விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை அயர்லாந்து அணி படைத்துள்ளது. அயர்லாந்து அணி 10 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள நிலையில் குறித்த சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 14 போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்க அணி ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. தென்னாப்பிரிக்கா வசமிருந்த சாதனையை தற்போது அயர்லாந்து அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315203
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்? Getty image கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கப்பட்டு ஐ.சி.சி யின் முழு அங்கத்துவ நாடுகளாக இவ்விரு அணிகளும் உள்வாங்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் அயர்லாந்து அணி தனது கன்னி டெஸ்ட் போட்டியில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணியை எதிர்வரும் 11 ஆம் திகதி எதிர்கொள்கிறது. 1993 ஆம் ஆண்டு முதல் ஐ.சி.சி இன் இணை உறுப்பு நாடாக இருந்த வந்த அயர்லாந்து அணி தமது முதலாவது ஒரு நாள் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு விளையாடியது. இத்தொ…
-
- 4 replies
- 586 views
-
-
அயர்லாந்துடன் டி 20-ல் இன்று இந்தியா மோதல் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 3 டி 20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் ஒரு கட்டமாக அயர்லாந்தில் அந்த அணிக்கு எதிராக இரு டி 20 ஆட்டங்களில் இந்தியா விளையாடுகிறது. இதன் முதல் ஆட்டம் டப்ளின் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமை டப்ளின் நகருக்கு இந்திய அணி சென்றடைந்தது. அங்குள்ள மெர்ச்சன்ட்ஸ் டெய்லர் பள்ளி மைதானத்தில் இந்திய அணி 3 குழுக்களாக பிரிந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் கேரி வில்சன் தலைமையில் அயர்லாந்து அணி இந்திய வீரர்களுக்குச் சவாலாக …
-
- 2 replies
- 776 views
-
-
அயர்லாந்தை வென்றது ஆப்கானிஸ்தான் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் அயர்லாந்தில் இடம்பெற்றுவரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், தொடரில், 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து, முதலில் ஆப்கானிஸ்தானை துடுப்பெடுத்தாட பணித்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, மொஹம்மட் ஷஷாட் 66, நஜிபுல்லா ஸட்றான் 59 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அயர்லாந்து அணி சார்பாக, கெவின் ஓ பிறைன், பரி மக்கிராத்தி ஆகியோர் தலா ந…
-
- 0 replies
- 252 views
-
-
அயல்நாடுகளில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணிக்கு இல்லை: ஹெய்டன் அயல்நாட்டு மைதானங்களில் தங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்கிறார் முன்னாள் ஆஸி. தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன். தி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: “தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியில் வந்தால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்பதே அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம். ஒன்று டெஸ்ட் போட்டியின் முதல் நாளை மோசமாகத் தொடங்குகின்றனர், அல்லது முடிவுத் தருணங்களில் கோட்டை விடுகின்றனர். ஆட்டத்தின் முக்கியத் தருணங்களை அவர்கள் இழக்கின்றனர். மேலும், அந்த அணி எழுப்பும் புகார் சத்தங்களும் நன்றா…
-
- 0 replies
- 507 views
-
-
அயல்நாட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன்: விராட் கோலி சாதனை ஜேசன் ஹோல்டரை புல் ஷாட்டில் பவுண்டரி அடிக்கும் கோலி. | படம்: ஏ.பி. மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்துச் சாதனை புரிந்தார். உணவு இடைவேளையின் போது இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 404 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 200 நாட் அவுட், அஸ்வின் 64 நாட் அவுட். இதன் மூலம் அயல்நாட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் ஆனார் விராட் கோலி. நேற்று 143 நாட் அவுட் என்று இன்று தொடங்கிய விராட் கோலி கண்கொள்ளாக் காட்சி கவர்டிரைவ்களை தொடர்ந்தார். நேற்று 1…
-
- 0 replies
- 366 views
-
-
அயல்நாட்டுப் பிட்ச்களில் வீசும் முறையைக் கற்க வேண்டிய நிலையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இதுவரை 24 போட்டிகளில் 115 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் இந்தியாவில் மட்டும் 95 விக்கெட்டுகளை 15 போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமான, புழுதி நிறைந்த ஆட்டக்களங்களில் மட்டுமே அவரால் ஆஃப் ஸ்பின்னர்களை திறமையாக வீச முடிகிறது என்பதை இது காட்டுகிறது. அவரது பிரச்சினை என்னவென்று பார்த்தால் அவர் வீசும் திசை மற்றும் லெந்த், அவர் கேட்கும் களவியூகம் என்று அயல்நாடுகளில் அவரால் திறம்பட வீச முடியாமல் இருப்பதே. அதுவும் பிரிஸ்பன், மெல்பர்ன், தற்போது சிட்னி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் பந்து வீச்சு எரிச்சலைக் கிளப்புவதாகவே…
-
- 0 replies
- 640 views
-
-
அரச அதிபர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது மருதங்கேணி பிரதேச செயலகம் யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக் கிண்ணம்-2016 கால்பந்தாட்டப்போட்டியில் மருத ங்கேணி பிரதேச செயலக அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது. நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப 1.00 மணியளவில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நலன்புரிக் கழக தலைவர் செ.ரகுநாதனின் தலைமையில் இப்போட்டி நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், கௌரவ விருந்தினராக தெல்லிப்பளை பிரதேச செயல…
-
- 0 replies
- 328 views
-
-
அரசியலுக்காய் ஊதிப்பெருப்பிக்கப்படும் போட்டி நிர்ணயச் சர்ச்சைகள் 'இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர், பாரிய நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்", 'ஆஜராகுமாறு அணித்தலைவர் மத்தியூஸூக்கு அழைப்பு", 'இலங்கை வீரர்கள், பாரிய நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில்" - இது, கடந்த சில நாட்களாக, இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் தலைப்புகள். இதில், செய்திகளை வெளியிட்ட பலருக்கும் அவற்றைப் பகிர்ந்தோருக்கும், இவற்றின் பின்னணி குறித்தான தெளிவு காணப்பட்டிருக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறு வீரர்களும் கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்டவர்களும், கடந்த ஆட்சிக்காலத்தில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்…
-
- 0 replies
- 375 views
-
-
'அரசியல் எங்கள் ஆட்டத்தின் நேர்த்தியை குறைக்காது' இலங்கை வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்காதது தங்களின் ஆட்டத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்று ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக ஏப்ரல் 3ஆம் தேதி துவங்க இருக்கும் 6வது ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் சென்னையில் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கை வீரர்கள் சென்னை போட்டிகளில் பங்கேற்க்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா, இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அரசியல் எங்களை சென…
-
- 21 replies
- 1.9k views
-
-
அரவிந்தவை நாடுகிறது இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளிலிருந்து வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வாவை நாடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகளுக்கான பொறுப்பு, அரவிந்தவுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி, அப்போட்டிகளின் பயிற்றுவிப்புப் பணியில் ஈடுபடும் அனைவரும், அரவிந்தவுக்குக் கீழ் பணியாற்றும்படி செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் பணி, இவருக்கு ஒப்படைக்கப்படவுள்ளது. அரவிந்த டி சில்வா, ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் அணி…
-
- 0 replies
- 288 views
-
-
அருணோதயா வீரன் புதிய சாதனை October 13, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்று வரும் தடகளத் தொடரில் ஓர் அங்கமான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி வீரன் என்.நெப்தெலி ஜொய்சன் கடந்த பதின்மூன்று வருட சாதனையை முறியடித்து தேசிய மட்டத்தில் புதிய சாதனை யைப் பதிவு செய்துள்ளார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தடகளத்தொடரில் மாதம்பை சேன நாயக்க மத்திய மகா வித்தியாலய வீரன் மதுரங்கா பெர்னாந்துவினால் 4 மீற்றர் உயரம் பாய்ந்து நிலைநாட்டப்பட்ட சாதனையை நடப்பு வருடத்தில் ஜொய்சன் 4.21 மீற்றர் உயரம் பாயந்து முறிய டித்துள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2020
-
- 0 replies
- 461 views
-
-
அருமையாக பிடியெடுத்த பார்வையாளருக்கு பணப்பரிசு கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் அப் போட்டியில் அடித்து சிக்ஸருக்கு சென்ற பந்தை அருமையாக பிடியெடுத்ததால் அவருக்கு ரூபா 2.5 இலட்சம் ரூபா பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து ஹமில்டன் செட்டன் பார்க் மைதானத்தில் அந்நாட்டு ஓடாகோ அணிக்கும், வெலிங்டன் அணிக்கும் இடையே இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. குறித்த போட்டியில் ஓடாகோ வோல்ஸ் அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தை சிக்சருக்கு விளாசினார். அப்போது மைதானத்திற்கு வெளியே போட்டியை ரசித்து கொண்டு இருந்த ஹென்ரூட் மைக்கல் என்ற கிரிக்கெட் ரசிகர் ஓடி வந்து பந்தை ஒற்றை கையால் மிகவும் அருமையாக பிடியெடுத்தார். இந்நில…
-
- 0 replies
- 846 views
-
-
அரேபியாவின் சிறந்த கால்பந்து வீரராக மொகமது சாலா தேர்வு 2017-ம் ஆண்டுக்கான சிறந்த அரேபிய கால்பந்து வீரர் என்ற விருதுக்கு லிவர்பூல் ஸ்டிரைக்கர் மொகமது சாலா தேர்வாகியுள்ளார். #LiverPool #MohamedSalah எகிப்து கால்பந்து அணியின் முன்கள வீரர் (striker) மொகமது சாலா. 25 வயதாகும் இவர் ஆர்எஸ் ரோமா அணியில் இருந்து லிவர்பூல் அணிக்கு மாறினார். லிவர்பூல் அணிக்கு மாறியதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பிரிமீயர் லீக் தொடரில் இதுவரை 17 கோல்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அந்த அணிக்காக 23 கோல்கள் அடித்துள்ளார். ரஷியாவில் ஜூன் மாதம் கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற இர…
-
- 0 replies
- 390 views
-
-
அரை இறுதியில் இளவாலை புனித ஹென்றியரசர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொத்மலை கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் அரை இறுதியில் விளையாடுவதற்கு யாழ். மாவட்டத்திலிருந்து இரண்டாவது அணியாக இளவாலை புனித ஹென்றியரசர் அணி தகுதிபெற்றுள்ளது. சிட்டி லீக் மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கு எதிரான மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் 2 ; 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றதன் மூலம் புனித ஹென்றியரசர் அணி அரை இறுதிக்குள் பிரவேசித்தது. இப் போட்டியின் முதலாவது பகுதியில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய புனித ஹென்றியரசர் கல்லூரி அணியினர் 9ஆவது நிம…
-
- 9 replies
- 1.4k views
-
-
அரை இறுதியில் நுழைந்தது யாழ் புனித பத்திரிசியார் பிருந்தாபன் மூன்று பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தினார் 2016-09-27 09:53:27 (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொத்மலை கிண்ண கால் இறுதிப் போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் அணி கோல் காப்பாளர் ஏ.பிருந்தாபன் 3 சமநிலை முறிப்பு பெனல்டிகளை அடுத்தடுத்து தடுத்து நிறுத்தியதன் பலனாக ஹமீத் அல் ஹுசெய்னி அணியை 3–1 பெனல்டி அடிப்படையில் புனித பத்திரிசியார் அணி வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது. சிட்டி புட்போல் லீக் மைதானத்தில் நேற்று பிற்பகல் கடும் உஷ்ணத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப் போட்டியின் 3…
-
- 1 reply
- 408 views
-
-
அரை குறை ஆடை அணிந்து வந்தால் பேட்டியை மறுத்தார் அம்லா February 07, 2016 தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரரான ஹசிம் அம்லா, தொகுப்பாளினி முறையாக ஆடை அணியாத காரணத்தினால் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் ஹசிம் அம்லா, இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் இரு அணிகள் மோதிய 5வது ஒருநாள் போட்டியின் போது, இவரை பேட்டி எடுப்பதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் Low Neck Top-யை அணிந்திருந்த காரணத்தினால், அம்லா பேட்டி கொடுக்க மறுத்து விட்டார். தொடர்ந்து பேட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெள…
-
- 0 replies
- 623 views
-
-
அரையிறுதிக்கான பிரகாச வாய்ப்புடன் பார்சிலோனா, லிவர்பூல் அணிகள் @Getty Images ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முதல்கட்ட காலிறுதிப் போட்டிகளில் பார்சிலோனா மற்றும் லிவர்பூல் அணிகள் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளன. இதில் ரோமா கழகத்துடனான போட்டியில் பார்சிலோனா இரண்டு ஓன் கோல்களின் உதவியுடன் வெற்றியை உறுதி செய்ததோடு மன்செஸ்டர் சிட்டி அணியுடனான போட்டியில் லிவர்பூல் முதல் 31 நிமிடங்களுக்குள்ளேயே கோல் மழை பொழிந்து வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டது. சம்பியன்ஸ் லீக் தொடரின் கடைசி இரண்டு முதல் கட்ட காலிறுதி போட்டிகளாகவே நேற்று (04) இரவு இந்த போட்டிகள் நடைபெற…
-
- 0 replies
- 315 views
-
-
அரையிறுதிக்கு பயேர்ன் மூனிச் தகுதி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாம் கட்ட கால் இறுதியில் போர்ட்டோ கழகத்திடம் சற்றும் எதிர்பாராதவகையில் தோல்வியடைந்த பயேர்ன் மியூனிச் கழகம், இரண்டாம் கட்ட கால் இறுதியில் அமோக வெற்றியீட்டி அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டது. போர்ட்டேவின் சொந்த மைதானத்தில் கடந்த 14ஆம் திகதி 1 – 3 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வியடைந்த பயேர்ன் மியூனிச் கழகம், நேற்று முன்தினம் மியூனிச்சில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் போட்டியில் 6 – 1 கோல்கள் அடிப்படையில் போர்ட்டே கழகத்தை வென்றது. இதன் பிரகாரம் ஒட்டுமொத்த கோல்கள் நிலையில் 7 க்கு 4 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற பயேர்ன் …
-
- 1 reply
- 385 views
-
-
அரையிறுதிப் போட்டிகளில் மெக்ஸிக்கோ, போர்த்துக்கல் ஃபீபா கூட்டமைப்புகளின் கிண்ணத் தொடருக்கான (கொன்படரேஷன் கிண்ணம்) போட்டிகளில், நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டு போட்டிகளில், மெக்ஸிக்கோ, போர்த்துக்கல் அணிகள் வெற்றிபெற்றன. இதன்மூலம் இவ்வணிகள், அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன. ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் இப்போட்டிகளில், குழு “ஏ”க்கான போட்டிகளே, நேற்று முன்தினம் இடம்பெற்றன. கஸனில் நடைபெற்ற போட்டியில், மெக்ஸிக்கோ அணியும் போட்டிகளை நடத்தும் ரஷ்ய அணியும் மோதின. போட்டியின் 25ஆவது நிமிடத்தில், ரஷ்யாவின் அலெக்ஸான்டர் சாமெடோவ், கோலொன்றைப் பெற்றுக் கொடுத்து, தனது அணிக்கு முன்னிலையை வழங்…
-
- 10 replies
- 778 views
-
-
அரையிறுதியில் இன்டர், யுனைட்டெட் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோப்பா லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகியன தகுதிபெற்றுள்ளன. ஜேர்மனியின் புண்டெலிஸ்கா கழகமான பயேர் 04 லெவர்குசனை தமது காலிறுதிப் போட்டியில் இன்டர் மிலனும், டென்மார்க் கழகமான கொப்பென்ஹகனை தமது காலிறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன. ஜேர்மனியின் டுஸல்ஃபோர்ட்டில் இன்ற…
-
- 0 replies
- 647 views
-
-
பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான பிரெஞ்சுக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, பரிஸ் ஸா ஜெர்மைன், லயோன் ஆகியவை தகுதிபெற்றுள்ளன. டியோனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றிருந்தது. இப்போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே கிடைக்கப் பெற்ற ஓவ்ண் கோல் மூலமாக பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த 12ஆவது நிமிடத்தில் டியோனின் முன்களவீரர் மெளனிர் செளயர் பெற்ற கோலின் கோலெண்ணிக்கையை டியோன் சமப்படுத்தியது. இந்நிலையில், முதற்பாதி முடிவடையும் தருணத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் கிலியான் மப்பே பெற்ற கோல் காரணமாக பரிஸ் ஸா ஜெர்மைன் …
-
- 0 replies
- 618 views
-
-
அரையிறுதியில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஈ.எவ்.எல் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகியன தகுதிபெற்றுள்ளன. மன்செஸ்டர் சிற்றி, நேற்று இடம்பெற்ற தமது காலிறுதிப் போட்டியில் லெய்செஸ்டர் சிற்றியை வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியின் 26ஆவது நிமிடத்தில் இல்கி குன்டோகன் கொடுத்த பந்தை பெர்னார்டோ சில்வா கோலாக்க மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் இறுதிக் கணத்தில் லெய்செஸ்டர் சிற்றிக்கு கிடைத்த பெனால்டியை ஜேமி வார்டி கோலாக்க, போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அண…
-
- 0 replies
- 262 views
-
-
அரோகரா! மீண்டும் மண் கவ்வியது இலங்கை அணி!! International Triangular Series: Australia v Sri Lanka 14-02-2006 at Brisbane Australia beat Sri Lanka by 9 wickets Sri Lanka won the toss and decided to bat Sri Lanka Innings 266 for 9 (50.0 overs) Australia Innings 267 for 1 (45.3 overs) இலங்கை அணிக்கு எமது வாழ்த்துக்கள்! தொடர்ந்து இதே மாதிரியான தோல்விகளை சந்திக்க எல்லா வல்ல ஈழ்பதீஸானை பிராத்திக்கிறேன்! :smile2:
-
- 0 replies
- 1.3k views
-
-
அர்ஜுனவின் மன உறுதி தேவை இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கான பயிற்சியை முடித்துக் கொண்டு இளம் சன்ஜீவ ரணதுங்க வீடு திரும்பி இருந்தார். அவரது மூத்த சகோதரர், ஆட்டம் எப்படி இருந்தது? என்று விசாரித்தார். பதிலளித்த சன்ஜீவ, “நான் நன்றாக ஆடினேன் ஆனால், தெற்கில் இருந்து வந்த அந்த கருத்த இளைஞனை நீங்கள் வந்து கட்டாயம் பார்க்க வேண்டும். அவனால் சாதாரணமாக பந்தை ஒரு மைல் தூரத்துக்கு அடிக்க முடிகிறது” என்றார். அடுத்த தினமே அர்ஜுன NCC இல் நடக்கும் 19 வயதுக்கு உட்பட்ட பயிற்சி முகாமுக்கு சென்றார். உண்மையில் அந்த திறமையை பார்த்து அவர் வியப்படைந்தார். அந்த இளைஞன் அவுஸ்திரேலியாவில் நடந்த ஐ.சி.சி. 19 வயதுக்கு உட்பட்ட முதலாவது உலகக் கிண்ண போட்…
-
- 0 replies
- 483 views
-