விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது: மேற்கிந்திய தீவுகள் அணி குறித்து கேரி சோபர்ஸ் கண்ணீர்! மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் விளையாட்டு அழிந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேரி சோபர்ஸ் கண்ணீர் விட்டு அழுதார். கடந்த 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டில், மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத அணியாக வலம் வந்தது. இரு முறை உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. தொடர்ந்து 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறி இந்தியாவிடம் தோல்வி கண்டது. இத்தகைய கிரிக்கெட் பாரம்பரியம் கொண்ட, மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 1995ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் கடும் சரிவை கண்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ,டெஸ்ட் மற…
-
- 2 replies
- 289 views
-
-
கடினமான சில சூழ்நிலைகளில் சச்சினை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மென்: இம்ரான் ஒப்பீடு சச்சின், விராட் கோலி. | கோப்புப் படம். விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் சதங்களை விளாசியது முதல் இவரையும் சச்சினையும் ஒப்பிட்டு பலரும் பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதில் சமீபமாக பாகிஸ்தான் ‘கிரேட்’ இம்ரான் கான், விராட் கோலி பேட்டிங் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது பற்றி கூறியதாவது: “கிரிக்கெட் ஆட்டம் பல காலக்கட்டங்களைக் கொண்டது. 80’களில் விவ் ரிச்சர்ட்ஸ், அதன் பிறகு சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, இவர்கள் இருவரும் அனைவரையுமே பின்னுக்குத்…
-
- 0 replies
- 289 views
-
-
டி20 பிளாஸ்ட் லீக்: லங்காஷைர் அணியுடன் ஜெயவர்தனே ஒப்பந்தம் இங்கிலாந்தின் ‘டி20 பிளாஸ்ட்’ கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட லங்காஷைர் அணியுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணியின் கேப்டனாகவும், முன்னணி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் மகேலா ஜெயவர்தனே. 39 வயதாகும் இவர், 2014-ம் ஆண்டு இலங்கை அணி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வாங்க முக்கிய காரணமாக இருந்தார். டி20 கிரிக்கெட்டில் 5455 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற…
-
- 0 replies
- 289 views
-
-
இந்தியா vs இங்கிலாந்து அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று இறுதிப்போட்டி 46 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய அண்டர் 19 அணி இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு 19 வயதுக்கும் குறைவானவர்களுக்கான அண்டர்-19 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ஓர் அங்கமான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது. 1988ஆம் ஆண்டு முதல் முறையாக அண்டர்-19 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
ஆடுகளத்தில் தொழில்நுட்ப தொந்தரவு: ஸ்மித் ஆட்டமிழப்பும் சர்ச்சையும் பந்துவீச்சாளர் ஃபால்க்னருடன் ஆஸி. கேப்டன் ஸ்மித் | கோப்புப் படம் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ஆட்டமிழந்தது குறித்து சர்ச்சை உருவாகியுள்ளது. களத்தில் ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்துடன் மைக்கில் வர்ணணையாளர்கள் பேசிக் கொண்டிருந்தால் தான் கவனச்சிதறலில் ஸ்மித் ஆட்டமிழக்க நேரிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி, அடிலெய்டு நகரில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது, களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்…
-
- 0 replies
- 289 views
-
-
மேற்கிந்திய தீவுகள் ‘A’ அணியை வெற்றிகொண்டு தொடரை 2-1 என்று தனதாக்கியது இலங்கை ‘A’ அணி. மேற்கிந்திய தீவுகள் ‘A’ அணியை வெற்றிகொண்டு தொடரை 2-1 என்று தனதாக்கியது இலங்கை ‘A’ அணி. இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள்’A’ அணிக்கும் இலங்கை ‘A’ அணிக்கும் இடையிலான 4 நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற 3 வதும் இருதியுமான டெஸ்ட் நிறைவுக்கு வந்துள்ளது. 3 போட்டிகள் கொண்டதான இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை ‘A’அணி,2 வது போட்டியில் 333 ஓட்டங்களால் மிகப்பெரிய தோல்வியை கண்டது. இந்த நிலையில் தம்புள்ளை மைதானத்தில் இடம்பெற்ற தொடரை தீர்மானிக்கும் முக்கியமான 3 வது டெஸ்ட் போட்டியில் இ…
-
- 0 replies
- 289 views
-
-
நட்சத்திர பராஒலிம்பிக் வீரர் டேவிட் வியர் (David Weir ) ஓய்வு பிரித்தானியாவின் நட்சத்திர பராஒலிம்பிக் வீரர் டேவிட் வியர் (David Weir) போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். 38 வயதான சக்கர நாற்காலி ஓட்டவீரர் டேவிட் வியர் ஆறு தடவைகள் பரா ஒலிம்பிக் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு லண்டன் பரா ஒலிம்பிக் போட்டி மறக்க முடியாத ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயிரக் கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் தமது பெயரை உச்சரித்து ஊக்கப்படுத்தியமை மரணிக்கும் தருணம் வரையில் நினைவிலிருந்து நீங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2012ம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் …
-
- 0 replies
- 289 views
-
-
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு எல்.பி.டபிள்யூ கொடுக்க மறுத்த நடுவர் வினீத் குல்கர்னி மேல் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ஐ.சி.சி) புகார் செய்துள்ளது. இந்திய தென்ஆபிரிக்க அணிகள் மோதிய ‘ருவென்ரி 20’ போட்டியில் இந்தியா 02 என தொடரை இழந்தது. இதற்கு நடுவர் வினீத் குல்கர்னியின் மோசமான முடிவுதான் காரணமாக அமைந்துவிட்டது. தர்மசாலாவில் நடந்த முதல் ருவென்ரி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா முதலில் விளையாடி 199 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு டுமினியின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப்போட்டியில் அவர் அக்சார் பட்டேல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால், நடுவர்…
-
- 2 replies
- 289 views
-
-
இறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, விலகல் முறையிலான கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், இன்னொரு பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை வென்றே இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது. இப்போட்டியை வேகமாக ஆரம்பித்த டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், தமதணியின் கிறிஸ்டியன் எரிக்சனின் உதையை அவரின் சக வீரர் டெலே அல்லி போட்டியின் 11ஆவது நிமிடத்திலேயே கோலாக்க ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. …
-
- 0 replies
- 289 views
-
-
திருநெல்வேலி வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தோனி: தடை காலத்திலும் ரசிகர்கள்ஆதரவு அளித்ததாக நெகிழ்ச்சி படம். | ஆர்.ரகு. சனிக்கிழமையன்று திருநெல்வேலியில் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 போட்டிக்கு ‘தல’ தோனி திடீரென மைதானத்துக்கு வந்து ரசிகர்களை சந்தோஷ அதிர்ச்சியடையச் செய்தார். டி.என்.பி.எல். கிரிக்கெட்டுக்கு தோனி வருகை தருவது வழக்கமாயினும் சென்னைக்கு வெளியே, அதுவும் திருநெல்வேலிக்கு அவர் இப்போதுதான் முதல் முறையாக வருகை தந்துள்ளார். இது சிறப்பான இடம் என்று கூறிய தோனி, “இங்குதான் இந்தியா சிமெண்ட்ஸ் தொடங்கப்பட்டது, நான் அவர்களுடன் நீண்ட கால தொடர்பில் இருக்கிறேன். எனவே நிறுவனத்தின் முதல் ஆலையைப் …
-
- 0 replies
- 289 views
-
-
ஹபீஸுக்கு ஐ.சி.சி. அனுமதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது ஹபீஸுக்கு பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான முகமது ஹபீஸின் பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது பந்துவீச்சு அவுஸ்திரேலியாவில் உள்ள பயிற்சி மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்துவீசியது தெரியவந்தது. இதனால் கடந்த நவம்பர் மாதம் முதல் அவர் பந்து வீச ஐ.சி.சி. தடை விதித்தது. இதனால் தனது பந்துவீச்சை ஹபீஸ் சரி செய்தார். இதனை தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி சென்னையில் உள்ள ஐ.சி.சி. விதிமுறைக்கு உட்பட்…
-
- 0 replies
- 289 views
-
-
சங்காவின் அதிரடி வீண் : CPL தொடரிலிருந்து ஜமெய்க்க அணி வெளியேற்றம் Image Courtesy - Getty image மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின், பிளே ஒப் சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது. இச்சுற்றில் நடைபெற்று முடிந்திருக்கும் வெளியேறல் (Eliminator) நொக்அவுட் போட்டியில் கயானா அமேசான் வோரியர்ஸ் அணியினால் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தப்பட்டிருக்கும் நடப்புச் சம்பியன் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி தொடரில் இருந்து வெளியேறுகின்றது. கடந்த மாத ஆரம்பத்திலிருந்து மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளை ஒத்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் பிளே ஒப் போட்…
-
- 1 reply
- 288 views
-
-
எனது வெற்றிக்குக் காரணம் தன்னம்பிக்கைதான் – சங்கவி தன்னம்பிக்கையுடன் மெய்வல்லுனர் அரங்கில் சாதனை படைத்துவரும்யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் தங்க மங்கை சந்திரசேகரன்சங்கவியின் எதிர்பார்ப்பு. http://www.thepapare.com
-
- 0 replies
- 288 views
-
-
இங்கிலாந்து அணியை நீக்க திட்டம்? *உலக கோப்பை தொடரில் அதிர்ச்சி ஜனவரி 17, 2015. துபாய்: இங்கிலாந்து அணியை உலக கோப்பை தொடரில் இருந்து நீக்குவதற்கான வேலைகளில் ஐ.சி.சி., இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து உலக கோப்பை அணிக்கு கேப்டனாக, அயர்லாந்தை சேர்ந்த இயான் மார்கன் உள்ளார். தவிர, கேரி பேலன்ஸ் (ஜிம்பாப்வே), பென் ஸ்டோக்ஸ் (நியூசிலாந்து) உள்ளிட்ட வீரர்கள் வேறு நாட்டினை சேர்ந்தவர்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டன், வெஸ்ட் இண்டீசின் பார்படாசை சேர்ந்தவர். அதாவது, இங்கிலாந்து உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் பலர், பாரம்பரியமாக இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் அல்ல. விதியால் பலன்: ஐ.சி.சி., விதி 2010, 3.3ன் படி, ‘ தேர்வு செய்யப்ப…
-
- 0 replies
- 288 views
-
-
மெல்பர்ணில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் இஸ்லாத்துக்கு எதிரான பதாதை ஒன்றைக் காண்பித்த ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கமும் ஆஸ்திரேலிய கால்பந்து லீகும் கண்டனம் தெரிவித்துள்ளன.அதிதீவிர வலதுசாரி எதிர்ப்புக் குழுவான ஐக்கிய தேசப்பற்றாளர் முன்னணியினர் " பள்ளிவாசல்களை நிறுத்தவும்" என தமது முத்திரையுடன் எழுத்தப்பட்டிருந்த பதாதையை அவர்கள் காண்பித்திருந்தனர். அந்தப் பதாதை கூறப்பட்டிருந்தது எந்த வகையிலும் "மேலும் விவாதங்களுக்கு வழி வகுக்காது" என ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ஜுலி பிஷப் கூறியுள்ளார்.விரும்பத்தாக இந்தச் சம்பத்துக்கு பொறுப்பானவர்களை தாம் தடைசெய்வோம் என ஆஸ்திரேலிய கால்பந்து லீக் தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=154727&category=W…
-
- 0 replies
- 288 views
-
-
ஜப்பான் கிராண்ட் பிரியில் விபத்தில் சிக்கிய வீரர் 9 மாதங்களுக்கு பிறகு மரணம்! ஜப்பான் கிராண்ட் பிரி பந்தயத்தின் போது விபத்தில் சிக்கிய பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஜுல்ஸ் பியான்ச்சி, 9 மாதங்கள் சிகிச்சைக்கு பின்,நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 25. பிரான்சை சேர்ந்த பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஜுல்ஸ் பியான்ச்சி, கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பார்முலா ஒன் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஜப்பான் கிராண்ட் பிரி போட்டியின்போது மெர்சியா குழுவுக்காக பங்கேற்ற பியான்ச்சியின் பந்தய கார், விபத்தில் சிக்கியது. பலத்த மழை காரணமாக பியான்ச்சியின் கார் பந்தய பாதையில் இருந்து வழுக்கி சென்று, அருகில் நின்று கொண்டிருந்த ஆபத்துதவி வாகனத்தின் மீது ம…
-
- 3 replies
- 288 views
-
-
ஆறாமிடத்துக்கு முன்னேறிய றபாடா சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய றபாடா, ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்துள்ளார். இதேவேளை, இப்போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, 12ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களி…
-
- 0 replies
- 288 views
-
-
நெருக்கடியில் ஜொலிக்க இந்தியாவுடன் விளையாடுங்கள்: பாக். வீரர்களுக்கு இன்ஸமாம் அறிவுரை நெருக்கடியான சூழலில் சிறப் பான ஆட்டத்திறனை வெளிப் படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று விளையாடும் போது, நாங்கள் திணறினோம். அதேசமயம், நெருக்கடியைச் சமாளிப்பது எப்படி என்பதையும் அதன் மூலம் கற்றுக் கொண்டோம். பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடி யான சூழலிலும் சிறப்பாக விளையாடுவதைக் கற்றுக் கொள்வதற்கு, இந்தியாவுடன் அடிக்கடி விள…
-
- 0 replies
- 288 views
-
-
ரஷ்யா - உக்ரேன் போர் - சர்வதேச பராலிம்பிக் குழுவின் அதிரடி அறிவிப்பு 2022 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால பராலிம்பிக் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சர்வதேச பராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சீனாவின் பீஜிங்கில் நடைபெறும் குளிர்கால பாராலிம்பிக் போட்டியில் அவர்களுக்கு கலந்து கொள்ள முடியாது. குளிர்கால பராலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நாளை (04) நடைபெறவுள்ளதுடன் அதன் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. மற்ற உறுப்பு நாடுகளின் எதிர்ப்பால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச பாராலிம்பிக் …
-
- 0 replies
- 288 views
-
-
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி! தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. சென்சூரியனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 327 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 123 ஓட்டங்களையும்…
-
- 0 replies
- 288 views
-
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான் ஒப்புதல் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின் மூலம் நவம்பரில் டாஸ்மேனியாவில் நடைபெறும் அவுஸ்திரேலிய அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மோதும். தலிபானின் இந்த ஒப்புதல் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி AFP செய்திச் சேவையிடம், "அணியை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப தலிபான்களிடமிருந்து எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது" என்று கூறியுள்ளார். 2001 இல் தலிபான்கள் அதிகாரத்திலிர…
-
- 0 replies
- 288 views
-
-
கரீபியன் பிரீமியர் லீக்கிலும் சாம்பியன் ஆனது நடிகர் ஷாருக்கானின் அணி! பிராவோவின் அசத்தல் ஆட்டம் காரணமாக, கரீபியன் பிரீமியர் லீக்கில் நடிகர் ஷாருக்கானின் ரெட் ஸ்டீல் அணி கோப்பையை வென்றது. போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பர்படாஸ் டிரினிடான்ட் அணியுடன் ரெட் ஸ்டீல் அணி மோதியது. முதலில் விளையாடிய ரெட்ஸ்டீல் அணி, 50 ஓவர்களில் 178 ரன்களை எடுத்தது. டெல்ஸ்போட் 50 ரன்களும், கம்ரான் அக்மல் 60 ரன்களும் அடித்தனர். பிராவோ 15 பந்துகளில் 29 ரன்களை விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய பர்படாஸ் டிரினிடாட் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களேயே எடுக்க முடிந்தது. இதனால் ரெட் ஸ்டீல் அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோப்பையை …
-
- 0 replies
- 288 views
-
-
ரகசியங்களை வெளியிடுவேன்..! பாக். கிரிக்கெட் வாரியத்தை மிரட்டும் அப்ரிடி பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோசமான நிலையில் உள்ளது என்பது குறித்து ஓய்வு பெற்ற பின்னர் வெளியிடுவேன் என அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி மிரட்டல் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அப்ரிடி அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள சில வீரர்களை விட சிறந்த முறையில் விளையாடினேன் என உணர்ந்தேன். அதனால் ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டிக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறவில்லை. அணியில் இருந்து விலகும்பொழுது அது தகுதியுடைய ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்பினேன். நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோசமான நில…
-
- 0 replies
- 288 views
-
-
சங்காவின் சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி சங்காவின் சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி. இங்கிலாந்தின் கழக மட்ட அணிகளுக்கு இடையில் நடைபெறும் ரோயல் லண்டன் கிண்ணத்தின் 3 ஆவது காலிறுதிப் போட்டியில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் சங்காவின் ஆட்டமிழக்காத சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. நோர்த்தம்டம்ஷயார் மற்றும் சர்ரே அணிகள் மோதிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நோர்த்தம்டம்ஷயார் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தீர்மானித்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நோர்த்தம்டம்ஷயார் அணி 49 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது. சர்ரே அணியின் பந…
-
- 0 replies
- 288 views
-
-
ஏ.சி மிலனிடம் தோற்றது பார்சிலோனா சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், இன்று காலை இடம்பெற்ற போட்டியில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா தோற்றது. இப்போட்டியில், ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே சில்வா பெற்றிருந்தார். இதேவேளை, குறித்த தொடரின் மற்றொரு போட்டியில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவன்டஸை 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றிருந்தது. றியல் மட்ரிட் சார்பாக, மார்கோ அஸென்ஸியோ இரண்டு கோல்களையும் கரித் பேல் ஒரு கோலையும் பெற்றனர். ஜுவன்டஸின் கோல் ஓவ்ண் கோல் மூலமாகவே கிடைக்கப் பெற்றிருந்தது. …
-
- 0 replies
- 287 views
-