விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
இவ்வாண்டின் மிகப்பெரிய கோடைகாலத் திருவிழாவாக ஐரோப்பாவில் எதிர்பார்த்து காத்திருப்பது ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளாகும். இம்முறை சுவிற்சர்லாந்தும் ஓஸ்ரியாவும் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன. இதற்காக சுவிற்சர்லாந்தில் பாசல், சூரிச், ஜெனீவா, பேர்ன், ஆகிய நான்கு நகரங்களும் ஒஸ்ரியாவில் வியன், கிளாகன்பேர்ட், இன்ஸ்புறாக், சால்ஸ்பூர்க் ஆகிய நான்கு நகரங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன. மேலதிக விபரம் http://www.swissmurasam.info
-
- 296 replies
- 27.4k views
-
-
உலகக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் ஆர்ஜென்ரீனா ஆட்டம் "டிரா'வில் முடிந்தது [21 - June - 2008] பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் ஆர்ஜென்ரீனா அணிகள் கோல் எதுவும் போடாததால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இரு அணிகளும் தடுப்பு வியூகத்தை ஊடுருவி முன்னேற முடியாமல் தத்தளித்தன. ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி ஆட்டம் முடியும் தருணத்தில் கோல் அடிக்க கிடைத்த 2 வாய்ப்புக்களையும் தவறவிட்டார். இந்த உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆர்ஜென்ரீனாவும், பிரேசிலும் மோசமாக விளையாடி வருகின்றன. பராகுவே அணியுடன் பிரேசில் 20 என்று அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அதேபோல் ஆர்ஜ…
-
- 0 replies
- 1k views
-
-
கடைசி நிமிடத்தில் பெனால்டி கொடுத்த நடுவரை கொல்ல வேண்டும் போலிருந்தது [16 - June - 2008] * போலந்து பிரதமர் ஆவேசம் ஐரோப்பிய கால்பந்து போட்டியில் போலந்து அணி வெற்றியை நெருங்கிய கடைசி நிமிடங்களில் ஆஸ்திரியாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கிய இங்கிலாந்து நடுவர் ஹாவட் வெப்பை கொலை செய்ய வேண்டும் போல், தான் உணர்ந்ததாக போலந்து பிரதமர் டொனால்ட் துஸ்க் ஆவேசமாகக் கூறியிருக்கிறார். "ஒரு பிரதமர் என்ற முறையில் நான் நடுநிலைமையோடு இருக்க வேண்டியுள்ளது. ஆனால், கால்பந்து ரசிகர் என்ற முறையில் இந்த ஆட்டத்தை பார்த்த போது, அந்த நடுநிலைத் தன்மையை இழந்து ஆத்திரத்தில் பேசினேன். அந்த நேரத்தில் நடுவரைக் கொல்ல வேண்டும் போல் தோன்றியது. நடுவர்களும் தவறு செய்வர் என்பது எல்லோருக்கும் தெரியும…
-
- 1 reply
- 1.2k views
-
-
உதை பந்து எண்டால் என்ன? ஆக்களுக்கு உதைஞ்சு விளையாடுறதோ இல்லாடிக்கு பந்துக்கு உதைஞ்சு விளையாடுறதோ? இல்லாட்டிக்கு பந்துக்கு உதையுறமாதிரி பாசாங்கு செய்துகொண்டு ஆக்களுக்கு உதைஞ்சு விளையாடுறதோ? நான் பார்த்த அளவில கால்தடம் போடுறதுக்கு.. ஆக்களிண்ட கையக், கால பிடிச்சு இழுத்து விழுத்துறதுக்கு.. foul விளையாட்டுக்கு போர்த்துக்கல் அணியிட்ட எல்லாரும் பாடம் படிக்கவேணும். அவனுகள் முறைகேடா விளையாடிபோட்டு - மற்றவன இழுத்து விழுத்திப்போட்டு - எதுவும் தெரியாத அப்பாவி பாப்பா மாதிரி நடிக்கிற அழகோ அழகு.. இப்பிடி விளையாடுறது எல்லாராலையும் ஏலாது.. கீழ இருக்கிற விளையாட்டுக்கு பெயர்தான் உதை பந்தோ எண்டு ஒருக்கால் பார்த்து சொல்லுங்கோ..
-
- 2 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா கிரிக்கட் அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மீத்பூர் தேசிய கிரிக்கட் மைதானத்தில் இந்தப் போட்டி பிற்பகல் 2.30 ஆரம்பமாகும். விபரம்: http://www.swissmurasam.info/
-
- 1 reply
- 999 views
-
-
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் தொடர்ந்தும் பலம்பொருந்திய அணிகளுக்கு நெதர்லாந்து கால்பந்தாட்ட அணி அதிர்சி வைத்தியம் அளித்து வருகிறது. சுவிற்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற குழு ‘சீ;கான போட்டிகளில், பிரான்ஸை மிக இலகுவாகத் தோற்கடித்து நெதர்லாந்து காலிறுதிக்கு தகுதிபெற்றது. மற்றுமொரு ஆட்டத்தில் இத்தாலியும், ரோமானியாவும் சமநிலை பெற்றன. விபரம்: http://swissmurasam.info/content/blogcategory/72/54/
-
- 0 replies
- 788 views
-
-
இலங்கை அணியில் மீண்டும் சனத் [19 - May - 2008] இலங்கை அணியில் சனத் ஜெயசூரியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 38 வயதான ஜெயசூரியா இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் அவர் மீண்டும் இடம்பெற்றுள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக ஆடி வருவதையடுத்து ஜெயசூரியா மீண்டும் இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக உப்புல் தரங்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜூன் மாதம் 24 ஆம் திகதி பாகிஸ்தானில் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணப் போட்டி தொடங்குகிறது. thinakural.co…
-
- 8 replies
- 2.3k views
-
-
ராஜஸ்தான் அணியுடனான தோல்வியால் சென்னையின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலில் [26 - May - 2008] சென்னையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல். லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்ப கிங்ஸ் அணியின் போராட்டம் வீணானது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. மோர்கலின் அதிரடி ஆட்டம் எடுபடாமல் போனது. ஐ.பி.எல். தொடரில் 49 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில் சென்னை சுப்ப கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் கப்டன் வோர்ன் முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. வித்யூத…
-
- 3 replies
- 1.4k views
-
-
இத்தருணத்தில் உதைப்பந்தாட்ட ரசிகர்களை கேட்பதில் ஆச்சரியம் இருக்காது என நினைக்கிறேன். ஏனோ தெரியவில்லை பிறேசில் விளையாட்டு வீரர் கவ்வு எனது மனதை கவர்ந்தவர்.எத்தகைய சூழ்நிலையிலும் அவரின் வசீகர சிரிப்பை காணலாம். உங்களுக்கு பிடித்த வீரர்களை கூறுங்களேன். தயவு செய்து விளையாட்டு செய்திக்கு மாற்றுங்கள்.
-
- 6 replies
- 2.4k views
-
-
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி யாழில் ஆரம்பம் வடக்கின் பெரும் போர் என வாண்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையேயான துடுப்பாட்டப் போட்டி நேற்று காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் பூவா தலையா போட்டதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 102 வது தடவையான போட்டி முதல் மூன்று நாட்களுக்கு இடம் பெறவுள்ளது. pathivu.com
-
- 38 replies
- 7.3k views
-
-
2016 இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது யார்? ஆசியா உட்பட உலக நாடுகளிடையே போட்டி [07 - June - 2008] 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு ஆசியா உள்ளிட்ட உலக நாடுகளிடையே கடும்போட்டி நிலவுகிறது. சீனாவில் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டில் (824) நடைபெறவுள்ளது. அதற்கடுத்த போட்டி, 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ளது. அதற்கடுத்த போட்டியை நடத்துவதற்கு உலக நாடுகள் பல போட்டியிட்டு வருகின்றன. இருந்தாலும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளிடையில்தான் கடும் போட்டி இருக்குமெனத் தெரிகிறது. இதற்கிடையே போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு பல்வேறு நாடுகள், தங்களது சாதகமான அம்சங்களைத் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத…
-
- 1 reply
- 1.3k views
-
-
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளின் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 105 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷேவாக், முதலில் ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார். ஸ்மித்தும், அஸ்னோட்கரும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினர். அஸ்னோட்கர் 23 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை, பவுண்டரி லைனில் நின்ற மகரூப் நழுவ விட்டதால் அவர் மேற்கொண்டு 16 ரன்கள் தங்கள் அணிக்கு சேர்த்து விட்டார். முதல் விக்கெட்டுக்கு 6…
-
- 5 replies
- 1.7k views
-
-
சர்வதேச ஹொக்கிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு தங்கம் இந்தியாவுக்கு வெள்ளி [25 - May - 2008] மலேசியாவில் 8 நாடுகள் பங்குபற்றிய சர்வதேச ஹொக்கிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு தங்கப் பதக்கமும் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளது. முன்னாள் இந்திய ஹொக்கி நிர்வாகத்தில் திகழ்ந்த நிர்வாக சீர்கேடு காரணமாக அந்த நிர்வாகம் திடீரெனக் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. இப்புதிய நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டு முதன்முதலில் நடைபெற்ற சர்வதேச ஹொக்கிப் போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இப்போட்டி பற்றி புதிய இந்திய ஹொக்கி நிர்வாக உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; "சிறந்த இளம் ஹொக்கி வீரர்கள் இருந்தும் முன்னைய நி…
-
- 0 replies
- 801 views
-
-
கங்குலியை கேலி செய்த வோர்ன் [23 - May - 2008] கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் கங்குலியை ஷேன் வோர்ன் கேலி செய்ததாக அவுஸ்திரேலிய பத்திரிகை யொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கங்குலி களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது சில குறிப்புகள் எழுதி வைத்திருந்த தாள் அவரது பொக்கெட்டிலிருந்து பறந்து வந்துள்ளது. அதை எடுத்த ஷேன் வோர்ன் அதனைப் பிரித்து படித்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த கங்குலி அதிர்ச்சியடைந்துள்ளார். `அசட்டுச் சிரிப்புடன்' அந்தத் தாளை கங்குலியிடம் வோர்ன் கொடுத்துள்ளார். வோர்னின் இந்தச் செயல் கங்குலிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த இரு அணிகளும் விளையாடியபோது, ஒரு கேட்சை கிரேமிஸ…
-
- 0 replies
- 1.8k views
-
-
Top 25 catches of all time ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்துக்களின் யுத்தம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் இண்டைக்கு பெரிய துடுப்பாட்ட போட்டி ஒண்டு நடத்துது. நானும் ஒரு இந்து எண்டதால போய் என்ர பங்குக்கு கொஞ்ச படம் எடுத்து போட்டிருக்கு பாருங்கோ.மேலும் யாழ்.இந்து கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடை யிலான "இந்துக்களின் துடுப்பாட்டம்' (Battle of The HIndus) இன்று சனிக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமாகின்றது. நேரடி இணை ஒளிபரப்பில் (Live Scorecard) www.kokuvilhindu.net இன்று காலை 8 மணிக்குக் கொக்குவில் இந்துக் கல் லூரி மைதானத்தில் போட்டி ஆரம்பமாகின்றது. போட்டிக்கு பிரதம விருந்தினராக "செலிங்கோ இன்சூரன்ஸ் நிறு வனத்தின் யாழ்.பிராந்திய விற்பனை முகாமையாளர் பி.நந்திக்குமரனும் கௌரவ விருந்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
காம்பிர் , மெக்ராத்தின் சிறப்பான ஆட்டத்தால் டில்லி அணி பத்து ஓட்டங்களால் வெற்றி [02 - May - 2008] காம்பிர் , மெக்ராத்தின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க டில்லி டேர்டெவில்ஸ் அணி டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) ருவென்ரி 20 தொடர் நேற்று முன்தினம் டில்லியில் நடந்த பரபரப்பான லீக் போட்டியில் சேவாக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியைச் சந்தித்தது. நாணய சுழற்சியில் வென்ற டிராவிட் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். சேவாக், காம்பிர் இணைந்து டில்லிக்கு அசத்தல் தொடக்கம் கொடுத்தனர். சகிர்கான் வீசிய இரண்டாவது ஓவரில் காம்பிர் `ஹட்ரிக் ' பவு…
-
- 0 replies
- 1k views
-
-
மரடோனா மீது பீலே கடும் தாக்கு! 1991ஆம் ஆண்டு கொகெய்ன் போதை மருந்து எடுத்துக் கொண்டதாக, 1994ஆம் ஆண்டு ஸ்டெராய்ட்களை பயன்படுத்தியதாக தடை செய்யப்பட்ட அர்ஜென்டீன நட்சத்திரம் மரடோனாவின் சாதனைகளை பறிமுதல் செய்யவேன்டும் என்று பிரபல கால்பந்து நட்சத்திரம் பீலே கூறியுள்ளார். போதை மருந்து எடுத்துக் கொண்ட ஏமாற்றுக்காரரான மரடோனாவின் அனைத்துக் கால்பந்து சாதனைகளைக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் பீலே. "ஒலிம்பிக் வீரர்கள் போதை மருந்து எடுத்துக் கொண்டது தெரிய வந்தால் அவர்களது பதக்கங்கள் பறிமுதல் செய்யப்படும்போது இவர் மட்டும் என்ன விதி விலக்கா? என்று பீலே கேள்வி எழுப்பியுள்ளார். பிரேசில் செய்தித் தாள் ஒன்றிற்கு பீலே அளித்த பேட்டியில் "மரடோனா…
-
- 0 replies
- 1.1k views
-
-
அவுஸ்டிரேலிய அணியின் வருங்கால தலைவர் என நம்பப்படும் மைகல் கிளார்க் அண்மையில் மொடல் அழகி லாரா பிங்கேல் ஆகியோரின் நிச்சயார்த்தம் நடந்தது நேற்று லாரா பிங்கேலின் கார் எரிபொருள் முடிந்து கார் நடுரோட்டில் நின்றுவிட்டது அந்த இடத்துக்கு விரைந்த மைகல் கிளார்க் தன் காதலியின் காரினை நடுரோட்டில் தள்ளினார் நகைசுவை என்னவென்றால் லாராவுக்கு கிளார்க் அணிவித்த நிச்சயார்த்த மோதிரத்தின் விளை 200,000 அவுஸ்திரேலிய டொலர்கள் உந்த காருக்கு முழு டாங் பெற்றோல் அடிக்க 60 டொலரும் வராது Clarke caught in Lara runout THE glamour was gone after their engagement yesterday when Michael Clarke was left pushing Lara Bingle's car down the road after she ran out of petrol. The Australian cr…
-
- 15 replies
- 3.6k views
-
-
76 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா அகமதபாத்தில் தற்பொழுது நடைபெறும் 2வது மட்டைப்பந்து போட்டியில் தென்னாபிரிக்கா அணியினரின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துக்கு தாக்குப்பிடிக்க முடியாத இந்தியா சகல ஆட்டக்காரர்களையும் இழந்து 76 ஓட்டங்களையே பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சென்னையில் நடைபெற்ற போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது தெரிந்ததே.
-
- 9 replies
- 2.5k views
-
-
சென்னையில் இது கிரிக்கெட் காலம் ! சென்னையில் எப்போதெல்லாம் கிரிக்கெட் நடக்கிறதோ அப்போதெல்லாம் அதைக் காலி பண்ணுகிற மாதிரி மழை பெய்யும். இப்போதும் மழை பயத்தோடு ஆரம்பித்திருக்கிறது இந்தியாதென்னாப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச்! * ஆஸ்திரேலிய டூருக்காக இந்திய அணி வீரர்கள் மூன்று மாதம் ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருந்தார்கள். எனவே, கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் தலைமையில் எந்த விழாக்களும் நடக்காததால், இந்த முறை சென்னை முழுக்க விழா மேளாதான் ! தென்னாப்பிரிக்க வீரர்கள் சென்ற இடமெல்லாம், ""உலகின் மிகச் சிறந்த டூரிஸ்ட் ஸ்பாட்டான தென்னாப்பிரிக்காவுக்கு வாருங்கள்' என்று வாயார அழைத்துக் கொண்டே இருந்தார்கள். காரணம்,தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கிரெய்க் ஸ்மித்தான் இப்போது அந்த நாட்டின் டூர…
-
- 0 replies
- 1.1k views
-
-
தென்னாபிரிக்காவுக்கெதிரான ரெண்டாவது டெச்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்சினாலும் 90 ஓட்டங்களினாலும் படுதோல்வியடைந்தது. மூன்றாம் ஆட்ட முடிவுக்கு 7 ஓவர்கள் மீதமிருக்க இந்தியா தனது ரெண்டாவது இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஓட்ட விபரம், இந்தியா முதலாவது இன்னிங்ச் 76(?!) ஓட்டங்கள். தென்னாபிரிக்கா முதலாவது இன்னிங்ச் 494/7 விக்கெட்டுகள். இந்தியா ரெண்டாவது இன்னிங்ச் 332 ஓட்டங்கள். இது இந்தியா 2001( இலங்கைக்கெதிராக கொழும்பில் இன்னிங்ச் தோல்வி) இற்குப்பின் அடைந்த முதலாவது இன்னிங்ச் தோல்வி, கடந்த 50 ஆண்டுகளில் இந்திய மண்ணில் அடைந்த மிக மோசமான தோல்வி. 3 போட்டிகள் அடங்கிய இத்தொடரில் தென்னாபிரிக்கா 1/0 என்ற வகையில் முன்னணியில் திகழ்கிறது.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
2010 ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா இழக்க நேரிடலாம் - சர்வதேச ஹாக்கி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அளித்த இந்திய ஹாக்கி மேம்பாட்டுத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தவறினால் டெல்லியில் வரும் 2010ஆம் ஆண்டு நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா இழக்க நேரிடலாம் என்று சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் லாஸ்ஸின் நகரில் மார்ச் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய ஹாக்கிக் கூட்டமைப்பின் மேம்படுத்துதல் திட்டம் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளத
-
- 0 replies
- 925 views
-
-
10,000 ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் இணைந்தார் டிராவிட் [31 - March - 2008] இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 6 ஆவது சர்வதேச வீரர் என்ற சிறப்பை நேற்று முன்தினம் பெற்றார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான சென்னை டெஸ்டில் 80 ஓட்டங்கள் எடுத்த போது 10 ஆயிரம் ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொண்டார். தனது 120 ஆவது டெஸ்டில் புதிய மைல்கல்லை அவர் எட்டியிருக்கிறார். டிராவிட் இறுதியில் 111 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலும் டெண்டுல்கர், லாராவுக்கு அடுத்ததாக 10 ஆயிரம் ஓட்டங்களை எடுத்தவர் என்ற பெருமையும் டிராவிட்டுக்குக் கிடைத்…
-
- 0 replies
- 1.1k views
-