விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
புதிய வரலாறு: செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் சென்னை சிறுவன் ஆர். பிரக்னாநந்தா - படம்உதவி: பேஸ்புக் செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றார். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார். இத்தாலியில் ஓர்டிசி நகரில் நடந்த கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்…
-
- 2 replies
- 1.1k views
-
-
ரெனிஸ் விளையாட்டின் மூத்த அரங்கம் இங்கிலாந்தின் விம்பில்டன் போட்டிகள். 1877இல் முதல் களம் கண்ட போட்டி அரங்கம், இவ்வருடம் 133ஆவது போட்டிகளின் முடிவை எட்டியிருக்கிறது. இம்முறை இறுதிப் போட்டிகள் மேலும் புதிய சாதனைகளுக்கு வழிவகுக்குமா? என்பதிற்கான பதிலை சனி, ஞாயிறு பெண்கள் மற்றும் ஆண்கள் இறுதிப் போட்டிகள் வழங்கும். சனி காலை நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில், 10ஆவது தரவரிசையில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 7ஆவது தரவரிசையில் உள்ள ரூமேனியாவின் சிமோனா கெலப்புடன் மோதுகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பின், பிரென்ஜ் ஓப்பன், விம்புல்டன், அமெரிக்கன் ஓப்பின் எனப்படும் ரெனிசின் முதல தரப் போட்டிகளான கிராண்ட சிலாம்களில், இது செரீனாவின் 32ஆவது தடவையாக போட்டியிடும் இறுதிப்போட்டி.…
-
- 2 replies
- 805 views
-
-
புதிய வரவை எதிர்நோக்கும் செரீனா வில்லியம்ஸ் மகளிர் டென்னிஸ் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக உள்ளதாகவும், வரும் மழைக்காலத்தில் அவரது பிரசவம் நடக்கக்கூடும் என்று அவரது மக்கள் தொடர்பு பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார். 35 வயதாகும் செரீனா, கண்ணாடி முன் நிற்கும் தனது புகைப்படத்தை ''20 வாரங்களாகி விட்டது'' என்ற வாசகத்துடன் ஸ்னாப்ச்சாட் செயலியில் தகவல் வெளியிட்டிருந்தார். பின்னர், இப்பதிவை அவர் அகற்றி விட்டார். கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதன் மூலம், தனது 23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த செரீனா, வரவிருக்கும் டென்ன…
-
- 2 replies
- 372 views
-
-
புதிய விதி பாய்ந்தது: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டனுக்கு ஐசிசி கடும் தண்டனை இலங்கை கேப்டன் தினேஷ் சந்திமால் - படம்: கெட்டி இமேஜஸ் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமாலுக்கு புதிய விதிகளின்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடும் தண்டனை விதித்துள்ளது. தினேஷ் சந்திமால் மட்டுமல்லாது, அணியின் மேலாளர் அசாங்கா குருசிங்கே, பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா ஆகியோரும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சமீபத்தில் புதிய விதிகளும் தண்டனையும் ஐசிசி கடுமையாக்கிய பின், இவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 320 views
-
-
மெல்போர்ன்: ஒருநாள் போட்டிகளில் புதிய விதிகளை அறிமுகம் செய்யவுள்ள, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (சி.ஏ.,) முடிவுக்கு, இந்திய வீரர் சச்சின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்கு பின், ஒருநாள் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. இதனால் ஒருநாள் போட்டிகளை, தலா 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்னிங்ஸ்களாக விளையாட வேண்டும் என, இந்திய வீரர் சச்சின் கடந்த 2009, செப்டம்பரில் தெரிவித்து இருந்தார். தற்போது இதனை உள்ளூர் தொடரில் நடைமுறைப்படுத்த, புதிய விதிகளுடன் சி.ஏ., களமிறங்கியுள்ளது. இதன்படி 50 ஓவர்களுக்குப் பதில் 45 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்படும் இந்த போட்டி, தலா 20, 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்…
-
- 1 reply
- 753 views
-
-
புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும! By A.Pradhap - நாட்டின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக, முன்னாள் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதன்பின்னர், நேற்றைய தினம் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்ய புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார். இவ்வாறான நிலையில், அவரின் கீழான புதிய அமைச்சரவை நியமனங்கள் இன்றைய தினம் (22…
-
- 0 replies
- 459 views
-
-
புதிரா? சவாலா? ஏ.பி.டிவில்லியர்ஸைக் கண்டு அலறும் ஆஸி. ஊடகங்கள் 2வது டெஸ்ட்டில் ஆஸி. பவுலர் கமின்சை விளாசும் டிவில்லியர்ஸ். - படம். | ராய்ட்டர்ஸ். ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்புத் தொடரில் பவுலர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்து வருகிறார், மேலும் ஏபிடிவில்லியர்ஸுக்கு என்று ஒரு செல்வாக்கும் உள்ளது, அவரது சிறந்த இன்னிங்ஸ்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏபி.டிவில்லியர்ஸை மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்படி அடக்கி ஆளும் என்ற கவலை ஆஸ்திரேலிய கேப்டனை விட ஆஸி.ஊடகங்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்.காம்.ஏயு என்ற ஆஸ்திர…
-
- 0 replies
- 219 views
-
-
புது மாற்றத்துடன் டி.ஆர்.எஸ். தென்னாபிரிக்கா – அயர்லாந்து மோதும் போட்டியில் அறிமுகம் ஐ.சி.சி. மாற்றம் செய்த புதிய டி.ஆர்.எஸ். விதிமுறை நாளை நடைபெறவுள்ள தென்னாபிரிக்க -–- அயர்லாந்து மோதும் ஒருநாள் போட்டியில் இருந்து அமுலாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்கள் நடத்தை மற்றும் நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையில் மாற்றங்களை செய்து அறிவித்துள்ளது. விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கை, அபராதம் மற்றும் இடைநீக்கம் ஆகிய விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. …
-
- 0 replies
- 288 views
-
-
புது விதிமுறைகளுடன் '100 பந்து கிரிக்கெட்' இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இதன் விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு இன்னிங்ஸும் தலா 100 பந்துகளை கொண்டதாக இருக்கும். அத்துடன் ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை மாறும். ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து அல்லது 10 பந்துகளை பறிமாற்றம் செய்வதுடன் ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 20 பந்துகளை பறிமாற்றம் செய்யலாம். அத்துடன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இப் போட்டி முறையானது அறிமுகப்படுத்தப்படும் எனவும் இங்கில…
-
- 0 replies
- 568 views
-
-
புத்தாண்டிலும் பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரிக்க பார்சிலோனா தாகத்துடன் உள்ளது – மெஸி பிறந்துள்ள புத்தாண்டிலும் பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பார்சிலோனா கழகம் இருப்பதாக அக் கழகத்தின் முன்கள வீரரும் நான்கு தடவைகள் உலகின் அதிசிறந்த வீரருமாகத் தெரிவான லயனல் மெஸி தெரிவித்துள்ளார். 2015இல் போன்றே புதிய ஆண்டிலும் ஐந்து வெற்றிக் கிண்ணங்களை வென்றெடுக்க பார்சிலோனா கழகம் உறுதிபூண்டுள்ளதை எதிரணிகளுக்கு கூற விரும்புவதாக லயனல் மெஸி குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரியல் பேட்டிஸ் அணிக்கு எதிரான போட்டி மூலம் தனது 500ஆவது கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடிய …
-
- 0 replies
- 498 views
-
-
புத்துயிர் பெறும் வங்கதேச அணி: கேப்டன் முஸ்பிகுர் ரஹிம் பெருமிதம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் வீரர்கள் சில குறிப்பிட்ட அணிகளே கோலோச்சிக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில், தனது காலை வலுவாக ஊன்றத் தொடங்கியிருக்கிறது வங்கதேசம். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாக இருந்தாலும் சில பெரிய அணிகளுக்கு அது கத்துக்குட்டிதான். அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்போது மட்டுமே வங்கதேசம் பற்றி கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பேசுவார்கள். ஆனால், அதுகூட தோற்றுவிட்ட பெரிய அணியின் மீதான விமர்சனமாக இருக்குமே தவிர, வங்கதசேத்தின் வெற்றி குறித்ததாக இருக்காது. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. தன் இருப்பை கொஞ்சம் உரத்தே வெளிப்படுத்தத் த…
-
- 0 replies
- 276 views
-
-
புனித ஜோசப் - புனித பீட்டர் அணிகள் மோதும் 82ஆவது புனிதர்களின் சமர் இன்று ஆரம்பம் (நெவில் அன்தனி) மருதானை புனித ஜோசப் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரிக்கும் இடையிலான 82ஆவது வருடாந்த ‘புனிதர்களின் சமர்’ மாபெரும் கிரிக்கெட் போட்டி பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. புனித ஜோசப் அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்துவலமாக ப்ரசான்த ரணவீர (பொறுப்பாசிரியர்), ஆசிரி பேரேரா (உடற்தகுதி பயிற்றுநர்), மைக்கல் அடம்ஸ் (இரண்டாம் நிலை அணி பயிற்றுநர்), மல்ஷான் ரொட்றிகோ, அருட்தந்தை மிலான் பேர்னார்ட் (விளையாட்டுத…
-
- 0 replies
- 732 views
-
-
புனித பத்திரிசியார் கல்லூரி அபாரம்! பொன் அணிகளின் போரில் கிண்ணத்தை வென்றது 26 FEB, 2023 | 11:07 AM வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற 106 ஆவது பொன் அணிகளின் போரில் அபார ஆட்ட்டத்தை வெளிப்படுத்திய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இரு அணிகளுக்குமிடையிலான 106 ஆவது கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 272 என்ற சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியை வீழ்த்தியது. …
-
- 2 replies
- 326 views
- 1 follower
-
-
புனே தூக்கினால் என்ன?: டோனியை கேப்டனாக்கியது ஜார்கண்ட் அணி மாநில அணிகளுக்கு இடையில் நடைபெறும் விஜய் ஹசாரே ஒருநாள் தொடருக்கான ஜார்கண்ட் அணியின் கேப்டனாக டோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இங்கிலாந்து தொடரின்போது தனது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய அணிக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும், ஐ.பி.எல். போன்ற அணிகளில் கேப்டனாக நீடிப்பேன் என்று கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கும்வரை தொடர்ந்து கேப்…
-
- 0 replies
- 667 views
-
-
புனேயின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் December 18, 2015 ஐபிஎல் தொடரில் புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த போட்டியில் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புனே மற்றும் ராஜ்கோட் அணிகள் தெரிவு செய்யப்பட்டன, இதில் புனே அணியில் டோனியுடம், ராஜ்கோட் அணியில் ரெய்னாவும் விளையாடவுள்ளனர். இந்நிலையில் புனே அணியின் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து…
-
- 0 replies
- 559 views
-
-
புரட்டி எடுத்த கோல்டுபர்க்... இரண்டே நிமிடங்களில் முடிந்த மல்யுத்தம் - வீடியோ இணைப்பு #Survivorseries மல்யுத்த வீரர் கோல்டுபர்க் கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பிறகு நேற்று சண்டையிட்டார். கடந்த சில மாதங்களாக எதிரில் உள்ள வீரர்களைப் போட்டு புரட்டி எடுத்து, டபிள்யு.டபிள்யு.இ அரங்கையே கதிகலங்க வைத்த பிராக் லெஸ்னர்தான் கோல்டுபர்க்கை எதிர்த்து நின்றது. உண்மையில் அவர் எதிர்த்து நிற்க மட்டுமே செய்தார், அடித்தது எல்லாம் கோல்டுபர்க்தான். இந்தப் போட்டி அறிவிக்கபட்டபோதே இரு பெரும் ஜாம்பவான்கள் மோதும் இந்த போட்டி, மிகவும் கடுமையானதாக, சுவாரஸ்யமானதாக இருக்கும் என உலகம் முழுவதும் உள்ள ரெஸ்லிங் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், கோல்டுபர்க்கோ …
-
- 0 replies
- 518 views
-
-
புரூஸ் லீயின் செவ்வி http://www.youtube.com/watch?v=L4y3y03vTq0&feature=mfu_in_order&list=UL http://www.youtube.com/watch?v=hN8PfMdBIjw&feature=related http://www.youtube.com/watch?v=yKiiaHBY_KI&feature=related
-
- 0 replies
- 1.2k views
-
-
புறக்கணிக்கும் தேர்வாளர்கள்: ரஞ்சி தொடரில் இரட்டை சதமடித்து அசத்திய ஜடேஜா! ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் சௌராஷ்ட்ரா அணி வீரர் ஜடேஜா இரட்டை சதமடித்து அசத்தினார். முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடர், ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடர் மற்றும் விரைவில் தொடங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஜடேஜாவுடன், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினும் சேர்க்கப்படவில்லை. இதனால், அவர்கள் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். அஷ்வின் தமிழக அணிக்காகவும், ஜடேஜா ச…
-
- 1 reply
- 443 views
-
-
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, தற்போது ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான இவர்தான் உலகிலேயே தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அத்துடன் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ரொனால்டோ 3வது இடத்தையும் பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 450 கோடிக்கும் அதிகம் ஆகும். ரொனால்டோவுக்கு பல மாடல் அழகிகளுடன் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் ரொனால்டோ, தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். ஆனால் குழந்தைக்கு தாய் யார்?என்பதை ரொனால்டோ இன்று வரை அறிவிக்கவில்லை. ஜுனியர் ரொனால்டோ பிறந்தது முதல் ரொனால்டோவின் தாயார் மற்றும் சகோதரிகள் பராம…
-
- 0 replies
- 335 views
-
-
தந்தை வழியில் மகன்: ராகுல் திராவிட் வாரிசு சமித் அடித்த வெற்றிச் சதம் ராகுல் திராவிட் மகன் சமித். சச்சின் மகன் அர்ஜுன் தற்போது ராகுல் திராவிட் மகன் சமித் ஆகியோர் தந்தையர் கிரிக்கெட் வழியில் அடியெடுத்து வைத்துள்ளனர். அதே போல் சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஜோஷியும் தன் தந்தை வழியில் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க பிடிஆர் கோப்பை யு-14 கிரிக்கெட் போட்டி ஒன்றில் திராவிட் மகன் சமித் 150 ரன்களை எடுத்து தன் அணியான மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு 412 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுத்தந்தார். விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தார் …
-
- 2 replies
- 470 views
-
-
புவனேஷ்வருக்கு யோகம்! * யுவராஜ் சிங் புறக்கணிப்பு டிசம்பர் 22, 2014. மும்பை: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்தத்தில் புவனேஷ்வர் குமார் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்தார். இவருக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். வரும் ஆண்டுக்கான 32 பேர் கொண்ட ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியானது. இதில் தோனி, அஷ்வின், கோஹ்லி, ரெய்னா ஆகியோருடன் இளம் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றார். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றதை அடுத்து, இவர் ‘ஏ’ பிரிவில் இருந்து நீக்கப்…
-
- 0 replies
- 524 views
-
-
புவனேஷ்வர் குமாரை ஏன் களமிறக்கினார்கள் என்று ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள்: பிசிசிஐ அதிகாரி கொதிப்பு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் : கோப்புப்படம் முழு உடற்தகுதியில்லாத புவனேஷ்வர் குமாரை ஏன் களமிறக்கினார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனால், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பெயர் சேர்க்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. புவனே…
-
- 0 replies
- 360 views
-
-
Published By: NANTHINI 07 MAY, 2023 | 04:42 PM (நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (07) ஆரம்பமான 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த துஷேன் சில்வா, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை நிலைநாட்டினார். இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல், 20 வயதுக்குட்பட்ட 5000 மீற்றர் ஓட்டம் ஆகியவற்றில் பிற மாவட்டங்களில் உள்ள தமிழ் பாடசாலை வீரர்கள் வெற்றிபெற்று வரலாறு படைத்தனர். உஸ்பெகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் ச…
-
- 7 replies
- 710 views
- 1 follower
-
-
பூஜ்ஜியத்தில் பும்ரா... எதுல தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணி தற்போது பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. 2007 ல் இருந்து கேப்டனாக விளங்கிய தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது, மீண்டும் சிக்ஸர் மன்னன் யுவராஜ் அணியில் சேர்க்கப்பட்டு தன் அதிரடியை வெளிப்படுத்தியது, ரஹானே பார்ம் இழந்து அணியில் இருந்து நீக்கப்பட்டது, கேதார் ஜாதவின் சதம், விராட் கோஹ்லியின் தலைமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்திய அணி தன் திறமையை பல வீரர்களின் துணைகொண்டு கச்சிதமாக காய் நகர்த்திதான் வருகிறது. ஆனால், இந்திய அணியில் இடக்கை பந்து வீச்சாளர் யாரும் அணியில் நிரந்திரமாக இல்லை என்பது தான் ஒரு குறை. இந்த இடத்திற்கு அவ்வப்போது…
-
- 0 replies
- 530 views
-
-
பூரண அங்கத்துவ நாடுகளுடன் கிரிக்கெட் விளையாட சந்தர்ப்பம் தரவேண்டும் என்கிறார் ஆப்கான் அணித்தலைவர் 2016-03-24 09:45:58 இணை உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கூடுதல் வாய்ப்பு வழங்குமாறு கிரிக்கெட் விற்பனர்களான சச்சின் டெண்டுல்கர், பிறையன் லாரா, மைக்கல் வோன் ஆகியோர் குரல் கொடுத்திருப்பது தங்களை நெகிழ வைத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்து வகிக்கும் எந்தவொரு நாட்டையும் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். ஆப்…
-
- 0 replies
- 358 views
-