விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27ம் தேதியன்று லண்டனில் துவங்க உள்ளதை அடுத்து கிரீசின் ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. நவீன ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டதன் நினைவாக ஒலிம்பிக் விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பியாவில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ஒலிம்பிக் ஜோதி பல நாடுகள் வழியாக 78 நாட்களில் லண்டனை வந்தடையும். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 666 views
-
-
நியூசிலாந்து அணிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது By Mohammed Rishad - ©Getty image இந்த வருடம் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையான அணுகுமுறையை பாராட்டி ‘ஸ்பிரிட் ஒப் கிரிக்கெட்’ (Sprit of Cricket) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் மறக்க முடியாத ஒரு போட்டி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத போட்டியாக அது இருந்தது. லீக் போட்டிகளில் ஆதிக்கம் …
-
- 0 replies
- 468 views
-
-
இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தோல்விகளுக்கு முடிவுகட்டிய தென்னாபிரிக்கா By Mohamed Shibly - இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 107 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் தோல்விகளுக்குப் பின் முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. இதன்மூலம் உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரில் தென்னாபிரிக்க அணி முதல் புள்ளியை பெற்றுக் கொண்டது. சென்சூரியன் சுப்பர்பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சாதனை இலக்கான 376 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி கடந்த சனிக்கிழமை மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவின்போது 121 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை…
-
- 0 replies
- 819 views
-
-
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த மூன்றாம் திகதி சிட்னியில் ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸிக்காக 454 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 256 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் 198 ஓட்டம் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 2 விக்கெ…
-
- 0 replies
- 549 views
-
-
இந்தியா vs பாகிஸ்தான் - தொடரும் வரலாறு! சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் எதிரும் புதிருமாகவே இருக்கிறது. உடன்பாட்டை மீறி நம் நாட்டின் எல்லைக்குள் நுழைவது, மக்களைத் துன்புறுத்துவது போன்ற கொடூர செயல்களைக் காலம்காலமாக செய்து வருவதோடு, தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கிறது பாகிஸ்தான். என்னதான் இந்தியாவைத் தோற்கடிக்க பலமுறை முயற்சித்தாலும், இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆட்டத்தில், 1992 முதல் வெற்றியை இந்தியா மட்டுமே உரித்தாக்குகிறது. இந்த ஆண்டும் அவ்வாறு நடந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மேலும், ஈடன் கார்டனில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த 4 ஆட்டத்திலும், தொடர்ந்து வெற்றியைத் தனதாக்கியிருந்தது பாகிஸ்தான். அந்த சாதனையும் தற…
-
- 0 replies
- 370 views
-
-
“இலங்கை கிரிக்கெட் விருதுகள்-2016”;உங்களுக்கு பிடித்த வீரர் யார்?:நாளை வாக்களிப்பு ஆரம்பம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் அரங்குகளில் நிலைநாட்டப்படும் மிகவுயர்ந்த சாதனைகளுக்கான விருதாக திகழும் “ டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2016 ” நிகழ்வு அண்மையில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு எதிர்வரும் செப்டெப்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. வீரர்களை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளை 24 ஆம் திகதி நண்பகல் 12 மணியில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் ட…
-
- 0 replies
- 511 views
-
-
டேவிட் வோர்ணருக்கு புது விருது அவுஸ்ரேலிய கிரிக்கட் அணித்தலைவர் ஸ்டீவ் சிமித் நாடு திரும்பியதால் ஒரு நாள் ஆட்டப் போட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட டேவிட் வோர்ணர் இலங்கை அணிக்கு எதிரான அடுத்தடுத்த வெற்றிகளால் தொடரை வெல்ல வழியமைத்துள்ளார்.. பிலிப்ஸ் நிறுவனம் வழங்கும் இந்த ஆண்டுக்கான விளையாட்டுத் துறையின் சிறந்த தந்தைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு பெண்குழந்தைகளுக்கு தந்தையாவார். இலங்கை அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் ஆட்டத்தில் ஒரு சதமடித்து இவர் அசத்தியுள்ளார். http://onlineuthayan.com/news/17178
-
- 0 replies
- 458 views
-
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சம்: ஐ.பி.எல். தொடரிலிருந்து வெளியேறும் வீரர்கள்! இந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அச்சம் காரணமாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரிலிருந்து பல முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர். இதன்படி டெல்லி கெபிடல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிவந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான அஸ்வின், நடப்பு தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். இதேபோல றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்த அவுஸ்ரேலிய வீரர்களான ஆடம் செம்பா மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். மேலும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இடம்பிடித்த அவுஸ்ரேலிய வீரரான ஹென்ரிவ் டை த…
-
- 0 replies
- 365 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றியும், அயர்லாந்து வீரரின் சாதனையும்! அயர்லாந்து - வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி, அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோதும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அயர்லாந்து - வங்கதேசம் இடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 31.1 ஓவர்களில் 157/4 என்ற நிலையில் இருக்கும்போது, தொடர் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டன. இத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்…
-
- 0 replies
- 371 views
-
-
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் நடால்! அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் ஆடவர் பிரிவில், நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ், பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்டீஃபென்ஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் நடால் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆண்டர்சன் மோதினர். இதில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வென்று, அமெரிக்க ஓப்பன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். குறிப்பாக, 58 நிமிடங்களில் போட்டியை முடித்து, தான் நம்பர் 1 பிளேயர் என்பதை நிரூபித…
-
- 0 replies
- 450 views
-
-
அமுல்படுத்திய 24 மணிநேரத்தினுள் விதிமுறையை மீறிய கிரிக்கெட் வீரர் (காணொளி) சர்வதேச கிரிக்கெட் சபை அமுல்படுத்திய மாற்றப்பட்ட புதிய ஆட்ட விதிமுறைகளை மீறிய முதலாவது வீரர் என்ற ‘பெருமையை’ குவீன்ஸ்லாந்து அணி வீரர் மார்னஸ் லாபுஷானியா பெற்றார். புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருபத்து நான்கு மணிநேரம் ஆவதற்குள் அந்த விதிமுறை மீறப்பட்டது கவனிக்கத்தக்கது. அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளான குவீன்ஸ்லாந்து புல்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா லெவன் அணிகள் நேற்று (29) ஜே.எல்.டி. ஒருநாள் கோப்பைக்கான போட்டியில் விளையாடின. இதன்போது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த குவீன்ஸ்லாந்து புல்ஸ் அணியின் மார்னஸ், பந்து கையில் இல்லாத நிலையிலேய…
-
- 0 replies
- 417 views
-
-
மீண்டும் படுதோல்வியடைந்த மே.இ. அணி: மன்ரோவின் உலக சாதனையால் தொடரை வென்ற நியூஸிலாந்து! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நியூஸி. தொடக்க வீரர் காலின் மன்ரோ அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் சதமடித்தார். நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் கப்திலும் மன்ரோவும் மே.இ. அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்த்தார்கள். முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் குவித்தார்கள். பவர்பிளே முடிந்தபிறகும் இருவருடைய அதிரடி ஆட்டம் நிற்கவில்லை. தொடர்ந்து சிக்ஸும் பவுண்டரிகளுமாக அடித்து ரன் ரேட்…
-
- 0 replies
- 279 views
-
-
இருபது வருடங்களின் பின் சாதிக்குமா பாகிஸ்தான் அணி? வியாழக்கிழமை, 30 ஒக்டோபர் 2014 1994இல் பாகிஸ்தானில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சலிம் மலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. அதன் பின்னர், டெஸ்ட் தொடர் ஒன்றில் அவுஸ்திரேலிய அணியை வெல்வது என்பது, பாகிஸ்தான் அணிக்கு வெறும் கனவாகவே இருந்துவந்தது. 1999இல் ஆரம்பித்து 2010 வரையில், அவுஸ்திரேலியாவுடன் விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, 2010 இல் லீட்ஸ் இல் இடம்பெற்ற போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றிபெற்று தொடர்ச்சியான தோல்விக்கு இடைவெளி விட்டது. அதனை அடுத்து நான்கு வருடங்கள் கழித்து, கடந்த 22ஆம…
-
- 0 replies
- 427 views
-
-
நவம்பர் 16 - இந்த நாளை மறக்க முடியுமா சச்சின்? நவம்பர் 16. இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்கமுடியுமா என்ன? 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக பாலகனாகக் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த சச்சின், தனது சொந்த மண்ணான மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு தனது கால் நூற்றாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஓடிவிட்டாலும், அவருடைய அலை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சென்ற வருடம் இன்றைய நாளில்தான் (நவம்பர் 16) மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி மூன்றே நாட்க…
-
- 0 replies
- 568 views
-
-
ஹெட்மையரின் அதிரடி சதம், ஹோல்டரின் மறக்க முடியா கடைசி ஓவர்: வங்கதேசத்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள் மே.இ.தீவுகளை தன் அதிரடி சதத்தினால் வெற்றிக்கு இட்டுச் சென்ற ஆட்ட நாயகன் ஹெட்மையர். | ஏ.எப்.பி. அமெரிக்காவில் நடைபெறும் மே.இ.தீவுகள், வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியின் பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மே.இ.தீவுகள் 3 போட்டிகள் கொண்ட தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது. மே.இ.தீவுகளில் ஹெட்மையர் 93 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 125 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் பிரமாதமாக இலக்கை விரட்டி …
-
- 0 replies
- 281 views
-
-
கீப்பர் முதல் மேய்ப்பர் வரை... மகேந்திர சிங் டோணி என்னும் ஒரு சாதனை நாயகன் ! டெல்லி: எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரை கேட்டதும், உலகின் பிற அணி வீரர்களுக்கு, வயிற்றில் கலக்கமும், கைகளில் நடுக்கமும், கண்களில் பதற்றமும் தோன்றுமோ அந்த கிரிக்கெட் வீரர் பெயர்தான் மகேந்திர சிங் டோணி. இவரது ஹெலிகாப்டர் ஷாட்டை பார்த்தோ, நெருக்கடியான நேரத்தில் அவர் அடித்தும், படுத்தும், அணியை வெற்றிபெற வைப்பதை பார்த்தோ கூட எதிரணிகள், நடுங்கியது கிடையாது. ஆனால், வாழ்நாள் லட்சியமே, இந்த வேலைதான் என்பதைப் போல அவர் செய்யும் கேப்டன்ஷிப்புக்காகத்தான் இத்தனை பயமும். பெரிய அணியோ, சிறிய அணியோ, அனைத்து அணிகளையும் ஒரே தராசில் வைத்து, வியூகங்களை வகுத்து அவர் செயல்படுத்தும் திறமை கண்டு வாய் பிளந்து நி…
-
- 0 replies
- 654 views
-
-
மலிங்க- திசார சமூக ஊடக மோதல்கள் குறித்து விசாரணை லசித்மலிங்கவிற்கும் திசாரபெரேராவிற்கும் இடையிலான சமூக ஊடக மோதல் குறித்து உள்ளகவிசாரணைகள் இடம்பெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். திசார பெரேராவும் அவரது மனைவியும் புதிய விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளனர் என லசித்மலிங்கவின் மனைவி சமூக ஊடகத்தில் பதிவு செய்த பின்னர் உருவாகியுள்ள சமூக ஊடக மோதல் குறித்தே விசாரணைகள் இடம்பெறவுள்ளன. பன்டாக்கள் ஹரீன் பெர்ணான்டோவை சந்தித்துள்ளன என லசித்மலிங்கவின் மனைவிகுறிப்பிட்டுள்ளார் திசாரா பெரேராவை அணி வீரர்கள் பன்டா என அழைப்பது வழமை. இதேவேளை சமூக ஊடகங்களில் ஒரே அணியை சேர்ந்த இரு வீரர்கள் மோதிக்கொள்வ…
-
- 0 replies
- 653 views
-
-
கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை! ரியல்மாட்ரிட் ஸ்டிரைக்கர் ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி மால்மோ அணியை எதிர்கொண்டது. ஸ்வீடனில் உள்ள மால்மோ நகரில் நடந்த இந்த போட்டியில் 28வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல்மாட்ரிட் அணிக்கான முதல் கோலை அடித்தார். இது அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கும் 500வது கோல் ஆகும். இதற்கு ரொனால்டோவுக்கு 753 போட்டிகள் தேவைப்பட்டது. அதோடு சாம்பியன்ஸ் லீக் தொடரில் 117 போட்டியிகளில் ஆடியுள்ள அவர் அடிக்கும் 81வது கோலாகவும் இது அமைந்தது. பிற்பாதி ஆட்டத்தில் 90வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒர…
-
- 0 replies
- 229 views
-
-
ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தல் வலுத்து வருகிறது Getty ஜியானி இண்ஃபாண்டினோ மற்றும் மிஷேல் பிளாட்டினி PA பதவி விலகும் பிளாட்டரும், அப்பதவிக்கு போட்டியிடும் ஜோர்டான் இளவரசர் அல் ஹிசைனும் Getty தலைவர் பதவிக்கான போட்டியிலுள்ள டோக்யோ செக்ஸ்வாலே சர்வதேசக் கால்பந்து சம்மேளமான ஃபிஃபா தலைவர் பதவிக்கான போட்டி வலுத்து வருகிறது. ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலரும் போட்டியிடுகிறார் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஜியானி இன்ஃபாண்டினோ அறிவித்துள்ளார். செப் பிளாட்டர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, ஃபிஃபாவின் அடுத்த தலைவருக்கான போட்டி சூடுபிடித…
-
- 0 replies
- 276 views
-
-
அதே இரத்தம் அப்படித்தான் இருக்கும் November 27, 2015 மும்பையில் நடைபெற்ற 16வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் டில் சச்சினின் மகன் அர்யுன் சதம் விளாசியுள்ளார். கவாஸ்கர் லெவனுக்கு எதிராக விளையாடிய அவர், ரோகித் சர்மா லெவனுக்கு எதிராக 106 ஓட்டங்களை எடுத்தார். அர்யுன் இடது கைப் பழக்கமுடைய துடுப்பாட்ட வீரரும் வேகப்பந்து வீச்சாளருமாவார். அர்யுன் இந்திய அணியில் விரைவில் இடம்பிடிப்பார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான பொண்டிங், டொனி, ரோகித் சர்மா, குக் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=4053&cat=2
-
- 0 replies
- 796 views
-
-
சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்! ஐ.எஸ்.எல் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி கெத்தான வெற்றியை பெற்று வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்துள்ளது சென்னையின் எஃப்.சி. சென்னை அணியின் வெற்றிக்கு பின் உள்ள கெத்தான 7 விஷயங்கள் இதோ... சி.எஸ்.கே ஸ்டைல் ஆட்டம்: சி.எஸ்.கே அணி எப்போதுமே ஐ.பி.எல் போட்டிகளின் தொடக்கத்தில் சறுக்கி இறுதியில் புயலாய் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து சிங்கம் போல் இறுதி போட்டிக்குள் நுழையும். இப்போது தடை, பிக்சிங் போன்ற விஷயங்களால் விசில் போட முடியாமல் தவித்த சென்னை ரசிகர்களின் போக்கை சற்றே கால்பந்து பக்கம் திருப்பி இர…
-
- 0 replies
- 562 views
-
-
மீண்டு வந்த அனிதா தங்கம் வென்றார் Published by J Anojan on 2019-10-25 13:32:47 (பதுளையிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்) 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாணத்திற்கான வீராங்கைன அனிதா ஜெகதீஸ்வரன் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப் பதக்கம் வெவன்று சாதைனப் படைத்துளளார். பதுளையில் நடைப்பெற்றுவரும் 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று காலை நடைப்பெற்ற மகளிருக்கான கோளூன்றி பாய்தலிலேயே அனிதா இந்தத் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தார், இவர் 3,30 உயரம் தாண்டியே தங்கத்தை தனதாக்கிக் கொண்டார், இதில் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீராங்கைன உதேனி வென்றார், இவர் 3,10 மீற்றர் உயரம் தாண்டினார், வெண்கலப் பதக்கத்தை 3,00 மீற்றர் உயர் …
-
- 0 replies
- 549 views
-
-
இன்னும் எத்தனை போட்டிகளை வெல்லப்போகிறீர்கள்?' - சானியா பேட்டி ஹைதராபாத்தில் தனது ஜூப்ளி ஹில்ஸ் இல்லத்தில் சானியா மிர்சா. | படம்: மொகமது யூசுப். மகளிர் இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் தற்போது உச்சத்தில் இருந்து வரும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 2015-ம் ஆண்டை அற்புதமாக முடித்ததோடு, 2016-ம் ஆண்டை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்று அபாரமாகத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் மெல்பர்னிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய சானியா மிர்சா அளித்த பேட்டி வருமாறு: "எப்போதும் வேட்டையாடப்படுவதை விட, வேட்டையாடுபவராக இருப்பது ஒரு சிறப்பான தருணம்தானே. உயர்மட்டத்தில் சீராக வெற்றிகளை குவிப்பது என்பது உடல், மனம் ஆகியவற்றுக்கு விடுக்கப்படும் பெரிய சவால். …
-
- 0 replies
- 399 views
-
-
தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றதுடன், மழை காரணமாக இரண்டாவது போட்டியில் முடிவேதும் கிடைக்கப் பெறாத நிலையில், ஜொஹன்னஸ்பேர்க்கில் நேற்று இடம்பெற்ற போட்டியில் வென்றே தொடரை 1-1 என்ற இங்கிலாந்து சமப்படுத்தியுள்ளது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: இங்கிலாந்து தென்னாபிரிக்கா: 256/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் மில்லர் ஆ.இ 69 (53), குயின்டன் டி கொக் 69 (81), ஜோ ஜோ ஸ்மட்ஸ் 31 (38), தெம்பா பவுமா 29 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 3/51 [10], சஹிப் மஹ்மூட் 1/17 [5], மொயின் அலி 1/42 [10]) இங்கிலாந்து: 257/8 (43.2 ஓவ. …
-
- 0 replies
- 380 views
-
-
இந்த ஆண்டு டெஸ்ட் சீசன் முடிவில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும்: ஒரு நாள் போட்டி கேப்டன் தோனி நம்பிக்கை தோனி. | படம்: பிடிஐ. இந்த ஆண்டு சீசன் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும் என ஒருநாள் போட்டிக்கான கேப்டன் தோனி தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி வரும் மாதங்களில் சொந்த மண்ணில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது டெஸ்ட் தர வரிசையில் 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி இந்த சீசன் முடிவில் முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் என தோனி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: …
-
- 0 replies
- 348 views
-