விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
நட்சத்திர பராஒலிம்பிக் வீரர் டேவிட் வியர் (David Weir ) ஓய்வு பிரித்தானியாவின் நட்சத்திர பராஒலிம்பிக் வீரர் டேவிட் வியர் (David Weir) போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். 38 வயதான சக்கர நாற்காலி ஓட்டவீரர் டேவிட் வியர் ஆறு தடவைகள் பரா ஒலிம்பிக் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு லண்டன் பரா ஒலிம்பிக் போட்டி மறக்க முடியாத ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயிரக் கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் தமது பெயரை உச்சரித்து ஊக்கப்படுத்தியமை மரணிக்கும் தருணம் வரையில் நினைவிலிருந்து நீங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2012ம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் …
-
- 0 replies
- 284 views
-
-
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி! தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. சென்சூரியனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 327 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 123 ஓட்டங்களையும்…
-
- 0 replies
- 283 views
-
-
பிரேசிலில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடக்க உள்ளது. இப்போட்டி தொடருக்கான வெற்றிப் பரிசு தொகையை அதிகரித்துள்ளதாக சர்வதேச கால்பந்து சமேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:- கடந்த 2010ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 420 மில்லியன் டொலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த முறை இந்த பரிசுத்தொகையை 61 சதவீதம் அதிகரித்து 576 மில்லியன் டொலர் வழங்கப்பட உள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 35 மில்லியன் டொலர்களும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 25 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும். மேலும் பங்கு பெறும் 32 அணிகளுக்கும் தலா 1 மில்லியன் டொலருக்கும் மேலாக கிடைக்கும் …
-
- 1 reply
- 653 views
-
-
2019 உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதிபெற இலங்கைக்கு இறுதி வாய்ப்பு இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி பகலிரவுப் போட்டியாக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற வேண்டுமாயின் இந்திய அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் குறைந்தது இரண்டில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் 2019இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரடி தகுதியை…
-
- 0 replies
- 234 views
-
-
என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது | இந்துகாதேவி February 15, 2022 இந்துகாதேவி என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இந்துகாதேவி கணேஷ் அவர்களுடனான நேர்காணல்…. நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ் “பெண்கள் அதிகம் இத் துறையைத் தெரிவு செய்வதில்லை இருப்பினும் நான் இத் துறையைத் தெரிவு செய்தால், அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்ற ரீதியிலே இத் துறையை தெரிவு செய்திருந்தேன்.” கேள்வி : உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றினை வழங்க முடியுமா? பதில் : என்னுடைய பெயர் இந்துகாதேவி கணேஷ். என்னுட…
-
- 0 replies
- 437 views
-
-
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி! செய்திகள் விளையாட்டு ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்ற ஆஸி. அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நியூஸிலாந்தில் ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஆக்லாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழ்வா, சாவா ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸி. அணியை கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நிலையில் இந்திய அணி எதிா்கொண்டது. நாணய சுழற்சியை வென்ற ஆஸி. அணி களத்தடுப்பை தோ்வு செய்தது. நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் இந்தியா 277/7 ஓட்டங்களை குவித்தது. ஆஸி. தரப்பில் டாா்ஸி பிரவுன் 3, அலனா…
-
- 1 reply
- 323 views
-
-
ரங்கன ஹேரத் குறித்த உலக பிரபலங்களின் ஒரு பார்வை அண்மைய நாட்களில் எப்போதும் தோல்விகளையே பார்த்து துவண்டு போன இலங்கை அணியின் இரசிகர்களுக்கு, பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் கிடைத்த த்ரில்லர் வெற்றி உற்சாகத்தையும், அணி மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது. இலங்கையின் இந்த வெற்றி மூலம் அனைத்து இரசிகர்களும் களிப்புற்று வரும் இத்தருணத்தில் இலங்கை அணிக்கும், இலங்கையின் வெற்றிக்கு பெரும்பங்காற்றிய சுழல்…
-
- 1 reply
- 443 views
-
-
உலகக் கோப்பையில் அமெரிக்கா இல்லை: டிரினிடாட் அண்ட் டுபாக்கோவிடம் தோற்றதால் வாய்ப்பை இழந்தது உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் அமெரிக்க அணி, கடைசி ஆட்டத்தில் டிரினிடாட் அண்ட் டுபாக்கோ அணியிடம் தோற்றதால் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தது. வாஷிங்டன்: ரஷ்யாவில் அடுத்த ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கான பிரிவில் மொத்தம் 35 அணிகள் விளை…
-
- 0 replies
- 301 views
-
-
ஈழத்தமிழ் இளைஞர்கள் மூவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இம் மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை ஈட்டி தாய் நாட்டிற்கு பெருமை தேடிக்கொடுத்துவருகின்றார்கள். 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ணப் போட்டியில் கனடாவில் வசிக்கின்ற ஈழத்தமிழர் இளைஞர்கள் மூவர் கனேடிய அணி சார்பில் போட்டியில் ஈடுபட இருக்கின்றனர். காவியன் நரேஸ், சாமுவேல் கிரிசான் மற்றும் ஏரன் பத்மநாதன் ஆகிய மூன்று வீரர்களுமே களமிறங்கவுள்ளனர்.காவியன் நரேஸ் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் சாமுவேல் கிரிசான் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவு…
-
- 0 replies
- 405 views
-
-
கட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி புதிய உலக சாதனை கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில், அணியொன்றினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக நேபாள கட்புலனற்றோர் அணியுடன் இன்று (13) நடைபெற்ற லீக் போட்டியில் 494 ஓட்டங்களைப் பதிவுசெய்த இலங்கை அணி புதிய உலக சாதனை படைத்தது. கட்புலனற்றோருக்கான 40 ஓவர்கள் கொண்ட 5 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் டுபாய் மற்றும் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகின்றன. டுபாயின் அஜ்மான் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 10 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சந்தன தேஷப…
-
- 0 replies
- 251 views
-
-
ஃபிஃபாவின் தடையால் இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு? ஜானவி மூலே பிபிசி மராத்தி 17 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,INDRANIL MUKHERJEE/AFP படக்குறிப்பு, ஃபிஃபாவின் இடைநீக்க நடவடிக்கையால் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. "உலக கோப்பைக்காக நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் அணியில் இடம் பெறவில்லை, ஆனால் விளையாட்டுகளைப் பார்க்கப் போகிறேன். உலக கோப்பையை நடத்துவது நம் நாட்டிற்கு ஒரு பெரிய கெளரவம். ஆனால் இப்போது அது நடக்காது என்ற நிலை வந்திருப்பது என்னை வ…
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார் : சங்கா இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரியொருவர் நான் அணித் தலைவராக செயற்பட்ட காலம் முதல் தனிப்பட்ட முன்விரோதம் மற்றும் பழிவாங்கல் காரணமாக என்னை தொந்தரவு செய்துவருவதாக இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 தொடரில் உள்ளூர் அணிக்காக விளையாடாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட லசித் மலிங்க எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்துள்ளமை மூலம் இது தெளிவாக புலப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த முறை, iஹாராபாத் அணிக்காக விiளாயட விரும்பிய போதிலும் தன்னுடைய விடயத்தில் கிரிக்கெட் சபையின் ஒரு அதிகார…
-
- 0 replies
- 341 views
-
-
அரையிறுதியில் யுனைட்டெட், டொட்டென்ஹாம் இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு மன்செஸ்டர் யுனைட்டெட்டும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் தகுதிபெற்றுள்ளன. இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இத்தொடரில், தமது காலிறுதிப் போட்டிகளில் முறையே பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன், சுவான்சீ சிற்றி ஆகியவற்றை வென்றே மன்செஸ்டர் யுனைட்டெட்டும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் அரையிறுதிப் போட்டிக்களுக்குத் தகுதிபெற்றுள்ளன. தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் 37ஆவது நிமிடத்தில் நெமஞா மட்டிக்கின் உதையை றொமேலு லுக்காக்கு கோலாக்க முன்னிலை பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெ…
-
- 0 replies
- 365 views
-
-
மக்கள் அபிமான வீரராக மீண்டும் சங்கக்கார, அதிசிறந்த வீரராக மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் விருது விழாவில் வருடத்தின் அதி சிறந்த வீரர் விருதை ஏஞ்சலோ மெத்தியூஸ் வென்றெடுத்த அதேவேளை மக்கள் அபிமான வீரர் விருதை குமார் சங்கக்கார மூன்றாவது தடவையாக வென்றெடுத்தார். டயலொக் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விருது விழா பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நேற்று இரவு கோலாகலமாக நடத்தப்பட்டது. இதில் மெத்தியூஸ் அதி சிறந்த சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட வீரர் விருதையும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதி சிறந்த சகலதுறை வீரருக்கான விருதையும் வென்றெடுத்தார். லசித் மாலிங்க அதிசிறந்த சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் பந்துவீச…
-
- 1 reply
- 481 views
-
-
ஒரே பந்தில் 16 ரன்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்: எப்படி சாத்தியமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பேஷ் தொடரில் தனித்துவமான சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் ஒரே பந்தில் 16 ரன்களை விளாசியுள்ளார். இது நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் நடந்திருக்கிறது. ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் இந்த அரிதான சாதனை படைக்கப்பட்டுள்ளது. பும்ரா, ஷமியை விஞ்சி இந்தியாவின் பிரமாஸ்திரமாகிறாரா முகமது சிராஜ்?16 ஜனவரி 2023 அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி10 ஜனவரி …
-
- 0 replies
- 585 views
- 1 follower
-
-
கூடைப்பந்தாட்ட வரலாற்றில் லெப்ரொன் ஜேம்ஸ் சாதனை By DIGITAL DESK 5 09 FEB, 2023 | 03:37 PM (என்.வீ.ஏ.) ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்றுவரும் தேசிய கூடைப்பந்தாட்ட சங்க (NBA) போட்டி வரலாற்றில் அதிக புள்ளிகளைப் புகுத்தியவர் என்ற கரீம் அப்துல்-ஜபாரின் 38 வருட சாதனையை லேப்ரொன் ஜேம்ஸ் முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். ஓக்லஹோமா சிட்டி தண்டர் அணியிடம் லொஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் அணி 130 - 133 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லொஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் கூடைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான ஜேம்ஸ் (38 வயது), தோல்விக்கு மத்தியிலும் 38 புள்ளிகளைப் பெற் று கரீம் அப்துல்-ஜபாரின் …
-
- 0 replies
- 516 views
- 1 follower
-
-
சம்பியனானது டில்கோ கொன்கியூறோஸ் டில்கோ கொன்கியூறோஸ் அணியின் அல்பேர்ட் தனேஸ் அதிரடியாகவும் சிறப்பாகவும் செயற்பட்டு இரண்டு கோல்களைப் பெற வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின் முதலாவது பருவகாலத்தின் சம்பியன்களாக டில்கோ கொன்கியூறோஸ் அணி முடிசூடிக் கொண்டது. இத்தொடரின் தகுதிச் சுற்றின் முதலாவது போட்டியில், டில்கோ அணி, கிளியூர் கிங்ஸ் அணியை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இரண்டாவது போட்டியில் வல்வை கால்பந்தாட்டக் கழக அணி, மன்னார் கால்பந்தாட்டக் கழக அணியை வென்றது. இரண்டாவது இறுதிப் போட்டி அணியை தீர்மானிக்கும் மற்றுமொரு போட்டியில் கிளியூர் அணியை எதிர்த்து வல்வை அணி மோதியது. இதில் கிளியூர் அணி வெற்றிபெற்றது. டில்கோ, கிளியூர் அணிக…
-
- 0 replies
- 622 views
-
-
ஆதிக்கம் செலுத்தி அரையிறுதி வாய்ப்புப் பெற்ற நான்கு அணிகள்: உலகக்கிண்ணம் 2015 மூன்றே மூன்று போட்டிகள் மீதமாக இருக்க, 11ஆவது உலகக்கிண்ணத்தின் வெற்றியாளர் யார் என்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். பரபரப்பான முதற்சுற்று போட்டிகள் - 42. முதற்சுற்றுப் போட்டிகளில் இருந்த பரபரப்பு, போட்டித் தன்மை ஆகியன முற்றுமுழுதாக வடிந்தது போல, வென்ற அணிகள் மிக இலகுவாக வென்றதாக அமைந்து ரசிகர்களை ஓரளவு ஏமாற்றியிருந்தன நான்கு காலிறுதிப் போட்டிகளும். முன்னைய கட்டுரையில் நான் எதிர்வு கூறியதைப் போல, கிரிக்கெட் விற்பன்னர்கள் பலரும் எதிர்பார்த்ததைப் போல, தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் சர்வதேசத் தரப்படுத்தலில் முதல் நான்கு இடத்திலும் உள்ள நான்கு அ…
-
- 1 reply
- 640 views
-
-
இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பெறாததற்குக் காரணம் கேப்டன் தோனியே என்று ஏற்கெனவே கடுமையாகப் பேசி சர்ச்சையைக் கிளப்பிய யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங், மீண்டும் தோனி மீது பாய்ந்துள்ளார். இந்தி செய்தி சானல் ஒன்றிற்கு பேட்டி அளித்த யோக்ராஜ் சிங், “தோனி ஒன்றுமில்லாதவர், அவர் ஒன்றுமேயில்லை. ஊடகங்களினால் அவர் கிரிக்கெட் கடவுள் ஆகியிருக்கிறார். ஊடகங்கள் அவரை மிகப்பெரிய வீரர் என்று ஊதிப் பெருக்கியது, ஆனால் இத்தகைய பெருமைக்கு அவர் தகுதியானவர் அல்ல. அவர் ஒன்றுமே இல்லாத காலங்கள் இருந்தன, ஆனால் இன்று ஊடகங்களின் முன்னால் அமர்ந்து ஊடக நிருபர்களையே கேலியும் கிண்டலும் செய்கிறார். அவருக்கு துதிபாடிய ஒரு பத்திரிகையாளரையே கேலி செய்கிறார். அவர் ஒரு ரன் எடுத்தால் கைதட்டும் இந்திய ரசிகர்…
-
- 4 replies
- 893 views
-
-
பிரேசில் கால்பந்து வீரர் ககா ரூ. 635 கோடிக்கு ஒப்பந்தம்? [24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ககா. இவர் இத்தாலியில் உள்ள ஏ.சி.மிலன் கழகத்துக்காக விளையாடி வருகிறார். 2011 ஆம் ஆண்டு வரை அவரது ஒப்பந்தம் அந்தக் கழகத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள ரியல் மாட்ரிட் கழகம் ககாவை தங்கள் கழகத்தில் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. இதற்காக ரூ.635 கோடி தர இருப்பதாக அந்த கழகம் அறிவித்துள்ளது. மிலன்கழகத்தில் இருந்து ரியல் மாட்ரிட் கழகத்துக்கு மாறுவது குறித்து ககா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ரியல் மாட்ரிட் கழகத்தின் ஒப்பந்தத்தில் ககா கையெழுத்திட்டால் கால்பந்து வரலாற்றில் அதிகமான பணம் பெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹர்திக் பாண்டியா – கேஎல் ராகுல் மீதான தடை நீக்கம்: January 25, 2019 இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. குறித்த இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்ததனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவர்கள் மீது தடை விதித்திருந்தது. இதனையடுத்து அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பியிருந்ததுடன் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதா…
-
- 0 replies
- 346 views
-
-
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: காலிறுதியில் ஜூவாலா கட்டா ஜோடி! இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இரட்டையர் போட்டியில், இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி, காலியிறுதிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோரும் காலிறுதிக்கு சென்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி ஜோடி, ஜப்பானின் ரேய்கா- மியாகி ஜோடியை எதிர்த்து விளையாடியது. முதல் சுற்றை 21-15 என்ற செட்கணக்கில் வென்ற கட்டா ஜோடி, இரண்டாவது செட்டை 18-21 என்ற செட்டில் இழந்தது. இதைத் தொடர்ந்து சுதாரித்து விளையாடி இந்திய ஜோடி, 3வது செட்டை 21-19 என்று கைப்பற்றி காலியிறுத்திக்கு முன்னேறியது. முன்னதாக நடைபெற்ற…
-
- 0 replies
- 337 views
-
-
பங்களாதேஷ் தொடரிலிருந்து பற் கம்மின்ஸ் வெளியேற்றம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு பயணமாகும் அவுஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பற் கம்மின்ஸ் விலகியுள்ளார். மறுபடியும் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காயம் காரணமாகவே இவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜேம்ஸ் போக்னர் அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றுள்ளார். போக்னர் இதுவரையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிதாக ஏற்பட்டுள்ள காயம் கம்மின்சுக்கு பாரிய பின்னடைவாக காணப்படுகிறது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக 18 வயதில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டபோதும், அதன் பின் முதுகு மற்றும் கால் காயங்களால் அவதிப்படும் கம்மின்ஸ் அதற்கு பி…
-
- 2 replies
- 371 views
-
-
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு எல்.பி.டபிள்யூ கொடுக்க மறுத்த நடுவர் வினீத் குல்கர்னி மேல் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ஐ.சி.சி) புகார் செய்துள்ளது. இந்திய தென்ஆபிரிக்க அணிகள் மோதிய ‘ருவென்ரி 20’ போட்டியில் இந்தியா 02 என தொடரை இழந்தது. இதற்கு நடுவர் வினீத் குல்கர்னியின் மோசமான முடிவுதான் காரணமாக அமைந்துவிட்டது. தர்மசாலாவில் நடந்த முதல் ருவென்ரி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா முதலில் விளையாடி 199 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு டுமினியின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப்போட்டியில் அவர் அக்சார் பட்டேல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால், நடுவர்…
-
- 2 replies
- 286 views
-
-
இன்று இலங்கை வருகிறார் சகலதுறை ஆட்டக்காரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் என்று போற்றப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இன்று இலங்கை வருகிறார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், சோர்பஸ் – திஸேரா போட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி காலியில் நடந்து முடிந்தது. இதன் இரண்டாவது போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தப்போட்டியை பார்வையிடுவதற்கே சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கைக்கு வருகைதருகிறார் என்று…
-
- 0 replies
- 358 views
-