விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
2017 இல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ICC Champions Trophy போட்டிகளில் பங்கேற்கவுள்ள அணிகளின் இறுதிப் பட்டியலை இன்று ICC அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் 30 ம் திகதியான இன்றைய நாள் வரையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கின்ற அணிகள் இதற்கு தேர்வாகியிருக்கின்றன. மேற்கிந்திய தீவுகள் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது. Rank Team Points 1 Australia 127 2 India 115 3 South Africa 110 4 New Zealand 109 5 Sri Lanka 103 6 England 100 7 Bangladesh 96 8 Pakistan 90 9 West Indies 88 10 Ireland 49 11 Zimbabwe 45 12 Afghanistan 41 http://www.icc-cricket.com/news/2015/media-releases/89911/teams-confirmed-for-icc-champions-trophy-2017
-
- 1 reply
- 387 views
-
-
22 வருட சாதனையை முறியடிப்பாரா யூனுஸ்கான் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி தொடர் அபூதாபியில் இன்று ஆமை்பமாகிறது. இந்த தொடரின் 3 போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்த போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் யூனுஸ்கான் மேலும் 19 ஓட்டங்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை கடந்த 22 ஆண்டுகளாக தக்க வைத்து இருக்கும் முன்னாள் தலைவர் ஜாவித் மியாண்டட் (124…
-
- 0 replies
- 314 views
-
-
எட்டு அணிகள் இடையிலான 4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், டி.என்.பி.எல். போட்டியின் மூலம் இளம் வீரர்களின் திறமை மேம்பட்டு வருகிறது. மலிங்கா போல் பந்து வீசும் வீரரை நாங்கள் எங்கள் அணிக்கு எடுத்துள்ளோம். அவரது பெயர் பெரியசாமி. 2-வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் அவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பயிற்சியின் போது அவர் பந்து வீசிய விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேட்கிறீர்கள். எங்கள் அணிக்கு த…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தாதது ஏன்? இந்தியர்கள் ஏன் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தவில்லை. நமது காலத்தில் இதுதான் விளங்காத மர்மமாக இருக்கிறது. எப்போதாவது இந்திய அணி வெற்றி பெறுவதை நான் குறிப்பிடவில்லை. நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பற்றி கூறுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் ஆஸ்திரேலியா கோலோச்சியது. அதுபோல் இந்திய அணியால் முடியாதது ஏன்?. உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் உள்ள நாடுதான் இந்தியா. அதனால் பணத்துக்குப் பிரச்சினையில்லை. பண விஷயத்தில் நாம் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறோம். மற்ற அணிகள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அந்த வகையில் ஐபிஎல் போட்டிகள் லாபகரமானதாக உள்ளன. ஆனால், இந்தியாவின் செல்வாக்கு …
-
- 0 replies
- 262 views
-
-
சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியின் முகாமைத்துவம் நடத்தியுள்ள விதம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் அந்த அணியில் அஸ்வின் இடம்பெறவேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அஸ்வின் நிச்சயமாக இடம்பெறவேண்டிய வீரர் ஆனால் அணி முகாமைத்துவம் அஸ்வினை உரிய முறையில் நடத்தாதன் காரணமாக அவர் சிறப்பாக பந்து வீசுவதற்கு சிறிது சிரமப்படுகின்றார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தன்னை சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கை உள்ளது என அஸ்வின் உணரும் நிலையை ஏற்படுத்தவேண்டும்,என தெரிவித்துள்ள சுனில்கவாஸ்கர் நீங்கள் தொடர்ந்தும் புறக்கணி;க்கப்பட்டால் நீங்கள் உங்களை நிருபிப்பதற்காக மேலும் …
-
- 2 replies
- 879 views
-
-
ராகுல் டிராவிட்டின் தயாரிப்பு : அடுத்த தோனி வங்கதேசத்தில் இருக்கிறார்! இளையோர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம். அபாரமான விக்கெட் கீப்பிங் திறமை... என தோனியின் கலவையாகத் தெரிகிறார் ரிசாப் பன்ட். அதிரடி வீரர் கில்கிரிஸ்ட்தான் நம்ம ரிசப்பிற்கும் ரோல் மாடல். அதிரடியிலும் அவரை போல்தான் என்பதை நேபாளத்திற்கு எதிராக பின்னி பிடலெடுத்தை பார்த்த போதே தெரிந்தது. நேபாளத்திற்கு எதிராக 24 பந்துகளில் 78 ரன்களை விளாசிய இந்த பன்ட் யார்? இளையோர் உலகக் கோப்பையின் விளையாடும் இந்திய அணியின் துணை கேப்டன்தான் இந்த பன்ட். இடது கை ஆட்டக்காரர். கூடவே விக்கெட் கீப்பர் என களத்தில் இரு கடினமான பணிகள். நமக்கு தோனியாக பன்ட் தெரிந்தாலும் அவருக்கு ஹீரோ கில்கிறிஸ்ட்தான். முதல் பந…
-
- 0 replies
- 594 views
-
-
ஐபிஎல்: டெல்லி டேர் டெவில்ஸ் அறிவுரையாளராக திராவிட் நியமனம் ராகுல் திராவிட். | வி.ஸ்ரீநிவாச மூர்த்தி. இந்திய அண்டர் 19 அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற ராகுல் திராவிட், டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் சிறப்பு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவருடன் ராகுல் திராவிட் தற்போது இணைந்து பணியாற்றவிருக்கிறார். முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பிரவீண் ஆம்ரே (பேட்டிங் பயிற்சியாளர்கள்), முன்னாள் தமிழக வீரரும் டெல்லி அணியின் பவுலிங் ஆலோசகருமான டி.ஏ.சேகர் ஆகியோருடன் திராவிட் இணைந்து பணியாற்றவிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அண…
-
- 0 replies
- 309 views
-
-
ரியோ ஒலிம்பிக் தீபச் சுடர் ஓட்டம் வியாழனன்று ஆரம்பம் ரியோ டி ஜெனெய்ரோவில் 2016 ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 31ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான தீபச் சுடர், ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் அமைந்துள்ள ஹேரா பெண் கடவுளரின் கோவில் முன்றலில் வியாழனன்று வைபவரீதியாக ஏற்றப்படவுள்ளது. பண்டைய ஒலிம்பிக் மற்றும் நவீன ஒலிம்பிக் ஆகியவற்றின் சம்பிராதயங்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வைபவத்தின்போது ஹேரா என்ற பெண் கடவுளரின் பாத்திரத்தை ஏற்கவுள்ள கிரேக்க நடிகை கெத்தரினா லேஹூ தீபச் சுடரை ஏற்றவுள்ளார். இந்தச் சுடர் சூரிய கதிர்களிலிருந்து பரவளைய ஆடியைக் கொண்டு இயற்கையாக பற…
-
- 1 reply
- 569 views
-
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக டொனல்ட் 2016-04-28 12:16:04 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அலன் டொனல்ட் நியமிக்கப்படவுள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரே லிய கிரிக்கெட் விஜயத்தை முன் னிட்டு குறுகியகால அடிப்படையில் அலன் டொனல்டை பந்துவீச்சுப் பயிற்றுநராக நியமிக்க கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா எண்ணியுள்ளது. தென் ஆபிரிக்காவுடனான ஒப்பந்தம் நீடிக்கப்படாதது எவ்வளவு தவறானது என்பதை அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக நிய மிக்கப்பட்ட பின்னர்…
-
- 1 reply
- 546 views
-
-
இங்கிலாந்தின் தலைவியாக ஹீதர் நைட் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்குமான தலைவியாக ஹீதர் நைட்டை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. கடந்த மே மாதம், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த சார்லோட் எட்வேர்ட்ஸையே நைட் பிறையீடு செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி, பாகிஸ்தான் அணிக்கெதிராக ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரே, இங்கிலாந்து அணியின் தலைவியாக, நைட்டின் முதலாவது தொடராக அமையவுள்ளது. 2010ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட வலதுகைத் துடுப்பாட்டவீரரான நைட், சுழற்பந்துவீச்சையும் மேற்கொள்ளக் கூடியவருமாவார். இதுவரையில், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் 55…
-
- 0 replies
- 443 views
-
-
இரு வேறு கலாசாரங்கள் சந்தித்த ஒலிம்பிக் கடற்கரை கரப்பந்தாட்டம்; ஹிஜாப் அணிந்து களமிறங்கினார் எகிப்தின் தோவா எல்போபஷி பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் நடைபெறும் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் கடற்கரை கரப்பந்தாட்டப் (பீச்வொலிபோல்) போட்டி யொன்றில் எகிப்திய, ஜேர்மனிய அணிகளுக்கு இடையிலான சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தோவா எல்போபஷி, நடா மீவாட் இவ்விரு அணியினரும் முற்றிலும் மாறுபட்ட வகையிலான ஆடைகளுடன் இப்போட்டியில் மோதினர். பொதுவாக கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டி களில் விளையாடும் வீராங்கனைகள் பிகினி எனும் நீச்சலுடையுடனே விளையாடுவர். ஆனால் எகிப்திய வீராங்கனை களான தோவா எல்போபஷியும் …
-
- 0 replies
- 410 views
-
-
ஒலிம்பிக் பாட்மிண்டன்: நெ.2 வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம் காலிறுதிப் போட்டியில் சிந்து | படம்: ஏஎப்பி உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீனாவின் வாங் யிகானை கடுமையாகப் போராடி வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார் 21 வயது இளம் வீராங்கனை சிந்து. மிகுந்த பரபரப்புடன் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக…
-
- 0 replies
- 359 views
-
-
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங் களில் பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள் வெற்றிபெற்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2018-ம் ஆண்டு நடை பெற உள்ளன. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. இதில் ஆம்ஸ் டர்டாம் நகரில் நேற்று முன்தினம் நடந்த ‘ஏ’ பிரிவு தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து பிரான்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. பிரான்ஸ் அணிக்காக முன்னணி வீரர் பால் போக்பா கோல் அடித் தார். ‘ஹெச்’ பிரிவில் நடந்த போட் டியில் பெல்ஜியம் அணி 6-0 என்ற கோல்கணக்கில் கிப்ரா…
-
- 0 replies
- 200 views
-
-
முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதத்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று தான் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். …
-
- 0 replies
- 406 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் - இந்தியா அணிகள் மோதும் சுதந்திரக் கிண்ணத் தொடர் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகள் மோதும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் வருடம் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதத்திரக்கிண்ணம் “ என்ற பெயரில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை கிரிக்கெட்த் தொடர் இடம்பெறவுள்ளது. பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் இ…
-
- 0 replies
- 325 views
-
-
மெஸ்ஸிக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை! அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியை, நான்கு போட்டிகளில் விளையாட பிஃபா தடை விதித்துள்ளது. கால்பந்து உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்றுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அர்ஜென்டினா, சிலி அணிகள் கடந்த வாரம் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மோதின. இந்தப் போட்டியின்போது, அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸிக்கும், போட்டி நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பிஃபா விசாரணை நடத்தியது. அப்போது, போட்டியின்போது துணை நடுவர் ஒருவரை மெஸ்ஸி மரியாதைக் குறைவாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அடுத்து நடக்க உள்ள நான்கு உலகக் கோப்பை தகுதி போட்டிகளில் விளையாட பிஃபா தடை…
-
- 2 replies
- 341 views
-
-
மகளிர் உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம் : 8 நாடுகள் களத்தில் 11ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது. தொடக்க நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கை, நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முப்பது தினங்கள் நீடிக்கவுள்ள மகளிர் உலகக…
-
- 3 replies
- 1.2k views
-
-
பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் சிந்திய வீனஸ் வில்லியம்ஸ்! டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய கார் விபத்துகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளால் நிலைகுலைந்த வீனஸ், கண்ணீர்விட்டு அழுதார். அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய விபத்தால், கடும் சிக்கலில் உள்ளார். கடந்த மாதம் 9-ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரின்மீது மோதியுள்ளார். இந்த விபத்தில், அந்த காரில் பயணித்த 74 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் இறந்துவிட்டார். அதனால், பிரச்னை தீவிரமடைந்தது. இந்நிலையில், நேற்று வீனஸ் வ…
-
- 0 replies
- 354 views
-
-
மும்பையும் கைவிடுகிறதா.? 2018ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மலிங்க இடம்பெறுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தனக்காக விளையாடிய மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும், இதுதவிர ஒரு வீரரை Right To Match என்ற அடிப்படையில் தக்க வைக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா மற்றும் பாண்ட்யா சகோதரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடங்கிய காலத்திலிருந்தே மும்பை அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் லசித் மல…
-
- 0 replies
- 449 views
-
-
இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சியளிக்கவுள்ளது. இதுதவிர இந்தியாவும், பிரேசிலும் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பிரேஸிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனசியோ லுலா டிசில்வாவை அவர் சந்தித்து பேசினார். இருதரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. அமைப்பை சீர்திருத்த வேண்டும். தற்போதைய உலக சூழ்நிலைகளுக்கேற்ப ஐ.நாவின் செயல்பாடுகள் அமைய வேண்டியது அவசியம். இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இனியாவது நிறுத்துங்கள் அரசியல் விளையாட்டை! நாங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை. கிரிக்கெட் விளையாடுவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் தாயகம் திரும்புகிறபோது எங்களின் கிரிக்கெட் ஆட்டத்தாலும், செயல்களாலும் இங்குள்ள மக்களின் மனங்களை கவர்ந்து செல்வோம். இங்கே எங்களுடைய வீரர்களுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை அழிக்க நாங்கள் விரும்பவில்லை. இப்படி மிக அழகாக முதிர்ச்சியோடு பேசியிருப்பவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வரும் லாகூர் லயன்ஸ் அணியின் கேப்டனுமான முகமது ஹபீஸ்தான். விளையாட்டில் அரசியலை கலக்காதீர்கள். பிரச்சினை என்பது இரு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இடையில்தான். வ…
-
- 0 replies
- 531 views
-
-
2018 கால்பந்து உலகக்கோப்பை: இன்சுலின் பையுடன் பயணித்த வீரர் ஹீரோவான கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் இரண்டாவது நாளான ஜூன் 15ஆம் தேதியன்று நடைபெற்ற மூன்று ஆட்டங்களும் ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவை. அதில், உலகெங்கிலும் கால்பந்து ரசிகர்களுக்கு போர்ச்சுகல் மற்ற…
-
- 0 replies
- 407 views
-
-
டிஎன்பிஎல் 2018- வலது கையாலும், இடது கையாலும் பந்து வீசி அசத்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தினார். #TNPL2018 #KV தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 22-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கா…
-
- 1 reply
- 447 views
-
-
கிரிக்கெட் வாழ்வின் முடிவை நெருங்கும் ஹேரத் ரங்கன ஹேரத்தின் கடந்த ஒரு தசாப்த கால சாகச கதை முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களுக்கும் அச்சுறுத்தல் கொடுத்த பந்துவீச்சாளராகவே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது கடைசி தொடருக்கு முந்திய போட்டிகளிலும் கூட அவரது அச்சுறுத்தல் பந்துவீச்சு தொடர்கிறது. இந்த ஆண்டு கடைசியில் இங்கிலாந்துடனான போட்டிகளோடு அவர் ஓய்வு பெறுவதற்கு காத்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்றதன் பின்னர் ரங்கன ஹேரத் இலங்கையின் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக பொறுப்பேற்றது ரோலர் கொஸ்டரில் செல்வது போல சவால் மிக்கதாக இருந்தது. …
-
- 0 replies
- 402 views
-
-
சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பெருங்குடல் மற்றும் கல்லீரல் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஹீத் ஸ்ட்ரீக்கின் மனைவி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,”இன்று அதிகாலையில், செப்டம்பர் 3, 2023 ஞாயிற்றுக்கிழமை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அன்பு மற்றும…
-
- 1 reply
- 241 views
- 1 follower
-