விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன்: உதவிபுரிந்த சகலருக்கும் தலை வணங்குகின்றேன்: மஹேல *உதவியஅனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கின்றேன்.. *கடினமான நேரத்தில் சரியான தீர்மானம் *நல்ல மனிதர்களில் நண்பன் குமார் சங்கக்காரவும் ஒருவர் *தொப்பிக்கு வீட்டில் ஓர் இடம்! *உலக கிண்ணத்துக்கு தயாராக வேண்டும் *கடந்த வந்த பாதையும் சாதனைகளும் *அரசியலுக்குள் பிரவேசித்தால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன் மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன. எனக்கு பல வழிகளிலும் உதவி ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், மனைவி, எனது கிரிக்கெட் ரசிகர்கள், இலங்கை கிரிக்கெட் சபை, எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கழகம், பாடசாலை, பாடசாலை நண்பர்கள், பயிற்சியாளர்…
-
- 2 replies
- 747 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் 4 ஆம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெற்றுக் கொண்ட வெற்றியையடுத்து இலங்கையணி டெஸ்ட் தரவரிசையில் 04 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து 04 ஆம் இடத்திலிருந்த பாகிஸ்தான் அணியின் 6 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலிலேயே இத் தகவல் வெளியிட்டுள்ளது. தென்னாபிரிக்க அணி முதலாம் இடத்திலும், அவுஸ்ரேலியா 2 ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணி 03 ஆம் இடத்திலும் இந்திய அணி 05 ஆம் இடத்திலும் உள்ளன. இதேவேளை, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் இலங்கையணியின் அஞ்சலோ மெத்தியூஸ் 5 ஆம் இடத்திலிருந்து 03 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்…
-
- 2 replies
- 547 views
-
-
பாக்.கிற்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிப்பு பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை 15 பேர்கொண்ட வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையல் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டி 23 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையிலும் 2 ஆவது போட்டி 27 ஆம் திகதி கொழும்பில் பகலிரவு போட்டியாகவும் 3 ஆவது போட்டி 30 திகதி தம்புள்ளையிலும் இடம்பெறவுள்ளன. அஞ்சலோ மெத்தியூஸ் அணித் தலைவராக செயற்படுகின்றார். உபதலைவராக லகிரு திரிமன்னே கடமையாற்றுகின்றார். திலகரட்ண டில்சான், உபுல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, தினேஸ் சண்டிமல், அசான் பி…
-
- 0 replies
- 462 views
-
-
சென்ற வாரம் நடைபெற்ற ஜரோப்பிய தடகளப் போட்டியில் சுவிஸ் நாட்டிற்காக ஒரு தமிழர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்றுள்ளார். இறுதிச் சுற்றில் சில விநாடிகளால் 3ஆம் இடத்தை நழுவிட்டுள்ளார்கள். http://www.youtube.com/watch?v=RMqSS0ZlPFQ
-
- 2 replies
- 577 views
-
-
இலங்கை அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி மஹேலவை வழியனுப்பியது பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2-0 என தொடரை தன் வசமாக்கியது. இதன்மூலம் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் முன்னாள் அணித் தலைவருமான மஹேல ஜெயவர்தனவுக்கு சிறந்ததொரு பிரியாவிடை வழியனுப்புதலையும் இலங்கை அணி அளித்துள்ளது. இங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்…
-
- 0 replies
- 787 views
-
-
மஹேலவை கட்டுப்படுத்த வேண்டும்: மிஸ்பா ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014 இலங்கை கிரிக்கெட் அணியின் மஹேல ஜெயவர்தெனவின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தினாலேயே இலங்கை அணியை வெற்றி பெற முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த வேளையில் பாகிஸ்தான் கராச்சியில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கையில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் அவர்களின் துடுப்பாட்ட வீரர்களை முழுமையாக கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். அதில் முக்கியமானவர் மஹேல ஜெயவர்தென. அவர் மீது எனக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் கிரிக்கெட்டில் நல்ல சாதனைகளை செய்துள்ள ஒருவர். ஆனால் நாங்கள் அங்கே வெல்வதற்…
-
- 25 replies
- 1.4k views
-
-
முதல் டெஸ்ட்: முரளி விஜய் சதம் ஜூலை 09, 2014.நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முரளி விஜய், சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாட்டிங்காமில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் சீனியர் வீரர் காம்பிர், ரோகித் சர்மா இடம்பெறவில்லை. ஸ்டூவர்ட் பின்னி அறிமுக வாய்ப்பு பெற்றார். விஜய் அசத்தல்: இந்திய அணிக்கு முரளி விஜய், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் முரளி விஜய் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். தவான் (12) ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெளியேறினார். இதன் பின் வ…
-
- 36 replies
- 2.7k views
-
-
எனக்கு சாந்தியைத் தெரியாது! விஜய் விக்கி “தன் வீட்டில் தொலைக்காட்சி வசதி இல்லாத செளந்திரராஜன், ஊரில் வழக்கமாகத் தொலைக்காட்சி பார்க்கும் அந்த வீட்டின் வாசலில் மறுகியபடி நின்றிருந்தார். மிகுந்த தயக்கத்திற்குப் பின் அங்கு நாடகம் பார்த்துக்கொண்டிருந்த வீட்டுக்காரரிடம் ‘எம்மக இன்னைக்கு ஓட்டப்பந்தயம் ஓடுறா, டிவி’ல காட்டுவாகளாம்… ஒரு அஞ்சு நிமிஷம் பாக்கனும்பா…’ என்றதும் சீரியல் பார்த்த பொதுஜனங்கள் கோபத்தில் சீறத்தொடங்கினார்கள். யாரோ ஒரு நல்ல மனிதரின் கரிசனத்தின் விளைவால், பலபேரின் ‘உச்’களுக்கு மத்தியில் விளையாட்டு சேனல் மாற்றப்பட்டது. சில நிமிடங்களில் தன் மகள் ஓடும் அந்தப் போட்டி திரையில் பளிச்சிட்டது. பல சாதனைகள் புரிந்த வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு மத்தியில் தன் மகள் கொ…
-
- 2 replies
- 1.1k views
-
-
இருமுறை 300 ரன்கள் அடித்தும் எனக்கு மதிப்பில்லை: கிறிஸ் கெய்ல் காட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருமுறை 300 ரன்களை எடுத்திருந்த போதும், ஜமைக்காவிற்காக நிறைய செய்தும் அந்த அரசு தன்னை மதிக்கவில்லை என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் கடுமையாகச் சாடியுள்ளார். வரிவிலக்கு கேட்டிருக்கிறார் கிறிஸ் கெய்ல், ஆனால் ஜமைக்கா அரசு தொடர்ந்து அந்த கோரிக்கையை நிராகரித்து வருகிறது என்று அவர் 'தி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். “ஜமைக்கா அரசு மீது நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். நான் கேட்பதெல்லாம் கொஞ்சம் நாகரிகம், சிறு அங்கீகாரம் அவ்வளவே. 2 முறை முச்சதங்கள் அடித்துள்ளேன், ஆனால் விமான நிலையத்தில் ஒரு கேமரா கூட என்னை புகைப்படம் எடுக்க வரவில்…
-
- 0 replies
- 346 views
-
-
தோனி செய்ய முடிந்ததை மற்ற பேட்ஸ்மென்கள் செய்ய முடியவில்லை: கவாஸ்கர் ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை மீண்டும் இங்கிலாந்து பந்து வீச்சிடம் சரணடைந்தது பற்றி கவாஸ்கர் தனது விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார். நேற்று மீண்டும் கேப்டன் எம்.எஸ்.தோனி, தனது குறைவுபட்ட உத்தியிலும் கூட அடிப்படையான பேட்டிங் பொறுமையையும், புத்தி கூர்மையையும் காண்பித்து 82 ரன்களை எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மென்களோ செய்த தவறையே திரும்பவும் செய்ததாக சுனில் கவாஸ்கர் மற்றும் விவிஎஸ்.லஷ்மண் ஆகியோர் கருதுகின்றனர். சுனில் கவாஸ்கர் இது பற்றி தனியார் சானலில் கூறும்போது: "முக்கிய விக்கெட்டுகள் விழுந்த விதத்தைப் பாருங்கள், அவையெல்லாம் அபாரமான பந்துகளில் விழுந்த விக்…
-
- 0 replies
- 399 views
-
-
இந்திய பேட்ஸ்மென்கள் எனது பந்தை சுலபமாக அடிக்கலாம் என்று மனக்கோட்டை கட்டினர்: மொயீன் அலி இந்தியாவுக்கு எதிராக நடப்பு டெஸ்ட் தொடரில் கலக்கி வரும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி, இந்திய பேட்ஸ்மென்கள் தனது பந்தை எளிதில் அடித்து விடலாம் என்று நினைத்ததாகக் கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக மொயீன் அலி இதுவரை 19 விக்கெட்டுகளை 22.94 என்ற சராசரி விகிதத்தில் கைப்பற்றியுள்ளார். "இந்திய பேட்ஸ்மென்கள் என்னை எளிதான இலக்காக எண்ணினர். எனது பந்து வீச்சில் சுலப ரன்களை எடுத்து விடலாம் என்று நினைத்தனர். அவர்களது இந்த எண்ணம் எனக்கு உதவிகரமாக அமைந்தது. இப்போது அவர்கள் என்னை அடித்து ஆடினால் எனக்கு இன்னும் விக்கெட்டுகளை எடுக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்திய வ…
-
- 0 replies
- 465 views
-
-
08.+ 09.08.2014 ஆகிய நாட்களில் சுவிஸ் நாட்டில் வின்ரர்தூர் எனும் இடத்தில் நடைபெறவிருக்கும் தமிழீழ கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி பற்றிய ஒரு முன்னோட்டத்தை பார்ப்போம். இதுவரை வளர்தோருக்கான உதைபந்தாட்டப்போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த கழகங்கள். அதிகமான வெற்றியீட்டிய கழகங்கள்/நாடுகள்: இந்த ஆண்டிற்கான போட்டிகள்: சுவிஸ் நாட்டில் உள்ள சிறந்த 6 கழகங்கள்: 1. SC Royal 2. SC Young Stars 3. Thaiman SC 4. Blue Stars (french part) 5. Ilam Siruthaikal 6. Vaanavil தகவல்: தமிழர் உதைபந்தாட்டச சம்மேளனம் சுவிஸ் அதே போல் பிரான்ஸ் நாட்டிலிருந்தும் புள்ளகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த 6 கழகங்களும் பங்குபற்றுகின்றன. இந…
-
- 7 replies
- 1.3k views
-
-
பணமோ, ஆட்டத்தின் வேகமோ... குறைந்த ஓவர் கிரிக்கெட்டிற்கே தோனி பொருத்தமானவர்: மார்டின் குரோவ் தோனியின் டெஸ்ட் போட்டி கேப்டன்சி ‘தர்க்கமற்றதாக’ இருக்கிறது என்று கூறிய நியூசி.முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ், ஒருநாள், டி-20 கிரிக்கெட்டிற்கே அவர் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார். ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: "டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் துறந்து விட்டால் அவரது விந்தையான, கிரிக்கெட்டிற்குப் புறம்பான கேப்டன்சியிலிருந்து இந்திய அணி விடுபடும். 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடாமல் சரணடைந்த போது கூட டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் தோல்வி பற்றி பெரிதாகக் கவலைப் பட்டது போல் தெரியவில்லை. அவரது அணித…
-
- 0 replies
- 362 views
-
-
நல்ல பந்தில் அவுட் ஆவது என்றால் என்ன? இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய பேட்டிங் போராட்டமின்றி சரணாகதி அடைவதற்கு பல காரணங்களில் பிரதானமாகக் கூறப்படுவது நல்ல பந்து வீசப்படுகிறது என்பதும் கூறப்படுகிறது. விராட் கோலி, புஜாராவை முன் வைத்து இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலில் நல்ல பந்து ஏன் வீச அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வியை நாம் ஒரு புறம் வைத்துக் கொள்வோம். கிரிக்கெட்டில் ஆடமுடியாத, மிகச்சிறந்த பந்துகளுக்கு எப்போதும் அவ்வளவாக விக்கெட்டுகள் விழுவதில்லை. குறிப்பாக வேகப்பந்துக்குச் சாதகமான ஆட்டங்களில் பந்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் பந்து மட்டையைக் கடந்து நூலிழையில் எட்ஜைத் தவறவிட்டுச் செல்லும்போது அது குட் பால் என்று கூறப்படுகிறது. ஆனால் …
-
- 3 replies
- 608 views
-
-
ஜிம்பாப்வேயை வென்றது தென் ஆப்பிரிக்கா ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 92.4 ஓவர்களில் 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 158.3 ஓவர்களில் 397 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் டூபிளெஸ்ஸிஸ் 98, டி காக் 81 ரன்கள் எடுத்தனர். பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்…
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெண் செயலாளருக்கும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கித்துருவான் விதானகேக்கும் இடையிலான தொடர்பு சம்பந்தமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. காலியில் இடம் பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் போது கித்துருவான் விதானகே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெண் செயலாளர் தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்றமை தொடர்பிலேயே இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவரே முறைப்பாடு செய்துள்ளதுடன்,இந்த விடையம் தொடர்பில் சர்வதேச ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் . http://virakesari.lk/articles/2014/08/12/%E0%AE%95%E0%AE%BF%…
-
- 1 reply
- 391 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் சங்கா ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டிவிலியர்ஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு குமார் சங்கக்காரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். காலியில் பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் சங்கக்கார 211 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பாக வழங்கியிருந்தார். இது 2014ஆம் ஆண்டில் அவரது 4ஆவது சதமாகும். இதுவரை இந்த ஆண்டில் அவர் 1350 ஓட்டங்களை பெற்று 84.37 என்ற சராசரி எடுத்துள்ளார். பங்களாதேஷ_க்கு எதிராக ஒரு முச்சதம் மற்றும் ஒரு சதம் எடுத்ததோடு லோட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக அபாரமான முறையில் 147 ஓட்டங்களைப் பெற்றார். 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டிவிலியர்ஸ் டெஸ்ட் தரவரிசையில் முதல…
-
- 1 reply
- 453 views
-
-
உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மன் வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 36 வயதான குளோஸ், உலகக்கோப்பையில் தனது 16-வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்திருந்த பிரேசில் வீரர் ரொனால்டோவை (15 கோல்) முந்தி சாதனை படைத்தார் க்ளோஸ். 1990க்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஜெர்மன் வீரர்கள் உள்ள நிலையில், அணியின் முன்னணி வீரரான குளோஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு …
-
- 0 replies
- 505 views
-
-
உலக டெஸ்ட் அரங்கில் தனது 10 ஆவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார் சங்கா உலக டெஸ்ட் அரங்கில் தனது 10 ஆவது இரட்டைச் சதத்தை பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் சற்றுமுன்னர் பதிவு செய்தார் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் குமார சங்கக்கார. இதனூடாக டெஸ்ட் வரலாற்றில் இரட்டைச் சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் மேற்கிந்தியத்தீவுகளின் ப்ரைன் லாரைவைப் பின்தள்ளி 2 ஆம் இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்தள்ளார். ஆஸ்திரேலியாவின் டொனால்ட் ப்ரட்மன் 12 இரட்டைச்சதங்களைப் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். குமார் சங்கக்காரவின் இரட்டைச் தங்கள் 1. பாகிஸ்தான் 2002 மார்ச் 230 2. சிம்பாப்வே 2004 மே 270 3.தென்னாபிரிக்கா 2004 ஓகஸ்ட் 232 4. தென்னாபிரிக்கா 2006 ஜுலை 287 5. பங்களா…
-
- 1 reply
- 375 views
-
-
#VOPL2014 - Facebook Fighter அணியை வீழ்த்தி Youtube Youngsters சம்பியன் வீரகேசரி இணையத்தளம் ஏற்பாடு செய்த இலங்கையின் தமிழ் வலைப்பதிவாளர்களுக்கான #VOPL2014 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரின், விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் தனராஜ் தலைமையிலான Youtube Youngsters அணி, அனுதினன் தலைமையிலான Facebook Fighter அணியை வீழ்த்தி சம்பியனானது. வீரகேசரி இணையத்தளம் இம்முறை இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்த பதிவர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தோருக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று சனிக்கிழமை கொழும்பு 02 மலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அணிக்கு பதினொருவர் கொண்ட இச்சுற்றுத்தொடரில் Facebook Fighter , Twitter Turskers, Youtube Young…
-
- 1 reply
- 580 views
-
-
ஜென்டில்மேன்களின் விளையாட்டில் ஒரு மோசமான தீர்ப்பு இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் வெற்றி, தோல்விகளைவிட அதிகமாக பேசப்பட்ட விஷயம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்-இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடையிலான மோதல் விவகாரம்தான். நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் மதிய உணவுக்காக இரு அணியினரும் பெவிலியின் திரும்பியபோது ஆண்டர்சனுக்கும், ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஆண்டர்சன், ஜடேஜாவை கீழே தள்ளிவிட்டதாகப் புகார் எழுந்தது. ஐசிசி நடத்தை விதி லெவல்-3 ஐ ஆண்டர்சன் மீறியதாக இந்தியா புகார் அளிக்க, பதிலுக்கு ஆண்டர்சனை மிரட்டியதாக இங்கிலாந்து சார்பில் ஜடேஜா மீது ஐசிசியிடம் புகார் அளி…
-
- 11 replies
- 762 views
-
-
2023ம் ஆண்டு நடைபெறும் ஐம்பது ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடக்கும்: சீனிவாசன் அறிவிப்பு இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் டெல்லி: ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 2023ம் ஆண்டு இந்தியா தனித்து நடத்தும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் சீனிவாசன் தெரிவித்தார். 2023ம் ஆண்டு நடைபெறும் ஐம்பது ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடக்கும்: சீனிவாசன் அறிவிப்பு இதுகுறித்து செய்தியாளர்களிடம் சீனிவாசன் கூறியதாவது: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா தனித்து நடத்த உள்ளது. இதேபோல 2016ம் ஆண்டு டி-20 உலக கோப்பை கிரிக்கெட் மற்றும், 2021ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவையும் இந்தியாவிலேய…
-
- 0 replies
- 427 views
-
-
பின்கள வீரர்கள் அளவுக்கு பேட்ஸ்மென்கள் ஆடவில்லை: தோனி வருத்தம் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சற்றும் எதிர்பாராத விதமாக 3ஆம் நாளே இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது குறித்து தோனி வருந்தியுள்ளார். ”லார்ட்ஸ் டெஸ்ட் மற்றும் இந்தத் தொடரில் பின் கள வீரர்கள், அதாவது 8,9ஆம் நிலைகளில் இறங்கியவர்களின் பேட்டிங் முன்னிலை வீரர்களின் ஆட்டத்தைக் கேள்விக்குட்படுத்தும் விதமாக இருந்தது. 5 பவுலர்களுடன் ஆடும்போது 5வது பவுலர் பேட்டிங்கில் நன்றாக ஆடிவிடுகிறார். மேலும் முன்னிலை வீரர்கள் சிலர் ஃபார்மில் இல்லை. டெஸ்ட் போட்டியில் வெல்ல ரன்கள் தேவை. அப்போதுதான் எதிரணியினரின் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும். முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய பேட்டிங் மாறுவேடம் பூண்டது, ஸ்டூவர்ட் …
-
- 0 replies
- 295 views
-
-
தினேஷ் கார்த்திக்கை தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் வெறுக்கிறேன்: தீபிகா பல்லிகல் ) புதுடெல்லி: தினேஷ் கார்த்திக்கை தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் தாம் வெறுப்பதாக ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் கூறியுள்ள நிலையில், 12 நாடுகளில் மட்டுமே விளையாடப்படக் கூடிய கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் முறையை பார்த்து, மற்ற விளையாட்டு சங்கங்கள் பிசிசிஐ-யிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய பேட்மிட்டன் வீராங்கனையான ஜவாலா கட்டா அறிவுறுத்தி உள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா – ஜோஷ்னா ஜோடி, இங்கிலாந்தின் ஜெனி டுன்காஃப், லாரா மஸரோ ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இது காமன…
-
- 1 reply
- 893 views
-
-
கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014 காலத்திற்கு காலம் புதிய வீரர்கள் பலரை கிரிக்கெட் பார்த்திருந்தாலும் இதுவரை காலமான டெஸ்ட் போட்டிகளின் முதுகெலும்புகள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தான். பொதுவாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற சகல அணிகளையும் எடுத்து பார்க்கும் போது வீரர்கள் பலர் காணப்பட்டாலும் ஜாம்பவான்கள் என்று வர்ணிக்கக்கூடிய ஒரு சில வீரர்களே அணியின் வெற்றியில் பெரிதும் தாக்கம் செலுத்தியிருப்பார்கள். இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரையில் முரளிதரன், சமரவீர, சங்கக்கார, ஜெயவர்த்தன என்று அந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை எழுமாறாக நிரப்பலாம். மேலே குறிப்பிடப்பட்ட வீரர்களில் இம்முறை பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிகளின் பிறகு தனது ஓய்வை அறிவித்திருந…
-
- 0 replies
- 486 views
-