Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 'உலகக் கோப்பை போட்டிகளை ஜெர்மனிக்கு வழங்கியதில் வாக்கெடுப்பு முறைகேடுகள் இல்லை' 2006ஆம் ஆண்டு நடந்த கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டிகளை ஜெர்மனிக்கு வழங்கியதில், வாக்களிப்பு முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று, சுயாதீனமான விசாரணை ஒன்று தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்றன. இதில் தொடர்புடைய அனைவருடனும் தம்மால் பேச இயலவில்லை என்பதால், இதற்கான வாக்குகள் வாங்கப்படவில்லை என்று உறுதியாக கூற முடியாது என்றும் இந்த விசாரணையை மேற்கொண்ட சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரிக்கும்படி, ஜெர்மன் கால்பந்தாட்டக் கழகம் இந்த சட்ட நிறுவனத்திடம் கோரியிருந்தது. 2005ஆம் ஆண்டு, ஜெர…

  2. 'உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை' பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து, தொடரை 1-1 என சமப்படுத்திக் கொண்ட இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டெயர் குக், இங்கிலாந்து அணியில், உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என ஏற்றுக் கொண்டுள்ளார். 273 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதலாவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, 164 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அலஸ்டெயர் குக், "240 என்பது, சிறப்பான இலக்காக இருக்குமென எண்ணினேன். அவர்கள், 30 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றார்கள். எங…

  3. 'எங்களுக்கு எதிராக கோலியால் சதம் அடிக்க முடியுமா?'- பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சவால் கோப்புபடம்: விராத் கோலி, மிக்கி ஆர்தர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அனைத்து அணிகளுக்கும் எதிராக சதம் அடித்து இருக்கலாம், ஆனால், இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடிக்க முடியாது என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சவால் விடுத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மனும், கேப்டனுமான விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, தனது 33-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க…

  4. 'எனது சாதனைகளுக்கு பெற்றோரே ஊக்க சக்தியாக அமைந்தனர்!'- சங்ககாரா உருக்கம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சங்ககாராவுக்கு, இங்கிலாந்துக்கான இலங்கை தூதர் பதவி வழங்க தயாராக இருப்பதாக பிரிவுபச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்தார். சங்ககாராவை வழியனுப்பும் விதமாக கொழும்பு டெஸ்டின் கடைசி நாளான இன்று, சங்ககாராவின் பெற்றோர், மனைவி, நண்பர்கள், இலங்கை அதிபர் சிறிசேனா , பிரதமர் ரணில் உள்ளிட்டோர் கொழும்பு சாரா ஓவல் மைதானத்திற்கு வந்திருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் சிறிசேன…

  5. 'என்னைத் தண்டித்தது போதும்' - மரியா ஷரபோவா உருக்கம்! முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, கடந்த ஆண்டு மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தைப் பயன்படுத்திய புகாரில் சிக்கி, டென்னிஸ் விளையாட இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டார். தவறை ஒப்புக்கொண்டதால், அவரது தடைக்காலம் பின்னர் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. அவரது தடைக்காலம் முடிந்து, வரும் 26-ம் தேதி ஜெர்மனியில் நடைபெற உள்ள 'Porsche Grand Prix' போட்டியில் கலந்துகொண்டு விளையாடப்போகிறார். ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஷரபோவா, 'Porsche Grand Prix' தொடரில் வைல்டு கார்டுமூலம் தகுதிப் போட்டிகளில் கலந்துகொள்ளாமல், நேரடியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை, டென்னிஸ் பி…

  6. 'எம்.எஸ்.தோனி' படம் என் புகழ்பாடாமல் வாழ்க்கைப் பயணத்தையே பதிகிறது: தோனி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனி. | படம்: ஏ.பி, “எம்.எஸ்.தோனி-தி அன் டோல்ட் ஸ்டோரி” என்ற திரைப்படம் என் புகழ்பாட எடுக்கப்பட்டதல்ல, எனது போராட்டங்கள், பயணங்கள் பற்றியதே என்று இந்திய ஒருநாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இம்மாதம் 30-ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகும் இந்தத் திரைப்படத்தின் விளம்பர பரப்புதலுக்காக தன் மனைவி சாக்‌ஷி, படத் தயாரிப்பாளர் அருண் பாண்டே ஆகியோருடன் அமெரிக்கா சென்றுள்ளார் தோனி. திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, “நான் பாண்டேயிடம் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறினேன், என்னை உய…

  7. 'எல்.பி.டபிள்யூ' ஷேன் வாட்சனுக்கு சிக்கல் ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் வாட்சனை வீழ்த்த அப்பீல் செய்யும் இங்கி. பவுலர் மார்க் உட். | படம்: ராய்ட்டர்ஸ். ஷேன் வாட்சன். | படம்: கெட்டி தொடர்ந்து எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வரும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நோட்டீஸ் பீரியடில் இருப்பதாக ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார். 19 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 14 முறை ஷேன் வாட்சன் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறியுள்ளார். இதில் மேலும் வேடிக்கை என்னவெனில் இந்த 14 முறைகளில் 9 முறை அவர் மேல்முறையீடு செய்ததில் ஒருமுறைதான் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமைந்த்து. 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வாட்சன் 109 இன்னிங்ஸ்களில் 4 சதங்களை மட்டுமே எடுத்துள்ளார், 74 விக்கெட்டுகளைக் கைப்பற்…

  8. 'ஒருநாள் இரவில் ஹர்திக் பாண்டியா கபில்தேவ் ஆகிவிட முடியாது'- பொரிந்து தள்ளிய ஹர்பஜன் சிங் ஜாம்பவான் கபில்தேவுடன் ஹர்திக் பாண்டியாவை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள், ஒருநாள் இரவில் யாரும் கபில்தேவ் ஆகிவிட முடியாது என்று மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் திறமையை வைத்து ரசிகர்கள் கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். எதிர்கால இளம் கபில்தேவ் என்று ஹர்திக் பாண்டியா ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த அளவு பங்களிப்பைச் செய்ய வேண்டியதும், அணி இக்கட்டான நேரத்தில் சிக்கும் போது தூக்கி நிறு…

  9. 'ஓய்வு நெருங்கியுள்ளதால் இறுதிப் போட்டிகளை அனுபவித்து விளையாடுவேன்" என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் என்னுடைய இறுதிப் போட்டிகள் சிலவற்றை அனுபவித்து விளையாடுவேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீற்றர்சன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ‘பிக் பாஷ்’ இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த 37 வயதான கெவின் பீற்றர்சன், அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப்பின் சர…

  10. 'கங்குலி என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை!'- குமுறும் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி கிடைக்காததால், தான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியிருப்பதாக ரவி சாஸ்திரி வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன் கங்குலி, நேர்காணலின்போது ஸ்கைப்பில் வந்து கூட தன்னிடம் கேள்வி கேட்வில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் கங்குலி, சச்சின், வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோருடன், பிசிசிஐ ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜக்தாலேவும் இடம் பெற்றிருதார் பயிற்சியாளருக்கான நேர்காணல், கொல்கத்தா தாஜ் பெங்கால் ஹோட்டலில் நடந்துள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடந்த பயிற்சியாளருக்கான நேர்காணலில், ரவி சாஸ்திரி பங்கேற்றார். ஆனால…

  11. 'கச்சோரி' விற்கும் கிரிக்கெட் அணி கேப்டன் வதோதரா: வாய் பேசாதவர்கள் மற்றும் காது கேளாதோருக்கான, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெல்ல உதவிய கிரிக்கெட் வீரர், சாலையோர கடையில், உணவுப் பண்டம் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். குஜராத் மாநிலம், வதோதராவை சேர்ந்தவர் இம்ரான் ஷேக், 30. பத்து ஆண்டுக்கு முன் நடந்த, வாய் பேசாதோர் மற்றும் காது கேளாதோருக்கான, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற இவர், பல அரை சதங்களை அடித்து, கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இவரது அபார திறமை காரணமாக, மூன்று ஆண்டுக்கு முன், வாய் பேசாதோருக்கான இந்திய கிரிக்கெட் அணி…

  12. 'கபடி...கபடி' ன்னா தெரியும்... 'சர்ஜீவ்னி' ன்னா என்னான்னு தெரியுமா...? 1 . சர்ஜீவ்னி : தென்னிந்தியாவில் , குறிப்பாக தமிழ் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுபிரபலமாவதற்கு முன்பிருந்தே விளையாடும் விளையாட்டு இது கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும். இதன் விதிமுறைகள் யாவும் இந்திய கபடி வாரியத்தால் வகுக்கப்பட்டவை. பாடிச்செல்லும்போது 'கபடிக்கபடிக்கபடி......' என்று ஒரே மூச்சில பாடணும்னு அவசியம் இல்லை. 'கபடி ..கபடி...கபடி...' என்று ஒரே சீரான இடைவெளியில் மூச்சுவிட்டும் பாடலாம். எதிரணியினர் பிடித்தால் மட்டுமே ஒரே மூச்சில் தப்பித்து வரவேண்டும். ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12 பேர் இருப்பார்கள். ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே.…

  13. 'கலந்துரையாடலுக்குத் தயார்' Comments உலக இருபதுக்கு-20 தொடரின் சம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை மீது வெளிப்படுத்திய விமர்சனங்களைத் தொடர்நது, அவ்விடயம் தொடர்பான கலந்துரையாடலுக்குத் தயாராக இருப்பதாக, கிரிக்கெட் சபையின் தலைவர் டேவ் கமரோன் தெரிவித்துள்ளார். இந்தியன் பிறீமியர் லீக் தொடர் முடிவடைந்த பின்னர், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த மீளாய்வு, ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ள நிலையிலேயே, பொதுவான ஒரு நிலைப்பாட்டைப் பெறுவதற்காக இந்தச் சந்திப்பு இடம்பெறுமென அவர் அறிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்க…

  14. 'கிங் பேர்' ஆண்டர்சன்..! சேவாக் கிண்டல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக ட்வீட் செய்து மற்ற விளையாட்டு வீரர்களை கிண்டல் செய்வது வழக்கம். இந்த முறை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிக்கிக் கொண்டார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜேம்ஸ் ஆண்டர்சன் 'கிங் பேர்' எடுத்து அவுட்டானர். ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும், தான் விளையாடும் முதல் பந்துகளில் அவுட் ஆனால் அது கிங் பேர் எனப்படும். 2011ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய அணி. அப்போது ஒரு டெஸ்ட் போட்டியில் கிங் பேர…

  15. 'குசால் இன்னமும் தடை செய்யப்படவில்லை' இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, இன்னமும் தடைக்குள்ளாக்கப்படவில்லை என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். குசால் பெரேரா தடை செய்யப்பட்டுள்ளார் என முன்னர் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, இந்தத் தகவலை மஹேல ஜெயவர்தன வெளியிட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையின் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துவரும் குசால் ஜனித் பெரேரா, டிசெம்பர் 7ஆம் திகதி, இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டார். எனினும், ஏனையோரைப் போலன்றி, குசால் பெரேராவின் விசாரணை தொடர்பான முடிவு, இதுவரை வெளிவரவில்லை. …

  16. கொஞ்சம் கூட 'குஷியே' தராத சிங்களத்து 'சியர் லீடர்கள்'! கொழும்பு: 'சியர் லீடர்கள்' என்ற வார்த்தையைக் கேட்டதுமே எல்லோருக்கும் 'துள்ளி'க் கொண்டு வரும் சந்தோஷம். ஆனால் இலங்கையில் தற்போது நடந்து வரும் டுவென்டி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களைக் குஷிப்படுத்துவதற்காக 'குவிக்கப்பட்டுள்ள' சியர் லீடர்களைப் பார்த்து அத்தனை பேரும் செம டென்ஷனாக இருக்கிறார்களாம். காரணம், சந்தோஷம், குஷி, துள்ளலை ஏற்படுத்தும் அளவுக்கு இவர்களிடம் கவர்ச்சி இல்லை என்பதே. மேலும் ஏதோ கபாடிப் போட்டியில் ஆடுபவர்கள் அணிவதைப் போன்ற பனியனைப் போட்டு இவர்களை டான்ஸ் ஆட விட்டுள்ளனர். டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது அரையிறுதி போட்டிக…

  17. 'கே ' நடுவருக்கு லைசென்ஸ் ரத்து : துருக்கு கால்பந்து சங்கத்துக்கு அபராதம் தன்னை ஹோமோசெக்சுவல் என்று அறிவித்த, கால்பந்து நடுவரின் லைசென்சை ரத்து செய்த துருக்கி கால்பந்து சங்கத்துக்கு 5.32 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துருக்கி கால்பந்து நடுவரான ஹலிப் இப்ராஹிம் கடந்த 2009ஆம் ஆண்டு தன்னை' ஹோமோசெக்சுவல்' என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து துருக்கி கால்பந்து சங்கம் அவரது நடுவர் லைசென்சை ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஹலில் இப்ராஹிம் இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு இழப்பீடாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் துருக்கி லிரா தர வேண்டுமெனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.நீதிமன்ற விவாதத்தின் போது, துருக்கியில்…

  18. 'கைகள் இல்லாத கிரிக்கெட் வீரன்': அமீர் ஹுசைனின் கதை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தவர்கள் அனேகர். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி எனும் நிலையில் அதை ஓடி எடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களும் ஏராளமாக உள்ளனர். ஆனால் கைகளே இல்லாமல், ஒரு கிரிக்கெட்அணியின் தலைவராக பரிமளிப்பவர் தான் அமீர் ஹுசைன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் கிர்க்கெட் அணிக்குத் தான் அவர் தலைவர். எட்டு வயதில் வீட்டில் இருந்த மரமறுக்கும் இயந்திரத்தில் சிக்கி ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் அமீர் ஹுசைன் இழந்தாலும் உறுதியை இழக்கவில்லை. கைகள் இல்லாமல் அண்டை-அயலாரின் பரிகாசங்களுக்கு ஆளான அ…

  19. [size=4]'சச்சினுக்கு வயதாகிவிட்டது; கால் நகரவில்லை' - சுனில் கவாஸ்கர்! சச்சின் எப்படி ஆடினாலும் அதற்கு உயர்வு நவிற்சியின் உச்சக்கட்டத்திற்குச் சென்று பாராட்டி வந்த சச்சினின் மானசீக குரு சுனில் கவாஸ்கர் இன்று மனம் திறந்து வயதாகிவிட்டது சச்சினுக்கு கால் நகரவில்லை என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார். FILE இன்று ஸ்டார் கிரிக்கெட் வர்ணனை குழுவில் இருந்த சுனில் கவாஸ்கர் சச்சின் டெண்டுல்கர் பரிதாபமாக இரண்டாவது முறையாக பவுல்டு ஆகிச் சென்றதை பார்த்து வேதனையுடன் தெரிவித்த கருத்துதான் இது! நேராக வந்த பந்தை காலைப்போட்டு ஒன்று தடுத்தாடுவார். அல்லது பழைய சச்சினாக இருந்தால் அந்தப் பந்து நேராக பவுண்டரி சென்றிருக்கும். ஆனால் கடந்த 2 …

    • 5 replies
    • 1.1k views
  20. 'சட்டபூர்வ' சூதாட்டம், அரசியல்வாதிகள் இல்லாத அமைப்புகள்: பிசிசிஐ சீரமைப்புக்கு லோதா குழு பரிந்துரைகள் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் தலைமை நீதிபதி லோதா.| படம்: ஆர்.வி.மூர்த்தி. பிசிசிஐ மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அறிக்கையை முன்னாள் தலைமை நீதிபதி லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதில் கிரிக்கெட் போட்டிகளின் மீது பந்தயம் கட்டுவதை சட்டபூர்வமாக்கலாம் என்றும், ஆனால் சூதாட்டத்தில் வீர்ர்கள் ஈடுபடுவது குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் அதைச் சார்ந்த மாநில கிரிக்கெட் அமைப்புகளிலும் அரசியல்வாதிகள் இடம்பெறக்கூடாத…

  21. 'சாம்பியன்ஸ் தொடரில் இருந்து விலகுவோம்!' ஐ.சி.சி.யை மிரட்டும் பி.சி.சி.ஐ. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி குழு சந்திப்பு துபாயில் சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்றது. அந்த சந்திப்பிற்கு பி.ஸி.ஸி.ஐ அழைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராப்பி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காமல் போக வாய்ப்பு அமைந்துள்ளது. என்ன தான் நடந்தது? 2014ம் ஆண்டு ஸ்ரீநிவாசன் ஐ.ஸி.ஸி தலைவராக இருந்த போது "தி பிக் த்ரீ"(The Big Three) என்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் நாடுகளான இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த …

  22.  'சிறந்த உப தலைவராக இருக்கவில்லை' அவுஸ்திரேலிய அணியின் தலைவராக றிக்கி பொன்டிங் இருந்த போது, அவருக்குப் பொருத்தமான உப தலைவராக தான் இருந்திருக்கவில்லை என, மைக்கல் கிளார்க் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது புதிய சுயசரிதைப் புத்தகத்திலேயே, அவர் இதை ஏற்றுக் கொண்டுள்ளார். 2013ஆம் ஆண்டு, தனது சுயசரியை வெளியிட்ட றிக்கி பொன்டிங், தனது உப தலைவராக இருந்த மைக்கல் கிளார்க்குடன் காணப்பட்ட தடுமாற்ற உறவை விவரித்திருந்தார். இந்நிலையிலேயே, தனது சுயசரிதைப் புத்தகத்திலும் அது குறித்து, மைக்கல் கிளார்க் எழுதியுள்ளார். "உப தலைவராக என் மீது, சில விடயங்களில் ஏமாற்றமடைந்ததாக, அவரது சுயசரிதைப் புத்தகத்தில் றிக்கி எழுதியுள்ளார்.…

  23. 'சுழல் தமிழன்' அஸ்வினின் ஐம்பெரும் சாதனைகள்! அஸ்வின் | படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 3வது டெஸ்டில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என தன்வசமாக்கியது. வெளிநாட்டு தொடர்களை கடந்த 9 ஆண்டுகளாக இழக்காமல் இருந்த வந்த தென் ஆப்பிரிக்க அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆட்ட நாயகனாக 12 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் தேர்வானார். 2006-க்குப் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 15 தொடர்களை வென்றது. தற்போது முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு அஸ்வினின் பந்துவீச்சு முதன்மைக் காரணம். இத்துடன்…

  24. 'சுழல் தமிழன்' அஸ்வின் சாதனை: உலக டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் நம்பர் 1 பவுலர், ஆல்ரவுண்டர்: அஸ்வின் சாதனை. | படம்: பிடிஐ. ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசைகளில் அஸ்வின் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 1973-ம் ஆண்டு பிஷன் பேடி நம்பர் 1 இடத்தைப் பிடித்த பிறகு தற்போது அஸ்வின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் 31 விக்கெட்டுகள் அடங்கும். 1973-ம் ஆண்டில் பிஷன் சிங் பேடி நம்பர் 1 இடம் பிடித்த பிறகு இந்திய பவுலர் ஒருவர் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது இ…

  25. 'சூதுகவ்வும்' : 0 ரன் டிக்ளேரும் ஜென்டில்மேன் கிரிக்கெட்டர் வீழ்ந்த கதையும்! ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7-ம் தேதி முடிந்தது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட, இருநாள் போட்டிகள் அரையும் குறையுமாக நடந்தன. கூவி கூவி அழைத்தும் ரசிகர்கள் ஓட்டம் முதலில் பேட்டிங்கை மேற்கிந்திய தீவுகள் அணி பேட் செய்தது. இரண்டாம் நாள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் 248/7ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு களத்தில் விளையாடியது மழை. ஒரு ஓவர் கூட வீசப்படாமல் இரு நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. எஞ்சியிருப்பது ஒரே ஒருநாள் மட்டும்தான். எப்படியும் ஆட்டம் சமன்தான் என்பது தெரியும். இதன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.