனாவைத் தோற்கடித்துள்ளார். இதனால் செரீனா ரியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்-வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் ஜோடி அதிர்ச்சி தோல்வி கண்டது. இந்த ஜோடி நேர் செட்களில் செக்.குடியரசின் லூஸி சஃபரோவா-பர்போரா…
-
- 0 replies
- 353 views
-
-
இந்திய அணியை அச்சுறுத்த இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ வருகிறார் சக்லைன் முஷ்டாக் அடில் ரஷீத்துடன் சக்லைன் முஷ்டாக். | கெட்டி இமேஜஸ் முன்னாள் பாகிஸ்தான் ‘கிரேட்’ சக்லைன் முஷ்டாக், இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து தொடரில் சக்லைனின் அறிவுரைகள் இங்கிலாந்து அணிக்கு உதவியது. இதனையடுத்து இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ சக்லைன் முஷ்டாக் ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். நவம்பர் 2-ம் தேதி முதல் இவர் இங்கிலாந்து அணியுடன் இருந்து பயிற்சி அளிப்பார். காரெத் பாட்டீ, அடில் ரஷீத், சஃபர் அன்சாரி ஆகியோர் தங்க…
-
- 0 replies
- 262 views
-
-
இப்படியொரு கால்பந்து போட்டி நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா …? இன்று டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருப்பதற்கும், 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா தேர்தலில் வென்றதும் ஒன்றல்ல. இன்று நடந்திருப்பது சம்பவம். அன்று நடந்தது வரலாறு. ஒரு வழக்கமான தேர்தலை வரலாறாக மாற்றியது எது? ஒபாமா தோலின் நிறம். அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற வரலாற்றுப் பெயரோடு அமர்ந்தார் ஒபாமா. வெறும் நிறம் தான் அங்கு வரலாறு படைத்தது. ஆனால் அந்த நிறத்திற்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு. உலகின் ஒவ்வொரு மூளையிலும் முடக்கப்பட்டதால்தான் என்னவோ, லிங்கன், லூதர் கிங், ஒபாமா என்று அது எழும்போதெல்லாம் பெரும் ஓசை கேட்டது. அதற்கெல்லாம் காரணம் அந்நிறம் அடைந்த அவமானங்கள். வீதிகளிலும், வீ…
-
- 0 replies
- 384 views
-
-
இந்திய அணியின் வீரரான இவரது கேப்டன்சியின் கீழ் நான் விளையாட ஆசைப்படுகிறேன் – மனம்திறந்த வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக, ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு விக்கெட் கீப்பராக, பினிஷராக பல ரோல்களில் சிறப்பாக விளையாடிய வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை கூறலாம். அந்த அளவிற்கு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு சிறப்பான பங்கை கொடுத்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அதிரடியான ஓய்வை அறிவித்தார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்பான செய்திகளுக்கும், பேச்சுகளுக்கும் இப்பொழுதும் குறையில்லை. அந்த அளவிற்கு அவரது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வரு…
-
- 0 replies
- 945 views
-
-
டி20-யில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி சாதனை டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து லாகூர் ஒயிட்ஸ் அணியின் கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி உலக சாதனைப் படைத்துள்ளது. பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ‘நேஷனல் டி20 கோப்பை’ தொடரில் லாகூர் ஒயிட்ஸ் - இஸ்லாமாபாத் அணிகள் ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. லாகூர் ஒயிட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் நிலைத…
-
- 0 replies
- 469 views
-