விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
2020 T20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியாவில்! 2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான T20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதை, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பெண்களுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரையிலும் ஆண்களுக்கான தொடர் அதே ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையும் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முதலாவது உலகக் கிண்ண T20 போட்டித் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் எட்டு நகரங்களில் உள்ள பதின்மூன்று விளையாட்டு அரங்கங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. http://www.virakesari.lk/article…
-
- 0 replies
- 287 views
-
-
ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி : இராணுவ வீரரான புவிதரன் கோலூன்றிப் பாய்தலில் சாதனை By T YUWARAJ 18 SEP, 2022 | 10:18 PM (நெவில் அன்தனி) ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இராணுவ வீரர் ஏ. புவிதரன் 5.15 உயரம் தாவி புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்துள்ளார். தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றுக்கான திறன்காண் மெய்வல்லுநர் போட்டியிலேயே சாவகச்சேரி இந்து கல்லூரியின் முன்னாள் பழைய மாணவன் புவிதரன் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார். விமானப்படை வீரர் இஷார சந்தருவன் 2017ஆம் ஆண்டு நிலைநாட்டிய 5.11 மீற்றர் என்ற முந்தைய த…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல் புகுத்தினார் மெஸி Published By: SETHU 29 MAR, 2023 | 11:35 AM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி, தனது 100 ஆவது சர்வதேச கோலைப் புகுத்தியுள்ளார். கியூராசாவ் - ஆர்ஜென்டீன அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியில் தனது 100 கோலை மெஜி புகுத்தினார். ஆர்ஜென்டீனாவின் சான்டியாகோ டெல் எஸ்டேரோ நகரில் செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று காலை) நடைபெற்ற இப்போட்டியில் 7-0 கோல்களால் ஆர்ஜென்டீனா வென்றது. இப்போட்டியில் லயனல் மெஸி ஹெட்ரிக் கோல்களைப் புகுத்தினார். போட்டியின் 20, 33, 37 ஆவது நிமிடங்களில் அவர் புகுத்தினார் இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் …
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
சிக்கன பந்துவீச்சில் வெலகெதர புதிய சாதனை முதல்தர இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 4 ஓவர்களைப் பூர்த்தி செய்த பந்துவீச்சாளர்களில் அதி சிறந்த (0.50) சிக்கன பந்துவீச்சுப் பெறுதிக்கான (அதாவது ஓவருக்கு 0.5 ஒட்ட வீதம்) புதிய சாதனையை இலங்கையின் சானக்க வெலகெதர நிலைநாட்டியுள்ளார். எஸ். எஸ். சி. அணிக்கு எதிராக கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்தலட்டிக் கழகம் சார்பாக பந்து வீசிய சானக்க வெலகெதர 2 கன்னி ஓவர்கள் அடங்கலாக 4 ஓவர்கள் பந்துவீசி 2 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் பலனாக தமிழ் யூனியன் க…
-
- 0 replies
- 542 views
-
-
சங்கக்கார அதிசிறந்த தொழில்சார் கிரிக்கெட் வீரர் - ஃபார்ப்ரேஸ் புகழாரம் 2015-08-19 10:30:36 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிசிறந்த தொழில் கிரிக்கெட் வீரர் இலங்கையின் குமார் சங்கக்கார என இலங்கையின் முன்னாள் உதவி பயிற்றுநர் போல் ஃபார்ப்ரேஸ் புகழாரம் சூடியுள்ளார். ''பயிற்சிகளின்போது ஒரு முதிர்ச்சிபெற்ற தொழில்சார் வீரராக அவரை நான் பார்த்தேன். நான் ஒரு சிறந்த பயிற்றுநராவதற்கும் அவர் நிறைய உதவியுள்ளார்'' என ஃபார்ப்ரேஸ் கூறினார். இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தற்போதைய உதவி பயிற்றுநராக பணிபுரியும் ஃபார்ப்ரேஸ் 2007 முதல் 2009வரை இலங்கையின் உதவி பயிற்றுநராகவும் பின்னர் 2014இல் குறுகிய கால பிரதம பயிற்றுநராகவும் கடமையாற்றினார். …
-
- 0 replies
- 216 views
-
-
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலிய அணிக்கு இலகு வெற்றி! நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டி நேற்று(சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியாவும் நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்டன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த அவுஸ்ரேலிய அணி சார்பில், வோர்னரும், பின்ஞ்சும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலேயே அவுஸ்ரேலிய அணி, தடுமாற்றமான துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தது. உஸ்மான் கவாஜா 88 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். இதன…
-
- 0 replies
- 377 views
-
-
18 SEP, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கும் சகாப்தம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியுடன் உதயமாகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்த மாநாட்டில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிலேயே இருபாலாருக்கும் சம பரிசுத் தொகையை வழங்குவதென ஐசிசி முடிவுசெய்திருந்தது. ஆனால் இப்போது 6 வருடங்களுக்கு முன்னரே அந்தத் தீர்மானத்தை அமுல்படுத்துவதென ஐசிசி முடிவுசெய்துள்ளது. இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒட்டுமொத்த பணப்பரிசாக 7.95 மில்லியன் அமெரி…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
வெற்றிக்கு வழிவகுக்காமல் 55 ரன்கள் சராசரி வைத்திருந்து என்ன பயன்?: விராட்(கோலி) விளாசல் விராட் கோலி. | படம்: அகிலேஷ் குமார். நாக்பூர், மொஹாலி பிட்ச்கள் பற்றிய விமர்சனங்கள் பெரிய அளவில் எழுந்ததையடுத்து விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். பிட்ச்கள் பற்றி நாங்கள் முன்னாள் புகார் எழுப்பியதில்லை, எதிர்காலத்திலும் புகார் எழுப்ப மாட்டோம் என்று கூறினார் கோலி. 9 ஆண்டுகளாக அயல்நாட்டில் டெஸ்ட் தொடரை இழக்காமல் சாதித்து வந்த தென் ஆப்பிரிக்கா இந்திய ‘குழி பிட்ச்களில்’ சிக்கி சுழலில் சின்னாபின்னமாகி தொடரை இழந்தது. இதனையடுத்து நாக்பூர் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியிருப்பதாவது: …
-
- 0 replies
- 721 views
-
-
ரியல் மெட்ரிட்டுக்கு இலகு வெற்றி: ஜுவன்டஸை மீட்டார் ரொனால்டோ By Mohamed Shibly - ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A தொடர்களில் முக்கிய போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (31) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு ரியல் மெட்ரிட் எதிர் லெகெனஸ் லெகெனசுக்கு எதிரான போட்டியில் 5-0 என இலகு வெற்றியீட்டிய ரியல் மெட்ரிட் அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவை விடவும் ஒரு புள்ளி இடைவெளியில் இரண்டாவது இடத்திற்கு முன்னெற்றம் கண்டது. பிரேசில் பதின்ம வயது வீரர் ரொட்ரிகோ பெற்ற கோல் மூலம் 7ஆவது நிமிடத்தில் …
-
- 0 replies
- 524 views
-
-
செய்தித் துளிகள்... ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு நியமிக்கப் பட்டுள்ளார். --------------------------------- ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் காயம் காரணமாக விலகிய மலிங்காவுக்கு பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜெரோம் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார். --------------------------------- ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு இம்முறை வைல்டுகார்டு கிடையாது என இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் தங்களது தரவரிசை அடிப்படையில் தான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. --------------------------------- …
-
- 0 replies
- 429 views
-
-
இரு கைகளிலும் அசுர வேகத்தில் பந்துவீசும் பவுலர்! (வீடியோ) வாசிம் அக்ரமையும், வக்கார் யுனிஸையும் மிக்ஸ் செய்து இன்னுமொரு ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்ஸை பாய விட்டிருக்கிறது பாகிஸ்தான். வலது கையில் பந்து வீசினால் 145 கி.மீ. வேகம், இடது கையில் வீசினால் 135 கி.மீ. வேகம் எனப் பின்னி பெடலெடுக்கிறார் யஸிர் ஜான். சிவாஜி படத்தில் ரஜினி ‛இரண்டு கைகளால்’ எழுதுவது போல, யாஸிர் ஜான் இரு கைகளிலும் வேகமாக பந்துவீசுவதுதான் பாகிஸ்தானில் ஹாட் டாபிக். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் பகுதியைச் சேர்ந்தவர் யாஸிர் ஜான். தந்தை காய்கறி வியாபாரி. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த யாஸிர், 2003 உலக கோப்பையில் வாசி…
-
- 0 replies
- 457 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, ரசிகர்களிடம் பல விடங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்நிலையில் அவுஸ்ரேலிய ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சங்கக்காரா வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அந்த ரசிகர், “நீங்கள் பல டெஸ்ட் அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி தேடித் தந்துள்ளீர்கள், உலகக்கிண்ணம் வென்ற அணியிலும் இடம் பிடித்துள்ளீர்கள், உங்களது கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாகவே இருந்தது. ஆனால் அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை அணியில் இருந்ததே இல்லையே, ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சங்கக்காரா, ஆமாம், அது ஏமாற்றம் அளிக்கும் விடயமாகவே இருந்தது. 2004ம் ஆண்டு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த…
-
- 0 replies
- 458 views
-
-
கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவை: 40 ரன் அடித்து வெற்றி பெற வைத்த 54 வயது வீரர் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 40 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார் 54 வயது வீரர். இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டுஷைர் கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஸ்வின்ப்ரூக்- டார்செஸ்டர்-ஆன்-தேம்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்வின்ப்ரூக் அணி 45 ஓவரில் 240 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய டார்செஸ்டர்-ஆன்-தேம்ஸ் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த அணி கடைசி ஓவருக்கு முந…
-
- 0 replies
- 630 views
-
-
டி.ஆர்.எஸ்., முறையை ஏற்குமா இந்தியா டிசம்பர் 21, 2014. புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அம்பயரின் தவறான முடிவுகள் சர்ச்சை கிளப்பின. இதனால், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறையை இந்தியா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சில நேரங்களில் அம்பயர்கள் தவறான தீர்ப்பு தருவர். இதனால் போட்டியின் முடிவே மாறிவிடும். இதை தடுப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறையை கொண்டு வந்தது. இரு அணிகள் மோதும் தொடரில், ஏதாவது ஒரு அணி எதிர்ப்பு தெரிவித்தாலும் இதனை பயன்படுத்த முடியாது. இந்திய அணி துவக்கம் முதலே எதிர்த்து வருவதால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ்., முறை பி…
-
- 0 replies
- 513 views
-
-
வருட இறுதியில் 2022 கால்பந்தாட்டம்? 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடர் நவம்பர் - டிசெம்பர் மாதங்களில் நடத்தப்படுவதே நல்லது என ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவித்துள்ளார். அந்தக் காலப்பகுதி குளிர் காலமாக இருப்பதனால் அனைத்து நாட்டு வீரர்களும் அதனை விரும்புவார்கள். வெப்ப காலத்தில் போட்டிகளை நடாத்தினால் வீரர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள். அதேவேளை 2022ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளமையினால் அந்த நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதி இல்லாமலும் இருக்க வேண்டும். எனவே இந்தக் காலப்பகுதியே பொருத்தமானது என கட்டார் கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவி…
-
- 0 replies
- 371 views
-
-
ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம் ஒலிம்பிக் (2016) போட்டிக்கான பல்வேறு மைதானங்கள் இன்னும் தயாராகாமல் உள்ளன. உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றது. கடைசியாக 2012இல் இங்கிலாந்தில் இப்போட்டி நடந்தது. அடுத்து 2016இல் 31ஆவது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ளது. இதற்காக மொத்தம் 14 புதிய மைதானங்களை கட்டுவது, புதுப்பிப்பது என, ரூ.120 ஆயிரத்து 518 கோடி வரை பிரேசில் அரசு செலவிடுகிறது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 13 மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் பெரும்பாலான பணிகள் முடியாமல் உள்ளன. இங்குள்ள ஒலிம்பிக் பார்க் மைதானம் 44 ஏக்கரில் தயாராகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, ச…
-
- 0 replies
- 360 views
-
-
ஆஸி. வீரர் கிறிஸ் ரொஜர்ஸும் ஓய்வுபெறவுள்ளார் 2015-08-19 10:43:28 அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் கிறிஸ் ரொஜர்ஸ் இன்று ஆரம்பாகும் ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளார். இம் மாதம் 31ஆம் திகதி 32 வயதை அடையும் கிறிஸ் ரொஜர்ஸ் தான் ஓய்வு பெறப் போவதை சில தினங்களுக்கு முன்னர் லண்டன் ஹோட்டலில் வைத்து உறுதி செய்தார். நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 3 அரைச் சதங்களைப் பெற்றபோதிலும் ஓய்வு பெறுவதில் கிறிஸ் ரொஜர்ஸ் உறுதியாக உள்ளார். ஒருவேளை 32 வயதை எட்டவுள்ளதால் அவர் ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளார் போலும். அவுஸ்திரேலியாவின் எதிர்கால அணியில் அடம் வோஜஸ் இடம்பெறவேண்டும் என க்றிஸ் ரொஜர்ஸ் த…
-
- 0 replies
- 209 views
-
-
அருணோதயா வீரன் புதிய சாதனை October 13, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்று வரும் தடகளத் தொடரில் ஓர் அங்கமான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி வீரன் என்.நெப்தெலி ஜொய்சன் கடந்த பதின்மூன்று வருட சாதனையை முறியடித்து தேசிய மட்டத்தில் புதிய சாதனை யைப் பதிவு செய்துள்ளார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தடகளத்தொடரில் மாதம்பை சேன நாயக்க மத்திய மகா வித்தியாலய வீரன் மதுரங்கா பெர்னாந்துவினால் 4 மீற்றர் உயரம் பாய்ந்து நிலைநாட்டப்பட்ட சாதனையை நடப்பு வருடத்தில் ஜொய்சன் 4.21 மீற்றர் உயரம் பாயந்து முறிய டித்துள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2020
-
- 0 replies
- 459 views
-
-
Published by J Anojan on 2019-11-07 22:25:43 ரோகித் சர்மா மற்றும் தவானின் அதிரடியான இணைப்பாட்டம் காரணமாக பகளாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்று பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று தொடரில் 1:3 என்ற கணக்கில் முன்ன்லையிலிருந்தது. இந் நிலையிலை தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு ராஜ்கோட்டில் ஆரம்பமானது. ந…
-
- 0 replies
- 619 views
-
-
இலங்கைக்கு நீச்சல், சைக்கிளோட்டம், வூஷுவில் தங்கங்கள் நீச்சல் வீரர் மெத்யூவின் வெற்றி அலை தொடர்கின்றது 2016-02-08 10:37:31 (குவாஹாட்டியிலிருந்து எஸ். ஜே. பிரசாத்) இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் நடைபெற்றுவரும் 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை தனது தங்கப் பதக்க எண்ணிக்கையை எட்டாக அதிகரித்துக ்கொண்டுள்ளது. எனினும் வரவேற்பு நாடான இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. போட்டியின் இரண்டாம் நாளான (விழாவின் மூன்றாம் நாள்) நேற்றைய தினம் இலங்கையின் சாதனை நீச்சல் வீரர் மெத்யூ அபேசிங்க, தனது தங்கப் பதக்க எண்ணிக்கையை 4 ஆக உயர்த்திக…
-
- 0 replies
- 322 views
-
-
ரொனால்டோவின் கடின உழைப்பு எனக்கு உத்வேகம் அளித்தது: விராட் கோலி கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடின உழைப்பினால் அதிக அளவில் உத்வேகம் அடைந்துள்ளேன் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறப்பவர் போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானா ரொனால்டோ. ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் அவர், கடின உழைப்பால் 31 வயதிலும் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தனது கடின முயற்சியால் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். தனது கடின உழைப்…
-
- 0 replies
- 448 views
-
-
மஸ்ரபீ முர்தஷாவுக்கு போட்டித் தடை விதித்தது ஐ.சி.சி! பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபீ முர்தஷாவுக்கு ஒருநாள் போட்டியொன்றில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியின் போது, பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டமைக்காகவே குறித்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவரது போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 70 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk…
-
- 0 replies
- 292 views
-
-
சம்பியன் பட்டங்களை வென்ற புனித பத்திரிசியார் மற்றும் சென் சேவியர் கல்லூரி அணிகள் Tamil சம்பியன் பட்டங்களை வென்ற புனித பத்திரிசியார் மற்றும் சென் சேவியர் கல்லூரி அணிகள் வட மாகாண பாடசாலைகள் விளையாட்டு நிகழ்வின் கால்பந்தாட்ட தொடரில் 18 வயதின் கீழ் பிரிவில் மன்னார் சென் சேவியர் கல்லூரி அணியும், 16 வயதின் கீழ் பிரிவில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. 16 வயதின் கீழ் பிரிவு சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ய…
-
- 0 replies
- 446 views
-
-
இங்கிலாந்தில் சில வருடங்கள் வாசித்ததாலோ என்னவோ இடைக்கிடை அங்கிருக்கும் பழைய நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுப்பது எனது வழக்கம். நான் கனடா வந்து இருபத்தி ஐந்துவருடங்கள் ஆகியும் இங்கிலாந்தில் இருக்கும் நண்பர்கள் போல் கனடாவில் ஏனோ அமையவில்லை. உலக புதினங்கள் தொடங்கி ஊர் புதினங்கள் வரை ஒரே அலைவரிசையில் உரையாட எப்பவும் இங்கிலாந்திற்குத்தான் தொலைபேசி அழைக்க வேண்டிஇருக்கும் .அதுவும் குறிப்பாக கிரிக்கெட் பற்றி எனக்கு மிக பிடித்த வர்ணணையாளர்கள் TONY GREIG, GEOFF BOYCOTT லெவலுக்கு புள்ளிவிபரங்களுடன் அலசி ஆராய அங்கிருக்கும் சில நண்பர்களை கேட்டுத்தான். இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் எம்மவர் பலர் பிரிட்டிஷ்காரர்களின் அந்த பாரம்பரியம் காக்கும் கடமைகளில் தாமும் இ…
-
- 0 replies
- 1k views
-
-
சூடுபிடுத்துள்ள லாலிகாவும் சவால்விடுக்கும் அணிகளும் சூடுபிடுத்துள்ள லாலிகாவும் சவால்விடுக்கும் அணிகளும் புதிய கழகங்களுடனும், புதுமுக வீரர்களுடனும் ஆரம்பமாகியுள்ள 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டிகள் வீரர்களிடமும் பார்வையாளர்களிடமும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது. இப்பருவகாலத்திற்கான கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் லாலிகா சுற்றுப்போட்டியை ஆரம்பித்துள்ள கழகங்கள் சுற்றுப் போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணிக்கு சவால் விடுப்பதை போட்டியின் முடிவுகளும் லாலிகா புள்ளிப்பட்டியலும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 2017/18 ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 256 views
-