விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
உண்மையில் உதைபந்தாட்டத்தில் சில அனுபவங்களுடன் எழுதுகிறேன் .நெதர்லாந்து தோற்றது உண்மையில் வேதனையாய் இருந்தாலும் .........ஒரு உதை பந்தாட்ட காரன் [வீரன்] என்ற கண்ணோட்டத்தில் எழுதுகிறேன் ..............இன்று நடந்தது உதைபந்தாட்டம் .மிக அருமையாக விளையாடினார்கள் ....................இப்பிடி ஒரு விளையாட்டை பார்க்க உண்மையில் உதைபந்தாட்ட உலகம் குடுத்து வைக்கணும் .....நேற்றும் பார்த்திருப்பார்கள் . இன்றும் பார்த்திருப்பார்கள் ... .......இன்று நேரத்தை ஒதுக்கியதற்கு அதன் பயனை உணர்ந்திருப்பார்கள் ... .............. விளையாட்டின் அனுபவத்தின் பக்குவத்தில் எழுதுகிறேன் .இது தோல்வியல்ல .........இறுதிவரை போராடி ........வெற்றியை எட்டிப்பிடித்தும் ,வெல்லமுடியாமல் போனது சந்தர்ப்பமே .............…
-
- 6 replies
- 822 views
-
-
இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை… அசத்திய கோஹ்லி! இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி டிராவாகும் என்று எல்லோரும் நினைத்திருக்க, 207 ரன்களுக்கு இங்கிலாந்தை, இந்திய அணி சுருட்டியது ரசிகர்களுக்கு சின்ன சர்ப்பிரைஸ் தான். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இந்த ஆண்டை நம்பர் 1 அணியாக தர வரிசை பட்டியலில் உச்சத்தில் முடித்துள்ளது. இதைத் தாண்டி கோஹ்லிக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டு. இது வரை உடைக்கப்படாத சில சாதனைகளை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது. 18… டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லி தலைமை ஏற்றதில் இருந்து இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையவே இல்லை. 2015 ஆகஸ்ட் மாதம் இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் தொடர் தொடங்கி இங்கி…
-
- 0 replies
- 376 views
-
-
இதுவரை நீங்கள் பார்த்திராத `அற்புதமான' பெனால்டி கோல் (காணொளி) மிகவும் வியத்தகு முறையில் பெனால்டி கோல் அடித்த பாங்காக் விளையாட்டு கிளப், 20-19 என்ற கோல்கணக்கில் சாட்ரி ஆங்தொங் அணியை வென்றுள்ளது. மிகவும் அதிசயிக்கத்தக்க இந்த கோல் அடிக்கும் காணொளி, நீங்கள் ரசிக்க. http://www.bbc.com/tamil
-
- 0 replies
- 625 views
-
-
இத்தாலி ஓப்பன் டென்னிஸ் - சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்! ஃப்ரெஞ்ச் ஓப்பனுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் இத்தாலி ஓப்பன் சர்வதேச டென்னிஸ் போட்டி, ரோம் நகரில் நடந்துவருகிறது. இதில், இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடி, அரையிறுதிக்கு முன்னேறியது. இத்தாலி ஓப்பன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடி, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் இத்தாலியின் சாரா எர்ரானி - மார்ட்டினா டிரெவிசான் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. சானியா - ஷிவ்டோவா கூட்டணி, அடுத்து மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)- யங் ஜான் சான் (சீன தைபே) ஜோடியுடன…
-
- 0 replies
- 401 views
-
-
இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்பு யுவான்டஸ் கால்பந்து கிளப்பில் அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கப்படும் நிகழ்ச்சிக்காக இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். #Ronaldo கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தி ரியல்…
-
- 0 replies
- 341 views
-
-
இத்தாலி பகிரங்க டென்னிஸில் அண்டி மறே, செரீனா சம்பியன்கள்: 85 வருடங்களின் பின்னர் பிரித்தானிய ஆடவர் சம்பியன் இத்தாலி பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை அண்டி மறேயும் மகளிர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை செரீனா வில்லியம்ஸும் சுவீகரித்தனர். மட்றிட் பகிரங்க டென்னிஸ் போட்டியில் நொவாக் ஜோகோவிச்சிடம் அடைந்த தோல்வியை ரோம் பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் அண்டி மறே நிவர்த்தி செய்துகொண்டார். மழை காரணமாக டென்னிஸ் அரங்கு ஆபத்தைத் தோற்றுவிக்கலாம் என ஜோகோவிச் முறைப்பாடு செய்த போதிலும் போட்டியைத் தொடருமாறு மத்தியஸ்தர் ஸ்டெய்னர் கேட்டுக்கொண்டார்.…
-
- 0 replies
- 332 views
-
-
இத்தாலி பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் இத்தாலி பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 15 நிமிடம் 32.312 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். மோன்ஸா : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான இத்தாலி கிராண்ட்பிரி அங்குள்ள மோன்ஸா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.72 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் முன்னாள் சாம…
-
- 0 replies
- 175 views
-
-
இத்தாலியன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் நிக்கோ இத்தாலியன் கிரான்ட் பிறிக்ஸில் வெற்றி பெற்ற மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க் வெற்றி பெற்றார். இப்பந்தயத்தில் பெற்ற வெற்றி மூலம், தனக்கும், மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனுக்குமிடையிலான சம்பியன்ஷிப் புள்ளிகள் வித்தியாசத்தை இரண்டாகக் குறைத்துக் கொண்டார். இதுவரையில், இந்த வருடத்தில், ஆறு பந்தயங்களில் வென்றுள்ள ஹமில்டன் 250 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இருக்கின்ற நிலையில், ஏழு பந்தயங்களில் வென்றுள்ள றொஸ்பேர்க், 248 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டானியல் றிக்கார்டோ, 161 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகின்ற…
-
- 0 replies
- 431 views
-
-
என்னுடன் படிக்கும் ஒரு இத்தாலி நபர் மூலமாக எனக்கு இத்தகவல் கிடைத்தது. இத்தாலியில் US Palermo U-20 என்ற அணியில் விளையாடி தற்பொழுது US Vibonese (www.usvibonese.com) என்ற அணிக்கு விளையாடி வருகிறார். இவரின் வயது 18! நிச்சயமாக இது போன்ற வீரர்கள் எதிர்காலத்திலும் வரவேண்டும் என்று வாழ்த்துத்துவோம். Panushant Kulenthiran
-
- 7 replies
- 3.3k views
-
-
இந்திய கிரிக்கெட் மைதானங்களை தத்தெடுக்க ஆப்கன் விருப்பம் இந்திய கிரிக்கெட் மைதானங்களை தனது தத்து மைதானங்களாக கொள்வதற்கு ஆப்கானிஸ்தான் விரும்பங் கொண்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், முன்னேறிவரும் தனது கிரிக்கெட் அணிக்கென சொந்த மைதானம் ஒன்றை தத்தெடுப்பதற்கு எண்ணியுள்ளது. தனது அயல் நாடான இந்தியாவில் மைதானமொன்றை தத்தெடுப்பதற்கு விருப்பங்கொண்டுள்ளதாகஅந் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரவ் கானி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யும்போது இது குறித்த உதவியைக் கோரவேண்டும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் நசிமுல்லாஹ் டனிஷ் தெரி…
-
- 0 replies
- 297 views
-
-
இந்த 11 காரணங்களுக்காகவே.. ஆல்ஸ்டார்ஸ் கிரிக்கெட் அடிக்கடி நடக்கணும்! 1. 30 ஸ்டார்கள்! கிட்டத்தட்ட இன்றைய தலைமுறை கிரிக்கெட் பார்க்க துவங்கிய நாட்களில் கிரிக்கெட்டில் கில்லிகள் என்றால் இவர்கள் தான் என கூறப்பட்ட 30 பேர்களும் ஒரே அணியில் என்ற செய்தியே போதும் இந்த போட்டியை ரசிக்க. அதனை தாண்டி ஐபிஎல், பிக் பேஷ் போட்டிகளில் வெளிநாட்டு வீரர் இந்திய வீரருக்கு பந்து வீசுவது. வார்னே பந்தில் சச்சின் சிக்ஸ் அடிப்பது என்பதை பார்த்திருந்தாலும். லாரா, ஆம்ப்ரோஸ், வால்ஷ் போன்ற வீரர்களின் க்ளாஸிக் ஆட்டத்தை மீண்டும் பார்ப்பது டைம் மிஷின் ட்ரீட் தான்! 2.சச்சின் - கங்குலி - சேவாக் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி மூன்று ஆட்டங்களில் தோற்றிருந்தாலும் சச்சிந்சேவக்-கங்குலி மூன்ற…
-
- 0 replies
- 518 views
-
-
இந்த 35 வயதிலும்... எதை நிரூபிக்க ஃபெடரர் இன்னும் போராடுகிறார்? ஆஸ்திரேலிய ஓபன், இந்தியன் வெல்ஸ், மியாமி ஓபன் என இந்த ஆண்டு மட்டுமே ரோஜர் ஃபெடரர் வென்றது மூன்று பட்டங்கள். கடந்த ஆண்டு ஆறு மாத இஞ்சுரியால் முடங்கிக் கிடந்த ஃபெடரருக்கு இது அமர்க்கள சீசன். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தோற்றதால், ‘வயசாயிடுச்சு, இனிமே இவரால ஜெயிக்கமுடியாது' என்று கழித்துக்கட்டப்பட்ட ஒருவருக்காக, சமீபத்தில் உலகமே பிரார்த்தனைசெய்தது. அவர் ஜெயித்துவிடமாட்டாரா என ஏங்கியது. ஜெயித்ததும் சத்தமாகக் கத்தவில்லை; கொண்டாடவில்லை; கண்ணீர்விட்டு அழுதது; மறுகணம், 'அண்ணனோட அடுத்தபோட்டி எப்போ?' என்று ஆவலுடன் எதிர்பார்க்கத்தொடங்கிவிட்டது. இந்த அதிசயம்…
-
- 0 replies
- 607 views
-
-
முன்னணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி ஸ்பெனில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த ரியல்பெடிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சி 2 கோல் அடித்தார். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்தார். 2 கோல்கள் அடித்ததன் மூலம் மெஸ்சி இந்த ஆண்டில் மொத்தம் 86 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு ஜெர்மனி வீரர் ஜெரால்டு முல்லர் 1972-ம் ஆண்டு 85 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. மெஸ்சி பார்சிலோ அணிக்காக ஆடி 74 கோல்களையும், அர்ஜென்டினா அணிக்காக 12 கோல்களையும் இந்த ஆண்டு அடித்துள்ளார். http://www.alaikal.com/news/?p=118696 http://www.youtube.com/watch?v=GqveqV-6XuM
-
- 2 replies
- 485 views
-
-
இந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை சமன் செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை அவர் சமன் செய்தார். லயன் இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 9 டெஸ்டில் 55 விக்கெட்டை தொட்டார். அஸ்வின் 11 டெஸ்ட்டில் 55 விக்கெட் எடுத்த…
-
- 0 replies
- 321 views
-
-
இந்த ஆண்டு டெஸ்ட் சீசன் முடிவில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும்: ஒரு நாள் போட்டி கேப்டன் தோனி நம்பிக்கை தோனி. | படம்: பிடிஐ. இந்த ஆண்டு சீசன் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும் என ஒருநாள் போட்டிக்கான கேப்டன் தோனி தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி வரும் மாதங்களில் சொந்த மண்ணில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது டெஸ்ட் தர வரிசையில் 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி இந்த சீசன் முடிவில் முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் என தோனி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: …
-
- 0 replies
- 349 views
-
-
இந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் குழாம் நேற்று (18) அறவிக்கப்பட்டது. இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களுக்கு தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு Super Pool, Elite Pool, National Pool என மூன்று தேசிய மெய்வல்லுனர் …
-
- 0 replies
- 517 views
-
-
இந்த இலங்கை வீரரைப் போல் ஆட முயற்சிக்கிறேன்: சங்ககாரா சொன்ன நெகிழ்ச்சியான பதில் இந்திய பெண்களுக்கான கிரிக்கெட் அணியில் ஒளிரும் நட்சத்திங்களில் ஒருவரான ஸ்மிரிதி மந்தனா தனது துடுப்பாட்டத்திற்கு முன்மாதிரி முன்னாள் இலங்கை தலைவரான குமார் சங்ககாரா என தெரிவித்திருந்தார். அவரது துடுப்பாட்டத்தைக் கண்ட பலரும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி போன்று இருப்பதாக கூறி வருகின்றனர். இது குறித்து ஸ்மிரிதி மந்தனா கூறுகையில், நான் கங்குலின் ஆட்டத்தை ரசிப்பேன் , அவரது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் சங்ககாரவின் துடுப்பாட்டத்தை பார்த்து ஆடுவது எனகு சிறு வயதிலியருந்தே பழகிவிட்டது. சங்ககாரவை போல் கவர் ட்ரைவ் ஆட முயற்ச்சி செய்து வருகிறேன். சங்க…
-
- 0 replies
- 464 views
-
-
இந்த உலக கோப்பை தொடர்தான் இந்த 10 முன்னணி வீரர்களுக்கும் கடைசி! சென்னை: நடப்பு உலக கோப்பை தொடர் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கடைசி உலக கோப்பை தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் டோணியும் ஒருவர். வயது மூப்பு தவிர்த்து, காயம், டீம் பாலிடிக்ஸ் என பல காரணங்களால் வீரர்கள் அடுத்த உலக கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் தொடராமல், இடையிலேயே ஓய்வு பெற திட்டமிட்டுள்ளனர். சிலர் இந்த உலக கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறவும் திட்டமிட்டுள்ளனர். அதில் முக்கியமான பத்து வீரர்களின் பட்டியல் இதோ... டோணி இந்திய அணியின் கேப்டன் டோணிக்கு தற்போது 33 வயதாகிறது. உலக கோப்பையை வென்றாலும், தோற்றாலும், அதையே காரணமாக சொல்லிவிட…
-
- 0 replies
- 2k views
-
-
இந்த செயலுக்காக வெட்கப்பட வேண்டும்;ஜாஃப்ரி பய்காட் வேதனை!! by MohamedFebruary 13, 2021 இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாப்ரி பய்காட் இங்கிலாந்து அணியின் தேர்வாளர் எட் ஸ்மித் மற்றும் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். . சமீபமாகஇலங்கைக்கு எதிரான இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது …
-
- 0 replies
- 452 views
-
-
இந்த நூற்றாண்டின் சிறப்பான பந்து வீச்சு இதுதான்! கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்த ஸ்டார்க் ஒரே பந்து வீச்சு மூலம் கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்த ஸ்டார்க்- வீடியோ பெர்த்: இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு என கிரிக்கெட் உலகமே வர்ணிக்கிறது ஆஷஷ் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீசிய அந்த ஒரு பந்தை. ஆஷஷ் தொடரின் 3வது டெஸ்ட், வேகபந்து வீச்சுக்கு பிரபலமான பெர்த்-டபிள்யூஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதன் நான்காவது நாளில்தான் வியப்பூட்டும் அந்த ஒரு பந்து வீச்சு அதிசயம் நிகழ்ந்தது. இங்கிலாந்து அணியின், வலது கை பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் அவுட்டாக்கப்பட்ட விதம்தான், அந்த பந்தை, இந்த நூற்றாண்டின் ச…
-
- 0 replies
- 690 views
-
-
இருபெரும் ஜாம்பவான்கள் மோதுவதை ஆயிரக் கணக்கானோர் நேரடியாகப் பார்க்கின்றனர் இந்த நூற்றாண்டின் பெரும் குத்துச்சண்டை என்று வர்ணிக்கப்படும் போட்டியில் அமெரிக்க வீரர் ஃளோய்ட் மேவெதர் மற்றும் பிலிப்பைன்ஸ் வீரர் மணி பக்கியா ஆகியோர் லாஸ் வேகஸ் நகரில் இன்று சனிக்கிழமை மோதுகின்றனர். உலகின் இருபெரும் குத்துச்சண்டை ஜாம்பவான்களும் மோதுவதை சுமார் 11 ஆயிரம் ரசிகர்கள் நேரடியாக கண்டுகளிக்கவுள்ளனர். முன்னதாக, உடல் எடை பார்க்கும் நிகழ்வில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது, பக்கியா புன்னகைத்தார். மேவெதர் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. இதுவரை தோல்விகண்டிராத மேவெதர் பாக்ஸிங் உலகின் வில்லன் என்று வர்ணிக்கப்படுபவர். பக்கியா பிலிப்பைன்ஸின் தேசிய வீரராக வர்ணிக்கப்படுகி…
-
- 1 reply
- 431 views
-
-
இந்த போட்டியில் இவங்க ஜெயிக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு – கங்குலி கணிப்பு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்…
-
- 2 replies
- 772 views
-
-
இந்த முறையும் இவர் தான் உலகின் தலைசிறந்த தடகள வீரர்! உலகின் வேகமான மனிதர் உசேன் போல்ட் ஆறாவது முறையாக உலகின் சிறந்த தடகள வீரர் விருதைப் பெற்றுள்ளார். தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம் IIAF (International Association of Athletics Federations) ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதளிப்பது வழக்கம். ஒன்பது முறை ஒலிம்பிக் சாம்பியனான போல்ட் இதுவரை 5 முறை உலகின் தலைசிறந்த தடகள வீரர் விருதை பெற்றுள்ளார். இந்த ஆண்டும் விருதை தக்க வைத்து ஆறாவது முறையாக தலைசிறந்த தடகள வீரர் என்னும் மகுடத்தை சூட்டிக் கொண்டுள்ளார். தலைசிறந்த தடகள வீராங்கனையாக எத்தியோப்பியா நாட்டின் அல்மாஸ் அயனா தேர்ந்தெட…
-
- 0 replies
- 424 views
-
-
இந்த வருடத்தில் 1700 கோடிகள் சம்பாதித்த பெக்காம் December 27, 2015 இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான டேவிட் பெக்காமும் அவரது மனைவியும் இணைந்து இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1700 கோடிகளை சம்பாதித்துள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. பெக்காம் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போது உலக அளவில் புகழ் பெற்றவர். குறிப்பாக தனது சிகை அலங்காரத்தின் மூலம் உலகின் கால்பந்து ரசிகர்களை கவர்ந்தவர். ஓய்வுபெற்ற பின்னரும் பெக்காமுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆதரவு நீங்கவில்லை. கால்பந்தாட்டத்தில் சம்பாதித்த பணத்தின் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அத்துடன் விளம்பரம் மூலமும் சம்பாதித்து வருகிறார். அவரது மனைவி விக்டோரியா பெஷன் டிசைனராக உள்ளார்…
-
- 0 replies
- 443 views
-
-
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 கால்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற மர்ஸெய் அணியுடனான போட்டியில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. இப்போட்டியின் 10ஆவது நிமிடத்தில் கிலியான் மப்பே பெற்ற கோல் காரணமாக பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றதுடன், பின்னர் நேமரின் பந்துப் பரிமாற்றமொன்றை மர்ஸெய்யின் வீரர் றொலண்டோ போட்டியின் 27ஆவது நிமிடத்தில் தனது கோல் கம்பத்துக்குள் செலுத்த தமது முன்னிலையை பரிஸ் ஸா ஜெர்மைன் இரட்டிப்பாக்கிக் கொண்டதுடன், நேமர் கொடுத்த பந்தை எடின்சன் கவானி போட்டியின் 55ஆவது நிமிடத்தில் கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. இப்போட்ட…
-
- 3 replies
- 510 views
-