Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையை ரத்து செய்ய வேண்டாம்: இந்தியா சிமெண்ட்ஸ் மன்றாடல் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் ஒப்பந்த்தத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் மன்றாடியுள்ளது. ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான முத்கல் கமிட்டியின் அறிக்கை மீதான எதிர்வினையில் இந்தியா சிமெண்ட்ஸ் கோரிக்கை வைக்கும் போது, “குருநாத் மெய்யப்பன் மீது கூறப்பட்ட விவகாரங்கள் தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதோ உரிமையாளர்கள் மீதோ, ஊழியர்கள் மீதோ எந்த வித அனுமானங்களும் இல்லை.” என்று கோரியுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் என்ற ஒப்பந்தத்தை ரத்து செய்தால் அது ஐபிஎல் கிரிக்கெட்டிற்கே பா…

  2. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களின் ‘மெனு கார்டு’ இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. முத்தரப்புத் தொடரில் 3-வது அணியாக இங்கிலாந்து பங்கேற் கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுகள் குறித்த பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் அளித் துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் கிரில்டு (பொறித்த) சிக்கன், பட்டர் சிக்கன் போன்ற காரம் அதிகமில்லாத உணவுகளுக்கே இந்திய வீரர்கள் அதிக முன்னுரிமை அளித்திருக்கிறார்கள். போட்டிகளில் இல்லாதபோது ஓட்டல்களில் தங்கியிருக்கும் நேரத்தில் இந்திய வீரர்களின் விருப்ப உணவை தயா…

  3. ஆமாம், அனுஷ்காவை காதலிக்கிறேன்: கோபத்தில் சிலிர்த்த கோலி ஆமாம், நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிக்கிறேன். ஆனால் இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் மற்றவர்கள் அதிகம் தலையிடாமல் பகுத்தறிவோடு நடந்துகொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கோபத்தோடு பேசியுள்ளார். கோலியும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. இவர்கள் இருவரும் இணைந்து பொது இடங்களுக்கு சென்ற படங்களும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட கோலியிடம் அவருடைய காதல் பற்றி கேள்வியெழுப்பப்பட்டபோது கடும் கோபமடைந்த அவர், “ஆமாம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் எங்களின் தனிப்பட…

  4. சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கும் சங்கா? இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வரும் சங்கக்காரா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை ஆங்கில ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் சங்கக்காரா ஓய்வு பெறும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்…

  5. கௌஷாலை ஆரம்ப வீரர் ஸ்தானத்தில் அவதானிக்கவுள்ளோம்: தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் திலக்­க­ரட்ன டில்­ஷா­னுடன் ஆரம்ப வீர­ராக யாரை நிலை­யாக நிய­மிப்­பது என்­பதில் தெரி­வா­ளர்கள் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­றனர். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள நிலையில், இந்­தி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் திலக்­க­ரட்ன டில்ஷான் மாத்­தி­ரமே ஆரம்ப வீர­ராக தனது அனு­ப­வத்தைக் கொண்டு திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். உப்புல் தரங்க, குசல் ஜனித் பெரேரா ஆகியோர் தங்­க­ளுக்கு கிடைத்த வாய்ப்­பு­களை சரி­யாகப் பயன்­ப­டுத்­திக் ­கொள்ளத் தவ­றி­யி­ருந்­தனர். இந்நிலையில் இலங்கை வருகை தந்­துள்ள இங்­கி­லாந்து அணிக்க…

  6. குழந்தைகளுக்கு எந்த வயதில் செஸ் கற்றுக்கொடுப்பது? - செஸ் ‘ராணி’ சூசன் போல்கர் பதில் ஒன்றல்ல, இரண்டல்ல.. நான்கு முறை மகளிர் உலக செஸ்ஸில் சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் ஹங்கேரியைச் சேர்ந்த சூசன் போல்கர். செஸ் நிபுணர், வர்ணனையாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட போல்கர், திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வருகிறார். 11 வயதுக்குட்பட்டோருக்கான புதாபெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தனது 4-வது வயதில் வென்றவர். அதிலிருந்தே அவருடைய புத்திகூர்மையையும், திறமையையும் நாம் அறிந்துகொள்ளலாம். பிரபல செஸ் வீராங்கனை ஜுடித் போல்கரின் சகோதரி. ஆடவர் கோலோச்சிக்கொண்டிருந்த செஸ் விளையாட்டில் ஆளுமை செலுத்திய முதல் பெண் சூசன். 1990-களில் விஸ்வநாதன் ஆனந்துடன் பல போட்டிக…

  7. உலகக்கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் இங்கிலாந்து அணி இலங்கையை நொறுக்கித் தள்ளும் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் கூறியுள்ளார். இங்கிலாந்து அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்த தொடர் வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்பாக 21 மற்றும் 23ம் திகதி இரு அணிகளும் பயிற்சி போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் இலங்கையில் இங்கிலாந்து அணி தொடரை இழந்து விடாது என கிறிஸ் ஜோர்டான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் எல்லோரும் உலகக்கிண்ணத்தை பற்றி பேசுகின்றனர். ஆனால் இப்போது இருக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்தினால் போதுமானது. இலங்கை சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டு உலகக்கிண்ண போட்டிகளுக்கு அடித்தளம் அம…

  8. தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் மீது ரசிகர்கள் நிறவெறி கேலி கான்பெராவில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் வரம்பு மீறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட இம்ரான் தாஹிர் புகார் எதுவும் அளிக்கவில்லை. தேர்ட் மேன் பவுண்டரி அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார் இம்ரான் தாஹிர். இவருக்கு அடிக்கடி தனது தாடியைச் சொரியும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனைக் கண்ட கான்பெரா ரசிகர்கள், அவரை கடுமையாக கேலி செய்தனர். நிறவெறித்தனம் அதில் ஊடுருவியிருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது, அவர் தாடியைச் சொறிவது பற்றி ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர், "உன்னுடைய செல்லப் பிராணியான ஒட்டகத்துக்கு சொறிந்து விட …

  9. மைக்கல் கிளார்க் ஓய்வுபெறவேண்டும் : அலன் போடர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டுமென அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் அலன் போடர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய அணித் தலைவர் 33 வயதான மைக்கல் கிளார்க் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டுவரும் நிலையிலேயே அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் அலன் போடர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மைக்கல் கிளார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் 2015 ஆம் ஆண்டு இடம்பெறும் உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட வேண்டு…

  10. ஆஸி. ஊடகத்தில் திறந்த விவாதத்தில் சங்கா அவுஸ்திரேலியாவின் சி.என்.என். தொலைக்காட்சியில் இந்த வாரம் இடம்பெறும் டோக் ஏசியா ( Talk Asia ) நிகழ்ச்சியில் இலங்கை அணியின்முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார கலந்து கொண்டு திறந்த விவாதத்தில் ஈடுபடவுள்ளார். இதன் போது சங்கக்கார தனது வாழ்க்கை குறித்தும் கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பாகவும் 2015 ஆம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டி குறித்த இலக்குகள் மற்றும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஓய்வு குறித்தும் விவாதிக்கவுள்ளார். இவ் விவாதம் நாளை 20 ஆம் திகதி இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன் இதனை பிரபல ஊடகவியலாளர் ஆனா கொரேன் நெறிப்படுத்தவுள்ளார். http://www.virakesari.lk/articles/2014/11/19/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF…

  11. ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடிப்பது கடினம்: பிரையன் லாரா இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா எடுத்த 264 ரன்கள் என்ற ஒருநாள் கிரிக்கெட் உலக சாதனையை முறியடிப்பது கடினம் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ஹெரால்ட் சன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் லாரா கூறியது: "மான்செஸ்டர் மைதானத்தில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்த 189 ரன்கள் என்ற சாதனையுடன் கிரிக்கெட்டில் வளர்ந்தவர்கள் நாங்கள். அன்று அவர் பந்து வீச்சை எவ்வாறு ஆதிக்கம் செலுத்தினார் என்பது பற்றி நாங்கள் போதிக்கப்பட்டோம். அப்போது இந்த ஸ்கோர்தான் உலக சாதனை. சில ஆண்டுகளுக்கு முறியடிக்க முடியாமல் நிலைபெற்றது. அப்போதெல்லாம் 200 எடுக்க முடியும் என்றே நான் உணர்ந்தேன். ஆன…

  12. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: சிறப்பான பேட்டை தேடி வாங்கிய தோனி தோனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்காக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகருக்கு சென்று சிறப்பான பேட்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார் இந்திய அணி கேப்டன் தோனி. கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி பங்கேற்கவில்லை. அடுத்ததாக டிசம்பர் 4-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் அந்நாட்டு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் தோனி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12-ல் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்க இருக்கிறார் இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக பேட்களை வாங்குவதற்காக மீரட் நகருக்கு கடந்த சில…

  13. சகலதுறை கிரிக்கெட் வீரர்களில் ஏஞ்சலோ மெத்யூஸ் முதலிடம் இந்­தி­யா­வுக்கு எதி­ரான ஐந்து போட்­டிகள் கொண்ட தொடரில் சகல துறை­க­ளிலும் பிர­கா­சித்த ஏஞ்­சலோ மெத்யூஸ், சர்­வ­தேச ஒரு நாள் கிரிக்கெட் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ருக்­கான நிரல்­ப­டுத்­தலில் முத­லி­டத்தை அடைந்­துள்ளார். இந்தத் தொடரில் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் அடங்­க­லாக 339 ஓட்­டங்­களைப் பெற்ற மெத்யூஸ், 4 விக்கெட்­களைக் கைப்­பற்­றி­யி­ருந்தார். இதனையடுத்து சக­ல­துறை ஆட்­டக்­கா­ரர்­க­ளுக்­கான நிரல்­ப­டுத்­தலில் ஏஞ்­சலோ மெத்யூஸ் முதலாம் இடத்­திற்கு முன்­னே­றி­யுள்ளார். நிரல்­ப­டுத்­த­லுக்­கான 420 படி­நிலை புள்­ளி­களை மெத்யூஸ் பெற்­றுள்­ள­துடன் பாகிஸ்­தானின் மொஹமத் ஹஃவீஸ் 411 படி­நிலை புள்­ளி­க­ளுடன் இரண்டாம் இ…

  14. சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளன தலைவர் செப் பிளட்டர் இலங்கை வருகிறார் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்கள் சம்­மே­ளனத் (ஃபீஃபா) தலைவர் செப் பிளட்டர், அடுத்த மாதம் முதலாம் திகதி இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். அவர் இலங்­கைக்கு வருகை தரும் மூன்­றா­வது விஜயம் இது­வாகும். இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் தற்­போ­தைய கால்­பந்­தாட்ட இல்­லத்தைத் திறந்து வைக்­க­வென 2002 இல் இங்கு வரு­கை ­தந்த பிளட் டர், 2007 இல் சுனாமி நிதியத் திட்­டங்­க­ளையும் பார்­வை­யிட வருகை தந்­தி­ருந்தார். இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் 75 வருட பூர்த்தி விழா கொண்­டாட்­டங்­களில் கலந்து சிறப்­பிக்கும் வகையில் அவர் வருகை தரு­கின்றார். தனது 36 மணித்­தி­யால இலங்கை விஜ­யத்­தின்­போத…

  15. ஐசிசி தரவரிசை: முதல் இடத்தில் இந்தியா இலங்கை அணியை 5-0 என்று ஒருநாள் தொடரில் தோற்கடித்த இந்திய அணி, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒருநாள் தொடர் ஆரம்பிக்கும் முன்பு 113 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருந்த இந்திய அணி, தொடரின் முடிவில், 117 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியை விடவும் 2 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது. ஒருநாள் தொடரில் தோற்ற இலங்கை அணி, 4ம் இடத்தில் உள்ளது. இப்போது நடந்துவரும் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில், எந்த அணி 4-1 என்று ஜெயிக்கிறதோ அந்த அணி ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் இந்தி…

  16. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டிகள் 04 டிசம்பர் 2014 தொடக்கம் 07 ஜனவரி 2015 வரை பிரிஸ்பேன், அடிலேட்,மெல்பெர்ன்,சிட்னி நகரங்களில் நடைபெறும்.

  17. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சர்வதேச கிரிக்கெட்டை சீரழிக்கின்றது : அர்ஜுண ரணதுங்க இலங்கை உட்பட பல நாடுகளின் கிரிக்கெட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை அபகரித்து வருகின்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது சர்வதேசக் கிரிக்கெட்டை சீரழித்துக் கொண்டிருப்பதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார். இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கை …

  18. இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்: சனத் இந்திய தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும் என தெரிவு குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா. இதனால் இலங்கைக்கு இந்த தொடர் மோசமான தோல்வியாக அமைந்து விட்டது. இந்நிலையிலேயே சனத் ஜெயசூரியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், இந்தியத் தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இம் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும். இலங…

  19. உலகக்கிண்ணத்தை இலங்கை அல்லது ஆஸி கைப்பற்றும் : யுவராஜ் உலகக்கிண்ணத்தை இலங்கை அல்லது அவுஸ்திரேலிய அணி கைப்பற்றும் என இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலகக்கிண்ண இந்திய அணியில் தனக்கு இடம் கிடைத்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகக்கிண்ண போட்டிகள் நெருங்கி வருகின்ற நிலையில் யுவராஜ்சிங் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2015 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ணத்தை இலங்கை அல்லது அவுஸ்திரேலிய அணிகள் கைப்பற்றும். விராட் கோலி திறமையானவர். அவரது வெற்றிகளுக்கு பின்னணி அவரது உறுதியான தீர்மானமே ஆகும். இந்திய அணிக்கு டோன…

  20. ஸிம்பாப்வேயை வெள்ளையடிப்பு செய்தது பங்களாதேஷ் ஸிம்­பாப்வே அணிக்கு எதி­ராக சித்­தாகொங், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளை­யாட்­ட­ரங்கில் இன்று நிறை­வு­பெற்ற மூன்­றா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 186 ஓட்­டங்­களால் பங்­க­ளாதேஷ் வெற்­றி­யீட்­டி­யது. இதன் மூலம் மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரில் ஸிம்­பாப்வே அணியை 3:0 என்ற ஆட்டக் கணக் கில் பங்­க­ளாதேஷ் வெள்­ளை­ய­டிப்பு செய்­தது. போட்­டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஒரு விக்கெட் இழப்­புக்கு 71 ஓட்­டங்கள் என்ற நிலை­யி­லி­ருந்து தொடர்ந்த ஸிம்­பாப்வே அணி, தேநீர் இடை­வே­ளைக்கு சற்று முன்னர் 262 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது கடைசி விக்­கெட்டை இழந்­தது. போட்­டியின் முத­லா­வது பகு­தியில் 35 ஓவ…

  21. நவம்பர் 16 - இந்த நாளை மறக்க முடியுமா சச்சின்? நவம்பர் 16. இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்கமுடியுமா என்ன? 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக பாலகனாகக் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த சச்சின், தனது சொந்த மண்ணான மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு தனது கால் நூற்றாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஓடிவிட்டாலும், அவருடைய அலை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சென்ற வருடம் இன்றைய நாளில்தான் (நவம்பர் 16) மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி மூன்றே நாட்க…

  22. விசித்திரமான முறையில் ஹிட் விக்கெட் ஆவதிலிருந்து தப்பிய டேல் ஸ்டெய்ன் . தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் நேற்று பெர்த் ஒருநாள் போட்டியில் விசித்திரமான முறையில் ஹிட் விக்கெட் ஆகியிருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. ஆஸ்திரேலியா எடுத்த 300 ரன்கள் இலக்கை எதிர்த்து துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 207/7 என்று இருந்த போது டேல் ஸ்டெய்ன் கிரீஸிற்கு வந்தார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கிரிக்கெட் ஆட்டத்தில் இதுவரை நடந்திராத விசித்திர முறையில் ஹிட் விக்கெட் ஆகத் தெரிந்தார். ஆஸ்திரேலிய வீச்சாளரின் மிகப்பெரிய நல்ல பந்தோ, அல்லது அதிவிரைவு பீல்டிங்கோ, யார்க்கரோ டேல் ஸ்டெய்னின் இத்தகைய விசித்திரத்திற்குக் காரணமல்ல. அவர் அணிந்திருந்த ஷூ அவருக்கு …

  23. தோல்வி எதிரொலி: இலங்கை வாரியம் மீது ரணதுங்கா சாடல் இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரால் இலங்கை அணி உலகக் கோப்பை போட்டிக்கு தயாராவது பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளே பொறுப்பு என அந்த அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் படுதோல்வி கண்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணியின் தோல்வி தொடர்பாக வீரர்கள் மீது குற்றம்சாட்ட மறுத்த ரணதுங்கா மேலும் கூறியதாவது: இலங்கை அணி இதுவரை மோசமாக விளையாடி படுதோல்வியை சந்தித்திருப்பதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம், விளையாட்டு அமைச்சகம், தேர்வுக் குழு தலைவர் ஜெயசூர்யா, பயிற்சியாளர் அட்டப்பட்டு, க…

  24. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 7,000 ரன்கள்: டிவிலியர்ஸ் புதிய சாதனை ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் தெ.ஆ. கேப்டன் ஏ.பி. டிவிலியர்ஸ். பெர்த்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் 7,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 166 இன்னிங்ஸ்களில் அவர் 7,000 ரன்களைக் கடந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை வைத்திருந்தவர் சவுரவ் கங்குலி. இவர் 174 இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தார். ஆனாலும் டிவிலியர்ஸ் சாதனை குறுகிய காலமே நீடி…

  25. கேட்ச்களை கோட்டைவிட்ட தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகித்தது. நல்ல பேட்டிங் பிட்சில் தெ.ஆ. கேப்டன் டிவிலியர்ஸ் முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 268 ரன்களுக்குச் சுருண்டது. பெய்லிக்கு மட்டும் தவறவிடப்பட்ட 4 கேட்ச்கள்: தென் ஆப்பிரிக்கா அணியின் பீல்டிங் இன்று படு மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.