விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7837 topics in this forum
-
ரகசியங்களை வெளியிடுவேன்..! பாக். கிரிக்கெட் வாரியத்தை மிரட்டும் அப்ரிடி பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோசமான நிலையில் உள்ளது என்பது குறித்து ஓய்வு பெற்ற பின்னர் வெளியிடுவேன் என அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி மிரட்டல் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அப்ரிடி அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள சில வீரர்களை விட சிறந்த முறையில் விளையாடினேன் என உணர்ந்தேன். அதனால் ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டிக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறவில்லை. அணியில் இருந்து விலகும்பொழுது அது தகுதியுடைய ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்பினேன். நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோசமான நில…
-
- 0 replies
- 281 views
-
-
2016/2017 பருவகால லா லிகா(LA Liga) போட்டிகள் ஆரம்பமானது-ஓர் அலசல். 2016/2017 பருவகால லா லிகா(LA Liga) போட்டிகள் ஆரம்பமானது-ஓர் அலசல். 1929 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் கழகங்களுக்கிடையிலான முதற்தர காற்பந்து தொடராக ஆரம்பிக்கப்பட்ட லா லிகா போட்டிகள் உலகின் தலை சிறந்த காற்பந்து கழக அணிகளை உருவாக்குவதில் முன்னிலையில் உள்ளது. பார்சிலோனா, ரியல் மாட்ரிட் என உலகப் புகழ் பெற்ற அணிகளின் தாயகமாக லா லிகா தொடர் விளங்குகின்றது. 1929 பார்சிலோனா அணி ‘லா லிகா’ தொடரின் முதலாவது சாம்பியன் பட்டம் வென்றது. ரியல் மாட்ரிட் தனது முதல் சாம்பியன் பட்டத்தை 1932 ஆம் ஆண்டு பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் அத்லெடிகோ பில்பாவோ தொடர் வெற்றிகளை பெற்று கிண்ணங்களை பெற்றிருந்தாலும் பிற கா…
-
- 0 replies
- 332 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மீண்டும் உமர் அக்மல். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மீண்டும் உமர் அக்மல். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் ,மீண்டும் பாகிஸ்தான் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். T20 உலக கிண்ண போட்டிகளுக்குப் பின்னர் ஒழுங்குப பிரச்சனைகள், மற்றும் அணியின் தலைமைக்கு கீழ்ப்படியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உமர் அக்மல் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரிமியர் லீக், மற்றும் பாகிஸ்தானின் உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் மிகப்பெரிய அளவில் சாதித்து மீண்டும் அணைக்கு திரும்பியுள்ளார். அபுதாபியில் எதிர்வரும் 23 ம் திகதி மேற்கிந்திய தீவுக…
-
- 0 replies
- 487 views
-
-
வெஸ்ட் ஹாம், செல்சி போட்டியில் இரசிகர்கள் இரகளை வெஸ்ட் ஹாம் யுனைட்டெட், செல்சி ஆகிய அணிகளுக்கிடையில், இரசிகர்களின் இரகளையுடன் வெஸ்ட் ஹாம் கழக இலண்டன் அரங்கத்தில் இடம்பெற்ற, ஈ.எஃப்.எல் கிண்ண நான்காவது சுற்றுப் போட்டியில், செல்சியை வெஸ்ட் ஹாம் வென்றபோதும், பொலிஸாரினால் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் வென்ற இப்போட்டியின்போது, நூற்றுக்கணக்கான இரசிகர்கள் மோதி, கலமடக்கும் பொலிஸார் சனத்திரளினுள் நுழைந்த நிலையில், பிளாஸ்டிக் போத்தல்கள், இருக்கைகைகள், நாணயக் குற்றிகள் எறியப்பட்டிருந்தன. இப்பருவ காலத்திலேயே, புதிய அரங்குக்கு வெஸ்ட் ஹாம் நகர்ந்த நிலையில், கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற மிடில்ஸ்பேர்க் அணியுடனான போட்…
-
- 0 replies
- 215 views
-
-
தென்ஆப்ரிக்காவில் இப்படி ஒரு ஃபீல்டர்! ஈஸி கேட்ச்சை மிஸ் செய்த எல்கர் (வீடியோ) தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 85, தென் ஆப்ரிக்கா 326 ரன்கள் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடிக் கொண்டிருந்தது. டீன் எல்கர் என்ற சீனியர் ப்ளேயர் மூன்றாவது ஸ்லிப்பில் இருந்தார். அப்போதுதான் அந்த ஷாக் சம்பவம் நிகழ்ந்தது. தென் ஆப்ரிக்காவின் கைல் அபோட் ஆஃப் சைடில் வீசிய பந்தை டேவிட் வார்னர், ஓங்கி அடித்தார். பந்து மூன்றாவது ஸ்லிப்பில் இருந்த டீன் எல்கர் தலைக்கு மேலே பவுண்டரிக்கு சென்றது. ஆச்சரியம் என்னவெனில் கேட்ச் பிடிப்பதற…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கை கிரிக்கெட் கண்ட இளம் நட்சத்திரம் குஷல் மெண்டிஸ் அண்மையில் ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடர் மற்றும் முக்கோண ஒருநாள் தொடர் என்பவற்றில், இலங்கை அணி முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில், அனுபவம் குறைந்த இளம் வீரர்களைக் கொண்ட குழாமினை வைத்து இரு தொடர்களையும் வெற்றிகரமாக கைப்பற்றியது. இந்த வெற்றிகளுக்கு இளம் வீரரான “மொரட்டுவையின் இளவரசர்” என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்படும் 21 வயதேயான குஷல் மெண்டிஸ் பெரும் பாங்காற்றியிருந்தார். இலங்கை அணியின் எதிர்கால நம்பிக்கைக்குறிய வீரரான குஷல் குறித்தும், அவர் கடந்து வந்த பாதைகள் குறித்தும் அறிந்துகொள்வதற்காக thepapare.com அவருடன் பிரத்யேக நேர்காணல் ஒன்றை நடத்தி…
-
- 0 replies
- 448 views
-
-
ஆடுகளம் 5 மணி 15 நிமிடங்கள் நீடித்த ‘யுத்தம்’ அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஆட்டம், இவா கார்லோவிச் (குரோஷியா) - ஹோரோசியா ஜிபல்லோஸ் (அர்ஜென்டினா) ஆகிய வீரர்கள் இடையிலான மோதல் தான். இருவரும் நீயா நானா என்று சளைக்காமல் மல்லுகட்டியதால் இந்த ஆட்டத்தின் முடிவை அறிய 5 மணி 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுவும் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் இருவரும் தங்களது சர்வீசை மட்டுமே புள்ளியாக மாற்றிக்கொண்டே வந்ததால் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போனது. ஒரு வழியாக 42-வது கேமில் கார்லோவிச் வெற்றிக்குரிய புள்ளியை எடுத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கடைசி செட் மட்டும் 2 மணி 37 நிமிடங்கள் நடந்தது. …
-
- 0 replies
- 488 views
-
-
நியூசிலாந்து சுற்றுப்பயணம்: ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் விலகல் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 30-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் விலகி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டீவன் சுமித் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் …
-
- 0 replies
- 306 views
-
-
உலக தடகளப் போட்டி ; 400 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தென்னாபிரிக்க வீரர் லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள போட்டியில், நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் தென்னாபிரிக்க வீரர் வான் நியரிக் தங்க பதக்கம் வென்றார். உலக தடகள சம்பியன் ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் பங்குபற்றிய தென்னாபிரிக்க வீரர் வான் நியரிக் பந்தய தூரத்தை 43.98 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். பஹமாஸ் வீரர் ஸ்டீபன் 44.41 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், கட்டாரைச் சேர்ந்த ஹாரூன் 44.48 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தையும்…
-
- 0 replies
- 257 views
-
-
இனவெறித்தாக்குதலால் கோமா நிலைக்கு சென்ற பிரபல வீரர்! பிரித்தானியாவில் தாக்குதலுக்கு உள்ளானதால் கோமா நிலைக்கு சென்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தற்போது குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை இரவு பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் மர்ம நபர் ஒருவரால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமலோ (Mendeley Kumalo) திடீர் தாக்குதலுக்கு உள்ளானார். தாக்குதலில் பலத்த காயமடைந்த குமலோ (Mendeley Kumalo) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வீரர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் என்பதால் அவர் …
-
- 0 replies
- 269 views
-
-
தோனி கோபப்படுவார்... ஆனால் கேமரா இல்லாத போது: சுரேஷ் ரெய்னா பகிர்வு தோனி, ரெய்னா. - கோப்புப் படம். | சந்தீப் சக்சேனா. இந்திய அணிக்காக தோனியுடன் ஒருநாள் போட்டிகளில் பல வெற்றிக்கூட்டணிகளை அமைத்துள்ள சுரேஷ் ரெய்னா பிரேக் ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தோனியின் குணாதிசியங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். “தோனி என்ன நினைக்கிறார், எண்ணுகிறார் என்பதைக் கணிப்பது கடினம், அவர் கண்கள் ஒன்றையும் வெளிப்படுத்தாது, நாம் சில வேளைகளில், ‘கொஞ்சம் உணர்ச்சியைத்தான் காட்டேன்’ என்று கூற வேண்டும் போல் தோன்றும். அவர் நிறைய முறை கோபமடைந்துள்ளார். ஆனால் கேமராவில் நீங்கள் பார்க்க முடியாது. கேமரா எப்போது ஆனில் இல்லை என்ற…
-
- 0 replies
- 421 views
-
-
சச்சின் டெண்டுல்கர் அணிந்த 'நம்பர் 10' ஜெர்சிக்கு ஓய்வு? 2011 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸுக்கு கேட்ச் எடுத்த சச்சின் டெண்டுல்கர். - படம்.| ஏ.எப்.பி. சச்சின் டெண்டுல்கர் என்றால் நம்பர் 10; நம்பர் 10 என்றால் சச்சின் டெண்டுல்கர் என்று அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அவருடன் இணைந்திருப்பது அவர் அணிந்த நம்பர் 10 சீருடை. ஒருகாலத்தில் 99 என்ற எண்ணுடைய சீருடையை ஒருநாள் போட்டிகளில் அணிந்த சச்சின் டெண்டுல்கர் பிறகு அர்ஜெண்டீன கால்பந்து மேதை டீகோ மாரடோனாவின் தாக்கத்தில் நம்பர்10 என்ற சீருடையை அணிந்தார். அதோடு மட்டுமல்லாமல் 'Ten'dulkar' என்று அவர் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டதும் ஒரு காரணம்…
-
- 0 replies
- 497 views
-
-
பாக்.கிற்கு எதிரான டெஸ்ட்: 1135 பந்தில் ஒன்று கூட பவுன்சர் கிடையாது- நியூஸி வீரர்களின் 'மனித நேயம்' சார்ஜா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து வீச்சால் மரணமடைந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பவுன்சர் கூட வீசாமல் அஞ்சலி செலுத்தியுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. நியூசிலாந்து-பாகிஸ்தான் நடுவேயான மூன்றாவது டெஸ்ட் சார்ஜாவில் நடந்து கொண்டிருந்த நிலையில்தான் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைந்தார். இதையடுத்து இரு நாட்டு வீரர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். நியூசிலாந்து பயிற்சியாளர் அறிவுரையின்படி பாகிஸ்தானின் 2வது இன்னிங்சில் பவுன்சரே வீசாமல் ஹியூக்ஸ்சுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர். பாக்.கிற்கு எதிரான டெஸ்ட்: 1135 பந்தில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தானுடனான தோல்வியை ஜீரணிக்க சில காலம் செல்லும் என்கிறார் மெத்யூஸ் பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடைந்த தோல்வியை ஜீரணிக்க சில காலம் செல்லும் என இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். ‘‘பல்லேகலையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 377 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தபோது நாங்கள் சிறந்த நிலையில் இருந்ததாக நான் கருதினேன். எனினும் இறுதியில் அடைந்த தோல்வியை ஜீரணிப்பதற்கு நிச்சயமாக சில காலம் செல்லும். எமது அணியினரிடமிருந்து இத்தகைய ஆற்றல் வெளிப்பாடுகளை நாங்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தான் அணியினரோ கடைசி இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினர்’…
-
- 0 replies
- 223 views
-
-
சென்னையை கைகழுவுகிறார் தோனி : ராஞ்சியை மையமாக வைத்து புதிய ஐ.பி.எல். அணி? ராஞ்சியை மையமாக கொண்டு புதிய ஐ.பி.எல். அணி உருவாகவுள்ளதாகவும் அந்த அணியை தோனி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் இரு சீசன்களில் பங்கேற்க சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேறு இரு நகரங்களை மையமாக கொண்டு ஐ.பி.எல். அணிகள் உருவாகவுள்ளன. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிதான் கேப்டன் தோனியின் சொந்த ஊர் ஆகும். எனவே ராஞ்சியை மையமாக கொண்டு புதிய ஐ.பி.எல். அணியை உருவாக்கி அதனை வாங்க தோனி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியன் சூப்பர் லீக்கில் விளையாடி வரும் சென்னையின் எப்.சி., ஹாக்கி இந்தியா லீக்கில் விளையாடும் ராஞ்சி அணி, மகி ரேஸிங் டீம் போன…
-
- 0 replies
- 426 views
-
-
வெளிநாட்டுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஏற்றுமதியை தொடங்கியது சீனா! விளையாட்டுத்துறையில் சீனா கொடி கட்டி பறக்கும் நாடு. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனாவின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக்கும். ஜிம்னாஸ்டிக் , பளுதூக்குதல் போன்ற பிரிவுகளில் சீன வீரர்- வீராங்கனைகளை அடித்துக் கொள்ள முடியாது. ஆனால் அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது. இந்தியாவின் அண்டைநாடாக இருந்த போதிலும், சீனர்கள் கால்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கிரிக்கெட்டுக்கு கொடுப்பது இல்லை. ஹாங்காங் உள்ளிட்ட சில நகரங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் முதல்முறையாக சீனாவை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வ…
-
- 0 replies
- 683 views
-
-
டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி அப்ரிதி புதிய சாதனை l டெல்லி: பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிதி டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் கண்டெடுத்த அபாரமான கிரிக்கெட் வீரர்களில் அப்திரிக்கு முக்கியத்துவம் உண்டு. எதிரணியினரும் மதிக்கக் கூடிய திறமையாளர் அப்ரிதி. தற்போது தனது 86வது டுவென்டி 20 போட்டியில் அவர் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் டுவன்டி 20 போட்டிகளில் 86 விக்கெட்களைச் சாய்த்து டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள வீரராக உருவெடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டி துபாயில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டுவென்டி 20 போட்டியில்தான் இந்த …
-
- 0 replies
- 664 views
-
-
தொடர் ஊழலின் ஒரு பகுதியாக எல் சல்வடோர் கால்பந்து சபையின் தலைவர் கைது December 17, 2015 சர்வதேச கால்பந்து சபையின் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக எல் சல்வடோர் கால்பந்து சபையின் முன்னாள் தலைவர் ரெய்னால்டோ வாஸ்க்வெஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம் ரெய்னால்டோ நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3.20 மணியளவில் கொஸ்டா டெல் சொல் பகுதியில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பப் பகுதியில் ரெய்னால்டோ சரணடைவதற்கு எல் சல்வடோர் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. சட்டவிரோத செயற்பாடுகளுக்காக ரெய்னால்டோ கைது செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தின் கு…
-
- 0 replies
- 433 views
-
-
தெற்காசிய கால்பந்து : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்! தெற்காசிய கால்பந்து போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. திருவனந்தபுரத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பிற்பாதியில் 70வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சுபையர் அமிரி முதல் கோல் அடித்தார். இந்த கோலுக்கு அடுத்த 2வது நிமிடத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது. ஜெஜே லால்பெகுலா இந்த கோலை அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் வெற்றியை தீர்மானிக்க கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இ…
-
- 0 replies
- 516 views
-
-
கடந்த ஆண்டின் மிகச் சிறந்த கோல் இதுதான் (வீடியோ) ஃபிபா' பல்லான் டி ஆர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, கடந்த சீசனுக்கான சிறந்த கோல் அடித்த வீரருக்கு ஹங்கேரி ஜாம்பவான் ஃபிரென்க் புஸ்காஸ் பெயரில் விருது வழங்கப்படுவது வழக்கம். கடந்த சீசனில் சிறந்த கோல் அடித்த வீரருக்கான இந்த விருதை பிரேசிலியன் 2வது டிவிஷனில் அத்லெடிகோ அணிக்காக விளையாடி வரும் வென்டல் லிராவுக்கு வழங்கப்பட்டது. ஜியோனிஸோ அணிக்கு எதிராக வென்டல் அடித்த 'பைசைக்கிள் கிக்' ரசிகர்களை பிரமிக்க வைத்தது. http://www.vikatan.com/news/sports/57554-wendell-lira-bags-fifa-puskas-award.art
-
- 0 replies
- 489 views
-
-
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் -ச.விமல் ஆசியக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் இன்று ஆரம்பிக்கவுள்ளது. முதற் தடவையாக 5 அணிகள் பங்குபற்றும் தொடராக அமையவுள்ள அதேவேளை முதற் தடவையாக இருபதுக்கு-20 தொடராக நடைபெறவுள்ளது. 1986ஆம் ஆண்டு ஆசியக் கிரிக்கெட் சம்மேளனத்தினால் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் சாஜாவில் நடாத்தப்பட்டது. இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை இந்த தொடர் நடாத்தப்பட்டு வருகின்றது. 2014ஆம் ஆண்டு இறுதியாக பங்களாதேஷில் இந்த தொடர் நடைபெற்றது. நான்கு நாடுகள் பங்குபற்றிய இந்த தொடரில் இந்த வருடம் ஆசியக் கண்ட நான்கு துணை அங்கத்துவ நாடுகளில் இருந்து ஒரு நாடு தெரிவுகாண் போட்டிகள் மூலம் தெரிவாகி ஐந்தாவது நாடாக இணைந்துள்ளது. …
-
- 0 replies
- 416 views
-
-
மீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா By Akeel Shihab - சுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய டி20 குழாம் நேற்று (12) தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்தினால் வெளியிடப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியானது இம்மாத இறுதியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் பங்கேற்கவுள்ளது. …
-
- 0 replies
- 826 views
-
-
தென்னாபிரிக்க அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி By A.Pradhap இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்து ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டு தொடரை கைப்பற்றியது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் …
-
- 0 replies
- 393 views
-
-
பதவியை விட்டு ஓட மாட்டேன் : மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இக்கட்டான நிலையில் உள்ள இலங்கை அணியை மேலும் சிறப்பாக செயல்பட உதவுவேன் என அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் நம்பிக்கை தெரிவத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்தாவது போட்டியிலும் இலங்கை தோல்விகண்டதோடு தொடரை 3-0 என இழந்தது. டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்தது. இந்நிலையில் இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்லி தொடர்பில் கருத்து தெரிவித்த மெத்தியூஸ், தற்போது இலங்கை அணி இக்கட்டான நிலைமையில் உள்ளது. இதனால் நான் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இதை எதிர்த்து போராடுவேன். எங்கள் அணியில் எனக்கு ஆ…
-
- 0 replies
- 217 views
-
-
சங்காவின் சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி சங்காவின் சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி. இங்கிலாந்தின் கழக மட்ட அணிகளுக்கு இடையில் நடைபெறும் ரோயல் லண்டன் கிண்ணத்தின் 3 ஆவது காலிறுதிப் போட்டியில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் சங்காவின் ஆட்டமிழக்காத சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. நோர்த்தம்டம்ஷயார் மற்றும் சர்ரே அணிகள் மோதிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நோர்த்தம்டம்ஷயார் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தீர்மானித்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நோர்த்தம்டம்ஷயார் அணி 49 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது. சர்ரே அணியின் பந…
-
- 0 replies
- 279 views
-