Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஏப்பமிடப்படும் ஏகபிரதிநிதித்துவம் காரை துர்க்கா / 2020 பெப்ரவரி 04 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று, அவர்களுடன் மட்டும்தான் பேச்சு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கம் இல்லை. மாறாக, வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, அரசாங்கம் தயாராக இருக்கின்றது என, அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார். இன்று, இலங்கை, தனது விடிவு தினமான (72வது) சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில், நாட்டின் ஒரு பகுதி மக்கள், தாங்கள் இன்னமும் இருட்டுக்குள் வாழ்ந்து வருவதாவே உணர்கின்றனர். ஆனால், அவர்களது விடியலுக்கான பேச்…

  2. காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்துக்கு கைமாற்றும் சதியே நமது சுதந்திர நாள். ஆட்சியையும், அதிகாரங்களையும். பொறுப்புகளையும் தமிழர்களிடமிருந்து பறித்து சிங்களவர்களிடம் ஒப்படைத்த நாள் இது. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நசுக்குவதற்கான அரச இயந்திரத்தை சிங்களவர்களிடம் கொடுத்த நாள் இது. இலங்கையின் சனத்தொகையில் 11 வீத இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்காக வழங்கப்பட்ட லைசன்ஸ் இந்த சுதந்திரம். டொனமூர் யாப்பு தொடக்கம் இறுதி யாப்பு வரை தமிழர்கள் எதிர்த்தே வந்துள்ளனர். சோல்பரி யாப்பு மாத்திரம் விதிவிலக்கு. சுதந்திரத்துக்கு வித்திட்ட அந்த யாப்பு தமிழர்களை நசுக்க மட்டுமே பயன்பட்டது. “சுதந்திரம்” என்பதை விட தமிழர்களுக்கு அது ஆங்கிலேயர்களும், சி…

  3. ஜனநாயகம் குறித்து அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு கடந்த 25 வருடங்களாக திருப்தி இல்லை என்ற ஒரு முடிவை உலகின் தொல்முதுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்பிறிட்ச் பல்கலைக்கழகம் தான் நடத்திய புதிய ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 40 லட்சம் மக்களிடம் எடுக்கப்பட்ட 3500 கணிப்பீட்டு செயற்திட்டங்களில் இருந்து இந்தமுடிவுபெறப்பட்டதாக இந்த ஆய்வை நடத்திய கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தின் எதிர்கால ஜனநாயகத்துக்கான மையம் கூறுகிறது. அதாவது முன்னெப்பொதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தில் திருப்தியடையாத மக்களின் வகிபாகம் முன்னர் இருந்த 48 வீதத்தில் இருந்து 10 புள்ளிகள் மேலும் எகிறி தற்போது 58 வீதத்தில் இருப்பதாக ஐரோப்பாவின் நிதிவசதி கொண்ட கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்த…

  4. ஈழத்தமிழர்கள் இப்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றனர். இந்நிலையில், தமிழ்த் தேசியம் என்பதை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. ஆரம்பத்தில் இருந்து மீள்கட்டியெழுப்ப வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம். அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். தற்போது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பது 1947 ஆம் ஆண்டு முதலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க நாம் கட்டமைக்கப்பட்ட தேசியவாதம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தமிழ் மக்கள் எவ்வாறு தப்பித்துக் கொள்ளலாம் தமிழ் மக்களின் விடுதலை யார் கையில் என்பது தொடர்பான அரசியல் மற்றும் அறிவியல் விளக்கங்களை அறிந்து கொள்ள கீழுள்ள காணொளி…

  5. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தகுதியும் முக்கியமானவை மொஹமட் பாதுஷா நாம் கொள்வனவு செய்கின்ற பாவனைப் பொருள்களும் உணவு வகைகளும் தரமாக இருக்க வேண்டும் என்பதில், எப்போதும் அக்கறை செலுத்துவோம். பத்து ரூபாய் தின்பண்டங்கள் தொடக்கம், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் தொட்டு, மருத்துவம், கல்விச் சேவைகள் வரை, அனைத்தும் தராதரமாக இருக்கின்றதா என்று பார்த்தே பெற்றுக் கொள்வதுண்டு. ஆனால், நாம், குறிப்பாக முஸ்லிம் சமூகம், தமது அரசியல் பிரதிநிதித்துவங்கள் விடயத்தில், இந்த அக்கறையை வெளிக்காட்டுவதை நீண்டகாலமாகக் காணக் கிடைக்கவில்லை. மறைமுகமாக, அரசியலே நமது மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றது. இந்த நாட்…

    • 0 replies
    • 747 views
  6. இலங்கையை ஆட்டிப்படைக்கவுள்ள பொருளாதார நெருக்கடிகள் -க. அகரன் ஆசியாவின் முத்து என்று அழைக்கப்பட்ட இலங்கையில், அடுத்தடுத்து வரப்பேகும் தேர்தல்களால், அதன் பொருளாதார நிலைமைகள் மாத்திரமின்றி, அரசியல் செயற்பாடுகளும் சமநிலையற்ற கொதிநிலைக்குள் அமிழ்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளமைபற்றி எச்சரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில், பொருளாதார நிலை மிகவும் கீழ் இறங்கிக் காணப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்றிருந்தது. ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்களை ஈடு செய்வதற்காகப் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, திரும்பப் பெறப்பட்டு, வேலைத்திட்டங்களும் இடைநடுவில் க…

    • 0 replies
    • 555 views
  7. ‘நிர்பயா’ தூக்கும் டெல்லி தேர்தலும் எம். காசிநாதன் இந்தியாவின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தல் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 70 சட்டமன்றத் தொகுகளில் நடைபெறும் அனல் பறக்கும் பிரசாரத்துக்கு மத்தியில் வெற்றி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கா அல்லது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கா என்ற எதிர்பார்ப்புக் கிளம்பி இருக்கிறது. தலைநகரில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, 2013இல் ஆட்சியை பிடித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். 2009இல் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின், ஆட்சியில் நடைபெற்ற ஊழலா…

    • 0 replies
    • 445 views
  8. கூடுவிட்டுக் கூடுபாயும் யானைக் கூட்டம் -விரான்ஸ்கி இலங்கை அரசியலில், ‘தோல்விகளின் தொடர் நாயகன்’ என்று கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முகங்கொடுத்த உட்கட்சி அழுத்தங்கள், அவமானங்கள், நிராகரிப்புகள் என்று எல்லாவற்றில் இருந்தும் மீண்டெழுந்து, கட்சியின் செயற்குழுவின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளார். அசுர வெற்றியைப் பெற்றுக்கொண்ட ராஜபக்‌ஷக்களுக்கு முன்னால், துரும்பாகிவிட்ட சஜித் தரப்பின் அரசியல், “இனி என்ன”, என்ற மிகப்பெரிய கேள்வி, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியிலும் சரி, இலங்கை அரசியலிலும் சரி வியாபித்து …

    • 0 replies
    • 247 views
  9. சிந்தித்துச் செயற்படுவோம் -இலட்சுமணன் கடந்த 70 ஆண்டுகளில், தமிழர்கள் தமது நியாயங்களை முன்வைத்து, அகிம்சை வழியிலும் ஆயுத ரீதியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தியும் பல்வேறு விட்டுக்கொடுப்புகளைச் செய்தும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை; எல்லாம் எட்டாக்கனிகளாகவே காணப்படுகின்றன. கடந்த 25 ஆண்டுகளில், வடக்கு, கிழக்கில் தமிழர் ஆயுத பலத்துடன் இருந்த வேளையில், சமஸ்டித் தீர்வுக்குச் சம்மதித்த இலங்கை அரசாங்கம், அது தொடர்பாகப் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி இருந்தது. பண்டா - செல்வா ஒப்பந்தம், பின்னர், திம்புப் பேச்சுவார்த்தை, இலங்கை-இந்திய ஒப்பந்தம், சந்திரிகா - புலிகள் ஒப்பந்தம், ரணில் - பிரபா ஒப்பந்தம் என, உள்ளூரிலும் சர்…

  10. எதை கொண்டாடுவது, எதை நினைவுகூர்வது? கொண்டாட்டங்களுக்கு ஒரு சமூகப் பெறுமானம் உண்டு. சமூகப் பெறுமானத்தை உடைய நிகழ்வுகளே கொண்டாடத் தகுந்தன. தமிழர் வரலாற்றிலும் வாழ்வியலிலும் அந்தப் பெறுமானத்தைக் கொண்டது தைப்பொங்கல். அதனாலேயே அது இன்னமும் உயிர்ப்புடனும் உணர்வுடனும் கொண்டாடப்படுகிறது. நினைவுகூர்வது என்பது கொஞ்சம் சிக்கலானது. அதன் சமூகப் பெறுமானத்தின் தன்மை குறித்தொதுக்க இயலாதது. ஆனால், யாரும் யாரையும் நினைவுகூர்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டியது, நம் அனைவரினதும் கடமை. அடுத்த வாரம் இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை, இலங்கையர்கள் கொண்டாட முடியுமா என்ற கேள்வியை இங்கு கேட்டுவைக்க விரும்புகிறேன். ‘இலங்கையின் சுதந்திரம் என்ன செய்…

  11. 2020 இன் திசைவழி: சோசலிசத்தின் மீள்வருகை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 30 காலத்தின் திசைவழிகளைக் காலமே தீர்மானிக்கும் பொழுதுகளில், வரலாறு திருப்பித் தாக்கும். எதுவெல்லாம் முடிந்துவிட்டது என்று முடிவானதோ, அது மீண்டும் புத்தெழுச்சியோடு எழுந்து மீண்டும் வரும். அது முன்பிலும் வலுவாக, உறுதியாக மீளும். 2020ஆம் ஆண்டு, அவ்வகையான எதிர்பார்ப்போடு தொடங்கி இருக்கின்றது. பேச விரும்பாத பொருளைப் பற்றி, பேச விரும்பாதவர்கள் பேச வேண்டிய கட்டாயத்துக்குக் காலம் கொண்டு வந்து விட்டிருக்கின்றது. “அவர்கள் சோசலிசத்தின் தோல்வி பற்றிப் பேசுகிறார்கள். அப்படியென்றால், ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் வெற்றி எங்கே?” இவ்வாறானதொரு கேள்வ…

  12. ‘குப்பை அரசியல்’ காலம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 29 கடந்த வாரத்தில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள், குப்பைகள் அகற்றப்படவில்லை. வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள வீதிகளின் மத்தியில், குப்பைகள் பெருமளவில் கொட்டப்பட்டிருந்தன. அதுபோல, வவுனியா நகரப் பகுதியிலும், ஒரு வாரமளவில் குப்பை அகற்றப்படாத நிலையொன்று அண்மையில் காணப்பட்டது. இலங்கையில் குப்பை அகற்றுதல், மீள்சுழற்சி செய்வது தொடர்பிலான முறையான செயற்றிட்டங்கள், பெரியளவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் நகர எல்லைப் பகுதிகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை, நகரத்துக்கு அப்பாலுள்ள பகுதியொன்றில் கொட்டுவதையே, குப்பை அகற்றுதலாகக் கருதுகிறார்கள். அவ்வாறு சேரும்…

  13. தற்கொலைக்கு தயாராகி வரும் ஐ.தே.க எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 29 ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோருடன் நடத்திய அலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்தார் என்று வெளியாகி இருக்கும் செய்தியால், ஐ.தே.க பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகி இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்தப் பிரச்சினை, முடிந்தவரை மூடி மறைக்கப்பட்டாலும், அக்கட்சியின் இருப்பை வெகுவாகப் பாதித்துள்ளதும் இதை விடப் பாரதூரமான மற்றொரு பிரச்சினையையும் ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்நோக்கி வருகிறது. அதுதான், அக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள உட்கட்சிப் போராட்டமாகும். கடந்த பல மாதங்களாக, ஐக்கிய தேசியக் கட்சியின் த…

  14. மற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா? காரை துர்க்கா / 2020 ஜனவரி 28 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், கூட்டமைப்புக்குள் மீளவும் வருவதில், எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால், அவ்வாறானவர்கள் நொண்டிச்சாட்டுகளைக் கூறித் திரிகின்றனர், என தெரிவித்துள்ளார். “மாற்று அணியொன்று தேவையில்லை; மாற்று அணியொன்றை உருவாக்குவதென்பது, தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்படுகின்ற மாபெரும் சதியாகும். அத்துடன், கூட்டமைப்புக்குள் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமூகமாகத்தான் பேசித் தீர்த்துக் கொண்டு வருகின்றோம்.தேர்தல் சம்பந்தமாகக் கூட, சுமூகமான தீர்வுகள்…

  15. ஆப்பை இழுக்குமா ‘குரங்கு’? -றம்ஸி குத்தூஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “புதிய கூட்டணி அமைத்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளேன்” என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்களைக் கொழும்புக்கு அழைத்து, மாபெரும் கூட்டமொன்றை, நேற்று முன்தினம் (26) கூட்டி, அவர்கள் மத்தியில் உரையாற்றி உள்ளார். சஜித் பிரேமதாஸ, இங்கு உரையாற்றுகையில், “கடந்த தேர்தலின்போது, சிறிகொத்தா தலைமையகம் எங்களுக்கு எதிராகச் செயற்பட்டிருந்தது” என்று வௌிப்படையாகக் குற்றம் சுமத்தினார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் சில அங்கத்தவர்களுடன் இணைந்து, தனக்கெதிராகச் செயற்பட்…

  16. என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் தலைமைகள்? என்.கே. அஷோக்பரன் / 2020 ஜனவரி 27 , மு.ப. 01:28 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான பத்திகளில், 2015 தோல்விக்குப் பின்னரான, மீண்டெழும் படலத்தின் அரசியல் நிலைப்பாடு பற்றி குறிப்பிடும் போது, இந்தத் தேர்தலில், ‘ராஜபக்‌ஷ என்ற ஆளுமையும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத வாக்குவங்கியும் தான் அவர்களது அரசியல் மூலதனம்’ என்று குறிப்பிட்டிருந்தேன். அதன்படியே ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத நிகழ்ச்சி நிரலை முன்வைத்து, கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் இலகுவான வெற்றியை ஈட்டியிருந்தார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தனது அரசியல் நிலைப்பாட்டை மிகத் தௌிவாக, ‘இந்த தேர்தலின் பிரதான செய்தியானது, பெரும்பான்மை சிங்கள வாக்குகளே, நான் ஜ…

  17. அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும் - வீ.தனபாலசிங்கம் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்களினால் எளிதாக அதிகாரத்தை துறந்துவிட முடிவதில்லை. தங்களது வாழ்நாள் பூராவும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு அத்தகைய தலைவர்கள் அக்கறை காட்டிய ஏராளமான உதாரணங்கள் வரலாற்றில் உண்டு. அதிகாரத்தை தொடருவதற்கு வழிவகுக்கக்கூடிய சூழ்ச்சித்தனமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அவர்கள் அவற்றுக்கு " அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் " என்று நாகரிகமாக நாமம் சூட்டியும் விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தாங்கள் பதவியில் இல்லாதபட்சத்தில் எளிதில் குழப்பநிலைக்கு உள்ளாகிவிடக்கூடிய ஒரு ஆட்சி நிருவாகக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதையும…

    • 3 replies
    • 525 views
  18. தான தர்ம அரசியல்? - நிலாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் ஒரு நடன அரங்கேற்றம் இடம்பெற்றது. இதன்போது மண்டபத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடமெல்லாம் படைவீரர்கள் காணப்பட்டார்கள். ஏன் என்று விசாரித்தபோது தெரியவந்தது அந்த வைபவத்தில் படை உயரதிகாரிகளும் பங்குபற்றுகிறார்கள் என்பது. அந்த நடன அரங்கேற்றம் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் கீழ் இயங்கும் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் உடையது. மகாதேவா ஆச்சிரமத்தில் படைத்தரப்பினர் பல்வேறு வழிகளிலும் உதவி வருகிறார்கள் என்றும் எனவே அந்த நடன அரங்கேற்றத்தில் அவர்களும் அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. சிறுவர் இல்லங்களுக்கு மட்டுமல்ல சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு தேவைகளை கொண்டவ…

  19. தமிழ்த் தலைவர்கள் எதற்கு? கே. சஞ்சயன் / 2020 ஜனவரி 24 அவ்வப்போது நீண்ட அறிக்கைகள், கடிதங்களை வெளியிட்டும், செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியும் பழைய வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருப்பவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆவார். தான் கூறியபடி தான், தமிழ் மக்களின் வரலாறு நகர்கிறது என்பது போல, தீர்க்கதரிசியாகத் தன்னை் கருதிக் கொண்டு, அவர் அவ்வப்போது வெளியிடும் கருத்துகள், முரண்பாடுகளும் விமர்சனங்களும் நிறைந்தவவையாக இருப்பது வழமை. 2004ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழரசுக் கட்சிக்கு உயிர் கொடுக்கப்பட்ட விடயத்தை, அவரால் இன்னமும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. இந்த விடயத்தில், அவர் விடுதலைப் புலிகளைக் கூட விட்டு வைக்க…

  20. கோட்டபாயவின் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை வெற்றியளிக்குமா? - யதீந்திரா நாங்கள் ஒரு சிறிய நாடு. உலக அதிகார மோதல்களுக்குள் நாம் தலையிட விரும்பவில்லை. நாங்கள் ஒரு நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையையே கடைப்பிடிக்க விரும்புகின்றோம் – இது கோட்டபாய தனது பதவியேற்பு உரையில் கூறிய விடயங்கள். இலங்கையின் அரசியல் வரலாற்றில் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை என்பது புதிய விடயமல்ல. வெளிவிவகாரக் கொள்கையில் நடுநிலை என்னும் நிலைப்பாட்டின் பிதாமகர் பண்டாரநாயக்க ஆவார். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை என்பது இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டுடன் தொடர்புபட்ட ஒன்றாகும். இதன் பிதாமகர்களாக ஜக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகரான னு.ளு.சேனநாயக்கவும் சிறிலங்கா சுதந்தி…

  21. சர்வதேசத்திடம் கையேந்தி நிற்போருக்கு... சர்வதேச அரசியலோ, இராஜதந்திர உறவுகளோ, வெறும் கூட்டல் கழித்தல் கணக்கல்ல. அவை எந்தவொரு பொதுச் சூத்திரத்தின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளக் கூடியவையல்ல. அவை, தேசநலன்களாலும் தந்திரோபாய, மூலோபாயத் தேவைகளின் அடிப்படைகளிலும் வழிநடத்தப்படுபவை ஆகும். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழ் மக்களுக்கு ஆதரவானதெனவும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம், இப்போது தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காக, முன்னெப்பொழுதையும் விட, மிகுந்த முனைப்புடனும் அக்கறையுடனும் செயற்படுகின்றது என்ற பொய்களின் சாயம், வெளுத்துக் காலம் கடந்து விட்டது. ஆனாலும், இன்னமும் சர்வதேசத்தின் மீது நம்பிக்கை …

  22. தேசியம், ஐக்கியம், தமிழர் பலம் -இலட்சுமணன் தேர்தல் எனும் வசந்த காலம், அரசியல் வானில் உதயமாகத் தொடங்கியதன் வெளிப்பாடுகளாகத் தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துகள், விவாதங்கள், அறிக்கைகள் மெல்லமெல்ல மேலௌத் தொடங்கியுள்ளன. ‘வேதாளம், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது போல்’ தமிழர்களின் உரிமை, தமிழர்களுக்கு இடையேயான ஐக்கியம், தமிழர் பலம் எனப் பல்வேறு கோசங்கள், அரசியல்வாதிகளால் வெளிப்படுத்தப்படுகின்றன. அரிதாரம் பூசிய அரசியல் நடிகர்களின் கூத்துகளையும் பம்மாத்துகளையும் வரலாற்றுச் சாதனைகளாகவும் தமிழ் மக்களின் வரலாறாகவும் பார்க்கும் காலமாகவே தற்போதைய நிலைமைகள் அமைந்துள்ளன. சுதந்திரத்துக்குப் பின்னர் இருந்த அரசியல் வீச்சும், போராட்ட குணமும் தமிழ் அரசியல் தலைமை…

  23. பொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 22 பொதுத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், அந்தத் தேர்தலுக்கான அரங்கு, நாடு பூராகவும் களைகட்டத் தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுகள், வேட்பாளர் தெரிவு இழுபறிகள், சமூக ஊடகங்களில் சண்டை சச்சரவுகள் என்று, ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் அடங்குவதற்குள், மீண்டுமொரு தேர்தல் பரபரப்புக் காட்சிகள். அதுவும், தென் இலங்கையைக் காட்டிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு என்பது, முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு என்பது, அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தல்களில் முதன்மையானது பொதுத் தேர்தலாகும். ஜனாதிபதித்…

  24. மட்டு நேசன் "வரலாற்றில் சத்தியத்தைப் பதிவு செய்ய முற்படும் நாம் சாவு மன்னிப்புச் சலுகையை நீட்டி முழக்கி அந்தச் சலுகையின் நிழலில் சத்தியங்களை மறைத்தால் அது வரலாற்றுக்குச் செய்யப்படும் துரோகம்" இவ்வாறு ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். " தமிழ் மிரர் " பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையொன்றில் இந்த மேற்கோள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் மட்டக்களப்பின் வரலாற்றில் நடந்த இரு முக்கிய சம்பவங்களை, மறைக்கப்பட்ட சத்தியங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. முதலாவது இருதயபுரத்தைச் சேர்ந்த சின்னையா அருள்நேசநாதன் என்பவரது கொலை, மற்றையது திருப் பழுகாமத்தைச் சேர்ந்த நவரத்தினம் என்பவரது சாவு.இந்த இரண்டும் மட்டு .மக்களின் இதயங்களை உலுக்கிய சம்பவங்களாகும் .…

    • 0 replies
    • 860 views
  25. புதிய பரிமாணம் ! காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் புதிய பரி­மா­ணத்­துக்குள் பிர­வே­சித்திருக்­ கின்­றது. முடி­வின்றி தொடர்­கின்ற இந் தப் பிரச்­சி­னைக்குத் தீர்வுகாணப்­பட வேண்டும் என்­ப­தற்­கான போராட்­டங்கள் வருடக் கணக்­காகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. நிலை­மா­று­கால நீதியின் அடிப்­ப­டையில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பொறுப்புக் கூறு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­முறை செயல் வல்­லமை அற்ற நிலையில் தேங்கி நிற்­கின்­றது. இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் காணா மல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் புதிய பரி­ மா­ணத்­துக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கின்றது. காணாமல் போன­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­டு விட்டார்கள் என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.