விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
மூன்றாவது தடவையாக ஒரே அணிகள் இறுதியில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என அழைக்கப்படும் ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் 3 ஆவது தடவையாகவும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதவுள்ளன. இறுதிப்போட்டி நாளை சனிக்கிழமை (19) யாழ்;ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 3 ஆவது பருவகால போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானங்களில் நடைபெற்றது. கடந்த ஆண்டுப் போட்டியில் காலிறுதி வரையில் …
-
- 2 replies
- 354 views
-
-
நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது இலங்கை 88 - 2 விக் 18 SEP, 2024 | 12:34 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, மதிய போசன இடைவேளையின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. திமுத் கருணாரட்ன 2 ஓட்டங்களுடனும் துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (33 - 2 விக்.) மொத்த எண்ணிக்கை 69 ஓட்டங்களாக இருந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ், ஆட்…
-
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
மேற்கிந்திய தீவுகளுக்கான இந்திய கிரிக்கட் அணியில், அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய இராணுவத்தின் விசேட தொண்டர் படையணியில் லெப்டினன் கேணல் தரத்தில் உள்ளதனால், அவர் சேவைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு அவர் இராணுவ சேவையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து மகேந்திரசிங் தற்போது ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பங்கு பற்றிய 38 வயதான தோனி, உல…
-
- 5 replies
- 1.8k views
- 1 follower
-
-
அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் பிரமோதைய விக்ரமசிங்க ஆகிய இருவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபால எம்.பி கூறிய விடயங்கள் முழுப்பொய் என தெரிவித்த முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க, நான் ஒருபோதும் அவர்களுக்கு எதிராக முறையிடவில்லை என்றும் கூறினார். சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்த முடியாது. அதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் விசாரணை பிரிவே விசாரணைகளை நடத்த வேண்டும். இலங்கையில் இந்த பிரிவை உருவாக்க சர்வதேச கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இந்த மூன்று ஆண்டுகளில் தான் இவ்வாறான நிலைமைகள் உருவாகியுள்ளது. அதுவும் சிம்பாவே இலங்கை போட்டியில் தான் இவ்வா…
-
- 0 replies
- 609 views
-
-
சச்சின் டெண்டுல்கரிடம் முழுப்பெயரை கேட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்: ரசிகர்கள் கொந்தளிப்பு சச்சின் டெண்டுல்கர். | படம்: ராய்ட்டர்ஸ். சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தினர்களுக்கு இருக்கைகள் மறுக்கப்பட்டது மற்றும் அவரது லக்கேஜை தவறாக வேறு இடத்துக்கு அனுப்பியது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் ஆவேசமாக கருத்தைப் பதிவு செய்ய சச்சினுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர். அமெரிக்காவில் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டுக்காக சச்சின் சென்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரின் பயண நெருக்கடி பற்றி கோபமாக சச்சின் ட்வீட் செய்தார்: “எனது குடும்ப உறுப்பினர்களின் வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் உறுதி…
-
- 1 reply
- 288 views
-
-
மூன்று வயதில் தன்னுடைய காலில் பெரும் காயத்தை அடைந்த டின்கில் கோர்கா தற்போது இந்தியாவுக்காக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். விபத்தின் போது இடது காலின் கணுக்கால் மற்றும் பாதத்தில் பெரும் காயத்தை அடைந்த அவர், அதன் பாதிப்பை நிரந்தரமாக அனுபவித்து வருகிறார். குத்துச்சண்டை பயிற்சியின் போது கடுமையான வலியையும் சவாலையும் உணர்ந்ததாக கூறும் அவர், இந்தியாவுக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறுகிறார். தன்னம்பிக்கை அற்ற நாட்களிலும் விடாமுயற்சியுடன் அவர் பயிற்சிகள் மேற்கொண்டது எப்படி? தற்போது இந்தியாவுக்காக விளையாடும் அவரின் கனவு என்னவாக இருக்கிறது? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு முழு விபரம் வீடியோ கீழ…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகும் கிளென் மெக்ஸ்வெல் By Mohamed Azarudeen - 31/10/2019 Share on Facebook Tweet on Twitter அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரமான கிளென் மெக்ஸ்வெல் தனது உள ஆரோக்கியம் சரியாக இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையறை இன்றிய ஓய்வு ஒன்றினை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு எடுக்கவுள்ள செய்தியினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உளநல நிபுணரான Dr. மைக்கல் லோய்ட் உறுதி செய்திருக்கின்றார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் இலங்கை அணிக்கு எத…
-
- 0 replies
- 451 views
-
-
சிறந்த பங்களிப்பு அளிக்க முடியாமையால் மன்னிப்பு கேட்டார் சங்கா பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு அந்த அணி வீரர்களிடம் குமார் சங்கக்காரா மன்னிப்பு கோரியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 8 போட்டிகளில் விளையாடிய சங்கக்காரா 105 ஓட்டங்களே எடுத்தார். அடிலெய்டு ஸ்டைக்கர்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கூட 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் அணிக்கு சிறந்த பங்களிப்பு அளிக்க முடியாமல் போனதால் சங்கக்காரா வீரர்களிடம் மன்னிப்பு கோரியதா…
-
- 0 replies
- 396 views
-
-
அவுஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தில் February 24, 2016 நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் டெஸ்டில் வெற்ற அவுஸ்திரேலியா தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் அவுஸ்திரேலியா– நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்ச்சர்ச்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 370 ஓட்டங்களும், அவுஸ்திரேலிய அணி 505 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 135 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடி…
-
- 0 replies
- 354 views
-
-
தடையை புறந்தள்ளி வைத்துவிட்டு WTC இறுதிப் போட்டியை ரபாடா எதிர்கொள்வார் என தென் ஆபிரிக்கா நம்புகிறது 14 MAY, 2025 | 01:40 PM (நெவில் அன்தனி) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி நெருங்குகின்ற நிலையில் தனது தடையை மறந்துவிட்டு புதுமனிதனாக இறுதிப் போட்டியை கெகிசோ ரபாடா எதிர்கொள்வார் என தென் ஆபிரிக்கா நம்புகிறது. தடைசெய்யப்பட்பட்ட ஊக்கமருந்து அல்லது போதைப் பொருள் பாவித்த குற்றத்தின்பேரில் ரபாடாவுக்கு தடைவிதிககப்பட்டது. இதனை அடுத்து அவரது நல்வாழ்வு குறித்து கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம்) தனது கரிசனையை வெளியிட்டது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துதை அல்லது பொதைப் பொருளை ரபாடா பாவித்துள்ளார் என்பது பரிசோதனையில் நிரூபணமானதை அடுத்து அவருக்கு ஒரு …
-
-
- 14 replies
- 774 views
- 1 follower
-
-
தற்கொலை செய்ய நினைத்தேன் : ரெய்னா அதிர்ச்சி தகவல் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சகலதுறை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, இருபதுக்கு - டி20 போட்டியில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இந்நிலையில் தான் தற்கொலை தற்கொலை செய்ய நினைத்தமை குறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், எனக்கு 13 வயது இருக்கையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் தூங்கும்போது ஏதோ என் தோளில் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு கண் விழித்தேன். என் கைகளை கட்டிப்போட்டுவிட்டு ஒரு சிறுவன் என் நெஞ்சு மீது அமர்ந்து என…
-
- 0 replies
- 613 views
-
-
வட்பேர்ட்டிடம் தோற்றது லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், வட்பேர்ட்டின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்ற லிவர்பூல் தோற்றது. இப்போட்டியின் முதலாவது பாதியில் கோல் பெறும் பல வாய்ப்புகளை வட்பேர்ட் கொண்டிருந்தபோதும், அவ்வணியின் அணித்தலைவரும் முன்களவீரருமான ட்ரோய் டீனியின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் அபாரமாகத் தடுத்த நிலையில் போட்டியின் முதற்பாதி முடிவில் வட்பேர…
-
- 0 replies
- 477 views
-
-
வாதத்தால் விரல்களை இழந்த கிரிக்கெட் நடுவர் பில்லி பவுடன் ! கிரிக்கெட் நடுவர்களில் நியூசிலாந்தை சேர்ந்த பில்லி பவுடன் சற்று வித்தியாசமானவர். சொந்த நாட்டு வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தால் கூட, பில்லி பவுடன் கொடுக்கும் 'அவுட் சைகை' யை பார்த்து, ரசிகர்கள் சோகத்தை மறந்து விடுவார்கள். கிரிக்கெட் மைதானத்தில், தனது வித்தியாசமான அணுகுமுறையால் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த பில்லி பவுடனின் விரல்கள், தற்போது செயல் இழந்திருப்பதுதான் சோகத்திலும் சோகம். இதனால் இனிமேல் பில்லி பவுடன் நடுவர் பணியில் ஈடுபடமாட்டார். ஆர்த்தரைடிஸ் வாதத்தால், இவரது விரல்கள் பாதிப்படைத்துள்ளனவாம். http://www.vikatan.com/news/sports…
-
- 1 reply
- 820 views
-
-
தென்னாபிரிக்காவில் வெள்ளையரல்லாதவர்கள் 6 பேர் கட்டாயம் தென்னாபிரிக்காவில் நிலவும் இன வேறுபாடுகளையும் கறுப்பினத்தவர்களும் வெள்ளையினத்தவரல்லாத ஏனையோரும் பின்தங்கியுள்ளமையை நிவர்த்தி செய்யுமுகமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில், வெள்ளையரல்லாதவர்கள் 6 பேர் இடம்பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் நிர்வாக சபையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு காரணமாக, நிற ஒதுக்கீடென்பது, உத்தியோகபூர்வமாக மாறியுள்ளது. இதில், வெள்ளையரல்லாத 6 பேரில் குறைந்தது இரண்டு பேர், நிச்சயமாக கறுப்பினத்தவர்களாக இருக்க வேண…
-
- 0 replies
- 431 views
-
-
சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி. சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி. மதுசனின் அதிரடியான அரைச்சதமும் அபாரமான பந்துவீச்சும் கைகொடுக்க சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி. யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுப் பிரிவினருக்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நேற்று புதன்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதியாட்டத்தில் யாழ்.மத்திய கல்லூர…
-
- 1 reply
- 361 views
-
-
பேர்ண்லியிடம் தோற்ற ஆர்சனல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பேர்ண்லிக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது. பேர்ண்லிக்கு கிடைக்கப்பெற்ற கோலானது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப்பெற்றிருந்தது. இதேவேளை, புல்ஹாமின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றதோடு, புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை பொபி றெய்ட் பெற்றிரு…
-
- 0 replies
- 694 views
-
-
டெஸ்ட் சாம்பியன்களின் மறுபக்கம் சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த 18 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில்கூட தோற்காமல் முன்னேறி வரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள். விராட் கோலி தன் தந்தையார் இறந்ததற்கு அடுத்த நாளே டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடிய கோலி, துக்கத்துக்கு நடுவிலும் 90 ரன்களைக் குவித்தார். கோலிக்கு டாட்டூக்கள் பிடிக்கும். அவருக்கு மிகவும் பிடித்தது சாமுராய் வீரன் உருவம் பொறித்த டாட்டூ. ரவீந்திர ஜடேஜா இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடே…
-
- 0 replies
- 401 views
-
-
-
பந்து கழுத்தில் தாக்கியதில் நிலைகுலைந்த மெக்ஸ்வெல் (காணொளி இணைப்பு) அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிலேன் மெக்ஸ்வெல் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவரது கழுத்தில் பந்து தாக்கியுள்ளது. இதில் சற்று நிலைத்தடுமாறிய மெக்ஸ்வெல் தரையில் விழுந்துள்ளார். மைதானத்தில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மெக்ஸ்வெலை ஓடிவந்து கவனிக்க, அதிஷ்டவசமாக அவருக்கு எவ்வித பாரிய உபாதைகளும் ஏற்படவில்லை. எனினும் பந்து தாக்கியதற்கு பிறகு மெக்ஸ்வெல் அவரது அறைக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ள நிலையில்,…
-
- 0 replies
- 282 views
-
-
ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அன்ட்ரே அகாஸி ஒப்புக் கொண்டுள்ளார்‐ 29 October 09 04:52 pm (BST) உலகின் மிகப் பிரபலமான டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவராக போற்றப்படும் அமெரிக்காவின் முன்ளாள் டென்னிஸ் நட்சத்திரம் அன்ட்ரே அகாஸி ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார். 39 வயதான அன்ட்ரே அகாஸி, கிறிஸ்டல் மெதமடமைன் எனப்படும் மருந்தினைப் பயன்படுத்தி ஊக்க மருந்து சோதனைகளிலிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்டுள்ள தமது வாழ்க்கைச் சரிதத்தில் இந்த இரகசியங்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். 2006ம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அன்ட்ரே அகாஸி, மொத்தமாக எட்டு தடவைகள் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஸ்பானீஸ் சூப்பர் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பார்சிலோனா அணியை வீழ்த்தியது ரியல் மாட்ரிட் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்பானீஸ் சூப்பர் கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் பார்சிலோனா அணியை 1-3 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. மாட்ரிட்: கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்பானீஸ் சூப்பர் கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் பார்சிலோனா அணியை 1-3 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை தொடர் கால்பந்து போட்டிகள் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இதில், ஸ்பெயினின் முக்கிய க…
-
- 3 replies
- 437 views
-
-
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் ரூனே கைது: குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்கு இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரரான வேய்ன் ரூனே குடிபோதையில் கார் ஓட்டியதாக போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த வேய்ன் ரூனே(வயது 31). இங்கிலாந்து அணிக்காக 119 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள ரூனே, 53 கோல்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரரான இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது சொந்த அணியான எவர்ட்…
-
- 0 replies
- 296 views
-
-
இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; இந்திய கிரிக்கெட் வீரர் அகால மரணம் இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12 வயதான வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக 19 இந்திய இளம் வீரர்கள் இங்கு வந்துள்ளமை குறிப…
-
- 0 replies
- 237 views
-
-
-
"போட்டியை வெல்ல திறமை வேண்டும்" தினேஷ் சந்திமால் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற ஆன்மீகவாதிகளின் ஆசீர்வாதம் மட்டும் போதாது திறமையும் வேண்டும் என்று இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று பாகிஸ்தானுடன் விளையாடிய இலங்கை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று சாதித்தது. இந்தத் டெஸ்ட் தொடரை சந்திமால் தலைமையிலான இலங்கை அணி வெல்வதற்கு எனது ஆசீர்வாதமே காரணம் என்று பெண் ஆன்மீகவாதி ஒருவர் பேஸ்புக்கில் பதிவேற்றிய படம் ஒன்று பலத்த சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் நேற்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊ…
-
- 0 replies
- 482 views
-