விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
ஷாய் ஹோப்பின் அதிரடியில் ஆப்கானை வைட்வொஷ் செய்தது மேற்கிந்திய தீவுகள் By Mohammed Rishad - 11/11/2019 Afghanistan Cricket Board ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று (11) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப் சதமடித்து அசத்த மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகள் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு ஒருநாள் போட்ட…
-
- 1 reply
- 601 views
- 1 follower
-
-
மக்கள் எண்ணுவதும், எனது வாழ்க்கையும் வித்தியாசமானது – தனுஷ்க குணத்திலக்க By Mohamed Azarudeen - 12/11/2019 இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான தனுஷ்க குணத்திலக்க தன்னைப் பற்றி பொது மக்கள் எண்ணுவது பற்றி நேர்காணல் ஒன்றை பிரபல கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு வழங்கியிருக்கின்றார். இந்த நேர்காணலில் நீண்ட நேரத்திற்கு தனது சொந்த வாழ்க்கை குறித்து பேசியிருந்த தனுஷ்க குணத்திலக்க தன்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகள் எதுவும் உண்மையில்லை என மறுத்திருக்கின்றார். ”சிலருக்கு பொறாமை அதிகமாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் எனது வாழ்க்கை முற…
-
- 0 replies
- 558 views
-
-
தீபக் சஹாரின் ஹெட்ரிக் மற்றும் அசத்தலான பந்து வீச்சுக் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு -20 போட்டியில் இந்திய அணி 30 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றியும் பெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரை கிண்ணத்தை தீர்மானிக்கும் தொடரின் இறுதிப் போட்டி நாகபூ…
-
- 0 replies
- 688 views
-
-
Sports News In Tamil Aus Vs Pak Imam Ul Haq Fielding Video David Warner யப்பா என்னா டைவ்..! பாகிஸ்தானில் இப்படி ஒரு ஃபீல்டரா? வியந்த ஆஸ்திரேலியா (வீடியோ) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி, இன்று (நவ.8) மூன்றாவது டி20 போட்டியில் விளையாடியது. இதில், ஆஸி., 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்று, டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டும் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலி…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
Published by J Anojan on 2019-11-07 22:25:43 ரோகித் சர்மா மற்றும் தவானின் அதிரடியான இணைப்பாட்டம் காரணமாக பகளாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்று பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று தொடரில் 1:3 என்ற கணக்கில் முன்ன்லையிலிருந்தது. இந் நிலையிலை தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு ராஜ்கோட்டில் ஆரம்பமானது. ந…
-
- 0 replies
- 620 views
-
-
இந்திய பெண்கள் ஹாக்கி வெற்றிப் பயணத்தின் ரகசியம் என்ன? தயக்கத்தில் இருந்து தங்கத்தை நோக்கி ஹர்ப்ரீத் கவுர் லம்பாவிளையாட்டு செய்தியாளர், பிபிசிக்காக 5 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைHOCKEY INDIA "பயப்பட வேண்டாம். பேசுங்கள்" என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறினார். புதிதாக நியமிக்கப்பட…
-
- 0 replies
- 438 views
- 1 follower
-
-
Thursday, November 7, 2019 - 6:00am ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடர்: ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய குழுநிலை போட்டிகள் சில இலங்கை நேரப்படி நேற்று (06) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, கடந்த 46 போட்டிகளில் முதல் முறையாக தனது சொந்த மைதானமான கேம்ப் நூவில் எந்த கோலையும் பெறாத பாசிலோனா அணி ஸ்லாவியா பரகுவேவுக்கு எதிரான போட்டியை கோலின்றி சமநிலை செய்தது. கடந்த 2012 தொடக்கம் தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் முதல் முறை கோல் அல்லது கோல் உதவியை செய்யாத லியொனல் மெஸ்ஸி உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வ…
-
- 0 replies
- 453 views
-
-
இறுதிநேர துடுப்பாட்ட சரிவால் வெற்றியை தவறவிட்ட இங்கிலாந்து! By A.Pradhap - சுற்றுலா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20I போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற நியூசிலாந்து அணி, தொடரில் 2-1 என முன்னிலைப்பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் இரு போட்டிகளிலும் அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றிருந்தன. அதன் அடிப்படையில் இன்று நெல்சனில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், இறுதிக் கட்டத்தில் போட்டியை தம்சவப்…
-
- 0 replies
- 418 views
-
-
கோலூன்றி பாய்தலில் யாழ்.சாவகச்சேரி கல்லூரி சாதிக்க காரணம் என்ன? - கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில், கோலூன்றி பாய்தலில் யாழ்.சாவகச்சேரி கல்லூரி வீர, வீராங்கனைகள் வரலாறு படைத்திருந்தனர். இந்த வெற்றிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த கல்லூரியின் கோலூன்றி பாய்தல் பயிற்றுவிப்பாளர் கோ. கணாதீபன். http://www.thepapare.com/video-all-island-school-games-2019-kanatheepan-kopalan-exclusive-interview-tamil/
-
- 0 replies
- 424 views
-
-
விராட் கோலிக்கு பிறந்தநாள் இன்று - 'சேஸிங் கிங்' குறித்த 6 சுவாரஸ்ய தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. டெல்லியில்…
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியிடம் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் 2019 ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத்தை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. ஜப்பானில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது. அதன்படி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு யோக்கஹாமாவில் தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே போட்டி ஆரம்பமானது. இப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 32:12 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து றக்பி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. https://www.virakesari.lk/article/68057
-
- 5 replies
- 841 views
- 1 follower
-
-
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் ரவிந்து, ஷெலிண்டா சிறந்த வீரர்களாக முடிசூடல் By Mohammed Rishad - எதிர்கால நட்சத்திர வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் இவ்வருடமும் நடைபெற்ற 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக சிலாபம், லுனுவிலை வேகட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரவிந்து டில்ஷான் பண்டார தெரிவானார். இம்முறை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 47.53 செக்கன்க…
-
- 0 replies
- 473 views
-
-
டி-20 உலகக் கிண்ண ஆரம்ப கட்டம் இலங்கைக்கு எவ்வாறு இருக்கும்? By Mohamed Shibly - ஐக்கிய அரபு இராச்சியத்தில் 16 நாட்கள், 51 போட்டிகளுக்கு பின் 2020 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான உலகத் தகுதிகாண் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (02) நிறைவடைந்தது. இந்த தொடரில் மூன்றாவது முறையாகவும் நெதர்லாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடர் என்ன? அவுஸ்திரேலியாவில் 2020 நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகவ…
-
- 0 replies
- 378 views
-
-
நடந்து முடிந்த 1000 ஐ.சி.சி. 20:20 போட்டிகளில் மறக்க முடியாத 20 முக்கிய பதிவுகள் Published by J Anojan on 2019-11-04 16:10:55 ( ஜெ.அனோஜன் ) சர்வதேச ஆண்களுக்கான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியானது கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் இடம்பெற்று வருகின்றது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் 1000 ஆவது ஆண்களுக்கான இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இப் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. இந் நிலையில் இதுவரை காலமும் இடம்பெற்ற 1000 ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு : 20 போட்டிகளில் மறக்க முட…
-
- 0 replies
- 424 views
-
-
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் முஷ்பிகுர் ரஹிமின் அசத்தலான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது. டெல்லியில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. 149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. லிட்டன் தாஸ் 7 ஓட்டத்துடனும், மொஹமட் நைம் 26 ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 39 ஓட்டத்துடனும் ஆட்டம…
-
- 1 reply
- 539 views
- 1 follower
-
-
யாழ்.வீராங்கனை தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாமரி வர்ணகுலசூரிய தலைமையிலான இலங்கை பெண்கள் பளுதூக்குதல் அணியிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனை ஆஷிகா இடம்பிடித்துள்ளார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி நேபாளத்தின் காட்மண்டுவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்-வீராங்கணை-தெற்காசிய/
-
- 1 reply
- 327 views
-
-
கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி சாதனை (நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீப்பிகா 3.25 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டி சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதே நிகழ்ச்சியில் பங்குபற்றிய அளவெட்டி, அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த பி. தனுசங்கவி (2.80 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் நான்காம் நாளான இன்றைய தினம் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தீப்பிகா நிலைநாட்டிய புதிய சாதனையுடன் மேலும் 4 சாத…
-
- 0 replies
- 500 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் இன்று 9 புதிய போட்டி சாதனைகள் ( நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த மேலும் ஒருவரான என். டக்சிதாக பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தில் புதிய சாதனை படைத்தார். அத்துடன் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் ஆண்களுக்கான குண்டேறிதல் போட்டியில் புதிய சாதனையை நிலைநாட்டினார். 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றன. போட்டியின் முதலாம் நாளான நேற்றைய தினம் ஏ. புவிதரன் புதிய சாதனை நிலைநாட்டிய நிலையில் அவரது கல்லூரியைச் சேர்ந்த டக்ச…
-
- 0 replies
- 302 views
-
-
அணிகள் : ஹூஸ்ட்டன் ஆஸ்ரோஸ் மற்றும் வாசிங்கிடன் நஷனல்ஸ் முதல் நான்கு வெற்றிகளை பெரும் அணி சாம்பியனாகும் முதலாவது போட்டி , அரங்கு ஹூஸ்ட்டன்
-
- 8 replies
- 972 views
-
-
ரியல் மெட்ரிட்டுக்கு இலகு வெற்றி: ஜுவன்டஸை மீட்டார் ரொனால்டோ By Mohamed Shibly - ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A தொடர்களில் முக்கிய போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (31) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு ரியல் மெட்ரிட் எதிர் லெகெனஸ் லெகெனசுக்கு எதிரான போட்டியில் 5-0 என இலகு வெற்றியீட்டிய ரியல் மெட்ரிட் அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவை விடவும் ஒரு புள்ளி இடைவெளியில் இரண்டாவது இடத்திற்கு முன்னெற்றம் கண்டது. பிரேசில் பதின்ம வயது வீரர் ரொட்ரிகோ பெற்ற கோல் மூலம் 7ஆவது நிமிடத்தில் …
-
- 0 replies
- 525 views
-
-
அவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகும் கிளென் மெக்ஸ்வெல் By Mohamed Azarudeen - 31/10/2019 Share on Facebook Tweet on Twitter அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரமான கிளென் மெக்ஸ்வெல் தனது உள ஆரோக்கியம் சரியாக இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையறை இன்றிய ஓய்வு ஒன்றினை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு எடுக்கவுள்ள செய்தியினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உளநல நிபுணரான Dr. மைக்கல் லோய்ட் உறுதி செய்திருக்கின்றார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் இலங்கை அணிக்கு எத…
-
- 0 replies
- 433 views
-
-
ஓய்வின் பின்னரும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்காக மசகட்சா By Mohamed Azarudeen - 31/10/2019 Share on Facebook Tweet on Twitter சர்வதேச கிரிக்கெட்டிற்கு அண்மையில் பிரியாவிடை கொடுத்திருந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹமில்டன் மசகட்சாவிற்கு புதிய பதவி ஒன்று கிடைத்திருக்கின்றது. அந்தவகையில், ஹமில்டன் மசகட்சா ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் புதிய கிரிக்கெட் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். தற்போது 36 வயதாகும் ஹமில்டன் மசகட்சா, தனக்கு கிடைத்திருக்கும் புதிய பதவியினை நவம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து பொறுப்பேற்கவுள்ளார். …
-
- 0 replies
- 413 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா : யாழ். மாணவன் புதிய சாதனை (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவக்கச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. புவிதரன் புதிய போட்டி சாதனை நிலைநாட்டி வட மாகாணத்துக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை ஈட்டிக்கொடுத்தார். போட்டியின் முதலாவது நாளான நேற்றைய தினம் புவிதரனின் சாதனையுடன் மேலும் 3 சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன. நேற்று காலை நடைபெற்ற கோலாகல ஆரம்ப விழா வைபவத்தின்போது கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்…
-
- 0 replies
- 333 views
-
-
மூன்று மாற்றங்களுடன் இரண்டாவது T20 போட்டியில் இலங்கை By Mohamed Azarudeen - சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டி சற்று முன்னர் கேப்பா நகரில் ஆரம்பமாகியிருக்கின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்றிருக்கும் இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக தெரிவு செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) அடிலைட் நகரில் இடம்பெற்று முடிந்த T20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று மூன்று போட்ட…
-
- 1 reply
- 402 views
-
-
ஜப்பானில் நடைபெற்ற ஸோஸோ கோல்ப் தொடரில் அமெரிக்க வீரர் டைகர் வுட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வெடுத்து வந்த 43 வயதான டைகர் வுட்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ஸோஸோ பி.ஜி.ஏ. தொடரில் முதலிடம் பிடித்தார். இது அவர் வென்ற 82 ஆவது பி.ஜி.ஏ. சாம்பியன் பட்டமாகும். இதன் மூலமாக 1965 இல் அமெரிக்காவின் சாம் ஸ்னீட் படைத்த சாதனையை (82 பட்டங்கள்) வுட்ஸ் சமன் செய்துள்ளார். https://www.virakesari.lk/article/67770
-
- 0 replies
- 403 views
-