விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7843 topics in this forum
-
புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் சச்சின், திராவிட், கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் சச்சின், திராவிட், கங்குலி இடம்பெற்றுள்ளனர். நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுடன் இந்திய பயிற்சியாளர் பதவிக்காலம் டன்கன் பிளெட்சருக்கு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பு சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், மற்றும் கங்குலி அடங்கிய மூவர் கூட்டணியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான ஆலோசனைகளை மூவரும் வழங்கவிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெர…
-
- 0 replies
- 335 views
-
-
புதுடில்லி: சீனிவாசன் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர், பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை உளவு பார்க்க லண்டன் நிறுவனத்துக்கு ரூ. 14 கோடி கொடுத்தது அம்பலமாகியுள்ளது. ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் வெடித்த கிரிக்கெட் சூதாட்ட புயலில் சென்னை அணி சிக்கியது. இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடி காரணமாக, தனது சென்னை அணியின் பங்குகளை, ‘சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட்’ என்ற துணை நிறுவனத்துக்கு சாமர்த்தியமாக மாற்றினார் முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன். 2008ல் ரூ. 355 கோடிக்கு வாங்கப்பட்ட சென்னை அணியின் மதிப்பை ரூ. 5 லட்சமாக குறைத்தது சர்ச்சையை கிளப்பியது. இதனை ஏற்க புதிய ஐ.பி.எல்., நிர்வாக குழு மறுத்தது. சட்ட ஆலோசனை: இது குறித்து நேற்று கோல்கட்டாவில் நடந்த பி.ச…
-
- 4 replies
- 489 views
-
-
11f1f306d13657699e188e0cda9e0ce1 செம்மலை நாயாற்றுப் பகுதியில் புதுவருடத்தினை முன்னிட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இம்பெற்ற விளையாட்டு விழாவில் கயிறு இழுத்தல் இறுதிப்போட்டி இராணுவ அணிக்கும் செம்மலை அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதில் செம்மலை அணி வெற்றிபெற்றது.
-
- 0 replies
- 451 views
-
-
கோஹ்லி மீது நடவடிக்கையா? கோல்கட்டா: களத்தில் அடிக்கடி கோபப்படும் கோஹ்லியை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன், ஒருநாள் அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, 26. களத்தில் பெரும்பாலும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். இவர் தனது கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என, டிராவிட், அசார், ஸ்டீவ் வாக் (ஆஸி.,) உள்ளிட்ட வீரர்கள் ‘அட்வைஸ்’ செய்தனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது, பத்திரிகையாளர் ஒருவரை தகாத முறையில் திட்டினார். இவ்விஷயத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கோஹ்லிக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே, உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு…
-
- 0 replies
- 387 views
-
-
மீண்டும் சிக்கலில் சுனில் நரைன்..பந்தை எறிவதாக பிசிசிஐ குற்றச்சாட்டு! மும்பை: கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் பந்து வீச்சு, எறிவதை போல உள்ளதாக பிசிசிஐ வார்னிங் செய்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரல் 22ம்தேதி, விசாகப்பட்டிணத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிரான பெப்சி ஐபிஎல் 2015 போட்டியின்போது, கொல்கத்தா வீரர் சுனில் நரைன் பந்து வீசிய விதம், விதிமுறைகளை மீறியிருந்ததாக சந்தேகிக்கிறோம். மீண்டும் சிக்கலில் சுனில் நரைன்..பந்தை எறிவதாக பிசிசிஐ குற்றச்சாட்டு! இருப்பினும் விதிமுறை அடிப்படையில், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பந்து வீச தடையில்லை. அதேநேரம், சென்னையிலுள்ள ஐசிசி அங்கீகாரம் பெற்ற, ஸ்ரீ ராமச்சந்திரா மையத்தில், ப…
-
- 0 replies
- 311 views
-
-
வங்கதேசத்திடம் படுதோல்வி: யூனிஸுக்கு வலுக்கிறது எதிர்ப்பு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் படுதோல்வி கண்டதைத் தொடர்ந்து அந்த அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது: பாகிஸ்தான் படுதோல் வியைச் சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் வக்கார் யூனிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அவர் அப்படி செய்தால் அவருக்கும் அது நல்லது. வங்கதேச அணி அதன் கிரிக்கெட்டை மேம்படுத்தியுள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் இவ்வளவு மோசமாக தோற்றிருப்பதை சகித்துக்கொள்ள முடியாது. இந்தத் தோல்விக்கு பாகிஸ் தான் அணி நிர்வாகம்த…
-
- 0 replies
- 299 views
-
-
இந்திய கிரிக்கெட் மைதானங்களை தத்தெடுக்க ஆப்கன் விருப்பம் இந்திய கிரிக்கெட் மைதானங்களை தனது தத்து மைதானங்களாக கொள்வதற்கு ஆப்கானிஸ்தான் விரும்பங் கொண்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், முன்னேறிவரும் தனது கிரிக்கெட் அணிக்கென சொந்த மைதானம் ஒன்றை தத்தெடுப்பதற்கு எண்ணியுள்ளது. தனது அயல் நாடான இந்தியாவில் மைதானமொன்றை தத்தெடுப்பதற்கு விருப்பங்கொண்டுள்ளதாகஅந் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரவ் கானி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யும்போது இது குறித்த உதவியைக் கோரவேண்டும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் நசிமுல்லாஹ் டனிஷ் தெரி…
-
- 0 replies
- 297 views
-
-
ஹபீஸுக்கு ஐ.சி.சி. அனுமதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது ஹபீஸுக்கு பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான முகமது ஹபீஸின் பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது பந்துவீச்சு அவுஸ்திரேலியாவில் உள்ள பயிற்சி மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்துவீசியது தெரியவந்தது. இதனால் கடந்த நவம்பர் மாதம் முதல் அவர் பந்து வீச ஐ.சி.சி. தடை விதித்தது. இதனால் தனது பந்துவீச்சை ஹபீஸ் சரி செய்தார். இதனை தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி சென்னையில் உள்ள ஐ.சி.சி. விதிமுறைக்கு உட்பட்…
-
- 0 replies
- 286 views
-
-
அரையிறுதிக்கு பயேர்ன் மூனிச் தகுதி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாம் கட்ட கால் இறுதியில் போர்ட்டோ கழகத்திடம் சற்றும் எதிர்பாராதவகையில் தோல்வியடைந்த பயேர்ன் மியூனிச் கழகம், இரண்டாம் கட்ட கால் இறுதியில் அமோக வெற்றியீட்டி அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டது. போர்ட்டேவின் சொந்த மைதானத்தில் கடந்த 14ஆம் திகதி 1 – 3 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வியடைந்த பயேர்ன் மியூனிச் கழகம், நேற்று முன்தினம் மியூனிச்சில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் போட்டியில் 6 – 1 கோல்கள் அடிப்படையில் போர்ட்டே கழகத்தை வென்றது. இதன் பிரகாரம் ஒட்டுமொத்த கோல்கள் நிலையில் 7 க்கு 4 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற பயேர்ன் …
-
- 1 reply
- 385 views
-
-
யாழ்.இந்து - கொழும்பு ஆனந்தா கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி - கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 4ஆவது வருட கிரிக்கெட்; போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) மற்றும் சனிக்கிழமை (25) ஆகிய கிழமைகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிவகுருநாதன் கிண்ணத்துக்காக இரண்டு நாட்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்படுகின்றது. இதுவரையில் நடைபெற்ற 3 போட்டிகளில் ஆனந்தா அணி 2 போட்டிகளிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/144492#sthash.jB7eRikG.dpuf
-
- 3 replies
- 592 views
-
-
இலங்கை வருகிறது பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 5 ஒரு நாள், இரண்டு இருபது – 20 போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஒருநாள் தொடர் இலங்கையின் பல்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளது. இரண்டு இருபதுக்கு– 20 போட்டிகளும் கொழும்பில் நடைபெறவிருக்கின்றன. ஜூன் 17 முதல் ஜூலை 7ஆம் திகதிவரை டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருக்கின் றன. ஒருநாள் போட்டிகள் ஜூலை 11ஆம் திகதி முதல் ஜூலை 26ஆம் திகதி வரையும் நடைபெறும். இருபது – 20 முதல் போட்டி ஜூலை 30ஆம் திகதி…
-
- 0 replies
- 339 views
-
-
நேபாளத்தில் திங்களன்று ஆரம்பமான ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச்சம்மேளனத்தின் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிராந்திய கால்பந்தாட்டப் போட்டியில் மாலைதீவுகள் அணியை இலங்கை அணி 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்துள்ளது. காத்மண்டு இராணுவ உடற்கலை நிலைய மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சுரேந்திரன் கௌரி (4ஆவது நிமிடம்), சிவனேஸ்வரன் தர்மிகா (70ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்களைப் போட்டமை குறிப்பிடத்தக்கது.14 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவி தலைவியாக கௌரி விளையாடுகின்றமை மற்றொரு விசேட அம்சமாகும். வலைப்பந்தாட்டத்தை விட இலங்கை விளையாட்டு அணியில் யாழ். பாடசாலை மாணவி ஒருவ…
-
- 0 replies
- 456 views
-
-
கடைசி 5 ஆண்டுகளில் 90 வீரர்களை களமிறக்கிய பாகிஸ்தான்: ரஷித் லடீப் சாடல் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான் அணி மீது முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சன மழை பொழிந்துள்ளனர். முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரஷீத் லடீஃப் கூறும் போது, “கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 90 வீரர்களைக் களமிறக்கியுள்ளோம். இதைவிட மோசமனது நாம் அவர்களை நல்ல நிலையில் ஆடுவதற்கான கால அவகாசத்தையும் கொடுக்கவில்லை என்பதே. தொடக்க ஆட்ட ஜோடிகளில் 19 வேறுபட்ட சேர்க்கையை முயற்சி செய்துள்ளோம். பந்துவீச்சில் கேட்கவே வேண்டாம்.. நிறைய வீச்சாளர்கள் வந்தார்கள்.. சென்றார்கள்..இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி நிலைபெறவில்லை” என்றார். …
-
- 0 replies
- 462 views
-
-
ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி ராஜினாமா ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது நபி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டனாக செயல்பட்ட அவர், தனது மோசமான பார்ம், அணிக்கு பெரிய அளவில் வெற்றி தேடித்தர முடியாதது ஆகிய காரணங்களால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு முகமது நபி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியிருக்கிறேன். அணியின் வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்கு பாடுபட்டிருக்கிறேன். அணியின் சமீபத்திய செயல்பாடு, எனது மோசமான பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வீரரா…
-
- 0 replies
- 446 views
-
-
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் சாதனையை மேத்யூஸ் முறியடிப்பார்: இலங்கை அணி முன்னாள் மேலாளர் சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை அஞ்சேலோ மேத்யூஸ் முறியடிப்பார் என்று இலங்கை அணியின் முன்னாள் மேலாளர் டி ஸோய்சா கூறியுள்ளார். 46 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள மேத்யூஸ் 3,193 ரன்களை 51.50 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள், 20 அரைசதங்கள் அடங்கும். 156 ஒருநாள் போட்டிகளில் 3,783 ரன்களை 1 சதம் மற்றும் 26 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். டி ஸோய்சா கூறியதாவது, “வங்கதேசத்துக்கு எதிரான தொடர் முதல் 2015 உலகக் கோப்பை போட்டிகள் வரை, அஞ்சேலோ மேத்யூஸின் வளர்ச்சி பிரமாதமானது. அவர் என்ன இடத்தை நிரப்ப வேண்டுமோ அதனை நிரப்பியுள்ளார். ஜெயவர்தனே, சங்கக்காரா ஆகி…
-
- 0 replies
- 448 views
-
-
ட்வீட்டாம்லேட்: தோற்றாலும் குறையாத சிஎஸ்கே கெத்து! தங்களது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் முத்துக்களைத் தெறிப்பதற்காகவே ஐபிஎல் பார்க்கிறார்களோ என்று சந்தேகத்தை எழுப்புகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்சின் விசிறிகளின் பதிவுகள். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னைக்கு இதுவே முதல் தோல்வி. இருப்பினும் இந்தத் தோல்வி சென்னை ரசிகர்களை அசர வைக்கவில்லை. அவர்கள் வழக்கம் போல அணியை உற்சாகமூட்டும் வகையில் வெறும் 3 பவுண்டரிகளை அடித்து வெளியேறிய மெக்கல்லமை வாழ்த்தியும், தோனிக்கு விசில் போடவும் தொடங்கினர். சென்னை ரசிகர்களின் மனம் தளராத ஆதரவு ரசிகர்கள…
-
- 0 replies
- 511 views
-
-
கேட்ச்சுக்கு முயன்று மோதியதில் விபரீதம்: பெங்கால் இளம் கிரிக்கெட் வீரர் மரணம் வங்காளத்தைச் சேர்ந்த அங்கிட் கேஷ்ரி என்ற வீரர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பந்தை கேட்ச் பிடிக்கச் சென்ற போது சவுரப் மொண்டால் என்ற வீரருரன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தலையில் பலத்த அடிபட்டு இன்று காலை, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். இவருக்கு வயது 20. மைதானத்தில் மயங்கிச் சரிந்த இவரது மூச்சை மீட்க மற்றொரு வீரர் முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. உடனடியாக இவர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன்ன்றி இன்று (திங்கட் கிழமை) மாரடைப்பால் காலமானார். கடந்த வெள்ளிக்கிழமை வங்காள கிரிக்கெட் லீக் டிவிஷன் 1 போட்டியில் கிழக்கு வங்காள அணியும், பவானிப…
-
- 0 replies
- 280 views
-
-
இங்கிலாந்தில் சங்கா சதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக நேற்று களமிறங்கிய குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை பெற்றுள்ளார். சரே பிராந்திய அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடிவரும் சங்கா, கிளமோர்கன் அணிக்கெதிரான போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். இதே அணிக்காகவே கெவின் பீட்டர்சன் தன் மீள் வருகைக்காக விளையாட ஆரம்பித்துள்ளார். அவர் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சரே அணி, முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 109 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ள ஸ்டீவன் டேவிஸ் மற்றும் குமார் சங்ககார ஆகியோர் இணைந்து 213 ஓட்டங்களை பெற்றுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/144318#sthash.O5…
-
- 1 reply
- 394 views
-
-
ஒருநாள் போட்டியில் 350 ஓட்டங்கள் ! ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் நன்ட்விச் கழகத்திற்காக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய 21 வயதான லியாம் லிவிங்ஸ்டன் 138 பந்துகளில் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். நன்ட்விச் மற்றும் கல்டி கழக அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கழக மட்டத்திலான போட்டியின் போதே இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. லியாம் லிவிங்ஸ்டனால் பெறப்பட்ட 350 ஓட்டங்களில் 34 நான்கு ஓட்டங்களும் 27 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கும். இப்போட்டியில் நன்ட்விச் கழக அணி 45 ஓவர்களில் 579 ஓட்டங்களைப் பெற்று தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பதிலுக்குத் துடுப்ப…
-
- 1 reply
- 531 views
-
-
பீட்டர்சன் அணியில் இடம்பெற வேண்டும் : சங்கா இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் குமார் சங்கக்கார, இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் மீண்டும் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சங்கக்கார, இது குறித்து கூறுகையில், கெவின் பீட்டர்சன் மிகச் சிறந்த வீரர். இங்கிலாந்து அணியில் ஏற்பட்ட குளறுபடியால், அவரால் சில வருடங்களாக அணிக்கு திரும்ப முடியவில்லை. உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும். அவர் அணிக்கு வரும்பட்சத்தில் இங்கிலாந்து அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். அவர் இல்லாமல் சர்வதேச போட்டிகளில் விளையா…
-
- 0 replies
- 367 views
-
-
லண்டனில் விருது பெற்ற சங்கக்கார லண்டனில் இடம்பெற்ற 5 ஆவது ஆசிய விருது வழங்கும் விழாவில் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார விருது பெற்றுள்ளார். http://www.virakesari.lk/articles/2015/04/18/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0
-
- 2 replies
- 1k views
-
-
உலக கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கான இலங்கைக் குழாம்: முதலாம் கட்டத் தெரிவில் வட மாகாணத்திலிருந்து 12 வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பங்கு பற்றுவதற்கு இலங்கையும் தகுதிபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை வலைப்பந்தாட்ட உத்தேச குழாமுக்கு வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் முதலாம் கட்டத் தேர்வுகள் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்றபோது அப்பிரதேசத்திலிருந்து 12 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். இத் தேர்வுகள் யாழ். மாவட்டத்தில் நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும். யாழ். வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி மைதானத்தில் கட…
-
- 0 replies
- 360 views
-
-
இந்திய அணிக்கு பயிற்சியாளராகிறார் கங்குலி? இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில்இ புதிய பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக கங்குலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கங்குலி இந்திய அணியின் தலைவராக இருந்தபோது, சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் முத்திரை பதித்து பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். மேலும் இளம் வீரர்கள் பலரையும் ஊக்குவித்து மிகப்பெரிய சாதனைகளை படைக்க உதவினார் என்பதுகுறிப்பிடத் தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/17/%E0…
-
- 0 replies
- 457 views
-
-
பாக். – பங்களாதேஷ் மோதும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று டாக்காவில் நடக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள், இருபது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடவுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்திற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பங்களாதேஷில் உள்ள தங்களது தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தது. இதனால் போட்டி நடக்கும் இடங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தன. அதன்ப…
-
- 17 replies
- 827 views
-
-
இலங்கை கிரிக்கெட்டில் மேற் கொள்ளப்படும் அரச தலையீடு களை பரிசீலிக்க சர்வதேச கிரிக் கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் திருப்தியடையக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பணிப்பாளர்கள் சபை கூடியபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளால் சுதந்திரமாகவும், நியாயமாகவும் அதிகாரிகளை தேர்வுசெய்வதற்கு இருக்கும…
-
- 0 replies
- 363 views
-