அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான வரைவுகளில் மேலும் கொடூரமான ஏற்பாடுகளை புகுத்துவதன் உள்நோக்கம் என்ன? February 16, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட “பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு” (protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மூன்றாவது முயற்சியாகும். அந்தச் சட்ட வரைவு குறித்து பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் அரச…
-
- 1 reply
- 118 views
- 1 follower
-
-
அரசியலையே அவமதிக்கும் நடிகர் விஜயை பொதுமன்றம் கண்டிக்க வேண்டாமா? 16 Feb 2026, 7:00 AM ராஜன் குறை நடிகர் விஜய் பிற அரசியல் கட்சி தலைவர்கள் போல பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. ஊடகங்களுக்கு நேர்காணல் அளிப்பதில்லை. நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு, மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. தன் கருத்துக்களைக் கூறுவதில்லை. அரசியலை மல்டிபிள் சாய்ஸ் குவெஸ்டின் பேப்பர் போல எடுத்துக்கொண்டு அவ்வப்போது ஒரு சில பிரச்சினைகளைப் பற்றி மட்டும் கருத்து தெரிவிக்கிறார். பிற பிரச்சினைகளில் அவர் கருத்துக் கூறவில்லையே என்று விமர்சித்தால், நீங்கள் சொல்வதற்காகவெல்லாம் நான் பேசமுடியாது என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூறுகிறார். அதைவிட மிகப்பெரிய சிக்கல் அவரால் மக்களை …
-
- 0 replies
- 91 views
-
-
நிறுத்தி வைக்கப்பட்ட சந்திப்பு? - நிலாந்தன் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகம் வரும் 19ஆம் தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒரு சந்திப்பை ஒழுங்குப்படுத்தியிருந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவது இந்த அழைப்பின் நோக்கம் என்று கருதப்படுகிறது. எனினும் அந்தச் சந்திப்பு இடம்பெறாது என்று தெரிய வருகிறது. அதற்கு காரணம், சுமந்திரன் அதை விரும்பவில்லை என்ற பொருள்பட சிங்கள ஊடகமான TTV.Lk தகவல் வெளியிட்டுள்ளது. 19ஆம் தேதி நடக்கவிருந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் சுவிற்சலாந்து தூதரகம் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிகிறது. கட்சிகளுடைய வேண்டுகோளின் அடிப்படையில்தான் தூதரகம் மேற்படி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது என்றும் தூதரக வட்ட…
-
- 0 replies
- 141 views
-
-
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி Courtesy: தீபச்செல்வன் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 13 ஆம் தேதி UNESCO அறிவித்துள்ள உலக வானொலி நாள் உலகெங்கும் வானொலியின் சமூகப் பங்களிப்பை நினைபடுத்துகிறது. தகவல் பரிமாற்றத்தின் மிக எளிய, மலிவு மற்றும் விரைவான சேவைக்காக வானொலி இன்னும் பல கோடி மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தொலைதூர கிராமங்களிலிருந்து நகர மையங்கள்வரை மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒலிப் பாலமாக வானொலி தேசங்களையும் உலகத்தையும் இணைக்கின்றது. இலங்கைக்கு என்று தனித்துவமான வானொலிப் பாரம்பரியமுண்டு. அத்துடன் புலிகளின் குரல் என்ற தமிழர்களின் போராட்ட வானொலிப் பாரம்பரியமும் ஈழ மண்ணிற்குள்ளது. இலங்கையின் வானொலிப் பாரம்பரியம் தென்னாசியாவில் வானொலி ஒளிபரப்பின் முன்னோடிகளி…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள் தமிழ் மக்களை எப்படித் திரட்டும்? - நிலாந்தன். - “ஐயா சிறீதரன் அவர்களைப் பற்றி நாலு வசனம் நல்லதாக எழுதினால் கட்சித் தீர்மானத்தை மீறியதாக எடுத்து கொள்வீர்களா?உங்களால் ஏன் மக்களின் மனதை வெல்ல முடியவில்லை என்பதை அமைதியாக இருக்க கூடிய நேரங்களில் யோசித்து பார்த்ததுண்டா? உண்மையில் நீங்களும் சிறீதரனும் தலைமை பதவிக்கு சண்டை பிடிக்கவில்லை என்றால் இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்? ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் இருப்பிற்காகவும் பாடுபட வேண்டிய கட்சி ஒன்று தலைமைப் பதவிக்காக நீதிமன்றத்தில் நின்றால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? உங்களின் நாய்ச் சண்டைகளால் தெரு நாய்கள் எல்லாம் வவுனியாவில் வந்து ஊளையிட்டுச் செல்கி…
-
- 0 replies
- 104 views
-
-
தன்னைத் தானே தோற்கடிப்பது? - நிலாந்தன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதை ஒரு வெற்றியாக சாணக்கியனின் ஆதரவாளர்கள், சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே கொண்டாடினார்கள். உலகமே வியக்கும் வெற்றிகளைக் கொண்டாடிய தமிழ் மக்கள் இப்பொழுது இப்படிப்பட்ட அற்ப வெற்றிகளைக் கொண்டாடும் மக்களாக சிறுத்துப் போய்விட்டார்கள்? தமிழரசுக் கட்சி என்பது 75 வயதான ஒரு கட்சி. தனது உட்கட்சிப் பகையை பிரதிபலிக்கும் ஒரு வெற்றியைக் கொண்டாடக்கூடாது என்று தனது தொண்டர்களுக்குச் சொல்லும் மாண்பை அந்தக் கட்சி இழந்து விட்டதா? ஏற்கனவே மாவையின் இறுதி நாள் நிகழ்வில் சுடலை வரை மோதல் வந்தது. அண்மையில் மாவையின் முதலாம் ஆண்டு நினைவு நாளிலும…
-
- 0 replies
- 142 views
-
-
சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..? February 10, 2026 — அழகு குணசீலன் — தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும், அமைப்புக்களுக்கும், அவர்களின் அரசியலுக்கும் மங்குசனி தொடங்கிய காலம் அது. இதனால் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வீட்டு சின்னத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற லேபல் புதுப்பித்து ஒட்டப்பட்டது. ஒரு வகையில் இதை “ஒப்பரேசன் தமிழரசு” என்று சொல்லமுடியும். இது முரண்பாடுகளைக்கொண்ட பலரை கூட்டமைப்பு என்ற சாக்குக்குள் போட்டு கட்டி புலிகள் அரசியல் பாடம் எடுத்த தருணம். இந்த புதிய லேபல் ஏற்படுத்திய பாராளுமன்ற பிரதிநிதித்துவ அதிகரிப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பால், 2009 க்கு பின்னர் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு இரா.சம்பந்தர், மாவை சேனாதிராசா ஆகியோரின் ஆளுமையற்ற…
-
-
- 4 replies
- 352 views
-
-
பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் எதற்கு? எம்.எஸ்.எம். ஐயூப் தாம் முன்வைத்த குடியிருப்பாளர் பாதுகாப்புச் சட்ட மூலத்தை தற்காலிக்மாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் அதனை தெரிவித்த பொதுமககள் பாதகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பலர் தெரிவித்த எதிர்ப்புகளை அடுத்து சட்ட மூலத்தை மீளாய்வு செய்து மீண்டும் சமர்ப்பிப்பதற்காகவே அதனை இடைநிறுததுவதாக கூறியுள்ளார். ஆயினும் இது முதன் முதலாக தமது அரசாங்கம் முன்வைக்கும் சட்டமூலமொன்றல்ல என்றும் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முன்வைத்த சட்டமூலமொன்றையே தமது அரசாங்கம் முன்வைத்துள்ளது என்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுகின்றனர். அதில் ஓரளவு உண்மை இருக்க…
-
- 0 replies
- 114 views
-
-
பஞ்சமா தந்திரங்கள்? - நிலாந்தன் கட்சிக்குள் சிறீதரனை மதிப்பிறக்கம் செய்வதில் சுமந்திரன் தொடர்ந்து முன்னேறி வருகிறார். முக்கால் நூற்றாண்டு கால வயதைக் கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக தலைவருக்காக நடந்த ஒரு தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பொறுப்பை ஏற்க விடாமல் தடுக்கப்பட்டு வருகிறார். இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தந்திரமான புத்திசாலித்தனமான நகர்வுகளின் ஊடாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார். சிறீதரனை கட்சிக்குள் சுற்றிவளைக்கும் வேலையை கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமந்திரன் அணி செய்து வருகிறது. சிறீதரன் எவ்வாறு கட்சிக்குள் ஓரங்கட்டப்படுகிறார்? 75 ஆண்டு கால வயதை கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக நடந்த தலைவர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் செயற்பட முடியா…
-
- 0 replies
- 186 views
-
-
தையிட்டி; கிவுல் ஓயா; கரிநாள் - நிலாந்தன் கடந்த வாரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆர்ப்பாட்டம் தையிட்டியில். அது வழமையாக நடப்பது. இரண்டாவது ஆர்ப்பாட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரான நெடுங்கேணிப் போராட்டம். மூன்றாவது ஆர்ப்பாட்டம், 78ஆவது சுதந்திர தினம் என்று கூறப்படுவதை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த பேரணி. மிகக்குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த இந்த மூன்று ஆர்ப்பாட்டங்களையும் தொகுத்துப் பார்ப்போம்.தையிட்டியில் கடந்த பௌர்ணமி நாளன்று மிகக்குறைந்த எண்ணிக்கையானவர்களே காணப்பட்டார்கள். அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களே அதிகம். ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவு எண்ண…
-
- 0 replies
- 117 views
-
-
78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்! இலங்கைத் தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. இலங்கைத் தீவின் ஒரு பகுதி மக்கள் அதனை சுதந்திர தினம் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அதனை கரிநாள் என்று கருதுகிறார்கள். தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். கடந்த 4 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் சிங்கக் கொடிகளை காணக் கூடியதாக இருந்தது. வட மாகாண ஆளுநர் அலுவலகம் வழமையை விட வித்தியாசமாக பெருமெடுப்பில் அந்த நாளைக் கொண்டாடியது. ஆனால் அதே நாளில்,கிளிநொச்சியில்,மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெற்றன.அது சுதந்திர நாள் அல்ல கரிநாள் என்று பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் காணாம…
-
- 0 replies
- 117 views
-
-
கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும் --- --- --- *உலக அரசியல் ஒழுங்குக் குழப்பங்களை நன்கு பயன்படுத்தும் இலங்கை *பண்டாரநாயக்க, ஜேஆர் காலம் முதல் அநுர வரையான அறிவூட்டல் அவசியமானது *ரில்வின் சில்வா குழுவின் டில்லி பயணம் வெளிப்படுத்துவது என்ன? --- ---- --- இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியப்படக் கூடியது அல்ல என்பது ஏற்புடைய யதார்த்தம். ஏனெனில், காணி அதிகாரம் என்பது மிக முக்கியமானது. அந்த அதிகாரத்தை தமிழர்களிடம் வழங்காமல். கொழும்பில் இருந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்க முடியாது. இதன் காரண காரியமாகவே, போர் இல்லாது ஒழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில். கொ…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
தமிழர் பகுதியில் அமைய உள்ள நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்? கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 6 பிப்ரவரி 2026 வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள உத்தேச கிவுல் ஓயா நீர்பாசனத் திட்டத்திற்கு தமிழர்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தை கைவிடுமாறு கோரி, வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் தமது எதிர்ப்புக்களை தமிழர்கள் வெளியிட்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் கட்சிகள் இந்த திட்டத்திற்கு தமது எதிர்ப்புக்களை பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது. தமிழர் பகுதியி…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.! February 6, 2026 — அழகு குணசீலன் — இலங்கை அரசியலில் சமஷ்டி சிந்தனை பிறந்து நூறாண்டுகளாகிறது. சிங்கள தேசியவாத, நாயக்க வம்ச ஆளுமை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கை சமூக, பொருளாதார, அரசியல் பன்மைத்துவ கட்டமைப்புக்கு சமஸ்டி- கூட்டாட்சி முறைமையே பொருத்தமானது என்று 1926 இல் கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டார். அதற்கான அவசியத்தையும், நியாயத்தையும் முன்வைத்தார். இலங்கைத் தீவை கண்டி, கரையோரம், வடக்கு கிழக்கு என்று சுயாட்சி பிராந்தியங்களாக பிரித்து கூட்டாட்சி அரசியல் கட்டமைப்பை நிறுவுவது அவரது கருத்தாக இருந்தது. அப்போது சமஷ்டி முறைமையானது இன ஒற்றுமையை பாதிக்கும் வகையிலான ஒரு இனவாத கருத்தியல் என்று ஜேம்ஸ்.ரட்ணம் பண்டாரநாயக்காவின் கருத்…
-
- 0 replies
- 101 views
-
-
மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும் Veeragathy Thanabalasingham on February 6, 2026 Photo, THE PARLIAMENT OF SRI LANKA முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில் செய்த எச்சரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. தன்னை ஒரு ‘கெரில்லா’ என்று வர்ணித்த அவர் தன்னந் தனியாளாக சாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் வாழ்வாதாரத்தை இழந்தால் வேறு பலரையும் கொலை செய்துவிட்டுத் தானும் உயிரை மாய்ப்பதற்கு ‘தற்கொலைத் தாக்கு…
-
- 0 replies
- 130 views
-
-
கூட்டம் கூட்டமாக கண்டிய நடனமாடித்திரிகிறது யாழ்ப்பாணச்சமூகம் ஒரு பெரும் பண்பாட்டுச் சிதைப்பை அமைதியாக செய்து முடித்திருக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம். ஈழத்தமிழர்களின் இன இருப்பு வழிபாட்டிடங்கள் பண்பாடு என பலதளங்களிலும் ஒரு பெரும் அழிவுச்சுட்டியை ஶ்ரீலங்காவின் அரசும் அதன் கட்டமைப்புகளான தொல்லியல் திணைக்களம் வன வளத்திணைக்களம் என ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு ஈழத்தமிழர்கள் மீதும் அவர்களின் மரபு பண்பாட்டுக்கூறுகள் மீதும் திணித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தானும் முந்தியிருக்கிறது யாழ்ப்பாண மாவட்ட செயலகம். கடந்த 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு உலகக் கிண்ணம் எடுத்துவரப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட உலக்கிண்ணத்திற்கு யாழ் மாவட்ட செயலகத்தால் அமோகமான வர…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
தேவையற்ற விவகாரங்களில் தமிழர்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. --- --- --- *1970 களில் விடுதலை இயக்கங்களை உருவாக்கிய காரணங்கள், 2009 இற்குப் பின்னர், எவ்வித தடைகளும் இன்றி, அரசாங்கத்தால் தொடரப்படுகிறதே! பண்டாரநாயக்கா, ஜேஆர் - இன்றைய அநுர வரை... *புவிசார் அரசியல் போட்டிகளை நன்கு பயன்படுத்தும் இலங்கை.. *இந்திய நிதியுதவி எங்கு பயன்படுத்தப்படும்? --- --- --- இலங்கை அரசாங்கம் குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மிகவும் நுட்பமாக காய்நகர்த்தி, பொருளாதாரத்தை முன்னேற்ற பல திட்டங்களை வகுத்துள்ளது. சமகால புவிசார் அரசியல் போட்டிகளை கன கச்சிதமாக பயன்படுத்தி இந்தியாவிடம் இருந்து பெருமளவு நிதிகளையும் - நன்கொடைகளையும், அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இலங்கை பெறுகிறது. வெளிநாட்டு…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்! ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.இதுதொடர்பான சந்திப்புகளை அவர்கள் தமிழர் தாயகம் எங்கிலும் முன்னெடுத்து வருகிறார்கள். கட்சிகள்,செயற்பாட்டாளர்கள்,காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், என்று பல்வேறு தரப்புக்களையும் மாணவ பிரதிநிதிகள் சந்தித்து வருகிறார்கள். “மாணவர்களே போராட்டத்தின் கூர்முனைகள்” என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறினார்.கம்யூனிசத்தின் எழுச்சிக்குப் பின் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளி வர்க்கம்தான் போராட்டத்தின் கூர்முனை என்று கருதப்பட்டு வந்த ஒரு பின்னணியில்,கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, ஹெர்பர்ட் மார்க்யூஸ்…
-
- 1 reply
- 194 views
-
-
யார் முருகன் ? யார் சூரன்? -நிலாந்தன் தமிழ் ரப் பாடகர் வாகீசனைத் தூக்கியது அவருடைய முருகன் பாடல். அப்பாடலில் முருகன் ஒரு கடவுளாக மட்டும் சித்தரிக்கப்படவில்லை. அவர் தமிழ் மக்களைக் காக்கும் ஒரு தலைவராகவும் வர்ணிக்கப்படுகிறார். அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை மறைமுகமாக அது சுட்டுகிறது என்று பொதுவான விளங்கிக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு,தனது முருகன் பாடலுக்குள் உட்பொதிந்துள்ள அரசியலுக்கு ஊடாகவும் கொண்டாடப்படுகின்ற ஒரு ரப் பாடகரைக் கொண்ட அதே சமூகத்தில்தான், அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட உறுப்பினர் ஒருவர் அனுரவை முருகனோடு ஒப்பிட்டு முகநூலில் எழுதியிருந்தார். அனுரவை தோழராக,சகோதரராக, ஏழைகளுக்கு இனியவராக, செல்ஃபி நாயகனாக…இன்னபிறவாக சித்திரித்த அரசியல் விசு…
-
- 1 reply
- 262 views
-
-
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்! ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இதுதொடர்பான சந்திப்புகளை அவர்கள் தமிழர் தாயகம் எங்கிலும் முன்னெடுத்து வருகிறார்கள். கட்சிகள்,செயற்பாட்டாளர்கள்,காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், என்று பல்வேறு தரப்புக்களையும் மாணவ பிரதிநிதிகள் சந்தித்து வருகிறார்கள். “மாணவர்களே போராட்டத்தின் கூர்முனைகள்” என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறினார். கம்யூனிசத்தின் எழுச்சிக்குப் பின் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளி வர்க்கம்தான் போராட்டத்தின் கூர்முனை என்று கருதப்பட்டு வந்த ஒரு பின்னணியில், கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, ஹெர்பர்ட் மார்க்…
-
- 0 replies
- 113 views
-
-
தமிழக தேர்தல் களம்: சில கருத்துகள் January 30, 2026 — கருணாகரன் — சென்னைப் புத்தகக் காட்சிக்குச்சென்று திரும்பியவுடன் இலங்கையில் சந்தித்த ஊடகத்துறை நண்பர்கள் கேட்ட முதற்கேள்வி, “தமிழ் நாட்டின் அரசியல் நிலவரம் எப்படி உள்ளது? வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு அல்லது எந்தத் தரப்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?” என்பதே. தமிழ்நாட்டுக்குச்சென்று வந்த ஒருவருடன் பேசுவது, அங்குள்ள களநிலவரத்தை அறிவதற்குக் கூடுதலாக உதவக் கூடும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு. நான் சென்றது புத்தகக்காட்சிக்காக. அங்கே என்னுடைய நான்கு நூல்களின் வெளியீடு. சக எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளிலும் உரையாடல் அரங்குகளிலும் கலந்து கொண்டேன். இவை முடிய இலக்கிய, பதிப்புத் துறையைச் சேர்ந்த சில நண்பர்களைச்…
-
- 0 replies
- 168 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிங்கள ”ஸ்ரீ”யும் தமிழ் ”ஸ்ரீ”யும் January 29, 2026 1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழரசுக் கட்சி தலைமையில் போராட்டம் வெடித்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் பலமான அடித்தளமாக அமைந்தது. ஆனால் அதே தமிழரசுக்கட்சி தற்போது தமது கட்சியிலுள்ள மக்கள் பலமான தமிழ் ”ஸ்ரீ ”க்கு (ஸ்ரீதரனுக்கு)எதிராக முன்னெடுக்கும் சதி தமிழரசுக் கட்சியின் அடித் தளத்தை, மக்கள் பலத்தை ஆட்டம் காண வைக்கப் போகின்றது—–” கே.பாலா தமிழரசுக்கட்சியின் தலைவராக பொதுக்குழுவின…
-
- 0 replies
- 144 views
-
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்) January 26, 2026 (இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பு மாற்றம், தமிழ்ப்பிரதேசங்களின் அபிவிருத்தி, மாகாண சபைகளுக்கான தேர்தல் மற்றும் அதிகாரம், ஆட்சிலிருக்கும் தேசியமக்கள் சக்தியின் செயற்பாடுகள், தமிழரசுக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் எனப் பல விடயங்களையும் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி திரு. எம்.ஏ. சுமந்திரனுடன் உரையாடினோம். இலங்கை அரசியற்பரப்பிலும் தமிழர்களின் அரசியலிலும் சுமந்திரனின் அடையாளமும் குரலும் முதன்மையானது. என்பதால் அனைத்துத் தரப்பினரோடும் உரையாடக்கூடியவராகவும் அனைத்துத்தரப்பினரும் உரையாடும…
-
-
- 144 replies
- 6.2k views
- 2 followers
-
-
*பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு! --- --- --- *பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்றுசேர முடியுமா? --- --- --- சீனா எந்த வகையில் வளர்ந்தாலும், வளர்ச்சி அநை்தாலும் ஏனைய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், (Xi Jinping) இன்று வியாழக்கிழமை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை (Keir Starmer) சந்தித்த போது கூறினார். சீனத் தலைநகர் பீஜிங்கில் இச் சந்திப்பு இடம்பெற்றது. டொனால்ட் ட்ரம்ப்பின் சர்வதேசச் சட்டங்களை மீறிய நகர்வுகளின் பின்னர், முதற் தடவையாக இச் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது. அமைதியான வளர்ச்சிக்கு உரிய உறுதிப்பாட்டை வலியுறுத்திய ஜி ஜின்பிங், சீனா ஒருபோதும் போரைத் திணிக்காது என்றும் எடுத்துரைத்தார். வெளிநாட்டுகளில் ஒரு அங்குல …
-
-
- 5 replies
- 362 views
- 2 followers
-
-
கிழக்கும் கவனிக்கப்பட வேண்டும் மொஹமட் பாதுஷா வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்களில் வெளிநாடுகள் கண்வைக்கத் தொடங்கி நெடுங்காலமாயிற்று. இதற்கிடையில் வடக்கில் இதற்கு மக்களின் எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. அல்லது மக்கள் மிகக் கவனமாக ஒவ்வொரு நகர்வையும் உற்றுநோக்கி வருகின்றனர். கிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகம், எண்ணெய்க் குதங்கள், சுற்றுலா சார் வளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் குறி மேலோங்கியிருப்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம் தான். ஆனால் மக்கள் பெரிதாக இதில் அக்கறை கொண்டாக தெரியவில்லை. இந்தப் பின்னணியில் வடக்கு போன்ற சில மாகாணங்களுக்கு கொடுக்கப்படுகின்ற அளவுக்கு முக்கியத்துவம் கிழக்கிற்குக் கொடுக்கப்படுகின்றதா என்பது ஒரு ஐயப்பாடாக உள்ளது. வடக்கு மற்றும் கிழக…
-
- 0 replies
- 105 views
-