அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து இப்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தாது வெகுவிரைவில் நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. உள்ளூராட்சி தேர்தல்களை பிற்போடுவதென்பது ஜனநாயகத்திற்கு முரணான செயலாகுமென்றும் கட்சிகளும், அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக கூட்டணி மார்தட்டி கொள்கின்றது. இது மகிழ்ச்சியான செய்திய…
-
- 0 replies
- 842 views
-
-
அமெரிக்காவின் கடல்சார் மூலோபாயம் கடல் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்கா பல்வேறு கடல் சார் நெருக்கடிகளுக்குப் பதிலளித்து வருவதுடன், எமது பாதுகாப்பு அல்லது எமது கூட்டாளி நாடுகளின் நாடுகளின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதுடன் எமது எல்லைகளை நெருங்கக்கூடிய பல்வேறு தொலைதூர புவிசார் அச்சுறுத்தல்களிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கின்றது. கடல்சார் பாதுகாப்பானது கடல்சார் மூலோபாயம் தேவை என்பதை வலியுறுத்துகிறது. தேசிய வளங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், பாதுகாப்புச் செயற்பாடுகளை நிதி மற்றும் கப்பல் கட்டுமானங்கள் போன்றவற்றுடன் தொடர்புபடுத்துவதற்கான சிறந்த தெரிவுகளை மேற்கொள்வதற்கான மூலோபாயம் ஒன்றை உருவாக்க வேண்…
-
- 0 replies
- 487 views
-
-
புலிகளை வைத்து 'வாக்கு யாசகம்' உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரங்களில் வழக்கம்போலவே, விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை காலமும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தான், விடுதலைப் புலிளையும் அவர்களின் எழுச்சிப் பாடல்களையும் தேர்தல் பிரசாரங்களின் போது பயன்படுத்தி வந்தன. இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட, விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி- அவர்களின் பாடல்களை ஒலிக்க விட்டு வாக்கு கேட்கின்ற நிலைக்கு வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் அற…
-
- 0 replies
- 453 views
-
-
வடக்கு, கிழக்கில் முதலீடுகளின் அவசியத்தை வலியுறுத்திய சம்பந்தன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதன் அவசியம் குறித்து தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் யுத்தத்தினால் முற்றுமுழுதாக அழிவடைந்த வடக்கு, கிழக்கில் முதலீடுகளை அதிகரிக்கவேண்டியதன் அவசியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இலங்கை வந்திருந்த சிங்கப்பூர் ப…
-
- 0 replies
- 256 views
-
-
உலகத் தமிழ் இனமே எண்ணிப்பார் முள்ளிவாய்க்கால், உலகத் தமிழ் இனத்தால் என்றுமே மறக்க முடியாத, இரத்தம் தோய்ந்த நாமம். இந்தப் பிரபஞ்சத்தில் தமிழ் இனம் மூச்சுடன் உள்ளவரை, இப்பெயரும் பெரும் பேச்சுடன் உயிர் வாழும். உலக வரைபடத்தில், குட்டித் தீவான இலங்கையைத் தெரியாத பலருக்கும், நன்கு தெரிந்த ஒற்றைச்சொல் ‘முள்ளிவாய்க்கால்’. தமிழ் இனத்தினது விடுதலை வேண்டி, மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற, அகிலமே ஆச்சரியப்பட்ட வீரம் செறிந்த ஆயுதப் போராட்டம், நிசப்தமான மண் அது. ஆயிரமாயிரம் தமிழ் ஆத்மாக்கள், கணக்கற்ற கனவுகளுடன் மீளாத் துயில் கொள்ளும் பூமியது. மறைந்துபோன தமது உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்க…
-
- 0 replies
- 320 views
-
-
மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள் Veeragathy Thanabalasingham on January 25, 2023 Photo, AP Photo/Eranga Jayawardena, OUTLOOK INDIA இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் றொமிலா தாப்பர் எழுதிய ‘இந்து – முஸ்லிம் உறவுகள் குறித்து வரலாறு உண்மையில் எமக்கு சொல்வது என்ன?’ என்ற தலைப்பிலான அருமையான கட்டுரையொன்றை ‘த வயர்’ வலைத்தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. நல்ல கட்டுரைகள் என்றால் அவற்றை நான் அனேகமாக ‘வட்ஸ்அப்’ மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது வழக்கம். இந்தக் கட்டுரையையும் அவ்வாறே பலருக்கு அனுப்பினேன். அவர்களில் மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர் லக்ஸ்மன் குணசேகரவும் ஒருவர். அதை வாசித்த உடனடியாகவே எனக்கு அவர்…
-
- 0 replies
- 742 views
-
-
அமெரிக்கா - சீனா வர்த்தக போர் இன்று இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் சமூகவலைத்தளங்களில் பிரதான சர்வதேச பேசுபொருளாக அமெரிக்க - வடகொரிய தலைவர்கள் சந்திப்பு, பலஸ்தீன விவகாரம், ISIS பயங்கரவாதம், சிரிய நெருக்கடி, அகதிகள் விவகாரம், புவி வெப்பமடைதலும் காலநிலை மாற்றங்களும் போன்ற பல விடயங்கள் காணப்படுகின்றன. இதே சூழ்நிலையில் அமெரிக்க - சீன வர்த்தகப் போர், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் வர்த்தகப்போர் என்ற வாசகங்களும் உலகச் செய்திகளில் பரவலாக பேசப்படுகின்றன. பூலோகம் இரண்டு மகா யுத்தங்களையும், சோவியத் சீன, வியட்நாமிய கொரிய கம்யூனிச புரட்சிகளையும், அமெரிக்க சோவியத் வல்லரசுகள் உல…
-
- 0 replies
- 786 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்காக ரணில் ஆடும் சதுரங்கம் புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக, நாட்டு மக்களைத் தயார்ப்படுத்தும் வேலைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்ட ரீதியில் ஒத்திப்போட வைத்து, போக்குக் காட்டிவரும் ரணில், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் வெற்றிபெற நினைக்கிறார். அதற்காக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து, பிரபலமான முகங்களை எல்லாம் கழட்டி எடுக்கும் வேலைகளில் கவனமாக இருக்கிறார். அதன் ஒருகட்டமாக, ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ன, கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்கள், ரணிலோடு…
-
- 0 replies
- 753 views
-
-
-
- 0 replies
- 417 views
- 1 follower
-
-
வல்லரசுகளின் பிடியில் பாலஸ்தீனம் Pathivu Toolbar ©2005thamizmanam.com உலகமெங்கும் அலைக்கழிக்கப்பட்டு சுற்றித் திரிந்த யூதர்கள், சுமார் 2000 ஆண்டுகள் வரை கிறிஸ்தவரின் கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஜெர்மனியில் 1933 - 1945 காலப் பகுதியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் சுமார் 60 லட்சம் பேர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். இது மட்டுமல்ல, உலகில் சிதறி வாழ்ந்த அவர்களுக்கு எம் நாட்டில் இடமளித்து வாழச் செய்வோம் என எந்த மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. இதற்கு யூதர்களின் இயற்கையான போக்கும் ஒரு காரணமே. இவர்களது நிலை இப்படி தொடரும் போது கி.பி.1896 ல் தியோடர் ஹெர்ஸ்ல் (Theodor Herzl 1860-1904) என்றொரு நாடக எழுத்தாளர் யூத மக்களுக்கு ஒரு …
-
- 0 replies
- 1.6k views
-
-
தற்கொலை தாக்குதலும் அதன் தாக்கமும் "பதவிக்காக மற்றொருவரை அழிக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, புத்தபிரான் கற்பித்தது போல் மட்டற்ற சமாதானத்தை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்" என்று பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமாகக் கருதப்படும் வெசாக் தினத்துக்கான தனது செய்தியில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் "வெறுப்பின் மூலம் வெறுப்புணர்வைத் தணிக்க முடியாது, அன்பின் மூலமே அதைத் தணிக்க முடியும்" என்றும் அவரது செய்தி கூறுகிறது. ஆனால், சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை நாடறியும். புத்தபிரான் கூறியதைக் கேட்டிருந்தால் நாட்டில் கலவரங்களும், உள்நாட்டு யுத்தமும், படுகொலைக…
-
- 0 replies
- 693 views
-
-
"இலங்கை தமிழ் தலைமையின் கூத்து" [முரண்படும் தமிழ்த் தலைமைகள்] விவிலியத்தின் படி, வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மனிதர்கள் கிழக்கிலிருந்து வந்து, சினயார் [Shinar] சமவெளியில் குடியேறினர். அப்பொழுது அவர்கள், ″வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாத படி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி [build a city and a tower tall enough to reach heaven], நமது பெயரை நிலை நாட்டுவோம்″ என்றனர். மானிடர் கட்டிக் கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். அப்பொழுது ஆண்டவர், ″இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எ…
-
- 0 replies
- 439 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தரும் செய்தி என்ன?(கேள்வி, பதில் வடிவில்) September 27, 2024 — வி. சிவலிங்கம் — கேள்வி: நடந்து முடிந்த 9வது ஜனாதிபதித் தேர்தல் என்பது பல வகைகளில் வித்தியாசமானது எனக் குறிப்பிடப்படுகிறது. அவை எவை? பதில்: சுதந்திரத்திற்குப் பின்னதான தேர்தல்களில் இத் தேர்தல் என்பது மிகவும் அமைதியாக நடைபெற்றதாக பலரும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இத் தேர்தலை ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் அமைதியான தேர்தல்களோடு பலரும் ஒப்பிடுகின்றனர். இதற்கான பிரதான காரணம் நாடு பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் தேர்தல் செலவினம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதை சாமான்ய மக்களே புரிந்திருந்த நிலையில் அவ…
-
- 0 replies
- 382 views
-
-
-நஜீப் பின் கபூர்- ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது அதன் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு கூட்டமும், இல்லை போட்டியில் நமது தரப்புக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று கடைசி நிமிடம் வரை நம்பிக் கொண்டும் இருந்த மற்றுமொரு பெரும் கூட்டமும் நாட்டில் இருந்தது. அந்தத் தேர்தல் பற்றி இப்போது நாம் பேச வரவில்லை. ஆனால் வருகின்ற பொதுத் தேர்தலில் முடிவுகள் என்ன என்பதனை முன்கூட்டி தெரிந்து கொண்டுதான் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தலில் இறங்கி இருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால், இன்று ஜனாதிபதித் தேர்தலில் பின்னடைந்த அணிகளில் இருந்து போட்டியிடுகின்ற கட்சிகள் – கூட்டணிகளின் வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தமது …
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
நடராஜ ஜனகன் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், ஆளும் கட்சியில் எதிர்பார்ப்புகளையும் எதிரணியின் விமர்சனங்களையும் மேற்படி தேர்தல் முடிவுகள் தீர்மானம் செலுத்தும் பிரதான காரணியாக அமையப்போகிறது. நடந்து முடிந்துள்ள எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பெரிய அளவில் சாதகமான கருத்துக்கணிப்பை வழங்கவில்லை. 48 விகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே அரசாங்கம் மேற்படி தேர்தலில் பெற்றிருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 58 விகிதமான மக்கள் புதிய ஜனாதிபதிக்கு எதிராகவே தமது வாக்குகளை பதிவு செய்திருக்கும் நிலையில் எம்பிலிபிட்டிய தேர்தல் முடிவும் நம்பிக்கை தரும் முடிவாக அமையவில்லை. அரசாங்க ஊழியர்களு…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக் கொள்வதும் கற்றுக் கொள்ளாததும் – நிலாந்தன்! நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வழங்கிய ஒரு தண்டனைதான். அதே சமயம் அர்ஜுனாவைத் தெரிவு செய்தமை என்பது தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே வழங்கிய ஒரு தண்டனைதான்.அதன் விளைவுகளை அவர்கள் பின்னாளில் அனுபவிக்க வேண்டியிருக்கும் . தேர்தலுக்கு முன்பாக கட்சிகள் தங்களுக்கு இடையே அடிபட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு மூத்த அரசு அதிகாரி என்னிடம் சொன்னார்,” போகிற போக்கைப் பார்த்தால் தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் என்று தமிழ்ச் சனம் முடிவெடுக்கும் ஒரு நிலைமை வரலாம்” என்று. ஆம் அதுதான் நாடாளுமன்ற தேர்தலில் நடந்தது. அதுபோல கொழும்பில் வசிக்கும் ஓய்வு…
-
- 0 replies
- 200 views
-
-
இந்தியப் பிரதமரின் வருகை : அனுர யாரோடு ? - நிலாந்தன் நான்கு தடவைகள் இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து விட்டார். இந்த நான்கு தடவைகளிலும் அவர் நான்கு இலங்கை ஜனாதிபதிகளை சந்தித்திருக்கிறார். பத்தாண்டு காலத்துக்குள் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு நான்கு பேர்களிடம் கைமாறும் அளவுக்கு இச்சிறிய தீவின் அரசியல் ஸ்திரமற்றதாக இருந்து வருகிறது.ஆனாலும் பிரதமர் மோடியின் வருகையின்போது மாறாத இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று இனப்பிரச்சினை தொடர்பான இந்திய நிலைப்பாடு. இரண்டாவது,மீனவர்களின் விவகாரம்.அதுவும் தமிழ் மக்களோடு தொடர்புடையதுதான். இந்தியப் பிரதமரின் வருகையை மூன்று தளங்களில் வைத்துப் பார்க்க வேண்டும்.முதலாவது பிராந்தியத் தளம். இரண்டாவது கொழும்பு. மூன்றாவது தமிழ் நோக்கு நிலை. பிராந்தியத்தில் …
-
- 0 replies
- 339 views
-
-
அனர்த்த நிவாரண உதவிகளும் புவிசார் அரசியல் நலன்களும் January 8, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — இயற்கை அனர்த்தத்தின் விளைவான அழிபாடுகளில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் இடர்மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கை மக்கள் புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கிறார்கள். இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமே கண்டிராத படுமோசமான 2022 பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுவந்த ஒப்பீட்டு அளவிலான முன்னேற்றத்தை ‘டித்வா’ சூறாவளி மறுதலையாக்கியிருக்கிறது. மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி அ…
-
- 0 replies
- 97 views
-
-
நெஞ்சில் நெருப்பைத் தமிழினம் ஏந்திய நாள் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் அதன் வரலாற்றுப் பின்புலங்களையும் அறியாதவர்கள், அந்த அரசியல் நீரோட்டத்தில் கலக்காத, சுயநல அரசியல் சார்ந்த செயலொழுங்கில் பயணிப்பவர்களாகவே பெரும்பாலும் இருக்க முடியும். இத்தகையோர், சலுகைகளுக்காக உரிமைகளைத் தாரைவார்த்துக் கொடுத்து, சுயத்தை இழந்து நிற்பவர்களாகவே இருக்கமுடியும். இவர்களுக்கு, முள்ளிவாய்க்கால் ஓர் அஸ்தமனமாகத் தெரியலாம்; ஏன், தமிழ்த் தேசிய போராட்டத்தின் முடிவாகக் கூடக் கருதலாம். 1949ஆம் ஆண்டில் இருந்து, 1975வரை இடம்பெற்ற தமிழர்களின் அஹிம்சைப் போராட்டம் சம்பந்தமாக, ஒரு முழு விளக்கம் தர வேண்டும் என்றும், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய ம…
-
- 0 replies
- 455 views
-
-
'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக் கற்றோம்' இவ்வாறு கூறி இருப்பவர் பான்கிமூன். கடந்த வாரம் கொழும்பில்அனைத்துலக உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் அவர் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு கூறுவதற்கும் ஏறக்குறைய ஒரு கிழமைக்கு முன்பு சொல்கெய்மும் இதே தொனிப்பட கருத்துத் தெரிவித்திருந்தார். இலங்கைத் தீவிலிருந்து தான் கடுமையான பாடங்களைக் கற்றிருப்பதாக. குறுகியகால இடைவெளிக்குள் இரு வேறு மேற்கத்தைய பிரதிநிதிகள் இவ்வாறு ஒரே தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இருவரையும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.ஒருவர் இலங்கைத் தீவில் ஒப்பீட்…
-
- 0 replies
- 657 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-01#page-16
-
- 0 replies
- 557 views
-
-
20ஆவது திருத்தமும் கொள்கையற்ற அரசியலும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 செப்டெம்பர் 10 , மு.ப. 11:51 நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற, எந்தவோர் அரசாங்கமும் முன்வராத நிலையில், ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் நெருக்குவாரத்தின் பேரில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 2001ஆம் ஆண்டில் 17ஆவது அரசமைப்புத் திருத்தத்தை முன்வைத்தார். ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரங்களை எதேச்சாதிகார முறையில் பாவிக்காது தடுப்பதற்காக, அரசமைப்புச்…
-
- 0 replies
- 521 views
-
-
வடக்கை ஆக்கிரமித்துள்ள படையினர் வடக்கில் பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் நிலைகொண்டிருப்பது மீண்டும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இதனால் வடபகுதி மக்கள் தங்கள் அன்றாட கடமைகளை செவ்வனே மேற்கொள்ள முடியாதவர்களாகவும் சுதந்திரமாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். வடக்கில் நிலை கொண்டுள்ள படையினர் தொடர்ந்தும் தமிழ் மக்களை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதும், அநாவசியமான புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டு வருவதும் பொதுவிடயங்களில் கூட தங்கள் தலையீடுகளை மேற்கொள்வதும் வழமையான ஒன்றாகவுள்ளது. இவை அனைத்துக்கும்…
-
- 0 replies
- 366 views
-
-
அரசியலாகும் அப்பாவிகளின் இரத்தம் -எம்.எஸ்.எம். ஐயூப் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி (உயிர்த்த ஞாயிறு தினம்) மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத் தாக்குதலை வழிநடத்தியவர்கள் யார் என்பது? அதைப் பற்றி அக்கறை கொண்டுள்ள அனைவரும் தற்போது எழுப்பும் கேள்வியாகும். அத்தாக்குதலைப் பற்றி விசாரணை செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம், அது தெரியவரும் எனப் பலர் எதிர்ப்பார்த்த போதிலும், அவ்வாறான எந்தத் தகவலும் அந்த அறிக்கையில் இருக்கவில்லை. அந்த அறிக்கையில், அவ்வாறான தகவல்கள் இருக்கும் எனக் கத்தோலிக்க திருச்…
-
- 0 replies
- 402 views
-
-
தமிழ் வாக்களிப்புப் பாரம்பரியம் - நிலாந்தன் 04 ஆகஸ்ட் 2013 ஈழப்போருக்கு முற்பட்ட காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. அது ஒரு தேர்தல் காலம். பீற்றர் கெனமன் வடமராட்சியில் ஒரு தேர்தல் பிரசார மேடையில் உரையாற்றினார். மைதானம் முழுவதும் சனங்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். விசிலடியும், கைதட்டும் பிரமாதமாக இருந்தது. கூட்டம் முடிந்ததும் கெனமன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னார் ''இம்முறை எமக்கு வடமராட்சியில் ஒரு சீற்றாவது கிடைக்கும்' என்று. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தன. பீற்றர் கெனமனுடைய வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார். இச்சம்பவத்தின் பின் கெனமன் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருந்தார்.... ''தமிழர்கள் எம்மை நன்கு உபசரித்து விருந்தோம்புவர்கள். தேர்தல…
-
- 0 replies
- 713 views
-