Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நேற்று எனக்கு ஒரு அதிர்ஷ்டவசமான நாள். இங்கு நல்ல வெயில் நிலவுகிறது. மழை பொழிவதற்கான வாய்ப்பும் இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்தும் வாய்ந்த இருவரை நான் பேட்டி கண்டேன். ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக்; இன்னொருவர் 'லிட்டில் மாஸ்டர்' சுனில் கவாஸ்கர். காலை 7.30 மணிக்கு பேட்டிக்கு அவர்கள் ஒப்புக்கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மான்செஸ்டரில் உள்ள கதேட்ரல் கார்டன்சின் ரசிகர்கள் கூடுமிடத்துக்கு சென்றோம். போட்டி நடக்க ஒரு நாள் இருந்தது என்றாலும் சுனில் கவாஸ்கர் மற்றும் இன்சமாம் உல்-ஹக் ஆகியோர் வரும் தகவல் தெரிந்ததால் ஏராளமான இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணி இன்று …

    • 0 replies
    • 776 views
  2. இங்கிலாந்து 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி! மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 19ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. சௌத்தம்ரனிலுள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தின் பந்துவீச்சுக்குத் தடுமாறிய நிலையில் அவ்வணி, 44.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய அணி சார்பாக, நிக்கோலஸ…

  3. தொடரும் மழையின் ஆட்டம் ; கைவிடப்பட்ட அடுத்த போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே ஆரம்பமாகவிருந்தது. எனினும் தொடர்ச்சியாக அங்கு பெய்து வந்த மழை காரணமாக போட்டி நாணய சுழற்சிகூட மேற்கொள்ளப்படாது இலங்கை நேரப்படி 7.30 மணியளவில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது. நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட நான்காவது போட்டி இது என்பதும் …

    • 1 reply
    • 1.2k views
  4. 41 ஓட்டத்தால் வீழ்ந்தது பாகிஸ்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணியளவில் டவுன்டானில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை குவித்தது. 307 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இரண்டு ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.…

  5. ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். ஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், 'வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 வயத்துக்குட்பட்ட, 63 எடைய…

    • 0 replies
    • 495 views
  6. இந்திய கிரிக்கெட் அணி போன்ற உடையணிந்த, அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவர் டீ குடித்துக் கொண்டே ’Am sorry. I not supposed to tell this’ என்று திரும்ப திரும்ப பேசுவார். பாகிஸ்தான் நாட்டிடம் சிக்கிய இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக அந்நாட்டு ஊடகம் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான பாலகோட்டுக்குச் சென்று தீவிரவாத முகாமின் மீது பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் விமானத்தின்மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்…

    • 0 replies
    • 1.2k views
  7. மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது ஆட்டம்! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 16 ஆவது போட்டி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. இந் நிலையில் அங்கு தொடர்ந்தும் மழை பெய்தமையினால் போட்டி நாணய சுழற்சிக்கூட மேற்கொள்ளாது கைவிடப்பட்டுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டது. நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/58031

    • 2 replies
    • 908 views
  8. தோனியின் ராணுவ முத்திரை கிளவுஸ் விவகாரம் கிரிக்கெட் உலகை மட்டுமல்லாது, இந்திய ராணுவம், அரசியல்வாதிகள், ரசிகர்கள், கிரிக்கெட்டே பார்க்காத மக்கள் என அனைவரையும் பாதித்துள்ளது. ஒரு விக்கெட் கீப்பிங் கிளவுஸ் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துமா? இது என்ன.. இதை விட பெரிய தாக்கத்தை கூட ஏற்படுத்தும், என "நவீன சமூக வலைதள நாகரீகம்" நமக்கு உணர்த்தியுள்ளது. சரி, கிரிக்கெட் போட்டிகளில் ராணுவ முத்திரை பதித்த கிளவுஸை தோனி அணியலாமா.. கூடாதா? என்று கேட்டால்.. அணியக் கூடாது என்பது தான் நியாயமான பதிலாக இருக்கும். லெப்டினன்ட் கலோனல் இந்திய ராணுவத்தில் தோனி பாரா மிலிட்டரி பிரிவில் லெப்டினன்ட் கலோனல் என்ற உயரிய பதவியில் இருக்கிறார். இது கௌரவ பதவிதான் என்றாலும், இந்திய ராணுவத்தை பொ…

    • 0 replies
    • 688 views
  9. பிரெஞ்ச் பட்டத்தை 12 ஆவது முறையாகவும் தனதாக்கினார் நடால் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் நடால் 12 ஆவது முறையாகவும் சம்பியனாகியுள்ளார். ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 2 அம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபெல் நடாலும் 4 ஆம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மும் மோதினர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி 12 ஆவது முறையாகவும் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றி சம்பியனானார். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்ட…

  10. நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் சம்பியன் பட்டத்தை வென்றது போர்த்துக்கல் அணி! யு.இ.ஏ.எப். நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி போர்த்துக்கல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், போர்த்துக்கல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது. 2018-2019ஆம் ஆண்டு பருவக்காலத்திற்காக முதல் முறையாக ஆரம்பமான இத்தொடரிலேயே போர்த்துக்கல் அணி சாதித்துள்ளது. 55 நாட்டு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், போர்த்துக்கல் அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. போர்த்துக்கலின் எஸ்டாடியோ டூ ட்ராகோ விளையாடட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளு…

  11. தென்னாபிரிக்கா – மேற்கிந்திய தீவுகள் போட்டி மழையால் கைவிடப்பட்டது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 15 ஆவது லீக் போட்டியில் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற போட்டியில் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது. இதில் தென்னாபிரிக்கா அணி 2 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்தும் மழை பெய்தமையினால் போட்ட…

  12. இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸி. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டி விராட் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 352 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு 353 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 36 ஓட்டத்தனால் தோல்வி…

  13. 7 விக்கெட்டுக்களினால் நியூஸிலாந்து வெற்றி! ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 13 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் குல்பாடின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 6.00 மணிக்கு டொன்டனில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் 34 ஓட்டத்தையும், நூர் அலி ஸத்ரான் 31 ஓட்டத்தையும்…

  14. சகிப்பின் சதம் வீணானது ; 106 ஓட்டத்தால் இங்கிலாந்து வெற்றி! இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 280 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான தலைமையிலான இங்கிலாந்து மற்றும் மோத்ரசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே கார்டீப்பில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களடுத்தடுப்பை தேர்வுசெய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 386 ஓட்டங்கள‍ை குவித்தது. 387 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்…

  15. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 46 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியா சம்பியன் June 9, 2019 பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்டி வென்று முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில ஆஷ்லி பார்டி செக்குடியரசு வீராங்கனையான மார்கெட்டா வோன்ட்ரோசோவாவுடன் போட்டியிட்ட நிலையில் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரினை அவு;திரேலிய வீராங்கனை ஒருவர் வெல்வது 1973-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவே முதல் முறைய…

  16. இலங்கை – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது! இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி எதுவித பந்துகளும் வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு பிரிஸ்டலில் இடம்பெறவிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து அங்கு மழை பெய்து வந்ததன் காரணமாக போட்டி நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டுள்ளது. இந் நிலையில் பாகிஸ்தான் மற்றும இலங்க‍ை அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இலங்கை-பாகிஸ்தான்-போட்ட/

  17. மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அவுஸ்ரேலியா 15 ஓட்டங்களால் வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 15 ஓட்டங்களால் அவுஸ்ரேலிய அணி வெற்றிகொண்டது. உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. நொற்றிங்கமில் உள்ள ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக, கௌல்ரர் நைல் 92 ஓட்டங்களையும், ஸ…

    • 2 replies
    • 1.3k views
  18. உலகக்கிண்ண தொடரில் எங்களை வீழ்த்தவே முடியாது: பங்களாதேஷிற்கு உணர்த்தியது நியூஸிலாந்து! உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷ் அணியால், தம்மை வீழ்த்தவே முடியாது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது நியூஸிலாந்து அணி. உலகக்கிண்ண தொடரில் நியூஸிலாந்தை வீழ்த்தி, வரலாற்று பதிவை மாற்றியமைப்போம் என்ற நம்பிக்கையுடன் நேற்று, கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நியூஸிலாந்து அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொண்டது. எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, ஆடுகளத்திற்கு சாதகமான, இரண்டாவது துடுப்பாட்டதை தெரிவுசெய்தது. இதற்கமைய முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்…

  19. ரொஹித் சர்மா அதிரடி சதம்: 6 விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி! தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரொஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. சௌத் அம்ரனிலுள்ள, ரோஸ் பௌல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் மிரட்டலான பந்துவீச்சுக்கு மத்தியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227…

  20. எங்க‌ளுக்கு என்று த‌மிழீழ‌ம் கிடைச்சு , த‌மிழீழ‌ கிரிகெட் அணி ம‌ற்ற‌ நாடுக‌லுட‌ன் விளையாடும் போது பார்க்க‌ எப்ப‌டி இருக்கும் / எவ‌ள‌வு கால‌த்துக்கு மாற்றான் விளையாட‌ பார்க்கிற‌து , இத வாசித்து விட்டு க‌ற்ப‌ன‌ கூட‌ என்று நினைச்சு போடாதைங்கோ , க‌ன‌வு ஒரு நாள் ப‌லிக்கும் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு 🙏/ பைய‌ன்26

  21. பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை! அபாரமான பந்து வீச்சினால் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 34 ஓட்டத்தினால் வீழ்த்தியுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே கார்டீபில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 33 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை குவித்தபோது மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் மழை முடிவடைந்ததும் இரவு 8.30 மணியளவில் ஓவர்களின…

  22. பழி தீர்த்த பாகிஸ்தான் ! இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்று தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. 12 ஆவது சர்வதேச உலகக் கிண்ணத் தொடரின் ஆறவாது லீக் போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நோட்டிங்கமில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 348 ஓட்டங்களை குவித்தது. 349 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் …

    • 3 replies
    • 1.2k views
  23. தென்னாபிரிக்காவை வீழ்த்தி பங்களாதேஷ் அசத்தல் வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 5ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி தென்னாபிரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. அந்தவகையில் பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவுசெய்தது. லண்டன், ஹெனிங்ரன் ஒவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, அனைத்து வீரர்களின் பங்களிப்புடன் சவாலான ஓட்டத்தை குவித்துள்ளது. அந்தவகையில், அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக, ரஹிம் அதிர…

  24. ஆப்கானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை ஆரம்பித்த ஆஸி. ஆப்பானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டி நேற்றைய தினம் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் குல்பாடின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 6.00 மணிக்கு பிரிஸ்டலில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள், பலமான அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற ஆர்பித்தனர். தொடக்க ஆட்டக்காரர்களா…

  25. விக்கெட் இழப்பின்றி ஆடி முடித்த நியூஸிலாந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே கார்டிப்பில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கை அணிக்கு வழங்க இலங்கை அணியும் முதலில் துடுப்பெடுத்தாடியது. நியூஸிலாந்து அணியின் பந்துகளில் திணறிய இலங்கை அணி வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறியமையினால், இலங்கை அணி 29.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.