விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்! அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி ஃபிஃபாவின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் இம்முறை தகுதி பெறவில்லை. 2006-ம் ஆண்டிலிருந்து தவறாமல் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி வந்தார் மெஸ்ஸி. 2008-ம் ஆண்டிலிருந்து கால்பந்து உலகின் மிக உயரிய விருதான, இதை ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், 2016-ம் ஆண்டு செய்யப்பட்ட சிறு மாற்றத்தின்படி கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜூலை 15 வரை ஆடிய ஆட்டங்களைக் கணக்கில் கொண்டு இவ்விருது அளிக்கப்படும் என்பதை ஃபிஃபா அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஓராண்டுக் காலமாக ஆடிய சிறப்பான ஆட்…
-
- 2 replies
- 930 views
-
-
14 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத தோல்வி: தரவரிசை 55-ல் உள்ள வீரரிடம் முதல் முறை தோல்வி; ரோஜர் பெடரர் அதிர்ச்சி ரோஜர் பெடரர், ஜான் மில்மேன். | ஏ.பி. யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு 4வது சுற்றில் உலகத்தரவரிசை 2ம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர், இந்தத் தொடரில் தரவரிசை வழங்கப்படாத ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனிடம் 3-6, 7-5, 7-6, 7-6 என்ற செட்களில் தோற்று அதிர்ச்சி வெளியேற்றம் கண்டார். யு.எஸ். ஓபன் டென்னிஸில் ஜான் மில்மேனுக்கு தரவரிசை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ‘அன்சீடட்’ வீரரிடம் பெடரர் அதிர்ச்சித் தோல்வி கண்டார். 14 ஆண்டுகால யு.எஸ்.ஓபன் டென்னிஸில் இல்லாத அளவுக்கு ரோஜர் பெடரர் மு…
-
- 1 reply
- 505 views
-
-
சானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார் சானியா மிர்சா : கோப்புப்படம் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் வங்கதேச கிரிக்கெட் வீரர் முறைதவறி நடந்ததாகக் கூறி சானியாவின் கணவர் சோயிப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்ட சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். இவை மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடந்த டென்னிஸ் போட்டிகளிலும் சானியா மிர்ஸா சிறப்ப…
-
- 0 replies
- 627 views
-
-
ஐரோப்பிய விருதுகள் அனைத்தையும் தட்டிச் சென்ற ரியல் மெட்ரிட் வீரர்கள் லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கண்ணத்தை வென்ற ரியல் மெட்ரிட் வீரர்கள், ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) அனைத்து பிரிவுகளிலும் விருதுகளை தட்டிச் சென்றனர். பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிவரை முன்னேறிய குரோஷிய அணித்தலைவரும் ரியல் மெட்ரிட்டின் மத்தியகள வீரருமான லூகா மொட்ரிக், முன்னாள் சக அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லிவர்பூல் முன்கள வீரர் முஹமட் சலாஹ் ஆகியோரைப் பின்தள்ளி ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார். மொனாகோவில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வில் ரியல் மெ…
-
- 0 replies
- 643 views
-
-
உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் 2018 - ரஷ்யா - ச. விமல் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணி பற்றிய விபரங்களும் தமிழ் மிரரின் விளையாட்டு கட்டுரைகள் பகுதியில் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளன. அதன்படி 32 அணிகளது கடந்த காலங்கள், இம்முறை உலகக் கிண்ணம் எவ்வாறு அமையப்போகிறது என்ற விடயங்கள் அடங்கலான தகவல்களை தரவுள்ளோம். இந்த கட்டுரையின் முதல் அணியாக உலகக் கிண்ணத்தை நடாத்தும் ரஷ்ய அணி பற்றிய கட்டுரை இங்கே தொடர்கிறது. முதற் தடவையாக ரஷ்யா உலகக் கிண்ணத் தொடரை நடாத்துகின்றது. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் சோவியத் ஒன…
-
- 262 replies
- 33.8k views
-
-
ஆப்கானை வீழ்த்தி ஒருநாள் தொடரை தக்கவைத்த அயர்லாந்து அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1 – 1 என்று அயர்லாந்து அணி சமநிலை செய்துள்ளது. இன்றைய தினம் ஆப்கானிஸ்தான் அணி தமது 100 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தது விஷேட அம்சமாகும். அத்தோடு தமது அணி விளையாடிய முதல் 100 போட்டிகளிலும் விளையாடிய வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொஹமட் நபி படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முத…
-
- 0 replies
- 492 views
-
-
ஆட்ட நிர்ணய சதி ; இலங்கை அணியின் முன்னாள் தலைவரிடம் விசாரணை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஒருவர் ஆட்ட நிர்ணய சதி முயற்சிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளாகி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரின் கையடக்கத்தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர் இதேவேளை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் ஆட்ட நிர்ணய சதி முயற்சியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரு இந்தியர்களை கைதுசெய்துள்ளனர். காலி, தம்புள்ள அணிகளிற்கு இடையில் கண்டியில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் இருபதிற்கு 20 போட்டியின் போது சந்தேகத்த…
-
- 0 replies
- 696 views
-
-
சம்பியனானது டில்கோ கொன்கியூறோஸ் டில்கோ கொன்கியூறோஸ் அணியின் அல்பேர்ட் தனேஸ் அதிரடியாகவும் சிறப்பாகவும் செயற்பட்டு இரண்டு கோல்களைப் பெற வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின் முதலாவது பருவகாலத்தின் சம்பியன்களாக டில்கோ கொன்கியூறோஸ் அணி முடிசூடிக் கொண்டது. இத்தொடரின் தகுதிச் சுற்றின் முதலாவது போட்டியில், டில்கோ அணி, கிளியூர் கிங்ஸ் அணியை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இரண்டாவது போட்டியில் வல்வை கால்பந்தாட்டக் கழக அணி, மன்னார் கால்பந்தாட்டக் கழக அணியை வென்றது. இரண்டாவது இறுதிப் போட்டி அணியை தீர்மானிக்கும் மற்றுமொரு போட்டியில் கிளியூர் அணியை எதிர்த்து வல்வை அணி மோதியது. இதில் கிளியூர் அணி வெற்றிபெற்றது. டில்கோ, கிளியூர் அணிக…
-
- 0 replies
- 622 views
-
-
‘உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட்’ கால்பந்து வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறல் பயிற்சியில் உசைன் போல்ட். | ஏ.எப்.பி. உலகின் அதிவேக மனிதன், ஒலிம்பிக் தங்கங்கள் வென்ற நாயகன், உசைன் போல்ட் கூட தன்னால் தொழில்பூர்வ கால்பந்தாட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இந்த வாரத்தில் ஒரு அமெச்சூர் அணியுடன் அவர் முதல் போட்டியில் களமிறங்க வாய்ப்பிருப்பதால் கடுமையாக தன் உடற்தகுதியை மேம்படுத்த போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட்டுக்கு ஆஸ்திரேலியாவின் செண்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் அணி அவரது கால்பந்து கனவை நிறைவேற்ற வாய்ப்பள…
-
- 0 replies
- 644 views
-
-
“ 35 ” ஐ எட்டிப்பிடிக்கும் மலிங்க - முற்றுப்புள்ளி வைப்பாரா? தொடர்வாரா? தலை முடியில் ஆங்காங்கே பொன்னிறமும் கறுப்பு நிறம் கலந்த முடியுடன் சிங்கத்தைப் போன்ற பார்வையுடன் இலக்கை நேக்கிப் பார்த்தபடி எதிரணியை திணறடிக்கும் நோக்குடன் ஓடிவரும் யோக்கர் மன்னன் லசித் மலிங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த வரம். வேகப்பந்து வீச்சாளர்களுக்கே உரிய ஆக்ரோஷமான வேகமும், பந்து வீச்சில் வேறெந்த பந்து வீச்சாளர்களும் கையாண்டிராத வித்தியாசமான பாணியும், தனது யோக்கர் பந்து வீச்சின் மூலம் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்களுக்கு கிரிக்கெட்டில் அச்சுறுத்தலாக விளங்கிய இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டிகளின் முன்னாள் தலைவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை இலங்கைக்…
-
- 1 reply
- 709 views
-
-
அவுஸ்திரேலிய வீரர்களின் ஆட்ட நிர்ணயசதி- புதிய வீடியோ வெளியாகின்றது அவுஸ்திரேலிய வீரர்களிற்கு எதிரான ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மற்றுமொரு புலனாய்வு வீடியோவை அல்ஜசீரா வெளியிடவுள்ளது. இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் 2017 இல் ராஞ்சியில் இடம்பெற்ற டெஸ்டில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக தனது முன்னையை வீடியோவில் அல்ஜசீரா குற்றம்சாட்டியிருந்தது. ஆடுகளம் இந்திய அணிக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்த அல்ஜசீரா அவுஸ்திரேலிய வீரர்கள் சிலர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே அல்ஜசீரா புதிய வீடியோவொன்றை வெளியிடவுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ள…
-
- 0 replies
- 394 views
-
-
உலகசாதனைக்கு இன்னும் 7 விக். தான்; தன்னைக் கடந்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனை முறியடிக்கப் போவது யார்?: கிளென் மெக்ரா பதில் ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்.| ஏ.பி. டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா. இவரது விக்கெட்டுகள் எண்ணிக்கை 563. ஜேம்ஸ் ஆண்டர்சன் இதனைக் கடந்து உலகின் அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளராக இன்னும் 7 விக்கெட்டுகளே தேவை. இந்தியா-இங்கிலாந்து தொடரின் 4வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் வரும் வியாழனன்று தொடங்க இருக்கிறது, இன்னமும் ஒரு டெஸ்ட் உள்ளது என்பதால் கிளென் மெக்ராவை 2வது இடத்துக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் தள்ளி விடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றனர். …
-
- 1 reply
- 378 views
-
-
பெல்ஜியம் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் வெட்டல் பெல்ஜியம் கிரான்ட் பிறிக்ஸில், நடப்பாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான தனது போட்டியாளரான மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனைத் தாண்டி வென்ற பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல், நடப்பாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், ஹமில்டனின் முன்னிலையை 17 புள்ளிகளாகக் குறைத்துக் கொண்டார். நேற்று இடம்பெற்ற குறித்த பந்தயத்தை ஹமில்டனே முதல்நிலையிலிருந்து ஆரம்பித்திருந்தபோதும் இரண்டாவதாக பந்தயத்தை ஆரம்பித்திருந்த வெட்டல் முதலாவது சுற்றிலேயே ஹமில்டனை முந்தியதுடன், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றார். …
-
- 0 replies
- 575 views
-
-
எங்களுடன் ஒரு டெஸ்ட்டில் விளையாடுவதே நேர விரயம் என்று இங்கிலாந்து நினைத்தது; வென்று காட்டினோம்: சனத் ஜெயசூரியா 1996 உலகக்கோப்பையை வென்று இலங்கை அணி தங்களை எதிர்கொண்டு ஆட்கொள்ள வேண்டிய சக்தியாக உலக அணிகளுக்குச் சவால் விடுத்துக் கொண்டிருந்த தருணம். ரணதுங்கா கேப்டன்சியில் பிரமாதமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம். மேலும், இலங்கை அணியைக் கண்டாலே அனைவருக்கும் ஒரு பயம் கலந்த எரிச்சலும், தேவையற்ற ஏளனமும் இருந்த காலக்கட்டம். ஜெயசூரியா, ரொமேஷ் கலுவிதரன, அரவிந்த டிசில்வா ஆகியோர் எதிரணியை கதிகலங்கச் செய்து கொண்டிருந்தனர், பந்து வீச்சில் முரளிதரன் ஒரு பேரச்சுறுத்தலாகத் திகழ்ந்த காலம். அப்போது உலகக்கோப்பையை வென்று 2 ஆண்டுகள் ஆனபின்பு கூ…
-
- 0 replies
- 211 views
-
-
3 ஓவர்களில் 100 ரன்கள்; பிராட்மேனின் நினைத்துப் பார்க்கமுடியாத அசாத்திய சாதனை: எப்படி நடந்தது? டான் பிராட்மேன் களமிறங்கிய காட்சி : கோப்புப்படம் 3 ஓவர்களில் 100 ரன்கள் அடிப்பது என்பது நினைத்துப்பார்க்க முடியாத சாதனை. அதைச் செய்து கிரிக்கெட் உலகில் என்றும் பிதாமகராக இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிராட்மேனுக்கு இன்று 110-வது பிறந்தநாள். இன்றைய நாளில் அவரின் செயற்கரிய சாதனையை அறிந்து கொள்வது அவசியமாகும். அதிலும், பிராட்மேன் 3 ஓவரில் 100 ரன்கள் அடித்த சாதனையை என்றும் மறக்க முடியாது, வரலாற்றில் இருந்து எடுக்க முடியாது. அந்த கடினமான செயல…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜகார்த்தா ஆசியப் போட்டிகள் 2018: கோலாகல தொடக்கம் ஆசியப் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற வாணவேடிக்கை. * வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் * வாண வேடிக்கைகள் * நீரஜ் சோப்ரா தலைமையில் இந்தியா அணிவகுப்பு 18-ஆவது ஆசியப் போட்டிகள் 2018 சனிக்கிழமை மாலை ஜகார்த்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆசியப் போட்டிகள் கடந்த 1951-இல் புதுதில்லியில் தொடங்கி நடைபெற்றது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவின்படி 18-ஆவது ஆசியப் போட்டிகள் இந்தோனேஷியாவுக்கு ஒதுக்கப்பட்டன. இதன் வரலாற்றிலேயே முதன்முறையாக இரு நகரங்களில…
-
- 11 replies
- 1.8k views
-
-
டி20 போட்டியில் புதிய சாதனை: 4 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே கொடுத்த பாக். வீரர் அபாரம் பிரிட்ஜ்டவுனில் நடந்த கரிபியன் ப்ரிமியர்லீக் போட்டியில் பர்படாஸ் அணிக்காக பந்துவீசிய முகமது இர்பான் - படம்: ஏஎப்பி டி20 போட்டிகளில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் எனும் பெருமையை பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பெற்றார். 4 ஓவர்கள் வீசிய முகமது இர்பான் (4-3-1-2) 23 டாட் பந்துகள், 3 மெய்டன் ஓவர், ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான். பாகிஸ்தானில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் ப்ரிமீயர் …
-
- 0 replies
- 658 views
-
-
”ICC உலக கிண்ணம்” செப்டம்பர் 20 முதல் இலங்கையில் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சம்பியன் கிண்ணத்தை நாடுகளில் காட்சிப்படுத்தும் நடவடிக்கை நாளை முதல் டுபாயில் அமைந்துள்ள ஐ.சீ.சீ தலைமையகத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. போட்டியில் கலந்துக்கொள்ளும் 21 நாடுகளின் 60 நகரங்களில் இந்த கிண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளில் கொழும்பிலும் 24 முதல் 27 வரை ஹிக்கடுவை மற்றும் காலியிலும் அந்த கிண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/icc-உலக-கிண்ணம்-செப்டம்பர்-20/
-
- 0 replies
- 419 views
-
-
செரீனாவின் ‘பிளாக் பாந்தர்’ ஆடைக்குத் தடை: பிரெஞ்ச் ஓபன் நிர்வாகம் உத்தரவு பிரெஞ்சு ஓபனில் பங்கேற்றபோது செரீனா அணிந்திருந்த பிளாக் பாந்தர் ஆடை - படம்: ராய்டர்ஸ் 2019-ம் ஆண்டு நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கவர்ச்சிகரமான பிளாக் பாந்தர் ஆடை அணியக்கூடாது என்று ‘பிரெஞ்சு ஓபன்’ டென்னிஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்றது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியாகும். பாரீஸ் நகரில் களிமண் தரையில் நடக்கும் இந்தப் போட்டியில் விளையாடி பட்டம் வெல்வது மிகக் கடினம்.தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் கூட களிமண் தரையில் விளையாடு…
-
- 1 reply
- 595 views
- 1 follower
-
-
சங்கக்காரவின் வரலாற்று சாதனையை நெருங்கும் கோஹ்லி இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தனது வாழ்நாள் அதிகூடிய புள்ளிகளுடன் (937) மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 97 மற்றும் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்தள்ளி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் போட்டியின் நிறைவில், டெஸ்ட் துடுப்பாட்ட வரி…
-
- 0 replies
- 416 views
-
-
தேசிய வலைப்பந்து அணியில் மேலும் ஒரு தமிழ் வீராங்கனை இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சே.எழில்வேந்தினி தெரிவு செய்யப்பட்டார். ஆசிய மட்ட வலைப்பந்தாட்டத் தொடர் சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான அணித் தெரிவுக்காக கொழும்பில் கடந்த ஒரு மாதகாலமாக வீராங்கனைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் அணிக்கான 12 வீராங்கனைகளின் தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சே.எழில்வேந்தினி …
-
- 0 replies
- 695 views
-
-
பேட்டிங் உத்தியை மாற்றிக் கொள் என்று யாரேனும் கூறினால் என்னிடம் பேசச்சொல்: பிரித்வி ஷாவிடம் கூறிய சச்சின் டெண்டுல்கர் பிரித்வி ஷா, சச்சின். | படம்: பிடிஐ. இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரராக களம் காணவிருக்கும் பிரித்வி ஷாவின் பேட்டிங்கை ஏற்கெனவே பலரும் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்நிலையில் பிரித்வி ஷா-வின் பேட்டிங் திறமை பற்றி ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பேசியுள்ளார். பிரித்வி ஷாவுக்கு 8 வயதாக இருக்கும் போதே, பிர்த்வி ஷா-வின் இயற்கையான உத்தியை எந்த ஒரு பயிற்சியாளரும் மாற்றக்கூடாது என்று தெரிவித்திருப்பது இப்போது சச்சின் டெண்டுல்கர் வாயாலேயே வெளிவந்துள்ளது. …
-
- 0 replies
- 320 views
-
-
வியாஸ்காந்தின் சிறப்பாட்டத்தோடு மாவட்ட கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஒழுங்கு செய்து நடாத்திய 17 வயதின் கீழ்ப்பட்ட யாழ் மாவட்டத்தின் பாடசாலை அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சென். ஜோன்ஸ் கல்லூரியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த முறையில் செயற்படும் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்றிருந்தது. …
-
- 0 replies
- 227 views
-
-
UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கு தெரிவாகியுள்ள வீரர்கள் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஓன்றியமான UEFA யின் 2017/18 ஆம் பருவகாலத்திற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதிற்கான இறுதிப் பெயர் பட்டியல் திங்கட்கிமை (20) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கான இறுதி மூவரைக் கொண்ட பெயர் பட்டியலானது பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலம் வழங்கப்படும் மொத்த வாக்குகளின் அடிப்படையிலே தெரிவு செய்யப்படுகின்றது. அதனடிப்படையில் 80 பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் 55 ஊடகவியலாளர்களால் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்ற…
-
- 0 replies
- 560 views
-
-
"விராட் கோலிதான் உலகின் மிகச்சிறந்த வீரர்" - முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இங்கிலாந்து இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியதை தொடர்ந்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலிதான் என பாராட்டியிருக்கிறார். படத்தின் காப்புரிமைPHILIP BROWN…
-
- 0 replies
- 483 views
-