Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஐசிசி தரவரிசை: முதல் இடத்தில் இந்தியா இலங்கை அணியை 5-0 என்று ஒருநாள் தொடரில் தோற்கடித்த இந்திய அணி, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒருநாள் தொடர் ஆரம்பிக்கும் முன்பு 113 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருந்த இந்திய அணி, தொடரின் முடிவில், 117 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியை விடவும் 2 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது. ஒருநாள் தொடரில் தோற்ற இலங்கை அணி, 4ம் இடத்தில் உள்ளது. இப்போது நடந்துவரும் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில், எந்த அணி 4-1 என்று ஜெயிக்கிறதோ அந்த அணி ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் இந்தி…

  2. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சர்வதேச கிரிக்கெட்டை சீரழிக்கின்றது : அர்ஜுண ரணதுங்க இலங்கை உட்பட பல நாடுகளின் கிரிக்கெட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை அபகரித்து வருகின்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது சர்வதேசக் கிரிக்கெட்டை சீரழித்துக் கொண்டிருப்பதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார். இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கை …

  3. இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்: சனத் இந்திய தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும் என தெரிவு குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா. இதனால் இலங்கைக்கு இந்த தொடர் மோசமான தோல்வியாக அமைந்து விட்டது. இந்நிலையிலேயே சனத் ஜெயசூரியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், இந்தியத் தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இம் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும். இலங…

  4. உலகக்கிண்ணத்தை இலங்கை அல்லது ஆஸி கைப்பற்றும் : யுவராஜ் உலகக்கிண்ணத்தை இலங்கை அல்லது அவுஸ்திரேலிய அணி கைப்பற்றும் என இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலகக்கிண்ண இந்திய அணியில் தனக்கு இடம் கிடைத்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகக்கிண்ண போட்டிகள் நெருங்கி வருகின்ற நிலையில் யுவராஜ்சிங் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2015 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ணத்தை இலங்கை அல்லது அவுஸ்திரேலிய அணிகள் கைப்பற்றும். விராட் கோலி திறமையானவர். அவரது வெற்றிகளுக்கு பின்னணி அவரது உறுதியான தீர்மானமே ஆகும். இந்திய அணிக்கு டோன…

  5. ஸிம்பாப்வேயை வெள்ளையடிப்பு செய்தது பங்களாதேஷ் ஸிம்­பாப்வே அணிக்கு எதி­ராக சித்­தாகொங், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளை­யாட்­ட­ரங்கில் இன்று நிறை­வு­பெற்ற மூன்­றா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 186 ஓட்­டங்­களால் பங்­க­ளாதேஷ் வெற்­றி­யீட்­டி­யது. இதன் மூலம் மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரில் ஸிம்­பாப்வே அணியை 3:0 என்ற ஆட்டக் கணக் கில் பங்­க­ளாதேஷ் வெள்­ளை­ய­டிப்பு செய்­தது. போட்­டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஒரு விக்கெட் இழப்­புக்கு 71 ஓட்­டங்கள் என்ற நிலை­யி­லி­ருந்து தொடர்ந்த ஸிம்­பாப்வே அணி, தேநீர் இடை­வே­ளைக்கு சற்று முன்னர் 262 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது கடைசி விக்­கெட்டை இழந்­தது. போட்­டியின் முத­லா­வது பகு­தியில் 35 ஓவ…

  6. ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோகித் சர்மா. கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் சேவாக் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார். எரங்கா பந்தை லாங் ஆஃப் திசையில் மிகப்பெ…

  7. நெதர்லாந்து அணி தோல்வி அக்டோபர் 14, 2014. ரேய்க்ஜாவிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச்சுற்றில் நெதர்லாந்து அணி 0–2 என ஐஸ்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது. ‘யூரோ’ கோப்பை தொடர் பிரான்சில் வரும் 2016, ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை நடக்கவுள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் பிரான்ஸ் மட்டும் தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச் சுற்று போட்டிகள் நடக்கின்றன ரேய்க்ஜாவிக்கில் நடந்த இதன் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, ஐஸ்லாந்து அணிகள் மோதின. போட்டியின் 10வது நிமிடத்தில் கில்பி சிகுர்ட்சன் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி தர எதிரணியால் முடியவில்லை. தொடர்ந்து அசத்திய கில்பி (42வது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்து ஐஸ்லாந்து அணியை வலுப்பட…

  8. நவம்பர் 16 - இந்த நாளை மறக்க முடியுமா சச்சின்? நவம்பர் 16. இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்கமுடியுமா என்ன? 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக பாலகனாகக் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த சச்சின், தனது சொந்த மண்ணான மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு தனது கால் நூற்றாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஓடிவிட்டாலும், அவருடைய அலை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சென்ற வருடம் இன்றைய நாளில்தான் (நவம்பர் 16) மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி மூன்றே நாட்க…

  9. தோல்வி எதிரொலி: இலங்கை வாரியம் மீது ரணதுங்கா சாடல் இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரால் இலங்கை அணி உலகக் கோப்பை போட்டிக்கு தயாராவது பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளே பொறுப்பு என அந்த அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் படுதோல்வி கண்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணியின் தோல்வி தொடர்பாக வீரர்கள் மீது குற்றம்சாட்ட மறுத்த ரணதுங்கா மேலும் கூறியதாவது: இலங்கை அணி இதுவரை மோசமாக விளையாடி படுதோல்வியை சந்தித்திருப்பதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம், விளையாட்டு அமைச்சகம், தேர்வுக் குழு தலைவர் ஜெயசூர்யா, பயிற்சியாளர் அட்டப்பட்டு, க…

  10. விசித்திரமான முறையில் ஹிட் விக்கெட் ஆவதிலிருந்து தப்பிய டேல் ஸ்டெய்ன் . தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் நேற்று பெர்த் ஒருநாள் போட்டியில் விசித்திரமான முறையில் ஹிட் விக்கெட் ஆகியிருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. ஆஸ்திரேலியா எடுத்த 300 ரன்கள் இலக்கை எதிர்த்து துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 207/7 என்று இருந்த போது டேல் ஸ்டெய்ன் கிரீஸிற்கு வந்தார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கிரிக்கெட் ஆட்டத்தில் இதுவரை நடந்திராத விசித்திர முறையில் ஹிட் விக்கெட் ஆகத் தெரிந்தார். ஆஸ்திரேலிய வீச்சாளரின் மிகப்பெரிய நல்ல பந்தோ, அல்லது அதிவிரைவு பீல்டிங்கோ, யார்க்கரோ டேல் ஸ்டெய்னின் இத்தகைய விசித்திரத்திற்குக் காரணமல்ல. அவர் அணிந்திருந்த ஷூ அவருக்கு …

  11. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 7,000 ரன்கள்: டிவிலியர்ஸ் புதிய சாதனை ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் தெ.ஆ. கேப்டன் ஏ.பி. டிவிலியர்ஸ். பெர்த்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் 7,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 166 இன்னிங்ஸ்களில் அவர் 7,000 ரன்களைக் கடந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை வைத்திருந்தவர் சவுரவ் கங்குலி. இவர் 174 இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தார். ஆனாலும் டிவிலியர்ஸ் சாதனை குறுகிய காலமே நீடி…

  12. பேட்டில் பட்டு.. அனுஷ்காவை எட்டிய முத்தம்.. சாதனையுடன் "ஹாஃப்" அடித்ததைக் கொண்டாடிய கோஹ்லி! ஹைதராபாத்: விராத் கோஹ்லுக்கு மட்டுமல்ல, அவரது காதலியா அனுஷ்கா சர்மாவுக்கும் நேற்று மறக்க முடியாத நாள். ஹைதராபாத்தில் தன்னால்தான் இப்படி முடங்கிப் போய் விட்டார் என்ற அவச் சொல்லுக்குள்ளான விராத் கோஹ்லி புதிய சாதனையுடன் அரை சதம் போட்டு இந்தியாவின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்த தருணத்தை அனுஷ்கா சர்மா நிச்சயம் வாழ்க்கையில் மறக்க மாட்டார். கூடவே, விராத் கோஹ்லி, தனக்குக் கொடுத்த பறக்கும் முத்தத்தையும் மறக்கவே மாட்டார்.... வெட்கப் புன்னகை தவழ அதை அவர் வாங்கியதை மனதோடு போட்டு புதைத்து வைத்திருப்பார் காலா காலமும்! ஹைதராபாத்தில் நேற்று இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியிலும் நே…

  13. ஐ.சி. சியின் இரண்டு பிரதான கிரிக்கெட் விருதுகளுக்கு குமார் சங்கக்கார, ஏஞ்சலோ மெத்யூஸ், ஜோன்சன் 2014-11-07 சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் (ஐ.சி.சி.) வரு­டத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் அதி­சி­றந்த டெஸ்ட் வீரர் ஆகிய விரு­து­க­ளுக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்ட வீரர்­களின் குறும்­பட்­டி­யல்­களில் இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ், முன்னாள் அணித் தலைவர் குமார் சங்­கக்­கார, அவுஸ்­தி­ரே­லி­யாவின் மிச்செல் ஜோன்சன் ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர். இவர்­க­ளுடன் தென் ஆபி­ரிக்­காவின் ஏ. பி. டி வில்­லியர்ஸ் (அதி சிறந்த கிரிக்கெட் வீரர்), அவுஸ்­தி­ரே­லி­யாவின் டேவிட் வோர்னர் (அதி சிறந்த டெஸ்ட் வீரர்) ஆகி­யோரும் குறும்­பட்­டி­யல்­களில் அடங்­கு­கின்­றனர். சர்­வ­தேச…

  14. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜோன்சன், ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய இரு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார். இதில் முக்கிய விருதுகள் எதையும் இலங்கை அணி வீரர்களில் ஒருவர் கூட பெறவில்லை. இந்த ஆண்டிற்கான மக்கள் விருப்ப விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஐ.சி.சி. ஒருநாள் அணியில் இலங்கை வீரர்கள் சார்பாக அஜந்த மெண்டிஸின் பெயர் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. ஒருநாள் அணித்தலைவராக இந்திய அணித் தலைவர் டோனி அறிவிக்கப்பட்டுள்ளார். விருது பெற்ற…

  15. அருமையாக பிடியெடுத்த பார்வையாளருக்கு பணப்பரிசு கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் அப் போட்டியில் அடித்து சிக்ஸருக்கு சென்ற பந்தை அருமையாக பிடியெடுத்ததால் அவருக்கு ரூபா 2.5 இலட்சம் ரூபா பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து ஹமில்டன் செட்டன் பார்க் மைதானத்தில் அந்நாட்டு ஓடாகோ அணிக்கும், வெலிங்டன் அணிக்கும் இடையே இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. குறித்த போட்டியில் ஓடாகோ வோல்ஸ் அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தை சிக்சருக்கு விளாசினார். அப்போது மைதானத்திற்கு வெளியே போட்டியை ரசித்து கொண்டு இருந்த ஹென்ரூட் மைக்கல் என்ற கிரிக்கெட் ரசிகர் ஓடி வந்து பந்தை ஒற்றை கையால் மிகவும் அருமையாக பிடியெடுத்தார். இந்நில…

  16. தொடக்க வீரராக களமிறங்க ஆசைப்படும் மஹேல அடுத்த வருடம் ஆரம்பமாகவுள்ள உலக கிண்ணத்துடன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள இலங்கை அணியின் மூத்த வீரர் மஹேல ஜெயவர்த்தன (37 வயது) மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்காக ‘என்னை தொடக்க ஆட்டக்காரராக விளையாட அனுமதிக்கும்படி தேர்வாளர்களிடம் மண்டியிட்டு கேட்க முடியாது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் வரிசை எனக்கு பொருத்தமானது என்று உணர்கிறேன். அதனால் உலக கிண்ணத்தில் அந்த வரிசையில் ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் தேர்வாளர்கள், மிடில் வரிசையில் போதிய அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் இல்லை. எனவே அந்த வரிசையில் நான் ஆட வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேல…

  17. டோனியின் உபாதை புதன்கிழமை, 12 நவம்பர் 2014 இந்திய கிரிக்கெட் அணியின் தலைர் மகேந்திர சிங் டோனியின் வலது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள உபாதையே அவர் இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடாமைக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தனது விருப்பத்தின் பெயரில் அவர் தனக்கு ஓய்வு தேவை என்ற நிலையில் ஓய்வினை எடுத்துக்கொண்டார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதற்ப் போட்டியில் உபாதை காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. உபாதை குணமடையும் வாய்ப்புக்கள் உள்ள போதும் உலகக்கிண்ணத்தை குறி வைத்து அவரை மேலும் உபாதையடையாமல் பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய கிர…

  18. இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ட்ரவர் பென்னி நியமனம் புதன்கிழமை, 12 நவம்பர் 2014 இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ட்ரவர் பென்னி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இருந்து நீக்கப்பட்டு ட்ரவர் பென்னி, இந்திய கிரிக்கெட் சபையின் தேசிய கிரிக்கெட் அக்கடமியில் கடமையாற்ற மறுத்ததை அடுத்து, குறித்த பதவிக்கு இலங்கை கிரிக்கெட் அவரை நியமித்துள்ளது. இம்மாதம் 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் மார்ச் மாதம் வரை பதவியில் இருக்கும் படியாக அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுளளது. உலகக்கிண்ணத்தை கருத்திற்கொண்டு இந்த நியமனம் ட்ரவர் பென்னி இற்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மனோதத்துவ நிபுணர் ஜெரமி சினப் 17 நாட்களுக்…

  19. 150வது ஆண்டு விழா - எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ஈடன் கார்டன்ஸ்! கிரிக்கெட் வரலாற்றில் மூன்று மைதானங்கள்தான் மற்ற எல்லா மைதானங்களை விடவும் அதிக அங்கீகாரமும் கவுரவமும் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (எம்.சி.ஜி), இங்கிலாந்தின் லார்ட்ஸ் மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ். இந்தியாவின் பெருமைமிக்க மைதானமான ஈடன் கார்டன்ஸூக்கு இந்த வருடத்தோடு 150 வயது. அதற்குச் சிறப்பு சேர்ப்பதற்காகத்தான் இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள் போட்டி நாளை (வியாழன்) இங்கு நடக்கிறது. மைதானமான பூந்தோட்டம் ஒரு பூந்தோட்டம், ஆடுகளமாக மாற்றப்பட்டதுதான் ஈடன் கார்டன்ஸ். 1836 முதல் 1842 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஆக்லாண்ட் பிரபுவின் தங்கைகள் எமிலி மற்றும் ஃபேனி ஈடன் ஆகிய இருவரும்…

  20. கள நடுவர்கள் 3-வது நடுவருடன் பேசுவதை ரசிகர்கள் கேட்க ஐசிசி அனுமதி கிரிக்கெட் போட்டியின் போது கள நடுவர்கள், 3-வது நடுவரிடம் மேல்முறையீடு செய்யும் போது நடக்கும் உரையாடலை ரசிகர்கள் கேட்க ஐசிசி அனுமதி ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரின் போது, களநடுவர்கள், டிவி நடுவரிடம் தீர்ப்புகளை முறையிடும் போது நடக்கும் உரையாடலை ரசிகர்களும் கேட்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஐசிசி இந்த பரிசோதனைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. டி.ஆர்.எஸ். முறையில் அவுட் தீர்மானம், ஆலோசனைகள் மற்றும் வீரர்கள் 3ஆம் நடுவரிடம் மேல்முறையீடு செய்யும் தருணங்களை இந்தத் தொடரில் ரசிகர்களும் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடுவர் தீர்ப்புகளை பார்வையாளர்களும் புரிந்து…

  21. பேர்த்தில் கிரிக்கட்டில் கலக்கும் நம்மவர்கள்! (படங்கள்) புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் ஏதோ ஒரு விதத்தில் தமது திறமையை வெளிக்காட்டிகொண்டுதான் இருக்கிறார்கள். மேற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளைஞர்கள் ASSeTTS என்னும் அரச சார்பற்ற நிறுவனத்துக்காக கிரிகட் விளையாடி வருகின்றனர். பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் தமிழ் இளைஞர்களின் முயற்சியால் முதல் முறையாக கிரிகட் அணி- ASSeTTS CRICKET CLUB- – உருவாக்கப்பட்டுள்ளது. இக்கிரிக்கட் அணியின் நிருவுனராக கபில் தேவ் இருந்ததோடு , அவரே தற்போதைய அணியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்கள் தற்போது LAST MAN STAND என்னும் சர்வதேச ரீதியிலான சுற்று போட்டி ஒன்றில் விளையாடி வருகிறார்கள். தற்போது மேற்கு…

  22. வேகப்பந்து வீச்சு ஆட்டக்களங்களில் இந்திய வீரர்கள் சமாதானக் கொடியை தூக்கிப் பிடிப்பர்: ஸ்டுவர்ட் கிளார்க் கேலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் தோனி விளையாட முடியாததை அடுத்து இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரில் அக்கறை இல்லை என்ற தொனியில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சாடியுள்ளது. சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஒரு பத்தியில் இந்தியா உலகக் கோப்பையையே எதிர் நோக்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிக நாட்டம் காட்டுவதில்லை என்று அந்தப் பத்தியில் இந்திய அணியைப் பற்றி சாடப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் நடப்பது பிரிஸ்பன் மைதானத்தில், இந்த மைதானம் உலகிலேயே அதிவேக ஆட்டக்களம் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். இதில் 26 ஆண்டுகளுக்கு முன்ப…

  23. தோனியிலிருந்து வேறுபட்டவர் என்பதை காண்பிக்க கோலிக்கு வாய்ப்பு: திராவிட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாகச் செயல்படவுள்ள விராட் கோலிக்கு, தோனியை விட தான் வேறுபட்டவர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் திராவிட் கூறும்போது, “தோனி இல்லாததால் விராட் கோலி தன் கேப்டன்சி தோனியின் பாணியிலிருந்து வேறுபட்டது என்பதை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டியில் அணியை வழி நடத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. விராட் கோலி நிச்சயம் இந்த பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் என்றே நான் கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட், மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரை சற்ற…

  24. கோஹ்லிக்கு 4 வேணாம்.. 3 ஓ.கே... "ஆர்டர்" போடுகிறார் ஸ்ரீகாந்த்! மொஹாலி: விராத் கோஹ்லி தற்போது ஒரு நாள் போட்டிகளில் 4வது இடத்தில் இறங்குகிறார். ஆனால் அவர் 3வது இடத்தில் இறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இங்கிலா்து தொடரில் சொதப்பிய விராத் கோஹ்லி தற்போது இலங்கை தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் கூட அவர் நன்றாகவே ஆடினார். கோஹ்லிக்கு 4 வேணாம்.. 3 ஓ.கே... இந்த நிலையில் கோஹ்லியின் ஆர்டரை மாற்ற வேண்டும். மாற்றினால் அவருக்கும், அணிக்கும் நல்லது என்று ஸ்ரீகாந்த் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில்,இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாக கோஹ்லி உள்ளார். 2009 ம் ஆண்டு ச…

  25. பிரேசில் ‘பார்முலா–1’: ராஸ்பர்க் சாம்பியன் நவம்பர் 10, 2014 , சாவ் பாலோ: பிரேசிலில் நடந்த ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா–1’ கார்பந்தயத்தில், ‘மெர்சிடஸ்’ அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பிரேசிலில் உள்ள சாவ் பாலோ நகரில், நடப்பு ஆண்டின் 18வது சுற்று ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா–1’ கார்பந்தயம் நடந்தது. இதில் பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 32 நிமிடம், 58.710 வினாடிகளில் கடந்த ‘மெர்சிடஸ்’ அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இது, இந்த ஆண்டு இவர் வென்ற 5வது பட்டம். பந்தய துாரத்தை கடக்க, ராஸ்பர்க்கை விட 1.4 வினாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்ட ‘மெர்சிடஸ்’ அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.