Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பேட்ஸ்மென் அடித்த ஷாட் பவுலர் தலையில் பட்ட பிறகு சிக்ஸ்: நியூஸி. கிரிக்கெட்டில் வினோதம்; ஆபத்திலிருந்து தப்பிய பவுலர் படம். | ட்விட்டர். நியூஸிலாந்தின் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மென் ஆக்ரோஷமாக அடித்த ஷாட் ஒன்று பவுலர் தலையில் பட்டு பிறகு சிக்ஸருக்குச் சென்ற வினோதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆக்லாந்து பேட்ஸ்மென் ஜீத் ராவல், ஆண்ட்ரூ எல்லிஸ் என்ற பவுலரின் பந்தை நேராக ஆக்ரோஷமாக அடிக்க பந்து பவுலர் தலையில் பட்ட பிறகும் சிக்சருக்குப் பறந்தது. கேண்டர்பரி அணியைச் சேர்ந்தவர் பவுலர்/கேப்டன் எல்லிஸ். பந்து தலையில் பட்டதையடுத்து பரிசோதனை மேற்கொண்டார். …

  2. பேட்ஸ்மென் அருகில் பீல்ட் செய்ய மறுத்தவர்தான் இந்த மைக்கேல் கிளார்க்: மேத்யூ ஹெய்டன் சாடல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஹெய்டன், சைமண்ட்ஸ் இருவரும் சதம் எடுத்தனர். | படம்: ஏ.எஃப்.பி. படுதோல்விகளினால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கே கிளார்க் குறித்து முன்னாள் வீரர்கள் மேத்யூ ஹெய்டன் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கடும் விமர்சனங்களை வைத்தனர். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் மேத்யூ ஹெய்டன், கிளார்க் அறிமுகமான புதிதில் நடந்து கொண்ட விதம் பற்றி குறிப்பிடும் போது, “என்னால் அந்த தினத்தை மறக்க முடியாது. பேட்ஸ்மெனுக்கு அருகில் ஷார்ட் லெக் திசையில் ஒரு போட்டியின் போது ஜஸ்டின் லாங்கரால் நிற்க முடியவில்லை. காரணம் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிர…

  3. பேட்ஸ்மென்களின் எதிர்பார்ப்பை முறியடிக்க வேண்டும்: வாஷிங்டன் சுந்தர் வாஷிங்டன் சுந்தர். - படம்.| ஏ.பி. இந்திய டி20 அணியின் வளரும் புதிய ஆஃப் ஸ்பின் வீரர் வாஷிங்டன் சுந்தர் நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரில் அருமையாக வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதுவுஜ் பேட்ஸ்மென்கள் புத்துணர்வுடன் களமிறங்கும் போது பவர் பிளேயில் பந்து வீசும் கலையில் அவர் நிறைய தேறி வருகிறார். ஆட்டத்தில் சூடுபறக்கும் தருணங்களில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் கூலாக வீசுவது இவரது பலம். இன்று ரிஸ்ட் ஸ்பின் என்று கூறி அஸ்வினை ஓரங்கட்டிய பிறகே விரல்களால் வீசும் பாரம்பரிய ஸ்பின் இனி எடுபடாது என…

  4. பேட்ஸ்மென்களை பவுல்டு செய்வதை குறிக்கோளாகக் கொண்ட முரளிதரன்: பிரசன்னா அலசல் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்கான உலக சாதனை படைத்த இலங்கையின் முத்தையா முரளிதரன் பந்து வீச்சு பற்றி இந்திய முன்னாள் ஸ்பின் பவுலர் ஈராப்பள்ளி பிரசன்னா தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். இ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தின் தொடர் ஒன்றில் அவர் முரளிதரன் பந்து வீச்சு பற்றி கூறியதாவது: மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஸ்பின் பவுலர் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது முத்தையா முரளிதரனே. இவரது பந்து வீச்சை விவரிப்பது அவ்வளவு சுலபமல்ல. முரளிதரன் ஒரு வினோதமான பவுலர். இவரது பந்து வீச்சு முறை குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், ஸ்பின் உலகின் தலை சிறந்த பவுலர் அவர். இவரது பந்துகள் பல முறையற்றவை என்று கர…

  5. பேட்ஸ்மேன் தரவரிசை: விராட் கோலியை துரத்தும் கேன் வில்லியம்சன் பேட்ஸ்மேன் தரவரிசையில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதன்முறையாக ஐந்து இடத்திற்குள் முன்னேறியுள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் விராட் கோலி (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து). இவர்களிடையே ரன் குவிப்பதில் கடும்போட்டி நிலவி வருகிறது. ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போ…

  6. பேயார்ன் முனிக் சாம்பியன் மார்ச் 26, 2014. பெர்லின்: ஹெர்தா பெர்லின் அணிக்கு எதிரான பன்டஸ்லிகா( bundesliga ) தொடரின் லீக் போட்டியில் வெற்றி பெற்ற பே‌‌யார்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. ஜெர்மனியில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ஜெர்மன் பன்டஸ்லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் பே‌யார்ன் முனிக், ஹெர்தா பெர்லின் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய முனிக் அணிக்கு டோனி கிராஸ் (6வது நிமிடம்), மரியோ (14) ஆகியோர் கோல் அடித்தனர். இதற்கு பெர்லின் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. பின் இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பெர்லின் அணிக்கு ஏட்ரியன் (66) ஒரு கோல் அடித்…

  7. பேய்! பீதியால் தடுமாறும் இங்கிலாந்து வீரர்கள் Mon, 07/21/2014 - 16:04 இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லண்டனில் உள்ள லாங்காம் 5 நட்சத்திர விடுதியில் பேய் நடமாடுவதாக இங்கிலாந்து வீரர்கள் சிலர் அச்சம் தெரிவித்ததோடு, உடனடியாக விடுதியை மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடுதி 1865 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இப்போது அது மர்ம நடமாட்டம் இருக்கும் விடுதியாக மாறிவிட்டது இனி இங்கு தங்க முடியாது என்று கிரிக்கெட் வீரர்களின் மனைவி, மற்றும் பெண் ஸ்னேகிதிகள் உட்பட வீரர்கள் சிலரே இரவு நேரங்களில் மர்ம நிகழ்வுகள் நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஸ்டூவர்ட் பிரோட் வெளிப்படையாக தனது அச்சத்தைத் தெரிவித்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங…

  8. பேர்ண்லியிடம் தோற்ற ஆர்சனல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பேர்ண்லிக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது. பேர்ண்லிக்கு கிடைக்கப்பெற்ற கோலானது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப்பெற்றிருந்தது. இதேவேளை, புல்ஹாமின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றதோடு, புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை பொபி றெய்ட் பெற்றிரு…

  9. பேர்த்தில் கிரிக்கட்டில் கலக்கும் நம்மவர்கள்! (படங்கள்) புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் ஏதோ ஒரு விதத்தில் தமது திறமையை வெளிக்காட்டிகொண்டுதான் இருக்கிறார்கள். மேற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளைஞர்கள் ASSeTTS என்னும் அரச சார்பற்ற நிறுவனத்துக்காக கிரிகட் விளையாடி வருகின்றனர். பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் தமிழ் இளைஞர்களின் முயற்சியால் முதல் முறையாக கிரிகட் அணி- ASSeTTS CRICKET CLUB- – உருவாக்கப்பட்டுள்ளது. இக்கிரிக்கட் அணியின் நிருவுனராக கபில் தேவ் இருந்ததோடு , அவரே தற்போதைய அணியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்கள் தற்போது LAST MAN STAND என்னும் சர்வதேச ரீதியிலான சுற்று போட்டி ஒன்றில் விளையாடி வருகிறார்கள். தற்போது மேற்கு…

  10. பேலேயின் பெயரில் ஒவ்வொரு நாட்டிலும் கால்பந்தாட்ட அரங்கு: பீபா கோரிக்கை By SETHU 04 JAN, 2023 | 09:33 AM உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் கால்பந்தாட்ட அரங்கு ஒன்றுக்கு, பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) தெரிவித்துள்ளது. கால்பந்தாட்டத்தின் மன்னன் என வர்ணிக்கப்படும் பேலே, கடந்த வியாழக்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார். பேலேயின் இறுதிக்கிரியைகள், அவரின் பிரேஸிலின் சான்டோஸ் நகரில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று அதகாலை) நடைபெற்றன. இந்நிலையில், பேலேயின் பூதவுடலுக்கு…

  11. போட்டிகள் இரத்து செய்யப்படுமா? - கேள்வியை நிராகரிக்காத டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் விளையாட்டுகள் இறுதி நிமிடத்தில் இரத்து செய்யப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவித் தலைவர், அதனை நிராகரிக்காது பதிலளித்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 23) ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழவிற்கு முன்னதாக விளையாட்டுகளுடன் தொடர்புடைய 70 க்கும் மேற்பட்டவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். இந் நிலையில் திட்டமிடப்பட்ட போட்டிகள் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுமா என டோக்கியே ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தோஷிரோ முட்டோவிடம் செவ்வாய்க்கிழமை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்…

  12. பைத்தியத்தை கேப்டனாக வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியாது: அப்ரிடியை விமர்சித்த நடிகை! கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடியை பைத்தியம் என அந்நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச் கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷில் நடந்து வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் லீக் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இந்த போட்டியை டிவியில் பார்த்து, ஆத்திரமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் டிவியை அடித்து உடைத்தனர். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும், கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதோடு, பல்வேறு இடங்களில் கொடும்பாவிகளையும் எரித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் அப…

  13. பொக்சிங் டே டெஸ்ட்டில் அண்டசன் பங்கேற்பது சந்தேகம் December 23, 2015 தென் ஆபிரிக்க அணியுடனான பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டசன் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னணி வீரரான அண்டசன் வலது கையில் தசை இறுக்கம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்கான் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பித்து 30 ஆம் திகதி வரை டர்பனில் நடைபெறவுள்ள பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸன் பங்கேற்பது சாத்தியம் இல்லை என தெரியவருகின்றது. தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடரில் ஆன்டர்ஸன் பங்கேற்கவில்லை எனில் கிறிஸ் வோக்ஸ், ஸ்டீபன் பின…

  14.  பொக்ஸிங் டே கொண்டாட்டம்: நாளை நான்கு போட்டிகள் கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாளான 'பொக்ஸிங் டே"இல், கிரிக்கெட் போட்டிகளும் களைகட்டவுள்ளன. நான்கு போட்டிகள், நாளை ஆரம்பிக்கவுள்ளன. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ளது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாமிடத்தைப் பெற்ற நியூசிலாந்தை, அந்நாட்டில் வைத்துச் சந்திப்பதால், வெற்றிபெறுவதற்கு, அதிகமாகப் போராடி வேண்டியிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால…

  15. பொண்டாட்டி கிட்ட அடி, ஆபீஸ்ல திட்டு.. மறுபடியும் வாங்க முடியாது.. கிரிக்கெட் ரசிகர்கள் அவதி.! உலகக்கோப்பை கிரிக்கெட்டா.. இல்லை மெகா சீரியலா.. என அரையிறுதிப் போட்டியை பார்த்து கடுப்பாகி இருக்கிறார்கள் சாமானிய கிரிக்கெட் ரசிகர்கள். இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்பு நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணி இன்னும் 23 பந்துகள் ஆடி இருந்தால், ஒரு இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்திருக்கும். எனினும், அதற்குள் மழை வந்து போட்டியை நிறுத்தியது. …

  16. பொண்டிங் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் மாறிவிட்டதென்கின்றன அவுஸ்திரேலிய பத்திரிகைகள் [22 - January - 2008] [Font Size - A - A - A] பெர்த் டெஸ்டில் வெற்றி வாகை சூடிய இளம் இந்திய அணியை அவுஸ்திரேலிய பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியுள்ளன. இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் தந்த இமாலய வெற்றி என பாராட்டியுள்ளன. அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா வெல்ல, முக்கியமான மூன்றாவது டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. இப்போட்டியில் இர்பான் பதான், ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா ஆகியோர் அடங்கிய `வேகக் கூட்டணி' சாதித்துக் காட்டியது. இவர்களது அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி, அவுஸ்திரேலியாவை 72 ஓட்டங்கள் …

  17. பொண்டிங் படை' மகத்தான சாதனையை நெருங்குகிறது தடுத்து நிறுத்த முயல்வார்களா [01 - January - 2008] [Font Size - A - A - A] இந்திய வீரர்கள்டெஸ்ட் போட்டிகளிலும் உலக சம்பியன் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை அசைக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் வென்ற உற்சாகத்தில் இருக்கும் `பொண்டிங் படை' மகத்தான சாதனையை நெருங்குகிறது. நாளை 2 ஆம் திகதி சிட்னியில் தொடங்கும் இரண்டாவது போட்டியில் அசத்தினால், தொடர்ந்து 16 டெஸ்களில் வென்ற ஸ்ரீவோவின் சாதனையை சமன் செய்யலாம். இந்தச் சாதனைக்கு இந்திய வீரர்கள் முட்டுக் கட்டை போடுவார்களா? ஷேன் வோர்ன் (708 விக்.), மெக்ராத் (563 விக்.), ஜஸ்ரின் லாங்கார் (7,696 ஓட்டங்கள்), டேமியன் மார்ட்டின் (4,406 ஓட்டங்கள்) போன்ற அனுபவ வீரர்கள்…

    • 0 replies
    • 966 views
  18. பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழா இலங்கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் சமோ­வாவின் ஏப்­பியா பார்க் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் ஐந்­தா­வது பொது­ந­ல­வாய இளையோர் விளை­யாட்டு விழாவில் இலங்­கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்­கங்கள் கிடைத்­துள்­ளன. ஆண்­க­ளுக்­கான உயரம் பாய்­தலில் போட்­டி­யிட்ட இலங்­கையின் ரொஷான் தம்­மிக்க ரண­துங்க 2.11 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்­கத்தை வென்­றெ­டுத்தார். இப் போட்­டியில் 2.14 உயரம் தாவிய இந்­தி­யாவின் தேஜாஸ்வின் ஷங்கர் தங்கப் பதக்­கத்­திற்கு சொந்­தக்­கா­ர­ரானார். ஜெமெய்க்­காவின் லாஷேன் வில்சன் 2.11 மீற்றர் தாவி வெண்­கலப் பதக்­கத்தைப் பெற்றார். பெண்­க­ளுக்­கான 48 கிலோ கிராம் எடைப் பிரி­வுக்­கான பளு­தூக்­கலில் …

  19. பொதுநலவாய விளையாட்டுத் தொடர்: 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம்! பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடரின், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்து யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 92 வருட பொதுநலவாய விளையாட்டுத் தொடர் வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொட…

  20. பொதுமக்கள் பார்வைக்காக சென்னையில் 'உலகக் கோப்பை' ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ள உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக, சென்னையில் உலகக்கோப்பை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. எம்.ஆர்.எஃப். நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நேற்று மெரினா பீச், பெசன்ட் நகர் பீச், ஃபோரம் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஆகிய இடங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை எழுதும் வகையில் ஒரு பேனரும் வைக்கப்பட்டிருந்தது. இந்த உலகக் கோப்பையை, நடிகர்கள் ஸ்ரீகாந்த், நிதின் சத்யா, வைபவ், அசோக் பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், ராகுல் நம்பியார், ஆதி, விஜய் வசந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டு, தங்க…

  21. பொன் அணிகளின் போர்: புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்களால் வெற்றி 105 ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட பொன் அணிகளின் போரில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்களால் வெற்றி பெற்றது. நேற்றைய தினம் ஆரம்பமான இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் இனிங்ஸில் பதிலளித்தாடிய பத்திரிசியார் கல்லூரி அணி 08 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதல் நாளாட்டம் நிறைவிற்கு வந்தது. துடுப்பாட்டத்தில் எஸ். கீர்த்தனன் 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இன்று முதல் இனிங்ஸைத் தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி 156 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும…

    • 0 replies
    • 349 views
  22. பொப்பிக்கு தடை ; கோபத்தில் பிரிட்டன் முதலாம் உலகப்போரின் நிறுத்த நாளான ஆர்மிஸ்டஸ் தினம் அடுத்த வாரம் நெருங்கும் நிலையில் இங்கிலாந்து, மற்றும் ஸ்காட்லாந்து கால்பந்து அணிகள் பொப்பி சின்னத்தை அணிவதற்கு தடை விதித்ததை அடுத்து, உலக கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஃபிஃபாவை பிரிட்டிஷ் பிரதமர் மிகுந்த கோபத்துடன் தாக்கிப் பேசியுள்ளார். இந்த முடிவு முற்றிலும் அநியாயமானது என்று பிரதமர் தெரேஸா மே பேசியுள்ளார். கால்பந்து அணிகளின் ஆடைகளில் அரசியல் சின்னங்களை அனுமதிக்க முடியாது என்று ஃபிஃபா கூறுகின்றது. ஆனால், இந்த தடையை தாம் எதிர்ப்போம் என்று இங்கிலாந்து கால்பந்து அமைப்பு கூறுகின்றது. http://www.bbc.com/tamil/global-37864187

  23. பொய்யான தகவலை வழங்கியதை ஒப்புக்கொண்டார் நோவக் ஜோகோவிச்! அவுஸ்ரேலிய நுழைவு அனுமதிக்கான விண்ணப்பப்படிவத்தில், போலி தகவலை உள்ளடக்கியதாக உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் ஒப்புக்கொண்டுள்ளார். அவுஸ்ரேலியாவிற்குள் கடந்த 6ஆம் திகதி நுழைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், தாம் எங்கும் பயணிக்கவில்லை என ஜொக்கோவிச், தமது விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் அவர் இரண்டு வாரக்காலப்பகுதியில் சேர்பியாவிலும் ஸ்பெயினிலும் பயணங்களை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக சமுக வலைத்தளங்களில் ஆதாரங்கள் வெளியாகின. இந்நிலையில், குறித்த விண்ணப்பப் படிவத்தில், பயண வரலாறு தொடர்பான பிரிவை நிரப்பிய போது தமது முகவர் தவறிழைத்து விட்டதாக நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார…

  24. பொரிசியா டொட்டமுண்டை வென்றது றியல் மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லிவர்பூல் ஆகிய அணிகள் வென்றுள்ளதுடன், மன்செஸ்டர் சிற்றி, நாப்போலி, மொனாக்கோ ஆகிய அணிகள் தோற்றுள்ளன. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 3-2 என்ற கோல் கணக்கில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரிசியா டொட்டமுண்டை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக பொர்ஜா மயோரல், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகாஸ் வஸ்கூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரிசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பியரி எம்ரிக் அபுமெயாங் பெற்றார். இங்கிலாந்து…

  25. பொழுதுபோக்கு பெண்களை ஹோட்டல் அறைக்குள் அழைத்துவந்த இரு பங்களதேஷ் வீரர்களுக்கு அபராதம் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களான அல்- அமின் ஹுசைன் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோருக்கு ஒழுங்கு விதிகளை மீறிய குற்றசாட்டுக்காக 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளுக்குள் பொழுதுபோக்கு பெண் விருந்தினர்களை அழைத்துவந்துள்ளதால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களதேஷ் பிரிமியர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டுடிருக்கும் நிலையில், இவர்களுக்கு நேற்று குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பங்களதேஷ் கிரிக்கெட் சபை விடுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.