Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜேவிபி செம்மணிக்குப் பொறுப்புக் கூறுமா? நிலாந்தன். இம்மாத இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும் பொழுது செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது. அதை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள செயற்பாட்டு அமைப்புக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றன. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வரப் போகிறார் என்ற செய்தி கிடைத்ததும் கடந்த மாதம் 22 ஆம் திகதி சுமார் 35 தமிழ் குடிமக்கள் அமைப்புகள் இணைந்து ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதின.அதன் விளைவாக ஐநா அலுவலர்களுக்கும் தமிழ் குடிமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்ட்து.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்குள் வரக்கூடாது என்று குடிமக்கள் அ…

  2. Published By: RAJEEBAN 18 JUN, 2025 | 12:23 PM By Jeevan Ravindran இலங்கையின் வடபகுதியின் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் மிகவும் மும்முரமான வீதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இரண்டு பொலிஸார் சுடலையின் இரண்டு துருப்பிடித்துப்போன நிறத்தில் உள்ள கேட்களின் பின்னால் நின்று அவதானித்தவண்ணமுள்ளனர். இலங்கையில் மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 3 குழந்தைகள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய மனித புதைகுழிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இலங்கை தமிழர்களின் காயங்களை மீள கிளறியுள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களிற்கு தனிநாடு கோரிய பிரிவினைவாத தமிழீழ விடுதலை…

  3. மதில் மேல் பூனை sudumanal மத்தியகிழக்கை மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா ‘மதில்மேல் பூனையாக’ இன்னும் எவளவு காலம் இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிக்ஸ் இன் தோற்றுவாயாக இருந்த முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு தென் ஆபிரிக்காவும் இணைந்து பிரிக் (BRIC) என்பது பிரிக்ஸ் (BRICS) என்றாகியது. இப்போ ஈரானும் அதில் ஒரு புதிய அங்கத்துவ நாடு. ஒற்றைத் துருவ அரசியலை புரட்டிப்போடும் வலுவான பொருளாதார அமைப்பாக பலம்பெறுகிறது பிரிக்ஸ். பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்ட ஈரானின் மீதான இந்த யுத்தம் பிரிக்ஸ் இன் பொருளாதாரத்தை பாதிக்க வல்லது. அதனால் பிரிக்ஸ் நாடுகள் இந்த யுத்தத்தை விரும்பாதது மட்டுமல்ல, அமைதியான…

  4. வீழும் விழுமியங்கள்: இஸ்ரேலைக் கண்டிக்க இந்தியா தயங்குவது ஏன்? 16 Jun 2025, 9:33 AM ராஜன் குறை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் உலகப் போர் மூளக்கூடிய சூழல் உருவாகி வருவதைச் சுட்டிக் காட்டியதுடன், இஸ்ரேல் நாட்டின் மனிதாபிமானமற்ற போக்கையும், அத்துமீறும் ராணுவ தாக்குதல்களையும் கண்டித்துள்ளார். எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் தலைவராக அவர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியமானது, வரவேற்கத்தக்கது. காரணம், ஈரான் நாட்டின் அணு ஆற்றல் உற்பத்தி கேந்திரங்களின் மீது இஸ்ரேல் இரு தின ங்களுக்கு முன்பு தாக்குதல் நட த்தியுள்ளது. தொடர்ந்து அவற்றை முற்றிலும் தாக்கி அழிக்கும் திட்டமும் வைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு பதிலடியாக…

  5. இஸ்ரேல் – ஈரான் போர்: மூன்று முக்கியமான கேள்விகள்! 14 Jun 2025, 4:46 PM சாக் பியூசாம்ப் வியாழனன்று இரவு, இஸ்ரேல் ஈரானுடன் போரைத் தொடங்கியது. ஈரானின் மூத்த இராணுவத் தலைமையையும் அணு விஞ்ஞானிகளையும் இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு ஒரு தந்திரோபாய வெற்றியாகவே அமைந்தன, ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே ஈரானின் ஒட்டுமொத்த இராணுவமும் அதன் புரட்சிகரப் படைகளின் தலைவர்களும் கொல்லப்பட்டனர். ஈரானிய வான் பாதுகாப்புத் தளங்கள் பெரும் சேதமடைந்தன. இஸ்ரேலுக்கு மிகக் குறைந்த இழப்புகளே ஏற்பட்டன. உடனடியாக ஈரானிடமிருந்து பெரிய பதிலடி எதுவும் வரவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை பிற்பகல், ஈரான் இஸ்ரேல் முழுவதும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியத…

  6. துரோகிகள் Vs தியாகிகள்! June 15, 2025 — கருணாகரன் — தமிழரசுக் கட்சி ஆரம்பித்து வைத்த தியாகி – துரோகி ஆட்டத்தை, தமிழரசுக் கட்சியே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியின் ஆதரவோடு உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியதோடு ஈ.பி.டி.பியும் துரோகிப் பட்டியலில் இருந்தும் அரச ஒத்தோடிகள் என்ற பழிப்பெயரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட புனிதமளிப்பு நடைபெற்றுள்ளது. இனி, ஈ.பி.டி.பியை தமிழரசுக் கட்சியினர் துரோகிப் பட்டியலில் சேர்க்க முடியாது. அவர்களும் தமிழ்தேசிய அரசியலில் சங்கமித்துள்ளனர். இதுவரையிலும் ஈ.பி.டி.பியை துரோகி என்று சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அந்த வார்த்தைகளைச் சொன்னவர்களுடைய முகங்களிலேயே காறி உமிழ்ந்துள்ளன. அல்லது அவ்வாறு ஈ.பி.டி…

  7. தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது? - நிலாந்தன் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டா போட்டிகளும் உள்ளூராட்சி சபைகளை ஒரு கட்சி கைப்பற்றிய பின் கட்சிகளின் விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. நடப்பது கட்சிகளுக்கு இடையிலான போட்டிதான். அதாவது தேர்தல்மைய அரசியல் தான். இதில் தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்லது தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் எங்கே இருக்கிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒப்பீட்டளவில் அதைச் செய்யலாம். அதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், அது ஒப்பீட்டளவ…

  8. இருளில் தேடும் தமிழ்ப்பூனை June 13, 2025 — கருணாகரன் — சில நாட்களுக்கு முன், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் வெற்றியீட்டிய தமிழசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றில் உரையாற்றிய சுமந்திரன், புதிதாக உருவாகியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைக் கடுந்தொனியில் எச்சரித்தார். இதற்குக் காரணம், சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சிக்கு இவை ஆதரவளிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கட்சிகள் பரஸ்பரம் ஆதரவளித்துக் கொள்வதென்ற பகிரங்க அறிவிப்பை தமிழ்த்தேசியப் பேரவை மீறி விட்டது என்பதாக இருந்தது. அப்பொழுது அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் வெளிப்படுத்திய உடல்மொழியும் எதிரணியைச் சவாலுக்கு அழைத்த விதமும் சிரிப்பையும் துக்கத்தையும் ஒன்றாக…

  9. ‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’ முருகானந்தம் தவம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி.) ஆதரவு கேட்டு அக்கட்சியின் அலுவலகப் படி ஏறியமை தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பி.டி.பி.) தமிழினத் துரோகிகள், ஓட்டுக்குழு, ஆயுதக்குழு, இராணுவ துணைக்குழு, தமிழ் இள…

    • 4 replies
    • 368 views
  10. தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு! Veeragathy Thanabalasingham on June 11, 2025 Photo, REUTERS உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும் தேசிய மக்கள் சக்தியும் எதிரணி கட்சிகளும் மற்றைய கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன. முன்னைய அரசாங்கங்களைப் போன்று தேசிய மக்கள் சக்தியும் ‘குதிரை பேரத்தில்’ ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அரசாங்கத் தலைவர்கள் நிராகர…

      • Haha
    • 9 replies
    • 512 views
  11. 11 JUN, 2025 | 08:59 AM கலாநிதி ஜெகான் பெரேரா பாராளுமன்ற தேர்தலில் ஏழு மாதங்களுக்கு முன்னர் மக்கள் வழங்கிய ஆணை முறைமை மாற்றத்துக்கானது. பொருளாதார நிலைவரத்தில் மேம்பாடு வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்தவர்களின் பிரதான எதிர்பார்ப்பு. நீண்ட உள்நாட்டுப்போர் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களும் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள சகோதரத்துவ குடிமக்களுடன் சேர்ந்து தங்களது பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் பல தசாப்தங்களாக தாங்கள் அனுபவித்த பாகுபாடுகளில் இருந்து விடுபடுவதற்காகவும் வாக்களித்தார்கள். ஒரு வழியில் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியில் இருந்து வளங்களை அபகரித்த ஊழலைக் குறைப்பதன் மூலமாக பொருளாதார மேம்பாட்டை…

  12. Published By: DIGITAL DESK 2 08 JUN, 2025 | 03:20 PM ஹரிகரன் 31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட ருவாண்டா தொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக இருக்கின்ற கல்லி அலெஸ் (Cally Alles) அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். ருவாண்டாவின் வரலாறு, இனப்படுகொலையில் எதிர்கொண்ட அழிவுகள், அதற்குப் பின்னர் அங்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார, அரசியல், சமூக மாற்றங்கள் குறித்து மிகவிரிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அந்த கட்டுரையை எழுதிய கல்லி அலெஸ், 1978 ஆம் ஆண்டிலிருந்து ருவாண்டாவில் வசித்து வருகின்ற- இலங்கையரான தேயிலைத் தோட்டத் தொழிலதிபர். 1994 ஆம் ஆண்டு ருவாண்டாவின் ஜனாதிபதியாக இருந்த ஜூவேனல் …

  13. டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்! June 9, 2025 — கருணாகரன் — இலங்கை அரசியலில் NPP செல்வாக்குப் பெற்றதோடு தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள அரசியல் எல்லாமே தடுமாற்றத்துக்குள்ளாகி விட்டன. குறிப்பாகத் தமிழ்த்தேசியவாத அரசியற் கட்சிகள் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளன. இவ்வளவுக்கும் NPP ஒன்றும் ஆகச் சிறந்த அரசியல் விளைவுகளை உருவாக்கிய சக்தியாக இன்னும் வளர்ச்சியடையவில்லை. எதிர்காலத்தில் அதற்கான சாத்தியங்கள் இருக்கலாம். இதைப்பற்றிப் பல தடவை குறிப்பிட்டதால், மேலும் விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறேன். அல்லது இன்னொரு கட்டுரையில் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நமது கவனம், NPP யின் எழுச்சியானது, தமிழ்த்தேசிய அரசியலை எப்படி நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது? அதனால் ஏற்பட்…

    • 1 reply
    • 311 views
  14. காலங்கடந்த ஒற்றுமையின் பயன்? லக்ஸ்மன் நாட்டின் தென் பகுதியிலும், வடக்கு கிழக்கிலும் காலங்கடந்த ஒற்றுமை குறித்த விவாதங்கள் இப்போது பிரபலமாகப் பேசப்படுபவையாக இருக்கின்றன. இவை பயனுடையவைதானா? ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் ஈகோ போர்களைத் தாண்டி, கொழும்பு மேயர் பதவிக்காக ஒன்றிணைவது பற்றிய செய்தி வந்தபோது, இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் அதை ‘மிக மிகக் கால தாமதமானது” என்றுதான் வரவேற்றனர். நாட்டையே ஆட்சி செய்யும் வாய்ப்பிருந்த போதிலும் அதனை நழுவவிட்டு தற்போது கொழும்பு மேயர் பதவியைத் தக்கவைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இணைந்து போராடுகின்றன. இக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால், சஜித்தும் ரணிலும் ஒற்றுமையின் சக்தியை உ…

  15. திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்! June 8, 2025 9:08 am அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் தயாரித்த நகல் வரைபுகள் மற்றும் 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கம் தயாரித்த வரைபுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்புக்கான நகல் தயாரிக்கப்படவுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழு புதிய யாப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அநேக…

  16. புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ? - நிலாந்தன் கட்சி மைய அரசியலில் உலகம் முழுவதுமே புனிதமான கூட்டு என்று எதுவும் கிடையாது. இருப்பதில் பரவாயில்லை என்று கூறத்தக்க பொருத்தமான கூட்டுக்கள்தான் உண்டு.இப்பொழுது கஜேந்திரக்குமார் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டும் அப்படித்தான். அதுவும் ஒரு சமயோசிதக் கூட்டுத்தான். தந்திரோபாயக் கூட்டுத்தான்.எனினும், தமிழ்த் தேசிய நோக்கு நிலையில், பொது எதிரிக்கு எதிராக ஆகக்கூடிய பட்ஷம் ஒரு தேசமாகத் திரள்வது என்ற அடிப்படையில் அந்த கூட்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள்.அதேசமயம் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள். எனவே நீதிக்கான போராட்டத்தில் யாரைப் பிரதான கு…

  17. இலங்கையில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - இறுதி போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விசாரணையின் நிலை என்ன? பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் மனிதப் புதைகுழி கண்டறியப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே 22 இடங்களில் மனிதப் புதைகுழிகள் அறியப்பட்டுள்ள நிலையில் அங்கு எந்த முன்னேற்றமும் இல்லையென்றும் விசாரணை ஏமாற்றம் அளிப்பதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதில் சர்வதேச ஆதரவும் ந…

  18. ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? Photo, SUNDAY TIMES இலங்கையில் பிரதிநிதித்துவ (நாடாளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் சிறுபான்மை அரசியல் தலைலைமைகள் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தை வலியுறுத்தி தனித்துவமாக செயற்பட ஆரம்பித்தன. தமக்கென தனித்துவமான கட்சிகளை உருவாக்கிக் கொண்டன. எனினும், கொழும்பை மையமாகக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள் அவ்வாறல்லாது சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கும் சம முக்க…

  19. NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா? June 4, 2025 — கருணாகரன் — NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? அதாவது இதுவரையான வரலாற்றில் அதிகாரத்தில் இருந்த சக்திகளை விட NPP தீங்கானதா? மோசமானதா? அப்படியென்றால், NPP யை மக்கள் எப்படி – எதற்காக – ஆதரித்தனர்? ஏன் இன்னும் ஆதரிக்கின்றனர்? இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? அல்லது “இனவாதத்தைக் கடந்து விட்டோம், மாற்றுச் சக்தி நாங்கள், இடதுசாரிகள்..” என்றெல்லாம் சொல்லிக…

  20. கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் 28.5.2025 அன்று நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மன்னார் வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தீர்மானங்கள் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் விரைவான நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி. பங்குபற்றுபவர்கள் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் உயர் அதிகாரிகள். இவை தவிர முக்கிய சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள்; அனைத்துக்கும் மேலாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து அரசியல் யாப்பு விதிகளை மீ…

  21. காணி நிலம் வேண்டும் பராசக்தி சர்ச்சைக்குரிய அரச வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றிருக்கிறது. தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் திரண்டு நின்று எதிர்ப்பைக் காட்டியதன் விளைவாக அது நடந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த கடும்போக்குப் பிடிவாதத்தோடு அந்த வர்த்தமானியை நியாயப்படுத்தாமல் அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. அதே சமயம் இதில் கிடைத்த வெற்றிக்கு உரிமை கோரி அடிபடும் தமிழ்க் கட்சிகள் அதைப்போல ஆழமான அதோடு தொடர்புடைய ஒரு விடயத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. தாய் நிலத்தை நிலப் பறிப்பிலிருந்து காப்பாற்றுவது அவசியம். அதேயளவு அவசியமானது, தாய் நிலத்தைச் சனச் செழிப்புடையதாகக் கட்டியெழுப்புவது. ஒருபுறம் உரிமை கோரப்படாத,அல்லது உரிமை கோர ஆ…

  22. கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும் May 30, 2025 11:36 am இலங்கையில் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் அதன் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது அப்பட்டமான இனப்படுகொலை என்பதை வடக்கு, கிழக்கு மக்கள் உரத்து கூறிவரும் நிலையில் அந்தக்குரலுக்கு ஆதரவான குரல்கள் உலக நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறான உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இலங்கையில் தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை ‘இனப்படுகொலை’ என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக கனடா போற்றப்படுகின்றது. இலங்கையில் வந்தேறுகுடிகளான சிங்களவர்களுக்கும் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கும் 3 தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஒரு போரின் முடிவு இலங்கையின் வடக்கு கிழக்கில…

      • Confused
      • Like
      • Thanks
    • 10 replies
    • 1.6k views
  23. தமிழரசு கட்சியின் யாப்பை மீறி பல விடயங்கள் நடைபெற்றுள்ளது. தலைமை பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்று தருவேன்

    • 1 reply
    • 374 views
  24. NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் May 24, 2025 — கருணாகரன் — மிகச் சிறப்பான மக்கள் அங்கீகாரத்தையும் அரசியல் ஆணையையும் பெற்றிருக்கும் NPP, தீர்மானங்களை எடுப்பதில் குழப்பத்துக்கு – தடுமாற்றத்துக்கு- உள்ளாகியிருப்பது ஏன்? இன்றைய இலங்கையில் அனைத்துச் சமூகத்திலும் ஜனவசியம் மிக்க ஒரே தலைவராக இருக்கிறார் அநுரகுமார திசநாயக்க. ஆனாலும் அந்த மக்களுடைய நம்பிக்கைகளை நிறைவேற்ற முடியாதிருப்பது எதற்காக? NPP க்குப் பின்னிருக்கும் அல்லது அநுரகுமார திசநாயக்குவுக்குப் பின்னுள்ள சக்திகள் எவை? யாருடைய நிகழ்ச்சி நிரலில் NPP இயங்குகிறது? அல்லது அநுரகுமார திசநாயக்க இயங்குகிறார்? ஜே.வி.பி தவிர்ந்த வெளிச்சக்திகளின் பின்னணியோ பிடியோ இல்லாமல் தனித்துச் சுயாதீனமாக NPP …

  25. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் பேணுவதில் இனப்படுகொலை சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் முதன்மையாக அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் 2009 களுக்கு பின்னர் மே மாதம் வடக்கு – கிழக்கு தாயக நிலப்பரப்பில் மாத்திரமன்றி, ஈழத் தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழினப் படுகொலையை மையப்படுத்திய நிகழ்வுகளும், நினைவேந்தல்களும், நினைவு உரைகளும் நிலையான தன்மையை பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு 16 வது ஆண்டு தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக அண்மைய ஆண்டுகளில் இறுதி யுத்தத்தின் துயரை நினைவூட்டும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு’ தமிழினப் படுகொலை நினைவேந்தலின் முக்கிய நிகழ்வாக நிலைபெற்று விட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.