விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதத்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று தான் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். …
-
- 0 replies
- 397 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் - இந்தியா அணிகள் மோதும் சுதந்திரக் கிண்ணத் தொடர் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகள் மோதும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் வருடம் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதத்திரக்கிண்ணம் “ என்ற பெயரில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை கிரிக்கெட்த் தொடர் இடம்பெறவுள்ளது. பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் இ…
-
- 0 replies
- 320 views
-
-
பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் சிந்திய வீனஸ் வில்லியம்ஸ்! டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய கார் விபத்துகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளால் நிலைகுலைந்த வீனஸ், கண்ணீர்விட்டு அழுதார். அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய விபத்தால், கடும் சிக்கலில் உள்ளார். கடந்த மாதம் 9-ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரின்மீது மோதியுள்ளார். இந்த விபத்தில், அந்த காரில் பயணித்த 74 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் இறந்துவிட்டார். அதனால், பிரச்னை தீவிரமடைந்தது. இந்நிலையில், நேற்று வீனஸ் வ…
-
- 0 replies
- 326 views
-
-
மும்பையும் கைவிடுகிறதா.? 2018ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மலிங்க இடம்பெறுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தனக்காக விளையாடிய மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும், இதுதவிர ஒரு வீரரை Right To Match என்ற அடிப்படையில் தக்க வைக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா மற்றும் பாண்ட்யா சகோதரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடங்கிய காலத்திலிருந்தே மும்பை அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் லசித் மல…
-
- 0 replies
- 441 views
-
-
இனியாவது நிறுத்துங்கள் அரசியல் விளையாட்டை! நாங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை. கிரிக்கெட் விளையாடுவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் தாயகம் திரும்புகிறபோது எங்களின் கிரிக்கெட் ஆட்டத்தாலும், செயல்களாலும் இங்குள்ள மக்களின் மனங்களை கவர்ந்து செல்வோம். இங்கே எங்களுடைய வீரர்களுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை அழிக்க நாங்கள் விரும்பவில்லை. இப்படி மிக அழகாக முதிர்ச்சியோடு பேசியிருப்பவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வரும் லாகூர் லயன்ஸ் அணியின் கேப்டனுமான முகமது ஹபீஸ்தான். விளையாட்டில் அரசியலை கலக்காதீர்கள். பிரச்சினை என்பது இரு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இடையில்தான். வ…
-
- 0 replies
- 524 views
-
-
2018 கால்பந்து உலகக்கோப்பை: இன்சுலின் பையுடன் பயணித்த வீரர் ஹீரோவான கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் இரண்டாவது நாளான ஜூன் 15ஆம் தேதியன்று நடைபெற்ற மூன்று ஆட்டங்களும் ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவை. அதில், உலகெங்கிலும் கால்பந்து ரசிகர்களுக்கு போர்ச்சுகல் மற்ற…
-
- 0 replies
- 400 views
-
-
கிரிக்கெட் வாழ்வின் முடிவை நெருங்கும் ஹேரத் ரங்கன ஹேரத்தின் கடந்த ஒரு தசாப்த கால சாகச கதை முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களுக்கும் அச்சுறுத்தல் கொடுத்த பந்துவீச்சாளராகவே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது கடைசி தொடருக்கு முந்திய போட்டிகளிலும் கூட அவரது அச்சுறுத்தல் பந்துவீச்சு தொடர்கிறது. இந்த ஆண்டு கடைசியில் இங்கிலாந்துடனான போட்டிகளோடு அவர் ஓய்வு பெறுவதற்கு காத்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்றதன் பின்னர் ரங்கன ஹேரத் இலங்கையின் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக பொறுப்பேற்றது ரோலர் கொஸ்டரில் செல்வது போல சவால் மிக்கதாக இருந்தது. …
-
- 0 replies
- 392 views
-
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி -இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது November 12, 2018 1 Min Read மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இறுதியில் 1 பந்துக்கு 1 ஓட்டம் எடுக்க வேண்டும் என்ற நிலையில் மனீஷ் பாண்…
-
- 0 replies
- 344 views
-
-
திமுத் கருணாரத்ன கைது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொரல்லை கிங்ஸி ஹோர்டன் ஒழுங்கையில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்றின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5.15 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொரல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள திமுத் கருணாரத்னவை இன்று பொலிஸில் தடுத்து வைத்திருந்து நாளை (01) திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இவர் செலுத்திய மோட்டார் கார் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதியதனால் முச்சக்கர வண்டியின் சாரதி சிறுகாயங்களுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…
-
- 0 replies
- 446 views
-
-
20 JUN, 2024 | 10:13 AM (நெவில் அன்தனி) இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ள கேன் வில்லியம்சன், நியூஸிலாந்து வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தையும் நிராகரித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீடித்திருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே தலைவர் பதவியைத் துறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பப்புவா நியூ கினியுடனான சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டி முடிவடைந்த பின்னர் தனது பதவி விலகல் மற்றும் மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்தமை தொடர்பான அறிவிப்பை 33 வயதான கேன் வில்லியம்சன் விடுத்தார். இக் குழுவில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அ…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
ஒரே நாளில் ஓயப் போகும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் இலங்கை அணியின் சங்கக்கார, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கிளார்க் மற்றும் அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகிய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டி அவர்களின் இறுதிப் போட்டியாக அமையவுள்ளது. சங்கக்கார நாளை கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டிக்குப்பின் ஓய்வு பெறுகிறார். உலக்கிண்ணப் போட்டிக்குப்பின் ஓய்வு பெற இருந்த அவரை இலங்கை கிரிக்கெட் சபை பாகிஸ்தான்இ இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தலா இரண்டு போட்டிகளில் வி…
-
- 0 replies
- 359 views
-
-
முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் July 14, 2019 இன்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் களமிறங்கவுள்ளன. கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடாக இங்கிலாந்து புகழப்பட்டாலும் , 44 வருட உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒருமுறையேனும் கிண்ணத்தை சுவீகரிக்கவில்லை. அதிக சந்தர்ப்பங்களில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணியாக பதிவாகியுள்ள இங்கிலாந்து, 27 வருடங்களின் பின்னர் இவ்வருடம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேவேளை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தும் …
-
- 0 replies
- 281 views
-
-
நியூஸி. வெற்றி!ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது! சனி, 23 பிப்ரவரி 2008( 14:44 IST ) கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூசீலாந்து அணி வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 3- 1 என்று கைப்பற்றியது. பூவா தலையா வென்ற நியூஸிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பந்துகள் மெதுவாக பேட்டிற்கு வரும் ஆட்டக் களத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் திணறினர். பின் கள வீரர்களான லூக் ரைட் மற்றும் மஸ்கேரந்காஸ் கடைசியில் அடித்து ஆடியதால் மரியாதைக்குறிய 242 ரன்கள் என்ற ரன் எண்ணிக்கையை இங்கிலாந்து எட்டியது. நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்…
-
- 0 replies
- 652 views
-
-
டோக்கியோ விமான நிலையத்தில் மெஸ்சியிடம் தகராறில் ஈடுபட்ட ரிவர்பிளேட் ரசிகர்கள் (வீடியோ) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பானில் உள்ள யோகஹாமா நகரில் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணியுடன் அர்ஜென்டினாவை சேர்ந்த ரிவர்பிளேட் அணி மோதியது. பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. போட்டியை காண ஆயிரக்கணக்கான ரிவர்பிளேட் ரசிகர்கள் யோகஹாமா நகருக்கு வந்திருந்தனர். போட்டி முடிந்ததையடுத்து நேற்று பார்சிலோனா அணி டோக்கியோவில் இருந்து ஸ்பெயினுக்கு புறப்பட்டது. இதற்கான டோக்கியோ விமான நிலையத்துக்கு பார்சிலோனா அணி வீரர்கள் நேற்று இரவு வந்தனர். அப்போது விமான நிலையத்தில…
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கை கபடி அணியில் சினோதரன், டிலக்ஷனா, ப்ரியவர்ணா By Mohammed Rishad - நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஆண்கள் கபடி அணியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணேசராஜா சினோதரன் மற்றும் பெண்கள் கபடி அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. டிலக்ஷனா மற்றும் ஆர்.ப்ரியவர்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கபடி அணியில் விளையாடி வருகின்ற சினோதரன், 2016 தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் 2018 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். …
-
- 0 replies
- 797 views
-
-
இந்திய அணியால் அப்ரிடி நடந்த கொடுமை! பாகிஸ்தான் டி20 அணி தலைவர் அப்ரிடியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. உலகக் கிண்ண போட்டியில் இந்தியாவுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றதால் அப்ரிடியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாம். அவரை பதவியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்ரிடியின் செயல்பாடுகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியததிற்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளதாம். குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றதை அது ரசிக்கவில்லையாம். மேலும் இந்தியாவில் விளையாடும்போது எனக்கும், எனது அணி வீரர்களுக்கும் பாகிஸ்தானில் கிடைப்பதை விட அதிக அன்பு கிடைப்பதாக அப்ரிடி கூறியதையும் பாகிஸ்தான் கிரி்க்கெட் வாரியம்…
-
- 0 replies
- 536 views
-
-
இந்தியாவின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான ஏழு வாரத் தொடர் ஜூலை 6இல் ஆரம்பம் மேற்கிந்தியத் தீவுகளுக்கான, நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் உள்ளடங்கிய ஏழு வாரத் தொடருக்காக, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி இந்திய அணி செல்லவுள்ளது. அன்டிகுவா, ஜமைக்கா, சென். லூசியா, ட்ரினிடாட்டில் நான்கு டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன. சென்ட்.கிட்ஸில், ஜூலை 9ஆம் திகதி, இரண்டு நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பிக்கும் தொடரானது, அதேயிடத்தில் ஜூலை 14ஆம் திகதி ஆரம்பிக்கும் மூன்று நாள் பயிற்சிப் போட்டியுடன் தொடருகின்றதோடு, ஜூலை 21ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஜூலை 30ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஓகஸ்ட் 9ஆம…
-
- 0 replies
- 364 views
-
-
ஓய்வு பெற்றார் ஜெர்மன் கால்பந்து நட்சத்திர வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஷ்வெய்ன்ஸ்டெய்கர் ஓய்வு பெற்றார். | படம்: கெட்டி இமேஜஸ். ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடுகள வீரரான இவர் தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை ஜெர்மனி வென்றது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அரையிறுதியில் பிரான்ஸிடம் 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஜெர்மனி அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் …
-
- 0 replies
- 359 views
-
-
சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை இலங்கை இளையோர் மற்றும் இங்கிலாந்து இளையோர் அணிக்களுக்கிடையில் இங்கிலாந்தின் வோர்ம்ஸ்லேயில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி 149 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் அசலங்க 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 70 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இலங்கை அணி சார்பில், அஷான் ஆட்டமிழக்காமல் 60 ஒட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, சில்வா 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி சார்பில் பெர்னர்ட் 43 ஓட்டங்களுக்கு 2 விக்…
-
- 0 replies
- 353 views
-
-
போல்வால்ட்டில் பிரேசில் வீரர் சாதனை போல்வால்ட் பந்தயத்தில் சாதனை படைத்த பிரேசில் வீரர் தியோகோ டி சில்வா. படம்: ராய்ட்டர்ஸ். ஆடவருக்கான போல்வால்ட் பந்தயத்தில் பிரேசில் வீரர் தியோகோ டி சில்வா புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 6.03 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பிரான்ஸ் வீரர் ரெனாட் லிவில்லின் 5.97 மீட்டர் உயரம் தாண்டியதே ஒலிம்பிக் சாதனையாக இருந்தது. அவர் 2014-ம் ஆண்டு 6.16 மீட்டர் உயரம் தாண்டியதே உலக சாதனையாகவும் இருந்து வந்தது. உலக சாதனையாளரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ரெனாட் லிவில்லின் 5.98 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க வீரர் சாம் கென்டிரிக்ஸ் 5.85 மீட்டர் …
-
- 0 replies
- 311 views
-
-
மெத்தியுஸ் மற்றும் சந்திமல் தென்னாபிரிக்க தொடருக்கு தயார் இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் மற்றும் உபத் தலைவர் சந்திமல் ஆகியோர் உபாதையிலிருந்து நீங்கியுள்ளதுடன், தென்னாபிரிக்க தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மெத்தியுஸ் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சந்திமல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர ஆகியோர் உபாதைகளிலிருந்து குணமாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தானும் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன். இதேவேளை தம்மிக்க பிரசாத் உபாதைகளில் இருந்து நீங்குவதற்கு சற்று காலம் எடுக்கும் என வைத்திய…
-
- 0 replies
- 361 views
-
-
கொவிட் தொற்றால் இந்திய நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் மரணம் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் 91ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பறக்கும் சிக்’ என புகழ்பெற்ற மில்கா சிங், ஆசிய விளையாட்டு விழாவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். டோக்கியோ 1958 ஆசிய விளையாட்டு விழாவில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் ஜகார்த்தா 1962 ஆசிய விளையாட்டு விழாவில் 400 மீற்றர் மற்றும் 4×400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் மில்கா சிங் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். ரோம் 1960 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 400 மீற்றர் இறுதிப் போட்டி…
-
- 0 replies
- 305 views
-
-
இலங்கையை சிம்பாப்வே வீழ்த்தியதற்கான காரணத்தை கூறுகிறார் அஷ்வின் சிம்பாப்வே அணி இலங்கையை ஒருநாள் தொடரில் வீழ்த்தியது கிரிக்கெட்டின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். மும்பையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஷ்வின் கூறியதாவது: சிம்பாப்வே அணி இலங்கையை வீழ்த்தியதைப் பற்றிக் கூற வேண்டுமெனில், யார் வேண்டுமானாலும் வெல்லலாம், யார் வேண்டுமானாலும் தோற்கலாம் இப்படித்தான் கிரிக்கெட் ஆட்டம் போகும் என்றே கூறத் தோன்றுகிறது. நாளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெறலாம். அப்படித்தான் ஒரு விளையாட்டு செல்ல வேண்டும். இது விளையாட்டுக்கு ஆரோக்கி…
-
- 0 replies
- 319 views
-
-
விளையாட்டு கண்ணோட்டம் இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான வரலாற்றுத் தோல்வி, கால்பந்து நடுவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்ற மிகப் பெரிய விருது வழங்கும் விழாக்கள் என்பன தொடர்பிலான தகவல்களுடன் வரும் இவ்வார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சி.
-
- 0 replies
- 774 views
-
-
20 இருபது இந்திய தொடரிலும் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்க இல்லை இந்தியாவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டித் தொடரிலும் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி இந்திய இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இப்போட்டியில்,நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்,லசித் மலிங்கவுக்குப் பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் ஜீவன் மெண்டிஸ் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை கிரிகெட் வாரியம் கூறியுள்ளது.இதுவரை 68 போட்டிகளி…
-
- 0 replies
- 317 views
-